![]() |
|
சொந்த சட்டங்களைக் கொண்டு லஞ்சமில்லாத நிர்வாகம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: சொந்த சட்டங்களைக் கொண்டு லஞ்சமில்லாத நிர்வாகம் (/showthread.php?tid=1106) |
சொந்த சட்டங்களைக் கொண்டு லஞ்சமில்லாத நிர்வாகம் - மேகநாதன் - 01-31-2006 <span style='color:green'><b>சொந்த சட்டங்களைக் கொண்டு லஞ்சமில்லாத நிர்வாகம் நடத்துக்கும் இலங்கைத் தமிழ்ப் போராளிகள்: \"ரொய்ட்டர்ஸ்\" புகழாரம்! </b> இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் சொந்த சட்டங்களைக் கொண்டு லஞ்சமில்லாத நிர்வாகத்தை நடத்தி வருவதாக சர்வதேச செய்தி ஸ்தாபனமான ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. ரொய்ட்டர்ஸ் செய்தியாளர் ராஜூ கோபாலகிருஸ்ணன் எழுதியுள்ள கட்டுரை: இலங்கையில் கிளிநொச்சி மிகச் சிறிய பகுதி. கிளிநொச்சி வீதியில் கடைகள், சிறு வீடுகள், அரச கட்டடங்கள் வரிசையாக பிரதான வீதியில் உள்ளன. ஆனால் பேரூந்துகளும் வாகனங்களும் நிதானமாக மெதுவாக கிளிநொச்சிக்குள் பயணிக்கின்றன. வாகன ஒழுங்குவிதிகளை மீறுவோருக்கு அந்த இடத்திலேயே தண்டத் தொகை விதிக்கப்படுகிறது. எதுவித விவாதமும் லஞ்சமும் அங்கு இல்லை. உலகத்திலேயே மிக ஒழுக்கமான கெரில்லா இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்துகிற நிழல் அரசாங்கத்தின் தலைமையகம் இங்குதான் உள்ளது. கனரக ஆயுதங்களுடன் இருக்கும் கெரில்லாக்களும் அவர்களது காவல்துறையினரும் வெளிநபர்களுடன் கதைக்க விரும்புவதில்லை. வெப்பம் அதிகமாக இருந்த ஒரு நாளில் வியர்வை வடிந்து கொண்டிருந்த ஒரு இளநிலை பெண் காவல்துறை பணியாளரிடம் நீர் அருந்துகிறீர்களா என்று கேட்டோம். சிறிய புன்னகையை உதிர்த்துவிட்டு ஆங்கிலத்தில் நன்றி தெரிவித்துவிட்டு நகருங்கள் என்றார். தென்பகுதியில் உள்ள கொழும்பிலிருந்து வருகின்றவர்களுக்கு கடவுச் சீட்டு போன்ற நுழைவுச் சீட்டு வழங்கப்படுகிறது. கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் சொந்த வங்கி, நீதிமன்றம், மருத்துவமனை, வாகன சேவை உள்ளன. சிறிலங்காவிட அரை மணிநேரம் வித்தியாசம் கொண்ட தனியான நேரக் கணக்கீடும் கடைபிடிக்கப்படுகிறது. சிறிலங்காவின் மின்தொகுப்புடன் கிளிநொச்சி நகரம் இணைக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அதற்கான தொகையைச் செலுத்துகின்றனர். தரைவழித் தொலைபேசி சேவைகளும் அப்படித்தான். கையடக்க பேசிகள் இயங்குவதில்லை. கணணிகள் மீதான ஆர்வம் அதிகமாக இருக்கின்றன. இருப்பினும் வீடுகளுக்கான இணைய இணைப்புகளை புலிகள் தடை செய்துள்ளனர். புலிகளின் அலுவலகங்கள் மற்றும் இணைய மையங்களில்தான் இணைய பயன்பாடு அனுமதிக்கப்படுள்ளது. கிளிநொச்சியில் 1,000-க்கும் மேற்பட்ட கணணிகள் இருக்கலாம் என்கிறார் நிசாந்தன் அலோசியஸ். கிளிநொச்சியில் 2 ஆண்டுகளுக்கு மேலாக கணணி நிறுவனத்தையும் இணைய மையத்தையும் நடத்தி வருகிறார். "ஒவ்வொருவரும் மின்சார வசதி பெற்றுள்ளமையால் கணணிக்கு நல்ல வரவேற்புள்ளது" என்கிறார் அவர். அவரது கணணி நிலையத்தில் யு.எஸ்.பி. ஹப்புகள், டி.வி.டி. வட்டுக்கான இயக்கி உள்ளிட்ட கணணி வன்பொருள்கள் உள்ளன. மாதத்துக்கு ரூ. 3 இலட்சம் அளவில் விற்பனையாகிறது என்கிறார் அவர். வீடுகளில் இணைய இணைப்புக்கு ஏன் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை விதித்துள்ளனர் என்ற கேள்விக்கு நிசாந்தன் அலோசியஸ் அளித்த பதில்: ஒழுக்க நெறிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் கருதுகின்றனர். அதனால் வீடுகளுக்கான இணைய இணைப்புக்கு அனுமதி அளிக்கவில்லை. கணணி சேர்வர் ஊடாக இணையப் பயன்பாட்டை நாம் கண்காணித்து வருகிறோம்" என்றார். அங்கு சிகரெட் தாராளமாக விற்பனை செய்யப்பட்டாலும் நிறைய எண்ணிக்கையிலானோர் புகைபிடிப்பதும் இல்லை. இதற்கான காரணம் விடுதலைப் புலிகளின் போராளிகள் மது அருந்துவதும் புகைப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. ஒன்று அல்லது 2 மதுபானச் சாலைகள் உள்ளன. அங்கு பியர் மதுபானமும் வெளியிடங்களில் உள்ளுர் மதுபானமும் விற்பனை செய்யப்படுகின்றன. இருப்பினும் மிகச் சில உள்ளுர் நபர்களே அடிக்கடி அங்கு செல்கின்றனர். அடிப்படை வசதிகள் அனைத்தும் கொண்ட சிறு தங்கும் விடுதிகள் உண்டு. அக்கராயன் நீர்த்தேக்கத்தை நோக்கிய விடுதியில் விடுதலைப் புலிகளின் விருந்தினர்களுக்கான அறைகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. கடந்த இரு தசாப்தகால யுத்தத்தில் கிளிநொச்சி நகரம் கடுமையான செல் வீச்சுகளுக்குள்ளானது. குறிப்பாக 1990 ஆம் ஆண்டு வன்னி வனப்பகுதியில் புலிகள் தளம் அமைத்திருந்தபோது கிளிநொச்சி நகரம் கடும் சேதமடைந்தது. கிளிநொச்சி வீழ்ந்துவிடவில்லை. ஆனால் பிரதான வீதியின் பல கட்டடங்கள் குண்டுத் தாக்குதல் அடையாளங்களுடன் கைவிடப்பட்டு இருக்கின்றன. அழிபாடுகளிலிருந்து கிளிநொச்சி கல்லூரியின் ஒரு பகுதி எஞ்சியிருக்கிறது. இதர வகுப்புகள் தென்னங்கீற்று கூரைகளின் கீழ் நடைபெறுகின்றன. இராணுவப் பயிற்சிகளைப் போன்ற உடற்பயிற்சிகள் இளைஞர்களுக்கு அந்த விளையாட்டு மைதானத்தில் அளிக்கப்பட்டு வந்தன. பிரதான வீதியில் அனைவரது பேச்சுகளும் யுத்தம் பற்றியதாக இருந்தது. குடும்பப் பெண்மணியான தெய்வானை மகேந்திரன் என்பவர் கூறுகையில், யுத்தம் நடைபெற்ற காலங்களில் குடும்பம் நடத்துவது மிகக் கடினமானது என்றார். "இருப்பினும் எமக்கு யுத்த அச்சம் இல்லை. முன்னைவிட இயல்பான நிலைமை உள்ளது" என்கிறார் அவர். காய்கறிகள் விற்பனை செய்து வரும் ராஜ்குமார் என்ற 25 வயது இளைஞர் கூறுகையில், அரசாங்கம் கிளிநொச்சி நகர் மீது மீண்டும் தாக்குதல் நடத்துமோ என்ற அச்சம் இருப்பதாகத் தெரிவித்தார். "விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் சுவிசில் பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவித்திருந்தாலும் தீர்வு இன்னும் உருவாகவில்லை. யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமைதியாகத்தான் சென்று கொண்டிருந்தது. இந்த படுகொலைகள் அனைத்தும் அண்மையில்தான் நிகழ்ந்தன. உண்மையில் மிகவும் வருத்தமளிக்கின்றன என்றார். அப்படியான யுத்தம் வரும் நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, "நான் யுத்தத்துக்குச் செல்வேன்" என்றார். "விடுதலைப் புலிகளோடு 4 ஆண்டுகள் இருந்துள்ளேன். கடந்த கடைசி யுத்த்தத்திலும் பங்கேற்றேன்" என்றார். எத்தனை சிறிலங்கா இராணுவத்தினர் நீங்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பார்கள் என்ற கேள்விக்கு சிரித்தவாறு பதிலளித்தார்: "என்னால் அதைக் கூற முடியாது" என ரொய்ட்டர்ஸ் செய்தி ஸ்தாபனம் கட்டுரை வெளியிட்டுள்ளது.</span> <i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i> - ¦ÀâÂôÒ - 01-31-2006 þì¸ðΨâý þ¨½ôÒ ¬í¸¢Äò¾¢ø áöð¼÷Ро¡ÀÉ þ¨½Âò¾¢Ä¢ÕóÐ... http://www.alertnet.org/thenews/newsdesk/SP150807.htm <img src='http://www.alertnet.org/images/rtrfndn_alertnet.gif' border='0' alt='user posted image'> - வர்ணன் - 01-31-2006 நன்றி -தகவலுக்கு- மேகநாதன் & பெரியப்பு! 8) |