Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 147 online users.
» 0 Member(s) | 144 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,289
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,228
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,288
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,620
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,046
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,456
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,471
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,022
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  அன்ரன் பாலசிங்கம் அடுத்தவாரம் வன்னி வருகை
Posted by: வினித் - 01-17-2006, 01:24 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - Replies (3)

Balasingham to visit Vanni next week

[TamilNet, January 17, 2006 11:33 GMT]


<b>Mr. Anton Balasingham, the chief negotiator and political strategist of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), will visit the LTTE held region of Vanni, northern Sri Lanka, on 23rd January in a fresh effort to resume the peace process. Mr. Balasingham will assist the LTTE leader, Mr. V. Pirapaharan, during the forthcoming meeting next week between Mr. Erik Solheim, the Norwegian Minister of International Development, and the LTTE leadership.
Mr. Solheim, who is also the Minister in charge Norway's peace process in Sri Lanka, during his visit to the island, will meet President Mahinda Rajapakse and other Sri Lankan leaders as well as the Tamil Tiger leadership.

Mr. Solheim will be seeking to persuade the parties in conflict to bring an end to the escalating violence that has seriously undermined the February 2002 Ceasefire Agreement.

Having already expressed serious concern over the rising tide of violence, the Norwegian peace envoy will seek a compromise between the protogonists on the contentious issue of the venue for the immediate resumption of talks on stabilizing the ceasefire.

When contacted by TamilNet Tuesday at his London residence, Mr. Balasingham confirmed his visit to Sri Lanka next week.

"What is of critical importance at this crucial juncture, is to try and bring an end to the brutal violence perpetrated against innocent Tamil civilians and create a congenial environment conducive for positive engagement," Mr. Balasingham said.

Meanwhile, diplomatic sources told TamilNet Tuesday that the Sri Lankan Government had assured the Norwegian government of Mr. Balasingham's security during his visit to Vanni. </b>


http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16902

Print this item

  திருகோணமலையில் கண்காணிப்புக்குழு விலகல்!
Posted by: வினித் - 01-17-2006, 12:45 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

இன்று மாலையுடன் திருகோணமலையில் கண்காணிப்புப் பணிகளில் இருந்து யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழு விலகல்!
Written by Paandiyan Tuesday, 17 January 2006

<b>இன்று செவ்வாய்க்கிழமை மாலை நான்கு மணியுடன் திருகோணமலையில் கண்காணிப்புப் பணிகளில் இருந்து தாம் விலகிக்கொள்வதாக திருகோணமலை யுத்த நிறுத்தக் கண் காணிப்புக்குழுவினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அறிவித்துள்ளதாக பிந்திக்கிடைத்த செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.

நாளுக்கு நாள் அதிகாரித்துவரும். வன்முறைச் சம்பவங்களும், கொலைகளும் இங்கு யுத்தநிறுத்தம் நடைமுறையில் உள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், கண்காணிப்புக்குழுவினரும் பாரிய அச்சுறத்தல்களை சந்திக்க வேண்டியுள்ளதாகவும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அத்தகவல் மேலும் தெரிவிக்கின்றது.</b>


நன்றி:சங்கதி

Print this item

  இராணுவப் படுகொலைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம
Posted by: மேகநாதன் - 01-17-2006, 11:31 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (11)

<span style='color:green'><b>இராணுவப் படுகொலைகளைக் கண்டித்து தமிழ்க் கட்சிகள் ஆர்ப்பாட்டம்: சிறிலங்கா நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!! </b>

தமிழர் தாயகத்தில் தொடரும் சிறிலங்கா இராணுவப் படுகொலைகளைக் கண்டித்து சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் இன்று செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. இதனால் இன்றைய சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.


2006ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கியது.

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்து வருவதைக் கண்டித்து

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, மேலக மக்கள் முன்னணி ஆகியவற்றின் உறுப்பினர்கள் இணைந்து கண்டனக் குரல் எழுப்பினர்.

சபைக்குள் நுழைந்த நாடாளுமன்ற சபாநாயகர் லொகுபண்டாரவை முற்றுகையிட்டனர். இதனால் அரசாங்க உறுப்பினர்களின் இருக்கைய+டாக சபாநாயர் லொகு பண்டார தமது இருக்கைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், புங்குடுதீவு தர்சினி, திருகோணமலை 5 தமிழ் மாணவர்கள் படுகொலைகள் மற்றும் அப்பாவித் தமிழ் மக்களை சிறிலங்கா இராணுவத்தினரும் அவர்களோடு சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுவினரும் படுகொலை செய்து வருவதைக் கண்டித்து தமிழ் உறுப்பினர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தமிழ் மக்களின் மீதான படுகொலைகளைத் தடுத்த நிறுத்த வேண்டும் என்றும்

கொழும்பு, மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும் என்றும் தமிழ் உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.

அரசாங்க ஆதரவு உறுப்பினர்கள் சிலர் தமிழ் உறுப்பினர்களுக்கு எதிராக குரல் எழுப்பினர். ஜே.வி.பி. உறுப்பினர்கள் எதுவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதையடுத்து நாடாளுமன்றம் மீண்டும் 10.10 மணிக்கு கூடிய போதும் தமிழ் உறுப்பினர்கள் தொடர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதனால் சிறிலங்கா நாடாளுமன்றத்தின் சபை நடவடிக்கைகளை நாளை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் லொகு பண்டார அறிவித்தார்.</span>

<b><i>தகவல்மூலம்;- புதினம்</i></b>

Print this item

  தென்மராட்சியில் கிளைமோர் தாக்குதல் - இரு படையினர் பலி
Posted by: மேகநாதன் - 01-17-2006, 11:21 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

<b>தென்மராட்சியில் கிளைமோர் தாக்குதல் - இரு படையினர் பலி </b>

யாழ். தென்மராட்சியின் சரசாலைப் பகுதியில் இன்று பகல் 1.00 மணியளவில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் இரு படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒருவர் படுகாய மடைந்துள்ளார்.
உழவூர்தி ஒன்றில் பருத்தித்துறை - கனகம்புளியடி வீதியால் சென்ற படையினர் மீதே சரசாலைப் பகுதியில் வைத்து இத்தாக்குதல் நடத்ப்பட்டுள்ளது. இதனால் அந்த உழவூர்தியில் சென்ற மூன்று படையினரில் இருவர் கொல்லப்பட்டதுடன், மற்றயவர் படுகாயமடைந்து உயிராபத்தான நிலையில் பலாலி இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்

<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>

Print this item

  ஐரோப்பிய நாடு ஒன்றில் பேச்சுவார்த்தை
Posted by: நர்மதா - 01-17-2006, 11:14 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (6)

ஐரோப்பிய நாடு ஒன்றில் பேச்சுவார்த்தைகளை விரைவில் தொடங்க வேண்டும் எனச் சிரேஷ்டஅமைச்சர்கள் சிலர் சனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியிருப்பதாக வெளியாகும் தகவல்கள் ஊர்ஜிதமானதானால் வரவேற்கத்தக்கவையே. ஏனெனில் நாட்டில் சமாதான முயற்சிகள் முன்னேற்றம் காண்பதற்கும் அமைதிச் சூழ்நிலை தோற்றுவதற்கும், இது சிலவேளை உதவக்கூடும்.

ஆனால் இச்சிரேஷ்ட அமைச்சர்களின் ஆலோசனைகளை சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிறைவேற்றத்தக்கதானதொரு சூழ்நிலை உள்ளதா? என்பது கேள்விக்குரியதொன்றே. ஏனெனில் அவர் உருவாக்கியுள்ள அரசியல் களம் அதற்குச் சாதகமானதாக இருப்பதாகத் தெரியவில்லை. அதாவது சமாதான முயற்சிகளுக்கு மாறானதொரு கூட்டையே சனாதிபதி ஏற்படுத்தியுள்ளார்.

ஒரு புறத்தில் அவர் சனாதிபதியாவதற்கு உதவிய ஜே.வி.பியினரும், ஜாதிக ஹெல உறுமயவினரும் ஆசியாவிற்கு வெளியில் பேச்சுவார்த்தை நடாத்துவதற்குத் தயாராக இருப்பதாக இல்லை. இதற்குத் தொடர்ந்தும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் அவர்களுக்கு அண்மையில் சிறிலங்காவிற்கான அமெரிக்கத் து}துவரின் பேச்சும் அமெரிக்க அரசின் சில நகர்வுகளும் சிங்களப் பேரினவாத சக்திகளுக்கு ஆசியாவில் மட்டுமல்ல உலகில் எங்குமே பேசுவது தேவையற்றது என்ற உணர்வை மேலும் வலுப்படுத்தியிருக்கும்.

அதாவது அமெரிக்கத்து}துவர் சிறிலங்கா அரசிற்கு ஆயுதங்களும் பயிற்சியும் வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம். விடுதலைப் புலிகள் பலமான சிறிலங்காப் படையினரைச் சந்திக்க வேண்டிவரும் எனக் கூறியுள்ளமை இப்பேரினவாத சக்திகளுக்குப் பெரிதும் நம்பிக்கை அளிக்கும் ஒன்றாகியுள்ளது.

அமெரிக்காவின் இவ் அறிவிப்பை ஜே.வி.பி வெளிப்படையாக ஆதரிக்காது விட்டாலும்- அதாவது அமெரிக்காவுடனான இராணுவ உறவு அவர்களின் சித்தாந்தத்திற்கு மாறானது என்ற hPதியில்- அது மனமகிழ்வு கொண்டுள்ள அதேவேளை ஜாதிக ஹெல உறுமய இதனை வெளிப்படையாக வரவேற்றுள்ளதுடன் அமெரிக்காவிடம் இருந்து மேலும் உதவிகள் பெற்றுக்கொள்ளப்படவேண்டும் எனக் கோரும் நிலைக்கு வந்துள்ளது.

இந்நிலையில் ஜே.வி.பியும், ஜாதிக ஹெல உறுமயவும் பேச்சுவார்த்தை இனி அவசியமற்றது என்ற நிலைப்பாட்டிற்கு முற்றிலுமாகவே வரக்கூடும். இந்நிலையில் உள்ளுராட்சித் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் என அடுத்தடுத்துத் தேர்தல்களை எதிர்நோக்கியிருக்கும் சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பேச்சுவார்த்தை மேசைக்கு வருவதென்பது சிரமமானதே.

இது ஒருபுறம் இருக்க மகிந்த ராஜபக்ஷ பதவி ஏற்றதன் பின்னர் தனது ஆட்சியை முன்னெடுப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள், ஆலோசகர்கள் என்பவர்களும் மகிந்த ராஜபக்ஷ சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வழிவிடுவார்களா? என்பது கேள்விக்குரியதொன்றே ஆகும்.

எடுத்துக்காட்டாக பாதுகாப்பு மற்றும் பொலிஸ் திணைக்கள ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் கொட்டகதெனிய இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகா போன்றவர்களைச் சுட்டிக்காட்ட முடியும். இவர்கள் தமது சேவைக்காலத்தில் என்றுமே இனப்பிரச்சினைக்கு அரசியற் தீர்வு என்பதை ஏற்றுக்கொண்டவர்கள் இல்லை. இனப்பிரச்சினை தொடர்பான நிலைப்பாட்டில் நெருப்பெடுத்துக் கொடுக்கும் மந்திரிகளாகவே இருந்துள்ளனர்.

இந்நிலையில் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதென்பதை அவர்கள் அனுமதிப்பார்கள் என்றில்லை. இதனால், ஏதோ ஒருவகையில் இவர்கள் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டைகளைப்போட முடியும். குறிப்பாக இயல்பு வாழ்க்கைக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் - அதாவது படுகொலைகள், கைதுகள், சித்திர வதைகள் என்பதன் மூலம் இத்தகையதொரு நிலையைத் தோற்றுவிக்க முடியும். இத்தகைய செயல்களை அவர்கள் ஆரம்பித்து விட்டதாகவே தகவல்கள் ஊர்ஜிதம் செய்கின்றன.

இந்த வகையில் அரசியல் தளத்தில் ஜே.வி.பியும், ஜாதிக ஹெல உறுமய போன்ற பேரினவாதக் கட்சிகளும், மற்றொரு புறத்தில் தெட்டத்தெளிவாக சரத் பொன்சேகா போன்றவர்கள் மக்கள் மத்தியில் இயல்பு வாழ்க்கையைச் சீர்குலைக்கும் வகையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் இனப்பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு என்பதை எட்டாததொரு நிலைக்குக்கொண்டு சென்றுவிடக்கூடும்.

ஆகையினால் மகிந்த ராஜபக்ஷ இன்றைய சூழ்நிலையில் தான் விரும்பினாலும் கூட ஐரோப்பியாவில் மட்டுமல்ல ஆசியாவில் கூடப் பேச்சுவார்த்தை நடத்தக் கூடியதொரு சூழ்நிலையில் இருக்கின்றாரா? என்பது சந்தேகமே. அத்தோடு பல தேர்தல்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் அவர்கூடப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளாரா? என்பதும் கேள்விக்குரியதே.

ஏனெனில் மகிந்த ராஜபக்ஷவும் தனது 35 வருட அரசியல் வாழ்வில் என்றுமே சிங்களப் பேரினவாதத்தை ஆதரிப்பவராகவும், அதற்குத் தலைமை கொடுக்க முற்பட்டவராகவுமே இருந்துள்ளார். இந்நிலையில் தற்பொழுதுமட்டும் அவர் மனம் மாறிவிடுவார்என எவ்வாறு எதிர்பார்க்கமுடியும்?

நன்றி: ஈழநாதம்

Print this item

  இனைய வழி தமிழ் வானொலி பட்டியல்
Posted by: roadrash - 01-17-2006, 10:41 AM - Forum: பொழுதுபோக்கு - No Replies

இனைய வழி தமிழ் வானொலி பட்டியல் இங்கு கொடுத்துள்ளென், கேட்டு மகிழுங்கள்

1.ஜீவன் தமிழ் ரேடியொ, வேகம் 96kbps ,USA வில் இருந்து

2.ஒலி FM,வேகம் 56kbps,இலங்கையிலிருந்து

3.நிலா FM ----- மேலும் விபரம

4. EXPRESS TAMIL ONLINE RADIO .WWW.EXTAMIL.COM -EXPRESS TAMIL ONLINE RADIO - 24Hrs

5.Merina Ultimate Tamil Radio (USA) வேகம் 48kbps ,.மேலும் விபரம

இன்னும் நிறைய தளம் என்னிடம் இருக்கிறது .உங்கள் பதிலைக்கண்டு மீதியை தருகிறேன்

Print this item

  இராணுவக் காடைத்தனங்களை கட்டுப்படுத்தாவிட்டால் மக்களின் கொந்த
Posted by: மேகநாதன் - 01-17-2006, 10:40 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<span style='font-size:25pt;line-height:100%'><b>இராணுவக் காடைத்தனங்களை கட்டுப்படுத்தாவிட்டால் மக்களின் கொந்தளிப்பும் மாறாது: சு.ப.தமிழ்ச்செல்வன்</b>

தமிழர் தாயகத்தில் சிறிலங்கா இராணுவக் காடைத்தனங்களை கட்டுப்படுத்தா விட்டால் மக்களின் கொந்தளிப்பை மாற்றுவது கடினம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் எச்சரித்துள்ளார்.


கிளிநொச்சியில் சு.ப.தமிழ்ச்செல்வனை இன்று செவ்வாய்க்கிழமை சிறிலங்காவிற்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் மற்றும் இலங்கைப் போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் தலைவர் ஹக்ருப் ஹொக்லண்ட் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

இச்சந்திப்புக்களுக்குப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியதாவது:

நோர்வே தூதுவரை முதலில் சந்தித்தோம். தற்போதுள்ள மோசமான நிலைமைகளை அவருக்கு விவரித்தோம்.

எமது அப்பாவித் தமிழ் பேசும் மக்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதும் சிறிலங்கா இராணுவத்தினரது நெருக்குவாரங்களும், நெருக்கடிகளும் அச்சுறுத்தல்களும் அதிகரித்து வருகின்றன.

நாளாந்தம் எமது மக்கள் கொல்லப்படுகின்ற சூழல் உருவாகியுள்ளது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயரவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

யுத்த கால நெருக்கடி போலவே பாரிய அச்சுறுத்தலை பாரிய கொலை நடவடிக்கைகளை எமது மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள் என்பதை இன்றைய சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளோம்.

மிக மோசமான நிலைமை உருவாகிக்கொண்டிருப்பதை நோர்வேத் தரப்பிற்கு எடுத்து விளக்கியுள்ளோம்.

யுத்த நிறுத்த உடன்படிக்கையை அமுலாக்குவதுதான் எல்லாவற்றுக்கும் தீர்வு என்பதை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். அதையே இன்றும் வலியுறுத்தினோம். ஏனெனில் எமது மக்களின் வாழ்க்கையில் இயல்பு நிலையை கொண்டு வரவேண்டும்.

சிறிலங்கா இராணுவ நடமாட்டத்தைக் குறைத்து நெருக்குவாரங்களையும் அச்சுறுத்தல்களையும் குறைத்து நெருக்கடிகளை இல்லாமல் செய்வதன் மூலம்தான் நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும்.

தற்போது அனைத்து இடங்களிலும் யுத்த காலம் போலவே சிறிலங்கா இராணுவம் தமது முழு காடைத்தனங்களையும் செயற்பாடுகளையும் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இவற்றுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படவேண்டும். இல்லையெனில் மக்களின் கொந்தளிப்பான நிலைப்பாடுகளை மாற்றுவது கடினமாக இருக்கும்.

இலங்கைக்கு நோர்வே உயர்மட்டக்குழு வருகை தர உள்ளது. 23 ஆம் நாளன்று எமது தலைவரைச் சந்திக்க உள்ளனர். எமது தலைமைப் பீடத்தின் நிலைப்பாட்டை தலைவர் எடுத்து விளக்குவார்.

இந்த சந்திப்பின் போது அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கமும் பேச்சுக்களில் பங்கேற்பார்.

தெற்கிலே ஏற்பட்டு வருகின்ற சூழல், சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் மற்றும் எமது தாயகத்தில் எமது மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவ வன்முறைகள், அடாவடித்தனங்கள் ஆகியவை ஒரு சுமூகமான சூழலைக் கொண்டு வருமா என்பது சந்தேகத்திற்கிடமான நிலையைத்தான் இன்று வரை உருவாக்கியுள்ளது.

நோர்வே உயர்மட்டக்குழுவின் பயணத்தின் போது சிறிலங்கா படைத்தரப்போ, அரசாங்கமோ தங்களுடைய நிலைப்பாடுகளில் மாற்றங்களை மேற்கொண்டால்தான் நிலைமைகள் சீராகும். அவர்களது நிலைப்பாடுகள் மாறவில்லையெனில் நிலைமை மிகவும் கடினமானதாகவே இருக்கும் எனக் கருதுகிறோம் என்றார் சு.ப.தமிழ்ச்செல்வன்.</span>

<b><i>தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b>

Print this item

  விடுதலைப் புலிகள் படத்தில் நடித்த
Posted by: Luckyluke - 01-17-2006, 08:33 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

விடுதலைப் புலிகள் அமைப்பு தயாரித்த அம்மா என்ற திரைப்படத்தில் நடித்த நடிகையும், அவரது தாயாரும் அடையாளம் தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் ¬முறிந்துள்ள நிலையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஆங்காங்கே மோதல் நடந்து வருகிறது. இரு தரப்பிலும் உயிர்ப் பலிகள் ஏற்பட்டுள்ள நிலையில் ராணுவத்தின் தரப்பில் தான் அதிக அளவில் இதுவரை சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தெற்கு யாழ்ப்பாணம் பகுதியில் மணிபாய் நகர் என்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும், அவரது இரு மகள்களும் சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவர் விடுதலைப் புலிகளின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான நிதர்சனம் சார்பில் தயாரிக்கப்பட்ட அம்மா என்ற படத்தில் நடித்தவர் ஆவார்.

இதே போல தமிழ் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். வடமராச்சியில், நெல்லியாடி என்ற இடத்தில் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அக்கரைப்பட்டு என்ற இடத்தில் தமிழர்களுக்கும், ¬முஸ்லீம்களுக்கும் இடையே வெடித்த திடீர் மோதலில் 2 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

நன்றி : தட்ஸ்தமிழ்

Print this item

  அம்மா ஊரில பிச்சை மகன் மதுரையில அன்னதானம் செய்வது சரியா?
Posted by: vengaayam - 01-17-2006, 08:09 AM - Forum: தமிழ் /தமிழர் - Replies (21)

[size=15]எதிர்பாராத விதமாக நான் ஈழத்தமிழரால் நடத்தப் படும் இணையத் தளத்திற்குச் சென்றிருந்தேன்.
அந்த இணையத் தளத்தை நடத்தும் ஈழத்தமிழர் தான் இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் ¦¾¡ñ¼¡üÈ வேண்டுமென்று துடியாய்த்
துடிக்கிறார், அங்கு செல்லும் இந்தியர்களை விட அவர் தான் மும்முரமாகத் தன்னுடைய சொந்தக்காசைக் கொடுத்தாவது ஏதாவது செய்ய வேண்டுமாம். அவர் அங்கு போகும் இந்தியர்கÇ¢¼Óõ À½õ §¸ð¸¢ýÈ¡÷, ஆனால் அந்தக் காசைச் சேர்த்து தன்னுடைய பெயரில் இந்தியாவில் உதவி செய்வாராம். இந்தியர்கள் எப்படியான கில்லாடிகள், ஒருவரைத் தவிர யாரும் காசு தருவத¡¸ô பேசவில்லை.

அது இருக்கட்டும், நான் கேட்க வந்ததென்னவென்றால், ஈழத்தில், ஈழத்தமிழர்கள், இடம் பெயர்ந்த அகதி முகாம்களில் அல்லலுறுகிýறார்கள், சிங்கள அரசு வெளிநாட்டுப் பண உதவியைக் கூடப் பகிர்ந்து கொள்ள மறுக்கிýÈÐ. ¬Æ¢ô§ÀèÄ¡ø பெற்றோரை இழந்த ஆயிரக்கணக்கான குழந்தைகளைப் பராமரிக்கும் பாரிய வேலையைப் போராளிகள் ¾¡ý செய்கிýறார்கள், மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் ராணுவம் தடுக்கிýறது, சிங்கள அரசு மருந்துகளைò தமிழ்ப்பகுதிகளுக்கு அனுப்ப மறுக்கிýறது. போரினால் தமிழ்ப் பிரதேசத்திலுள்ள ÁÕòÐÅÁ¨É¸Ç¢ø மின்வசதியில்லை, மகப்பேறு மண்ணெö(மண்ணெண்ணெய்) விளக்கில் நடக்கிýறது. அகதி முகாம்களிலுள குழந்தைகளுக்குப் புத்தக வசதிகள் தேவை,
ராணுவம் பாடசா¨லகளைக் குண்டு போட்டழித்ததால் பல கிராமியப் பாடசாலைகளில் மரத்தடியில் ¾¡ý பாடம் நடக்கிýறது. இடம் பெயர்ந்த முகாம்களில் குழந்தைகள் தொற்று நோய்களால் பாதிக்கப் படுகிýறார்கள். இப்படியெல்லாமிருக்க µ÷ ஈழத்தமிழர் இந்தியாவில் சேவை செய்யத் துடிப்பது, அம்மா ஊரில பிச்சை எடுக்க மகன் மதுரையில் அன்னதானம் கொடுத்த கதை மாதிரி þøலையா?

<b>இதில் வேடிக்கை என்னவென்றால் யாழ் களத்துக்கும் வரும் இந்தியர்கள் கூட நீங்கள் ²ý ஈழத்தில் உங்கள் ¦¾¡ñ¨¼ò தொடங்கக் கூடாதென்று கேட்கவில்லை. Charity begins at Home என்பார்கள் ஆங்கிலத்தில். உங்கள் கருத்தைத் தெரிய மிகவும் ஆவலாக உளேன்.</b>

Print this item

  அம்மா ஊரில பிச்சை மகன் மதுரையில அன்னதானம் செய்வது சரியா?
Posted by: vengaayam - 01-17-2006, 07:46 AM - Forum: புலம் - Replies (31)

[size=15]எதிர்பாராத விதமாக நான் ஈழத்தமிழரால் நடத்தப் படும் இணையத் தளத்திற்குச் சென்றிருந்தேன்.
அந்த இணையத் தளத்தை நடத்தும் ஈழத்தமிழர் தான் இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் ¦¾¡ñ¼¡üÈ வேண்டுமென்று துடியாய்த்
துடிக்கிறார், அங்கு செல்லும் இந்தியர்களை விட அவர் தான் மும்முரமாகத் தன்னுடைய சொந்தக்காசைக் கொடுத்தாவது ஏதாவது செய்ய வேண்டுமாம். அவர் அங்கு போகும் இந்தியர்கÇ¢¼Óõ À½õ §¸ð¸¢ýÈ¡÷, ஆனால் அந்தக் காசைச் சேர்த்து தன்னுடைய பெயரில் இந்தியாவில் உதவி செய்வாராம். இந்தியர்கள் எப்படியான கில்லாடிகள், ஒருவரைத் தவிர யாரும் காசு தருவத¡¸ô பேசவில்லை.

அது இருக்கட்டும், நான் கேட்க வந்ததென்னவென்றால், ஈழத்தில், ஈழத்தமிழர்கள், இடம் பெயர்ந்த அகதி முகாம்களில் அல்லலுறுகிýறார்கள், சிங்கள அரசு வெளிநாட்டுப் பண உதவியைக் கூடப் பகிர்ந்து கொள்ள மறுக்கிýÈÐ. ¬Æ¢ô§ÀèÄ¡ø பெற்றோரை இழந்த ஆயிரக்கணக்கான குழந்தைகளைப் பராமரிக்கும் பாரிய வேலையைப் போராளிகள் ¾¡ý செய்கிýறார்கள், மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் ராணுவம் தடுக்கிýறது, சிங்கள அரசு மருந்துகளைò தமிழ்ப்பகுதிகளுக்கு அனுப்ப மறுக்கிýறது. போரினால் தமிழ்ப் பிரதேசத்திலுள்ள ÁÕòÐÅÁ¨É¸Ç¢ø மின்வசதியில்லை, மகப்பேறு மண்ணெö(மண்ணெண்ணெய்) விளக்கில் நடக்கிýறது. அகதி முகாம்களிலுள குழந்தைகளுக்குப் புத்தக வசதிகள் தேவை,
ராணுவம் பாடசா¨லகளைக் குண்டு போட்டழித்ததால் பல கிராமியப் பாடசாலைகளில் மரத்தடியில் ¾¡ý பாடம் நடக்கிýறது. இடம் பெயர்ந்த முகாம்களில் குழந்தைகள் தொற்று நோய்களால் பாதிக்கப் படுகிýறார்கள். இப்படியெல்லாமிருக்க µ÷ ஈழத்தமிழர் இந்தியாவில் சேவை செய்யத் துடிப்பது, அம்மா ஊரில பிச்சை எடுக்க மகன் மதுரையில் அன்னதானம் கொடுத்த கதை மாதிரி þøலையா?

<b>இதில் வேடிக்கை என்னவென்றால் யாழ் களத்துக்கும் வரும் இந்தியர்கள் கூட நீங்கள் ²ý ஈழத்தில் உங்கள் ¦¾¡ñ¨¼ò தொடங்கக் கூடாதென்று கேட்கவில்லை. Charity begins at Home என்பார்கள் ஆங்கிலத்தில். உங்கள் கருத்தைத் தெரிய மிகவும் ஆவலாக உள்ளேன்.</b>

Print this item