![]() |
|
தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் - விடுதலைப்புலிகள் கொக்கட்டிச்ச - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் - விடுதலைப்புலிகள் கொக்கட்டிச்ச (/showthread.php?tid=1313) |
தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் - விடுதலைப்புலிகள் கொக்கட்டிச்ச - மேகநாதன் - 01-18-2006 <b>தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் - விடுதலைப்புலிகள் கொக்கட்டிச்சோலையில் நேற்று கலந்துரையாடல் </b> மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்று கொக்கட்டிச்சோலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. திட்டமிடலுக்கும், மேம்பாட்டுக்குமான பொறுப்பாளர் மனோஜ் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் 2006ம் ஆண்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் முன்னெடுக்கவுள்ள அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டன. இச்சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட துறைசார் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கினார்கள். இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன், துணை அரசியல்துறைப் பொறுப்பாளர் சீராளன், மாவட்ட மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்நிலவு, தமிழீழக் கல்விக் கழக மாவட்டப்பொறுப்பாளர் விமல்ராஜ், மட்டக்களப்பு மாவட்ட தமிழீழ சுகாதார சேவைப் பொறுப்பாளர் செல்வக்குமார், மட்டக்களப்பு மாவட்ட தமிழீழ விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் நேதாஸ், மட்டக்களப்பு மாவட்ட பொருண்மிய மேம்பாட்டு நிறுவனப் பொறுப்பாளர் ஈழமாறன், ஊரக மேம்பாட்டுப் பேரவை இணைப்பாளர் சி.அரிகரன், மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக சேவைப் பொறுப்பாளர் தங்கையா, மாவட்ட கடல் வளங்கள், மீன்பிடித்துறைப் பொறுப்பாளர் சக்தி ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்களும், கலந்து கொண்டனர். இதன் போது அந்தந்த நிறுவனங்கள் 2006ம் ஆண்டில் முன்னெடுக்கவுள்ள அபிவிருத்தி தொடர்பான திட்ட வரைபுகள் குறித்த ஆவணங்கள் திட்டமிடலுக்கும், மேம்பாட்டுக்குமான பொறுப்பாளரிடம் கையளித்தனர். இதனையடுத்த அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளின் கருத்துரைகளும் இடம்பெற்றது <b><i>தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு</i></b> |