![]() |
|
இலண்டனில், நெல்லியடி ம.ம.வி பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: நிகழ்வுகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=15) +--- Thread: இலண்டனில், நெல்லியடி ம.ம.வி பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் (/showthread.php?tid=1119) |
இலண்டனில், நெல்லியடி ம.ம.வி பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் - Nellaiyan - 01-30-2006 யாழிலுள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றான நெல்லியடி மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் வரும் சனிக்கிழமை மாலை "Croydon" பகுதியிலுள்ள "Lanfrank School" மண்டபத்தில் நடைபெற உள்ளது. ஒரு காலத்தில் யாழிலுள்ள பாடசாலைகளில் அழகிய கட்டடங்கள், பாரிய மண்டபங்கள், பாரிய விவசாய/கால்நடை பீடம், விளையாட்டு ஸ்ரேடியம் என்று எல்லாவாற்றையும் ஒருங்கே கொண்டிருந்த கல்லூரியாகும். பின் இலங்கைப்படைகளின் முகாமாக்கப்பட்டு சிதைவுற்ற இக்கல்லூரி, கப்ரன் மில்லரின் வரலாற்றுடன் மீட்டெடுக்கப்பட்டதும், இன்று அரச உதவிகள் பாரியளவில் இல்லாதிருந்தும் மீண்டும் எழ முற்படுகிறது. வடமராட்சிப் பகுதியிலுள்ள ஏனைய பிரபல பாடசாலைகளான "காட்லிக் கல்லூரி, மெதடிஸ் பெண்கள் கல்லூரி, சிதம்பராக் கல்லூரி" போன்றன இராணுவ முகாங்களுக்குள் முடங்கிய நிலையில் இன்று, அப்பிரதேசத்தினது கல்வித்தாகத்தினை நெல்லியடி மத்திய மகா வித்தியாலயமே பூர்த்தி செய்வது இங்கு குறிப்பிடத்தக்கது. - Mathan - 01-30-2006 பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் சிறப்புற நடக்க வாழ்த்துக்கள் - cannon - 02-05-2006 நேற்று லண்டன் குறைடன் பகுதியிலுள்ள "Lanfrank School" மண்டபத்தில் நடைபெற்ற நெல்லியடி மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர்களின் ஒன்று கூடலுக்குச் சென்றிருந்தேன்! அப்பாடசாலையில் படிக்காதனாயினும், அம்மண்ணில் பிறந்தவனென்றபடியாலும், ஒரு பெரும் சரித்திரத்தை எழுதிய பாடசாலையென்ற படியாலும் சென்றிருந்தேன். மிக நேர்த்தியாக ஒருங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சிகளின் ஊடே நடைபெற்ற ஒன்றுகூடல்! மண்டபம் நிறைந்த பார்வையாளர்களினூடே நடைபெற்ற நிகழ்ச்சிகளில், ஆரம்பம் முதல் இறுதிவரை ஆசனங்களிலிருந்து அகராமல் இரசித்தது நிகழ்ச்சிகளின் தரத்தை உணர்த்துவதாக இருந்தது. லண்டன் பகுதிகளிலுள்ள பல பிரபல வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் இக்கல்லூரியின் பழைய மாணவர்களாக இருப்பது, அக்கல்லூரியின் வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருக்கப்போவது நேற்று கண் கூடாகத் தெரிந்தது. இப்பாடசாலை மண்டபத்தை பொறுப்பெடுத்து, அதனை சர்வதேச தரத்திற்கு நிகராக பாரிய அளவில் அமைப்பதற்கு இங்கு உறுதியளிக்கப்பட்டது. இனிதே நிறைவுற்ற இந்நிகழ்ச்சிகளில் சிங்கள வெறியர்களினால் சிதைக்கப்பட்ட இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு சில உரமூட்டக்கூடிய செயற்பாட்டுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் இதேவேளை அந்நிகழ்ச்சிக்கு வந்த மக்களிடையே சில ஆதங்கங்களும் வெளிப்பட்டதையும் கவனிக்கக்கூடியதாக இருந்தது. குறிப்பாக இப்பாடசாலையின் இணையத்தளங்கள், அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் பகுதியை தளமாகக் கொண்டியங்கும், இப்பாடசாலைக்கே தொடர்பற்ற, எம்மினத்தில் விலைபோன கூலிகள் சிலரிடம் சிக்கித் தவிப்பதையும், அதனை விடுவிப்பது அல்லது மாற்றீடுகளைச் செய்ய வேண்டிய தேவைகளையும் வலியுறுத்தியதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. - ப்ரியசகி - 02-20-2006 ஆகா..நம்ம மத்திய மகா வித்தியாலயமா? ம்ம்..நிகழ்வு நன்றாக நடை பெற என்னுடைய வாழ்த்துக்களும் - Mathan - 02-20-2006 நிகழ்வு நடைபெற்று முடிந்ததாகவும் அதற்கு போனதாகவும் கனொன் எழுதியிருக்காரே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Selvamuthu - 02-20-2006 ப்ரியசகி வாழ்த்துக்கள் சரி, ஆனால் நீங்கள் கிட்டத்தட்ட 15 நாட்கள்தான் தாமதம். - ப்ரியசகி - 02-21-2006 Mathan Wrote:நிகழ்வு நடைபெற்று முடிந்ததாகவும் அதற்கு போனதாகவும் கனொன் எழுதியிருக்காரே <!--emo& :? :? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> நான் மேல் விடயத்தை மட்டும் வாசித்து விட்டு நம்ம மத்திய மகா வித்தியாலயம் ஆச்சே என்று ஒரு வாழ்த்து சொன்னேன்..கீழே மற்ற்வர்கள் எழுதியதை அப்போது கவனிக்கவில்லை.. :? மன்னியுங்கள்.. :? |