| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 335 online users. » 0 Member(s) | 332 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,289
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,228
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,288
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,620
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,046
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,456
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,471
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,022
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| தாக்குதல்களில் இருந்து தப்ப இராணுவம் புதிய உத்தி பகடைக்காயாக |
|
Posted by: மேகநாதன் - 01-19-2006, 06:07 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (11)
|
 |
<span style='color:darkred'><b>தாக்குதல்களில் இருந்து தப்ப இராணுவம் புதிய உத்தி பகடைக்காயாகும் அப்பாவி மக்கள் </b>
யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகன அணிகள் பிரதான வீதிகளில் செல்லும் போது பொது மக்களையும் அதனுடன் இணைத்துக் கொண்டு செல்ல நிர்ப்பந்திப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக இராணுவத்தினரின் வாகன அணிகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றது. இத்தகைய இராணுவத்தினரின் வாகன அணிகள் பிரதான வீதிகளில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒருமித்து வருகின்றன. இந்த நேரத்தில வீதியால் வரும் வாகனங்கள் மற்றும் மோட்டார் சையிக்கள்கள் சையிக்கள்கள் என்பனவற்றை மறிக்கும் படையினர் அவர்களை தமது வாகன அணியுடன் இணைந்து செல்லுமாறு நிர்ப்பந்திக்கின்றனர். இராணுவத்தினர் இதன் மூலம் தம்மைப் பாதுகாக்கும் செயல்பாட்டிற்கு பொது மக்களை பகடைக்காயாக பயன்படுத்திக் கொள்வதாக பொது அமைப்பக்கள் குற்றம் கூறுகின்றன. இதே நேரம் இத்தகைய வாகன அணிகளை பொது மக்கள் முந்திச் செல்ல முடியாது பாதுகாப்புக்கு வாகன அணியுடன் கூடவே நடந்து செல்லும் இராணுவத்தினர் விடுவதில்லையென்பதும் குறிப்பிடத்தக்கதாகும் வாகன இணிகள் இனம் தெரியாதவர்களின் தாக்குதல்களுக்க உட்படுமாக இருந்தால் பொது மக்களும் அதனால் பாதிப்படையட்டும் என்ற குரூர எண்ணத்திலேயே இராணுவத்தினர் இவ்வாறு நடந்து கொள்வதாக மக்கள் எரிச்சலுடன் கவலை தெரிவித்தனர்.</span>
<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
|
|
|
| முஸ்லிம் தனித்தரப்பு கோரிக்கை: மகிந்த நிராகரிப்பு |
|
Posted by: மேகநாதன் - 01-19-2006, 03:32 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (17)
|
 |
<span style='color:darkred'><b>முஸ்லிம் தனித்தரப்பு கோரிக்கை: மகிந்த நிராகரிப்பு</b>
இலங்கை அமைதிப் பேச்சுகளில் முஸ்லிம்கள் தனித்தரப்பாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
முஸ்லிம்களை தனித்தரப்பாக பேச்சுகளில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
<i>முஸ்லிம்களை தனித்தரப்பாக இணைத்தால் சிங்களவர்களும் தனித்தரப்பாக தங்களை இணைத்துக் கொள்ள கோரிக்கை விடுப்பார்கள் என்பதால் அதை நிராகரிப்பதாக மகிந்த கூறியுள்ளார்.</i>
இதனிடையே இதுவிடயத்தில் ஒருமித்த முடிவை மேற்கொள்வதற்காக அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆலோசனை நடத்த முஸ்லிம் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது</span>
<i><b>தகவல்மூலம்;- புதினம்</b></i>
|
|
|
| புதிய இணையத்தளம் : தமிழ்க்கதிர் |
|
Posted by: agathyan - 01-19-2006, 01:03 AM - Forum: தளமுகவரிகள்
- Replies (2)
|
 |
வணக்கம்!
என்னை வரவேற்ற அனைவருக்கும் எனது நன்றிகளுடனான வாழ்த்துகள்! எனது பெயர் அகதியன்.
இன்றுஇ இணைய உலா வந்தபோது புதிய இணையத்தைக் காணுற்றேன் இணைய விரும்பிகளுக்காக இதை அறியத்தருகிறேன். இது தவகல் களஞ்சியமாகத்தான் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறது.
இதன் இணைய முகவரி : www.tamilkathir.com
|
|
|
| முடியுநட்புடன் பழகுவது ஆபத்தில் ம்: நடிகை சினேகா |
|
Posted by: கீதா - 01-18-2006, 10:57 PM - Forum: சினிமா
- No Replies
|
 |
<img src='http://img468.imageshack.us/img468/6321/goldentamiljana30mv.jpg' border='0' alt='user posted image'>
முடியுநட்புடன் பழகுவது ஆபத்தில் ம்: நடிகை சினேகா சொல்கிறார்
நடிகை சினேகா நடந்த சம்பவங்களை மறந்து இப்போதுதான் மாமூல் நிலைக்கு திரும்பியிருக்கிறார். பத்திரிகையாளர்கள் என்றாலே நாகாரவியைப் பற்றி கேட்டு விடுவார்களோ என்று ஒதுங்கி ஓடிய சினேகா இப்போது மனம் விட்டுப் பேசுகிறார்.
நான் சினிமாவில் நடிக்க ஒப்புக்கொண்ட போது இப்படியெல்லாம் பிரச்சினைகள் வரும் என்று நினைக்கவில்லை. இரண்டு மூன்று மாதங்களாக மிகவும் வேதனையை அனுபவித்து விட்டேன். காதல், கல்யாணம், என்றார்கள். நாகாரவியிடம் நான் நட்புடன்தான் பழகினேன். அதிலும் ஆபத்து உண்டு என்பதை தெரிந்து கொண்டேன்.
நண்பர்களிடமும் உஷாராக இருக்க வேண்டும் என்பதை நடந்த சம்பங்கள் மூலம் பாடமாக கற்றுக் கொண்டேன். நல்லவேளை அதில் இருந்து எப்படியோ மீண்டு வந்து விட்டேன். இந்த புத்தாண்டு பழையவற்றை மறந்து மகிழ்ச்சியுடன் வாழும் நல்ல ஆண்டாக அமையும் என்று நம்புகிறேன்.
மும்பையில் பிறந்து, துபாயில் வளர்ந்த நான், அங்கு நடந்த சினிமா நட்சத்திர கலை நிகழ்ச்சியை பார்க்க சென்றேன். அப்போது என்னை பார்த்த மலையாள டைரக்டர் பாசில் சினிமாவில் நடிக்க அழைத்தார். எனது முதல் படம் மலையாளம். எதிர்பார்த்த அளவு அந்த படம் வெற்றி பெறவில்லை. அடுத்து நடித்த தமிழ் படமும் `ரிலீஸ்' ஆகவில்லை. படஉலகில் இருந்து விலகி படிக்கலாமா என்று யோசித்த போது ஆர்.பி. சவுத்ரி தயாரித்த `ஆனந்தம்' படத்தில் நடித்தேன். அதில் நல்ல பெயர் கிடைத்தது.
தற்போது தெலுங்கில் `ஸ்ரீíராமதாஸ்', `ஏமண்டி சீவாரு' என்ற படங்களிலும், தமிழிலில் செல்வராகவன் இயக்கத்தில் `புதுப்பேட்டை'யிலும், மலையாளத்தில் மம்முட்டியுடன் ஒரு படத்திலும் நடிக்கிறேன். இது எனது 32-வது படம்.
`புதுப்பேட்டை' படத்தில் விலைமாதுவாக நடிக்கிறேன். இது ஒரு விலைமாது அனுபவிக்கும் மன வேதனைகளையும், குடும்ப கஷ்டங்களையும் பிரதி பலிக்கும் வேடம். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இது போன்ற பாத்திரம் கிடைத்தால் தெலுங்கிலும் நடிக்க தயார்.
நான் `கமர்சியல்' படங்களிலும் நடிக்கிறேன். என்றாலும், குறிப்பிட்ட எல்லையை தாண்டி என்னால் கவர்ச்சியாக நடிக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
ஒரு பிரபல டைரக்டர் என்னை கவர்ச்சி வேடத்தில் நடிக்க அழைத்தார். ஆனால் அதை நான் ஏற்கவில்லை. கதை எனக்குப் பிடித்தால்தான் நான் நடிப்பேன்.
தமிழில் `ஏபிசிடி'யில் நடித்த விதவைப் பெண் வேடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. `ஆனந்தம், `பார்த்திபன் கனவு' படங்கள் பிடித்தவை. அடுத்து பிடித்த வேடம் `புதுப்பேட்டை'யில் நான் நடிப்பதுதான். தெலுங்கில் ஸ்ரீராமதாஸ் படத்தில் நடிக்கும் வேடம் பிடித்திருக்கிறது. இது தெலுங்கு பட உலகில் எனக்கு ஒரு மைல் கல்லாக அமையும்.
காதல் கதைகளில் நடிக்க மிகவும் பிடிக்கும். `மரோசரித்ரா' போன்ற காதல் படங்களில் நடிக்க ஆசை. படங்களில் டைரக்டர் சொல்வதை செய்கிறேன். எல்லா பெரிய ஹீரோக்களுடனும் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
சமீபத்தில் ஒரு விழாவில் நடிகர் சிரஞ்சீவி என்னை மற்றொரு சவுந்தர்யா என்று பாராட்டினார். இதை என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக கருதுகிறேன்.
என்னை தமிழ் பெண் என்று கூறுகிறார்கள். உண்மை அதுவல்ல. எனது மூதாதையர்கள் ஆந்தி ராவை சேர்ந்தவர்கள். எனது தாய்மொழி தெலுங்குதான். தெலுங்கு பட உலகில் நிலையான இடம் பிடிக்க வேண்டும் என்பதே என் ஆசை. அது நிச்சயம் நிறைவேறும் என்பது லட்சியம் என்றார் சினேகா.
maalaimalar.com
|
|
|
| புரட்சி |
|
Posted by: சந்தியா - 01-18-2006, 05:46 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (7)
|
 |
புரட்சி
அழுது பார்த்தோம் தொழுது பார்த்தோம்
உழுதும் பார்த்து விட்டோம் சமூகத்தைப்
பழுது பார்க்கவெனத் தலைவன் புறப்பட்டான் ஆலம்
விழுதுகளாய் தோழர்கள் ஆயிரம் பார்த்து விட்டோம் இனி
எழுகின்ற கதிரவனைப் பார்த்திடுவோம் பார்த்திடுவோம்
Inthuja Mahendrarajah
நன்றி
இது என் மனதை நன்றாக கவர்ந்த ஒரு கவிதை அதனால் தான் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
|
|
|
| நடைமுறைக்கு வந்தது தமிழீழக் கட்டட கட்டுமானச் சட்டம் |
|
Posted by: மேகநாதன் - 01-18-2006, 04:56 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<span style='color:green'><b>நடைமுறைக்கு வந்தது தமிழீழக் கட்டட கட்டுமானச் சட்டம் </b>
தமிழீழக் கட்டட கட்டுமானச் சட்டம் இம் மாதம் 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது என்று தமிழீழ சட்டவாக்கல் செயலகம் அறிவித்துள்ளது.
இச்சட்டம் நடைமுறைக்கு வந்த காலம் தொடக்கம் கட்டடங்கள் கட்டுவதற்கும், கட்டுமான ஒப்பந்தங்கள், நிறுவனங்களை நடத்துவதற்கும் கட்டத் தொழிலாளர்களை அங்கீகரிப்பதற்கும் இச் சட்டத்தினூடாகவே நடவடிக்கைகளை இச்சட்டத்தைப் பின்பற்றி மேற்கொள்ளுதல் வேண்டும்.
இதனை மீறுவோர் மீது இச் சட்டத்திற்கிணங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் தமிழீழ சட்டவாக்கல் செயலகம் அறிவித்துள்ளது.</span>
<b><i>தகவல்மூலம்;- புதினம்</i></b>
|
|
|
| வவுனியா செட்டிக்குளத்தில் தாக்குதலில் 2 காவல்துறை வீரர் பலி. |
|
Posted by: மேகநாதன் - 01-18-2006, 04:16 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<b>வவுனியா செட்டிக்குளத்தில் தாக்குதலில் 2 காவல்துறை வீரர் பலி.</b>
வவுனியா செட்டிக்குளம் 17 வது காவல்துறை சோதனை சாவடியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுசம்பவத்தில் காவல்துறை உறுப்பினர்கள் இருவர் பலியாகினர்.
சேவைக்கு சமுகமளிக்காத காவல்துறை உறுப்பினர் அது தொடர்பில் தமது பரிசோதகரான உயரதிகாரியுடன் முரண்பட்டமை காரணமாக காவல்துறை உறுப்பினர் உயரதிகாரியின் மீது துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார்.
இதனையடுத்து அவர் தமக்கு தாமே துப்பாக்கி சூட்டை நடத்தி தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
<b><i>தகவல் மூலம்- பதிவு</i></b>
|
|
|
| புல்மோட்டையிலிருந்து திருமலை நோக்கிச் சென்ற மக்கள் பேருந்து |
|
Posted by: மேகநாதன் - 01-18-2006, 04:12 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
<b>புல்மோட்டையிலிருந்து திருமலை நோக்கிச் சென்ற மக்கள் பேருந்து ஜானோயா ஆற்றில் பாய்ந்தது - ஐவர் உயிரிழப்பு </b>
திருமலை இ.போ.சபைக்குச் சொந்தமான மக்கள் பேருந்து இன்று பிற்பகல் 2 மணிக்கு புல்மோட்டையிருந்து திருமலைக்குச் சென்ற போது ஜானோயா ஆற்றைக் கடக்க படகுப் பாதையில் ஏற்றிய போது பேருந்தின் உராய்வு விசையின்மையால் நேராக ஆற்றில் பாய்ந்தது நிரில் மூழ்கியது. இதனால் இரண்டு ஆண்களும், 3 சிறுவர்களும் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
பேருந்தின் ஓட்:டுனரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு புல்மோட்டை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
படையினரும், காவல்துறையினரும் குறித்த இடத்திற்கு எவரையும் செல்ல விடவில்லை. ஆனால் மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன
<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
|
|
|
| தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் - விடுதலைப்புலிகள் கொக்கட்டிச்ச |
|
Posted by: மேகநாதன் - 01-18-2006, 03:09 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<b>தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் - விடுதலைப்புலிகள் கொக்கட்டிச்சோலையில் நேற்று கலந்துரையாடல் </b>
மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்று கொக்கட்டிச்சோலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. திட்டமிடலுக்கும், மேம்பாட்டுக்குமான பொறுப்பாளர் மனோஜ் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் 2006ம் ஆண்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் முன்னெடுக்கவுள்ள அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டன.
இச்சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட துறைசார் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கினார்கள். இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன், துணை அரசியல்துறைப் பொறுப்பாளர் சீராளன், மாவட்ட மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்நிலவு, தமிழீழக் கல்விக் கழக மாவட்டப்பொறுப்பாளர் விமல்ராஜ், மட்டக்களப்பு மாவட்ட தமிழீழ சுகாதார சேவைப் பொறுப்பாளர் செல்வக்குமார், மட்டக்களப்பு மாவட்ட தமிழீழ விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் நேதாஸ், மட்டக்களப்பு மாவட்ட பொருண்மிய மேம்பாட்டு நிறுவனப் பொறுப்பாளர் ஈழமாறன், ஊரக மேம்பாட்டுப் பேரவை இணைப்பாளர் சி.அரிகரன், மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக சேவைப் பொறுப்பாளர் தங்கையா, மாவட்ட கடல் வளங்கள், மீன்பிடித்துறைப் பொறுப்பாளர் சக்தி ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்களும், கலந்து கொண்டனர். இதன் போது அந்தந்த நிறுவனங்கள் 2006ம் ஆண்டில் முன்னெடுக்கவுள்ள அபிவிருத்தி தொடர்பான திட்ட வரைபுகள் குறித்த ஆவணங்கள் திட்டமிடலுக்கும், மேம்பாட்டுக்குமான பொறுப்பாளரிடம் கையளித்தனர். இதனையடுத்த அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளின் கருத்துரைகளும் இடம்பெற்றது
<b><i>தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு</i></b>
|
|
|
|