![]() |
|
தமிழின் முதல் இணையஉலவி மென்பொருள் வெளியிடப்பட்டது - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24) +--- Thread: தமிழின் முதல் இணையஉலவி மென்பொருள் வெளியிடப்பட்டது (/showthread.php?tid=1447) |
தமிழின் முதல் இணையஉலவி மென்பொருள் வெளியிடப்பட்டது - Vaanampaadi - 01-12-2006 வலையோடி எனும் பெயரில் தமிழின் முதல் இணையஉலவி மென்பொருள் வெளியிடப்பட்டது Written by Pandara Vanniyan Thursday, 12 January 2006 தமிழில் முதல் இணைய உலவி மென்பொருள் (internet browser) வெளியிடப்பட்டுள்ளது.வலையோடி எனும் பெயரில் கடந்த புதன்கிழமை சென்னையில் இந்த இணைய மென்பொருள் வெளியிடப்பட்டது.ஆங்கிலம் அல்லாத பேச்சு மொழியை உடைய பயனாளர்கள் எண்ணற்ற மொழிகளில் உள்ளனர் அவர்களிற்கு இந்த மென்பொருள் ஒரு முன்னுதாரணமாக அமையும் என்று இவ்மென் பொருளை உருவாக்கிய Panacea Dream Weavers Software Private Limited அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த மென்பொருள் ஆங்கில மொழியினைக் கூட தமிழுக்கு மாற்றவல்லது என்றும் இதன் மூலம் பயனாளர்களின் அதிகமான பயன்பாட்டிற்கு இது வழிசமைக்கும் என்று தாம் நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இது முற்று முழுதான இலவசமான மென்பொருளாகவே வெளியிடப் பட்டுள்ளது.அது தவிரவும் தங்களது இந்த முயற்சியில் ஆர்வலர்கள் யாரும் பங்கெடுத்து இந்த மென்பொருளை செம்மைப்படுத்துவதனை தாம் வரவேற்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.இது ஆங்கிலத்தை தமிழுக்கு மாற்றினாலும் இதில் 70 வீதமான சாத்தியமே உள்ளது என்று இந்த மென்பொருள் தயாரிப்பில் புலவன்,பாலம்,தமிழ்ஒளி,முகவரி,பதிப்பு,இது தவிரவும் வர்த்தக நோக்கமுள்ளவர்களுக்கு ஏற்றவகையில் செல்வம் என்ற மென்பொருள் உள்ளடங்கலான பத்து மெனபொருட்தொகுப்பினையும் அவர்கள் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. Sankathi - ragavaa - 01-12-2006 வலையோடியை இங்கிருந்து தரவிறக்கலாம் - ஊமை - 01-12-2006 நன்றி வா.பா நன்றி ராகவா - RaMa - 01-13-2006 நன்றி வானம்பாடி ராகவா - Mathan - 01-23-2006 நன்றி வானம்பாடி மற்றும் ராகவா. வலையோடி உலாவியை யாரும் பயன்படுத்தி பார்த்தீர்களா? எப்படியிருக்கின்றது? - வியாசன் - 01-23-2006 மாதவன்சார் இதுதான் அந்த வலையோடி இப்போதைக்கு பத்தோடு பதினொன்று போலை கிடக்கு <img src='http://img301.imageshack.us/img301/3497/untitled8mn.jpg' border='0' alt='user posted image'> - Mathan - 01-23-2006 நன்றி வியாசன். தமிழில் முதல் இணைய உலாவி என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆனால் இது அனைத்தும் ஆங்கிலத்தில் தானே இருக்கிறது :roll: - ஊமை - 01-23-2006 ஐயாம் வெரி சாரி சார். என்று தமிழில் மன்னிப்பு கேட்பது போல் அவர்களும் தங்களுடைய தமிழில் உலாவியை செய்திருக்கிறார்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நோ டென்சன் பீ கூல் என நானும் கொன்சம் டமிலில் ஆறுதல் கூறினால் என்ன குற்றமா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வியாசன் - 01-23-2006 மாதவன்சார் அதில் மொழிபெயர்ப்பு என்று போட்டிருக்கின்றார்கள்.அது இயங்கவில்லை. நான் அதை பெற்றுக்கொண்ட சீடியில் அழகான தமிழ் எழுத்துருக்களையும் இணைத்திருக்கின்றார்கள். ஆனால் அது அவர்களுடைய புறோக்கிராமில் இயங்குகின்றது. வேர்ட் போன்றவற்றில் இயங்கவில்லை. அவர்களுடைய புறோக்கிராமில் எழுதிவிட்டு அதை பதிவுபண்ணி ஒட்டினால் இயங்குகின்றது. எழுத்துவடிவங்களை இணைத்திருக்கின்றேன் பாருங்கள் அழகான தமிழ் எழுத்து வடிவம் (சாம்பிள்) - ragavaa - 01-24-2006 வெளியீட்டாளரின் வலைத்தளத்தில் தமிழில் விரைவில் வெளிவரும் என்றுதான் போட்டிருக்கு. <img src='http://img368.imageshack.us/img368/4958/web4kz.jpg' border='0' alt='user posted image'> அதோடு இந்த உலாவி IE ஐ விட வேகமாக இயங்குகிறது. யாழில் கருத்துப்பதியும் போது IE ல் வரும் பிரச்சனை இதில் இல்லை. Operaவை போன்று ஒரு முகப்பிலேயே பல பக்கங்களை திறக்கலாம் - தூயவன் - 01-24-2006 தமிழில் இப்போதைக்கு வராவிட்டாலும் அவர்கிளன் முயற்சியை வரவேற்போம். நம்மவர் செய்யும் போது தூற்றக் கூடாது. தமிழில் சிறப்பாகத் தர வாழ்த்துவோம் - Unnavan - 02-23-2006 உந்த உலாவி சும்மா மொசில்லா வுக்கு பேரை மட்டும் மாத்திட்டுப் போட்ட மாதிரியெல்லோ கிடக்கு.... தமிழா எண்டு ஒரு உலாவி இருக்கு.... அதை ஒருக்காப் பாருங்கோ.... தமிழா.கொம் இலை பதிவிறக்கம் செய்யலாம். |