Yarl Forum
இந்திய தலையீட்டை புலிகள் எதிர்க்கவில்லை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: இந்திய தலையீட்டை புலிகள் எதிர்க்கவில்லை (/showthread.php?tid=1523)



இந்திய தலையீட்டை புலிகள் எதிர்க்கவில்லை - rajathiraja - 01-09-2006

சென்னை: ""இலங்கை விவகாரத்தில் இந்தியா நேரடியாக தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்,'' என இலங்கை எம்.பி., சந்திரசேகரன் வலியுறுத்தினார்.

சென்னை வந்த இலங்கை எம்.பி., சந்திரசேகரன் தி.மு.க., தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். பின்னர் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். இதன்பின் நிருபர்களிடம் சந்திரசேகரன் கூறியதாவது:

இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா நேரடியாக தலையிட்டு இனப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இலங்கை தமிழர்களுடன் கலாசார ரீதியாகவும், இன ரீதியாகவும் தொடர்பு கொண்டுள்ள இந்தியாவுக்கே இப்பிரச்னையை தீர்ப்பதில் அதிக பொறுப்பு உள்ளது. எனவே இலங்கை தமிழர்களை இனியும் அந்நியராக இந்தியா கருதக் கூடாது. இலங்கை பிரச்னைக்கு தீர்வு காண உதவிக்கரம் நீட்டியுள்ள அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அமைதி பேச்சுவார்த்தையை மேற்கொண்ட நார்வே ஆகிய நாடுகளை விட இந்தியாவுக்கே அதிக பொறுப்பு உள்ளது.

தற்போது இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே அறிவிக்கப்படாத போர் உருவாகி உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்தியாவும், தமிழகமும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு தமிழர்களின் பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிக்காவிட்டால் அது மிகப் பெரிய வரலாற்றுப் பிழையாக கருதப்படும்.

இந்தியா தலையிடுவதை விடுதலைப் புலிகள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. தமிழகத்துக்கு வருவதற்கு முன் விடுதலைப் புலிகளின் பல தலைவர்களை சந்தித்துப் பேசிவிட்டு வந்தேன். இந்தியாவின் தலையீட்டை அவர்கள் பெரிதும் வரவேற்கின்றனர்.

இவ்வாறு சந்திரசேகரன் கூறினார்.

http://www.dinamalar.com/2006jan09/imp12.asp


Re: இந்திய தலையீட்டை புலிகள் எதிர்க்கவில்லை - தூயவன் - 01-09-2006

நிச்சயமாக.
எமது சுயகௌரவத்தை மதித்து எமக்கு உதவும் எந்த நேச சக்திகளையும் நாம் என்றைக்குமே வரவேற்போம்.