![]() |
|
முஸ்லிம் தனித்தரப்பு கோரிக்கை: மகிந்த நிராகரிப்பு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: முஸ்லிம் தனித்தரப்பு கோரிக்கை: மகிந்த நிராகரிப்பு (/showthread.php?tid=1305) |
முஸ்லிம் தனித்தரப்பு கோரிக்கை: மகிந்த நிராகரிப்பு - மேகநாதன் - 01-19-2006 <span style='color:darkred'><b>முஸ்லிம் தனித்தரப்பு கோரிக்கை: மகிந்த நிராகரிப்பு</b> இலங்கை அமைதிப் பேச்சுகளில் முஸ்லிம்கள் தனித்தரப்பாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார். முஸ்லிம்களை தனித்தரப்பாக பேச்சுகளில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. <i>முஸ்லிம்களை தனித்தரப்பாக இணைத்தால் சிங்களவர்களும் தனித்தரப்பாக தங்களை இணைத்துக் கொள்ள கோரிக்கை விடுப்பார்கள் என்பதால் அதை நிராகரிப்பதாக மகிந்த கூறியுள்ளார்.</i> இதனிடையே இதுவிடயத்தில் ஒருமித்த முடிவை மேற்கொள்வதற்காக அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆலோசனை நடத்த முஸ்லிம் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது</span> <i><b>தகவல்மூலம்;- புதினம்</b></i> - மேகநாதன் - 01-19-2006 <b>சமாதான பேச்சகளில் முஸ்லிம் தனித்தரப்பு சாத்தியம் இல்லையாம் - மகிந்த சமாதான பேச்சுகளில் முஸ்லிம்களின் தனித்தரப்பு பற்றி நெடுங்காலமாக முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்திவரும் வேளையில், தற்போது அந்த தனித்தரப்பு கோரிக்கை சாத்தியம் இல்லை என்று ஸ்ரீ லங்கா அரசு தலைவர் மகிந்த ராஜபக்ஸ நிராகரித்துள்ளார். நடக்கவிருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுடனான பேச்சுகளின்போது முஸ்லிம்களை தனித்தரப்பாக அரசாங்கத்தோடும், விடுதலைப்புலிகளுடனும், பேச்சுகளில் இணைந்து கொண்டால் சிங்களவர்களும் தாமும் தனித்தரப்பாக கலந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிப்பார்கள் என்பதனாலேயே இந்த முஸ்லிம் தனித்தரப்பு கோரிக்கையினை தாம் நிராகரித்துள்ளதாக ஒரு விசித்திரமான காரணத்தைக் கூறியுள்ளார <i>[b]தகவல் மூலம்- சங்கதி</b></i> - Luckyluke - 01-19-2006 இதே மாதிரி தொல்லையினால் தான் பாகிஸ்தான் உருவானது..... மகிந்தா நல்ல வேலை தான் செய்திருக்கிறார்..... - மேகநாதன் - 01-22-2006 <b>பேச்சுவார்த்தையின் போது முஸ்லிம்களுக்கு சம அந்தஸ்து கோரி முஸ்லிம் தேசிய கூட்டமைப்பினால் கையெழுத்து சேகரிப்பு.</b> தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்தி;ற்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்களின் சமஅந்தஸ்தை கோரி முஸ்லிம் தேசிய கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கையெழுத்து சேகரிப்பு இன்று கிழக்கு மாகாணத்திலும் மேற்கொள்ளப்பட்டது. அண்மையில் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கையொப்ப திரட்டல் இன்று அம்பாறை திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இடம்பெற்றது. இதன்போது அம்பாறையில் மாத்திரம் சுமார் 40 ஆயிரம் கையொப்பங்கள் திரட்டப்பட்டதாக கட்சியின் மாவட்ட இணைப்பாளர் எம் எம் பஹீஜ் தெரிவித்தார். இதேவேளை கையொப்பங்கள் திரட்டப்பட்டு அவை ஜனாதிபதி, நேர்வே ஏற்பாட்டாளர், மற்றும் இலங்கைக்கு உதவியளிக்கும் சமதலைமை நாடுகள் என்பவற்றிடம் கையளிக்கப்படவுள்ளதாக கட்சியின் தலைவர் ஹாபிஸ் அகமட் நசிர் தெரிவித்துள்ளார். <b><i>தகவல் மூலம்-பதிவு.கொம்</i></b> - ஜெயதேவன் - 01-22-2006 முஸ்லீம் தரப்பிற்கு உண்டியலானின் வேண்டுகோள்.... <b>"பத்து, பதினைந்து என்பதைக் கட் பண்ணி, ஒன்று, இரண்டில் நிறுத்துங்கள் எண்று..."</b> - ஜெயதேவன் - 01-22-2006 Quote:முஸ்லீம் தரப்பிற்கு உண்டியலானின் வேண்டுகோள்.... மேல் உள்ள கருத்தை பிழையாக யாரும் எடுக்க வேண்டாம்!! அடியேன் சொல்ல வந்தது என்னவென்றால் "பத்துக்கு கூடுதலான கட்சிகளாக பிரிந்து நில்லாமல் ஒன்றோ இரண்டில் நிறுத்துங்கள் என்றே... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வினித் - 01-22-2006 ஜெயதேவன் Wrote:Quote:முஸ்லீம் தரப்பிற்கு உண்டியலானின் வேண்டுகோள்.... நான் தப்பாக எடுக்கவில்லை நீங்கள் சொல்ல வந்தது என்ன எண்டு தெரியுது அண்ணா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நாங்கள் என்ன செய்வது ********* கொடுப்பதை யாரால் தடுக்க முடியும் :wink: :wink: நான் சொல்ல வந்தது ****************************** <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கறுப்பி - 01-22-2006 Quote:நான் தப்பாக எடுக்கவில்லை நீங்கள் சொல்ல வந்தது என்ன எண்டு தெரியுது அண்ணா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- வினித் - 01-22-2006 கறுப்பி Wrote:Quote:நான் தப்பாக எடுக்கவில்லை நீங்கள் சொல்ல வந்தது என்ன எண்டு தெரியுது அண்ணா [b]இதில சிரிக்க என்ன இருக்கு அவர்கள் சுமார் 40 ஆயிரம் கையொப்பங்கள் வாங்கிட்டார்கள் இனி அவர்களை ஒண்டும் செய்ய முடியாது.......... - MUGATHTHAR - 01-23-2006 ஏற்கனவே மொட்டைகளின்ரையும் சிவப்பு சட்டைகளின்ரை ரோதனைகளை தாங்கேலாமல் மனஷன்(மகிந்தா) கிடந்து தடுமாறேக்கை இவையும் போய் எங்களுக்கும் சேத்து எதன் செய் எண்டா என்ன செய்யிறது அதுதான் இந்த முறை மனுஷன் கழட்டியே விட்டுட்டு................. - மேகநாதன் - 01-25-2006 <b>சமாதான பேச்சு வார்த்தையில் முஸ்லிம்களின் பங்கு குறித்த மகிந்தவின்கருத்துக்கு ஹக்கீம் கண்டனம் </b> நோர்வேயின் இலங்கைக்கான சமாதான அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் நேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளை சந்தித்தார். இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கிம் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர். சமாதான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாடுகள் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிதுவம் என்பன குறித்து இந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கிம் சமாதான பேச்சுவார்ததைகளில் முஸ்லிம்தரப்பு குறித்து ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார். <i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i> - மேகநாதன் - 01-26-2006 <b>முஸ்லிம் தனித்தரப்பு கோரிக்கை நிராகரிப்பு: முஸ்லிம் சபை கவலை</b> இலங்கை அமைதி முயற்சிகளுக்கான பேச்சுகளில் முஸ்லிம்களை தனித்தரப்பாக இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளமை கவலை அளிப்பதாக சிறிலங்கா முஸ்லிம் சபை கவலை தெரிவித்துள்ளது. 58 முஸ்லிம் அமைப்புக்களின் கூட்டமைப்பான முஸ்லிம் சபை மகிந்த ராஜபக்சவுக்கு எழுதியுள்ள கடித விவரம்: முஸ்லிம்களை தனித்தரப்பாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீங்கள் நிராகரித்திருப்பது எமக்கு கவலையளிக்கிறது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது முதலே இந்தக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. அமைதி முயற்சிகளில் முஸ்லிம்கள் தனித்தரப்பாக இணைக்கப்படாவிட்டால் முஸ்லிம்களினது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு அமைதி நடவடிக்கைகளிலிருந்து அவர்கள் விலக்கி வைக்கப்பட்டுவிடும் நிலை உள்ளது. இருந்தபோதும் அமைதி முயற்சிகள் வெற்றி பெற நாங்கள் பிரார்த்திக்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது <i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i> - மேகநாதன் - 01-26-2006 <b>பேச்சுகளில் முஸ்லிம் தனித்தரப்பு விவகாரம்!- மகிந்த மீது ஹக்கீம் கண்டனம். </b> இடம்பெறவிருக்கும் பேச்சுகளின்போது முஸ்லிம்கள் தனித்தரப்பாக கலந்துகொள்ள வேண்டும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒவ்வொரு கட்டங்களிலும் வலியுறுத்தி வருகின்றது. பேச்சுகள் விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் மட்டுமே தீர்க்கப்படவேண்டிய முக்கிய விடயமாகும் இதில் முஸ்லிம் தரப்பினருக்கு எதுவித இடமும் இல்லை என ஸ்ரீ லங்கா அரசு தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இதனைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாக முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ராவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்காவின் சமாதான அனுசரணையாளராக செயற்படும் நோர்வேயின் சிறப்புத் தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை செவ்வாயக்கிழமை மாலை சந்தித்துப்பேச்சு நடத்தினார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு வழங்கிய தகவல்களிலேயே ரவுப் ஹக்கீம் இதனைத் தெரிவித்துள்ளார். மகிந்த சிந்தனைகள் என்பதில், சமாதானப்பேச்சகளில் முஸ்லிம் தரப்பினர் தனித்தரப்பாக கலந்தகொள்ளுவார்கள் எனத் தெரிவித்திருந்தவர் தற்போது அதனை உதாசீனப்படுத்திவிட்டு அது சாத்தியமில்லை என்கின்றார். எவை எப்படி இருப்பினும் முஸ்லிம்கள் தனித்தரப்பாகவே கலந்துகொள்வார்கள் இதனை, விடுதலைப்புலிகளும் புரிந்து கொள்ளவேண்டும். அமைதிப்பேச்சக்கள் இடம்பெறவுள்ள இந்தவேளையில் அதற்குப்பூரண ஆதரவு வழங்குமாறும் மீண்டும் ஒரு யுத்தம் எற்படாதவாறு உரிய நடவடிக்கைகள் எடுக்கும் வண்ணமும் நாம் அவரைக்கேட்டுக் கொள்கின்றோம். இதே வேளை முஸ்லிம்களின் உரிமைகள், பாதுகாப்பு தொடர்பாகவும் அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். சமாதானப்பேச்சுகள் இடம்பெறும் போது முஸ்லிம்கள் தனித்தரப்பாகவே கலந்துகொள்வதற்கு ஆவன செய்யவேண்டும் என்று மீண்டும் நாம் கோருகின்றோம். என அவர் மேலும் தெரிவித்துள்ளார். <i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i> - வர்ணன் - 01-26-2006 உடனுக்குடன் செய்திகளை இங்கு இணைப்பதின் மூலம்- செய்திகள்:தமிழீழம் பகுதியை மேலும் சிறப்பாக்குகிறீர்கள்- நன்றி-மேகநாதன்! 8) - மேகநாதன் - 01-26-2006 வர்ணன், உங்கள் உளப்பூர்வமான ஊக்கத்துக்கு நன்றிகள்... எம்மலான சிறுசிறு பணிகளை நேரம் கிடைக்கிற போது மட்டுமே இவ்வாறேனும் செய்ய முடிகிறது.... Re: முஸ்லிம் தனித்தரப்பு கோரிக்கை: மகிந்த நிராகரிப்பு - ஊமை - 01-26-2006 முஸ்லிம் தனித்தரப்பு கோரிக்கை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன் அவர்கள் தனித்தரப்பாக இருந்து என்னத்தை தான் சாதிக்கப்போகிறார்கள். கை விரல் விட்டு எண்ணக்கூடியவர்களுக்கெல்லாம் ஒரு தனித்தரப்பா ? என்ன சின்னப்புள்ள தனமா இருக்கு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> மதங்களுக்கெல்லாம் தனித்தரப்பா? - ஊமை - 01-26-2006 அவர்கள் சுமார் 40 ஆயிரம் கையொப்பங்கள் வாங்கிட்டார்கள் இனி அவர்களை ஒண்டும் செய்ய முடியாது அது சரி மவுத்தான முஸ்தபாவும், மொஹமெட்டும் இன்னும் யார் யாரோவும் அவர்களுக்கு கையெழுத்து போட மாட்டார்களா என்ன? ஏன் கையெழுத்து வேட்டை நடாத்தியவரே சுமார் ஆயிரக்கணக்கில் தானே கையெழுத்தை இட முடியாதா ? இந்த கையெழுத்து வேட்டை எல்லாம் என்ன மகிந்த மாத்தையா முன்னிலையில் தான் நடந்ததா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - மேகநாதன் - 02-01-2006 <b>எதிர்காலத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்திற்கு இடமளிக்கப்படும் - ஐனாதிபதி</b> எதிர் காலத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள சமாதானப் பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்திற்கு இடமளிக்கப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கௌரவமான சமாதானம் ஒன்றையே எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ள அவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம் மக்களுக்கு எவ்வித அநீதிகளும் இழைக்கப்படாதவாறு செயற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதேபோன்று எதிர்காலத்திலும் தொடர்ந்து செயலாற்றவுள்ளதாக நேற்றுக் காலை அலரிமாளிகையில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதிகளை சந்தித்து உரையாடியபோது ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சிங்கள, தமிழ், முஸ்லிம், பேர்கர் ஆகிய அனைத்து சமூகங்களினது உரிமைகளை பாதுகாப்பதே மஹிந்த சிந்தனையில் முக்கிய குறிக்கோள் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி எந்தவொரு பிரஜைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தாம் செயற்படுவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மாகாண செயலாளர் அலுவலகத்தின் கிளை அலுவலகத்தை அம்பாறை மாவட்டத்தின் உரிய இடமொன்றில் செயற்படுத்த ஆரம்பக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இன்றைய சந்திப்பின்போது ஜனாதிபதி கூறினார் என ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. <i><b>தகவல்- பதிவு.கொம்</b></i> |