Yarl Forum
ஐரோப்பிய நாடு ஒன்றில் பேச்சுவார்த்தை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: ஐரோப்பிய நாடு ஒன்றில் பேச்சுவார்த்தை (/showthread.php?tid=1331)



ஐரோப்பிய நாடு ஒன்றில் பேச்சுவார்த்தை - நர்மதா - 01-17-2006

ஐரோப்பிய நாடு ஒன்றில் பேச்சுவார்த்தைகளை விரைவில் தொடங்க வேண்டும் எனச் சிரேஷ்டஅமைச்சர்கள் சிலர் சனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியிருப்பதாக வெளியாகும் தகவல்கள் ஊர்ஜிதமானதானால் வரவேற்கத்தக்கவையே. ஏனெனில் நாட்டில் சமாதான முயற்சிகள் முன்னேற்றம் காண்பதற்கும் அமைதிச் சூழ்நிலை தோற்றுவதற்கும், இது சிலவேளை உதவக்கூடும்.

ஆனால் இச்சிரேஷ்ட அமைச்சர்களின் ஆலோசனைகளை சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிறைவேற்றத்தக்கதானதொரு சூழ்நிலை உள்ளதா? என்பது கேள்விக்குரியதொன்றே. ஏனெனில் அவர் உருவாக்கியுள்ள அரசியல் களம் அதற்குச் சாதகமானதாக இருப்பதாகத் தெரியவில்லை. அதாவது சமாதான முயற்சிகளுக்கு மாறானதொரு கூட்டையே சனாதிபதி ஏற்படுத்தியுள்ளார்.

ஒரு புறத்தில் அவர் சனாதிபதியாவதற்கு உதவிய ஜே.வி.பியினரும், ஜாதிக ஹெல உறுமயவினரும் ஆசியாவிற்கு வெளியில் பேச்சுவார்த்தை நடாத்துவதற்குத் தயாராக இருப்பதாக இல்லை. இதற்குத் தொடர்ந்தும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் அவர்களுக்கு அண்மையில் சிறிலங்காவிற்கான அமெரிக்கத் து}துவரின் பேச்சும் அமெரிக்க அரசின் சில நகர்வுகளும் சிங்களப் பேரினவாத சக்திகளுக்கு ஆசியாவில் மட்டுமல்ல உலகில் எங்குமே பேசுவது தேவையற்றது என்ற உணர்வை மேலும் வலுப்படுத்தியிருக்கும்.

அதாவது அமெரிக்கத்து}துவர் சிறிலங்கா அரசிற்கு ஆயுதங்களும் பயிற்சியும் வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம். விடுதலைப் புலிகள் பலமான சிறிலங்காப் படையினரைச் சந்திக்க வேண்டிவரும் எனக் கூறியுள்ளமை இப்பேரினவாத சக்திகளுக்குப் பெரிதும் நம்பிக்கை அளிக்கும் ஒன்றாகியுள்ளது.

அமெரிக்காவின் இவ் அறிவிப்பை ஜே.வி.பி வெளிப்படையாக ஆதரிக்காது விட்டாலும்- அதாவது அமெரிக்காவுடனான இராணுவ உறவு அவர்களின் சித்தாந்தத்திற்கு மாறானது என்ற hPதியில்- அது மனமகிழ்வு கொண்டுள்ள அதேவேளை ஜாதிக ஹெல உறுமய இதனை வெளிப்படையாக வரவேற்றுள்ளதுடன் அமெரிக்காவிடம் இருந்து மேலும் உதவிகள் பெற்றுக்கொள்ளப்படவேண்டும் எனக் கோரும் நிலைக்கு வந்துள்ளது.

இந்நிலையில் ஜே.வி.பியும், ஜாதிக ஹெல உறுமயவும் பேச்சுவார்த்தை இனி அவசியமற்றது என்ற நிலைப்பாட்டிற்கு முற்றிலுமாகவே வரக்கூடும். இந்நிலையில் உள்ளுராட்சித் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் என அடுத்தடுத்துத் தேர்தல்களை எதிர்நோக்கியிருக்கும் சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பேச்சுவார்த்தை மேசைக்கு வருவதென்பது சிரமமானதே.

இது ஒருபுறம் இருக்க மகிந்த ராஜபக்ஷ பதவி ஏற்றதன் பின்னர் தனது ஆட்சியை முன்னெடுப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள், ஆலோசகர்கள் என்பவர்களும் மகிந்த ராஜபக்ஷ சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வழிவிடுவார்களா? என்பது கேள்விக்குரியதொன்றே ஆகும்.

எடுத்துக்காட்டாக பாதுகாப்பு மற்றும் பொலிஸ் திணைக்கள ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் கொட்டகதெனிய இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகா போன்றவர்களைச் சுட்டிக்காட்ட முடியும். இவர்கள் தமது சேவைக்காலத்தில் என்றுமே இனப்பிரச்சினைக்கு அரசியற் தீர்வு என்பதை ஏற்றுக்கொண்டவர்கள் இல்லை. இனப்பிரச்சினை தொடர்பான நிலைப்பாட்டில் நெருப்பெடுத்துக் கொடுக்கும் மந்திரிகளாகவே இருந்துள்ளனர்.

இந்நிலையில் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதென்பதை அவர்கள் அனுமதிப்பார்கள் என்றில்லை. இதனால், ஏதோ ஒருவகையில் இவர்கள் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டைகளைப்போட முடியும். குறிப்பாக இயல்பு வாழ்க்கைக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் - அதாவது படுகொலைகள், கைதுகள், சித்திர வதைகள் என்பதன் மூலம் இத்தகையதொரு நிலையைத் தோற்றுவிக்க முடியும். இத்தகைய செயல்களை அவர்கள் ஆரம்பித்து விட்டதாகவே தகவல்கள் ஊர்ஜிதம் செய்கின்றன.

இந்த வகையில் அரசியல் தளத்தில் ஜே.வி.பியும், ஜாதிக ஹெல உறுமய போன்ற பேரினவாதக் கட்சிகளும், மற்றொரு புறத்தில் தெட்டத்தெளிவாக சரத் பொன்சேகா போன்றவர்கள் மக்கள் மத்தியில் இயல்பு வாழ்க்கையைச் சீர்குலைக்கும் வகையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் இனப்பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு என்பதை எட்டாததொரு நிலைக்குக்கொண்டு சென்றுவிடக்கூடும்.

ஆகையினால் மகிந்த ராஜபக்ஷ இன்றைய சூழ்நிலையில் தான் விரும்பினாலும் கூட ஐரோப்பியாவில் மட்டுமல்ல ஆசியாவில் கூடப் பேச்சுவார்த்தை நடத்தக் கூடியதொரு சூழ்நிலையில் இருக்கின்றாரா? என்பது சந்தேகமே. அத்தோடு பல தேர்தல்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் அவர்கூடப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளாரா? என்பதும் கேள்விக்குரியதே.

ஏனெனில் மகிந்த ராஜபக்ஷவும் தனது 35 வருட அரசியல் வாழ்வில் என்றுமே சிங்களப் பேரினவாதத்தை ஆதரிப்பவராகவும், அதற்குத் தலைமை கொடுக்க முற்பட்டவராகவுமே இருந்துள்ளார். இந்நிலையில் தற்பொழுதுமட்டும் அவர் மனம் மாறிவிடுவார்என எவ்வாறு எதிர்பார்க்கமுடியும்?

நன்றி: ஈழநாதம்


- மேகநாதன் - 01-17-2006

<b>நேர்மையான அரசை அச்சுறுத்துவது புலிகளுக்கு நல்லதல்ல: மங்கள சமரவீர </b>

ரணில் விக்கிரமசிங்க காலத்தில் விடுதலைப் புலிகள் ஏமாற்றப்பட்டதற்காக, மகிந்த ராஜபக்சவும் அதே பாணியில் ஏமாற்றுகிறார் என்று விடுதலைப் புலிகள் கருதுவது தவறு என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.


அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, இன்னுமொரு ரணில் விக்கிரமசிங்க அல்ல. மிகவும் நேர்மையுடனும் பொறுமையுடனும் செயற்படும் தற்போதைய அரசை, திட்டமிட்டே வன்முறைக்குள் தள்ளவைக்கும் விடுதலைப் புலிகளின் செயற்பாடு கண்டிக்கத்தக்கது. அவர்களின் சதிவலைக்குள் சிறிலங்கா அரசு ஒருநாளும் வீழ்ந்துவிடாது என்று மங்கள சமரவீர தெரிவித்தார்.

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் பேச்சுவார்த்தை என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கைக்கு, சிறிலங்கா அரசு ஒருபோதும் இணங்கப்போவதில்லை,

<b><i>தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b>


- மேகநாதன் - 01-17-2006

<b>பேச்சுக்களை ஆரம்பிக்க உலக வங்கி வலியுறுத்து! </b>

வன்முறைகளை உடனடியாக நிறுத்தி பேச்சுக்களை ஆரம்பிக்கும்படி கொழும்புக்கான உலக வங்கி இயக்குநர் பீற்றர் ஹெரோல்ட் சிறிலங்கா அரசையும் விடுதலைப் புலிகளையும் கோரியுள்ளார்.


மோசமடைந்து செல்லும் தற்போதைய நிலைமையில் எட்டப்படாத உடனடி முன்னேற்றம் நாட்டின் அபிவிருத்திப் பணிகளில் விழுந்த ஆழமான வடுவாகவே அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏனைய பன்னாட்டு அமைப்புக்கள் போலவே தானும் இருதரப்பையும் வன்முறைகளை கைவிட்டுவிட்டு கூடிய விரைவில் பேச்சுக்களை ஆரம்பிக்கும்படி வலியுறுத்துவதாக கூறியுள்ள உலக வங்கி இயக்குநர், தனது எதிர்பார்ப்பு தொடர்பில் சாதகமான திருப்புமுனைக்காக நோர்வேயின் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மின் வருகையில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கான எமது அமைப்பின் உதவி, கடந்த 20 ஆண்டுகளாகவே அமைதி நிலையின் முன்னேற்றத்தின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டு வருகிறது.

ஆகவே, அரசும் விடுதலைப் புலிகளும் இயலுமான விரைவில் பேச்சுக்களை ஆரம்பிக்க முன்வரவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

<b><i>தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b>


- மேகநாதன் - 01-17-2006

<b><span style='color:red'>வன்முறைகள் குறித்து கோபி அனான் கவலை:

சிறிலங்கா அரசையும் விடுதலைப் புலிகளையும் உடனடியாக நேரடிப் பேச்சுக்களை ஆரம்பிக்கும்படி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் கோபி அனான் வலியுறுத்தியுள்ளார்.


சிறிலங்காவில் அதிகரித்து வரும் வன்முறைகள் மற்றும் யுத்த அச்சம் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் -

படுமோசமான நிலைமையை அடைந்துள்ள சிறிலங்காவின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக தான் மிகுந்த கவலையடைவதாகவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்காணிப்புக் குழு அலுவலகம் மீதே தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறித்து தான் வேதனையடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

"நாட்டு மக்களுக்கு ஒரு புதிய சகாப்தத்துக்கான நம்பிக்கையையும் கடந்த நான்கு வருடகாலமாக கணிசமான பலா பலன்களையும் அளித்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. மீண்டும் தொடங்கியுள்ள இந்த வன்முறைகள் திரும்பவும் பொதுமக்களுக்கு கடுமையாக அனுபவங்களை கொடுக்க ஆரம்பித்துள்ளது.

"மீண்டும் யுத்தத்துக்கு திரும்புவது இரு தரப்பினருக்கும் இடையிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை.

"ஆகவே யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை உறுதி செய்து,அதன்மூலம் மனித உரிமைகளுக்கு பாதுகாப்பும் மரியாதையும் அளித்து நேரடி சமாதானப்பேச்சுக்களை உடனடியாக ஆரம்பிக்கவேண்டும்." - என்று அவர் கோரியுள்ளார்.</span>

[b]<i>தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b>


- Vasampu - 01-17-2006

<b>உண்மையில் அரசும் விடுதலைப்புலிகளும் தமது பிடிவாத போக்குகளை கைவிட்டு இதயசுத்தியோடு பேச்சுவார்த்தைகளுக்கு முன் வர வேண்டும். அப்போது தான் இப்போதைய தேவையில்லாத உயிரிழப்புகளைத் தடுக்க முடியும்.</b>


- sanjee05 - 01-17-2006

நாங்கள் என்ன மாட்டம் என்றா சொன்னம்


- மேகநாதன் - 01-17-2006

<span style='color:darkred'><b>பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது முற்று முழுதாகவே இருதரப்பையும் பொறுத்தது: </b>

இலங்கைக்கு எரிக் சொல்ஹெய்ம் வருகை தருவது முக்கியமானதாக இருந்தாலும் பிரச்சினைகளுக்கான தீர்வு காண்பது முற்று முழுதாகவே இருதரப்பையும் பொறுத்தது என்று நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் தெரிவித்துள்ளார்.


கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியதாவது:

எரிக் சொல்கெய்மின் பயணத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதே இன்றைய எமது பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

சுமார் ஏழு மாதங்களுக்குப் பின்னர் அவர் மேற்கொள்ளவுள்ள பயணம் முக்கியமானதாகும். நோர்வே அமைச்சராக பதவியேற்ற பின்னர் அவர் இலங்கைக்கு மேற்கொள்கிற முதலாவது பயணம் இது.

அவர் இலங்கையின் அமைதி முயற்சிகளில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். எதிர்காலத்திலும் பணியாற்றுவார்.

கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் அரச படையினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எமது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

இச்சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும். தொடர்ந்தும் இப்படியே நடைபெற்றுக் கொண்டிருக்க அனுமதிக்கக்கூடாது.

சிறிலங்கா அரசம் விடுதலைப் புலிகளும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கடைப்பிடிக்கவே நாம் கோருகிறோம். ஒப்பந்தத்தின் படி நடந்துகொண்டு அதனை செம்மையாக கடைப்பிடிக்கும்படி நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்.

கடந்த 13 ஆம் திகதி மட்டக்களப்பு கண்ணகாணிப்பு குழு அலுவலகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் பாரதூரமானது. அப்படியான சம்பவம் மீண்டும் நடைபெறக்கூடாது.

அமைதி முயற்சிகளை முன்னெடுத்து செல்வதற்காக சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் உதவி செய்வதற்காகவே நாம் இங்கு அனுசரணையாளர்களாக அழைக்கப்பட்டுள்ளோம்.

ஆகவே ஏதாவது நடைபெற வேண்டுமானால் அது இரண்டு தரப்பையும் பொறுத்ததே தவிர எங்களை சார்ந்ததல்ல.

அமைதி முயற்சிகளை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்று அவர்கள்தான் கூறவேண்டும். அதற்கு எவ்வாறு உதவி செய்வது என்று நாம் ஆராயலாம்.

<i>சொல்ஹெய்மின் பயணத்தைப் பொறுத்தவரை அவரது வருகையில் பாரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தத்தேவையில்லை. அவர் இங்கு வருவது இரண்டு தரப்பினருடனும் திறந்த மனதுடன் பேச்சு நடத்துவதற்காகத்தான்.</i>

அரசு தரப்பு கருத்தையோ அல்லது புலிகள் தரப்பு கருத்தையோ நான் கூறமுடியாது. தற்போதைய பிரச்சினையை புரிந்துகொண்டு அதனை எவ்வாறு தீர்ப்பது என்று சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் முன்மொழிவுகளை தந்தால் அவை தொடர்பில் எவ்வாறு உதவி செய்து அமைதி முயற்சிகளை முன்னெடுப்பது என்று சிந்திக்கலாமே தவிர, எவர் தரப்பின் பிரதிநிதியாகவும் நின்று நாங்கள் ஊகங்களை வெளியிடமுடியாது.

<i>சொல்ஹெய்மின் வருகை முக்கியமானது. ஆனால் பிரச்சினைகளுக்கான தீர்வு வழியை காண்பது முற்று முழுதாகவே இருதரப்பையும் பொறுத்தது.</i>

யதார்த்தத்தையும் புரிந்துகொள்ளுங்கள். அடுத்த வாரத்துடன் எதுவும் முடிந்துவிடப் போவதில்லை. ஆனால் இது இரு தரப்புக்கும் உரிய விடயங்களை எடுத்துக்கூறி அமைதி முயற்சிகளை முன்னெடுத்துச்செல்ல உதவ எமக்கு கிடைத்துள்ள நல்ல சந்தர்ப்பம் இது.

விடுதலைப் புலிகளுடன் சந்திப்புக்களை மேற்கொள்வதைப் போலவே அரச தரப்பினருடனும் நான் அடிக்கடி சந்திப்புக்களை மேற்கொள்வதுண்டு.

அந்த வகையில் அரச தரப்பினரையும் சந்தித்து பேசியுள்ளேன்.

நாம் மிகுந்த இக்கட்டான நிலைமையில் உள்ளோம். யுத்த நிறுத்த ஒப்பந்தம் பாரதூரமான நெருக்கடியில் உள்ளது. ஆனால் நாம் நம்பிக்கையை கைவிட்டுவிடக்கூடாது.

அமைதி முயற்சிகளை எவ்வாறு முன்னெடுத்துச்செல்வது? அதற்கு என்ன உதவி வேண்டும் என்று எம்மைக் கேட்டால் நாம் அதற்கு உதவ முடியுமா என்று நாம் யோசிக்கலாம்.

இதை நாம் அடுத்த வாரத்துக்கு பிறகு கூறலாம் என்றும் இல்லை. ஆனாலும் அடுத்த வார நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்தது என்றார் அவர்.

இன்றைய சந்திப்பு குறித்து கண்காணிப்புக் குழுத் தலைவர் ஹக்ரூப் ஹொக்லெண்ட் கூறியதாவது:

வடக்கு - கிழக்கில் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறைகள் தொடர்பில் இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. இந்த வன்முறைகளைத் தடுப்பது குறித்து விவாதித்தோம்.

விடுதலைப் புலிகளும் அரச தரப்பினரும் அவர்களது பகுதியில் மக்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்கள். மக்களின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை இருதரப்பினரும் மேற்கொள்ள வேண்டும் என்றார் ஹக்ரூப் ஹொக்லெண்ட்.</span>


<b><i>தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b>