01-12-2006, 10:10 AM
இலங்கை வருகிறார் பாலசிங்கம்?
[வியாழக்கிழமை, 12 சனவரி 2006, 06:37 ஈழம்] [கொழும்பு நிருபர்]
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இம்மாத இறுதியில் இலங்கைக்கு வருகைத் தரக்கூடும் என்று கொழும்பு நாளேடு தெரிவித்துள்ளது.
இம்மாத இறுதியில் நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு வருகை தரும் நிலையில் அவருடன் பேச்சுக்களை நடத்த பாலசிங்கமும் இலங்கை வருகை தரக்கூடும் என்று கூறப்படுகிறது.
ஜனவரி 23 ஆம் நாள் இலங்கை வரும் எரிக் சொல்ஹெய்ம் சிறிலங்கா அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் முக்கிய பேச்சுகளை நடத்த உள்ளார்.
இந்த நிலையில் சிறிலங்கா அரசாஙக்த்தைத் தொடர்பு கொண்ட பாலசிங்கம் சிறிலங்கா பண்டாரநாயக்க விமான நிலையம் ஊடாக கிளிநொச்சி செல்வதற்கான பயண ஒழுங்குக்கு அனுமதி கோரியுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன என்றும் கொழும்பு நாளேடு கூறியுள்ளது.
இம்முறை கிளிநொச்சி செல்லும் எரிக் சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்திக்க உள்ளதாகவும் அச்சந்திப்பில் பாலசிங்கமும் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும் பாலசிங்கம் இத்தகைய அனுமதி கோரவில்லை என்று அரசத் தரப்பும் பாலசிங்கத்தின் வருகை உறுதிப்படுத்தப்படவில்லை என்று விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவும் தெரிவித்துள்ளன.
Puthinam

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>