Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 320 online users.
» 0 Member(s) | 317 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,283
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,226
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,287
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,619
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,045
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,455
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,465
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,021
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  மகளைப் போராட்டத்திற்கு வழி அனுப்பிவைத்த தந்தை!!
Posted by: வினித் - 01-30-2006, 03:40 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

"போராடித்தான் எமது தேசத்தை மீட்கமுடியும்": தனது மகளைப் போராட்டத்திற்கு வழி அனுப்பிவைத்த தந்தை!!

[திங்கட்கிழமை, 30 சனவரி 2006, 19:07 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]

சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து தமிழர் தாயகத்தை விடுவிப்பதற்கான போராட்டத்துக்கு தன் மகளை ஒரு தந்தை வழி அனுப்பி வைத்திருக்கிற "நிகழ்கால" புறநானூற்று நிகழ்ச்சி தமிழீழத்தில் நடந்துள்ளது.
<img src='http://img71.imageshack.us/img71/2020/sa13nh.jpg' border='0' alt='user posted image'>

"எனக்கு இப்போது 56 வயதாகிறது. இந்த நாட்டில் எத்தனையோ பேச்சுவார்த்தைகள் நடந்துவிட்டன. ஆனால் எங்களுக்கு இன்னமும் நிம்மதி கிட்டவில்லை. எனவே நாங்கள் எமது தேசியத் தலைவரின் கீழ் முழுமையாக அணிதிரண்டு போரிடுவதன் மூலம்தான் எமது தேசத்தை முழுவதுமாக மீட்கமுடியும். அப்போது தான் எமது பிள்ளைகளுக்காவது ஒரு நிம்மதியான வாழ்வு கிடைக்கும்" என்று கூறிய மயில்வாகனபுரம், விசுவமடுவைச் சேர்ந்த மு.மாரிமுத்து நேற்று தனது குடும்ப அங்கத்தவர்கள் அனைவரதும் ஒருமித்த தீர்மானத்திற்கு அமைவாக தனது மகளான (வயது 18) போராட்டத்திற்கு அனுப்பிவைத்தார்.
<img src='http://img214.imageshack.us/img214/157/sa26rn.jpg' border='0' alt='user posted image'>

மகளை போராட்டத்திற்கு அனுப்பி வைத்த நிகழ்வில் அவர் பேசியதாவது:

எமது தலைவர் போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன்னர் அரசியல் தலைவர்களுடன் சேர்ந்து அனைவரும் சத்தியாக்கிரகம் செய்தனர். ஆனால் எங்களுக்கு முடிவு வரவில்லை. ஆனால், வன்னியில் நாங்கள் எல்லோரும் வயது வேறுபாடின்றித் தலைவருடன் சேர்ந்து போராடினோம். எங்களுக்கு மிகப்பெரிய வெற்றிகள் கிடைத்தன. அதனால் தான் இன்று எமது இனம் ஓரளவாவது நிம்மதியாக இருக்க முடிகிறது. அனைவருமாக இன்னுமொரு முறை முயற்சித்தால் இறுதி வெற்றியையும் பெற்று, நிரந்தரமான நிம்மதி நமக்குக் கிடைத்துவிடும்.

கடந்த காலங்களில் எமது குடும்பம் போராட்டத்திற்கு பல்வேறு உதவிகளைச் செய்தது. ஆனால், எமது பிள்ளைகள் எவரும் முழுமையாக இணைந்து போராடவில்லை. எமக்கு அருகிலிருக்கும் குடும்பத்தில் இரண்டு பிள்ளைகளும் மாவீரர்களாக இருக்கிறார்கள். இனிமேலும் இப்படியான குடும்பங்களில் தங்கி நின்று, குளிர்காய்ந்து நாம் வாழ்க்கையை ஓட்டுவது மனச்சாட்சிக்குச் சரியன்று. அதனால் தான் நாம் எமது மகளின் சம்மதத்தோடு அனைவருமாக இந்த முடிவுக்கு வந்தோம் என்றார் அவர்.

இந்நிகழ்வில் பிரதேச அரசியல்துறைப் பொறுப்பாளர், தூயவன் அரசறிவியற்கல்லூரிப் பேராளிகள், பொதுமக்கள் அகியோர் கலந்து கொண்டனர்.

நன்றி:புதினம்

Print this item

  Sri Lankan rebels reinforcing their feared 'Sea Tiger' naval
Posted by: cannon - 01-30-2006, 02:50 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - No Replies

Report: Sri Lankan rebels reinforcing their feared 'Sea Tiger' naval force

Associated Press, Mon January 30, 2006 03:05 EST
DILIP GANGULY - Associated Press Writer - COLOMBO, Sri Lanka - (AP)
Sri Lanka - 's Tamil Tiger rebels have trained more fighters for their ``Sea Tiger'' naval force, sparking yet more fears that a fraying government-rebel truce may snap, a defense analyst and pro-rebel Web-site said. The Tamil Tigers began fighting in 1983 for a separate state for Sri Lanka - 's minority ethnic Tamils, accusing the majority Sinhalese of discrimination. The conflict claimed at least 65,000 lives before a Norway-brokered cease-fire in 2002.
However, peace talks stalled over disagreements, and assassinations and attacks on government forces in recent months threaten to scuttle the truce. The military blames the violence on the Tamil Tigers, who deny responsibility.

On Wednesday, the government and rebels agreed to cease all hostilities and prepare for a new round of peace talks in Switzerland next month.

<b>The Sea Tigers a Tamil Tiger wing with about 1,000 men and women were feared for their fierce and often successful attacks on Sri Lanka - 's navy during the civil war. </b>

Within the rebels' navy, a branch dubbed the Black Sea Tigers have rammed small, explosive-packed boats into targets in deadly suicide attacks.

An explosive-laden boat rammed a Sri Lankan navy vessel in the northern waters on Jan. 7 and killed 13 sailors in an attack blamed on the Tigers, who denied responsibility.

<b>The Sea Tigers won a crucial battle for their side in 2000, when they landed 1,500 guerrillas to help successfully seize the highly strategic Elephant Pass from government troops. The pass is a narrow causeway connecting the bulk of Sri Lanka - with the island country's Tamil-dominated north.

The Tigers have since controlled the pass the only land corridor between Sri Lanka - 's north and south</b>

Associated Press

Print this item

  இலண்டனில், நெல்லியடி ம.ம.வி பழைய மாணவர்களின் ஒன்றுகூடல்
Posted by: Nellaiyan - 01-30-2006, 12:36 PM - Forum: நிகழ்வுகள் - Replies (6)

யாழிலுள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றான நெல்லியடி மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் வரும் சனிக்கிழமை மாலை "Croydon" பகுதியிலுள்ள "Lanfrank School" மண்டபத்தில் நடைபெற உள்ளது.

ஒரு காலத்தில் யாழிலுள்ள பாடசாலைகளில் அழகிய கட்டடங்கள், பாரிய மண்டபங்கள், பாரிய விவசாய/கால்நடை பீடம், விளையாட்டு ஸ்ரேடியம் என்று எல்லாவாற்றையும் ஒருங்கே கொண்டிருந்த கல்லூரியாகும். பின் இலங்கைப்படைகளின் முகாமாக்கப்பட்டு சிதைவுற்ற இக்கல்லூரி, கப்ரன் மில்லரின் வரலாற்றுடன் மீட்டெடுக்கப்பட்டதும், இன்று அரச உதவிகள் பாரியளவில் இல்லாதிருந்தும் மீண்டும் எழ முற்படுகிறது.

வடமராட்சிப் பகுதியிலுள்ள ஏனைய பிரபல பாடசாலைகளான "காட்லிக் கல்லூரி, மெதடிஸ் பெண்கள் கல்லூரி, சிதம்பராக் கல்லூரி" போன்றன இராணுவ முகாங்களுக்குள் முடங்கிய நிலையில் இன்று, அப்பிரதேசத்தினது கல்வித்தாகத்தினை நெல்லியடி மத்திய மகா வித்தியாலயமே பூர்த்தி செய்வது இங்கு குறிப்பிடத்தக்கது.

Print this item

  அவுஸ்திரேலியர்களின் இனவெறி (Racism)
Posted by: kuruvikal - 01-30-2006, 10:46 AM - Forum: விளையாட்டு - Replies (4)

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41271000/jpg/_41271316_cricket_whites_203.jpg' border='0' alt='user posted image'>

தற்போதைய பருவகாலத்துக்கான அவுஸ்திரேலிய கிரிக்கெட் ரெஸ்ட் சுற்றுப் போட்டிகளின் போது தங்கள் வீரர்கள் மீது அவுஸ்திரேலிய ரசிகர்கள் போகும் இடமெங்கும் இனவெறியைக் காட்டியதாக தென்னாபிரிக்க வீரர்களும் நடந்துவரும் ஒரு நாள் போட்டிகளில் போது தங்கள் மீதும் இனவெறித்தாக்குதல் நடந்ததாக சிறீலங்கா வீரர்களும் கவலை தெரிவித்திருப்பதுடன் இது தொடர்ந்தால் எதிர்காலத்தில் அவுஸ்திரேலியாவுக்கான தங்கள் சுற்றுலாவை தாங்கள் பகிஸ்கரிக்கப் போவதாக தென்னாபிரிக்கா அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் தற்போது நடந்துவரும் அவுஸ்திரேலியா சிறீலங்கா தென்னாபிரிக்கா கலந்து கொள்ளும் முத்தரப்பு ஒருநாள் VB தொடரின் போதும் நேற்று (29-1-2006) போட்டி நடந்த வேளையில் கூட சிறீலங்கா வீரர்கள் இனவெறித்தாக்குதலுக்கு உள்ளானதாக சிறீலங்கா வீரர்களும் குற்றம்சாட்டி இருக்கின்றனர்..!

தகவல்- பிபிசி.கொம்

( http://news.bbc.co.uk/sport1/hi/cricket/4661270.stm )

Print this item

  ஈபிடிபி முக்கிய புள்ளி மதனராஜா லண்டனில் அரசியல் தஞ்சம்.
Posted by: வினித் - 01-29-2006, 10:46 PM - Forum: புலம் - Replies (5)

ஈபிடிபி முக்கிய புள்ளி மதனராஜா லண்டனில் அரசியல் தஞ்சம்.
Tuesday, 17 January 2006
ஈபிடிபி யில் நீண்ட காலமாக செயற்பட்டு வந்த நடராஜா மதனராஜா தற்பொழுது பிரித்தானியாவில் அரசியற் தஞ்சம் கோரியுள்ளார். ஈபிடிபியின் மத்தியகுழு ஊறுப்பினராக நீண்ட காலமாகச் செயற்பட்டு வந்த இவர் டக்கிளஸ் தேவானந்தாவின் நெருங்கிய சகாவும் ஆவார்.ஊர்காவற்றுறை, நாரந்தனையில் 2001ல் இடம் பெற்ற படுகொலைகளில் நேரடித் தொடாபுடையவர். அதனால் சிறீலங்காவில் சிறைப்பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட மதனராஜா பின்னர் டக்கிளஸ் தேவானந்தாவால் விடுவிக்கப்பட்டு தற்சமயம் லண்டனுக்கு வருகை தந்துள்ளார்.

ஈபிடிபி யில் நீண்ட காலமாக செயற்பட்டு வந்த நடராஜா மதனராஜா தற்பொழுது பிரித்தானியாவில் அரசியற் தஞ்சம் கோரியுள்ளார். ஈபிடிபியின் மத்தியகுழு ஊறுப்பினராக நீண்ட காலமாகச் செயற்பட்டு வந்த இவர் டக்கிளஸ் தேவானந்தாவின் நெருங்கிய சகாவும் ஆவார்.

ஊர்காவற்றுறை, நாரந்தனையில் 2001ல் இடம் பெற்ற படுகொலைகளில் நேரடித் தொடாபுடையவர். அதனால் சிறீலங்காவில் சிறைப்பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட மதனராஜா பின்னர் டக்கிளஸ் தேவானந்தாவால் விடுவிக்கப்பட்டு தற்சமயம் லண்டனுக்கு வருகை தந்துள்ளார்.

இவ்வாரம் அவருக்கான அகதி அந்தஸ்து கோரிக்கை லண்டனில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.இதன் பின் இவர் இங்கிருந்து தமிழ் மக்களிற்கெதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

உடனடியாக இதனை பிரிட்டிஸ் அரசுக்கு தொயப்படுத்துவதன் மூலம் அவரின் அகதி அந்தஸ்து கோரிக்கையை நிராகரிக்கச் செய்யலாம் என்பதுடன் எதிர்காலத்தில அவர் தொடரப்போகும் செயற்பாடுகள் சம்பந்தமாக மக்களிற்கும் எச்சரிக்கை செய்யவும்..

நன்றி: எட்டப்பன்

http://www.eddappar.com/content/view/31/26/

Print this item

  எட்டப்பன் யேர்மனியில்
Posted by: வினித் - 01-29-2006, 10:45 PM - Forum: புலம் - Replies (2)

ஆனந்தசங்கரி ஐயா யேர்மனியில்
Sunday, 22 January 2006
தமிழ்த் தேச விரோதியும் தற்பொழுது தமிழ் தேசியத்திற்கு எதிராக சர்வதேச நாடுகளில் தமிழ் மக்களின் தேசியத்திற்கு எதிராக செயற்படும் திரு.ஆனத்தசங்கரி ஐயா அவர்கள் இந்தவராம் யேர்மனியில் தங்கியுள்ளார். இவர் இலண்டலில் இருந்து தற்பொழுது யேர்மனி நாட்டில் லண்டோ எனும் நகரில் திரு.ஜீவா வீட்டில் தங்கியுள்ளார். முன்னர் திரு.லக்ஸ்மன் கதிர்காமர் என்ற தமிழரை வைத்து சிங்கள ஏகாதிபத்தியம் சர்வதேச நாடுகளில் புலிகளுக்கு எதிரான பரப்புரையைச் செய்தது போன்று இன்று திரு.ஆனந்தசங்கரி ஜயா அவர்களை ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகளை தடைசெய்வதற்காக அனுப்பி புலி எதிர்பு பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளார்.

சமாதான காலப்பகுதிகளில் இரகசியப் பயணங்களை மேற்கொண்டு இராஜதந்திரிகள், தமிழ்த் தேச விரோத கும்பல்களையும் இணைத்து இவர் ஐரோப்பிய தேசத்தில் வன்முறைகளை தூண்டுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதற்கு பின்னணியாக இந்திய உளவுத் துறையான றோ துணை நிற்கிறது.

இவர் இலங்கை அரசாங்கத்திடமும் இந்திய உளவுத் துறையான றோவிடம் இருந்தும் பெறப்படும் பெருமளவு நிதியினை வைத்து ஐரோப்பிய தேசத்தில் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக செயற்படுவோரை இணைத்து ஐரோப்பிய தேசத்தில் வன்முறைகளை தோற்றுவிற்பதற்கான சில நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இப்படியான நபர்கள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவே இப்படியானோரை இனம் கண்டு அருகில் உள்ள காவல்துறையினரிம் தெரியப்படுத்துவதே சாலப் பொருத்தமானது.


தகவல் - ஜெமினி

நன்றி: எட்டப்பன்
http://www.eddappar.com/content/view/32/26/

Print this item

  &quot;கடவுள்களின் பெயரில்&quot;....பித்தலாட்ட கூட்டங்கள்.....
Posted by: cannon - 01-29-2006, 10:35 PM - Forum: புலம் - Replies (53)

வார இறுதி நாட்களில் இவைகள் வழமையான நிகழ்வுகளாகி விட்டன. எதைக் கூறுகிறேன், எல்லோரும் அறிந்ததே! புலத்தில் ஏற்படும் எம்மவர்களின் மத்தியில் குடும்ப/பொருளாதார வாழ்வியல்களில் ஏற்படும் பிரட்சனைகளை பயன்படுத்தி "குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க" முற்படும் சமயப் பித்தலாடிகளைத்தான் குறிப்பிடுகிறேன்.

சம்பவம் 1:

சில மாதங்களுக்கு முன்னம் நானிருக்கும் லண்டன் புறநகர் பகுதியிலிருக்கும் சொப்பிங் சென்ரருக்கு சென்றிருந்தேன். வாயிலில் ஒரு தமிழ் இளைஜன் கையில் துண்டுப் பிரசுரக்கட்டுக்களுடன் நின்றிருந்தான். அவன் தமிழ் முகங்களைத் தேடுவது புரிந்தது. "அண்ணா, தமிழ்தானே" .."ஓம்" என்றேன். எனது கையில் ஒரு துண்டு பிரசுரத்தை திணித்துக் கொண்டு "உங்களை இறைவன் ஆசீர்வதிக்கப்போகிறார், என்னை தூதுவராக அனுப்பியுள்ளார், உங்களை இயேசு தன்னிடம் அழைக்கிறார்"... நான் சொன்னேன் "தம்பி, இப்ப ஆண்டவனிடம் போக வயசு வரவில்லை, ஆகையால் என்னை விடுங்கோ"......

சம்பவம் : 2

இரண்டு அழகிய தமிழ் யுவதிகள், எனது வீட்டுக்கருகிலுள்ள கடைத்தெருவில் "நீங்கள் தமிழா? அருகிலா இருக்கிறீர்கள்? எங்கு உங்களது வீடுள்ளது?" ... "ஏன்?" என்றேன். "இயேசு ஆண்டவன் எங்களை உங்களிடம் அனுப்பியுள்ளார், உங்களுடன் சில நிமிடங்கள் கதைக்க வேண்டும்" "இல்லை, இப்போ எனது மனைவி என்னை கடைக்கு அனுப்பியிருக்கிறா, சாமான் வேண்டவில்லையாயின் சாப்படு இன்றில்லை, சில நிமிடம் உங்களுடன் நின்றால் வயிறு அம்போ! பேந்து உங்கள் ஆண்டவனும் சாப்பாடு தரமாட்டார்".....

சம்பவம்: 3

ஒரு ஞாயிறு காலையில் வீட்டுக்கதவு தட்டப்படுகிறது. திறந்தால் மூன்று பெண்மணிகள். "நாங்கள் இப்பகுதியிலுள்ள எல்லா தமிழர்களையும் சந்தித்து வருகிறோம், அதுதான் இப்ப உங்களையும்..." எனக்கு இவர்கள் யாரென்று புரிந்து விட்டது, அதனால் வீட்டினுள்ளும் கூப்பிட மனமில்லை "ஓம், சொல்லுங்கோ" என்றேன். "இல்லை, நாங்கள் எம்மவர்கள் மத்தியிலுள்ள வாழ்க்கை/குடும்ப பிரட்சனைகளைப் பற்றிக் கதைக்க வந்திருக்கிறோம்" என்றார்கள். நானோ "மன்னிக்கவும், எனது தனிப்பட்ட வாழ்க்கையை யாருடனும் விவாதிக்க விரும்பவில்லை" என்றேன். "இல்லை, பறவாயில்லை, இயேசு உங்களிடம் எம்மை அனுப்பியுள்ளார்! அவரின் செய்தியை/மகிமையை உங்களுடன் சில நேரங்கள்..." என்றார்கள். நானோ "இல்லை, எனக்கு என் மதமே போதும்! அதையே சரியாக பின்பற்ற நேரமில்லை! என் மதத்தில் ஏதும் பிழைகள் இருப்பதாக எனக்கு இப்போ தெரியவில்லை, ..." எப்படி கூறியும் விடுகிறார்களில்லை! தொடர்ந்து விவாதிக்கிறார்கள்! இறுதியில் சொன்னேன் "அங்கு சுனாமியினால் பாதிக்கப்பட்டு பலர் அவதியுறுகிறார்கள், அவர்களுக்கு ஏதாவது நிதி சேகரித்து அனுப்ப இந்த நேரத்தைப் பயன்படுத்துங்களேன், புண்ணியம் கிடைக்கும்" என்றேன். அவர்களோ உடனே "நாங்கள் மக்கள் கொல்லப்படுவதற்கு உடந்தையாக இருக்கமாட்டோம்" என்றார்கள். எனக்குப் புரியவில்லை "என்ன சொல்கிறீர்கள்" என்றேன். "இல்லை, உதுகளைப் பார்க்க எங்களை ஆண்டவன் அனுப்பவில்லை" என்றார்கள். என்னை பொறுமையின் உச்சத்துக்கு கொண்டு சென்றுவிட்டார்கள். நானோ "இப்படி றோட்டு வழியே திரிந்தால் நாளை திருமணமும் கஸ்டம்தான்! வீடுகளில் போயாவது ஒழுங்காக இருங்கோ! நல்லதாவது நடக்குமென்று" கூறி கதவைச் சாத்தி விட்டேன்......

சம்பவம் 4

சில வாரங்களுக்கு முன்னம் வார இறுதி நாள் காலையில் வழமையான கதவுத் தட்டல்! திறந்தால் ஒரு கூட்டமே வீட்டின் முன்னால்! ஒரு பெரியவர் அதே வேதவசனங்களுடன் தொடர்ந்தார்! "நாங்கள் கென்ரன் பகுதியில் ஒரு திருச்சபை ஆரம்பித்துள்ளோம்! இப்பகுதி தமிழ்மக்களுக்கு ஆண்டவனின் கிருபையை பெற்றுக் கொடுப்பதற்கு! ஆண்டவனின் இச்செய்தியை ..." இடைமறித்த நான் "அதோ அந்த முன்றாவது வீடு ஒரு முஸ்லீம் வீடு! அங்கு சென்றீர்களா?" என்றேன். பதிலில்லை!!! "ஏன் தொந்தரவு கொடுக்கிறீர்கள்! உங்களுக்கு சைவசமயத்தவர்களின் வீடுகள்தானா கண்ணுக்குத் தெரிகிறது?? அதுதான் சொவ்ற்ராகற்றும்!! ஏமாற்றவும் இலகு!! .... தயவு செய்து எம்மவர்களின் இங்குள்ள அவலங்களைப் பயன்படுத்தி வயிறு நிறைக்க முற்படாதீர்கள்" என்று கூறி அனுப்பி வைத்தேன்.....

* புலத்தில் வாழும் வெள்ளையினத்தவர்கள் மத்தியில் மத நம்பிக்கை அருகிக் கொண்டுவருகிறது. பல சேர்ச்சுகள் மூடப்பட்டுக் கொண்டிருக்கிறன. அம்மதத்திலேயே பிறந்த மக்கள் மீது மத நம்பிக்கையை ஏற்படுத்தாது, பிறமத மக்கள்மீதேன் அபரிமிதமான அன்பு??????

Print this item

  உதவி
Posted by: sruthi - 01-29-2006, 09:59 PM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (5)

உதவி

MsnHot mail என்றால் என்ன?எனக்கு யாராவது எனக்கு அறியத்தருவீர்களா? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> [/img]

Print this item

  Some Funny Quotes &amp; Jokes
Posted by: manimaran - 01-29-2006, 09:52 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - Replies (7)

"England and America are two countries divided by a common language."

"My reputation grows with every failure."

"In politics, if you want anything said, ask a man; if you want anything done, ask a woman."
Margaret Thatcher

"When a man steals your wife there is no better revenge than to let him keep her."
Sacha Guitry

"My advice to you is get married: if you find a good wife you'll be happy; if not, you'll become a philosopher."
Socrates.

"My wife has a slight impediment in her speech. Every now and then she stops to breathe."

"Women complain about PMS, but I think of it as the only time of the month when I can be myself

Print this item

  மூச்சுவிட மகிந்தவுக்கு சிலநாட்கள்
Posted by: வினித் - 01-29-2006, 09:21 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

மகிந்தவுக்கு மூச்சுவிட மட்டும் அல்ல- பேசவும் கால அவகாசம் கொடுத்திருக்கும் விடுதலைப் புலிகள்
-அருஸ் (வேல்ஸ்)-

அமைதி முயற்சியில் அடுத்த காய்நகர்த்தலுக்கு தயாராகிவிட்டர்கள் விடுதலைப் புலிகள். திரைமறைவில் யுத்த முனைப்புக்களை தீவிரப்படுத்தி, யுத்தகால அமைச்சரவையை கூட உருவாக்கும் திட்டங்களை வகுத்துக்கொண்டு வெளியே சமாதானத்தின் பிரியர் போல நாடகமாடுகிறது சிறிலங்கா அரசு.

தனது பங்காளியான ஜாதிக ஹெல உறுமயவை தூண்டிவிட்டு அமைதி முயற்சிக்கு முயற்சிப்பவர்களின் ஒரு சாதாரண உலங்குவானூர்தி வசதியைக்கூட பெரிதாக திரிவுபடுத்தி, தான் பெரும் அழுத்தங்களின் மத்தியில் அமைதி முயற்சியில் ஈடுபட்டு இருப்பது போல மகிந்த வெளி உலகிற்கு நாடகத்தை தொடங்கினார்!

அதாவது 'நான் அடிப்பது போல அடிக்கிறேன் நீ அழுவது போல அழு" என்று. ஆனால் பாலசிங்கம் உலங்குவானூர்தியில் வந்து கிளிநொச்சியில் இறங்கிய பின்பு அரசை விட்டு ஹெல உறுமய வெளியேறவில்லை?

அதேபோலவே பேச்சுவார்த்தைக்கான இடப்பிரச்சனையும், இதற்கு ஜே.வி.பி., ஹெல உறுமயவுடன் சேர்ந்து நாடகமாடினார்கள்.

இனப்பிரச்சனையை விட பேச்சுவார்த்தைக்கான இடத்தை பெரிதுபடுத்த முற்பட்டார்கள். இனவாதிகளான இவர்கள் தாங்களாகவே ஒரு எதிர்ப்பை கொண்டுவந்து பின் தாங்களாகவே கரணமடித்தார்கள்.

சுவிற்சலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லையே தவிர அது ஒரு ஐரோப்பிய நாடு. ஆசியாவை ஏன் மறந்தார்கள் இவர்கள்?

இவை அனைத்தும் வெளிஉலகிற்கு தாங்கள் பெரும் அழுத்தத்தில் இருப்பது போன்ற மாயையை உருவாக்கும் திட்டம்.

இதற்கு வழிசமைத்தவர்கள் யார்?

இன்று இனவாத சிங்கள ஆங்கில ஊடகங்களும், சிங்கள புலனாய்வுத்துறையும் தலைகால் புரியாமல் ஆடுவது எதனால்?

1948இல் தமிழ் மக்களுக்கு அநீதியிழைத்த பிரிட்டன்தான் 2005 இலும் ஒரு கொடுமையை இழைத்தது.

தனது கைக்கு ஐரோப்பிய ஒன்றியத் தலைமை பொறுப்பு வந்தவுடன் யார் செய்தார்கள் என்று சிறிலங்கா அரசால் கூட தடயங்களை கண்டுபிடிக்க முடியாது போன வெளிநாட்டமைச்சர் கதிர்காமரின் கொலையை, சிறிலங்கா அரசின் போலிப்பிரச்சாரத்தை நம்பி புலிகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வரவேற்பதில்லை என்ற புதிய அழுத்தத்தை கொண்டு வந்தார்கள்.

போர் நிறுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை புலிகளை சினமடைய வைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இதன் மூலம் குதூகலமடைந்த சிங்கள அரசு இத்தடையை முழுமையான தடையாக மாற்றுவதற்கு தனது புலனாய்வுத்துறையையும் ஒட்டுக்குழுக்களையும் பயன்படுத்தி அப்பாவி மக்களையும் இனப்பற்றாளர்களையும் கொன்று அதை புலிகள் மீது சுமத்தி தனது இனவாத சிங்கள ஆங்கில ஊடகங்களின் மூலம் சர்வதேசத்திற்கு காட்ட முற்படுகிறது.

இதில் மிகக் கேவலமான குற்றச்சாட்டு மாமனிதர் பரராஜசிங்கத்தை புலிகள் கொன்றதாக ஒரு சிங்கள நாளேடு செய்தி வெளியிட்டமை. நீங்கள் அவதானித்தீர்களானால் பிரிட்டனின் தடைக்கு பின்பு தான் இக் கொலைகள் உச்சக்கட்டத்திற்கு சென்றுள்ளது. இக்கொலைகளுக்கும், குழப்ப நிலைக்கும் பிரிட்டனின் நடவடிக்கை மறைமுக காரணியாக உள்ளது என்பது மறுப்பதற்கில்லை.

ஒருபுறம் நிழல் யுத்தத்திலும் மறுபுறம் சர்வதேசத்தில் புலிகளுக்கு அழுத்தத்தையும், அரசுக்கு ஆதரவையும் தேடும் மகிந்தரின் முயற்சியில் முதற்படியாக எரிக் சொல்ஹெய்மை வசை பாடியபடி இந்தியாவிற்கு ஓடினார்.
இந்தியா கைவிரித்துவிட தனது வெளிநாட்டமைச்சரை அமெரிக்காவிற்கு அனுப்பினார்.

இவை எல்லாம் ஏன்?

உண்மையிலேயே சமாதானத்தை விரும்பியிருப்பின் சமாதானத்திற்கு உதவ எப்பவும் தயாராக இருந்த நோர்வேயை நாடியிருப்பார்.

ஆனால் அவர் தனது பலவீனமான படைக்கு பலம் சேர்க்கும் முயற்சிக்கே உலகெங்கும் பிச்சை எடுக்கிறார்.

அமெரிக்கா பங்காளியாக விரும்பவில்லை. ஆனால் மக்கள் படையின் தாக்குதலால் நிலை ~குலைந்து போயுள்ள சிறிலங்கா படைகளிற்கு ஆறுதல் வார்த்தை கூற முன்வந்துள்ளது.

அமெரிக்கத் தூதுவர் ஜெப்ரி லான்ஸ்டெட் சொல்கிறார், வலிமையான இராணுவத்தை புலிகள் சந்திக்க வேண்டி இருக்குமாம். இருக்கட்டும். சோவியத்தின் ஸ்ராலின் கிராட்டை ஆக்கிரமித்த போது ஜேர்மன் இராணுவம் உலகில் வலிமைமிக்க இராணுவம்தான்.

ஆனால் சோவியத்தின் செம்படையும், மக்களும் திருப்பித்தாக்கும் போது ஜேர்மன் இராணுவத்தால் தனது நாட்டு எல்லைகளைக்கூட பாதுகாக்க முடியாமல் போய்விட்டது.

வலிமையான இராணுவம் இருக்க ஏன் உலகெங்கும் உதவிகேட்டு திரிகிறார்கள்?

ஜெப்ரி லான்ஸ்டெட்டின் கருத்து மிகப் பலவீனமான சிறிலங்கா படைகளை மறைமுகமாக இனங்காட்டி நிக்கிறது.

இதே அமெரிக்கர்கள் தான் ஆனையிறவை மிகப்பலம் வாய்ந்த முகாம் என சந்திரிகாவிற்கு அறிக்கை சமர்ப்பித்தவர்கள். அத்துடன விடவில்லை. நடைபெற்ற எல்லா தாக்குதல்களும் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாக கூறுகிறார்!

சரி, அவரிடம் ஆதாரங்கள் இருந்தால் கண்காணிப்புக்குழுவிடம் கொடுக்கலாம். அவர்கள்தான் ஆதாரம் கேட்டுத்திரிகிறார்கள்.

தனது அரசின் மீது சரிந்து போயுள்ள சர்வதேச நிலைப்பாட்டை மீளகட்டியெழுப்பப முயல்கிறார் மகிந்த. மக்கள் படையின் தாக்குதலை அடுத்து புலிகள் ஒரு தலைப்பட்சமாக யுத்தத்தை தொடங்கப்போகிறார்கள் என வழமை போல சிறிலங்கா புலனாய்வுத்துறையின் தவறான கணிப்பீட்டை நம்பி தன்னை சமாதானப் பிரியராக உலகிற்கு காட்ட நாடகமாடுகிறார்.

அதன் வெளிப்பாடே அண்மையில் கூட்டப்பட்ட சர்வகட்சி மகாநாடு, ஐரோப்பிய நாட்டில் பேச்சு நடத்த ஒப்புக்கொண்டவை எல்லாம்.

ஆனால் மகிந்த அரசுத் தலைவராக பதவி ஏற்றதில் இருந்து அமைதிக்காக எந்தவித நல்லெண்ண சமிக்கைகளும் ஏற்படுத்தவில்லை என்பது தான் உண்மை.

இறுதியாக புலிகள் தனக்கு மூச்சு விடக்கூட காலம் தரவில்லை என அனுதாப அலையை ஏற்படுத்த முயன்றார். தமிழ் மக்களையும், விடுதலைப் புலிகளையும் பயன்படுத்தி சிங்கள அரசு உலக ஆதரவைப் பெறுவதை விடுதலைப் புலிகள் அனுமதிக்கப் போவதில்லை. எனவே அரசின் இராஜதந்திரத்தை முறியடிக்க விடுதலைப் புலிகள் மிகச் சாதூர்யமாக காய்நகர்த்தி விட்டார்கள்.

நாளாந்த இராணுவ படுகொலைகளிலும், அக்கிரமத்திலும் சிக்கித்தவித்த தமிழ் மக்களை விடுவிக்க அரசிற்கும் சர்வதேச உலகிற்கும் புலிகளால் கொடுக்கப்பட்ட இறுதிச்சந்தர்ப்பமாக ஒஸ்லோவில் பேச்சு என்ற தங்கள் நிலையை தளர்த்தி ஜெனீவாவில் பேச சம்மதித்திருக்கிறார்கள்.

அதிலும் ஒருபடி மேலே போய் கைதியாக இருந்த சிங்கள அரசின் காவல்துறை உறுப்பினரை விடுதலை செய்து ஒரு நல்லெண்ண சூழலை உருவாக்கியுள்ளனர் புலிகள்.

ஆனால் ஜெனீவாவில் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னம் அரசு இயல்பு நிலையை உருவாக்க வேண்டும்.

தேசியத் தலைவரின் தொலைநோக்கு சிந்தனையுள்ள இம்முடிவு அரசின் கபட நாடகத்தை இலகுவாக அம்பலப்படுத்திவிடும். இப்போது பந்து அரசினதும் அரசிற்கு முண்டு கொடுக்கும் சில உலக நாடுகளினதும் தலையில். மகிந்த இம்முடிவை எதிர்பார்த்திருக்க மாட்டார். என்ன செய்யப் போகிறார்?

பேச்சுவார்த்தை யுத்தநிறுத்த அமுலாக்கத்தை பற்றியதாகவே இருக்வேண்டும் என புலிகள் உறுதிபட கூறிவிட்டார்கள்.

யுத்த நிறுத்தத்தை பயன்படுத்தி புலிகள் பலமடைகிறார்கள் என கூக்குரலிடும் கூட்டணியில் புதைந்துபோயுள்ள மகிந்தவால் யுத்த நிறுத்தத்தை பலப்படுத்த முடியுமா?

யுத்த நிறுத்த அமுலாக்கத்தில் அரசால் மிகவும் சிக்கலாக்கப்பட்ட சரத்துக்களாவன:

விதி 1.8 இன்படி சிறிலங்கா அரசாங்கம் தமிழ் ஆயுதக்குழுக்களிடம் இருந்து ஆயுதங்களை களைதல், தமிழ் ஆயுதக்குழுக்களை வடக்கு-கிழக்கிற்கு அப்பாற்பட்ட பகுதிகளிற்கு அகற்றுதல வேண்டும். கண்காணிப்புக்குழுவும், இணைத்தலைமை நாடுகளும் இதனை பலமுறை அரசிடம் எடுத்துக் கூறியுள்ளன. எனவே பேச்சின் போது அரசு இதைதட்டிக்கழிப்பது முடியாத காரியம்.

விதி 2.11 இன்படி மீன்பிடி கட்டுப்பாடானது படிப்படியாகத் தளர்த்தப்பட்டு, இரவு-பகல் மீன்பிடி கட்டுப்பாடுகளும் விலக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இப்போது தான் அதிகப்படியான கட்டுப்பாடுகளை அரசும் இராணுவமும் விதித்துள்ளது.

விதி 2.12 இன்படி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தேடுதல்கள், கைது செய்தல் என்பன நடக்கக்கூடாது. ஆனால் கதிர்காமரின் கொலையை பயன்படுத்தி கொண்டு வரப்பட்ட அவசரகாலச்சட்டம் பாரதூரமான யுத்த நிறுத்த மீறலாகும்.

விதி 2.3, 2.4 இன்படி படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பாடசாலைகள், பொதுக் கட்டடங்கள் விடுவிக்கப்பட வேண்டும். இதை அமுல்படுத்த விடாது உயர் பாதுகாப்பு வலயத்தை பாதுகாப்பு காரணமாகக்காட்டி அறிக்கை சமர்ப்பித்தவர்தான் தற்போதைய இராணுவத்தளபதி. இப்போது இதனை அவர் நிறைவேற்றுவார?

விதி 2.5 இன்படி பாதுகாப்பு நடவடிக்கைகளையும், சோதனைச் சாவடிகளையும் குடிசனங்கள் நெருக்கமாக உள்ள நகரங்களிலும் பட்டணங்களிலும் பொதுமக்களுக்கு தொந்தரவு செய்யப்படுவதை தவிர்க்கும் வகையில் அகற்றுதல் வேண்டும். தற்போது புதிது புதிதாக காவலரன்கள் அமைப்பதில் தான் இராணுவம் முனைப்புடன் ஈடுபடுகிறது.

மேற்கூறப்பட்ட சரத்துக்களை அமுலாக்குமா அரசு? புலிகளின் இந்த நகர்வு அரசியல் இராணுவ ரீதியாக பலவீனப்பட்டுள்ள அரசை மேலும் பலவீனமாக்கும் என்பதே நிதர்சனம்.

சிறிலங்காவின் யுத்த மேகம் தற்காலிகமாக ஜெனீவா நோக்கி நகர்ந்துள்ளது. அத்துடன் நில்லாமல் மகிந்தவிற்கு மூச்சுவிட அல்ல பேசவே காலம் கொடுத்துள்ளார்கள் புலிகள். ஜெனீவா பேச்சு அரசின் நாடகத்தை அம்பலப்படுத்தும் என்பது மட்டும் உண்மையாவதுடன் மீண்டும் இராஜதந்திரத்தில் தோற்றுப்போனது சிங்கள அரசு.



நன்றி:தமிழ்நாதம்

Print this item