![]() |
|
இலங்கையில் சுட்டு கொல்லப்பட்ட இன்ஜினியர் உடல் சென்னை வந்தது - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: இலங்கையில் சுட்டு கொல்லப்பட்ட இன்ஜினியர் உடல் சென்னை வந்தது (/showthread.php?tid=1522) |
இலங்கையில் சுட்டு கொல்லப்பட்ட இன்ஜினியர் உடல் சென்னை வந்தது - rajathiraja - 01-09-2006 இலங்கையில் சுட்டு கொல்லப்பட்ட இன்ஜினியர் உடல் சென்னை வந்தது சென்னை : இலங்கையில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆந்திர இன்ஜினியரின் உடல் நேற்று விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. ஆந்திர மாநிலம் நெல்லுõர் மாவட்டம் காவாலி பகுதியைச் சேர்ந்தவர் ஆத்ம குரு பிரசாத்(26). இவர் ஆஸ்டர் டெலி சர்வீஸ் என்ற தனியார் தொலை தொடர்பு நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்தார். சமீபத்தில் அவர் வேலை பார்த்த நிறுவனம் இலங்கையில் உள்ள மொபைல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. இதையடுத்து, ஆத்ம குரு பிரசாத் இலங்கை கொழும்பில் உள்ள அலுவலகத்திற்கு மாற்றலாகி அருகில் உள்ள கிவேலா என்ற இடத்தில் தங்கியிருந்தார். கடந்த 4ம் தேதி இரவு பணி முடித்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, மர்ம ஆசாமிகள் சிலர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு பறந்தனர். தலையில் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரசாத் சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக இலங்கை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரசாத்தின் உடல் நேற்று காலை 6.30 மணிக்கு சகாரா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. விமான நிலையத்தில் அவர் உடலுக்கு, அவரது அலுவலக தொலை தொடர்பு அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறந்த கிரிக்கெட் வீரர்: ஆத்ம குரு பிரசாத் சிறந்த கிரிக்கெட் வீரர். இவர் உள்ளூர் மற்றும் மாநில போட்டிகளில் விளையாடியுள்ளார். Source : www.dinamalar.com - AJeevan - 01-09-2006 <span style='font-size:22pt;line-height:100%'>அவருக்கு எமது கண்ணீர் அஞ்சலி.</span> :oops: திருத்தம்: நெல்லுõர் மாவட்டம் - நெல்லூர் மாவட்டம். கிவேலா - தெகிவல |