Yarl Forum
புலிகள் படையினருக்கு சேறு பூசும் நடவடிக்கை ஆரம்பித்துள்ளனர் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: புலிகள் படையினருக்கு சேறு பூசும் நடவடிக்கை ஆரம்பித்துள்ளனர் (/showthread.php?tid=1450)



புலிகள் படையினருக்கு சேறு பூசும் நடவடிக்கை ஆரம்பித்துள்ளனர் - Vaanampaadi - 01-12-2006

வியாழன் 12-01-2006 19:17 மணி தமிழீழம் [நிருபர் மயூரன்]

விடுதலைப் புலிகள் படையினருக்கு சேறு பூசும் நடவடிக்கை ஆரம்பித்துள்ளனர் - நிமால் சிறிபால டி சில்வா.
தமிழீழ விடுதலைப் புலிகள் அரசாங்கப் படைத்தரப்பினருக்கு சேறு பூசும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மகாநாட்டில் அறிவிக்கும் பொழுதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த செயல்பாடுகளை, அரசாங்கம் கண்டிப்பதாக தெரிவித்த அவர், நோவேயின் இலங்கைக்கான சமாதான அமைச்சர் எரிக் சொல்ஹேமின் இலங்கை வருகையின் பின்னர், சமாதான பேச்சு வார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான புதிய முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இலங்கைக்கு உதவி வழங்கும் இணைதலைமை நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து அரசாங்கத்தின் சமாதான நடவடிக்கைகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்படும் போர் நிறுத்த மீறல்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சரின் அமெரிக்க விஜயம் வெற்றி அளித்துளள்ளதாகவும், அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் அமெரிக்காவும், அவுஸ்த்திரேலியாவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை கண்டித்துள்ளன எனவும் அவர் இன்றைய ஊடகவியலாளர் மகாநாட்டில் உரையாற்றும் பொழுது தெரிவித்தார்.

Pathivu