Yarl Forum
புலிகள் எச்சரிக்கை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: புலிகள் எச்சரிக்கை (/showthread.php?tid=1101)



புலிகள் எச்சரிக்கை - sanjee05 - 01-31-2006

வெலிக்கந்தையில் தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தினர் 5 பேர் கடத்தப்பட்ட சம்பவம் எதிர்வரும் ஜெனீவா பேச்சுக்களைப் பாதிக்கக் கூடும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ரொய்ட்டர் செய்தி ஸ்தாபனத்துக்கு விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் அளித்துள்ள நேர்காணல்:

ஜெனீவாவில் பெப்ரவரியில் நடைபெற உள்ள யுத்த நிறுத்த ஒப்பந்த அமுலாக்கப் பேச்சுக்கான சூழலை இந்தச் சம்பவம் பாதிக்கக் கூடும். மக்கள் மக்கள் இது கடும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கடத்தப்பட்டவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள். சிறிலங்கா இராணுவத்தினரோ அல்லது அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவ ஆயுதக்குழுவினரோ இந்தக் கடத்தலில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்றார் தயா மாஸ்டர்.

விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பொறுப்பாளர் எஸ்.புலித்தேவன் கூறியுள்ளதாவது:

தமிழ் மக்களோ, மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் ஊழியர்களோ கடத்தப்பட்டாலோ, படுகொலை செய்யப்பட்டாலோ நாம் ஜெனீவாவுக்குச் செல்வது பிரச்சனையாகும். ஜெனீவா பேச்சுக்கள் நடைபெறாது என்று நாம் கூற விரும்பவில்லை. நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம் என்றார் அவர்.

இருப்பினும் இந்தச் சம்பவம் தொடர்பில் தமக்கு எதுவித தகவலும் தெரியாது என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

puthinam