Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இராணுவப் படுகொலைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம
#1
<span style='color:green'><b>இராணுவப் படுகொலைகளைக் கண்டித்து தமிழ்க் கட்சிகள் ஆர்ப்பாட்டம்: சிறிலங்கா நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!! </b>

தமிழர் தாயகத்தில் தொடரும் சிறிலங்கா இராணுவப் படுகொலைகளைக் கண்டித்து சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் இன்று செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. இதனால் இன்றைய சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.


2006ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கியது.

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்து வருவதைக் கண்டித்து

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, மேலக மக்கள் முன்னணி ஆகியவற்றின் உறுப்பினர்கள் இணைந்து கண்டனக் குரல் எழுப்பினர்.

சபைக்குள் நுழைந்த நாடாளுமன்ற சபாநாயகர் லொகுபண்டாரவை முற்றுகையிட்டனர். இதனால் அரசாங்க உறுப்பினர்களின் இருக்கைய+டாக சபாநாயர் லொகு பண்டார தமது இருக்கைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், புங்குடுதீவு தர்சினி, திருகோணமலை 5 தமிழ் மாணவர்கள் படுகொலைகள் மற்றும் அப்பாவித் தமிழ் மக்களை சிறிலங்கா இராணுவத்தினரும் அவர்களோடு சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுவினரும் படுகொலை செய்து வருவதைக் கண்டித்து தமிழ் உறுப்பினர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தமிழ் மக்களின் மீதான படுகொலைகளைத் தடுத்த நிறுத்த வேண்டும் என்றும்

கொழும்பு, மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும் என்றும் தமிழ் உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.

அரசாங்க ஆதரவு உறுப்பினர்கள் சிலர் தமிழ் உறுப்பினர்களுக்கு எதிராக குரல் எழுப்பினர். ஜே.வி.பி. உறுப்பினர்கள் எதுவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதையடுத்து நாடாளுமன்றம் மீண்டும் 10.10 மணிக்கு கூடிய போதும் தமிழ் உறுப்பினர்கள் தொடர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதனால் சிறிலங்கா நாடாளுமன்றத்தின் சபை நடவடிக்கைகளை நாளை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் லொகு பண்டார அறிவித்தார்.</span>

<b><i>தகவல்மூலம்;- புதினம்</i></b>
"
"
Reply
#2
<b>தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்புக் காரணமாக நாளை காலை வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு. </b>

இன்று சிறீலங்கா பாராளுமன்றம் கூடிய போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற சபை மத்தியில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதையடுத்து பாராளுமன்ற நடவடிக்கைகள் 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டது.

இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமான பாராளுமன்றம் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை அடுத்து 10 நிமிடங்கள் ஒத்திவைத்த சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்கு பண்டார கட்சித் தலைவர்களுடன் கூட்டம் ஒன்றைக் கூட்டி கலந்துரையாடினார்.

மீண்டும் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடரவே பாராளுமன்றம் நாளை காலை ஒத்திவைக்க சபாநாயகர் தீர்மானித்து நாளை காலை வரை பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

<b><i>தகவல் மூலம்- பதிவு</i></b>
"
"
Reply
#3
<b>அரச பயங்கரவாதம் முடிவுக்கு வரும் வரையில் போராட்டம் தொடரும்: தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவிப்பு

[b]தமிழர் தாயகமான இலங்கையின் வடக்கு கிழக்கில் சிறிலங்கா அரசாங்கத்தின் அரச பயங்கரவாதச் செயல்கள் முடிவுக்கு வரும் வரையில் சிறிலங்கா நாடாளுமன்றுக்கு உள்ளேயும் வெளியேயும் எமது எதிர்ப்புப் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெறும் என்று இலங்கையின் அனைத்துத் தமிழ்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.</b>


சிறிலங்கா நாடாளுமன்றத்தை இன்று முடக்கிய பின்னர் கொழும்பு ஊடகவியலாளர்களை அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்தனர்.

இந்த சந்திப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தலைமை வகித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதித் தலைவர் ஆர். யோகராஜன், முன்னாள் அமைச்சர் முத்து சிவலிங்கம், மலையக மக்கள் முன்ன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் பெ. சந்திரசேகரன், மேலக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஆகியோரும் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.

ஊடகவியலாளர்களிடம் தமிழ்க் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியதாவது:

வடக்கு கிழக்கில் சிறிலங்கா அரச படைகளின் வன்முறைகள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளன. கடந்த சில மாதங்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் 1 முதல் சனவரி 12ஆம் நாள் வரை அரச படையினர் மற்றும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் குழுக்களினால் யாழ்ப்பாணத்தில் மட்டும் 31 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதர மாவட்டங்களில் மொத்தம் 42 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு கிழக்கில் சிறிலங்கா அரச படைகள் மேற்கொண்டு வரும் இந்த அரச பயங்கரவாதச் செயல்கள் முடிவுக்கு வரும் வரை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எமது போராட்டம் தொடரும்.

யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தபோதும் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களை காரணம் ஏதுமின்றி கைது செய்து துன்புறுத்துகிறது சிறிலங்கா இராணுவம். தமிழ் மக்கிளின் பல கடத்தல்களை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் குழுக்களின் துணையுடன் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டு வருகிறது.

கொழும்பிலும் இதர தென்னிலங்கைப் பகுதிகளிலும் இரவு நேரங்களில் அப்பாவி தமிழ் மக்கள் பெருந்தொகையில் கைது செய்யப்பட்டு காவல்நிலையங்களுக்கு விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்படுகிற அவலம் நீடிக்கிறது.

தமிழ் மக்களின் மீதான இந்த வன்முறைகளைத் தடுத்து நிறுத்த சிறிலங்கா அரச தலைவரும் அவரது அரசாங்கமும் தவறிவிவிட்டன. தனது அரசியல் பிழைப்புக்காக தமிழர்களுக்கு எதிரான ஜாதிக ஹெல உறுமய, ஜே.வி.பி. கட்சியினருடன் கூட்டு சேர்ந்திருக்கும் ஒரு அரச தலைவரிடம் தமிழ் மக்கள் நீதியை எதிர்பார்க்க முடியாது.

அமைதி முயற்சிகள் முடங்கிப் போய் நிற்கின்றன. சிறிலங்கா இராணுவத்தினது இந்த வன்முறைகளால் அமைதி முயற்சிகளின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்துவிட்டோம் என்றனர் அவர்கள்.

<b><i>தகவல்மூலம்;- புதினம்</i></b>
"
"
Reply
#4
<b>தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பு நடவடிக்கையால் இன்றும் பாராளுமன்றம் ஒத்திவைப்பு. </b>

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு தடையேற்ப்படுத்தியதால் இன்றும் நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

நேற்று ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் இன்று காலை 9.30 க்கு சபாநாயகர் டப்ளியூ. ஜே. எம். லொக்குபண்டார தலைமையில் கூடியது. நாடாளுமன்ற கூடிய வேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதாதைகளை ஏந்தியவாறு எதிர்ப்பு நடவடிக்ககைகளை ஆரம்பித்தனர். இதனால் செங்கோல் சபாநாயகரின் ஆசனத்திற்கு பின்புறம் உள்ள வழியாக சபைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதேவேளை நேற்றிரவு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஸ மற்றும் சபாநாயகர் டபிள்யு ஜே. எம் லொக்குபண்டார ஆகியோர் தமிழ்கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் சிறிது கால அவகாசம் வழங்கும்படி கோரியதாகவும் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன

<i><b>தகவல் மூலம்- பதிவு</b></i>
"
"
Reply
#5
<span style='font-size:25pt;line-height:100%'><b>தமிழ்க்கூட்டமைப்புடன் நேற்றிரவு மகிந்த அவசர சந்திப்பு

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்று புதன்கிழமை இரவு அவசரமாக அழைத்து கலந்துரையாடியுள்ளார்.


இச்சந்திப்பு இரவு 8.30 மணி தொடக்கம் 10 மணிவரை நடைபெற்றது.

<i>தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடத்தி வருகின்ற எதிர்ப்பு போராட்டம் தொடர்பாகவே கலந்துரையாடல் நடைபெற்றதாக கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கொழும்பு நாளேடொன்றுக்கு தெரிவித்தார்.</i>

இச்சந்திப்பு தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

வடக்கு - கிழக்கு தமிழர் தாயகத்தில் சிறிலங்கா இராணுவத்தினரும் ஆயுதக் குழுக்களும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளும் அடக்குமுறைகளுக்கும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுக்கும் தீர்வு காண்பதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுப்பதாக அரச தலைவர் உறுதியளித்தார்.

முக்கியமாக யாழில் இடம்பெற்றுவரும் படுகொலைகளை நிறுத்துவதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரரராஜசிங்கத்தின் படுகொலை, திருமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை உட்பட அனைத்து படுகொலைகளையும் விசாரித்து கண்டறிவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்வதற்கு ஏற்பாடு செய்வதாகவும் அரச தலைவர் உறுதியளித்ததாக இரா. சம்பந்தன் எம்.பி. கூறினார். ஆனால் போராட்டத்தை கைவிடுவதாக அரச தலைவருக்கு தாங்கள் உறுதியளிக்கவில்லையெனவும் தங்கள் கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்தாலோசித்த பின்னரே போராட்டத்தை கைவிடுவது தொடர்பாக தீர்மானிக்க முடியும் எனவும் அரச தலைவரிடம் கூறியதாக இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்ந்திரன், செ.கஜேந்திரன், நடராஜா ரவிராஜ், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரும் அரச தலைவருடன் அமைச்ர்களான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, நிமால் சிறிபால டி சில்வா ஆகியோரும் கலந்து கொண்டனர்</span>

[b]<i>தகவல்மூலம்;- புதினம்</i></b>
"
"
Reply
#6
<b>தொடர்புடைய செய்தி என்பதால்
(அடிக்கோடிட்டு காட்டி)
இதில் இணைத்துள்ளேன்....</b>
"
"
Reply
#7
<b>சபாநாயகர் ஆசனத்தில் சிவாஜி! செயலாளர் ஆசனத்தில் சுரேஸ்! </b>

சிறிலங்காவின் நாடாளுமன்றத்தை 2ம் நாளாக நேற்றும் தமிழ் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடக்கினர். சுமார் 30 நிமிடங்களே நாடாளுமன்ற செயற்பாடுகள் நடைபெற்றன. சபாநாயகர் டபிள்யு.ஜே.எம். லொக்கு பண்டார தலைமையில் நேற்று புதன்கிழமை காலை நாடாளுமன்றம் கூடியது. நாடாளுமன்றம் கூடியதையடுத்து தமிழ் மக்கள் மீதான படுகொலைகளைக் கண்டித்து அனைத்து தமிழ்க் கட்சி உறுப்பினர்களும் சபை மத்திக்குச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பதாதைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர். நாடாளுமன்றத்தில் நேற்று பல சட்டமூலங்கள் நிறைவேற ஏற்பாடாகியிருந்தது. சட்டமூலங்களை நிறைவேற்றும் போது சபாநாயகர், நாடாளுமன்ற செயலாளரின் இருக்கையில் அமர வேண்டியிருப்பதால் சபாநாயகர் தனது ஆசனத்திலிருந்து எழுந்து செயலாளரின் ஆசனத்திற்குச் செல்வதற்கு முயல்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சிவாஜிலிங்கம், சபாநாயகரின் ஆசனத்தில் சென்று அமர்ந்தார்.

அதேநேரம் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் ஓடிச் சென்று செயலாளரின் ஆசனத்தில் அமர்ந்தார்.

இதனால் நாடாளுமன்றச் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது சபாநாயகர் நாடாளுமன்றத்தை இன்று காலை 9.30 மணி வரை ஒத்திவைத்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் தங்கள் ஆசனங்களில் இருந்தே ஆதரவு தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியிலும் 4 சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

<b><i>தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு</i></b>
"
"
Reply
#8
<b>சபாநாயகர் ஆசனத்தில் சிவாஜி! செயலாளர் ஆசனத்தில் சுரேஸ்! </b>

சிறிலங்காவின் நாடாளுமன்றத்தை 2ம் நாளாக நேற்றும் தமிழ் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடக்கினர். சுமார் 30 நிமிடங்களே நாடாளுமன்ற செயற்பாடுகள் நடைபெற்றன. சபாநாயகர் டபிள்யு.ஜே.எம். லொக்கு பண்டார தலைமையில் நேற்று புதன்கிழமை காலை நாடாளுமன்றம் கூடியது. நாடாளுமன்றம் கூடியதையடுத்து தமிழ் மக்கள் மீதான படுகொலைகளைக் கண்டித்து அனைத்து தமிழ்க் கட்சி உறுப்பினர்களும் சபை மத்திக்குச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பதாதைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர். நாடாளுமன்றத்தில் நேற்று பல சட்டமூலங்கள் நிறைவேற ஏற்பாடாகியிருந்தது. சட்டமூலங்களை நிறைவேற்றும் போது சபாநாயகர், நாடாளுமன்ற செயலாளரின் இருக்கையில் அமர வேண்டியிருப்பதால் சபாநாயகர் தனது ஆசனத்திலிருந்து எழுந்து செயலாளரின் ஆசனத்திற்குச் செல்வதற்கு முயல்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சிவாஜிலிங்கம், சபாநாயகரின் ஆசனத்தில் சென்று அமர்ந்தார்.

அதேநேரம் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் ஓடிச் சென்று செயலாளரின் ஆசனத்தில் அமர்ந்தார்.

இதனால் நாடாளுமன்றச் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது சபாநாயகர் நாடாளுமன்றத்தை இன்று காலை 9.30 மணி வரை ஒத்திவைத்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் தங்கள் ஆசனங்களில் இருந்தே ஆதரவு தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியிலும் 4 சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

<b><i>தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு</i></b>
"
"
Reply
#9
<b><span style='font-size:25pt;line-height:100%'>போராட்டத்தை கைவிடுங்கள் கூட்டமைப்பிடம் மகிந்த கோரிக்கை </b></span>


தமிழ் தேசிய கூட்மைப்பு எம்.பிக்களை அழைத்தது நேற்றுமாலை சுமார் ஒன்றரைமணி நேரம் அவர்களுடன் பேச்சு நடத்திய அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ச, அவர்கள் மேற்கொள்ளும் நாடாளுமன்ற போராட்டத்தைக் கைவிடுமாறு அவர்களிடம் கோரினார். ஆனால் அதனை கைவிடுவதற்கான இணக்கத்தைத் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கவில்லை.
நேற்றிரவு 8மணி முதல் இந்தப் பேச்சுக்கள் அலரிமாளிகையில் இடம் பெற்றன.

தமிழ்தேசியக் கூட்மைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநான், சிவாஜிலிங்கம், என்.ரவிராஜ் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், திருமதி பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். மஹிந்த ராஜபக்சவுடன் அமைச்சர்களான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, மைத்ரிபால சிறிசேன ஆகியோர் உடனிருந்தனர். நாடாளுமன்றக் குழப்பத்இதை கைவிட்டு இன்று அவசரகாலச் சட்டநீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தின் போது தங்களின் பிரச்சனைககளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விலாவாரியாகக் குறிப்பிட்டால், அவை தொடர்பான உரிய நடவடிக்கைகளைத் தாம் எடுப்பார் என இச் சந்திப்பின்போது மகிந்த தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த தமிழ் தேசிய கூட்மைப்பு உறுப்பினர்கள், தமிழர்; தாயகத்தில் இராணுவத்தினரும் ஏனைய படையினரும் புரியும் அடாவடித்தனங்கள், அட்டகாசங்களை வரிசைப்படுத்தி மகிந்தவிற்கு எடுத்துரைத்தனர். படையினரின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையினால் இரவு ஆறுமணிக்கு பின்னர் யாழ். குடாநாட்டு மக்கள் வீதிக்கு இறங்குவதில்லை. ஆக இராணுவ வாகனங்களும் சிப்பாய்களின் நடமாட்டமுமே வீதியில்; உள்ளன. அவற்றுக்கு மத்தியில் கொலை, கொள்ளை, திருட்டுக்கள் நடாத்துவோர் தமது ஆயுதங்களுடன் தப்பிச்செல்கின்றார்கள் என்றால் இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று கூட்டமைப்பினர் கேள்வி எழுப்பினர்.

மன்னாரில் ஒரு குடும்பத்தைக் கொலை செய்து படையினர் எரித்ததால் அந்தக் கிராமத்துக்கே திரும்பிப்போக அந்த மக்கள் அஞ்சுகின்றனர். உங்கள் படைகளின் செயல்களால் மன்னார் மக்கள் அஞ்சி, மீண்டும் தமிழகத்தில் அதிகளகாகத் தஞ்சம் புகத் தொடங்கிவிட்டனர். உங்கள் கடற்படையினரின் தொல்லையால் குடா நாட்டு மீனவர்கள் தமது படகுகள் சகிதம் முல்லைத்தீவுக்கு இடம் பெயர்கின்றனர். நேற்று காரை நகரில் அப்பாவி மீனவர்களின் கால், கைகள் எப்படி கடற்படையினரால் அடித்து முறிக்கப்பட்டுள்ளன என்பதை யாழ். மருத்துவமனையின் மருத்துவர்களிடம் தொடர்பு கொண்டு கேளுங்கள் -என்று மகிந்தவிடம் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

படையினர் அத்து மீறிய அட்டகாசங்களைத் தடுத்து நிறுத்தாவிட்டால் இந்த மண்ணில் அமைதி சாதியமேயில்லை என்று குறிப்பிட்ட கூட்டமைப்பினர் இந்த மோசமானநிலையை சர்வதேச சமூகத்துக்கும் உங்கள் கவனத்துக்கும் கொண்டு வருவதற்காகவே நாடாளுமன்றை இயங்கவிடாமல் நாம் முடக்கம் செய்யும் போராட்டத்தை ஆரம்பித்தோம். அது பற்றிய முடிவை எமது நாளுமன்றக் குழுவே எடுத்து எனவே அதைக் கைவிடு வதனாலும் அதே நாடாளுமன்றக் குழுவே முடிவெடுக்கவேண்டும்.

ஆகையால் நாம் இப்போது தங்களுக்கு உறுதியான பதில் ஏதும் தரமுடியாது. ஆனால் எமது இந்த முறைப்பாட்டை உரிய முறையில் கவனத்தில் கொண்டு அரச படைகளைக் கட்டுப்படுத்துங்கள் அதை நீங்கள் செயலில் காட்டுவீர்களேயானால் நாடாளுமன்றத்தை முடக்கம் செய்யும் எமது போராட்டத்தைக் கைவிடுவது குறித்து நாம் சாதமாகப் பரீசிலிக்கலாம் என்றும் கூட்டமைப்பினர் மகிந்தவிடம் உறுதியாகத் தெரிவித்தனர்.

எனத் தெரியவருகிறது யாழ்குடாநாட்டிலும் ஏனைய இடங்களிலும் மக்கள் இருக்கும் குடியிருப்புப் பிரதேசங்கள் எல்லாம் நீங்கள் படைகளைப் பரப்பியுள்ளீர்கள். இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேவர அஞ்சுகின்றனர். முதலில் அவர்களை முகாமுக்குள் கொண்டு செல்ல உத்தரவிடுங்கள் என்றும் கூட்டமைப்பினர் கேட்டனர். அதற்கு படையினரை முகாம்களுக்குள் கொண்டு சென்றால் கிரனேட் தாக்குத்கள் குறையுமா என்ற பதில் கேள்வி ஒன்றை மகிந்த எழுப்பினாராம். படையினரைப் பரப்பி வைத்திருந்தால் மட்டும் கிரனேட் தாக்குதல் குறைந்தது விடுமா என்று அதற்குப் பதிலடியாகக் கேள்வி கேட்டனர் தமிழ்க் கூட்டமைப்பினர் 'அப்படித்தான் இராணுவம் நினைக்கின்றது" என மகிந்த பதிலளித்துள்ளார். மக்களோடு பழகத் தெரியாத பேசத் தெரியாத நல்லுறவைப் பேண முடியாத இராணுவத்தின் மூலம் தமிழ் மக்களின் மனதை அரசினால் வெல்ல முடியாது என்பதை மகிந்தவின் கோரிக்கை குறித்துத் தாங்கள் கூடி ஆராய்வார்கள் என்று பதிலளித்து விட்டு அலரிமாளிகையிலிருந்து புறப்பட்டனர் கூட்டமைப்பினர்

<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
"
"
Reply
#10
<b>மூன்றாவது நாளாகவும் நாடாளுமன்றில் தமிழ்க்கட்சிகளின் எதிர்ப்பு

இன்று வியாழக்கிழமை மூன்றாவது நாளாகவும் நாடாளுமன்றத்தில் தமிழ்க் கட்சிகளின் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக நாடாளுமன்றத்தில் பெரும் கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டதனைத் தொடர்ந்து சபாநாயகர் டபிள்.ஜே.எம். லொக்குபண்டா நாடாளுமன்ற நடவடிக்கைகளை எதிர்வரும் மாதம் 1ஆம் நாள்வரை ஒத்திவைத்துள்ளார்.
மூன்றாவது நாள் அமர்வுகள் ஆரம்பமாகியபோதே நாடாளுமன்றத்துக்குள் தமிழ்கட்சியினர் தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். இதன்போது, நாடாளுமன்றத்தின் பின்புறக்கதவு வழியாகவே, செங்கோலை எடுத்து வருவதற்கும், சபாநாயகர் வருவதுக்கும் ஏற்றதாக இருந்த படியால் அதன் வழியாகவே சபாநாயகர் நடாளுமன்றத்தில் உள்நுழைந்தார்.

இன்று மூன்றாவது நாளாகவும் தமிழ்க்கட்சிகளின் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக நடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிப்படைந்ததினையடுத்து சபாநாயகர் அமர்வுகள் பெப்ரவரி மாதம் முதலாம் நாள் வரை ஒத்திவைத்துள்ளார்.

<i>[b]தகவல் மூலம்- சங்கதி</b></i>
"
"
Reply
#11
<b>[size=18]வன்முறைகளை கட்டுப்படுத்த தவறினால் போராட்டம் தொடரும்:

வடக்கு - கிழக்கில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளை கட்டுப்படுத்த காத்திரமான நடவடிக்கை எடுக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை உட்பட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டமை குறித்து உரிய விசாரணைகளை நடத்துமாறும் கோரி நான்கு தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து சிறிலங்கா அரச தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.


வன்முறைகளை கட்டுப்படுத்தவும், படுகொலைகள் குறித்து உரிய விசாரணை நடத்தவும் தவறும் பட்த்தில் போராட்டத்தினை தொடர வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமான், மலையக மக்கள் முன்னணி தலைவர் பெ.சந்திரசேகரன், மேலக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேன் ஆகியோர் கையொப்பமிட்டு அரச தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனார்.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த புதன்கிழமை (18.01.06) எமது பிரதிநிதிகளை உங்கள் அமைச்ர்கள் சிலர் கிதம் அழைத்து தற்போதைய நிலைவரம் குறித்து பேசினீர்கள். எமது நிலை குறித்து நீங்கள் எம்மைச் சந்திப்பதற்கு கவனம் செலுத்தியதையிட்டு நாம் மகிழ்ச்சி அடையும் அதேவேளை, உங்கள் முன் சில விடயங்களை முன்வைத்தோம்.

அவையாவன:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் ஆகியோர் நீங்கள் பிரதம மந்திரியாக இருந்த காலப் பகுதியில் கொலை செய்யப்பட்டமை.

பிரபல ஊடகவியலாளர் தர்மரட்ணம் சிவராம் நீங்கள் பிரதம மந்திரியாக இருந்த காலப் பகுதியில் மற்றும் இளையதம்பி தர்சினி எனும் தமிழ்ப் பெண் யாழ்ப்பாணத்தில் புங்குடுதீவு பிரதேத்தில் கடந்த வருடம் டிசம்பர் 16 ஆம் திகதி பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை. இது நீங்கள் அரச தலைவராக பொறுப்பேற்ற பின்னர் நடந்த சம்பவம்.

இந்தக் கொடூரமான வன்முறைச சம்பவங்கள் மீது அரசாங்கம் நீதியான விசாரணையை முன்னெடுக்கத் தவறியதோடு குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்தி தண்டிப்பதற்கான எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை என்பதும் மிகவும் அப்பட்டமான உண்மை.

அத்தோடு இவை மட்டுமல்லாது அண்மையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் நத்தார் தினத்தில் கலந்து கொள்ளும் வேளையில் தேவாலயத்திற்குள் வைத்துக் கொலை செய்யப்பட்டமை.

இக்கொலையானது அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் நடைபெற்றுள்ளதோடு அரசாங்கப் படைத்தரப்பினர் சிலரின் துணையோடே நடைபெற்றுள்ளது. இதுவரைக்கும் எந்த ஒருவரும் கைது செய்யப்படவுமில்லை விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுத்து இதுவரை எவரும் சட்டத்தின் முன் கொண்டுவரப்படவுமில்லை.

திருகோணமலையில் மாணவர்கள் ஐவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டமை. இது அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் இடம்பெற்ற உச்கட்ட அராஜகமாகும். இந்த இளைஞர்கள் துப்பாக்கிச் சூட்டினால் கொல்லப்பட்டுள்ளதாக மரண விசாரணைகள் புலப்படுத்தியுள்ளன. இக்கொலைகள் இடம்பெற்று இரு வாரங்கள் ஆகியும் விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை.

கடந்த திங்கட்கிழமை (16.01.06) அரச கட்டுப்பாட்டுப் பிரதேமான யாழ். மானிப்பாயில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் இராணுவத்தினராலும் அவர்களோடு இணைந்து செற்படும் துப்பாக்கிக் குழுக்களாலும் சுடப்பட்டு மூவர் மரணமானதும் இருவர் படுகாயமடைந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். தமிழ் குடிமக்கள் மீதான கொடூரமான தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.

மன்னாரில் கடந்த வருடம் டிம்பர் 23 ஆம் திகதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தகப்பன், தாய், மகள், மகன் என நான்கு பேர் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதோடு எரிக்கப்பட்டும் உள்ளனர்.

இராணுவத்தினரால் தமிழ் குடிமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூரமான கொலைச் சம்பவங்களில் இதுவும் ஒன்று.

தமிழ் மக்கள் மீதான கொலைகளும் வன்முறைகளும் மற்றும் குறிப்பாக கொழும்பில் இரவு நேர தேடுதல் நடவடிக்கைகளின் போது தமிழ்ப் பெண்களை இரவு உடுப்புக்களுடன் காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதும், புகைப்படங்கள் எடுப்பதும் போன்ற பற்பல அராஜகமான அடிப்படை மனித உரிமை மீறல்களும் பாரியளவில் அதிகரித்து வருகின்றன.

இவை அனைத்திற்கும் நீங்கள் கடந்த புதன்கிழமை எமக்கு உறுதியளித்தபடி தகுந்த விசாரணைகளும் தகுந்த நடவடிக்கைகளும் எடுப்பீர்கள் என நாம் எதிர்பார்க்கிறோம்.

யாழ். மாவட்டத்தில் 42 தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். வடக்கு - கிழக்கில் 50 பேர் காணாமல் போனோர் பட்டியலில் உள்ளனர். அண்மைக் காலத்தில் நடந்துள்ள நிலைமை இது.

வடக்கு - கிழக்கு வாழ் தமிழ் குடிமக்கள் மீது நிலவும் பயங்கர சூழ்நிலை அகற்றப்பட்டு அவர்களும் இந்நாட்டு மக்களாக சுதந்திரமாக நடமாடும் சூழ்நிலை ஏற்படுத்தப்படவேண்டும் என்பதை நாம் மிகக் கடுமையாக வலியுறுத்துகிறோம் என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<i>[b]தகவல்மூலம்;- புதினம்</b></i>
"
"
Reply
#12
<b>சிறிலங்கா வரலாற்றிலேயே முதல் முறையாக மூன்று நாட்கள் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு </b>
சிறிலங்கா வரலாற்றிலேயே முதல் முறையாக மூன்று நாட்கள் நாடாளுமன்றம் கடந்த 17, 18, 19 ஆகிய நாட்களில்தான் ஒத்திவைக்கப்பட்டது என்று நாடாளுமன்ற பொதுச் செயலாளர் பிரியாணி விஜேசேகர தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் பிரியாணி விஜேசேகர கூறியதாவது:

அண்மையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையைக் கண்டித்தும் வடக்கு - கிழக்கில் இராணுவ வன்முறைகளைக் கண்டித்தும் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இதற்கு முன்னரும் நாடாளுமன்றத்தில் பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற போதிலும் பிரச்சனைகள் சில மணிநேரங்களிலோ ஒருநாளிலோ தீர்க்கப்பட்டுவிடும். ஆனால் இம்முறை மூன்று நாட்கள் நாடாளுமன்றம் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நிலையில் நாடாளுமன்றத்தை நிர்வகிக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு இருந்தாலும் நாடாளுமன்றம் முழுமையும் ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும்.

அதாவது சபாநாயகர் முன்வைக்கும் தீர்மானத்தை ஆளும் கட்சி அமைச்சர் ஒருவரோ நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரோ வழிமொழிந்து அதன் மீது வாக்கெடுப்பை நடத்தி குழப்பங்களை ஏற்படுத்துபவர்களை அவையை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றார் அவர்

<b><i>தகவல் மூலம்- புதினம் .கொம்</i></b>
"
"
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)