![]() |
|
உயிர்பலி - இதுவும் காதலாம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: உயிர்பலி - இதுவும் காதலாம் (/showthread.php?tid=1102) |
உயிர்பலி - இதுவும் காதலாம் - kuruvikal - 01-31-2006 <b>கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு: 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை</b> கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்தது தெரிய வந்ததால் மனம் உடைந்த பெண் தனது 2 குழந்தைகளுடன் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். சென்னை அருகே உள்ள பாடி சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி பானுமதி. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். செல்வராஜுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணுக்கும் இடையே தப்பான"காதல்" ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பானுமதிக்குத் தெரிய வந்துள்ளது. கணவரின் தவறான தொடர்பால் மனம் உடைந்த பானுமதி, கணவர் வெளியே சென்ற நேரமாக பார்த்து தனது இரு மகன்களுடன் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். thatstamil ------------------------ உயிர்ப்பலிகளுக்கு பஞ்சமில்லாத இந்த உலகில்... நம்பிக்கைக்குரிய தனி நபரின் தவறான நடத்தைகள் மனங்களை எந்தளவு பாதிக்கிறது..! அவையும் உயிர்ப்பலி எடுக்கின்றன...! இராணுவக் கொடூரங்களைக் கண்டிக்கும் மனிதர்கள் இந்தக் கொடூரங்களை கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை..ஏன்..இந்த வகையில் குற்றவாளிகள் ஆணும் பெண்ணும் எனப் பலரோ...???! - MUGATHTHAR - 01-31-2006 என்ன இது பெண்கள் முன்னேறியிட்டாங்கள் எண்டு பாத்தா இப்பிடி கோழைத்தனமாக தற்கொலை செய்வதில் என்னத்தை சாதிக்கிறார்கள் கணவன் கள்ளகாதலியுடன் சந்தோஷமாக வாழ வழி விட்டிருக்கிறார்கள் தனிய பிரிந்து வாழ்ந்தாவது பிள்ளைகளை முன்னேற்றினால் ஒரு இலட்சிய தாயாக இருந்திருப்பார்.........எதுக்கும் அந்த கவிதான்ரை விலாசம் கிடைச்சா சொல்லுங்கோ கலியாணம் கட்டின ஆம்பிளைகளைத்தான் தேடுறதெண்டால் உதவும்தானே.......(எனக்கில்லையப்பா.......) - RaMa - 02-01-2006 <!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin-->என்ன இது பெண்கள் முன்னேறியிட்டாங்கள் எண்டு பாத்தா இப்பிடி கோழைத்தனமாக தற்கொலை செய்வதில் என்னத்தை சாதிக்கிறார்கள் கணவன் கள்ளகாதலியுடன் சந்தோஷமாக வாழ வழி விட்டிருக்கிறார்கள் தனிய பிரிந்து வாழ்ந்தாவது பிள்ளைகளை முன்னேற்றினால் ஒரு இலட்சிய தாயாக இருந்திருப்பார்.........எதுக்கும் அந்த கவிதான்ரை விலாசம் கிடைச்சா சொல்லுங்கோ கலியாணம் கட்டின ஆம்பிளைகளைத்தான் தேடுறதெண்டால் உதவும்தானே.......(எனக்கில்லையப்பா.......)<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அங்கிள்ள்ள்ள்ள் :twisted: :twisted: :twisted: :twisted: :evil: - ப்ரியசகி - 02-02-2006 ம்ம்..ஆண்கள் மட்டும் இதற்கு தப்பில்லை..கவிதா என்ற பெண்ணும் ஒரு பெண் தானே..அவருக்கும் இதில முழு பங்கிருக்கு.. :evil: :evil: :evil: :evil: :evil: அத்தோடு மு.அங்கிள் சொல்வது போல அவர் கோழைத்தனமான முடிவு எடுத்திருக்கின்றார். எத்தனையோ பெண்கள்..துணிவாக பிள்ளைகளை வளர்த்து அவர்களுக்கு முன்னாலேயே வாழ்கிறார்கள். ஆனால்..சொல்வது எதுவும் சுலபம்..அந்த பெண் மனதில் என்ன நினைத்தாரோ.. :roll: :roll: :roll: |