![]() |
|
தாக்குதல்களில் இருந்து தப்ப இராணுவம் புதிய உத்தி பகடைக்காயாக - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தாக்குதல்களில் இருந்து தப்ப இராணுவம் புதிய உத்தி பகடைக்காயாக (/showthread.php?tid=1304) |
தாக்குதல்களில் இருந்து தப்ப இராணுவம் புதிய உத்தி பகடைக்காயாக - மேகநாதன் - 01-19-2006 <span style='color:darkred'><b>தாக்குதல்களில் இருந்து தப்ப இராணுவம் புதிய உத்தி பகடைக்காயாகும் அப்பாவி மக்கள் </b> யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகன அணிகள் பிரதான வீதிகளில் செல்லும் போது பொது மக்களையும் அதனுடன் இணைத்துக் கொண்டு செல்ல நிர்ப்பந்திப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக இராணுவத்தினரின் வாகன அணிகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றது. இத்தகைய இராணுவத்தினரின் வாகன அணிகள் பிரதான வீதிகளில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒருமித்து வருகின்றன. இந்த நேரத்தில வீதியால் வரும் வாகனங்கள் மற்றும் மோட்டார் சையிக்கள்கள் சையிக்கள்கள் என்பனவற்றை மறிக்கும் படையினர் அவர்களை தமது வாகன அணியுடன் இணைந்து செல்லுமாறு நிர்ப்பந்திக்கின்றனர். இராணுவத்தினர் இதன் மூலம் தம்மைப் பாதுகாக்கும் செயல்பாட்டிற்கு பொது மக்களை பகடைக்காயாக பயன்படுத்திக் கொள்வதாக பொது அமைப்பக்கள் குற்றம் கூறுகின்றன. இதே நேரம் இத்தகைய வாகன அணிகளை பொது மக்கள் முந்திச் செல்ல முடியாது பாதுகாப்புக்கு வாகன அணியுடன் கூடவே நடந்து செல்லும் இராணுவத்தினர் விடுவதில்லையென்பதும் குறிப்பிடத்தக்கதாகும் வாகன இணிகள் இனம் தெரியாதவர்களின் தாக்குதல்களுக்க உட்படுமாக இருந்தால் பொது மக்களும் அதனால் பாதிப்படையட்டும் என்ற குரூர எண்ணத்திலேயே இராணுவத்தினர் இவ்வாறு நடந்து கொள்வதாக மக்கள் எரிச்சலுடன் கவலை தெரிவித்தனர்.</span> <b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b> - தூயவன் - 01-19-2006 இப்படித் தான் ஓயாத அலைகள் நடவடிக்கையில் தமிழர்களை வெளியேறாமல் தடுத்து, தங்களுக்கு கேடயமாகப் பாவிக்க முனைந்தவர்கள். இதை வெளியுலகத்துக்கு வெளிப்படுத்தியவர் அப்போதைய பத்திரிகையாளர் நிமலராஜனும், யாழ் பல்கலைக்கழகமும் தான். பின் நிமலராஜனை ஈபிடிபி தேசவிரோதக் கும்பல் சுட்டுக் கொன்றது. - Danklas - 01-19-2006 அட உந்த யுக்தியை அறிஞ்சுதான் அமெரிக்க பிரதிநிதி இலங்கை இராணுவம் பலம் வாய்ந்த நிலையில் இருக்கின்றது எண்டு உளறினவரோ?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Thala - 01-19-2006 இதுக்காகத்தான் அமெரிக்கா சிறப்புப்பயிற்ச்சி எல்லாம் கொடுத்து இராணுவத்தைப் பலப்படுத்தினவை..... இப்ப யாழ்ப்பாணத்தை விட்டு ஓடுறதுக்கும் சிறப்புபயிற்ச்சி குடுக்கப் போகுதாம்.... இந்தியா கப்பல் குடுக்குமாம்..... - நர்மதா - 01-19-2006 1990 களின் காலப்பகுதியில் ஓவ்வரு இராணுவத்துக்கும் 6 லகரம் (இலட்சம்) கொடுத்து அமரிக்கா கிரீன்பரட்டிடம் (இராணுவ பயிற்சியை பற்றி அறிந்தவர்களுக்கு தெரிந்திருக்கும் கிரீன்பரட்டின் பயிற்சி பற்றி) இருந்து பயிற்சி பெற்றவை அப்போ இராணுவம் கூறியது இனி இராணுவத்தை அசைக்க முடியாது என்று நடந்தது என்ன முதலில் அடி வாங்கியது பெண்புலிகளிடம் அந்த அடியோடு துண்டைக்கானேம் துனியை கானேம் என ஓடியவர்கள் பிறகு பல களங்களுக்கு சென்றவை அதிலையும் அடி தான் இப்போ அதில் சிறிதளவு பேர் உயிருடன் இருக்கிறார்கள் மற்றவர்கள் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறார்கள் இதை அறிந்த அமரிக்க இராணுவம் தனக்குள் நெந்து கொண்டதாம் பிழையான குதிரைக்கு மேல் பணத்தைக்கட்டிவிட்டதாக இப்போது அவர்களுக்கு புரிந்திருக்கும் விடுதலைப்புலிகளை பேரில் வெற்றி கெள்ள முடியாது என்று எனவே ஆப்கானித்தானிலும் ஈராக்கிலும் (அந்த நாட்டு படைகளை பலிக்கடாவாக்கி தாங்கள் தப்புவது) தாங்கள் செய்யும் வீரவிளையாட்டுக்கள் கூறியிருப்பார்கள் இலங்கை இராணுவத்தையும் அப்படி செய்யும் படி - Mathan - 01-19-2006 [size=13]இந்த தலைப்பில் இருந்த அவசியமற்ற தனிநபர் மோதல் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. தயவு செய்து இதுபோன்ற கருத்துக்களை தவிர்த்து கொள்ளுங்கள். - Mathan - 01-19-2006 யாழில் குறிப்பாக பலாலி வீதியை அண்டிய நகரப்பகுதிகளில் வசிப்போரை அவர்களின் வீடுகளில் உள்ள பெரிய மரங்கள், அடர்த்தியான பூக்கன்றுகள் போன்றவற்றை வெட்டி சுத்தம் செய்யுமாறு படையினர் எச்சரித்துள்ளதாக அறிந்தேன். அந்த மறைவுகளில் இருந்து தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என்பதாலும் அவை கிளைமோர் வைக்க உதவலாம் என்பதாலும் இராணுவம் இப்படி கூறியுள்ளதாம். - மேகநாதன் - 01-19-2006 <span style='color:red'><b>சிவில் நிர்வாகம் சீர்குலைந்த யாழிலிருந்து வெளியேறி பாதுகாப்பான பிரதேசங்களுக்குச் செல்லுங்கள்</b> சிறிலங்கா இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள யாழ்ப்பாணத்தில் சிவில் நிவாகம் சீர்குலைந்து படுகொலைகள் அதிகரித்துள்ளதால் இராணுவத் தலையீடற்ற பாதுகாப்பான பிரதேசங்களுக்குச் செல்லுமாறு யாழ். மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. யாழ். மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் அறிக்கை: கடந்த சில வாரங்களாக சிறிலங்கா ஆக்கிரமிப்புப் படைகளும், இராணுவத் துணைக் குழுக்களும் மக்களைக் கொன்று குவிக்கும் பாதகங்களைச் சிறலங்கா அரசாங்கத்தின் ஆசிர்வாதத்துடன் அரங்கேற்றுகின்றன. அப்பாவிகள் நாம் ஏதும் அறியோம் எனக் கதறியும் காட்டுமிராண்டித்தனமாக ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், முதியவர்கள் என்ற வேறுபாடின்றி வீதிகளிலேயே தாக்கப்படுகின்றனர். பெண்கள் பலர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுகின்றனர். பெண்கள் உடற்சோதனை என்ற பெயரில் அவமானப்படுத்தப்படுகின்றனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படாது தடுக்கப்படுகின்றனர். இரவில் தேடுதல் என்ற பெயரில் வேலி பிரித்து நடுவீட்டில் அட்டகாசம் செய்கின்றனர். இராணுவத் துணைக்குழுக்கள் நடுநிசியில் வீடு புகுந்து கொள்ளையடிக்கின்றனர். எவ்வகைப் பாதுகாப்பு மற்ற வாழ்க்கை என்ற துயரமிக்க அவலமான சூழ்நிலையே சிறிலங்காப் படைகளால் யாழ். மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொல்வதாயின் யாழ்ப்பாணம் தமிழ் மக்களுக்கு திறந்தவெளி சிறையாகிவிட்டது. பிணம் தின்னி சிறிலங்கா அரசாங்கமோ, சமாதானப் போர்வையைப் போர்த்திக்கொண்டு தமிழின அழிப்பினை மேற்கொள்வதற்காக அதாவது ஒரு போரினைத் தமிழ் மக்கள் மீது திணிப்பதற்காக திட்டங்களைத் தீட்டி வேகமாக காய்களை நகர்த்துகிறது. சிறிலங்கா படைகளது நெருக்குவாரங்கள் அதிகரிக்கும் சூழலிலேயே யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றது. இனவெறிப் பிசாசுகள் பலிகேட்டு கதவைத் தட்டி இழுத்தெடுப்பதற்கு முன், பாதுகாப்புத் தேடி செல்வது இயல்பான உடனடி பாதுகாப்பிற்கான சரியான நடைமுறையாகும். அன்பான மக்களே! உங்களை, உங்களது குடும்பங்களை சிறிலங்காப் படையில் சீரழிப்பில் நின்றும் காத்துக்கொள்வதற்காக சிவில் நிர்வாகம் குலைந்துள்ள இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இருந்து உங்களது பாதுகாப்பை நிலைநிறுத்திக் கொள்ளும் வகையில் பாதுகாப்புத் தேடி இராணுவத்தின் தலையீடற்ற பிரதேசங்களுக்குச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது</span> <i><b>தகவல்மூலம்;- புதினம்</b></i> - மேகநாதன் - 01-19-2006 <span style='font-size:25pt;line-height:100%'><b>இடம்பெயரும் மக்கள் மீதும் சோதனைச் சாவடியில் இராணுவக் கெடுபிடிகள் தீவிரம் </b> சிறிலங்கா இராணுவ படுகொலைகளுக்கு அஞ்சி யாழ். குடாநாட்டை விட்டு நாள்தோறும ஆயிரக்கணக்கில் மக்கள் வெளியேறுவதால் அதிர்ச்சி அடைந்துள்ள சிறிலங்கா படைத்தரப்பும், புலனாய்வுத்துறையினரும் முகமாலையில் பொதுமக்கள் மீதான கெடுபிடி நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர். பொதுமக்கள் வருகையினை படிப்படியாக தடுக்கும் முயற்சிகளிலும் படையினர் தீவிரம் காட்டி வருவதாகவும் நேரடியாகத் தடுத்தால் மக்கள் கொந்தளிக்கும் சூழல் உருவாகும் என்பதால் மறைமுக நகர்வினை படைத்தரப்பு மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. அனைவருக்கும் பாதுகாப்புத் தருகிறோம் என்ற போர்வையில் படையினரால் பரப்புரைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் யாழ்ப்பாணத்தில் வீதிகளில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடும் படையினர் குடிபோதையில் இருப்பதாகவும் இவர்கள் வீதியால் பயணம் செய்வோரை எந்தவொரு விசாரணைகள் இன்றியும் தாக்குவதாகவும் யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன. நிதானம் தவறிய நிலையில் காணப்படும் படையினர் பெண்களை நீண்டநேரம் தடுத்து வைத்து அங்க சேட்டைகளில் ஈடுபடுவதுடன் தவறாக நடக்க முயற்சிப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். போதையில் இரவில் வீடுகளை சுற்றிவளைக்கும் படையினரில் கண்ணில் படும் பெண்கள் மீது வக்கிர சிந்தனையுடன் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். அதே போல் யாழ். குடாநாட்டில் படையினரால் கைது செய்யப்பட்டு படைமுகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படும் இளைஞர்கள் பலர் கறுப்புடை தரித்து முகத்தை மறைத்திருப்போர் முன்நிறுத்தப்பட்டு அடையாளப்படுத்தப்படுவதாக பாதிக்கப்பட்டு தப்பிவந்த இளைஞர்கள் தெரிவிக்கின்றனர். கைகள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் படையினரின் இரகசிய முகாம்களுக்கு கடத்திச் செல்லப்படும் இளைஞர்கள் கூர்மையான ஆயுதங்களால் உடலில் குத்தப்படுவதுடன், தாக்கப்படுகின்றனர். விசாரணை செய்வோர் நன்றாக தமிழில் கதைப்பதாகவும் ஊரில் இருப்போர் தொடர்பாய் விலாவாரியாக விசாரிப்பதாகவும் இவர்களே அருகில் இருக்கின்ற படையினருக்கு சிங்களத்தில் மொழி பெயர்த்துச் சொல்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.</span>[/color] <i><b> தகவல்மூலம்;- புதினம்</b></i> - தூயவன் - 01-19-2006 இராணுவம் தாக்குதல் நடத்தும்போது வெட்கத்தைப் பார்க்காமல் நிலத்தில் படுத்தால் உயிரழப்புக்களைக் குறைக்கலாம். சனம் 4வருடத்தில் எல்லாத்தையும் மறந்துவிட்டதா? சிங்கள இராணுவம் எம் மக்களைக் கொன்று தீர்ப்பது வேதனையாக இருக்கின்றது. - Mathan - 01-19-2006 வெட்கமாக இருக்காது விழுந்து படுப்பதை இராணுவம் தாக்குதல் நடத்த முற்படுவதாக புரிந்து கொண்டால் என்ன செய்வது என்ற பயமாக இருக்கலாம். அந்த சூழ்நிலையில் இருக்கும் போது பயத்தில் என்ன செய்வது என்றே தெரியாமல் இருக்கும். - தூயவன் - 01-19-2006 இந்த இரண்டு மாதத்தில் மட்டும் சுமார் 50வரை பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதைத் கதைக்க ஜனநாயகம் கதைப்பவர்களுக்கு யோக்கியம் இல்லை. |