Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 386 online users.
» 0 Member(s) | 383 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,281
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,226
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,287
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,618
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,043
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,455
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,465
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,021
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237

 
  உற்றுப்பாருங்கள் - கண்டுப்பிடியுங்கள்
Posted by: roadrash - 01-31-2006, 05:41 PM - Forum: போட்டிகள் - Replies (1)

உற்றுப்பாருங்கள் கண்டுப்பிடியுங்கள்

இந்த 3டி படங்களில் மறைந்திருக்கும் உருவங்களை கண்டுப்பிடியுங்கள்.இதை காணும் முறை--
வலது கண்னை இடது புரத்திலும், இடது கண்னை வலது புரத்திலும் வைத்து பார்க்க வேண்டும்.

a) <img src='http://www.tamilpics.com/imagehost/uploads/4cb75bb02b.gif' border='0' alt='user posted image'>

பார்க்க மாதிரி படங்கள்
வலது கண் பார்க்குமிடம் <!--emo&B)--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/cool.gif' border='0' valign='absmiddle' alt='cool.gif'><!--endemo--> <img src='http://www.tamilpics.com/imagehost/uploads/94d2dc901c.gif' border='0' alt='user posted image'> இடது கண் பார்க்குமிடம் c) <img src='http://www.tamilpics.com/imagehost/uploads/b94de46a82.gif' border='0' alt='user posted image'>

இனி படங்களுக்கு வருவோம்

1. <img src='http://www.tamilpics.com/imagehost/uploads/ebe2701838.gif' border='0' alt='user posted image'>

மேல் உள்ள படத்தின் கீழ்பக்கம் இரண்டு புள்ளிகள் உள்ளதா ? அந்த இரண்டு புள்ளிகளும் நேர் கோட்டில் (படம் a யில் உள்ளதுபோல்) வரவேண்டும்

2. <img src='http://www.tamilpics.com/imagehost/uploads/397194ea37.gif' border='0' alt='user posted image'>


3. <img src='http://www.tamilpics.com/imagehost/uploads/a2cbb5847d.jpg' border='0' alt='user posted image'>


4. <img src='http://www.tamilpics.com/imagehost/uploads/92f1230c25.jpg' border='0' alt='user posted image'>


5. <img src='http://www.tamilpics.com/imagehost/uploads/665b202f0c.gif' border='0' alt='user posted image'>


இது தொடரும்...


.

Print this item

  US urges Sri Lanka to investigate kidnapping of TRO staff
Posted by: வினித் - 01-31-2006, 04:57 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - Replies (1)

US urges Sri Lanka to investigate kidnapping of TRO staff

[TamilNet, January 31, 2006 15:11 GMT]
The US Embassy in Sri Lanka, on Tuesday, expressed concern about the reported January 30 kidnapping of five members of the Tamil Rehabilitation Organization (TRO) at Welikanda in Polonnaruwa District. Urging the relevant authorities to rapidly investigate the allegations of the kidnapping, the US embassy called on all parties to exercise restraint and calm, especially in the run-up to the cease-fire talks in Geneva.
Full text of the press release follows:

UNITED STATES CONCERNED ABOUT REPORT OF TRO KIDNAPPING

Colombo, January 31, 2006: The U.S. Embassy is concerned about the reported January 30 kidnapping of five members of the Tamil Rehabilitation Organization (TRO) at Welikanda in Polonnaruwa District. The Embassy urges the relevant authorities to rapidly investigate these allegations. The Embassy again calls on all parties to exercise restraint and calm, especially in the run-up to the cease-fire talks in Geneva.

www.tamilnet.com

Print this item

  Don't Go To Geneva Unless .... World Tamils Plead With LTTE
Posted by: வினித் - 01-31-2006, 02:58 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - No Replies

<b>Don't Go To Geneva Unless .... World Tamils Plead With LTTE </b>

[by Admin , Jan 31,2006]

Tamil civilian groups and individuals all over the world have sent an urgent appeal to the LTTE not to go for Talks in Geneva with the Sri lanka government, unless the TRO officers caught captive are released immediately. Five TRO officers were abducted on 30 January, around 2.00 pm.



Tamils have denounced this an act of terrorism by State Armed Forces and the paramilitary attached to them.



This act of provocation has happened at a time when both the government and the LTTE have promised to stop violence and confrontations, in order to facilitate a smooth meeting in Geneva regarding arrangements to proceed with future talks.



"If the government is unable to keep its word or finds itself unable to control its forces, then there will be no use concluding agreements with a government that will be prevailed upon not to implement them," the Tamils in other countries have insisted.



Five TRO officers were waylaid within 100 metres of the army checkpoint at Welikanda near Polonnoruwa district, after clearance to proceed on their journey. They were on their way to Vavuniya along with 15 others from the same organisation for a training course.



The paramilitary group that waylaid the TRO vehicle assaulted all TRO officers before bundling up the chosen five into its famous white van, before rushing away.



The other 15 were left behind, bruised and bleeding, after being assaulted to carry the tale back home.



The white van is the famous vehicle of death, the intelligence unit of the state security forces and the paramilitary groups, freely used for abducting Tamil suspects, finally ending up as, "involuntary disappearances."



Tamil Rehabilitation Organisation TRO was recognised by expatriate Tamils and international charity organisations for its mission of mercy during two decades of war when Tamils, in traditional Tamil areas quarantined by the Sri Lanka government's ban on food, medicine and other essential items, were on the brink of starvation. With the financial assistance provided by the expatriate Tamils, TRO served "a meal a day," to Tamils in war-zones and saved lives.



The selfless service TRO rendered to Tamils, Muslims and Sinhalese, led by K.P.Reggie, its leader, after the Tsunami, won world's admiration,respect and recognition, and as expected the wrath of the JVP and JHU who could not match with an organisation to work among the Sinhalese on similar vein. JVP and JHU were clamouring for a ban on TRO for quite some time.



Tamil civilians have appealed to the International Community to use their good offices with the government of Sri Lanka to get the TRO officers released early.
http://www.tamilinsight.com/index.php?news=217

Print this item

  இரும்புமனிதன் வந்திட்டான் இனி......
Posted by: irumpumaNi - 01-31-2006, 02:07 PM - Forum: அறிமுகம் - Replies (55)

þÕõÒÁ½¢¾ý ÅýÎð¼¡ý ±É¢....

<b>தலைப்பு சீர்செய்யப்பட்டுள்ளது</b>-

Print this item

  புலிகள் எச்சரிக்கை
Posted by: sanjee05 - 01-31-2006, 01:38 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

வெலிக்கந்தையில் தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தினர் 5 பேர் கடத்தப்பட்ட சம்பவம் எதிர்வரும் ஜெனீவா பேச்சுக்களைப் பாதிக்கக் கூடும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ரொய்ட்டர் செய்தி ஸ்தாபனத்துக்கு விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் அளித்துள்ள நேர்காணல்:

ஜெனீவாவில் பெப்ரவரியில் நடைபெற உள்ள யுத்த நிறுத்த ஒப்பந்த அமுலாக்கப் பேச்சுக்கான சூழலை இந்தச் சம்பவம் பாதிக்கக் கூடும். மக்கள் மக்கள் இது கடும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கடத்தப்பட்டவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள். சிறிலங்கா இராணுவத்தினரோ அல்லது அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவ ஆயுதக்குழுவினரோ இந்தக் கடத்தலில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்றார் தயா மாஸ்டர்.

விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பொறுப்பாளர் எஸ்.புலித்தேவன் கூறியுள்ளதாவது:

தமிழ் மக்களோ, மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் ஊழியர்களோ கடத்தப்பட்டாலோ, படுகொலை செய்யப்பட்டாலோ நாம் ஜெனீவாவுக்குச் செல்வது பிரச்சனையாகும். ஜெனீவா பேச்சுக்கள் நடைபெறாது என்று நாம் கூற விரும்பவில்லை. நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம் என்றார் அவர்.

இருப்பினும் இந்தச் சம்பவம் தொடர்பில் தமக்கு எதுவித தகவலும் தெரியாது என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

puthinam

Print this item

  உயிர்பலி - இதுவும் காதலாம்
Posted by: kuruvikal - 01-31-2006, 10:18 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (3)

<b>கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு: 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை</b>

கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்தது தெரிய வந்ததால் மனம் உடைந்த பெண் தனது 2 குழந்தைகளுடன் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை அருகே உள்ள பாடி சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி பானுமதி. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

செல்வராஜுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணுக்கும் இடையே தப்பான"காதல்" ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பானுமதிக்குத் தெரிய வந்துள்ளது.

கணவரின் தவறான தொடர்பால் மனம் உடைந்த பானுமதி, கணவர் வெளியே சென்ற நேரமாக பார்த்து தனது இரு மகன்களுடன் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

thatstamil

------------------------

உயிர்ப்பலிகளுக்கு பஞ்சமில்லாத இந்த உலகில்... நம்பிக்கைக்குரிய தனி நபரின் தவறான நடத்தைகள் மனங்களை எந்தளவு பாதிக்கிறது..! அவையும் உயிர்ப்பலி எடுக்கின்றன...! இராணுவக் கொடூரங்களைக் கண்டிக்கும் மனிதர்கள் இந்தக் கொடூரங்களை கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை..ஏன்..இந்த வகையில் குற்றவாளிகள் ஆணும் பெண்ணும் எனப் பலரோ...???!

Print this item

  World Bank, ADB, UN representatives to meet LTTE
Posted by: மேகநாதன் - 01-31-2006, 07:42 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - No Replies

<b>World Bank, ADB, UN representatives to meet LTTE Political Head</b>

[TamilNet, January 31, 2006 01:21 GMT]
Representatives of multilateral donor agencies, World Bank, Asian Development Bank, UNDP and IMF, will travel to Kilinochchi on Friday to discuss with the leadership of the Liberation Tigers issues related to the rehabilitation, reconstruction and development activities in the NorthEast, according to LTTE officials in Kilinochchi.
Mr. Peter Harrold from World Bank, Mr. Alessandro Pio from the Asian Development Bank (ADB), Mr. Jeff Taft-Dick, acting UN Coordinator, and Mr. Mr. Luis Valdivieso, representing IMF, are scheduled to meet Political Head of the Liberation Tigers, Mr. S. P. Thamilchelvan, sources added.

Post-Tsunami reconstruction and rehabilitation issues will also be discussed, according to the sources.

Print this item

  இங்கிலாந்தின் இந்திய பயணம்
Posted by: starvijay - 01-31-2006, 06:44 AM - Forum: விளையாட்டு - No Replies

கிரிக்கெட்: இங்கிலாந்தின் இந்திய பயணம் தகவல் அட்டவணை.

<img src='http://photos1.blogger.com/blogger/471/1852/1600/eng_in.gif' border='0' alt='user posted image'>

Print this item

  புலிகளின் இராஜதந்திர நகர்வு; இக்கட்டான நிலையில் அரசு!
Posted by: Aravinthan - 01-31-2006, 04:09 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

ஜெனீவா பேச்சு!

புலிகளின் இராஜதந்திர நகர்வு; இக்கட்டான நிலையில் அரசு!

* போர் நிறுத்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதில் அரசின் இயலாமையை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்த புலிகள் உபாயம்

நாட்டில் எவ்வேளையிலும் பெரும்போர் வெடிக்கலாமென்ற சூழ்நிலை சற்றுத் தணிந்துள்ளது. நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்மின் வருகை, பேச்சுக்கான திகதியை நிர்ணயிக்குமா? அல்லது யுத்தத்திற்கான நாள் குறிக்குமா? என்ற பெரும் எதிர்பார்ப்பின் மத்தியில் சொல்ஹெய்ம் பேச்சுக்கான நாளை குறித்துள்ளார்.

புதிய அரசு பதவியேற்றவுடனேயே வடக்கு - கிழக்கில் மோசமான சூழ்நிலை உருவானது. பெரும்போர் வெடிக்கும் நிலை ஏற்பட்டது. சமாதான முறையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதை விட சண்டை மூலம் தீர்வொன்றை எட்டிவிடலாமென நினைப்போரே ஜனாதிபதி மகிந்தவைச் சூழ இருக்கின்றனர்.

ஆனாலும், புலிகளின் பலம் குறித்த அச்சம், யுத்தம் மூலமான தீர்வுக்கு இந்த அரசுக்கு பெரும் தடையாக இருப்பதால் புலிகளுடன் பேச்சுக்களை நடத்தும் அதேநேரம், தீர்வொன்றை நோக்கி முன்நகர்வதற்கு முன்னர் சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற்று புலிகளுக்கு கடும் அழுத்தங்களைக் கொடுத்து அரைகுறைத் தீர்வை திணித்து விடலாமெனவும் புதிய அரசு கருதுகிறது.

முன்னாள் வெளிவிகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரைப் போன்றே தற்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் செயற்பட முனைகின்றார். சர்வதேச ரீதியில் புலிகளைத் தடை செய்வதன் மூலம் அவர்களது கருத்துக்களை வெளியுலகுக்குக் கேட்கச் செய்யாது, இந்தத் தடை மூலம் சர்வதேச ரீதியில் கிடைக்கும் ஆதரவுகளைப் பெற்று ஈழவிடுதலைப் போராட்டத்தை அடக்கி விடலாமெனவும் இந்த அரசு கருதுகிறது.

ஆனாலும், புலிகளின் பலம் குறித்த அச்சம், மக்கள் மத்தியில் அவர்களுக்குள்ள மிகப்பெரும் செல்வாக்கு சர்வதேச ரீதியில் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு கிடைத்துவரும் அங்கீகாரங்களெல்லாம், சாணேற அரசுக்கும் முழம் சறுக்கும் நிலையை உருவாக்கி வருகிறது.

ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் கிழக்கில் தொடங்கிய நிழல் யுத்தம் இன்று வடக்கு வரை வந்துவிட்டது. இது பெரும் போர்ச் சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது. இந்த நிலைமையை தணிக்கக் கிடைத்த இறுதிச் சந்தர்ப்பமே, போர்நிறுத்த உடன்பாட்டை அமுலாக்குவது தொடர்பாக ஜெனிவாவில் அடுத்த மாதம் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள பேச்சுக்களாகும்.

இந்தப் பேச்சுக்கான இடத் தெரிவிலும் இந்த அரசு ஒரு அரசியலை நடத்த முயன்றது. இலங்கையில் அல்லது, ஆசியாவில் எங்காவது ஒரு நாட்டிலேயே பேசுவோமென உறுதிபடக் கூறியது. ஒஸ்லோவில் பேசலாமென்ற புலிகளின் கோரிக்கையையும் நிராகரித்து வந்தது.

புலிகள் மீது கடந்த வருடம் பிற்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியம் பயணத்தடை விதித்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் மூலம் புலிகளுக்கு தடை விதித்துவிட வேண்டுமென இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும் கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன், சர்வதேச மயப்பட்டிருந்த இலங்கை இனப்பிரச்சினையை ஆசிய மயப்படுத்துவதற்கு புலிகள் மீதான ஐரோப்பியத் தடையும் இலங்கை அரசுக்கு அவசியம் தேவை. இதனாலேயே புலிகளுடனான பேச்சுக்களை ஐரோப்பிய நாடொன்றில் நடத்தாது ஆசியாவில் எங்காவது ஓரிடத்தில் நடத்திவிடவேண்டுமென இலங்கை அரசு பெரும் முனைப்புக் காட்டி வந்தது.

ஐரோப்பிய நாடுகளில் அல்லது ஸ்கண்டிநேவிய நாடுகளில் பேச்சுக்களை நடத்தும்போது, ஐரோப்பிய ஒன்றியத்தால் புலிகளைத் தடைசெய்ய முடியாததொரு நிலை ஏற்படலாம். அத்துடன், ஐரோப்பிய நாடுகளில் பேச்சுக்கள் நடைபெறுவதன் மூலம் இந்தப் பிரச்சினை மேலும் மேலும் சர்வதேச மயப்படுத்தப்படுவதையும் இலங்கை அரசு விரும்பவில்லை.

புலிகள் மீது ஐரோப்பா தடை விதித்துவிட்டால் அங்கு புலிகளின் செயற்பாடுகள் முற்றுமுழுதாக நிறுத்தப்படுவதுடன், அவர்களது நிதி சேகரிப்பு மற்று பிரசார நடவடிக்கைகளையும் முழுமையாக முடக்கிவிடவும் இலங்கை அரசு திட்டமிட்ட அதேநேரம், சர்வதேசமயப்படுத்தப்பட்டிருக்கும் இந்தப் பிரச்சினையை ஆசிய மயப்படுத்தவேண்டிய அவசரமும் இலங்கைக்குள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா போன்று ஐரோப்பிய நாடுகளில் மகிந்தவுக்கு செல்வாக்கில்லை. அதேநேரம், ஐரோப்பிய தலைவர்களை தம்வசப்படுத்திய ஆற்றல் அப்போதைய அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமருக்கும், ஜனாதிபதி சந்திரிகாவுக்குமிருந்தது. ஆனால், தற்போது மகிந்த ராஜபக்‌ஷவுக்கோ, ஐரோப்பிய தலைவர்களை நெருங்கும் ஆற்றல் மிகமிகக் குறைவு. புதிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினதும் நிலைமை அதுதான்.

அமைச்சர் கதிர்காமரை புலிகள்தான் கொன்றார்களெனக் கூறுவோர், கதிர்காமரைக் கொல்வதற்கு புலிகள் சிந்தித்தபோதே ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடித்து மகிந்த ராஜபக்‌ஷவை வெற்றபெறச் செய்யவேண்டுமெனவும் புலிகள் திட்டமிட்டு விட்டதாகக் கூறுகின்றனர்.

இந்த நிலையில் மகிந்தவின் தொடர்புகளெல்லாம் இந்தியா, பாகிஸ்தான், சீனா என்று ஆசியாவுக்குள்ளேயே இருப்பதால், சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கும் இலங்கை இனப்பிரச்சினையை ஆசிய மயப்படுத்துவதன் மூலம் ஆசியத் தலைவர்களின் உதவிகளைப் பெற்று புலிகளை மடக்கிவிடலாமெனவும் மகிந்த சிந்திப்பதாக பலரும் கருதுகின்றனர். இதனால்தான் ஐரோப்பாவிலோ அல்லது நோர்வேயிலோ பேச்சுக்களை நடத்தப்போவதில்லையென மகிந்தவும் அவரைச் சார்ந்தவர்களும் அடித்துக்கூறி வந்தனர்.

ஆனாலும், ஐரோப்பிய நாடுகளில் எங்காவது பேச்சுக்களை நடத்துவோமெனக் கூறுமளவிற்கு புலிகள் மகிந்தவுக்கு ராஜதந்திரமாக அழுத்தம் கொடுத்துவிட்டனர். இதற்கெல்லாம் அவர்கள் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில்தான் பேச்சு இல்லையேல், பேச்சே இல்லையெனத் திரும்பத் திரும்ப கூறிவந்தனர்.

வடக்கு - கிழக்கில் தங்கள் மீதான நிழல் யுத்தத்திற்கு கடுமையாகப் பதிலடி கொடுத்து, படைத்தரப்புக்கு பெரும் அச்சமூட்டி வந்த அதேநேரம், ஒஸ்லோவில்தான் பேச்சு என புலிகள் மறுபுறம் கூறிவந்தபோது, புலிகளின் இந்தக் கோரிக்கைக்கு அடிபணியக்கூடாதென ஜே.வி.பி.யும், ஜாதிக ஹெல உறுமயவும் அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். அரசும், புலிகளின் இந்தக் கோரிக்கையை ஏற்கப்போவதில்லையென அடித்துக் கூறிவந்தது.

நோர்வேயை அனுசரணையாளராக ஏற்க முடியுமென்றால், ஏன் நோர்வேயில் பேசமுடியாதெனவும் புலிகள் கேள்வி எழுப்பியபோது, நோர்வேயில் பேச்சுக்கள் என்ற பேச்சுக்கே இடமில்லையெனக் கூறி, ஐரோப்பாவில் எங்காவது பேசலாமென ஜனாதிபதி மகிந்த ஐந்து ஐரோப்பிய நாடுகளின் பெயரையும் சிபார்சு செய்திருந்தார். அத்துடன், இந்த ஐந்து நாடுகளில் ஒன்றைத் தவிர, வேறெங்கும் பேசப்போவதில்லையெனவும் அடித்துக் கூறியிருந்தார்.

ஆனால், புலிகளை எரிக் சொல்ஹெய்ம் சந்தித்தபோது எவ்விதத்திலும் அலட்டிக் கொள்ளாது சுவிற்சர்லாந்தில் பேச புலிகள் இணக்கம் தெரிவித்தனர். இதன்மூலம், ஒஸ்லோவில்தான் பேச வேண்டுமென்ற புலிகளின் கோரிக்கையை நிராகரித்து, தான் கூறிய ஐந்து ஐரோப்பிய நாடுகளில் ஒன்றிலேயே பேச்சை நடத்த ஜனாதிபதி மகிந்த வைத்துவிட்டாரென அவரை சார்ந்தவர்கள் மார்த்தட்டினர்.

ஆனால், எந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் புலிகளைத் தடைசெய்து ஐரோப்பிய நாடுகளில் பேச்சுக்களை நடத்தாது இந்தப் பிரச்சினையையும் சர்வதேச மயப்படுத்துவதை தடுக்கப் போவதாக ஜனாதிபதி மகிந்தவும் அவரைச் சார்ந்தோரும் கங்கணம் கட்டினார்களோ, அதே மகிந்த மூலமே ஐரோப்பிய நாடொன்றில்தான் பேசுவோம் வேறு எங்கும் (ஒஸ்லோவில்) பேசமாட்டோமெனக் கூறச் செய்தது மட்டுமல்லாது, ஐரோப்பிய நாடொன்றில் பேச்சுக்களுக்கான திகதியையும் நிர்ணயித்ததன் மூலம் இந்த விவகாரத்தில் புலிகள் ராஜதந்திர ரீதியில் பெருவெற்றி பெற்றுவிட்டனர்.

நிழல் யுத்தம் வடக்கிலும் பரவி நிஜ யுத்தம் பாரிய அளவில் வெடிக்கப் போகின்றது என்ற அச்சம் எழுந்தபோது, போர் நிறுத்த உடன்படிக்கையை முழுமையாகக் கடைப்பிடித்து போரைத் தவிர்க்குமாறு உலக நாடுகளெல்லாம் வற்புறுத்தின. போர் நிறுத்த உடன்பாடு முறிவதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாதெனவும் போர் நிறுத்த உடன்பாட்டை உடனடியாக முற்று முழுதாக அமுல்படுத்துவதன் மூலமே பெரும் போரை தவிர்க்க முடியுமெனவும் இந்த உலக நாடுகள் மீண்டும் மீண்டும் வற்புறுத்தின.

இதில், அமெரிக்கா ஒரு படிமேல் சென்று புலிகளை மிகக் கடுமையாக எச்சரித்தது. போர் நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகி புலிகள் மீண்டும் போருக்குச் சென்றால், அதற்காக அவர்கள் மிகப் பெரும் விலையைச் செலுத்த வேண்டி வருமெனவும் அவ்வாறு போர் தொடங்கினால் மிகவும் வலிமை மிக்க இலங்கை இராணுவத்தையே சந்திக்க வேண்டியிருக்குமெனவும் அதற்கேற்ப இலங்கை படைகளுக்கு அமெரிக்கா உதவி வழங்குமெனவும் அமெரிக்கா எச்சரித்திருந்தது.

இந்த எச்சரிக்கையும் சர்வதேச நாடுகளின் கரிசனையும், போர் நிறுத்த உடன்பாட்டை முழுமையாக அமுலாக்குங்கள் என்பதற்காகவேயாகும். 2002 இல் செய்யப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டை மீற வேண்டாமெனவும் வற்புறுத்துகின்றன.

புலிகளும் ஆரம்பம் முதல் இதனைத்தான் வற்புறுத்தி வருகின்றனர். 2002 இல் ஒப்பந்தம் கைச்சாத்திட்ட நாள் முதல் கடந்த நான்கு வருடங்களாக அதனைத்தான் அவர்கள் கூறுகின்றனர். ஆனால், இதனைப் புலிகள் இவ்வளவு காலமும் கூறியபோது கேட்காத சர்வதேச சமூகம், இதனை இப்போது புலிகளுக்கு திருப்பி கூறுவதுதான் வேடிக்கையானது.

வடக்கு - கிழக்கில் இயல்பு நிலையை உருவாக்கி சமாதானச் சூழ்நிலையை ஏற்படுத்தி, பேச்சுக்களை மீள ஆரம்பிக்க வேண்டுமாயின் போர் நிறுத்த உடன்பாட்டின் முழுமையான அமுலாக்கம் மிகவும் இன்றியமையாதது. ஆனாலும், இந்த உடன்பாட்டை முழுமையாக அமுலாக்குவதாகக் கூறி உடன்பாட்டில் கைச்சாத்திட்ட அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது அதன் பின் ஆட்சியைக் கைப்பற்றிய ஜனாதிபதி சந்திரிகாவோ இந்த உடன்பாட்டைக் கடைப்பிடிக்கவில்லை.

இன்று புதிய ஜனாதிபதி மகிந்தவும் இதனைக் கடைப்பிடிக்காத அதேநேரம் அவரது ஆட்சியில்தான் உடன்பாடு முழுமையாக மீறப்பட்டு நிழல் யுத்தம் உச்சக்கட்டத்திற்குச் சென்று பெரும் போர் வெடிக்கும் நிலைமை உருவாகியுள்ளது. இதனைத் தடுக்கவே போர் நிறுத்தம் முழுமையாக அமுலாக்கப்படுவது குறித்து ஜெனிவாவில் பேச்சுகள் நடைபெறவுள்ளன.

இந்தப் பேச்சுகளுக்கு இணங்கியதற்காக இரு தரப்பையும் முழு உலகமும் பாராட்டுகின்றன. போர் நிறுத்த உடன்பாட்டிலுள்ள அம்சங்களை முழுமையாக அமுல்படுத்தி இயல்பு நிலையை விரைவாக உருவாக்கி இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சமாதானப் பேச்சுகளை ஆரம்பியுங்களெனவும் சர்வதேச சமூகம் கூறியுள்ளது.

இதன் மூலம், இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுக்களைவிட போர்நிறுத்த உடன்பாட்டை அமுலாக்குவது தொடர்பான பேச்சுகள் முக்கியத்துவமடைந்துள்ளன. உடன்பாட்டை முழுமையாக அமுலாக்குவதற்காக முழு உலகமும் இரு தரப்பையும் கடுமையாக வற்புறுத்தியுள்ளதால் இந்த உடன்பாட்டை அமுலாக்கத் தவறும் தரப்புக்கு எதிராக சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் இந்த உடன்பாட்டை இலங்கை அரசு ஒரு போதும் முழுமையாக அமுலாக்கமாட்டாதென்ற உண்மையை வெளியுலகுக்கு அம்பலப்படுத்துவதற்கான மிகப் பெரும் வாய்ப்பு புலிகளுக்கு கிடைத்துள்ளது.

இயல்பு நிலையை உருவாக்கி யுத்த நிலைமையை தவிர்ப்பதற்கு மிக முக்கியமான மூன்று அம்சங்கள் இந்த உடன்பாட்டிலுள்ளன. அவற்றை அமுல்படுத்தும் பட்சத்தில் யுத்த சூழ்நிலை இல்லாது போய் விடும். ஆனாலும், அந்த மூன்று முக்கிய அம்சங்களையும் அமுல்படுத்த கடந்த நான்கு வருடங்களாக மறுத்து வரும் அரசுக்கு ஜெனிவா பேச்சுகளின் மூலம் அவற்றை அமுல்படுத்த புலிகள் குறுகிய கால அவகாசம் கொடுப்பார்களெனக் கருதப்படுகிறது.

அதாவது, *அதிஉயர் பாதுகாப்பு வலயங்களை இல்லாது செய்து அந்தப் பகுதிகளை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.*மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து படையினர் விலக வேண்டும். *தமிழ் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டு அவர்கள் வடக்கு-கிழக்குப் பகுதிகளுக்கு வெளியே அப்புறப்படுத்தப்பட வேண்டுமென்பதே முக்கிய மூன்று அம்சங்களாகும்.

இந்த மூன்று அம்சங்களையும் அமுல்படுத்த இலங்கை அரசு சம்மதிக்காவிடின், போர் நிறுத்த உடன்பாடு முடிவுக்கு வரலாம். புலிகளும் போர் நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகவும் கூடும்.

ஏனெனில், இந்த மூன்று அம்சங்களையும் அமுல்படுத்த அரசு தவறுமானால், அவர்கள் வடக்கு-கிழக்கில் இயல்பு நிலையை உருவாக்கத் தயாரில்லையென்பதும் யுத்த சூழ்நிலையை தவிர்க்க அரசு விரும்பவில்லை என்பதுமே அர்த்தமாகும்.

போர் நிறுத்த உடன்பாட்டின் முழுமையான அமுலாக்கலை வற்புறுத்தி வரும் சர்வதேச சமூகம், இவ்வாறான தொரு நிலையில் என்ன செய்யப்போகிறது. கடந்த நான்கு வருடங்களாக இந்த உடன்பாடு அமுல் படுத்தப்படாது அது ஒரு தரப்பால் கடுமையாக மீறப் பட்டதாலேயே நாட்டில் இன்று பெரும் போர்ச் சூழல் ஏற்பட்டதை ஏன் இது வரை உலக நாடுகள் உணரத் தவறின என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த நிலையில் ஜெனிவா பேச்சுகள் மிக மிக முக்கியமானது. போர் நிறுத்த உடன்பாட்டை அமுல்படுத்த தடையாக இருப்பவர்கள் யார்? இயல்பு நிலை உருவாகுவதை தடை செய்பவர்கள் யார்? பேச்சுகள் நடைபெறுவதற்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் யார்? என்பது தெளிவாகத் தெரிய வருவது மட்டுமல்லாது, இதற்கெல்லாம் தடையாக இருக்கும் தரப்பிற்கு எதிராக இந்த சர்வதேச சமூகம் என்ன செய்யப் போகிறது என்பது தெரிந்து விடும்.

- தினக்குரல்

Print this item

  சொந்த சட்டங்களைக் கொண்டு லஞ்சமில்லாத நிர்வாகம்
Posted by: மேகநாதன் - 01-31-2006, 02:51 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)


<span style='color:green'><b>சொந்த சட்டங்களைக் கொண்டு லஞ்சமில்லாத நிர்வாகம் நடத்துக்கும் இலங்கைத் தமிழ்ப் போராளிகள்: \"ரொய்ட்டர்ஸ்\" புகழாரம்! </b>

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் சொந்த சட்டங்களைக் கொண்டு லஞ்சமில்லாத நிர்வாகத்தை நடத்தி வருவதாக சர்வதேச செய்தி ஸ்தாபனமான ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.


ரொய்ட்டர்ஸ் செய்தியாளர் ராஜூ கோபாலகிருஸ்ணன் எழுதியுள்ள கட்டுரை:

இலங்கையில் கிளிநொச்சி மிகச் சிறிய பகுதி. கிளிநொச்சி வீதியில் கடைகள், சிறு வீடுகள், அரச கட்டடங்கள் வரிசையாக பிரதான வீதியில் உள்ளன.

ஆனால் பேரூந்துகளும் வாகனங்களும் நிதானமாக மெதுவாக கிளிநொச்சிக்குள் பயணிக்கின்றன. வாகன ஒழுங்குவிதிகளை மீறுவோருக்கு அந்த இடத்திலேயே தண்டத் தொகை விதிக்கப்படுகிறது. எதுவித விவாதமும் லஞ்சமும் அங்கு இல்லை.

உலகத்திலேயே மிக ஒழுக்கமான கெரில்லா இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்துகிற நிழல் அரசாங்கத்தின் தலைமையகம் இங்குதான் உள்ளது.

கனரக ஆயுதங்களுடன் இருக்கும் கெரில்லாக்களும் அவர்களது காவல்துறையினரும் வெளிநபர்களுடன் கதைக்க விரும்புவதில்லை. வெப்பம் அதிகமாக இருந்த ஒரு நாளில் வியர்வை வடிந்து கொண்டிருந்த ஒரு இளநிலை பெண் காவல்துறை பணியாளரிடம் நீர் அருந்துகிறீர்களா என்று கேட்டோம். சிறிய புன்னகையை உதிர்த்துவிட்டு ஆங்கிலத்தில் நன்றி தெரிவித்துவிட்டு நகருங்கள் என்றார்.

தென்பகுதியில் உள்ள கொழும்பிலிருந்து வருகின்றவர்களுக்கு கடவுச் சீட்டு போன்ற நுழைவுச் சீட்டு வழங்கப்படுகிறது.

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் சொந்த வங்கி, நீதிமன்றம், மருத்துவமனை, வாகன சேவை உள்ளன.

சிறிலங்காவிட அரை மணிநேரம் வித்தியாசம் கொண்ட தனியான நேரக் கணக்கீடும் கடைபிடிக்கப்படுகிறது.

சிறிலங்காவின் மின்தொகுப்புடன் கிளிநொச்சி நகரம் இணைக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அதற்கான தொகையைச் செலுத்துகின்றனர். தரைவழித் தொலைபேசி சேவைகளும் அப்படித்தான். கையடக்க பேசிகள் இயங்குவதில்லை.

கணணிகள் மீதான ஆர்வம் அதிகமாக இருக்கின்றன. இருப்பினும் வீடுகளுக்கான இணைய இணைப்புகளை புலிகள் தடை செய்துள்ளனர். புலிகளின் அலுவலகங்கள் மற்றும் இணைய மையங்களில்தான் இணைய பயன்பாடு அனுமதிக்கப்படுள்ளது.

கிளிநொச்சியில் 1,000-க்கும் மேற்பட்ட கணணிகள் இருக்கலாம் என்கிறார் நிசாந்தன் அலோசியஸ். கிளிநொச்சியில் 2 ஆண்டுகளுக்கு மேலாக கணணி நிறுவனத்தையும் இணைய மையத்தையும் நடத்தி வருகிறார்.

"ஒவ்வொருவரும் மின்சார வசதி பெற்றுள்ளமையால் கணணிக்கு நல்ல வரவேற்புள்ளது" என்கிறார் அவர்.

அவரது கணணி நிலையத்தில் யு.எஸ்.பி. ஹப்புகள், டி.வி.டி. வட்டுக்கான இயக்கி உள்ளிட்ட கணணி வன்பொருள்கள் உள்ளன. மாதத்துக்கு ரூ. 3 இலட்சம் அளவில் விற்பனையாகிறது என்கிறார் அவர்.

வீடுகளில் இணைய இணைப்புக்கு ஏன் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை விதித்துள்ளனர் என்ற கேள்விக்கு நிசாந்தன் அலோசியஸ் அளித்த பதில்:

ஒழுக்க நெறிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் கருதுகின்றனர். அதனால் வீடுகளுக்கான இணைய இணைப்புக்கு அனுமதி அளிக்கவில்லை. கணணி சேர்வர் ஊடாக இணையப் பயன்பாட்டை நாம் கண்காணித்து வருகிறோம்" என்றார்.

அங்கு சிகரெட் தாராளமாக விற்பனை செய்யப்பட்டாலும் நிறைய எண்ணிக்கையிலானோர் புகைபிடிப்பதும் இல்லை. இதற்கான காரணம் விடுதலைப் புலிகளின் போராளிகள் மது அருந்துவதும் புகைப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. ஒன்று அல்லது 2 மதுபானச் சாலைகள் உள்ளன. அங்கு பியர் மதுபானமும் வெளியிடங்களில் உள்ளுர் மதுபானமும் விற்பனை செய்யப்படுகின்றன. இருப்பினும் மிகச் சில உள்ளுர் நபர்களே அடிக்கடி அங்கு செல்கின்றனர்.

அடிப்படை வசதிகள் அனைத்தும் கொண்ட சிறு தங்கும் விடுதிகள் உண்டு. அக்கராயன் நீர்த்தேக்கத்தை நோக்கிய விடுதியில் விடுதலைப் புலிகளின் விருந்தினர்களுக்கான அறைகள் முன்பதிவு செய்யப்படுகின்றன.

கடந்த இரு தசாப்தகால யுத்தத்தில் கிளிநொச்சி நகரம் கடுமையான செல் வீச்சுகளுக்குள்ளானது. குறிப்பாக 1990 ஆம் ஆண்டு வன்னி வனப்பகுதியில் புலிகள் தளம் அமைத்திருந்தபோது கிளிநொச்சி நகரம் கடும் சேதமடைந்தது.

கிளிநொச்சி வீழ்ந்துவிடவில்லை. ஆனால் பிரதான வீதியின் பல கட்டடங்கள் குண்டுத் தாக்குதல் அடையாளங்களுடன் கைவிடப்பட்டு இருக்கின்றன. அழிபாடுகளிலிருந்து கிளிநொச்சி கல்லூரியின் ஒரு பகுதி எஞ்சியிருக்கிறது. இதர வகுப்புகள் தென்னங்கீற்று கூரைகளின் கீழ் நடைபெறுகின்றன.

இராணுவப் பயிற்சிகளைப் போன்ற உடற்பயிற்சிகள் இளைஞர்களுக்கு அந்த விளையாட்டு மைதானத்தில் அளிக்கப்பட்டு வந்தன.

பிரதான வீதியில் அனைவரது பேச்சுகளும் யுத்தம் பற்றியதாக இருந்தது.

குடும்பப் பெண்மணியான தெய்வானை மகேந்திரன் என்பவர் கூறுகையில், யுத்தம் நடைபெற்ற காலங்களில் குடும்பம் நடத்துவது மிகக் கடினமானது என்றார்.

"இருப்பினும் எமக்கு யுத்த அச்சம் இல்லை. முன்னைவிட இயல்பான நிலைமை உள்ளது" என்கிறார் அவர்.

காய்கறிகள் விற்பனை செய்து வரும் ராஜ்குமார் என்ற 25 வயது இளைஞர் கூறுகையில், அரசாங்கம் கிளிநொச்சி நகர் மீது மீண்டும் தாக்குதல் நடத்துமோ என்ற அச்சம் இருப்பதாகத் தெரிவித்தார்.

"விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் சுவிசில் பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவித்திருந்தாலும் தீர்வு இன்னும் உருவாகவில்லை. யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமைதியாகத்தான் சென்று கொண்டிருந்தது. இந்த படுகொலைகள் அனைத்தும் அண்மையில்தான் நிகழ்ந்தன. உண்மையில் மிகவும் வருத்தமளிக்கின்றன என்றார்.

அப்படியான யுத்தம் வரும் நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, "நான் யுத்தத்துக்குச் செல்வேன்" என்றார். "விடுதலைப் புலிகளோடு 4 ஆண்டுகள் இருந்துள்ளேன். கடந்த கடைசி யுத்த்தத்திலும் பங்கேற்றேன்" என்றார்.

எத்தனை சிறிலங்கா இராணுவத்தினர் நீங்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பார்கள் என்ற கேள்விக்கு சிரித்தவாறு பதிலளித்தார்: "என்னால் அதைக் கூற முடியாது" என ரொய்ட்டர்ஸ் செய்தி ஸ்தாபனம் கட்டுரை வெளியிட்டுள்ளது.</span>

<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>

Print this item