![]() |
|
பாடங்கள் நிறையவே உண்டு! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: பாடங்கள் நிறையவே உண்டு! (/showthread.php?tid=1316) |
பாடங்கள் நிறையவே உண்டு! - வினித் - 01-18-2006 பாடங்கள் நிறையவே உண்டு! <b>யாழ். மானிப்பாயில் தாயும், இரு மகள்மாரும் படுகொலை செய்யப்பட்டமையும், தந்தையும், மகனும் படுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டமையும் சிறிலங்கா ஆயுதப்படைத்தரப்பும், தேச விரோதக்குழுவான ஈ.பி.டி.பியும் மேற்கொண்ட மிலேச்சத்தனமான செயல் என்பதில் சந்தேகம் கொள்ள எதுவுமே இல்லை.</b> இதற்குச் சிறிலங்கா அரச தரப்போ அன்றி ஆயுதத்தரப்போ தமக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பதோ அன்றி இதற்குத் தாம் பொறுப்பு ஏற்பதற்கு இல்லை என்பதோ சிறுபிள்ளைத்தனமானது. <b>இதேவேளை சிறிலங்கா அரசும், அதன் ஆயுதப்படைத்தரப்பும் இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் என்றோ, இதற்கு நீதி கிட்டுவதற்கான நடவடிக்கைகளை அது மேற்கொள்ளும் என்றோ எதிர்பார்ப்பதற்குத் தமிழர் தரப்பும் ஒன்றும் சிறுபிள்ளைத்தனமானதல்ல. சிலவேளை சிறிலங்காவிற்கு ஆதரவளிக்க முயல்பவர்கள், ஆதரவளிப்பவர்கள் சிறிலங்கா ஆயுதப்படைத்தரப்பின் கூற்றுக்களை ஏற்றுக்கொள்பவர்களாக இருக்கலாம்.</b> <b>ஆனால் இப்படுகொலைகள் ஏன் மேற்கொள்ளப்பட்டன? என்ற கேள்விக்குப்பதில் தேடுதல் என்பது முக்கியமானதாகும். சிறிலங்கா ஆயுதப்படையினர் தமிழ் மக்களைப்படுகொலை செய்வதற்குக் காரணம் என்பது தேவையற்றதொன்றுதான். தமிழர்கள் என்பது ஒன்றே படுகொலைக்குப் போதுமான காரணம் என்பது தமிழர் அனைவருக்கும் தெரிந்ததொன்றே.</b> ஆனால் மானிப்பாயில் இடம்பெற்ற படுகொலையானது வீடு தேடிச்சென்று மேற்கொள்ளப்பட்ட படுகொலையாகும். ஏனெனில் ஒரு எதிர்பாராத சம்பவத்தின் போதோ அன்றி எதிர்பாராத இடத்திலோ நிகழ்ந்ததல்ல. அதாவது தமிழர்கள் என்பதற்கு அப்பால் இவர்கள் இலக்குவைத்துக் கொல்லப்பட்டுள்ளார்கள். அதிலும் குறிப்பாகப் பெண்கள் இலக்குவைத்துக் கொல்லப்பட்டுள்ளார்கள். <b>இந்த வகையில் இக் கொலைகளுக்குத் தமிழர்கள் என்பதற்கு அப்பால் காரணி ஒன்று இருந்துள்ளது. அதிலும் பெண்கள் கொல்லப்பட்டமைக்கு அக்காரணி பிரதானமானதாக இருந்திருத்தல் வேண்டும். அந்த வகையில் அப்பெண்களில் ஒருவரான போஜன் சானுகா என்பவர் விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி நிறுவனமான நிதர்சனம் நிறுவனத்தின் தயாரிப்பான 'அம்மா நலமா?|| என்ற திரைப்படத்தில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்தமை இருந்திருத்தல் வேண்டும்.</b> <b>அதாவது இப்படுகொலைக்கு போஜன் சானுகா நிதர்சனம் தயாரிப்பில் நடித்துள்ளமைதான் காரணம் எனில் சில கேள்விகள் இங்கு முக்கியம் பெறுகின்றன. இதில் ஒன்று நிதர்சனம் தயாரிப்பில் நடிப்பவர்கள் எல்லாம் விடுதலைப்புலிகள் என்று ஆகிவிடுமா? புலிகள் அன்றி புலிகளின் ஆதரவாளர் என்பதாகக் கொண்டாலும் நிராயுதபாணிகளை காட்டுமிராண்டித் தனமாகச் சுட்டுக்கொன்றமை எந்தவகையில் நியாயப்படுத்தக்கூடியது? அடுத்ததாக ஒருவர் விடுதலைப் புலிகளின் நிறுவனம் ஒன்றுடன் பகுதிநேரமாக இணைந்து செயற்பட்டார் என்பதற்காக அக்குடும்பத்தில் பலரைப்; படுகொலை செய்யலாமா?.</b> <b>இப்படுகொலைகளை மேற்கொண்டவர்கள் எத்தகைய நியாயப்பாட்டையும், வாதப்பிரதிவாதங்களையும் முன்வைக்க முடியாது. இப்படுகொலைக்கு அவர்கள் நடுநிசிவேளையைத் தெரிவு செய்ததில் இருந்தே இதனைப்புரிந்து கொள்ளமுடியும். ஆனால் ஒன்று இதை ஒத்த படுகொலைகள் புரிந்தவர்கள் பல கசப்பான அனுபவங்களைச் சிறிலங்கா அரசியலில் பெற்றுக்கொண்டதை எவரும் மறந்துவிடக்கூடாது.</b> எடுத்துக்காட்டாக ஜே.வி.பி யினர் கடந்த நூற்றாண்டின் எண்பதுகளின் பிற்பகுதிகளில் மேற்கொண்ட கிளர்ச்சியின் போது இத்தகையதொரு சூழ்நிலையே தென்னிலங்கையில் நிலவியது. அதாவது சிறிலங்கா ஆயுதப்படையினரின் குடும்பத்தின், உறுப்பினர்கள் என்பதற்காகப் பலர் ஜே.வி.பி.யினரால் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் இதுவே இறுதியில் ஜே.வி.பி.யினரின் அழிவிற்குக் காரணமாகியது. அதாவது ஜே.வி.பி.யினரை சிறிலங்கா இராணுவம் இரும்புக்கரம் கொண்டு இறுக்கிய போது சிங்கள மக்கள் அவற்றைக் கண்டு கொள்ளவில்லை. அவர்களுக்கு இரங்கவும் இல்லை. அவர்களைப் பாதுகாக்க முற்படவுமில்லை. ஜே.வி.பி.யினர் அநாதரவாக வீதியில் கிடக்க வேண்டியதொரு நிலையே ஏற்பட்டது. அதாவது அநீதியான படுகொலைகளுக்குக் காரணமானவர்கள் மீது மக்கள் என்றுமே இரக்கம் காட்டுவதில்லை. இதனை இன்று இனஅழிப்பில் ஈடுபடும் சிறிலங்காவின் ஆயுதப்படைத்தரப்பும் சரி, இனவிரோத சக்திகளும் சரி; மனதிற ;கொள்ளவேண்டும். மக்கள் மீது ஒடுக்குமுறையை ஏவுகின்றவர்கள் வென்றதாக வரலாறும் இல்லை. மக்கள் கிளர்ந்தெழுந்தபோது ஒடுக்குமுறையாளர்களும், இனவிரோதிகளும் வீதிகளில் கிடந்து நாறவேண்டியே ஏற்படும். இவ்விடயம் சிங்கள இராணுவத்திற்கும் பொருந்தும். ஆயினும் சிறப்பாக தமிழர் இனவிரோதிகளுக்கு இது முற்றிலும் பொருந்துவதாகவே இருக்கும். http://www.tamilnaatham.com/ |