Yarl Forum
"கடவுள்களின் பெயரில்"....பித்தலாட்ட கூட்டங்கள்..... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: "கடவுள்களின் பெயரில்"....பித்தலாட்ட கூட்டங்கள்..... (/showthread.php?tid=1123)

Pages: 1 2 3


"கடவுள்களின் பெயரில்"....பித்தலாட்ட கூட்டங்கள்..... - cannon - 01-29-2006

வார இறுதி நாட்களில் இவைகள் வழமையான நிகழ்வுகளாகி விட்டன. எதைக் கூறுகிறேன், எல்லோரும் அறிந்ததே! புலத்தில் ஏற்படும் எம்மவர்களின் மத்தியில் குடும்ப/பொருளாதார வாழ்வியல்களில் ஏற்படும் பிரட்சனைகளை பயன்படுத்தி "குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க" முற்படும் சமயப் பித்தலாடிகளைத்தான் குறிப்பிடுகிறேன்.

சம்பவம் 1:

சில மாதங்களுக்கு முன்னம் நானிருக்கும் லண்டன் புறநகர் பகுதியிலிருக்கும் சொப்பிங் சென்ரருக்கு சென்றிருந்தேன். வாயிலில் ஒரு தமிழ் இளைஜன் கையில் துண்டுப் பிரசுரக்கட்டுக்களுடன் நின்றிருந்தான். அவன் தமிழ் முகங்களைத் தேடுவது புரிந்தது. "அண்ணா, தமிழ்தானே" .."ஓம்" என்றேன். எனது கையில் ஒரு துண்டு பிரசுரத்தை திணித்துக் கொண்டு "உங்களை இறைவன் ஆசீர்வதிக்கப்போகிறார், என்னை தூதுவராக அனுப்பியுள்ளார், உங்களை இயேசு தன்னிடம் அழைக்கிறார்"... நான் சொன்னேன் "தம்பி, இப்ப ஆண்டவனிடம் போக வயசு வரவில்லை, ஆகையால் என்னை விடுங்கோ"......

சம்பவம் : 2

இரண்டு அழகிய தமிழ் யுவதிகள், எனது வீட்டுக்கருகிலுள்ள கடைத்தெருவில் "நீங்கள் தமிழா? அருகிலா இருக்கிறீர்கள்? எங்கு உங்களது வீடுள்ளது?" ... "ஏன்?" என்றேன். "இயேசு ஆண்டவன் எங்களை உங்களிடம் அனுப்பியுள்ளார், உங்களுடன் சில நிமிடங்கள் கதைக்க வேண்டும்" "இல்லை, இப்போ எனது மனைவி என்னை கடைக்கு அனுப்பியிருக்கிறா, சாமான் வேண்டவில்லையாயின் சாப்படு இன்றில்லை, சில நிமிடம் உங்களுடன் நின்றால் வயிறு அம்போ! பேந்து உங்கள் ஆண்டவனும் சாப்பாடு தரமாட்டார்".....

சம்பவம்: 3

ஒரு ஞாயிறு காலையில் வீட்டுக்கதவு தட்டப்படுகிறது. திறந்தால் மூன்று பெண்மணிகள். "நாங்கள் இப்பகுதியிலுள்ள எல்லா தமிழர்களையும் சந்தித்து வருகிறோம், அதுதான் இப்ப உங்களையும்..." எனக்கு இவர்கள் யாரென்று புரிந்து விட்டது, அதனால் வீட்டினுள்ளும் கூப்பிட மனமில்லை "ஓம், சொல்லுங்கோ" என்றேன். "இல்லை, நாங்கள் எம்மவர்கள் மத்தியிலுள்ள வாழ்க்கை/குடும்ப பிரட்சனைகளைப் பற்றிக் கதைக்க வந்திருக்கிறோம்" என்றார்கள். நானோ "மன்னிக்கவும், எனது தனிப்பட்ட வாழ்க்கையை யாருடனும் விவாதிக்க விரும்பவில்லை" என்றேன். "இல்லை, பறவாயில்லை, இயேசு உங்களிடம் எம்மை அனுப்பியுள்ளார்! அவரின் செய்தியை/மகிமையை உங்களுடன் சில நேரங்கள்..." என்றார்கள். நானோ "இல்லை, எனக்கு என் மதமே போதும்! அதையே சரியாக பின்பற்ற நேரமில்லை! என் மதத்தில் ஏதும் பிழைகள் இருப்பதாக எனக்கு இப்போ தெரியவில்லை, ..." எப்படி கூறியும் விடுகிறார்களில்லை! தொடர்ந்து விவாதிக்கிறார்கள்! இறுதியில் சொன்னேன் "அங்கு சுனாமியினால் பாதிக்கப்பட்டு பலர் அவதியுறுகிறார்கள், அவர்களுக்கு ஏதாவது நிதி சேகரித்து அனுப்ப இந்த நேரத்தைப் பயன்படுத்துங்களேன், புண்ணியம் கிடைக்கும்" என்றேன். அவர்களோ உடனே "நாங்கள் மக்கள் கொல்லப்படுவதற்கு உடந்தையாக இருக்கமாட்டோம்" என்றார்கள். எனக்குப் புரியவில்லை "என்ன சொல்கிறீர்கள்" என்றேன். "இல்லை, உதுகளைப் பார்க்க எங்களை ஆண்டவன் அனுப்பவில்லை" என்றார்கள். என்னை பொறுமையின் உச்சத்துக்கு கொண்டு சென்றுவிட்டார்கள். நானோ "இப்படி றோட்டு வழியே திரிந்தால் நாளை திருமணமும் கஸ்டம்தான்! வீடுகளில் போயாவது ஒழுங்காக இருங்கோ! நல்லதாவது நடக்குமென்று" கூறி கதவைச் சாத்தி விட்டேன்......

சம்பவம் 4

சில வாரங்களுக்கு முன்னம் வார இறுதி நாள் காலையில் வழமையான கதவுத் தட்டல்! திறந்தால் ஒரு கூட்டமே வீட்டின் முன்னால்! ஒரு பெரியவர் அதே வேதவசனங்களுடன் தொடர்ந்தார்! "நாங்கள் கென்ரன் பகுதியில் ஒரு திருச்சபை ஆரம்பித்துள்ளோம்! இப்பகுதி தமிழ்மக்களுக்கு ஆண்டவனின் கிருபையை பெற்றுக் கொடுப்பதற்கு! ஆண்டவனின் இச்செய்தியை ..." இடைமறித்த நான் "அதோ அந்த முன்றாவது வீடு ஒரு முஸ்லீம் வீடு! அங்கு சென்றீர்களா?" என்றேன். பதிலில்லை!!! "ஏன் தொந்தரவு கொடுக்கிறீர்கள்! உங்களுக்கு சைவசமயத்தவர்களின் வீடுகள்தானா கண்ணுக்குத் தெரிகிறது?? அதுதான் சொவ்ற்ராகற்றும்!! ஏமாற்றவும் இலகு!! .... தயவு செய்து எம்மவர்களின் இங்குள்ள அவலங்களைப் பயன்படுத்தி வயிறு நிறைக்க முற்படாதீர்கள்" என்று கூறி அனுப்பி வைத்தேன்.....

* புலத்தில் வாழும் வெள்ளையினத்தவர்கள் மத்தியில் மத நம்பிக்கை அருகிக் கொண்டுவருகிறது. பல சேர்ச்சுகள் மூடப்பட்டுக் கொண்டிருக்கிறன. அம்மதத்திலேயே பிறந்த மக்கள் மீது மத நம்பிக்கையை ஏற்படுத்தாது, பிறமத மக்கள்மீதேன் அபரிமிதமான அன்பு??????


- Aravinthan - 01-30-2006

லண்டனில் நான் இருக்கும் போது இவர்களின் இம்சைகளைத் தாங்கமுடியாது. நத்தார் தினங்களில் ஜேசுவின் கதைகள் பதித்த விடியோ கசட்டுகள் வீடு வீடாய்க் கொண்டுவந்து இலவசமாகத்தருவார்கள். நாங்கள் நண்பர்களுக்கு கொடுப்பதற்கு என்று சொல்லி மேலும் மேலும் கசட்டுகளினை கேட்டுப்பெற்றுக்கொள்வோம். உண்மையில் நாங்கள் இக்கசட்டுகள் வாங்குவதன் நோக்கம் எதாவது சினிமாப்படம்,செய்திகள், விளையாட்டுக்கள் இக்கசட்டில் பதியலாம் என்பதற்காகவே.

சன்ரைஸ் ரேடியோவில் கிறிஸ்தவ நிகழ்ச்சியில் சைவசமயத்தினைச்சேர்ந்த அறிஞர்களின் கருத்தினை அவர்களின் பெயரினையும் உபயோகித்து கருத்துக்கள் சொல்வார்கள். கேட்பதற்கு எதோ இந்த அறிஞர்கள் கிறிஸ்த சமயத்தினைச் சேர்ந்தவர் போலத்தோன்றும். சிவனுக்குச் சொன்ன கருத்துக்கள் ஜேசுவுக்குச் சொன்ன கருத்துக்களாக மாற்றப்படும்.

ஈழத்தில் போரினால் உறவுகளினை இழந்த சிறுவர்களுக்கு உணவுகள் வழங்கும் சிலர், சிறுவர்களிடம் உணவினை யார் தந்தது எனக்கேட்க சிறுவர்கள் நீங்கள் தான் தந்தது எனப்பதில் அழிக்க, இவர்கள் இல்லை,இல்லை ஜேசுதான் தந்தது என்று சிறுவர்களிடம் கூறி மதமாற்றம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.


- தூயவன் - 01-30-2006

இது இப்ப என்றில்லை. யாழ்பாணத்தில் இருக்கும்போதும் வீடு வீடாக வந்து கடவுளை விற்றுக் கொண்டிருப்பார்கள். வீட்டில் வந்து முருகனுக்கு என்ன இரண்டு கலியாணம், பிள்ளையார் ஏன் கட்டாமல் இருக்கின்றார் என்று கீழ்தரமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

இவர்களுக்கு ஆட்களை மதம் மாற்றிக் கொடுத்தால் காசு கிடைக்ககூடும் என நினைக்கின்றேன்.


- MUGATHTHAR - 01-30-2006

இங்கு மத பிரச்சனையொண்டு உருவாக்க இந்ந தலைப்பு வழிவகுப்பது போல் தெரிகிறது. . .எந்தவிதமாகவும் மற்றய மதத்தவரை தாக்காமல் உங்களின் கருத்தகளை எழுதினால் நல்லம் ஒவ்வொருவருக்கும் அவரது இனம் மதம் பெரியதுதான் சிலபேர் செய்யும் தேவையில்லாத மதப்பிரச்சாரங்கள் அம்மதத்தில் இருக்கிற எல்லோரையும் பாதிப்பது கவலைக்குரியது நான் இருக்கும் நாட்டில் 5 நேரமும் தொழுகை எண்டு ஒவ்வொரு மணித்தியாலம் ஓய்வெடுக்கிறாங்கள் அந்த நேரத்தில் நாம்தான் வேலை செய்து நாய் ஆகிறோம் இதுக்காக அவர்களை கேள்வி கேட்டா கொண்டு போய் உள்ளுக்கை போட்டு சாத்திப்போடுவங்கள் இதுக்குள் என்ன பகிடி எண்டா அவர்களின் தொழுகைநேரங்களில் நாங்கள் றோட்டில் கூட நிக்கமுடியாது ரேடியோ போடக்கூடாது எப்படி சனத்துக்கு பக்தியை வரப்பண்ணப்பாக்கினம்...................


- கந்தப்பு - 01-30-2006

மெல்பேர்னில் இருந்து எனது நண்பர் ஒருவருக்கு அடிக்கடி அவருடன் படித்தவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இம்சிப்பார். சிவபெருமனைச்சாத்தான் என்று சொல்லி, சாத்தானை வணங்கமால் ஜேசுவினை வணங்கச்சொல்லி அடிக்கடி இம்சிப்பார். தொந்தரவு தாங்கமால் நண்பர் தொலைபேசி இலக்கத்தினை மாற்றிவிட்டார்.


- தூயவன் - 01-30-2006

MUGATHTHAR Wrote:இங்கு மத பிரச்சனையொண்டு உருவாக்க இந்ந தலைப்பு வழிவகுப்பது போல் தெரிகிறது. . .எந்தவிதமாகவும் மற்றய மதத்தவரை தாக்காமல் உங்களின் கருத்தகளை எழுதினால் நல்லம் ஒவ்வொருவருக்கும் அவரது இனம் மதம் பெரியதுதான் சிலபேர் செய்யும் தேவையில்லாத மதப்பிரச்சாரங்கள் அம்மதத்தில் இருக்கிற எல்லோரையும் பாதிப்பது கவலைக்குரியது நான் இருக்கும் நாட்டில் 5 நேரமும் தொழுகை எண்டு ஒவ்வொரு மணித்தியாலம் ஓய்வெடுக்கிறாங்கள் அந்த நேரத்தில் நாம்தான் வேலை செய்து நாய் ஆகிறோம் இதுக்காக அவர்களை கேள்வி கேட்டா கொண்டு போய் உள்ளுக்கை போட்டு சாத்திப்போடுவங்கள் இதுக்குள் என்ன பகிடி எண்டா அவர்களின் தொழுகைநேரங்களில் நாங்கள் றோட்டில் கூட நிக்கமுடியாது ரேடியோ போடக்கூடாது எப்படி சனத்துக்கு பக்தியை வரப்பண்ணப்பாக்கினம்...................

இல்லை முகத்தார். இது சமூகத்தில் நடக்கின்ற பிரச்சனை. இது கட்டாயம் விவாதிக்கப்பட வேண்டியவை. சொல்லப் போனால் கத்தோலிக்கத்தைச் சேர்ந்தவர்கள் இப்படிப்பட்டவர்பளாக இனம் காணப்படவில்லை. அவர்கள் தவிர்ந்த புதுப்புதுப் பிரிவுகள் தான் இப்படிக் கூட்டம் சேர்க்கினம்.


- வர்ணன் - 01-30-2006

<b>மேற்கோள்:

இல்லை முகத்தார். இது சமூகத்தில் நடக்கின்ற பிரச்சனை. இது கட்டாயம் விவாதிக்கப்பட வேண்டியவை. சொல்லப் போனால் கத்தோலிக்கத்தைச் சேர்ந்தவர்கள் இப்படிப்பட்டவர்பளாக இனம் காணப்படவில்லை. அவர்கள் தவிர்ந்த புதுப்புதுப் பிரிவுகள் தான் இப்படிக் கூட்டம் சேர்க்கினம்.</b>

விவாதிக்கவேண்டிய பிரச்சினை ஒரு புறம்- எங்க இனத்துக்க இன்னும் ஒரு பிரச்சினையை புதுசா கொண்டு வர போற விசயம் தூயவன்!

ஏரியா-சாதி-மாகாணம்-மாவட்டம்- இப்பிடி ஆயிரம் பிரச்சினை இருந்தாலும்- இரு மதங்களை கொண்டுள்ள தமிழருக்கிடையில எந்த பிரச்சினையும் வந்ததில்ல-
சொல்ல போனால்- தேவாலயத்துக்கு போகாத எந்த இந்துவுமே இருக்க முடியாது! அவ்ளோ ஒற்றுமையா இருக்கோம்!

அதை இப்பிடி வயிறு வளர்க்கிற கூட்டம் சும்மா வீதிக்கு வீதி நிண்டு புத்தகம் வித்து - குழப்பம் ஏற்படுத்துது!

அதை விட போராட்டம் எல்லாம் பாவம் எண்டு அட்வைஸ் வேற-! :evil: 8)


- தூயவன் - 01-30-2006

உப்படித் தான் எனக்குத் தெரிந்த சிலர் வன்னியில் இருக்கும்போது உப்படிக் கதைகளை நம்பி மதம் மாறியவை.
அப்போது ஒரு நாள் ஆமி செல்லடிக்கும ;நேரம் ஜயனே என்று கத்திவிட்டு, பிறகு சொறி சொல்லிப் போட்டு யேசுவே என்று திரும்பச் சொன்னார்கள். உண்மையில் அந்த நேரத்தில் அதைப் பார்க்க எனக்கு ஏளனமாகத் தான் தெரிந்தது. :wink:


- MUGATHTHAR - 01-30-2006

காசுக்காண்டியும் தனது சுயநலத்துக்காகவும் மதம் மாறுகிறவன் நாளை எமது தாய் நாட்டையும் பணத்துக்காக காட்டிக் குடுக்கமாட்டான் என்பது என்ன நிச்சயம் ஆனபடியால் இப்பிடியானவர்களுடன் கவனமாக இருக்கவேணும்


- வர்ணன் - 01-30-2006

மதம் மாறியவர்கள் என்பதை விட- ஏமாற்றப்பட்டவர்கள் என்பதே பொருத்தம்-

அடிமட்ட வாழ்வோடு போராடும் மக்கள்தான்- பெரும்பாலும் -இவர்களால் வெற்றி கொள்ளப்படுகிறார்கள்!
அந்த அப்பாவிகளின் மீது இவர்கள் "குதிரை" வண்டி நல்லாதான் ஓடுகிறது- தாயகத்தில்!

புலத்தில் பார்த்தால்- சமுக உதவியில் சோம்பேறித்தனமாய் வாழ்பவர்களே- வேலைக்கு அவசரத்தில் ஓடுபவனை இடைமறித்து- ஆண்டவன் பத்தி எடுத்து விடுகிறார்கள்-!

நாங்கள்- கஸ்டப்பட்டு உழைத்து கட்டிய வரியில்- உடல் வளர்த்து- புண்ணியம் அடைய என்ன வழி எண்டு அவர்கள் சொல்லும்- ஆலோசனைதான் - இந்த நூற்றாண்டின் நகைச்சுவை! 8)


- Mathan - 01-30-2006

இதை குறித்து பேசுவதில் தவறில்லை ஆனால் இது உணர்வுபூர்வமான பிரச்சனை என்பதால் பொதுப்படையாக குறிப்பிட்டு எந்த ஒரு மதத்தை சேர்ந்தவரின் மனதையும் புண்படுத்தாமல் கவனமாக கருத்துக்களை வையுங்கள். இந்து மதமாக இருந்தாலும் சரி கிறிஸ்தவ மதமாக இருந்தாலும் சரி பொதுப்படையாக அனைவரையும் சுட்டாமல் அதில் தவறு செய்பவர்களை மட்டும் குறிப்பிட்டு பேசலாம்.


- cannon - 01-30-2006

இத்தொடர் கண்டிப்பாக கிறிஸ்தவர்களையோ அல்லது கத்தோலிக்கர்களையோ பாதிக்கும் விதத்தில் எழுத முற்படவில்லை. இவ் "ஜெகோவா விற்னெஸ், பென்ரிகோஸ்" போன்றவற்றில் எம்மத்தியில் உள்ளோர் பெரும்பாலும் இந்துக்களாக இருந்து மதம் மாறியவர்களே!! எனக்குத் தெரிந்த கரவெட்டியை பிறப்பிடமாக கொண்ட சிவமாம் சோதியின் பெயரைக் கொண்ட ஒரு இளைஞர் ஒருவர் இலண்டனிலேயே மூன்று திருமணம் செய்து எல்லாவற்றையும் பிள்ளை குட்டிகளோடு கைவிட்டவர்!! இன்று இப்பித்தலாடிகளின் பிரபல "பாஸ்ரராம்(Paster)"!!!!!

இதை ஒரு தொடராக நான் கண்டவற்றை, கேட்டவற்றை, அறிந்தவற்றை கொண்டு எழுத விரும்புகிறேன். இத்தொடரில் எம்மவர் மத்தியில் ...
* ஸாயிபாபாவின் பெயரில் நடைபெறும் .....
* இஸ்லாத்தின் பெயரில் நடைபெறும் ....
* இந்துக் கோயில்களில் நடைபெறும்....
....... கூத்துக்களை எழுத கொணர விரும்புகிறேன்.

தொடரும் ..............


- தூயவன் - 01-30-2006

Mathan Wrote:இதை குறித்து பேசுவதில் தவறில்லை ஆனால் இது உணர்வுபூர்வமான பிரச்சனை என்பதால் பொதுப்படையாக குறிப்பிட்டு எந்த ஒரு மதத்தை சேர்ந்தவரின் மனதையும் புண்படுத்தாமல் கவனமாக கருத்துக்களை வையுங்கள். இந்து மதமாக இருந்தாலும் சரி கிறிஸ்தவ மதமாக இருந்தாலும் சரி பொதுப்படையாக அனைவரையும் சுட்டாமல் அதில் தவறு செய்பவர்களை மட்டும் குறிப்பிட்டு பேசலாம்.

இது மதன் ஏற்புடையதா?
இந்து மதத்தில் உள்ள குறைபாடுகள் வெளிப்படையாகவும், பொதுவாகவும் இங்கு விவாதிக்கப்பட்டன. அப்போது எல்லாம் இக் கேள்வி எழவில்லை.

மேலும், சுட்டிக்காட்டாமல் விவாதிப்பது என்பது சும்மா குறுக்கெழுத்துப் போட்டி நடத்துவது போலத் தான் கிடக்கும். மற்றும்படி அடையாளப்படுத்தப்படுவது அடையாளப்படுத்தப்பட்டே ஆகும்.


- தூயவன் - 01-30-2006

cannon Wrote:இத்தொடர் கண்டிப்பாக கிறிஸ்தவர்களையோ அல்லது கத்தோலிக்கர்களையோ பாதிக்கும் விதத்தில் எழுத முற்படவில்லை. இவ் "ஜெகோவா விற்னெஸ், பென்ரிகோஸ்" போன்றவற்றில் எம்மத்தியில் உள்ளோர் பெரும்பாலும் இந்துக்களாக இருந்து மதம் மாறியவர்களே!! எனக்குத் தெரிந்த கரவெட்டியை பிறப்பிடமாக கொண்ட சிவமாம் சோதியின் பெயரைக் கொண்ட ஒரு இளைஞர் ஒருவர் இலண்டனிலேயே மூன்று திருமணம் செய்து எல்லாவற்றையும் பிள்ளை குட்டிகளோடு கைவிட்டவர்!! இன்று இப்பித்தலாடிகளின் பிரபல "பாஸ்ரராம்(Paster)"!!!!!

இதை ஒரு தொடராக நான் கண்டவற்றை, கேட்டவற்றை, அறிந்தவற்றை கொண்டு எழுத விரும்புகிறேன். இத்தொடரில் எம்மவர் மத்தியில் ...
* ஸாயிபாபாவின் பெயரில் நடைபெறும் .....
* இஸ்லாத்தின் பெயரில் நடைபெறும் ....
* இந்துக் கோயில்களில் நடைபெறும்....
....... கூத்துக்களை எழுத கொணர விரும்புகிறேன்.

தொடரும் ..............

நிச்சயமாக
இந்து மதத்தில் சாமி வேடம் தரிப்பவர்களைப் பற்றியும் வெளிப்படுத்துங்கள். அவர்களின் வேடங்களும் களையப்பட வேண்டும்.


- Mathan - 01-30-2006

தூயவன் Wrote:இது மதன் ஏற்புடையதா?
இந்து மதத்தில் உள்ள குறைபாடுகள் வெளிப்படையாகவும், பொதுவாகவும் இங்கு விவாதிக்கப்பட்டன. அப்போது எல்லாம் இக் கேள்வி எழவில்லை.

மேலும், சுட்டிக்காட்டாமல் விவாதிப்பது என்பது சும்மா குறுக்கெழுத்துப் போட்டி நடத்துவது போலத் தான் கிடக்கும். மற்றும்படி அடையாளப்படுத்தப்படுவது அடையாளப்படுத்தப்பட்டே ஆகும்.

சுட்டிக்காட்டுவதில் தவறில்லை பொதுப்படையாக சொல்லும் போது அனைவரையும் குறிப்பதால் மற்றவர்களை புண்படுத்தும் வாய்ப்பு இருப்பதால் தவறு செய்பவர்களை மட்டும் குறிப்பிட்டு சொன்னால் நல்லதல்லவா.

மற்றது இந்துசமயம் தொடர்பான கருத்துக்களிலும் எனக்கு இதேமாதிரியான நிலைப்பாடு தான். ஒட்டுமொத்தமாக குற்றம் சொல்வது தப்பு. இதனை நீண்ட காலத்துக்கு முன்பு இந்து சமயம் குறித்த விவாதம் ஒன்று ஆரம்பித்த போது குறிப்பிட்டிருக்கின்றேன்.


- தூயவன் - 01-30-2006

அப்படிப் பாரத்தால் ஒன்றுமே விவாதிக்க மடியாது மதன். பாப்பானர்கள் என்று சொல்லுவது எல்லாம் ஒட்டு மொத்த பிராமணர்களையும். அங்கே எல்லோரும் ஜாதி வெறி பிடித்தவர்களா?
அப்படியே தமிழரைப் பற்றி விவாதிக்கப்படும்போது எல்லாம் பொதுப்படையான வார்த்தைகளைத் தான் பிரயோகிக்க வேண்டும். எனவே தனிப்பட்டரீதியில் சுட்டிக்காட்டவதை விட சிலவிடயங்கள் பொதுப்படையாக சொல்லித்தான் ஆகவேண்டும்.


- Danklas - 01-30-2006

இதற்கு காரணம் இந்துக்கள் தான்,,, முஸ்லீம் மதத்தவனது வீட்டில் போய் இப்படிக்கேட்டால் அவ்வளவும் தான்,, ஆனால் இந்துக்கள் வீட்டை போய் கதவை தட்டினால் திறப்பினம், திறந்தால் இவர்கள் மரியாதையாக, அன்பாக சொல்ல இவங்கட மனசு குளிர்ந்திடும், 2 சாத்து குடுத்து அனுப்பினால் சரிவரும்,, :evil: :evil:


- தூயவன் - 01-30-2006

Danklas Wrote:இதற்கு காரணம் இந்துக்கள் தான்,,, முஸ்லீம் மதத்தவனது வீட்டில் போய் இப்படிக்கேட்டால் அவ்வளவும் தான்,, ஆனால் இந்துக்கள் வீட்டை போய் கதவை தட்டினால் திறப்பினம், திறந்தால் இவர்கள் மரியாதையாக, அன்பாக சொல்ல இவங்கட மனசு குளிர்ந்திடும், 2 சாத்து குடுத்து அனுப்பினால் சரிவரும்,, :evil: :evil:

உண்மை தான் டண். முஸ்லீம் நாடுகளில் உள்ள அம்புலன்ஸ் வண்டிகளைப் பார்த்தால் அவர்கள் பிறை வடிவம் தான் போட்டிருப்பார்கள். செஞ்சிலுவையைப் பாவிக்கமாட்டார்கள்.

ஆனால் நாங்கள் கடவுளைக் கூட வியாபாரப் பொருளாக மாற்றி, மாற்ற இடம் கொடுத்தபடியால் தான் சிலர் தோளுக்கு மேல் ஏறி நின்று கூத்துக் காட்டுகின்றார்கள்.


- cannon - 02-12-2006

வணக்கம்!! நீண்ட இடைவெளிக்குப்பின்னம் மீண்டும் தொடர்கிறேன் ....

என்னுடன் வேலை செய்யும் நண்பரொருவர், "சாய்பாபாவின் பிறந்த தினத்திற்காக" தனது வீட்டில் பஜனை நடைபெற இருப்பதாக, என்னை குடும்பத்துடன் அழைத்திருந்தார். எனக்கு இவற்றில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், எனது குடும்பத்தில் சிலர் "பாபா பிளக் சிப் .." பாடுபவர்களாக இருந்தபடியால், அங்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன்.

வீடு முழுக்க விலையுயர்ந்த மலர்களால் சாயிபாபாவின் படங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவற்றின் நடுவே விலையுயர்ந்த ஆடம்பரக் கதிரை!! கதிரையைச் சுற்றியும் ஆடம்பர அலங்காரங்கள்!! ஆகா.. இக்கதிரையில் சாய்பாபா இருந்திருக்க வேண்டுமென ஊகித்துக் கொண்டேன்! ஆனால் புட்டபத்தியில் பாபா உட்கார்ந்த கதிரைதான் இங்கு விமானமூலம் கொண்டு வந்திருக்கிறார்களோ தெரியவில்லை???

அங்கு வந்திருந்த பக்தர்கள் வட இந்தியர்களும், எம்மிலுள்ள சில வசதியானவர்களும்!! எதோ நானும் அங்கு சென்று விட்டேன்!!!

மிக அமைதியாக பஜனை தொடங்கியது! மிக அமைதியாகவும் பக்தி மயமாகவுமிருந்தது! வந்திருந்த பலர் மாறி மாறிப் பாடினார்கள். ஆனால் பஜனை முடிந்த பின் தான் ரோதனைகள் ஆரம்பமாகியது. பஜனையின் பின் ஆராதனைகள் அட்டகாசமாக முடிந்தபின், பாரிய ஆடம்பர கேக் கொண்டுவரப்பட்டது. "கப்பி பேத்டே ரு பாபா" என்ற பாடலுடன் கேக் வெட்டிப் பரிமாறப்பட்டது. பின் ஆடம்பரமாக பலவகை உணவு வகைகளுடன் இராப்போசனம் வந்திருந்தவர்களுக்குப் பரிமாறப்பட்டது.

சாய்பாவின் பஜனை மன்னிக்கவும் ஆடம்பர பேத்டே நடத்து முடிந்த பின் எனது நண்பரைக் கேட்டேன் "என்ன இதற்கு கனக்க முடிந்திக்கும் போலுள்ளது?" .. "ஆண்டவனுக்கு செய்வதில் பின்னிற்கக்கூடாது" பதில் வந்தது.

ஆண்டவா ....
* நீதான் இம்மண்ணுலகில் சாய்பாபாவாக அவதரித்திருந்தாலும், இவ்வளவு ஆடம்பரங்களையா எதிர் பார்க்கின்றாய்???
* இது போன்ற விழாக்களுக்கு மன்னிக்கவும் ஆடம்பர பேத்டே பாட்டிகளுக்கு செலவழித்து அநியாயம் செய்யும்படி சொன்னாயா???
* இல்லை, இம்மேற்கத்தேய கேக் வெட்டும் கலாச்சாரந்தான், உன் காலாச்சாரம் என்று ஏற்றுக் கொண்டாயா???

"ஏழ்மையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன்" என்று யாரோ சொல்லிச் சென்றான். இந்த ஆடம்பரங்களுக்குச் செலவழிக்கும், இது மாதிரியான அநாவசிய செலவீனங்களுக்குச் செலவழிக்கும் பணங்களை ஆயிரம் எம்தாயக ஏழைகளுக்குச் செலவழிக்க முடியாதா???

சிங்கள இராணுவ அடக்குமுறைகள், கொலை வெறியாட்டங்கள், ..., சுனாமிகள் என்று அல்லலுறும் எம்மக்களுக்கு உதவுவதே, ஆயிரமாயிரம் புண்ணியங்களைத் தேடித்தருமென்பது மட்டுமன்றி ஆண்டனின் அருள் கடாச்சத்தையும் எம்பால் திருப்புமென்பதையும், எப்போதுதான் இந்த ஆடம்பர பக்தர்கள் உணருவார்கள்???????????????????


- putthan - 02-16-2006

உங்களூக்கு பதில் வந்திருக்காதே......சனத்திக்கு பயம்.
இங்கு சிட்னியில் கதிரையில் ஒரு சிலைத்துன்டும் வைத்திருப்பார்கள் வாய் துடைப்பதற்க்கு என்று .