Yarl Forum
புல்மோட்டையிலிருந்து திருமலை நோக்கிச் சென்ற மக்கள் பேருந்து - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: புல்மோட்டையிலிருந்து திருமலை நோக்கிச் சென்ற மக்கள் பேருந்து (/showthread.php?tid=1312)



புல்மோட்டையிலிருந்து திருமலை நோக்கிச் சென்ற மக்கள் பேருந்து - மேகநாதன் - 01-18-2006

<b>புல்மோட்டையிலிருந்து திருமலை நோக்கிச் சென்ற மக்கள் பேருந்து ஜானோயா ஆற்றில் பாய்ந்தது - ஐவர் உயிரிழப்பு </b>


திருமலை இ.போ.சபைக்குச் சொந்தமான மக்கள் பேருந்து இன்று பிற்பகல் 2 மணிக்கு புல்மோட்டையிருந்து திருமலைக்குச் சென்ற போது ஜானோயா ஆற்றைக் கடக்க படகுப் பாதையில் ஏற்றிய போது பேருந்தின் உராய்வு விசையின்மையால் நேராக ஆற்றில் பாய்ந்தது நிரில் மூழ்கியது. இதனால் இரண்டு ஆண்களும், 3 சிறுவர்களும் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
பேருந்தின் ஓட்:டுனரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு புல்மோட்டை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

படையினரும், காவல்துறையினரும் குறித்த இடத்திற்கு எவரையும் செல்ல விடவில்லை. ஆனால் மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன

<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>


- மேகநாதன் - 01-19-2006

<b>திருமலை பேரூந்து விபத்து: 5 பேர் பலி </b>

திருகோணமலை நோக்கிச் சென்ற பேரூந்து ஆற்றில் விழுந்ததில் 5 பேர் பலியாகினர்.


புல்மோட்டையிலிருந்து நேற்று பிற்பகல் இந்தப் பேருந்து திருகோணமலை நோக்கிச் சென்றது.

யான் ஓயா ஆற்றைக் கடக்கும் வகையில் படகுப் பாதையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது ஆற்றில் விழுந்தது.

இந்த சம்பவத்தில் பலியானோரின் சடலங்கள் புல்மோட்டை அரச மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன

<b><i>தகவல்மூலம்;- புதினம்</i></b>


- மேகநாதன் - 01-19-2006

<b>பேரூந்து விபத்தில் 5 பேர் பலி: 11 பேர் காயம்.</b>

புல்மோட்டை யான்ஓய ஆற்றில் பயணிகள் பேரூந்து இன்று மாலை விபத்துக்குள்ளாகியுள்ளானதில் பேரூந்தில் பயணித்த ஐந்து பேர் பலியாகினர்.

இதில் மூன்று சிறுவர்களும் பெண்கள் இருவரும் அடங்குகிறார்கள். இவர்களின் சடலங்கள் மூதூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

புல்மோட்டையில் இருந்து திருகோணமலைக்கு சென்று கொண்டிருந்த பேரூந்தே மிதக்கும் பாதையில் பிரவேசித்த பின்னர், அந்த மிதக்கும் பாதையுடன் பேரூந்து ஆற்றினுள் அமிழ்ந்ததாக தெரிவிக்ப்படுகின்றது.

நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தின் போது பேரூந்தில் 16 பேர் வரை பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது

<b><i>தகவல் மூலம்- பதிவு</i></b>