Yarl Forum
அவுஸ்திரேலியர்களின் இனவெறி (Racism) - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: விளையாட்டு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=41)
+--- Thread: அவுஸ்திரேலியர்களின் இனவெறி (Racism) (/showthread.php?tid=1120)



அவுஸ்திரேலியர்களின் இனவெறி (Racism) - kuruvikal - 01-30-2006

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41271000/jpg/_41271316_cricket_whites_203.jpg' border='0' alt='user posted image'>

தற்போதைய பருவகாலத்துக்கான அவுஸ்திரேலிய கிரிக்கெட் ரெஸ்ட் சுற்றுப் போட்டிகளின் போது தங்கள் வீரர்கள் மீது அவுஸ்திரேலிய ரசிகர்கள் போகும் இடமெங்கும் இனவெறியைக் காட்டியதாக தென்னாபிரிக்க வீரர்களும் நடந்துவரும் ஒரு நாள் போட்டிகளில் போது தங்கள் மீதும் இனவெறித்தாக்குதல் நடந்ததாக சிறீலங்கா வீரர்களும் கவலை தெரிவித்திருப்பதுடன் இது தொடர்ந்தால் எதிர்காலத்தில் அவுஸ்திரேலியாவுக்கான தங்கள் சுற்றுலாவை தாங்கள் பகிஸ்கரிக்கப் போவதாக தென்னாபிரிக்கா அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் தற்போது நடந்துவரும் அவுஸ்திரேலியா சிறீலங்கா தென்னாபிரிக்கா கலந்து கொள்ளும் முத்தரப்பு ஒருநாள் VB தொடரின் போதும் நேற்று (29-1-2006) போட்டி நடந்த வேளையில் கூட சிறீலங்கா வீரர்கள் இனவெறித்தாக்குதலுக்கு உள்ளானதாக சிறீலங்கா வீரர்களும் குற்றம்சாட்டி இருக்கின்றனர்..!

தகவல்- பிபிசி.கொம்

( http://news.bbc.co.uk/sport1/hi/cricket/4661270.stm )


- MUGATHTHAR - 01-30-2006

இதற்கு முன்னரும் ஒருமுறை இலங்கையணி அவுஸ்ரேலியா சென்றிருந்த சமயம் விமானநிலையத்திலயே திவீர சோதனைகள் நடந்ததாக வீரர்கள் பேட்டி குடுத்திருந்தார்கள் ஒரு நாட்டுக்கு விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள வருபவர்களை வி.ஜ.பி முறையில் கௌரவிக்க அந்த நாட்டு அரசாங்கமே தவறும் போது மக்கள் எம்மாத்திரம் .......... இதுக்கெல்லாம் சேர்த்து மச்சிலை தன்னும் அடிச்சு தூள் பண்ணிட்டு வாங்கோடா எண்டால் தலைகீழா எல்லா விளையாடுறாங்கள் பிறகென்ன செய்யிறது.........


- Danklas - 01-30-2006

இங்கிலாந்து கால் பந்து ரசிகர்களுக்கு இருக்கிற வருத்தம் அவுஸ்ரேலியன் கிரிக்கட் ரசிகர்களுக்கு இருக்கு.. :evil: :evil:


- Thala - 01-30-2006

Danklas Wrote:இங்கிலாந்து கால் பந்து ரசிகர்களுக்கு இருக்கிற வருத்தம் அவுஸ்ரேலியன் கிரிக்கட் ரசிகர்களுக்கு இருக்கு.. :evil: :evil:

இங்கிலாந்து கால்ப்பந்து ரசிகர்களை அடக்க அரசாங்கம் முயற்ச்சிசெய்யுது.... பத்திரிகைகள் அப்படியானவர்களைக் கீழ்த்தரமான குலிகன்ஸ்" எண்ற வர்ணிக்குது
....... ஆனால் அஸ்ரேலிய அரசு அப்படி அல்ல... பத்திரிகைகளும் அப்படி செய்வதில்லை...... காரணம் என்ன எண்று தெரிவதில்லை....


- Danklas - 02-06-2006

<b>அவுஸ்திரேலியாவில் விளையாட விரும்பவில்லை</b>

<b>ரசிகர்களின் தொல்லையால் முரளி விரக்திஅவுஸ்திரேலியாவில் இனிமேல் விளையாட விரும்பவில்லையென இலங்கையின் முரளிதரன் கூறியுள்ளார்.

<img src='http://img19.imageshack.us/img19/124/sp26ct.jpg' border='0' alt='user posted image'>

அவுஸ்திரேலியா, இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா பங்கு பெறும் முத்தரப்புத் தொடர் அவுஸ்திரேலியாவில் நடக்கிறது. இத்தொடரில் ரசிகர்கள் முரளிதரனை நோக்கி `நோபோல்' என பல போட்டிகளில் கூச்சலிட்டனர். இதுபற்றி அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

எனது பந்து வீச்சில் எந்தத் தவறும் இல்லை என சர்வதேச கிரிக்கெட் சபை முன்னால் நான் நிரூபித்துள்ளேன். விதிகளுக்கு புறம்பாக நான் பந்து வீசவில்லை. எனது பந்து வீச்சு, போட்டிகள் மற்றும் பரிசோதனைக் கூடங்களில் சோதனை செய்யப்பட்டுள்ளது.

ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாகப் பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளேன். ஒவ்வொரு போட்டியிலும் நான் பந்து வீசும் போது ரசிகர்கள் `நோபோல்' என கூச்சலிடுகின்றனர். நான் பவுண்டரியில் களத்தடுப்பு செய்யும்போதும் அதேபோல் கோஷங்கள் எழுப்புகின்றனர்.

மற்ற பந்து வீச்சாளர்கள் போல் தான் நானும். இனி வரும் காலங்களில் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய விரும்பவில்லை. ஆனால், இது தீர்க்கமான முடிவு அல்ல என்றும் முரளிதரன் தெரிவித்தார். இதேநேரம், முரளிதரனின் பந்து வீச்சில் எதுவித தவறுமில்லையென அவுஸ்திரேலிய நிபுணர்கள் மீண்டும் தெரிவித்துள்ளனர். முரளியின் பந்து வீச்சுகள் யாவும், குறிப்பிட்ட 15பாகைக்குள்ளேயே இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</b>

thinakural.