Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழ நூலகம்
#1
யாழ் கள உறவுகளுக்கு
வணக்கம்

சிறிது காலம் முன்னே களத்தில் ஈழத்து நூல்களை இணையத்தில் அனைவரும் படிக்கும் வகையில் மின்வெளி நூலகம் ஒன்றை அமைக்கும் முயற்சி பற்றிக் குறிப்பிட்டு உதவி கேட்டிருந்தேன்.அந்த முயற்சி இப்போது கைகூடி வந்திருக்கிறது
www.noolaham.net

என்னும் முகவரியில் நீங்கள் அதனைப் பார்வையிடலாம்

எரித்தழிக்கப்பட்ட ஈழத்தமிழனின் சொத்து யாழ் நூலகத்தை நினைவுகூரும் வகையிலும் எங்களில் அரிய இலக்கியங்கள் தற்காலிகமாகவேனும் ஈழத்துக்கு வெளியே பாதுகாக்கப்படவேண்டியதன் தேவையை வலியுறுத்தியும் யாழ் நூலகத்தின் படம் நூலகத்தின் முகப்பிலே இடம்பெற்றிருக்கிறது


நூலகம் மூன்று பெரும் பிரிவுகளை உள்ளடக்கியது
1) ஈழத்து எழுத்தாஅர்களின் நூல்கள்(ஈழத்திலும் புலத்திலும் எழுதப்பட்டவை)
2) சஞ்சிகைகள்-இதுவரையும் வெளிவந்த வந்துகொண்டிருக்கும் சஞ்சிகைகள்
3) உதிரி ஆக்கங்கள்-கவிதை கட்டுரை விமர்சனம் என்று பல்வேறு பத்திரிகைகளிலும் வெளிவந்த உதிரி ஆக்கங்கள்

இதுதவிர விக்கிபீடியாவில் ஈழத்து இலக்கியக் கலைக்களஞ்சியம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது பல்வேறு தலைப்புகளின் கீழ் தகவல்கள் பகுத்துத் தொகுக்கப்படுகின்றன

http://noolaham.net/wiki/doku.php?id=%E0%A...%AE%AF%E0%AE%BE
இன்னொரு முயற்சியாக நண்பர் ஒருவர் தமிழ் நூல்களுக்கான தரவுத்தளம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.உலகின் அனைத்துப் பாகங்களிலும் வெளியான தமிழ் நூல்கள் பற்றிய விபரங்களை நீங்கள் அங்கே பெற்றுக்கொள்ளலாம்.முடிந்தவரை ஈழத்து நூல்கள் பற்றிய தகவல்களை திரட்டி அத்தளத்தில் சேகரிப்பதில் முயன்றுகொண்டிருக்கிறோம்

http://www.viruba.com/

இம்முயற்சிகளை நீங்களும் பார்வையிட்டு உங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதோடு அவற்றைப் பயன்படுத்தியும் இணைந்து செயற்பட்டும் உங்கள் ஆதரவைத் தெரிவிக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்

இவை திறந்த நிலையில் யார் வேண்டுமானாலும் பங்கு கொள்ளக் கூடிய குழு முயற்சிகள் ஆகவே எவ்வகையான விமர்சனமாக இருந்தாலும் மகிழ்வுடன் எதிர்நோக்குகிறோம்

தள வேலைகள் நடந்துகொண்டிருப்பதால் தளத்தின் வடிவமைப்பு ஒழுங்கமைக்கப்படவில்லை விரைவில் சீர் செய்யப்படும்

நூலகம் தன்னார்வ நண்பர்கள் சார்பில்
ஈழநாதன்
\" \"
Reply
#2
தகவலுக்கு நன்றி நண்ப.
முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்.
இடையில் நிறுத்திவிடாது தொடர்ந்தும் நூல்கள் பற்றிய
தரவுகளை வலையேற்றிக்கொண்டிருக்க வேண்டும்.

விருபா தளத்தின் வடிவமைப்பில் குழப்பம் உள்ளது.
அவற்றை சரிசெய்து கொள்ளுங்கள்.

மீண்டும், இந்த முயுற்சிகளை மேற்கொள்ளும் நண்பர்களுக்கு
எனது மனப்பூர்வமான நன்றிகள்.


Reply
#3
தகவலுக்கு நன்றிகள் ஈழவன். உங்கள் முயற்சி வெற்றி பெற்று அதன் இலக்கை அடைய வாழ்த்துக்கள்.
<b> .. .. !!</b>
Reply
#4
தகவலுக்கு நன்றி...... உங்கள் முயற்ச்சி நிறைவேற வாழ்த்துக்கள்....
Reply
#5
நல்ல செய்தி கொண்டு நந்த உங்களுக்கு சிறப்பு<b> நன்றிகள் ஈழவன்...</b>

நல்ல முயற்சி..தொடருங்கள்....
தெரிந்த அண்ணை ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் இதன் முகவரி குறிப்பிட்டு...

உங்கள் தகவல் மூலம் தான் முழுத் தகவலையும் அறிய முடிந்தது.....

காலமறிந்த காலத்திற்கான கால முயற்சி...

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்....
"
"
Reply
#6
இதோ இந்த மதுரைத் திட்டத்திலும் பல நூல்கள் மின்னூல் வடிவில் சேமிக்கப்பட்டுள்ளன..!

http://tamil.net/projectmadurai/

மதுரைத் திட்டம் இணையம் (இதில் எழுத்துருப் பிரச்சனை வரக்கூடும்)

உதாரணத்துக்கு அங்குள்ள ஒரு நூல்

http://www.tamil.net/projectmadurai/pub/pm...0065/pm0065.pdf

ஈழவன் உங்கள் முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
ஈழநாதன் அண்ணா நீங்களும் அநதக்குழாமில ஒருவரா?நான் நூலகத்தைப்பற்றி மயூரன் அண்ணா போட்ட பதிவை யாழில் இணையத்தள அறிமுகப்பகுதியில் போட்டிருந்தேன்.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
<b>முதலில் முயற்சிகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். ஈழத்து நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் அதேவேளை ஏனைய தமிழ் நூல்களுக்கும் இடம் கொடுப்பதும் நல்லது. இங்கு சென்னையிலுள்ள ஒரு தனியாரின் விலாசத்தையம் இணைக்கின்றேன். அவர்களிடம் அனுமதி பெற்று அவர்களின் நூல்களையும் இணைக்கலாம் என்று நினைக்கின்றேன். மேலும் நீங்கள் இப்போது ஒரு குழுவாகவா இயங்குகின்றீர்கள். உங்களைப்பற்றிய மேலதிக தகவல்களையும் அறிய விரும்புகின்றேன்.</b>

Arrow http://www.chennainetwork.com/index.html
Reply
#9
என்ன வசம்பு போட்டுத்தள்ளவா..? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=18]<b> ..
.</b>
Reply
#10
ஆமாங்க ஈழமகன் போட்டுத் தள்ளீட்டால் போச்சு. :wink: மின் நூல்களைத்தானே கேட்டீர்கள்?? :roll: அதனைப் போட்டால்த்தானே மற்றவர்களால் பார்க்க முடியும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#11
ம்.......... விளங்கினால் சரி... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=18]<b> ..
.</b>
Reply
#12
மேலே நான் இணைத்துள்ள http://www.chennainetwork.com/index.html தில் மின்னு}ல்களை பெற விரும்புவோர்களுக்கு உதவியாக அவர்கள் எனக்கு அனுப்பிய விபரங்களை இங்கு இணைக்கின்றேன்.

Thanks for your mail. We have published following CD's
====================================================
Works of Amarar Kalki - Rs.199
====================================================
(10 Novels and 75 short Stories in ONE CD)
Ponniyin Selvan, Sivakamiyin Sabatham,
Parthiban Kanavu, Alai Osai, Thiaga Boomi etc.

====================================================
Puthumai Piththan Short Stories - Rs.99
====================================================
(stories, novels, dramas, articles,
songs & letters all in ONE CD)

====================================================
Tamil Minnool Thoguppu-1 - Rs.199
====================================================
(100 tamil books including Thirukural, Tholkappium,
Ettuthogai, Pathupattau, Pathinen Keel Kanaukka,
Silapathikaram, Manimekalai, and Books of
Bharathiyar Bharathidasan &Avvaiyar,)
(only Songs - No Meaning - No Voice)

====================================================
Kambaramayanam - Rs.199
====================================================
(only Songs - No Meaning - No Voice)

To Order the CD send DD/Money Order/cheque in favour of
'CHENNAINETWORK.COM' payable at 'CHENNAI'

*** Outstation cheques will not be accepted. ***
======================================
If you have ICICI account You can also
transfer money through Internet to our Account.

A/c Name:g.chandrasekaran
a/c type: SB
branch: Anna Nagar, Chennai
A/c No: 602701519976
=======================================

Postage: Chennai Rs.10, India Rs.30, Other countries Rs.100 (for 2 CD's)

People Residing Outside India Can also send the Money in
Rupees/US Dollars/other Currencies of their country by CHEQUE
(Cheque Processing Fee Rs.150 extra)

Mail to
g.chandrasekaran, 4, thiruvalluvar street, Avvai Nagar,
Near Golden flats, Anna Nagar West Extn, Chennai - 600 050.

Phone: +91 9444086888, 044-26357564, 26253801
email: chandran@chennainetwork.com
http://www.chennainetwork.com

CD's will be despatched immediately on receipt of Payment.

Discounts: If you order more than 3 CD's you will get a 15% discount and more than 10 CD's 20%

With Best Regards
g.chandrasekaran
www.chennainetwork.com
<i><b> </b>


</i>
Reply
#13
அன்பின் வசம்பு

உங்கள் ஆர்வத்திற்கும் ஆதரவுக்கும் நன்றி

இந்தியாவில் வெளிவந்த வெளிவரும் நூல்களை மின்னூல்களாக்கி நூலகத்தில் இணைப்பது எங்களுடைய முதன்முதல் திட்டமாக இருந்தது அதனைச் செயற்படுத்துவதற்காக பல்வேறு தனிநபர்களுடனும் பதிப்பகங்களுடனும் தொடர்புகொண்டபோது ஏமாற்றம்தான் எஞ்சியது பலரும் இரண்டாவது மூன்றாவது பதிப்புகள் வெளியிடும் விருப்பத்தில் இருந்ததால் இணையத்தில் இலவசமாக வலையேற்றுவதை விரும்பவில்லை.

இன்னொரு காரணம் இந்திய நூல்கள் பல்லாயிரக்கணக்கானவை பலநூற்றுக்கணக்கானவர்களுடைய உழைப்பு அவற்றை மின்னூலாக்கத் தேவைப்படும் மதுரைத் திட்டம் போன்ற திட்டங்களின் இடைநிறுத்தம் கூட போதிய தன்னார்வலர்கள் கிடைக்காமையினால் நிறுத்தப்பட்டதைக் கருத்தில் கொண்டே சுருக்கமாக ஈழம் மற்றும் ஈழத்து எழுத்தாளர்களுடைய நூல்கள் என்று எமது பரப்பைச் சுருக்கிக் கொண்டோம்.

ஒப்பீட்டளவில் ஈழத்தில் நிலவும் பாதுகாப்பில்லாத நிலவரத்தைக் கருத்திற் கொண்டால் மின்னூலாக்கவேண்டிய தேவை ஈழத்து நூல்களுக்கே உள்ளன.

பார்வையிட்டுக் கருத்துத் தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி நூலகத்தை பயன்ப்டுத்துவதே நீங்கள் எங்களுக்குச் செய்யக்கூடிய பேருதவியாகும்
\" \"
Reply
#14
http://noolaham.net/index.htm

ஈழ தமிழ் புத்தகங்கள் இங்கு வாசிக்கலாம்.
நல்ல திட்டத்திற்கு நீங்களும் உதவலாம்.

நன்றி
parisian
Reply
#15
நல்லதொரு தளம்.
இங்கு இணைத்தமைக்கு

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)