Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 335 online users.
» 0 Member(s) | 332 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,289
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,228
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,288
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,620
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,046
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,456
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,471
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,022
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  ஜோசப்பின் இடத்திற்கு வேறொருவரை நியமிக்க நடவடிக்கை
Posted by: வினித் - 01-18-2006, 02:50 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (6)

ஜோசப்பின் இடத்திற்கு வேறொருவரை நியமிக்க நடவடிக்கை
[புதன்கிழமை, 18 சனவரி 2006, 18:59 ஈழம்] [கொழும்பிலிருந்து சி.செந்தூரன்]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையினால் வெற்றிடமாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையாளருக்கு நாடாளுமன்ற செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் அந்தக் கட்சியின் சார்பில் அதிக விருப்புவாக்குகளைப் பெற்ற வேட்பாளரைத் தெரிவு செய்து அனுப்புமாறு மட்டக்களப்பு மாவட்ட தெரிவு அத்தாட்சி அலுவலரை தேர்தல் ஆணையாளர் எழுத்து மூலம் கோரியுள்ளார்.

நன்றி: புதினம்

Print this item

  பாடங்கள் நிறையவே உண்டு!
Posted by: வினித் - 01-18-2006, 02:19 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

பாடங்கள் நிறையவே உண்டு!


<b>யாழ். மானிப்பாயில் தாயும், இரு மகள்மாரும் படுகொலை செய்யப்பட்டமையும், தந்தையும், மகனும் படுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டமையும் சிறிலங்கா ஆயுதப்படைத்தரப்பும், தேச விரோதக்குழுவான ஈ.பி.டி.பியும் மேற்கொண்ட மிலேச்சத்தனமான செயல் என்பதில் சந்தேகம் கொள்ள எதுவுமே இல்லை.</b>

இதற்குச் சிறிலங்கா அரச தரப்போ அன்றி ஆயுதத்தரப்போ தமக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பதோ அன்றி இதற்குத் தாம் பொறுப்பு ஏற்பதற்கு இல்லை என்பதோ சிறுபிள்ளைத்தனமானது.

<b>இதேவேளை சிறிலங்கா அரசும், அதன் ஆயுதப்படைத்தரப்பும் இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் என்றோ, இதற்கு நீதி கிட்டுவதற்கான நடவடிக்கைகளை அது மேற்கொள்ளும் என்றோ எதிர்பார்ப்பதற்குத் தமிழர் தரப்பும் ஒன்றும் சிறுபிள்ளைத்தனமானதல்ல. சிலவேளை சிறிலங்காவிற்கு ஆதரவளிக்க முயல்பவர்கள், ஆதரவளிப்பவர்கள் சிறிலங்கா ஆயுதப்படைத்தரப்பின் கூற்றுக்களை ஏற்றுக்கொள்பவர்களாக இருக்கலாம்.</b>


<b>ஆனால் இப்படுகொலைகள் ஏன் மேற்கொள்ளப்பட்டன? என்ற கேள்விக்குப்பதில் தேடுதல் என்பது முக்கியமானதாகும். சிறிலங்கா ஆயுதப்படையினர் தமிழ் மக்களைப்படுகொலை செய்வதற்குக் காரணம் என்பது தேவையற்றதொன்றுதான். தமிழர்கள் என்பது ஒன்றே படுகொலைக்குப் போதுமான காரணம் என்பது தமிழர் அனைவருக்கும் தெரிந்ததொன்றே.</b>

ஆனால் மானிப்பாயில் இடம்பெற்ற படுகொலையானது வீடு தேடிச்சென்று மேற்கொள்ளப்பட்ட படுகொலையாகும். ஏனெனில் ஒரு எதிர்பாராத சம்பவத்தின் போதோ அன்றி எதிர்பாராத இடத்திலோ நிகழ்ந்ததல்ல. அதாவது தமிழர்கள் என்பதற்கு அப்பால் இவர்கள் இலக்குவைத்துக் கொல்லப்பட்டுள்ளார்கள். அதிலும் குறிப்பாகப் பெண்கள் இலக்குவைத்துக் கொல்லப்பட்டுள்ளார்கள்.

<b>இந்த வகையில் இக் கொலைகளுக்குத் தமிழர்கள் என்பதற்கு அப்பால் காரணி ஒன்று இருந்துள்ளது. அதிலும் பெண்கள் கொல்லப்பட்டமைக்கு அக்காரணி பிரதானமானதாக இருந்திருத்தல் வேண்டும். அந்த வகையில் அப்பெண்களில் ஒருவரான போஜன் சானுகா என்பவர் விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி நிறுவனமான நிதர்சனம் நிறுவனத்தின் தயாரிப்பான 'அம்மா நலமா?|| என்ற திரைப்படத்தில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்தமை இருந்திருத்தல் வேண்டும்.</b>

<b>அதாவது இப்படுகொலைக்கு போஜன் சானுகா நிதர்சனம் தயாரிப்பில் நடித்துள்ளமைதான் காரணம் எனில் சில கேள்விகள் இங்கு முக்கியம் பெறுகின்றன. இதில் ஒன்று நிதர்சனம் தயாரிப்பில் நடிப்பவர்கள் எல்லாம் விடுதலைப்புலிகள் என்று ஆகிவிடுமா? புலிகள் அன்றி புலிகளின் ஆதரவாளர் என்பதாகக் கொண்டாலும் நிராயுதபாணிகளை காட்டுமிராண்டித் தனமாகச் சுட்டுக்கொன்றமை எந்தவகையில் நியாயப்படுத்தக்கூடியது? அடுத்ததாக ஒருவர் விடுதலைப் புலிகளின் நிறுவனம் ஒன்றுடன் பகுதிநேரமாக இணைந்து செயற்பட்டார் என்பதற்காக அக்குடும்பத்தில் பலரைப்; படுகொலை செய்யலாமா?.</b>

<b>இப்படுகொலைகளை மேற்கொண்டவர்கள் எத்தகைய நியாயப்பாட்டையும், வாதப்பிரதிவாதங்களையும் முன்வைக்க முடியாது. இப்படுகொலைக்கு அவர்கள் நடுநிசிவேளையைத் தெரிவு செய்ததில் இருந்தே இதனைப்புரிந்து கொள்ளமுடியும். ஆனால் ஒன்று இதை ஒத்த படுகொலைகள் புரிந்தவர்கள் பல கசப்பான அனுபவங்களைச் சிறிலங்கா அரசியலில் பெற்றுக்கொண்டதை எவரும் மறந்துவிடக்கூடாது.</b>

எடுத்துக்காட்டாக ஜே.வி.பி யினர் கடந்த நூற்றாண்டின் எண்பதுகளின் பிற்பகுதிகளில் மேற்கொண்ட கிளர்ச்சியின் போது இத்தகையதொரு சூழ்நிலையே தென்னிலங்கையில் நிலவியது. அதாவது சிறிலங்கா ஆயுதப்படையினரின் குடும்பத்தின், உறுப்பினர்கள் என்பதற்காகப் பலர் ஜே.வி.பி.யினரால் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.

ஆனால் இதுவே இறுதியில் ஜே.வி.பி.யினரின் அழிவிற்குக் காரணமாகியது. அதாவது ஜே.வி.பி.யினரை சிறிலங்கா இராணுவம் இரும்புக்கரம் கொண்டு இறுக்கிய போது சிங்கள மக்கள் அவற்றைக் கண்டு கொள்ளவில்லை. அவர்களுக்கு இரங்கவும் இல்லை. அவர்களைப் பாதுகாக்க முற்படவுமில்லை. ஜே.வி.பி.யினர் அநாதரவாக வீதியில் கிடக்க வேண்டியதொரு நிலையே ஏற்பட்டது. அதாவது அநீதியான படுகொலைகளுக்குக் காரணமானவர்கள் மீது மக்கள் என்றுமே இரக்கம் காட்டுவதில்லை.

இதனை இன்று இனஅழிப்பில் ஈடுபடும் சிறிலங்காவின் ஆயுதப்படைத்தரப்பும் சரி, இனவிரோத சக்திகளும் சரி; மனதிற ;கொள்ளவேண்டும். மக்கள் மீது ஒடுக்குமுறையை ஏவுகின்றவர்கள் வென்றதாக வரலாறும் இல்லை. மக்கள் கிளர்ந்தெழுந்தபோது ஒடுக்குமுறையாளர்களும், இனவிரோதிகளும் வீதிகளில் கிடந்து நாறவேண்டியே ஏற்படும். இவ்விடயம் சிங்கள இராணுவத்திற்கும் பொருந்தும். ஆயினும் சிறப்பாக தமிழர் இனவிரோதிகளுக்கு இது முற்றிலும் பொருந்துவதாகவே இருக்கும்.

http://www.tamilnaatham.com/

Print this item

  2ஆம் நாளாக சிறிலங்கா நாடாளுமன்றத்தை முடக்கினர்
Posted by: வினித் - 01-18-2006, 11:35 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<b>2ஆம் நாளாக சிறிலங்கா நாடாளுமன்றத்தை முடக்கினர் தமிழ் உறுப்பினர்கள்! </b>

[புதன்கிழமை, 18 சனவரி 2006, 15:48 ஈழம்] [ம.சேரமான்]
சிறிலங்காவின் நாடாளுமன்றத்தை 2ஆம் நாளாக இன்றும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடக்கினர்


சுமார் 30 நிமிடங்களே நாடாளுமன்ற செயற்பாடுகள் இன்று நடைபெற்றன.

சபாநாயகர் டபிள்யு.ஜே.எம்.லொகுபண்டார தலைமையில் இன்று காலை நாடாளுமன்றம் கூடியது. நாடாளுமன்றம் கூடியதையடுத்து தமிழ் மக்கள் மீதான படுகொலைகளைக் கண்டித்து அனைத்து தமிழ்க் கட்சி உறுப்பினர்களும் அவை மத்திக்குச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர்.

நாடாளுமன்றத்தில் இன்று பல சட்டமூலங்கள் நிறைவேற ஏற்பாடாகியிருந்தது. சட்டமூலங்களை நிறைவேற்றும் போது சபாநாயகர், நாடாளுமன்ற செயலாளரின் இருக்கையில் அமர வேண்டியிருப்பதால் சபாநாயகர் தனது ஆசனத்திலிருந்து எழுந்து செயலாளரின் ஆசனத்திற்குச் செல்வதற்கு முயல்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம். சிவாஜிலிங்கம், சபாநாயகரின் ஆசனத்தில் சென்று அமர்ந்தார்.

அதேநேரம் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் ஓடிச்சென்று செயலாளரின் ஆசனத்தில் அமர்ந்தார்.

இதனால் நாடாளுமன்றச் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது சபாநாயகர் நாடாளுமன்றத்தை நாளை காலை 9.30 வரை ஒத்திவைத்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் தங்கள் ஆசனங்களில் இருந்தே ஆதரவு தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியிலும் 4 சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


நன்றி:புதினம்

Print this item

  இந்தியாவின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் 2006
Posted by: MUGATHTHAR - 01-18-2006, 10:22 AM - Forum: விளையாட்டு - Replies (53)

<b>1வது டெஸ்ட் போட்டி </b>

நேன்று லாகூரில் நடந்து முடிந்த பாகிஸ்தான் இந்தியா அணிகளுக்கிடையிலான 1வது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி <b>டிரா</b>வில் முடிவடைந்தது காலநிலை சரியில்லாத காரணத்தால் 4ம் 5ம் நாள் ஆட்டங்கள் தடைப்பட்டிருந்தன

நாணய சுழச்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது 1வது இன்னிங்ஸ்சில் மிகப் பெரியதொரு ஓட்ட இலக்காக <b>679</b>க்கு 7விக்கட்டுக்கள் என்ற நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது மிகவும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியில்

<b>Youns khan - 199 Mohd Yosuf -163 Afridi - 103 Akmal - 102 </b>ஓட்டங்களைப் பெற்றிருந்தார்கள் அடுத்து களம் இறங்கிய இந்திய அணி நாங்களும் துடுப்பாட்டத்தில் சளைத்தவர்கள் இல்லை எண்டதை நிரூபித்தார்கள் இறுதி நாள் முடிவில் 1 விக்கட் இழப்புக்கு <b>410</b>ஓட்டங்களை பெற்றது.
<b>V Sehwag - 254
*R Dravid -128 </b>

பாகிஸ்தானை பொறுத்தமட்டில் ஆடுகளங்கள் பொதுவாக பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைக்கப்படுவதே வழக்கம் (சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை தன்னகத்தே கொண்ட ஒரு அணி) ஆனால் ஏனோ தெரியவில்லை இந்த போட்டி நடந்த ஆடுகளம் துடுப்பாட்டத்துக்கு இரு அணியினருக்;கும் சாதகமாக அமைந்து விட்டதால் போட்டி அவ்வளவு விறுவிறுப்பாக அமையவில்லை. . . .

<i><b>ஸ்கோர் விபரம்(1வது இன்னிங்ஸ்)</b></i><b>
பாகிஸ்தான் - 679/7 dec
இந்தியா - 410/1 </b>
http://usa.cricinfo.com/db/ARCHIVE/2005-06...T1_13-17JAN2006

ஆட்ட நாயகன் -<b>V Sehwag - 254runs </b>
<img src='http://www.cricinfo.com/db/PICTURES/CMS/58000/58060.jpg' border='0' alt='user posted image'>
<b>Naved-ul-Hasan dismissed Virender Sehwag just 4 runs short of a world record partnership,</b>

Print this item

  சுனாமியில் கணவனை இழந்தவர் குழந்தைகளுடன் அகதியாக வந்தார்
Posted by: rajathiraja - 01-18-2006, 05:45 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (3)

<b>சுனாமியில் கணவனை இழந்தவர் குழந்தைகளுடன் அகதியாக வந்தார் </b>
<img src='http://dinamalar.com/2006jan18/photos/IMP37.jpg' border='0' alt='user posted image'>
ராமேஸ்வரம்: சுனாமியில் கணவனை இழந்த பெண், 3 குழந்தைகள் உட்பட 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர். ஐந்து நாட்களில் அகதிகளின் வருகை 53 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கை ராணுவத்திற்கும் புலிகள் அமைப்பிற்கும் உள்நாட்டு சண்டை நடப்பதால் அகதிகள் தமிழகம் வருவது அதிகரித்துள்ளது. ஜன.12ம் தேதி 24 பேர், 13ல் 9 பேர், 14ல் 5 பேர், 15ல் 10 பேர், என 48 பேர் வந்துள்ளனர். அவர்கள் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இலங்கை பேசாளையிலிருந்து சுனாமியின் போது கணவரை இழந்த கல்யாணி(29) குழந்தைகள் விஷாந்தினி(7), கிஷன்(5), சசுஷியா(2) உட்பட 4 பேர் தங்கச்சிமடத்திற்கு படகில் வந்தனர்.மேலும் மன்னார் முல்லைத்தீவை சேர்ந்த வின்ஸ்டன்(50) என்பவர் தனியாக தனுஷ்கோடி வந்தார். இவர்களை சேர்த்து அகதிகளின் வருகை ஐந்து நாட்களில் 53 ஆக உயர்ந்துள்ளது.நேற்று வந்த 5 பேரும் போலீசாரின் விசாரணைக்கு பின் மண்டபம் முகாம் அனுப்பி வைக்கப்பட்டனர்.


கல்யாணி கூறியதாவது: இலங்கை ராணுவத்தின் தொந்தரவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. தமிழர்கள் நிம்மதி இழந்துள்ளனர். என் கணவர் கண்ணன் சுனாமியில் இறந்து விட்டார்.குழந்தைகளுடன் கஷ்டமான நிலையில் குடும்பத்தை நடத்தி வருகிறேன். புதுச்சேரியில் என் தந்தை உள்ளார். அங்கு செல்ல படகில் ரூ.2ஆயிரத்து 500 கொடுத்து தங்கச்சிமடம் வந்தேன். வழிதெரியாமல் அங்கிருந்து முகுந்தராயர்சத்திரம் சென்று பின்னர் தனுஷ்கோடி வந்தடைந்தேன். இவ்வாறு கூறினார்.

Source : dinamalar.com
http://dinamalar.com/2006jan18/imp37.asp

Print this item

  வணக்கம்
Posted by: agathyan - 01-18-2006, 01:27 AM - Forum: அறிமுகம் - Replies (30)

வணக்கம்
யாழில் இணைந்துள்ள பல்லாயிரக்கண்கான உங்களுடன் நானும் ஒருவனாக இணைந்து கை குலுக்குகிறேன்!

Print this item

  நோர்வே தூதுவர் ஊடாக அரசு புலிகளுக்கு விசேட தகவல்
Posted by: கீதா - 01-17-2006, 11:40 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

நோர்வே தூதுவர் ஊடாக அரசு புலிகளுக்கு விசேட தகவல்
அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான சமரச பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பதற்கான இடம் குறித்து அரசாங்கம் விஷேட தகவல் ஒன்றை புலிகள் இயக்கத்திற்கு நோர்வே தூதுவர் ஊடாக அனுப்பி வைத்துள்ளது.

அரசாங்கத்தின் விசேட தகவலை வன்னி சென்ற இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹென்ஸ் பிரஸ்கர் புலிகளுக்கு தெரிவித்துள்ளதாக அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜனாதிபதியை பொறுத்தவரையில் சமரச பேச்சுவார்த்தையை ஐரோப்பிய நாடு ஒன்றில் அல்லது புலிகள் இயக்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க நோர்வே நாட்டில் நடத்த விருப்பம் கொண்டுள்ளார். அதனை நோர்வே தூதுவர் ஊடாக புலிகளுக்கு தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் கொலைகள், வன்செயல்களை நிறுத்த சமரச பேச்சுவார்த்தையை கூடிய விரைவில் ஆரம்பிக்க ஜனாதிபதி அக்கறை கொண்டுள்ளார் என்றும் அந்த அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்தன.

தூதுவரின் வன்னி விஜயம் குறித்து இலங்கைக்கான நோர்வே தூதுவர் அலுவலகத்தின் இரண்டாவது செயலாளர் டொட் கிரஸ்கொப் தெரிவிக்கையில், நோர்வே அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான விசேட தூதுவருமான எரிக் சொல்ஹெய்மின் இலங்கை விஜயத்திற்கான நிகழ்ச்சி நிரல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவே தூதுவர் வன்னி சென்றுள்ளார்.

சொல்ஹெய்ம் எதிர்வரும் திங்கட் கிழமை இலங்கை வருகிறார். வியாழக்கிழமை வரை கொழும்பில் தங்கி இருப்பார். வன்னி செல்லும் தினம் குறித்து இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் அவர் வன்னி செல்வார். கொழும்பில் ஜனாதிபதி உட்பட ஏனைய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திப்பார்.

ஜே.வி.பி. பிரதிநிதிகளை சந்திக்க மாட்டார் என்றும் டொம் தெரிவித்தார்.
இணைப்பு : : kugan
Tue, 17 Jan 2006, 19:08:01 GMT


<< Back

Print this item

  அறிமுகம்
Posted by: Naththikan. - 01-17-2006, 08:17 PM - Forum: அறிமுகம் - Replies (41)

வணக்கம்
யாழ் இனையம் வாசகர்கள் அனைவருக்கும்.
நான் இந்த இனையத்தளத்தில் இனைவதை இட்டு
பெரு மகிழ்ச்சியடைகிறேன்
என்னையும் ஏற்றுக்கொள்வீர்களா?

Print this item

  மனைவி என்பவள் மனித வடிவில் தெய்வம்!!
Posted by: Rasikai - 01-17-2006, 08:03 PM - Forum: கவிதை/பாடல் - Replies (30)

<b>மனைவி என்பவள் மனித வடிவில் தெய்வம்
..................................................
<img src='http://img396.imageshack.us/img396/3451/still081005414nj.jpg' border='0' alt='user posted image'>

அன்னை ஒரு பிறவி தருவாள்
அடுத்தடுத்து பல பிறவி....
உன் மேல் ஆசை கொண்டவள் தருவாள்.

மண்ணில் தன் வாழ்வு முடியும் வரை
உன்னை சுத்தி சுத்தியே வந்து..

உனக்கு முன்னமே தான் சாக நினைப்பாள்
தன்னை உனக்கு தந்தவளை...

தரணியே நீதான் என்று வழ்பவளை..
தருணம் கிடைக்கும் போதெல்லாம்

நாய் பேய்
என்று நாக்கிழந்து பேசும் மனிதா
ஒரு வேளை அவளுக்கு முதலாய் உன் ஆவி பிரிந்தால்
உண்மையாய் உனக்காய் அழ உலகில் ஒருத்தி அவள் மட்டுமே இருப்பாள்!

போ.. போ....?
நரம்பில்லா நாக்கு ஆயிரமும் பேசும்.அதற்கு மேலும் ...!</b>

Print this item

  ஈழ நூலகம்
Posted by: Eelavan - 01-17-2006, 03:56 PM - Forum: நூற்றோட்டம் - Replies (14)

யாழ் கள உறவுகளுக்கு
வணக்கம்

சிறிது காலம் முன்னே களத்தில் ஈழத்து நூல்களை இணையத்தில் அனைவரும் படிக்கும் வகையில் மின்வெளி நூலகம் ஒன்றை அமைக்கும் முயற்சி பற்றிக் குறிப்பிட்டு உதவி கேட்டிருந்தேன்.அந்த முயற்சி இப்போது கைகூடி வந்திருக்கிறது
www.noolaham.net

என்னும் முகவரியில் நீங்கள் அதனைப் பார்வையிடலாம்

எரித்தழிக்கப்பட்ட ஈழத்தமிழனின் சொத்து யாழ் நூலகத்தை நினைவுகூரும் வகையிலும் எங்களில் அரிய இலக்கியங்கள் தற்காலிகமாகவேனும் ஈழத்துக்கு வெளியே பாதுகாக்கப்படவேண்டியதன் தேவையை வலியுறுத்தியும் யாழ் நூலகத்தின் படம் நூலகத்தின் முகப்பிலே இடம்பெற்றிருக்கிறது


நூலகம் மூன்று பெரும் பிரிவுகளை உள்ளடக்கியது
1) ஈழத்து எழுத்தாஅர்களின் நூல்கள்(ஈழத்திலும் புலத்திலும் எழுதப்பட்டவை)
2) சஞ்சிகைகள்-இதுவரையும் வெளிவந்த வந்துகொண்டிருக்கும் சஞ்சிகைகள்
3) உதிரி ஆக்கங்கள்-கவிதை கட்டுரை விமர்சனம் என்று பல்வேறு பத்திரிகைகளிலும் வெளிவந்த உதிரி ஆக்கங்கள்

இதுதவிர விக்கிபீடியாவில் ஈழத்து இலக்கியக் கலைக்களஞ்சியம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது பல்வேறு தலைப்புகளின் கீழ் தகவல்கள் பகுத்துத் தொகுக்கப்படுகின்றன

http://noolaham.net/wiki/doku.php?id=%E0%A...%AE%AF%E0%AE%BE
இன்னொரு முயற்சியாக நண்பர் ஒருவர் தமிழ் நூல்களுக்கான தரவுத்தளம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.உலகின் அனைத்துப் பாகங்களிலும் வெளியான தமிழ் நூல்கள் பற்றிய விபரங்களை நீங்கள் அங்கே பெற்றுக்கொள்ளலாம்.முடிந்தவரை ஈழத்து நூல்கள் பற்றிய தகவல்களை திரட்டி அத்தளத்தில் சேகரிப்பதில் முயன்றுகொண்டிருக்கிறோம்

http://www.viruba.com/

இம்முயற்சிகளை நீங்களும் பார்வையிட்டு உங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதோடு அவற்றைப் பயன்படுத்தியும் இணைந்து செயற்பட்டும் உங்கள் ஆதரவைத் தெரிவிக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்

இவை திறந்த நிலையில் யார் வேண்டுமானாலும் பங்கு கொள்ளக் கூடிய குழு முயற்சிகள் ஆகவே எவ்வகையான விமர்சனமாக இருந்தாலும் மகிழ்வுடன் எதிர்நோக்குகிறோம்

தள வேலைகள் நடந்துகொண்டிருப்பதால் தளத்தின் வடிவமைப்பு ஒழுங்கமைக்கப்படவில்லை விரைவில் சீர் செய்யப்படும்

நூலகம் தன்னார்வ நண்பர்கள் சார்பில்
ஈழநாதன்

Print this item