| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 192 online users. » 0 Member(s) | 190 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,297
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,229
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,289
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,623
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,050
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,457
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,473
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,023
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| இலங்கையில் சுட்டு கொல்லப்பட்ட இன்ஜினியர் உடல் சென்னை வந்தது |
|
Posted by: rajathiraja - 01-09-2006, 05:41 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (1)
|
 |
இலங்கையில் சுட்டு கொல்லப்பட்ட இன்ஜினியர் உடல் சென்னை வந்தது
சென்னை : இலங்கையில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆந்திர இன்ஜினியரின் உடல் நேற்று விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது.
ஆந்திர மாநிலம் நெல்லுõர் மாவட்டம் காவாலி பகுதியைச் சேர்ந்தவர் ஆத்ம குரு பிரசாத்(26). இவர் ஆஸ்டர் டெலி சர்வீஸ் என்ற தனியார் தொலை தொடர்பு நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்தார். சமீபத்தில் அவர் வேலை பார்த்த நிறுவனம் இலங்கையில் உள்ள மொபைல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. இதையடுத்து, ஆத்ம குரு பிரசாத் இலங்கை கொழும்பில் உள்ள அலுவலகத்திற்கு மாற்றலாகி அருகில் உள்ள கிவேலா என்ற இடத்தில் தங்கியிருந்தார்.
கடந்த 4ம் தேதி இரவு பணி முடித்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, மர்ம ஆசாமிகள் சிலர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு பறந்தனர்.
தலையில் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரசாத் சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக இலங்கை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரசாத்தின் உடல் நேற்று காலை 6.30 மணிக்கு சகாரா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
விமான நிலையத்தில் அவர் உடலுக்கு, அவரது அலுவலக தொலை தொடர்பு அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிறந்த கிரிக்கெட் வீரர்: ஆத்ம குரு பிரசாத் சிறந்த கிரிக்கெட் வீரர். இவர் உள்ளூர் மற்றும் மாநில போட்டிகளில் விளையாடியுள்ளார்.
Source : www.dinamalar.com
|
|
|
| இந்திய தலையீட்டை புலிகள் எதிர்க்கவில்லை |
|
Posted by: rajathiraja - 01-09-2006, 05:32 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
சென்னை: ""இலங்கை விவகாரத்தில் இந்தியா நேரடியாக தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்,'' என இலங்கை எம்.பி., சந்திரசேகரன் வலியுறுத்தினார்.
சென்னை வந்த இலங்கை எம்.பி., சந்திரசேகரன் தி.மு.க., தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். பின்னர் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். இதன்பின் நிருபர்களிடம் சந்திரசேகரன் கூறியதாவது:
இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா நேரடியாக தலையிட்டு இனப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இலங்கை தமிழர்களுடன் கலாசார ரீதியாகவும், இன ரீதியாகவும் தொடர்பு கொண்டுள்ள இந்தியாவுக்கே இப்பிரச்னையை தீர்ப்பதில் அதிக பொறுப்பு உள்ளது. எனவே இலங்கை தமிழர்களை இனியும் அந்நியராக இந்தியா கருதக் கூடாது. இலங்கை பிரச்னைக்கு தீர்வு காண உதவிக்கரம் நீட்டியுள்ள அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அமைதி பேச்சுவார்த்தையை மேற்கொண்ட நார்வே ஆகிய நாடுகளை விட இந்தியாவுக்கே அதிக பொறுப்பு உள்ளது.
தற்போது இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே அறிவிக்கப்படாத போர் உருவாகி உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்தியாவும், தமிழகமும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு தமிழர்களின் பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிக்காவிட்டால் அது மிகப் பெரிய வரலாற்றுப் பிழையாக கருதப்படும்.
இந்தியா தலையிடுவதை விடுதலைப் புலிகள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. தமிழகத்துக்கு வருவதற்கு முன் விடுதலைப் புலிகளின் பல தலைவர்களை சந்தித்துப் பேசிவிட்டு வந்தேன். இந்தியாவின் தலையீட்டை அவர்கள் பெரிதும் வரவேற்கின்றனர்.
இவ்வாறு சந்திரசேகரன் கூறினார்.
http://www.dinamalar.com/2006jan09/imp12.asp
|
|
|
| விசேட அதிரடிப்படையின் கைவரிசை |
|
Posted by: sooriyamuhi - 01-09-2006, 03:53 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
இராணுவத்தின் உயரதிகாரிகளுக்கோ சம்பந்தப்பட்ட ஏனையோருக்கோ தெரியா மல்
திருகோணமலை நகரின் பாதுகாப்புக்கு என்ற பெயரில் விசேடமாக அனுப்பப்பட்ட ஒரு
சப் இன்ஸ்பெக்டர் தலைமையிலான 24 பேர் கொண்ட விசேட அதிரடிப்படை யினரின்
கைவரிசையே திருகோணமலையில் ஐந்து அப்பாவித் தமிழ் மாணவர்களினதும் படுகொலைகள்
என இப்போது தகவல்கள் மெல்ல மெல்லக் கசியத் தொடங்கியிருக் கின்றன.
ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ பதவி யேற்றதும் அவரது பாதுகாப்பு ஆலோசகராக,
ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த பிரமுகரும், முன்னாள் பிரதிப் பொலீஸ்மா அதிபரு மான
எச்.எம். பி. டபிள்யூ. கொட்டகதெனிய நியமிக்கப்பட்டார்.
ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவும்
அவ ரது சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செய லாளருமான கோட்டபாய ராஜபக்ஷவும்
இந்திய விஜயத்தை மேற்கொண்டிருக்கை யில்
அந்தச் சந்தர்ப்பத்தை வகையாகப் பயன் படுத்தி பாதுகாப்பு அமைச்சின் செயலாள ருக்குத்
தெரிவிக்காமல் அவருக்குத் தெரி யப்படுத்தாமல் மேற்படி விசேட அதிரடிப்படைப் பிரிவினர்
கொட்டகதெனியவின் வழிகாட்டலில் திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்றும்
கூறப்படுகின்றது.
குழப்பத்தை ஏற்படுத்தும் "பயங்கரவாதி களுக்கு' எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்ற விசேட உத்தரவுடன் அனுப்பி வைக்கப்பட்ட இந்த அணியினரே ஐந்து
அப்பாவித் தமிழர்களையும் கொன்று தமது கைவரிசையைக் காட்டியிருக்கின்றனர் என்று கூறப்படுகின்றது.
திருகோணமலையிலோ, மேலிடத்திலோ உள்ள பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்குத்
தெரியப்படுத்தாமல் இந்த விசேட அதிரடிப்படை அணி விசேட உத்தரவுடன் அங்கு
அனுப்பிவைக்கப்பட்டிருப்பது இப்போது அம்பலத்துக்கு வந்திருக்கின்றது.
ஜனாதிபதியின் ஆலோசகர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் தமது அதிகார எல்லை களைத் தாண்டி
இவ்வாறு படைக்குவிப்பு, நகர்த்தல் போன்ற செயல்களில் கையடிப்பது பாதுகாப்பு
உயர் வட்டாரங்களில் பெரும் சர்ச்சைகளையும் குழப்பங்களையும் கூட உருவாக்கியிருக்கிறது.
அது மட்டுமல்லாமல் தற்போது
அமைதி முயற்சிகளுக்கு கொஞ்சம் நஞ்சம் இருக்கும் வாய்ப்புகளையும் குழப்பியடிக்கும்
விதத் தில் அரசின் பாதுகாப்புக் கொள்கை மற்றும்
நடைமுறைப்படுத்தல் ஆகியன
தொடர்பான விடயங்களில் தமது எல்லை தாண்டி அவர்
பகிரங்கமாகக் கருத்து வெளியிடுவ தும் அரசுக்குத் தேவையற்ற பல குழப்பங் களை
உருவாக்கியிருப்பதாகத் தெரிகின்றது.
இந்த நிலைமை குறித்தும் தமது அதிகார செயற்பாட்டு எல்லையைத் தாண்டி ஜனாதி பதியின்
பாதுகாப்பு ஆலோசகர் செயற்படக் கூடாது என்பது பற்றியும் பாதுகாப்பு அமைச் சின்
செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ அண்மையில் கொட்டகதெனியவுக்கு நாசூக் காக
ஆலோசனை கூறியிருக்கிறார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கொழும்பு மற்றும் மலையகப்
பிரதேசங் களில் தமிழர்களுக்கு எதிராகப் பெரும் கெடுபிடிகள், தேடுதல்கள்,
சுற்றிவளைப்பு கள் என்பன இடம்பெறுவதற்கும் கொட்டகதெனியவே காரணம்
என்றும் சில வட்டா ரங்களில் சந்தேகம்
தெரிவிக்கப்படுகின் றது.
www.uthayan.com
|
|
|
| திருமலையில் தமிழ் தேசியப்பிரகடனம் |
|
Posted by: iruvizhi - 01-08-2006, 11:07 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (4)
|
 |
திருமலையில் செவ்வாயன்று நடைபெறவுள்ள தமிழ்த் தேசியப்பிரகடன எழுச்சி விழாவுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி
Written by Ellalan Monday, 09 January 2006
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை திருகோணமலை மூதூர் கிழக்கு கடற்கரைச்சேனை பொது விளையாட்டரங்கில் இடம் பெறவிருக்கும் தமிழ்த் தேசிய எழுச்சி விழாவுக்கான எற்பாடுகள் யாவும் புூர்த்தியடைந்துள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது இராணுவத்தினரின் தமிழ் மக்கள் மீதான அடாவடித்தனங்கள் அதிகரித்துள்ள இந்த வேளையில் திருகோணமலையில் சர்வதேசத்தின் கவனம் திரும்பியுள்ள நிலையில் இந்த தமிழ்த் தேசியப்பிரகடன எழுச்சி விழா மிக முக்கியத்துவம் வாய்ந்ததொன்று என தமிழ்த் தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் வேறு, தமிழீழ விடுதலைப் புலிகள் வேறு அல்ல என்பதனை சர்வதேசத்தின் பார்வைக்கு உரைத்துக் காட்டுமுகமாகவும், இதேவேளை தமிழ் மக்களின் உணர்வுகளை இனிவரும் காலங்களிலாவது சர்வதேச சமுகம் கருத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும், பாரபட்சமின்றி, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையினை அனைத்து நாடுகளும் உறுதிப்படுத்த வேண்டும் என்பன தொடர்பாக சிறீலங்கா அரசுக்கும், சர்வதேச சமுகத்திற்கும் உணர்த்தும் வகையிலும் இந்த முக்கியமான கட்டத்தில் இந்த எழுச்சி பிரகடன நிகழ்வு இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவல்: சங்கதி
|
|
|
| சிறிலங்கா கடற்படைக்கு ஜெயலலிதா கண்டனம் |
|
Posted by: வினித் - 01-08-2006, 09:48 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (9)
|
 |
<b>அப்பாவி மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதா?: சிறிலங்கா கடற்படைக்கு ஜெயலலிதா கண்டனம் </b>
[திங்கட்கிழமை, 9 சனவரி 2006, 01:53 ஈழம்] [ம.சேரமான்]
தமிழக அப்பாவி மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக இந்தியக் கூட்டரசின் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு ஜெயலலிதா அனுப்பியுள்ள கடித விவரம்:
சிறிலங்கா கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர். பாக் நீரிணை அருகே உள்ள பகுதியான கச்சத் தீவில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் இதுபோன்ற தாக்குதலுக்கு அடிக்கடி ஆளாகின்றனர். இதுபோன்ற சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்துள்ளது.
ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் சனிக்கிழமை இரவு இயந்திரப் படகு மூலம் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த சிறிலங்கா கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். இத்தாக்குதல் சம்பவம் அதிகாலை 3 மணி அளவில் நிகழ்ந்துள்ளது. இதில் ஆண்ட்ரூஸ் என்ற மீனவர் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது.
அவர் தற்போது ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவருடன் மீன் பிடித்துக்கொண்டிருந்த மற்ற மூவரும் உயிர் தப்பியுள்ளனர்.
தொடர்ந்து இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதைத் தடுக்க வேண்டும் என்று பிரதமராகிய உங்களுக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளேன்.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மீன் பிடித் தொழிலையே சார்ந்துள்ளது. இப்பகுதி மீனவர்கள் பெரும்பாலும் கச்சத் தீவு பகுதியைச் சுற்றியுள்ள இடங்களிலேயே மீன் பிடித்து வருகின்றனர்.
கச்சத் தீவு பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான உரிமையை மத்திய அரசு நிலை நாட்ட வேண்டும். அதன் மூலம்தான் இப்பகுதியில் மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிக்க இயலும்.
பாக் நீரிணை பகுதியில் மீனவர்களுக்கு எதிராக சிறிலங்காக் கடற்படையினர் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பல முறை மத்திய அரசை வலியுறுத்தியுள்ளேன். அப்பாவி மீனவர்களுக்கு எதிராக ராணுவ தாக்குதல் நடத்துவதை எவருமே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
இந்த விடயத்தில் இந்திய அரசின் கடும் கண்டனத்தை சிறிலங்கா அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
எனவே இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை மத்திய அரசு காண வேண்டும்.
கச்சத் தீவை குத்தகை எடுப்பதன் மூலம் இப்பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதில் உள்ள பாரம்பரிய உரிமையை நிலை நாட்ட முடியும் என்று அதில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
http://www.eelampage.com/?cn=23229
|
|
|
| SL Navy soldiers order Trinco residents to hoist white flags |
|
Posted by: Vaanampaadi - 01-08-2006, 08:35 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- No Replies
|
 |
<b>SL Navy soldiers order Trinco residents to hoist white flags</b>
[TamilNet, January 08, 2006 18:51 GMT]
Several Tamil residents of Trincomalee and its suburbs Sunday complained to civil right leaders and parliamentarians that soldiers of the Sri Lanka Navy (SLN) manning checkpoints in the eastern port town are harassing them to hoist white flags to observe mourning for the SNL personnel who died in the Dvora gunboat blast, sources said.
More soldiers have been deployed in the town following the explosion of the SLN gunboat in Trincomalee harbor in the early morning of Saturday.
Meanwhile, the Commanding Officer of the Dvora gunboat sunk in Trincomalee Sea following an explosion has been identified as Lieutenant Commander Kamal Wanaretne. Two rescued sailors are now warded in the Trincomalee naval hospital, SLN sources said.
The destroyed Dvora gunboat was one of the six, " Shaldag Dvoras" in the possession of the SLN and one of the two Dvora gunboats were on regular patrol mission in the eastern sea, naval sources said.
Tamilnet
|
|
|
|