![]() |
|
கருணா அணியினர் தாக்குதல் 4 பொதுமக்கள் காயம். - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: கருணா அணியினர் தாக்குதல் 4 பொதுமக்கள் காயம். (/showthread.php?tid=1421) |
கருணா அணியினர் தாக்குதல் 4 பொதுமக்கள் காயம். - Vaanampaadi - 01-13-2006 வெள்ளி 13-01-2006 18:53 மணி தமிழீழம் [நிருபர் முகிலன்] <b>அம்பாறை மாந்தோட்டத்தில் கருணா அணியினர் தாக்குதல் 4 பொதுமக்கள் காயம்</b>. அம்பாறை கச்சிகுச்சாற்று சூனியப்பகுதியை அண்மித்த மாந்தோட்டப்பகுதியில் பொதுமக்கள் மீது சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினரும் சிறீலங்கா படை புலனாய்வுப் பிரிவினரும் கருணா அணியினரும் தாக்குதல் நடத்தியுள்ளனர். மணல் நிரப்பப்பட்ட உளவு இயந்திரங்களில் சென்ற இந்த அணியினர் துக்பாக்கிப் பிடிகளினாலும் ஆயுத கம்பிகளினாலும் காரங்கள் எதுவும் இன்றி பொதுமக்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு இலக்காகி 4 பொதுமக்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கருணா அணியைச் சேர்ந்த 14 ஆயுத தாரிகள் ஈடுபட்டுள்ளதாக உடும்பன்குள அரசியற்துறைப் பொறுப்பாளர் வீரமணி தெரிவித்துள்ளார். இந்த 14 ஆயுததாரிகளும் அக்கரைப்பற்று 40 கட்டையில் உள்ள சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படை முகாமில் தங்கியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். Pathivu |