![]() |
|
தென்மராட்சியில் கிளைமோர் தாக்குதல் - இரு படையினர் பலி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தென்மராட்சியில் கிளைமோர் தாக்குதல் - இரு படையினர் பலி (/showthread.php?tid=1330) |
தென்மராட்சியில் கிளைமோர் தாக்குதல் - இரு படையினர் பலி - மேகநாதன் - 01-17-2006 <b>தென்மராட்சியில் கிளைமோர் தாக்குதல் - இரு படையினர் பலி </b> யாழ். தென்மராட்சியின் சரசாலைப் பகுதியில் இன்று பகல் 1.00 மணியளவில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் இரு படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒருவர் படுகாய மடைந்துள்ளார். உழவூர்தி ஒன்றில் பருத்தித்துறை - கனகம்புளியடி வீதியால் சென்ற படையினர் மீதே சரசாலைப் பகுதியில் வைத்து இத்தாக்குதல் நடத்ப்பட்டுள்ளது. இதனால் அந்த உழவூர்தியில் சென்ற மூன்று படையினரில் இருவர் கொல்லப்பட்டதுடன், மற்றயவர் படுகாயமடைந்து உயிராபத்தான நிலையில் பலாலி இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் <b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b> - மேகநாதன் - 01-17-2006 <b>தென்மராட்சியில் கிளைமோர்த் தாக்குதல்: 2 படையினர் பலி- ஒருவர் காயம் </b> யாழ். தென்மராட்சியில் சிறிலங்கா இராணுவ உழவு இயந்திரம் கிளைமோரில் சிக்கியதில் 2 படையினர் பலியாகினர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சாவகச்சேரியிலிருந்து 4 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள சரசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணியளவில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. சரசாலையில் கனகன்புளியடி - பருத்தித்துறை வீதியில் மூன்று படையினருடன் இராணுவ உழவு இயந்திரம் சென்று கொண்டிருந்தபோது கிளைமோர் கண்ணிவெடியில் அந்த வாகனம் சிக்கியது. <i>தென்மராட்சிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட இருவரது சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்ட நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</i> கோவிலார்கண்டி அம்மன் ஆலயம் அருகே வசித்து வந்த சிதம்பரி கணேசரட்ணம் (வயது 39), விஸ்வர் கிருஸ்ணர் (வயது 58) ஆகியோரது சடலங்கள் ஏ௯ வீதியை அண்மித்த கைதடி பாலத்தில் இன்று மீட்கப்பட்டன. சிறிலங்கா இராணுவத்தினரால் இருவரும் நேற்று மாலை கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததை தாங்கள் நேரடியாகப் பார்த்ததாக இது தொடர்பிலான விசாரணையின் போது அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். www.puthinam.com |