Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
<span style='font-size:22pt;line-height:100%'><b>தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான கெடுபிடிகள்</b>
பொலிஸாரும் படையினரும் மேற்கொண்டு வருகின்ற பாதுகாப்பு நடவடிக்கைகளின்போது தமிழ் ஊடகவியலாளர்கள் அநாவசியமாக எதிர்நோக்க வேண்டியிருக்கின்ற நெருக்கடிகள் குறித்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு வந்திருக்கின்றபோதிலும், அரசாங்கம் அது விடயத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதில் அக்கறை காண்பிக்காமல் அலட்சிய மனோபாவத்தையே கடைப்பிடித்து வந்திருக்கின்றது. அண்மைக்காலமாக தலைநகர் கொழும்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் படையினரின் தேடுதல் வேட்டைகளின் போது தமிழ் ஊடகவியலாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட சம்பவங்களையடுத்து அவர்களின் பிரச்சினை மீண்டும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஊடகத்துறை, தகவல் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தமிழ்ப் பத்திரிகைகள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர்களையும் சிரேஷ்ட செய்தியாளர்களையும் தனது அமைச்சுக்கு அழைத்து சிரேஷ்ட பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் முன்னிலையில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் குறித்து ஆராய வேண்டிய அளவுக்கு அந்த விவகாரம் உயர்மட்டத்துக்கு உறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் ஊடகவியலாளர்கள் முகங்கொடுக்க வேண்டியிருக்கும் பாதுகாப்பு கெடுபிடிகள் குறித்து தமிழ் ஊடகங்களின் பிரதிநிதிகள் அமைச்சர் யாப்பாவுக்கு விளக்கியதையடுத்து, எதிர்காலத்தில் அத்தகைய துரதிர்ஷடவசமான சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதை உறுதி செய்வதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்வதாக அவர் உறுதியளித்திருக்கிறார். தமிழ் ஊடகவியலாளர்கள் விடயத்தில் பொலிஸார் அல்லது படையினர் தரப்பில் அதிகார துஷ்பிரயோகம் அல்லது அத்துமீறல்கள் இடம்பெறுமானால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் தயங்கப் போவதில்லை என்றும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார். தமிழ் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் காலங் கடந்தென்றாலும், இந்தளவுக்கு அக்கறை காட்ட முன்வந்தமைக்காக அமைச்சர் யாப்பாவுக்கு நாம் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
தேடுதல் வேட்டைகள் மற்றும் சோதனை நடவடிக்கைகளின்போது தமிழ் ஊடகவியலாளர்களுடன் பொலிஸார் மற்றும் படையினர் நடந்து கொள்வதில் காண்பிக்கின்ற ஒரு விசித்திரமான போக்கை இச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது. தலைநகரில் உள்ள முக்கியமான ஊடக நிறுவனங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் சகலருக்கும் அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட பிரத்தியேக அடையாள அட்டைகள் (Media Accreditation) வழங்கப்பட்டிருக்கின்றன. சோதனை நிலையங்களில் அல்லது தேடுதல் நடவடிக்கைகளின் போது தமிழ் ஊடகவியலாளர்கள் அந்த பிரத்தியேக அடையாள அட்டைகளை காண்பிக்கும் போது அவற்றை பொலிஸாரும் படையினரும் அலட்சியம் செய்வதைக் காணக் கூடியதாக இருக்கிறது. பொலிஸாரினதும் படையினரினதும் தொப்பிகளில் அல்லது சீருடைகளில் காணப்படுகின்ற அதே அரசாங்க இலச்சினை ஊடகவியலாளர்களின் அட்டைகளிலும் இருப்பதைக் கூட அவர்கள் பொருட் படுத்தாத பல சந்தர்ப்பங்கள் குறித்து தமிழ் ஊடகவியலாளர்கள் முறையிட்டிருக்கின்றார்கள். அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளரின் கையொப்பத்துடனான அந்த அடையாள அட்டைகளையே படையினர் நம்பகத்தன்மையுடன் நோக்கத் தயாரில்லை என்றால் தமிழ் ஊடகவியலாளர்கள் என்ன செய்ய முடியும்?
தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் அடையாள அட்டைகளின் மாதிரிகளை பொலிஸாருக்கும் படையினருக்கும் காண்பித்து அவர்கள் ஊடகவியலாளர்களை எளிதில் இனங் காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அமைச்சர் யாப்பாவுடனான தமிழ் ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போது உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. சுமார் கால் நூற்றாண்டுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டு வருடாந்தம் ஊடகவியலாளர்களுக்கு தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டு வருகின்ற இந்த பிரத்தியேக அடையாள அட்டைகளை தலைநகரில் கடமையில் ஈடுபடுகின்ற பொலிஸாரிலும் படையினரிலும் பெருமளவானோர் அறியாமல் இருப்பது மிகவும் விசித்திரமான ஒன்றாகும். இந்த அடையாள அட்டைகளை காண்பிக்கும் பட்சத்தில் ஊடகவியலாளர்களை உரிய முறையில் இனங்கண்டு அவர்கள் தங்கள் கடமைகளை இடையூறின்றித் தொடருவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை இனிமேலாவது தாமதமின்றி அமைச்சர் யாப்பாவும் உயர் பொலிஸ் மற்றும் படையதிகாரிகளும் எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழ் ஊடகவியலாளர் எதிர் நொக்குகின்ற இத்தகைய பாதுகாப்பு கெடுபிடிகள் உட்பட பொதுவில் ஊடகவியலாளர்களுக்கு நேருகின்ற இன்னல்களைக் கண்டித்து இன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக பேரணியொன்று நடைபெறவிருக்கிறது சுதந்திர ஊடக இயக்கம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், முஸ்லிம் மீடியா போரம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் ஆகியவை கூட்டாக ஏற்பாடு செய்திருக்கும் இந்தப் பேரணியில் ஊடக சமூகத்தவர்களும் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளைச் சார்ந்தவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு தங்கள் மீதான கெடுபிடிகளை முடிவுக்குக் கொண்டுவரப் போராடும் ஊடகவியலாளர்களுக்கான ஒருமைப்பாட்டை வெளிக்காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
-தினக்குரல்</span>
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
<span style='font-size:22pt;line-height:100%'><b>`ஊடக சுதந்திரத்திற்கு ஆப்பு வைக்காதே'; ஊடகவியலாளர் அணி திரண்டு ஆர்ப்பாட்டம்</b>
<img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2006/January/13/front.jpg' border='0' alt='user posted image'>
அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி ஊடகவியலாளர்கள் மீது அரச படையினர் மேற்கொண்டுவரும் கைது, விசாரணை. கெடுபிடி என்பவற்றிற்கு கண்டனம் தெரிவித்து ஐந்து ஊடகவியலாளர் அமைப்புகள் நேற்று வியாழக்கிழமை மாலை கொழும்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக நேற்று மாலை 4 மணி தொடக்கம் 5 மணி வரை நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், முஸ்லிம் மீடியா போரம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், ஊடக ஊழியர் தொழிற் சங்க சம்மேளனம் என்பவற்றின் பிரதிநிதிகளும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
`அடக்காதே அடக்காதே ஊடக சுதந்திரத்தை அடக்காதே', `அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடக சுதந்திரத்திற்கு ஆப்பு வைக்காதே', `அரசபடை அராஜகத்திற்கு அரசே பதில் சொல்', `வேண்டாம் வேண்டாம் மீண்டுமொரு தடவை ஊடக சுதந்திர இருட்டடிப்பு', அவசரகாலச் சட்டம் மூலம்தமிழ் ஊடகத்துறையை அடக்க முயலாதே' போன்ற பாதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷமெழுப்பினர்.
அரச தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை காண்பித்தபோதும் அதனை உதாசீனம் செய்து தமிழ் ஊடகவியலாளர்களை கைது செய்து தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டமை மற்றும் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகளின் போது நூற்றுக் கணக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்களை புகைப்படமெடுத்து பிரசுரித்தமை தொடர்பாக இரு தமிழ்ப் பத்திரிகைகளின் அலுவலகங்களுக்குள் நுழைந்து விசாரணைகளை மேற்கொண்டமை உட்பட அதிகரித்துள்ள கெடுபிடிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்தே தமிழ், சிங்கள ஊடகவியலாளர்களால் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேவேளை, இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மேலக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் கலாநிதி ந.குமரகுருபரன், செயலாளர் சட்டத்தரணி த. ஜெயரட்ணராஜா, மாநகர சபை உறுப்பினர் ஆர். ராஜேந்திரன், கொழும்பு அமைப்பாளர் எஸ். முரளிதரன், புதிய இடதுசாரி முன்னணியின் முக்கியஸ்தர் நடராஜா ஜனகன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
`ஊடக சுதந்திரத்திற்கு ஆப்பு வைக்காதே'; ஊடகவியலாளர் அணி திரண்டு ஆர்ப்பாட்டம்
அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி ஊடகவியலாளர்கள் மீது அரச படையினர் மேற்கொண்டுவரும் கைது, விசாரணை. கெடுபிடி என்பவற்றிற்கு கண்டனம் தெரிவித்து ஐந்து ஊடகவியலாளர் அமைப்புகள் நேற்று வியாழக்கிழமை மாலை கொழும்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக நேற்று மாலை 4 மணி தொடக்கம் 5 மணி வரை நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், முஸ்லிம் மீடியா போரம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், ஊடக ஊழியர் தொழிற் சங்க சம்மேளனம் என்பவற்றின் பிரதிநிதிகளும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
`அடக்காதே அடக்காதே ஊடக சுதந்திரத்தை அடக்காதே', `அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடக சுதந்திரத்திற்கு ஆப்பு வைக்காதே', `அரசபடை அராஜகத்திற்கு அரசே பதில் சொல்', `வேண்டாம் வேண்டாம் மீண்டுமொரு தடவை ஊடக சுதந்திர இருட்டடிப்பு', அவசரகாலச் சட்டம் மூலம்தமிழ் ஊடகத்துறையை அடக்க முயலாதே' போன்ற பாதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷமெழுப்பினர்.
அரச தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை காண்பித்தபோதும் அதனை உதாசீனம் செய்து தமிழ் ஊடகவியலாளர்களை கைது செய்து தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டமை மற்றும் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகளின் போது நூற்றுக் கணக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்களை புகைப்படமெடுத்து பிரசுரித்தமை தொடர்பாக இரு தமிழ்ப் பத்திரிகைகளின் அலுவலகங்களுக்குள் நுழைந்து விசாரணைகளை மேற்கொண்டமை உட்பட அதிகரித்துள்ள கெடுபிடிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்தே தமிழ், சிங்கள ஊடகவியலாளர்களால் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேவேளை, இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மேலக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் கலாநிதி ந.குமரகுருபரன், செயலாளர் சட்டத்தரணி த. ஜெயரட்ணராஜா, மாநகர சபை உறுப்பினர் ஆர். ராஜேந்திரன், கொழும்பு அமைப்பாளர் எஸ். முரளிதரன், புதிய இடதுசாரி முன்னணியின் முக்கியஸ்தர் நடராஜா ஜனகன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
- தினக்குரல்</span>
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<span style='font-size:25pt;line-height:100%'><b>தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான சித்திரவதை: பாதுகாப்பு அமைச்சிடம் முறைப்பாடு </b>
தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான சித்திரவதையைக் கண்டித்து சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுக்கு பல ஊடக அமைப்புகளின் சார்பாக முறைப்பாட்டுக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
<b><i>இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் கூட்டமைப்பின் செயலாளர் ஆர்.பாரதி, இலங்கை ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் பாலசூர்யா, இலங்கை முஸ்லிம் ஊடகவியலாளர் பேரவையின் தலைவர் என்.எம். அமீம், சுதந்திர ஊடக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீதா ரஞ்சனி, ஊடகத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் தர்மசிறி லங்கபெலி ஆகியோர் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.</i></b>
தமிழ் ஊடக நிறுவனங்களில் தேடுதலை மேற்கொள்ளவும் தமிழ் ஊடகவியலாளர்களைக் கைது செய்யவும் அவசரகால சட்ட நடைமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தின் தகவல் அமைச்சினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளும் கூட இத்தகைய கைது நடவடிக்கைகளின் போது நிராகரிக்கப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையானது ஊடகவியலாளர்களின் பணிச் சூழலை மட்டும் பாதிக்கவில்லை. அவர்கள் தங்கள் வதிவிடங்களில் வாழ்வதற்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் தங்களுடன் விவாதிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 15 ஆம் நாள் யாழில் நமது ஈழநாடு அலுவலகத்தில் சோதனை
டிசம்பர் 17 ஆம் நாள் கொழும்பு தினக்குரல் ஊடகவியலாளர் 12 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டமை
டிசம்பர் 19 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் அமைதி ஊர்வலத்தில் செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களை அரச படையினர் தாக்கியமை
ஜனவரி 5 ஆம் நாளன்று புகைப்படம் எடுத்த வீரகேசரி மற்றும் தினக்குரல் ஊடகவியலாளர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்களும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன.
இதனிடையே ஊடகத்துறையினர் மீதான ஒடுக்குமுறைகளைக் கண்டித்து கண்டியில் கண்டன ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடக இயக்கத்தின் பேச்சாளர் சுனந்த தேசப்ரிய மற்றும் ஊடகவியலாளர் இயக்கங்களின் நிர்வாகிகள் சனத் பாலசூர்ய, பொட்டல ஜயந்த, கசுன் யாப்ப கருணாரட்ண, தர்மசிறி லங்கஜெலி உள்ளிட்ட பலர் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.
கண்டி மற்றும் நுவரெலியா ஊடகவியலாளர் சங்கங்களும் இந்தப் பேரணியில் இணைந்து கொண்டனர்.
சுயாதீனமாகச் செயற்படும் ஊடகவியலாளர்கள் மீதான காவல்துறையினரது ஒடுக்குமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பதாகைகளும் இந்தப் பேரணியில் ஏந்திச் செல்லப்பட்டன</span>
<b><i>தகவல்மூலம்;- புதினம்</i></b>
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<span style='color:green'><b>கண்டியில் ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்.</b>
பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களை ஆட்சேபித்து, கண்டியில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
இலங்கை ஊழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், சுதந்திர ஊடகவியலாளர் சங்கம், முஸ்லிம் ஊடக அமைப்பு, தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மற்றும் கண்டி நுவரேலிய ஊடகங்கள் சங்கங்கள் இணைந்து, மணிக்கூண்டுக் கோபுரத்திற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின.
நோவூட் செய்தியாளர் ரஞ்சித் ராஜபக்ச மற்றும், கண்டி லங்காதீப செய்தியாளர், ஜே.ஏ.எல். ஜெயசிங்க ஆகியோருக்கான அச்சுறுத்தலை கண்டித்தே, இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.</span>
<i><b>தகவல் மூலம்- பதிவு</b></i>
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<span style='color:indigo'><b>ஊடகவியலாளர் பாதுகாப்பு குறித்து மகிந்தவுடன் சந்தித்துப்பேச ஊடக அமைப்புகள் முயற்சி </b>
தமிழ் ஊடகவியலாளர்கள் எந்தவித அச்சமும் இன்றி சுதந்திரமாகப் பணியாற்றுவதை உறுதிப்படுத்துவது தொடர்பாக கலந்தரையாடுவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு தென்னிலங்கை ஊடக அமைப்புகள் ஸ்ரீலங்காவின் அரசு தலைவர் மகிந்த ராஜபக்சவைக் கோரியுள்ளன.
இது தொடர்பாக ஐந்து ஊடக அமைப்புகள் மகிந்த ராஜபக்ஸவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளன.
அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது,
அரச பாதுகாப்பு தரப்பினரால், அவசர காலசட்டத்தினைப் பயன்படுத்தி ஊடகவிலாளர்களை கைது செய்தல், இடையூறுகளை விளைவித்தல், மற்றும் ஊடக நிறுவனங்களை தீவிர சோதனையிடுதல், போன்ற நடவடிக்கையினை அதிகரித்து வருகின்றமையினை காணக்கூடிவாறு இருப்பதுடன், இவை அதிகளவு தமிழ் ஊடகங்களை இலக்காக வைத்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையினையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
தமிழ் ஊடகவியலாளர்களை அவசர காலச்சட்டத்தின் கீழ் கைது செய்யும் பொழுது மட்டுமின்றி கடமையில் இருக்கும் போது கூட பாதுகாப்பு தரப்பினர் மூலம், அரசினால் வழங்கப்பட்டுள்ள உத்தியோக பூர்வ அடையாள அட்டையினையும், நிராகரித்து விடுகின்றனர்.
இது ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செய்தி சேகரிக்கும் நடவடிக்கைகளை தடுப்பதோடு, அவர்கள் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றது.
ஆனால் இந்த நிலமை தொடர்பாக உங்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கு எமது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆர்வத்துடன் இருப்பதுடன், அதற்காக உடனடியாக நாளையும், நேரத்தினையும், பெற்றுத்தருவீர்கள் என எதிர்பார்க்கின்றோம் என கேட்டுக்கொண்ட அக்கடிதத்தில், இராணுவத்தினரின் அண்மைக் காலத்தில் ஊடகநிறுவனங்கள். ஊடகவியவாளர்கள், மற்றும், ஊடகப்படப்பிடிப்பாளர்களுக்கு எற்பட்ட நெருக்கடிகள் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன</span>
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<b>கொலை அச்சுறுத்தலுக்குள் தமிழ் ஊடகங்கள்</b>
<i><b>சுகுணம்</b></i>
ஒரு நாட்டில் வாழ்கின்ற மக்கள் எந்தளவு சுதந்திரக் காற்றினை அனுபவிக்கின்றார்கள் என்பதனை இயங்கும் சுதந்திர ஊடகங்களை வைத்து அறிந்து கொள்ள முடியும்.
அபிவிருத்தியடைந்த நாடுகளை பார்த்தால் இவற்றை விளங்கிக்கொள்ள முடியும். இருந்தாலும் ஆரம்ப உலகப் போர் இடம் பெற்ற வேளையில் சுதந்திர ஊடகம் மறுக்கப்பட்டது. காரணம் ஒரு நாட்டின் யுத்த இரகசியங்கள் மற்றும் யுத்தம் நடக்கும் காலங்களில் எதிரி தமது பலவீனங்களை அறிந்து கொள்ள ஊடகங்கள் துணை போகலாம் என்ற உணர்வினைக் கொண்டிருந்தார்கள். எனினும் யுத்தம் இடம் பெறும் காலங்களில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
ஆனால் எந்வொரு நாட்டினதும் மக்களின் தேவைகள் குறையான அபிவிருத்தி நாட்டின் உண்மைத் தன்மை யுத்த காலங்களில் இரு தரப்புக்கும் ஏற்படும் இழப்புக்களை சரியாக சரியான நேரத்தில் உரிய முறையில் வெளிக்காட்ட வேண்டியது ஊடகங்களின் தார்மீக பொறுப்பாகும். எங்கே?இ எப்ண்;பாது? எவ்வாறு? என்ற கேள்விகளை மக்கள் எழுப்புகின்ற வேளையில் உரிய பதில் இந்த ஊடகங்களின் மூலமாகப் பெற்றுக் கொள்ள முடிகின்றது.
எவ்வாறாயினும் அரச மற்றும் தனியார் ஊடகத் துறையினர் இயங்கிய போதும் அரசு எப்போதும் தமக்கு சார்பான உண்மைகளை மறைத்துச் செயல்படுவார்கள். ஆனால் தனியார் ஊடகங்கள் அரசினை பழிவாங்கும் நோக்கம் கொண்டவை அல்ல. மக்கள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் உன்னிப்பாக செயல்படுபவர்கள். எந்த ஒரு விடயமாக இருந்தாலும் தெட்டத்தெளிவாக வெளிக்காட்டி விடுவார்கள்.
இந்த விடயத்தில் சிறிலங்காவில் புதுவிதமான செயல் முறையுள்ளது. அதிலும் அரசு தமக்கு எது ஏற்புடையதாக உள்ளது என்பதில் மிகவும் அக்கறையாக உள்ளது. 1990ம் ஆண்டுக்குப் பின்பு நாட்டில் போர்ச் சூழல் மிகவும் படுமோசமாக இருந்தது. அன்றைய காலத்தில் இருந்த ஆட்சியாளர்கள் நாட்டின் உண்மைத் தன்மையினை தமது நாட்டு மக்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் கூட வெளிக்காட்டவில்லை என்பது யாவரும் அறிந்த உண்மை.
சிறிலங்கா இராணுவத்தினால் எத்தனை படுகொலைகள் இடம் பெற்றது. ஆண்இ பெண்இ சிறியவர்இ பெரியவர் என்ற வயது வேறுபாடு இன்றிப் படுகொலை செய்யப்பட்டார்கள்.
யாழ்ப்பாணம்இ மட்டக்களப்பு அம்பாறை போன்ற மாவட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள். எதுவும் வெளியிடப்படவில்லை. சிறுபான்மைகளின் உறவுகளின் உரிமைகள் நசுக்கப்படும் போது பெரும்பான்மை இனம் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றது. சிறுபான்மையினம் துன்பங்கள் அவல ஓலங்களை வெளிக்காட்ட மறுப்புக்கள் தெரிவிக்கப்பட்டது. இது தான் பத்திரிகை மற்றும் ஊடக சுதந்திரம்.
இதனை விட இராணுவத்தினால் கைது செய்யப்பட்டுக் காணாமல் போனோர் பட்டியல் சரியான புள்ளி விபரங்களை வெளியிட முடியாத நிலை. இராணுவத்தினால் கைது செய்யப்பட்டவர் என வெளிப்படையாக பத்திரிகையில் செய்தி வர மறுநாள் சடலமாக மீட்கப்படுகின்றார்கள். பத்திரிகை வெளிகாட்டியும் அதன் புனிதத் தன்மையினை பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை.
பத்திரிகை என்பது இனஇ மதஇ கட்சி வேறுபாடு இன்றி வெளியிடப்பட வேண்டும். ஆனால் சிறிலங்காவின் அரசியலில் அது தலைகீழாக உள்ளது. ஒரு காலத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது அரசாங்கத்தின் சார்பில் இருந்தால் அவர்களுக்கு எதனையும் செய்ய முடியும். இன விடுதலைக்காகப் போராடும் ஒரு தேசிய இயக்கத்தின் கொள்கைகள் மற்றும் அவற்றின் உண்மைகள் வெளியிட மறுக்கப்படுகின்றது. இது தான் பத்திரிகை
சுதந்திரமாம்.
அன்று யாழ்பாணத்தில் மயில்வாகனம்இ நிமலராஜன் மாற்று ஆயுத குழுக்களின் உண்மைகளை வெளியிட்டதால் ஈ.பி.டி.பி இயக்கத்தினால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. சிறிலங்கா அரசாங்கம் அல்லது மாற்று ஆயுதக் குழுக்களின் அராஜகத்தினை வெளியில் சொன்னால் கிடைக்கும் பரிசு கொலை. இதே போன்று மட்டக்களப்பில் சிரேஸ்ர ஊடகவியலாளர் ஜி.நடேசன் அவர்கள் கருணா தமிழ் தேசத்திற்கு எதிராக மேற்கொண்ட துரோகங்களை அம்பலப்படுத்தியமையால் அந்தக் கும்பலால் ஈவிரக்கமற்ற முறையில் மிகவும் கோழைத்தனமாக சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதே வேளையில் கொழும்பில் மாமனிதர் டி.சிவராம் சிங்கள கோட்டையில் நின்று தமிழ் மக்களின் போராட்டத்தினை நியாயப்படுத்தி சிங்கள தேசத்தில் சிறுபான்மை தமிழ் இனம்; உண்டு. அவர்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டும் என்பதனை சாதாரண பாமர மக்கள் தொடக்கம் புத்திஜீவிகள் அரசியல்வாதிகள் வரை உணர்த்தியவரை சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி அழித்து விட்டார்கள்.
இவரின் கொலை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து ஊடக அமைப்புகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சர்வதேச சமூகத்தினை வேண்டியதால் தப்பவழியில்லாது கொலை செய்தவர்களை கைது செய்வது போல் பாசாங்கு காட்டியுள்ளார்கள். இதுவரையில் குற்றவாளிக்கு எந்தவிதமான தண்டனையும் வழங்கப்படவில்லை. இது வெறும் கண்துடைப்பாகவே உள்ளது.
அது மாத்திரமல்ல தற்போது கொழும்பில் தினக்குரல் செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அவர்கள் அரசாங்கத்தின் தகவல் திணைக்களத்தின் அடையாள அட்டையினை காட்டிய போதும் விசாரிக்க வேண்டும் என்று படைத்தரப்பினர் கூறியுள்ளார்கள் என்றால் தமிழ் ஊடகவியலாளர்கள் எந்தளவுக்குப் பாதிக்கப்படுகின்றார்கள் என்பது நன்கு புலனாகும். அத்துடன் யாழ்ப்பாணத்தில் உள்ள தினக்குரல்இ நமது ஈழநாடு அலுவலகங்கள்; சோதனைக்குள்ளாகியுள்ள விடயமும் தெரிந்தவையே.
அத்துடன் சக்தி தொலைக்காட்சி நிறுவனத் தலைவர் மகாராஜா அவர்களை கொலை செய்வதற்கான சதிகள் கூட இடம் பெற்றன. ஆனால் இது யாரால் மேற்கொள்ளப்பட்டது. ஏன் செய்ய முற்பட்டார்கள். என்பது இதுவரையில் தெரியவில்லை. அரசினால் இதுதொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்த போதிலும் அதில் எந்தளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.
இது இவ்வாறிருக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் ஈழநாதம் (மட்டு பதிப்பு) பத்திரி;கையின் விநியோகப் பணியாளர் அரசகுமார் என்பவர் அக்கரைப்பற்றில் வைத்து ஆயுதக் குழுக்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதே போன்று மட்டக்களப்பு நகரில் வைத்து ஜோக்குமார் என்ற விநியோகப் பணியாளர் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் சுட்டுகொல்லப்பட்டார். இதுவரையில் என்ன நடந்தது. பத்திரிக்கையின் தருமத்தினை பறித்தெடுக்கும் அளவுக்கு சிறிலங்காவின் ஜனநாயகம் மாறியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் மயில்வாகனம் நிமலராஜன்இ மட்டக்கப்பில் நடேசன்இ சிவராம் வரைக்கும் ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள.; சிந்தியுங்கள். ஊடகங்களை அடக்குவதன் மூலம் தமது அடாவடிகளை மறைக்க முற்படலாம். ஆனால் சிறிலங்காவினை பொறுத்தவரையில் இவை இயலாத காரியமாகவே உள்ளது. சிறிலங்காவின் அடக்குமுறைகள் வெளியுலகுக்கு இன்று தெரிந்து விட்டது.
அண்மையில் கூட மட்டக்களப்பு நகரில் திருமலை வீதியில் கிளேமோர் தாக்குதல் இடம் பெற்றது. இவற்றுக்குச் சென்ற தமிழ் பத்திரி;கையாளர்களை இராணுவத்தினர் தாக்க முற்பட்டார்கள் இதே வேளையில் எமது சகோதர இனமான முஸ்லிம் பத்திரிகையாளர்கள் செல்ல அனுமதியளிக்கப்பட்டது. இது கூட அவர்களின் இனவாதப் போக்கினையே காட்டியுள்ளது. பத்திரிகையானது யாருக்கும் வக்காலத்து வாங்கவேண்டிய நிலையில்லை. அவர்களைச் சுதந்திரமாக இயங்கவிட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு!
<i><b>தகவல் மூலம்- ஈழநாதம் மட்டக்களப்பு பதிப்பு</b></i>
"
"
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
உம். ஒவ்வொரு முறையும் கொலைகள் விழும்போது தானே ஆர்ப்பாட்டம். இதுவரைக்கும் கொல்லப்பட்ட நிமலராஜன், நடேசன், சிவராம் போன்றவர்களுக்காக என்ன நடந்தது? கடைசியில் மூடி வைக்கப்பட்ட வழக்காகத் தானே மாறிப் போச்சு!!
[size=14] ' '
Posts: 164
Threads: 9
Joined: Jan 2006
Reputation:
0
தமிழ் ஊடகவியலாளர்கள் தான் இவ்வாறான சம்பவங்களை மீண்டும் இடம்பெறாமல் தடுக்கவேண்டும். பழைய கொலைகளையும் தூசி தட்டி எழுத வேண்டும்.
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
<!--QuoteBegin-ukraj+-->QUOTE(ukraj)<!--QuoteEBegin-->தமிழ் ஊடகவியலாளர்கள் தான் இவ்வாறான சம்பவங்களை மீண்டும் இடம்பெறாமல் தடுக்கவேண்டும். பழைய கொலைகளையும் தூசி தட்டி எழுத வேண்டும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அது பிரியோசமே இல்லை!!
இதைப் பற்றி சர்வதேசத்துக்கு கொண்டு செல்லும் விதத்தில் தான் சிங்களத்தின் முகத்திரையை கிழிக்கும் அளவு தங்கியிருக்கின்றது
[size=14] ' '
Posts: 164
Threads: 9
Joined: Jan 2006
Reputation:
0
அதை தான் சொல்லுறன்.... எல்லாரும் தமிழில எழுதாம ஆங்கிலத்தில அட்லீஸ்ட் 2 பேப்பராவது ஒவ்வொரு நாளும் வரவேண்டும்.
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
ஒரு காலத்தில் வீரகேசரியும் ஆங்கில வெளியீடு ஒன்றைச் செய்து கொண்டிருந்தது ஈழத்தில். கடைசியில் குறுகிய காலத்தில் அது நஸ்டப்பட்டு நின்று போனது.
[size=14] ' '
Posts: 164
Threads: 9
Joined: Jan 2006
Reputation:
0
இது எதனை காட்டுகிறது....? இலாபம் எண்டால் தான் எங்கட ஆட்கள் செய்வினம் எண்டதைதானே.
|