| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 288 online users. » 0 Member(s) | 286 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,294
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,229
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,288
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,621
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,048
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,456
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,471
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,022
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| இதுவரை 28 பெண்கள் கற்பழிப்பு தப்பி வந்த அகதிப்பெண் கண்ணீர் |
|
Posted by: Vaanampaadi - 01-13-2006, 06:13 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
<b>இலங்கை ராணுவம் வெறிச்செயல் இதுவரை 28 பெண்கள் கற்பழிப்பு தப்பி வந்த அகதிப்பெண் கண்ணீர் </b>
ராமேசுவரம், ஜன. 12- இலங்கை ராணுவம் கடந்த ஒரு மாதத்திற்குள் 28 தமிழ்பெண்களை கற்பழித்துள்ளதாகவும், சோதனை என்ற பெயரில் அழைத்துச்செல்லப்படும் ஆண்களின் கதி பற்றி தெரியவில்லை என்றும் தனுஷ்கோடி வந்த இலங்கை அகதிப்பெண் கண்ணீருடன் கூறினார்.
இலங்கை புதிய அதிபராக மகிந்தா ராஜபக்சே பொறுப்பேற்றப் பிறகு விடுதலைப்புலிகளுடன் மோதல் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி வருகின்றனர்.
தமிழ் ஆதரவு எம்.பி., கடந்தமாதம் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு போர் அபாயம் மேலும் அதிகாpத்துள்ளது. இலங்கை ராணுவத்துக்குச் சொந்தமான கப்பலை சமீபத்தில் புலிகள் நடுக்கடலில் மூழ்கடித்தனர். ராணுவம் மற்றும் புலிகளுக்கு இடையிலான அடுத்தடுத்த மோதல்களால் யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் பதட்டம் அதிகாpத்துள்ளது.
தமிழர்களில் பெரும்பாலானோர் உயிர் பிழைப்பதற்காக வெளியேறி வருகின்றனர். அவர்களில் 6 குடும்பத்தை சேர்ந்த 8 ஆண்கள், 6 பெண்கள், 10 குழந்தைகள் என மொத்தம் 24 பேர் தலைமன்னார் செல்வபுரத்திலிருந்து நேற்று காலை அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர். தாசில்தார் குருசாமி, டி.எஸ்.பி. சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் தங்கவேலு ஆகியோர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
தனுஷ்கோடி அhpச்சல் முனைக்கு வந்திறங்கிய அகதிப்பெண் ரஜனி கூறியதாவது„ தமிழர்கள் வாழும் பகுதிகளில் இலங்கை ராணுவத்தினர் அத்து மீறி நடக்கின்றனர். இதுவரை 28க்கும் மேற்பட்ட பெண்கள் இலங்கை ராணுவத்தினரால் கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். நு}று வீடு திட்டம் பகுதியில் பல ஆண்களை சோதனை எனும் பெயரில் அழைத்து சென்றனர். அவர்கள் என்ன ஆனார்கள் என்றே இதுவரை தெரியவில்லை.
விடுதலைபுலிகளின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத இலங்கை ராணுவம் அப்பாவி தமிழர்களை கொன்று வருகிறது. நு}ற்றுக்கும் மேற்பட்ட தமிழ் குடும்பத்தினர் பேசாலையில் உள்ள தேவாலயத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். நாளை (ஜன.14)க்கு பின்னர் ராணுவம் தனது தாக்குதலை தீவிரப்படுத்தும் என கூறப்படுகிறது. காடுகளில் தஞ்சம் புகுந்து, உணவு, தண்ணீர் இன்றி மூன்று நாட்கள் குழந்தைகளுடன் மறைந்திருந்தோம்.
உயிர்பிழைப்பதற்காக படகு மூலம் தப்பி இந்தியா வந்தோம். இதே போன்று வருவதற்கு ஏராளமான பேர் அங்கு காத்திருக்கின்றனர். இனி அங்கு உயிருடன் வாழ முடியாது என்ற நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இலங்கை அகதிகள் வருகையின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் செல்லமுத்து தலைமையில் விவாதிக்கப்பட்டது. தமிழக கடலோரப் பகுதிகளில் கடற்படை, க்யூ பிராஞ்ச் போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அகதிகள் அனைவரையும் தீவிரமாக விசாரித்த பிறகே, மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த மூன்றhண்டுகளாக அமைதி நிலவியதால் அகதிகள் வரத்து இல்லை. மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு முதல் முறையாக அகதிகள் இந்தியா வந்துள்ளனர்.
போர் நெருக்கடி அதிகாpத்துள்ளதால், இனி அகதிகள் வருகை அதிகளவில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Dinakaran
|
|
|
| கருணா அணியினர் தாக்குதல் 4 பொதுமக்கள் காயம். |
|
Posted by: Vaanampaadi - 01-13-2006, 04:46 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
வெள்ளி 13-01-2006 18:53 மணி தமிழீழம் [நிருபர் முகிலன்]
<b>அம்பாறை மாந்தோட்டத்தில் கருணா அணியினர் தாக்குதல் 4 பொதுமக்கள் காயம்</b>.
அம்பாறை கச்சிகுச்சாற்று சூனியப்பகுதியை அண்மித்த மாந்தோட்டப்பகுதியில் பொதுமக்கள் மீது சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினரும் சிறீலங்கா படை புலனாய்வுப் பிரிவினரும் கருணா அணியினரும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மணல் நிரப்பப்பட்ட உளவு இயந்திரங்களில் சென்ற இந்த அணியினர் துக்பாக்கிப் பிடிகளினாலும் ஆயுத கம்பிகளினாலும் காரங்கள் எதுவும் இன்றி பொதுமக்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்காகி 4 பொதுமக்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கருணா அணியைச் சேர்ந்த 14 ஆயுத தாரிகள் ஈடுபட்டுள்ளதாக உடும்பன்குள அரசியற்துறைப் பொறுப்பாளர் வீரமணி தெரிவித்துள்ளார். இந்த 14 ஆயுததாரிகளும் அக்கரைப்பற்று 40 கட்டையில் உள்ள சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படை முகாமில் தங்கியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Pathivu
|
|
|
| குடாநாட்டில் படையினருடன் தொடர்புகள் வைத்திருப்போருக்கு |
|
Posted by: நர்மதா - 01-13-2006, 02:23 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
குடாநாட்டில் படையினருடன் தொடர்புகள் வைத்திருப்போருக்கு எல்லாளன் படை எச்சரிக்கை
யாழ் குடாநாட்டில் படையினருடன் தொடர்பு வைத்திருப்போருக்கு எச்சரிக்கை விடுக்கும் துண்டுப் பிரசுரங்களை எல்லாளன் படை வெளியிட்டுள்ளது.
யாழ். குடாநாட்டில் படையினரின் கைக்கூலிகளாகவும் அடிவருடிகளாகவும் இருந்து தொடர்ந்து செயற்படுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கையினை எடுக்க உள்ளதாக தெரிவிக்கும் துண்டுப்பிரசுரங்களே எல்லாளன் படை என்ற பெயரில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
படையினருடன் உறவைப் பேணுவோர், உளவு சொல்வோர், படையினர் வழங்கும் ஆபாச இறுவெட்டுகளை இளைஞர்களுக்கு விநியோகிப்போர். இராணுவத்தின் அப்பக் கடைகளில் காலம் கழிப்போர், பெண்களை படையினருக்கு தொடர்பை ஏற்படுத்திக் கொடுப்போர் மற்றும் படையினரின் துணையுடன் களவு, வீடுகள் உடைப்பு, கால்நடைகள், மண்கடத்தலில் ஈடுபடுவோர், கசிப்பு காய்ச்சுவோர் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுள்ள சமூக விரோதிகள் இனங்காணப்பட்டு சம்பந்தப்பட்ட இடங்களிலேயே தம்மால் தண்டனை வழங்கப்படுமென்று பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லங்காசிறீ
|
|
|
| உலக மகா வல்லாதிக்கத்திடம் நீதி கோரும் தமிழர் தரப்பு |
|
Posted by: நர்மதா - 01-13-2006, 01:20 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
உலக மகா வல்லாதிக்கத்திடம் நீதி கோரும் தமிழர் தரப்பு
"வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது' போல நொந்து போன தமிழர் மனங்களை மேலும் நோகடித்திருக்கின்றார் கொழும்புக்கான அமெரிக்கத் தூதுவர்.
இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் நியாயம் கூறு வதாக நினைத்துக் கொண்டு, ஒரு தலைப்பட்சமாகக் கருத்து வெளியிட்டதன் மூலம் அமைதி நிலைக்கு மேலும் ஆப்பு வைத்திருக்கிறார் அவர்.
"தீண்டத் தகாதவர்கள்' ஆகப் புலிகளைக் கருதிக் கொண்டு, வெறுத்து ஒதுக்கி ஒதுங்கி நடக்கும் அமெரிக்கா, அதன் மூலம் புலிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்களை ஒதுக்கியது மட்டுமல்லாமல் நீதியையும், நியாயத்தையும் கூட அடியோடு ஒதுக்கியிருக்கின்றது.
இலங்கையில் யுத்தநிறுத்தம் இன்று கேள்விக்குறியாகி யுள்ளது என்பது அப்பட்டமான உண்மை. அதில் சந்தேகமே இல்லை. ஆனால், யாரால் அந்த நிலைமை ஏற்பட்டது என் பதே இன்றைய கேள்வி.
இலங்கை அரசும்,அதன் படைகளும் அவற்றின் புலனாய் வுப் பிரிவுகளும் ஏதோ பௌத்த சீலர்கள் போலவும், ஆக தமிழர் தரப்பே விடுதலைப் புலிகளே வன்முறைகளையும் யுத்தத்தையும் விரும்புகின்ற காட்டுமிராண்டிகள் போலவும் புதிய தத்துவம் உரைத்திருக்கிறார் "சர்வதேசப் பொலீஸ் காரனாகிய' அமெரிக்காவின் இலங்கைத் தூதுவர்.
இப்போது நடைமுறையில் இருக்கும் யுத்தநிறுத்தம் முறிந்து விடக்கூடாது என்பதற்காக அதிகளவில் "கரிசனை' காட்டி, அதனால் புலிகள் மீது பாய்ந்திருக்கின்றார் அவர். வெடிக்கப் போகும் யுத்தத்தின் பேரழிவைத் தவிர்க்க வேண்டும் என்ற ஆதங்கம் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
நல்லது. ஏற்கனவே மோசமான யுத்தம் இந்த நாட்டில் நிகழ்ந்துகொண்டிருந்தபோது, பேரழிவுகளை மக்கள் சந் தித்து, பெருமளவு உயிரும், உடைமைகளும் அழிந்து கொண் டிருந்தபோது தமிழர் தரப்பின் போராட்ட சக்திகளாகிய விடுதலைப் புலிகள் ஒரு தலைப்பட்சமாகப் பலதடவைகள் யுத்தநிறுத்தத்தை அறிவித்து, அமைதி வழியில் தீர்வு காண் பதற்கு வாய்ப்பளித்து, சமாதான சமிக்ஞை காட்டி நின்றார் களே, அப்போதெல்லாம் அந்த அழைப்புகளை இலங்கை அர சுத் தரப்பு நிராகரித்து யுத்த சன்னதம் கொண்டு நின்றதே, அவ்வேளையில் இன்று நியாயம் விளக்கும் உங்களின் கரி சனை எங்கே ஜயா போனது, அமெரிக்கத் தூதுவரே!...?
அன்று, இராணுவப் போரியல் வல்லமையில் தான் விஞ்சி நிற்பதாக நினைத்துக் கொண்டு இலங்கை அரசு, தமிழர் தேசம் மீது கொடூரப் போரைத் தொடுத்திருந்த வேளையில் இலங்கை அரசுத் தலைமையைப்போல நீங்களும் உங்கள் அமெரிக்க அரசும் கூட புலிகள் பலவீனப்பட்டு விட்டார்கள், அதனால்தான் ஒருதலைப்பட்சமாக யுத்த நிறுத்தங் களை அறிவிக்கின்றார்கள், எனவே இலங்கை அரசு யுத்தத்தைத் தொடர்ந்து நடத்தி புலிகளை அடக்கட்டும் என்று எண்ணி னீர்கள். அதனால்தான் கொடூர யுத்தம் நடந்த அந்த வேளை யில் யுத்த நிறுத்தத்திற்குக் கிடைத்த வாய்பை சரியாகப் பயன்படுத்தும்படி இப்போது யுத்த நிறுத்தத்தைப் பேணும் அவாவில் புலிகளைத் தாக்கிப் பகிரங்கமாகக் குரல் கொடுத்தமை போன்று அப்போது யுத்தநிறுத்தத்துக்குப் போகும்படி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து, பகிரங்க அறிவிப்புகளை நீங்கள் விடுக்கவில்லை.
இன்று நிலைமை அப்படியல்ல. இலங்கைத் தீவில் இரா ணுவ போரியல் வல்லமைகளின் கள நிலைமைகள் உங்களுக் குப் புரிகின்றது. அதனால், எதிர்காலத்தில் நொந்து போகப் போகின்ற தரப்பின் கையைத் தூக்கிவிடத் துடிக்கின்றீர்கள் நீங்கள் என்பதும் புரிகின்றது.
ஜயா அமெரிக்கத் தூதரே! பிரஸ்ஸல்ஸில் நடந்த உதவும் நாடுகளின் இணைத்தலைமைகளின் மாநாடு குறித்து உரைத் திருக்கின்றீர்கள். அந்த மாநாட்டின் முடிவில் நீங்களும் சேர்ந்து விடுத்த கூட்டறிவிப்பை ஒருதடவை பாருங்கள். இன்று யுத்தநிறுத்தத்தையே குழப்பியடிக்கக்கூடிய நிலை மையை ஏற்படுத்தியிருக்கும் வன்முறைகளுக்கான காரணம் குறித்து நீங்களே அதில் குறிப்பிட்டிருக்கின்றீர்கள்.
இலங்கையில் அமைதி நிலைமை மோசமடைந்து வருவ தற்கு இராணுவத் துணைப்படைகளின் நடவடிக்கைகளும் காரணம் என்று மூன்று வாரங்களுக்கு முன்னர் நீங்களே அந்த அறிக்கையில் ஒப்புக் கொண்டிருந்தீர்கள்.
ஆனால், இப்போதோ அமைதி நிலைமை மோசமடைந்து யுத்தம் வெடிக்குமானால் புலிகளுக்கு எதிராக அமெரிக்க ஆதர வுக்கரம் நீளும் என்று கடும்தொனி எச்சரிக்கையை விடுக் கின்றீர்கள். இந்த எச்சரிக்கை மூலம் ஒட்டு மொத்தத்தில் நீங்கள் சாதித்திருப்பது என்ன?
சம்பந்தப்பட்ட தரப்புகளில் ஒன்றை நேரடியாகக் கடிந்த தன் மூலம் மற்றத் தரப்பை உற்சாகப்படுத்தி, அதன் போர் நிறுத்த மீறல்களை ஊக்குவிக்கும் பணியையும், அதன் மூலம் போர்நிறுத்தம் மேலும் நலிவடையும் நிலையையுமே நீங்கள் ஏற்படுத்தியிருக்கின்றீர்கள்.
ஐயா, இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் உங்கள் வல்லா திக்க நாடு இழைத்த மாபெரும் தவறாக ஈராக் மீதான படை யெடுப்பை உலகம் உங்களுக்கு எதிராகச் சுட்டிக்காட்டி நிற் கின்றது. மனித குலத்துக்குப் பேரழிவு தரும் ஆயுதங்களை ஈராக் தயாரித்து வைத்திருக்கின்றது என்ற பூச்சாண்டியை உலகுக்குக் காட்டிக் கொண்டு இறைமையுள்ள ஒரு நாட்டை ஆக்கிரமித்தீர்கள். இன்று நீங்களே உங்களின் புலனாய்வுத் தகவல்களின் முழுத்தவறை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளும் இழிநிலைக்கு வந்திருக்கின்றீர்கள்.
அதேபோல, இலங்கைத் தீவிலும் தனித் தேசிய இனமான ஈழத் தமிழர்களின் நியாயமான போராட்டத்தை அநியாய மான முறையில் குறைகூறி அநீதி இழைக்காதீர்கள்.
இந்த மண்ணில் இடம்பெறும் ஒரு நியாய வேள்வியை ஓர் அரசுக்கு இன்னொரு அரசு உதவும் சர்வதேசக் கோட் பாட்டுக்குள் பொருத்திப் பார்த்து குழப்பி விடாதீர்கள்.
நியாயமான உரிமைகளும், விடுதலையும் வேண்டி நிற் கும் தனித்துவமான ஓரினம் உலக மகா வல்லாதிக்கத்திடம் நீதி கோரி முன்வைக்கும் வேண்டுகோள் இது
உதயன்
|
|
|
| யாழ் காங்கேசந்துறை வீதியில் தாக்குதல் படைவீரர் பலி |
|
Posted by: Vaanampaadi - 01-13-2006, 12:31 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
வெள்ளி 13-01-2006 16:35 மணி தமிழீழம் [நிருபர் சிறீதரன்]
யாழ் காங்கேசந்துறை வீதியில் தாக்குதல் படைவீரர் பலி.
யாழ்ப்பாணத்தில் இனத் தெரியாதோரின் தாக்குதலில் ஒரு இராவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று காங்கேசந்துறை வீதியில் 7ம் கட்டையில் அமைந்துள்ள விசாலாட்சி பாடசாலைக்கு அருகில் மலை 4மணியளவில் சம்பவம் இடம்பெற்றது.
சம்பவத்தில் படைவீரர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார். மேலும் ஒரு படைவீரர் படுகாயமடைந்த நிலையில் பலாலி மருத்துவ மனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார்.
இதனை அடுத்து அப்பகுதிக்கு வந்த இராணுவத்தினரும் காவல்துறையினரும் மக்கள் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதனால் பொதுமக்கள் சிலர் காயங்களுக்குள் உள்ளாகியுள்ளனர்.
Pathivu
|
|
|
| கண்காணிப்புக் குழுவின் வாகனம் குழு ஒன்றினால் இடைமறிப்பு |
|
Posted by: Vaanampaadi - 01-13-2006, 12:30 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
வெள்ளி 13-01-2006 16:13 மணி தமிழீழம் [நிருபர் நகுலன்]
திருமலையில் கண்காணிப்புக் குழுவின் வாகனம் குழு ஒன்றினால் இடைமறிப்பு.
திருகோணமலை இலங்கை போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினர் பயணம் செய்த வாகனம் ஒன்று சிறிமாபுர குழு ஒன்றினால் இடைமறிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் இன்று காலை 10.30 அளவில் இடம்பெற்றுள்ளது.
போர் நிறுத்த கண்காணிப்பாளர்களள் சென்ற வாகனத்தை செல்லவிடாது இந்த குழுவினர் சூழ்ந்து கொண்டதாகவும் கண்காணிப்பாளர்கள் படையினருக்கு அறிவித்த பின்னர் படையினர் ஸ்தலத்திற்கு விரைந்து கண்காணிப்பாளர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
Pathivu
|
|
|
| திருமலையில் கிளைமோர்த்தாக்குதல் இராணுவவீரர் பலி. |
|
Posted by: Vaanampaadi - 01-13-2006, 12:29 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
வெள்ளி 13-01-2006 16:00 மணி தமிழீழம் [நிருபர் நகுலன்]
திருமலையில் கிளைமோர்த்தாக்குதல் இராணுவவீரர் பலி.
திருகோணமலை கண்டி வீதியில் தம்பலகாமத்திற்கும் 99ஆவது மைல்கல்லுக்கும் இடையில் உள்ள பிரதேசத்தில் இனம் தெரியாதோர் இராணுவ டிரக் வண்டி மீது கிளைமோர் கண்ணிவெடி நடத்தப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இனம் தெரியாதோரின் கிளைமோர் தாக்குதலுக்கு இலக்காகி இராணுவவீரர் ஒருவர் உயரிழந்ததோடு மேலும் இரு படையினர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்த இரு படையினரும் திருமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Pathivu
|
|
|
| யுத்த நிறுத்தம் அமுலில் உள்ளதா?: கண்காணிப்பு குழு காட்டமான |
|
Posted by: Vaanampaadi - 01-13-2006, 11:31 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<b>யுத்த நிறுத்தம் அமுலில் உள்ளதா?: கண்காணிப்பு குழு காட்டமான கேள்வி </b>
[வெள்ளிக்கிழமை, 13 சனவரி 2006, 15:15 ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை]
சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்தும் அமுலில் உள்ளதா? அப்படியானால் தற்போது இடம்பெற்று வரும் தொடர் படுகொலைகள் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் ஆகியவை தொடர்பில் இருதரப்பினதும் பதில்தான் என்ன என்று இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு காட்டமாக கேட்டு அறிக்கை விடுத்திருக்கிறது.
வவுனியா செட்டிக்குளம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல் சம்பவத்தை அடுத்து கண்காணிப்புக்குழு விடுத்துள்ள இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தொடரும் தாக்குதல் சம்பவங்கள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியவண்ணமுள்ளன. கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் சுமார் 100 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அரைவாசிப்பேர் பொதுமக்களே ஆவர். இந்த நிலை தொடருமேயானால் விரைவில் நாடு யுத்தத்தை எதிர்நோக்க நேரிடும்.
பாதுகாப்பு நடைமுறைகள் என்ற பெயரில் பொதுமக்கள் அரச படையினரால் துன்புறுத்தப்படுகின்றனர். அப்பாவிப் பொதுமக்களை கைது செய்யும் நடைமுறை இயல்பு வாழ்க்கையில் பாரதூரமான இடையூறுகளை ஏற்படுத்துகிறது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படி அரசைக் கோருகிறோம்.
கிழக்கில் அரச கட்டுப்பாட்டுப்பகுதியில் இடம்பெற்று வரும் மாற்று ஆயுதக்குழுக்களின் நடவடிக்கை குறித்து இங்கு அவசியம் குறிப்பிட்டேயாக வேண்டும். யுத்த நிறுத்த ஒப்பந்தத்ததின் பிரகாரம் ஆயுதங்கள் களையப்பட வேண்டிய இந்த மாற்றுப்படைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம் அரசு தனது பொறுப்பை செவ்வனே நிறைவேற்றவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
சம்பவங்கள் தொடர்பில் இருதரப்பினரும் பரஸ்பரம் குற்றம் சுமத்துவதை விடுத்து அவை தொடர்பில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து சிந்திக்க வேண்டும். சொல்லிலும் விட செயலில் கவனம் செலுத்துவதன் மூலம் அமைதியை நோக்கிய நம்பிக்கை தரக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டு நாடு மீண்டும் யுத்தத்துக்கு திரும்பாமல் பாதுகாக்க வேண்டியது இரு தரப்பினரதும் பொறுப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Puthinam
|
|
|
| லண்டன்:பயணிகளை நிர்வாணமாக படம்பிடித்து காட்டும் கருவி |
|
Posted by: Vaanampaadi - 01-13-2006, 11:21 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (4)
|
 |
<b>பயணிகளை நிர்வாணமாக படம்பிடித்து காட்டும் கருவி
லண்டன் ரெயில் நிலையங்களில் பொருத்தப்படுகிறது </b>
லண்டன், ஜன.13-
லண்டன் நகரில் ரெயில் நிலையங்களில் பயணம் செய்ய இருக்கும் பயணிகளை நிர்வாணமாகப் படம் பிடித்துக் காட்டும் கருவி பொருத்தப்பட இருக்கிறது.
வெடிகுண்டு தாக்குதல்
லண்டன் நகர் ரெயில் நிலையங்களில், அல்கொய்தாவைச் சேர்ந்த தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தி, 56 பயணிகளை பலி
கொண்டனர்.இதைத் தொடர்ந்து, குண்டுகளை உடலில் கட்டிக் கொண்டு வரும் தீவிரவாதிகளை கண்டுபிடித்து கைது செய்வதற்கு வசதியாக உயர் தொழில் நுட்பம் கொண்ட டிஜிட்டல் ஸ்கேனர் கருவிகள் வாங்கப்பட்டு உள்ளன. இவை பயணிகளை நிர்வாணமாகப் படம் பிடித்துக் காட்டும்.
சோதனை முறையில்
இந்த ஸ்கேனர் கருவிகள் லண்டனில் உள்ள பெரிய ரெயில் நிலையத்தில் 4 வாரங்களுக்கு பரீட்சார்த்தமாக செயல்படுத்தப்படும்.
மேற்கு லண்டனில் உள்ள பிட்டிங்டன் ரெயில் நிலையத்தில் இந்த ஸ்கேனர் கருவி பொருத்தப்படும். ரெயிலில் ஏறுவதற்கு முன்பு பயணிகள் இந்த கருவி வழியாக செல்ல வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.
80 வினாடிகளில் இந்த ஸ்கேனர் முழு உடையுடன் உள்ள பயணிகளை நிர்வாணமாக காட்டிவிடும். இதை பக்கத்து அறையில் உள்ள ஆபரேட்டர் கம்ப்ïட்டர் திரையில், பயணிகள் நிர்வாணமாக இருப்பதைப் பார்க்கலாம்.
Dailythanthi
|
|
|
|