| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 471 online users. » 0 Member(s) | 468 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 2,994
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,023
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,489
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,246
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,518
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,703
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,247
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,856
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,927
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,178
|
|
|
| பொய்யர்களான சிறிலங்கா அமைச்சர்கள் |
|
Posted by: Subiththiran - 04-22-2006, 11:41 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
[b]<span style='font-size:25pt;line-height:100%'>ஜெனிவா பேச்சுக்களுக்கான நாட்களை மாற்ற அரசு தயார் கருணா குழு தொடர்பான வீடியோ பதிவின் உண்மைத் தன்மை குறித்து சந்தேகம் உள்ளது. அமைச்சர் ரம்புக்வெல்ல</span>
சரியான காரணங்கள் இருப்பின் ஜெனிவா பேச்சுக்களுக்கான நாட்களை மாற்றிக்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது என அமைச்சர் கெஹலிய ரம்புக் வெல்ல தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு முன்னரைப் போல் இராணுவ உலங்குவானூர்தி ஏன் தற்போது வழங்கப்படவில்லை என்று விளக்கம் அளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.
இதுகுறித்து கொழும்பு ஊடகவியலாளர்களிடம் அமைச்சர் மேலும் கூறியதாவது:
கிழக்கில் இருந்து கிளிநொச்சிக்கு விடுதலைப்புலிப் போராளிகளை அழைத்து வர பொதுப்பயண உலங்குவானூர்தியை ஒழுங்கு செய்வது தொடர்பாக தெரிவித்துள்ளோம். 32 போராளிகள் பயணிப்பதற்கான வகையில் அது போதுமானது அல்ல என விடுதலைப்புலிகள் கூறியுள்ளனர். ஒவ்வொரு குழுக்குழுவாக விடுதலைப்புலிகள் பயணம் மேற்கொள்ளலாம் என்றும் அதற்கான பாதுகாப்புகளை செய்வோம் என்றும் நோர்வே குழுவிடம் தெரிவித்துள்ளோம். மேலும் சில விடயங்களையும் கண்காணிப்புக் குழுத்தலைவரிடம் தெரிவித்துள்ளோம். கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சில முடிவுகள் தவறானது என்று அரசாங்கம் கருதுகிறது. முன்øனய செயற்பாடுகளில் எது சரி? எது தவறு? என்று சொல்ல முடியாது.
நாங்கள் புதிய அணுகுமுறையைக் யைக்கடைப்பிடிக்கிறோம். அதனடிப்படையிலேயே பொதுமக்கள் பயணிக்கும் ஹெலியை ஏற்பாடு செய்ய முன்வந்துள்ளோம்.
சரியான காரணங்கள் இருப்பின் ஜெனிவாப் பேச்சுக்களுக்கான நாட்களை மாற்றிக்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது.
அவுஸ்திரேலிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கருணா குழு தொடர்பான வீடியோ பதிவின் உண்மைத் தன்மை குறித்து சந்தேகம் உள்ளது. அது உண்மையிலேயே அரச கட்டுப்பாட்டுப் பகுதிதான் என்பது அதில் தெளிவுபடுத்தப்படவில்லை.
எங்காவது ஓரிடத்தில் படமெடுத்துவிட்டு அரச கட்டுப்பாட்டுப் பகுதி என்று கூட கூறலாம். உறுதியான ஆதாரங்கள் அதில் இல்லை.
இணைப்பு : newstamilnet.com
|
|
|
| இரத்தத்தில் குளிக்கும் மண் |
|
Posted by: Subiththiran - 04-22-2006, 09:48 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<span style='color:red'><b>இரத்தத்தில் குளிக்கும் மண்</b>
இலங்கை மண் இன்னொரு தடவை இரத்தத்தில் குளித்தாக வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகின்றது. தாயகத்தின் முக்கியமான அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறியதைப் போல இந்தத் தசாப்தத்தில் இலங்கைத் தீவு இந்து சமுத்திரத்தில் ஒரு இரத்தக் குழம்பாக மிதந்தாக வேண்டுமா என்பது தெரியவில்லை. என்றாலும் இரத்தம் சிந்தும் போர் ஒன்று நிகழ்ந்து தான் ஆக வேண்டியுள்ளது.
இந்தக் கொடுமையான போர் தமிழ் மக்களால் விரும்பப்படாத ஒன்று என்ற போதிலும் அதுதான் தென்னிலங்கையின் ஆளும் வர்க்கம் விரும்பி ஏற்கின்ற ஒன்றாக இருக்கின்றது என்பது உண்மையாகும். சமாதானத்துக்கான காலம் என்பது இப்போது இல்லை. ஒப்புக்கு அப்படி ஒரு காலம் இருப்பதாக சர்வதேசமும் வசதிக்காக சிறிலங்காவும் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
தமிழர் தரப்பை பொறுத்தவரை அப்படி ஒன்றுக்கான அடிப்படைகள் யாவும் எப்போதோ தகர்க்கப்பட்டுவிட்டன. சுட்டிப்பாக ரணிலின் அரசுடன் பேசிய ஆறு சுற்றுக்களில் எதுவும் நடைமுறைக்கு கொண்டு வரப்படாமல் கிடப்பில் போடப்பட்டதுடன் அது காலாவதியாகிவிட்டது.
அதன் பின்னர் காட்டப்பட்ட போலியான சமாதானத்துக்கான சமிக்ஞைகள் யாவற்றையும் தாம் போர் விரும்பிகள் அல்ல என்பதை வெளிக் காட்டுவதற்காகவும், சிறிலங்காவின் உண்மை முகக்தை உலகறியச் செய்வதற்குமாக புலிகள் ஏற்று எதிர்கொண்டனர்.
தென்னிலங்கையை பொறுத்தவரை யுத்தமும் இல்லாத சமாதானமும் இல்லாத இரண்டுக்கும் இடையேயான ஒரு சூனியம் போதுமானது. ஏற்கனவே இருக்கும் நாட்டின் கட்டமைப்பை கொண்டு நடத்தவும் அதற்கான பொருளாதார அடிப்படைகளைப் பெற்றுக் கொள்ளவும் முதலீடுகளைக் கொண்டு வரவும் அது உதவும்.
இந்த வகையான நலன்கள் எவையுமே தமிழருக்கு இல்லை என்பதுடன் சமாதானத்தின் பெயரால் உருவாகக் கூடிய இயல்பு நிலையும் கூட கானல் நீராகவே போயிருக்கின்றது. ஏற்றுக் கொள்வதற்கு கடினமான, தமிழரின் பலத்தை சீர்குலைக்கின்ற நகர்வுகளை சிறிலங்காவும் அந்நிய புலனாய்வு அமைப்புக்களும் இந்தக் காலத்தில் செய்தன செய்கின்றன.
ஆனால், இதனை தொடர்ந்தும் அனுமதிக்க விடுதலைப்புலிகள் தயாராக இல்லை. புலிகளைப் பலவீனப்படுத்தும் முயற்சி தோல்வி அடைவதை, ஸ்தம்பிதம் அடைவதை அரசும் ஜீரணித்துக் கொள்ள ஆயத்தமாக இல்லை.
கட்டம் கட்டமாக வடக்கிலும் கிழக்கிலும் நடந்தேறிவரும் நிழல் யுத்தங்கள் இதன் எதிர்விளைவுகள் தான் என்பதை திடமாக சொல்லலாம்.
புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு வெளியே - அதன் மீறல்கள் என்று நிரூபிக்க இயலாதவாறு நடந்து வரும் இந்த நிழல் யுத்தத்தில் களநிலைமை சிறிலங்காவுக்கு எதிரானதாக பாதகமானதாக மாறத் தொடங்கிவிட்டது. இதன் எதிரொலி அது நிழல் யுத்தம் புரிவதுடன், ஒரு இனப்படுகொலையையும் நிகழ்த்துவதற்கு தலைப்பட்டிருக்கின்றது.
புரிந்துணர்வு உடன்படிக்கை காலத்தில் நடக்கும் ஒரு இனப்படுகொலை விடுதலைப்புலிகளுக்கு எதிரான அபிப்பிராயத்தை உருவாக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டது. திருகோணமலைச் சம்பவத்தை சிறிலங்கா அரச தரப்பும் அதன் ஊடகங்களும் சர்வதேச ரீதியாக இயங்கும் சில தமிழ் ஊடகங்களும் அறிக்கையிட்ட விதம் அப்படித்தான் இருந்தது.
கடந்த ஜெனீவா பேச்சுக்களில் சிறிலங்கா அரசு நடைமுறைப்படுத்திக் காட்டுவதாக கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததன் பிரதிபலனாக அமைந்த இந்த இனப்படுகொலை, அடுத்த கட்ட பேச்சுக்களை இல்லை என்றாக்கிவிடும் யதார்த்தமாகி இருக்கின்றது.
திருகோணலையில் மாமனிதர் விக்கினேஸ்வரனின் படுகொலையுடன் தொடங்கிய அரச புலனாய்வு அமைப்பின் - அதனோடு இயங்கும் ஒட்டுப்படைகளின் தமிழின அழிப்பு இன்று வரை நாளாந்தம் நடக்கின்றது. ஒரு நிழல் யுத்தத்தின் பலிகளாக இப்போது நடக்கும் கொலைகளை கணிப்பிட இயலாது.
மக்கள் படையின் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்படுகின்றனர் என்பது சரிதான். ஆனால், அரச படைகளால் படையினரைக் கொல்பவர்களை இனங்காண இயலவில்லை. மாறாக வெகுசனங்களின் மீது தமது பழியைத் தீர்த்து வடிகால்தேடிக் கொள்கின்றனர். இந்தநிலையில் இது நிழல் யுத்தத்தில் இருந்து மாறுபட்டு தமிழின அழிப்பாக அரசால் மாற்றப்பட்டிருக்கின்றது.
இதுதான் அடுத்தசுற்று ஜெனீவாப் பேச்சுக்களுக்கு முட்டுக் கட்டையாப் போகின்ற இன்னொரு அம்சமாகும். வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தின் களநிலவரங்களை ஆராய்ந்து முடிவெடுக்க மத்திய குழு கூடுவதற்கு சிறிலங்கா அரசு இப்போது செய்யும் இடைய+று நீக்கப்படலாம் போல் தெரிகின்றது. இதன்மூலம் பேச்சுக்களுக்கு வழிவகுத்துவிட்டதாக அது பரப்புரை செய்யலாம்.
ஆனால், ஒருவழியை திறந்துவிட்டு மறுபுறத்தில் தமிழ் மக்களை படுகொலை செய்துகொண்டிருப்பது ஜெனீவாவுக்கு செல்வதற்கான பாதையை திறப்பதற்கான சாவியாக இருக்கமுடியாது.
கடந்த ஜெனீவா பேச்சுக்களின் போது ஒட்டுப்படைகள் ஆயுதங்களுடன் இருப்பதாக ஒப்புக்கொண்ட அரசு பின்னர் அப்படி ஒன்று இல்லை என்றது. இப்போது அரச தரப்பு அமைச்சர்கள் ஒட்டுக்குழுக்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றின் ஆயுதங்களை களையும் வல்லமை அரசிடம் இல்லை என்கின்றனர்.
இதனை தம்மை கீழிறக்கிக் கொள்ளும் ஒரு இராஜதந்திரமாக பயன்படுத்துகின்றார்கள். அடுத்த சுற்றுபேச்சுக்கள் இடம்பெறுமாக இருந்தால் அதில் பேசப்படும் விடயங்களையும் நடைமுறைப்படுத்தாமல் நழுவுவதற்கான உத்தியாக இதனை கையாளும்.
<b>ஆனால், இப்போது வடக்கில் நடக்கும் அதிகமான கொலைகளுக்கு ஒட்டுப்படைகளுக்கு அப்பால் சிறிலங்கா இராணுவமும் அதன் புலனாய்வு அமைப்புமே காரணமாக இருக்கின்றன. இந்த மாபெரும் புரிந்துணர்வு உடன்படிக்கை மீறல்கள் சர்வதேசத்தின் கண்டனத்துக்கு உட்படவில்லை.
[size=18][b]ஒட்டுப்படைகளால் அமைதி முயற்சிகளுக்கு ஆபத்து என்று எச்சரித்த நாடுகள் எல்லாம், அரச படைகளின் கொலைகளினால் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் பற்றி இன்னும் பேசவில்லை. அதனை அவை பேசத் தொடங்குவதற்குள் தமிழ் மக்கள் இன்னும் பலநூறு பேர் கொன்றொழிக்கப்பட்டுவிடுவர். </b></span>
[b]அப்படி ஒரு கட்டம் வரும் வரைக்கும் ஈழப்போர் தொடங்காமல் இருக்கும் என்று அதீத பொறுமையுடன் நம்பிக்கொண்டிருக்க இயலாது என்பது தான் யதார்த்தம்.
-ஞாபகன்-
நன்றி - மட்டு ஈழநாதம்.
pathivu.com
|
|
|
| ஆயிரக்கணக்கான இராணுவத்தினரது சடலங்களை ஒப்படைப்போம் |
|
Posted by: Subiththiran - 04-22-2006, 09:21 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'><b>மக்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரது சடலங்களை ஒப்படைப்போம்: மன்னார் அரசியல்துறை எச்சரிக்கை </b></span>
தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா படையினரது தாக்குதல்கள் தொடர்ந்தால் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரது சடலங்களைப் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் ஒப்படைக்க நேரிடும் என்று மன்னார் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் இனியவன் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மடுப்பகுதியில் சிறிலங்காப்படையினரும், ஆழ ஊடுருவும் படைப்பிரிவினரும் இணைந்து நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
தமிழர்தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறிலங்காப் படையினரின் தமிழ் மக்கள் மீதான கொலைக் கெடுபிடிகள் வௌ;வேறு வடிவங்களில் தொடர்கின்றன.
சமாதான காலங்களில் மக்கள் மீதான எண்ணற்ற தாக்குதல்களைப் பொறுத்துப் பொறுத்து இருந்தோம்.
இனியும் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசபடைகள் தாக்குதல்களை மேற்கொண்டால் ஆயிரக்கணக்கான சிறிலங்காப் படையினரின் சடலங்களை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் முன்னிலையில் ஒப்படைக்க நேரிடும் என்றார் அவர்.
¾¸Åø: Ò¾¢Éõ.
|
|
|
| வணக்கம். |
|
Posted by: muthlvan123 - 04-22-2006, 03:49 PM - Forum: அறிமுகம்
- Replies (16)
|
 |
வணக்கம்.
<img src='http://img220.imageshack.us/img220/8057/vijay017lk.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:13pt;line-height:100%'>தலைப்பை தமிழில் மாற்றி இணைப்பை சரி செய்திருக்குறேன்.-யாழ்பிரியா</span>
|
|
|
| நெல்லியடியில் ஓட்டோ சாரதிகள் இருவர் சுட்டுக் கொலை |
|
Posted by: Naasamaruppan - 04-22-2006, 02:32 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (5)
|
 |
யாழ்ப்பாணம் நெல்லியடியில் ஓட்டோ சாரதிகள் இருவரை அடையாளம் தெரியாத நபர்கள் இன்று சனிக்கிழமை சுட்டுப் படுகொலை செய்துள்ளனர்.
வடமராட்சி மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று மாலை 5 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது.
இச்சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சுப்பிரமணியம் வசீகரன் என்ற கண்ணன் வடமராட்சிப் பகுதி ஓட்டோ வாகன உரிமையாளர் ஒன்றியத்தின் தலைவராக இருந்தார்.
சிறிலங்கா இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுவினரால் இப்படுகொலை நடத்தப்பட்டதாக படுகொலை செய்யப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
படுகொலை செய்யப்பட்ட கண்ணன் (வயது 28) கரவெட்டி இராஜகிராமத்தைச் சேர்ந்தவர். இரு பிள்ளைகளின் தந்தையாவார்.
கடந்த டிசம்பரில் இடம்பெற்ற வன்முறைகளையடுத்து விடுதலைப் புலிகளின் பகுதிக்கு இடம்பெயர்ந்து மீண்டும் அண்மையில் கரவெட்டிக்குத் திரும்பி ஓட்டோ வாகனத்தை ஓட்டி வந்தார்.
படுகொலை செய்யப்பட்ட மற்றொரு சாரதியான இரத்தினம் இராசிநாதன் (வயது 23) துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது கண்ணனோடு நின்று கொண்டிருந்தவராவர்.
நெல்லியடி சந்தியில் வழமையாக இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்ததாகவும் இப்படுகொலையின் போது அவர்கள் அப்பகுதியிலிருந்து விலகிச் சென்று படுகொலைச் சம்பவத்துக்குப் பின்னர் திரும்பியதாக நெல்லியடி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
புதினம்
|
|
|
| மன்னாரில் படையினர் கிளைமோர் தாக்குதல் - இரு அப்பாவி இளைஞர்கள |
|
Posted by: Naasamaruppan - 04-22-2006, 02:31 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
மன்னார் மாவட்டம் பரப்புக்கடந்தான் பகுதிக்குள் ஊடுருவிய ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படைப்பிரிவு இன்று பிற்பகல் 3.00 மணியளவில் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் இரு அப்பாவி இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆண்டாங்குளம் பகுதியில் இருந்து மடு நோக்கி உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த இந்த இளைஞர்கள் மீதே தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இதனால் அந்த உந்துருளியில் சென்ற இரு இளைஞர்களும் உயிரிழந்தனர்.
பெரியபண்டி விரிச்சான்ää மடுää மன்னாரைச் சேர்ந்த 25 அகவையுடைய யோகநாதன் சர்வேந்திரன்ää 20 அகவையுடைய தம்பையா யேசுராஜா (கறா) ஆகிய இரு இளைஞர்களுமே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சங்கதி
|
|
|
| கணவன் மனைவி ஆசை குறைகிறது |
|
Posted by: AJeevan - 04-22-2006, 01:27 PM - Forum: மருத்துவம்
- Replies (7)
|
 |
<span style='font-size:22pt;line-height:100%'><img src='http://www.dailythanthi.com/magazines/IMAGES/GIF/sm/Page03d.jpg' border='0' alt='user posted image'>
- அதிர்ச்சி சர்வே
<img src='http://www.dailythanthi.com/magazines/IMAGES/GIF/sm/Page03g.jpg' border='0' alt='user posted image'>
\"கணவன், மனைவிக்கு இடையே படுக்கை அறையில் காதல் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. இதனால் அவர்களுக்குள் நிகழும் செக்ஸ் உறவில் நேசமும், மனம் லயிக்கும் நெருக்கமும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இருவருக்குமே இருக்கும் மனநெருக்கடியும், பிரச்சினைகளும், சோர்வும் படுக்கை அறையை பெயரளவுக்கு உடல்கள் மட்டும் இணையும் இடமாக மாற்றிக்கொண்டிருக்கிறது. கணவன்-மனைவி படுக்கை அறை உறவு ஏதோ ஒரு சடங்கு, சம்பிரதாயம் போல் ஆகிவிட்டது. இந்த நிலையை சமூகம் உணர்ந்து விழித்துக்கொள்ளா விட்டால் எதிர்காலத்தில் கணவன், மனைவி இடையே ஏற்படும் பிரச்சினைகள் எல்லையில்லாமல் போய்விடும்'' -என்கிறார், பிரபல செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் டி.காமராஜ்.
இவரது `இந்தியன் அசோசியேஷன் பார் செக்ஸாலஜி' சார்பில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு மேற்கண்ட தகவல்களை தெரிவிக்கிறது.
\"எங்கள் குழுவின் சர்வேயில் நகரத்தில் வாழும் நாற்பத்தி நான்கு சதவீத திருமணமான ஆண்கள் தங்களுக்கு செக்ஸ் மீது இருக்கும் ஆர்வம் குறைந்து கொண்டே இருப்பதாகச் சொல்கிறார்கள். இதனால் அவர்களது தாம்பத்ய வாழ்க்கை நெருக்கடிக்குள்ளாகுகிறது. மேற்கண்டவர்களில் 29 சதவீதம் பேர் நிறைய சம்பாதிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் \"எங்கள் வேலையிலே நாங்கள் மிகவும் சோர்ந்து போகிறோம். வாரத்தில் ஒரு முறையாவது உறவு வைத்துக்கொள்ளாவிட்டால் மனைவி, அவள் மீது எங்களுக்கு பாசம் இல்லை என்று நினைத்துவிடுவாள். அப்படி ஒரு எண்ணம் அவளுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் படுக்கையை பகிர்ந்துகொள்கிறோம்.''-என்று கூறி இருக்கிறார்கள்.
இந்த மாதிரியான எண்ணத்துடனே அவர்கள் படுக்கையை பகிர்ந்து கொள்வதால் அவர்களையே அவர்கள் ஏமாற்றிக்கொள்வதோடு, தங்கள் மனைவிகளின் உணர்வு களையும் மழுங்கடிக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாமல் போய்விடுகிறது. இப்படி திருப்தியில்லாமல் உறவு வைத்துக்கொள்வதாலும், அதிக நாட்கள் இடைவெளி விட்டு உறவு கொள்வதாலும் காலப்போக்கில் அந்த கணவன், மனைவி இருவருக்குமே உறவில் எந்த சுகமும் இல்லாமல் போய்விடும். முடிவில் ஆசையே குறைந்துபோய் `திருப்திதராத இந்த உறவு நமக்குள் தேவையா?'-என்ற ரீதியில் சிந்திக்கத் தொடங்கிவிடுவார்கள். அதன் விளைவுகளால் குடும்ப உறவுகளில் சிக்கல் ஏற்படுகிறது. மட்டுமின்றி குழந்தை இல்லாத தம்பதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது''-என்கிறார்.
ஆசியா-ஓசியானிக் செக்ஸாலஜிஸ்ட் சங்கத்தின் துணைத்தலைவரான டாக்டர் காமராஜ் வெளியிட்டிருக்கும் சர்வே தொடர்பான ஆய்வறிக்கையில் கணவன்-மனைவி உறவில் சிக்கல் ஏற்பட என்னென்ன காரணங்கள் என்பதையும் விளக்கியுள்ளார்.
நேரமின்மை: கணவன், மனைவி உறவுச்சிக்கலுக்கு முக்கிய காரணமாக இருப்பது நேரமின்மைதான். இரண்டு பேரும் வேலை பார்க்கும் குடும்பங்களில் இதுவே பெரிய வில்லன். மனைவி அலுவலக வேலையை முடித்துக்கொண்டு வேகவேகமாக வீட்டிற்கு வருவார். வந்த வேகத்திலே சமையல் அறைக்குள் அவர் நுழையவேண்டும். பிரிஜ்ஜில் ஏற்கனவே வாங்கி வைத்த மீனோ, இறைச்சியோ இருக்கும். அதை எடுத்து சமையல் செய்யவேண்டும். மறுநாள் காலை உணவுக்கு என்ன தயாரிப்பதென்று முடிவெடுக்க வேண்டும். வீட்டை சுத்தம் செய்தல், பாத்திரம் தேய்த்தல் என்று அவள் சுழல்கிறாள். அதோடு நின்று விடுவதில்லை. குழந்தை படித்துக்கொண்டிருக்கும். அதன் சந்தேகத்தை தீர்த்துவைக்கவேண்டும்.
இந்த நிலையில் கணவர் வீடு திரும்புவார். அவர் எப்போது தூங்கலாம் என்ற நிலையிலே வருகிறார். கணவன், மனைவி இருவர் நேரமும் வேலை, அலுவலகம், குழந்தை, டெலிவிஷன் நிகழ்ச்சி, உறவினர்கள் வட்டம், வீட்டு வேலைகள் போன்ற அனைத்துக்கும் ஒதுக்கப்பட்டுவிடுவதால் கணவன், மனைவி இருவருக்கும் அவர்களுக்கென்று நேரம் ஒதுக்க முடியாமல் போய்விடுகிறது. அன்றன்றைய வேலை முடிந்து இருவரும் படுக்கைக்கு செல்லும் போது சோர்ந்து போய், எப்போது தூங்கலாம் என்ற நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள். கணவனும், மனைவியும் சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்கவோ, அவர்கள் விரும்பிய பொழுதுபோக்குகளில் ஈடுபடவோ, அவர்கள் அந்தரங்கமாக பேசிக் கொண்டிருக்கவோ நேரமில்லாமல் போய்விடுகிறது. அதிக சோர்வு, களைப்பு, மறுநாள் பணி பற்றிய சிந்தனை போன்றவைகளுடன் அவர்கள் படுக்கைக்குச் செல்லுவதால் படுத்ததும் தூங்கிவிடுகிறார்கள். அதை மீறி அவர்கள் உறவு கொள்ள விரும்பினால், அது முழுமையான மன ஈடுபாட்டோடு அமையாமல் ஏதோ அவசர கோலத்து சடங்கு போல் ஆகிவிடுகிறது. இதில் குறிப்பிடவேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. கணவர், மனைவியிடம் அன்பு செலுத்தாமல் இருந்தாலோ, அவருடைய அன்றாட செயல்பாடுகள் பிடிக்காமல் இருந்தாலோ அவளுக்கு பிறப்பு உறுப்பு இறுக்க நிலைத்தோன்றிவிடும். அதனால் உறவு, வலி நிறைந்த அவஸ்தையாக மாறி, உடலுறவில் நிரந்தர வெறுப்பை உருவாக்கிவிடும்.
பலகீனநிலை: வேலையில் ஏற்படும் மனநெருக்கடியும், பொருளாதார சிக்கலும் ஆண்க ளுக்கு சோர்வு மனநிலையை அதிகம் ஏற்படுத்துகிறது. அந்த சோர்வு நிலை, ஆண்க ளுக்கு செக்ஸ் பலகீனத்தை உருவாக்கும். இந்த பலகீனத்தை அப்படியே வைத்துக் கொண்டிருந்தால், அது செக்சில் வெறுப்பு நிலையை உருவாக்கும். அதனால் மனச் சோர்வில் இருந்து ஆண்கள் விடுபடவேண்டும். அவர்களுக்கு செக்ஸ் பலகீனங்கள் இருந்தால் அதற்குரிய சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். இப்போது எல்லாவிதமான செக்ஸ் பலகீனங்களுக்கும் சிகிச்சைகள் உள்ளன.
திருமணத்திற்கு முந்தைய உறவுகள்:
திருமணத்திற்கு முன்பு செக்ஸ் உறவில் ஈடுபட்டிருப்பதும், அதில் தோல்வி எற்பட்டு மனநெருக்கடிக்குள்ளாகுவதும் திருமணத்திற்குப்பிறகு செக்ஸ் மீது ஒரு வித வெறுப்பை யும், பலகீனத்தையும் உருவாக்குகிறது. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் திருமணத்திற்கு முன்பு உறவு வைத்துக்கொள்ளும் போது அந்த உறவினை ஹோட்டல் அறையிலோ, தெரிந்த வீட்டிலோ வைத்துக்கொள்கிறார்கள். அப்போது அவர்கள் போலீஸ் பயம், தெரிந்தவர்கள் யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற அச்சம், பெற்றோருக்கு தெரிந்து விடுமோ என்ற கவலை போன்றவைகளுக்கு ஆட்படுகிறார்கள். அந்த பயத்தால் அவர்களால் முழுமையான உறவில் ஈடுபடமுடியாது. அது அவர்களுக்கு ஒரு வித தோல்வி மனப்பான்மையை தந்துவிடும். அதையே நினைத்து மனநெருக்கடிக்கு உள்ளாகி திருமணத்திற்குப் பிறகும் முழுமையாக செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள முடியாமல் தவித்துப்போகிறார்கள்.
உடற்கூறு அறிவின்மை:
ஆண்களும், பெண்களும் இப்போது எவ்வளவோ படித்தவர்களாகவும், பொது அறிவில் சிறந்தவர்களாகவும் இருந்தாலும் உடற்கூறு பற்றிய அறிவில் ஏதும் அறியாதவர்களைப் போல்தான் இருக்கிறார்கள். ஆணின் உடற்கூறு பற்றி பெண்ணும், பெண்ணின் உடற்கூறு பற்றி ஆணும் சரியாக அறிந்திருப்பதில்லை. இப்போது பெரும்பாலனவர்களுக்கு செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் எங்களிடம் கவுன்சலிங்குக்கு வரும் தம்பதிகளில் சிலருக்கு சரியான முறையில் உறவு கொள்ளவே தெரிந்திருக்கவில்லை என்பதைக் கண்டறிய முடிகிறது.
கடந்த வருடத்தில் குழந்தைபேறு சிகிச்சை பெற்ற தம்பதிகள் அனைவரிடமும் எடுத்த கருத்துக் கணிப்பில் இன்னொரு விஷயம் தெளிவாகப்புலப்பட்டுள்ளது. அந்த தம்பதிகளில் பெரும்பாலானவர்களுக்கு மன உளைச்சல் மிக அதிகமாக இருந்தது. மனஉளைச்சல் அதிகமாக இருக்கும் போது அவர்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறைந்து போவது மட்டு மின்றி ஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கை குறைந்து, அதன் உயிரோட்ட தன்மையும் மிகக்குறைந்து போகிறது. அதுவே குழந்தையின்மைக்கான காரணமாகிறது.
பெண்களில் பலர் இப்போது வேலைக்குச் செல்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் புடவையைத்தவிர இதர ஆடைகளையே அணிகிறார்கள். அப்போது உள்ளாடை அணிகி றார்கள். அவர்கள் முழுநேரமும் பேன்டீஸ் அணிவது நல்லதல்ல. ஏன்என்றால் கோடைகாலத்தில் நன்றாக பெண்களுக்கு வியர்க்கும். அப்போது மலத்துவாரப்பகுதியில் தொற்றுக்கிருமிகள் இருக்கும். அவை வியர்வையுடன் சேர்ந்து தண்ணீர் தன்மையுடன் பிறப்பு உறுப்பு பகுதியில் பிரவேசிக்கும். அங்கு தொற்றுக்கிருமிகள் தாக்குதல் உருவாகி விடும். அந்த தாக்குதலுக்கு உடனடியாக முறையான சிகிச்சை எடுக்காவிட்டால், உறவின் போது கணவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் பெண்கள் 24 மணிநேரமும் பேன்டீஸ் அணியும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளக்கூடாது.
ஆண்களும் இறுகிய உள்ளாடை அணியக்கூடாது. விரைப்பகுதி எப்போதும் உடலை ஒட்டிய நிலையில் இருக்கக்கூடாது. இறுக்கமான உள்ளாடை அதற்கு மாறான நிலையை உருவாக்கிவிடுகிறது. விரைப்பகுதியின் தட்பவெப்பநிலை உடல் தட்பவெப்பநிலையை விட ஒரு டிகிரி குறைவாக இருக்கும். உள்ளாடை அணிந்திருக்கும் போது உடலோடு விரைப்பை ஒட்டி உடலின் தட்பவெப்ப நிலைக்கு மாறிவிடுகிறது. அதனால் உயிரணுவின் உயிர்தன்மையில் பாதிப்பு ஏற்பட்டுவிடுகிறது.
இப்போது வாழ்க்கை சூழல், வாழும் முறை, உடை கலாசாரம், உணவுக் கலாசாரம், போட்டி மனப்பான்மை, மனநெருக்கடி போன்ற அனைத்தும் கணவன்- மனைவி நேசத்திற்கும், படுக்கை அறை உறவுக்கும், திருப்தியான தாம்பத்ய வாழ்க்கைக்கும் எதிராக இருக்கிறது. அதை எல்லாம் உணர்ந்து கணவனும், மனைவியும் நடந்து பாசத்தையும், நேசத்தையும் பெருக்கிக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
<img src='http://www.dailythanthi.com/magazines/IMAGES/GIF/sm/Page03f.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.dailythanthi.com/magazines/IMAGES/nyayiru_malar/sunhead.gif' border='0' alt='user posted image'></span>
|
|
|
| மலேசியாவில் 100 ஆண்டுகால காளி கோவில் இடிக்கப்பட்டது |
|
Posted by: aathipan - 04-22-2006, 12:40 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (23)
|
 |
மலேசியாவில்
100 ஆண்டுகால காளி கோவில் இடிக்கப்பட்டது
பக்தர்கள் கதறல்
கோலாலம்பூர், ஏப்.22-
மலேசியாவில் உள்ள 100 ஆண்டு காலப் பழமையான காளி கோவிலை அதிகாரிகள் திடீர் என்று இடித்தனர். இதைப் பார்த்து பக்தர்கள் கதறி அழுதனர். கோவிலை இடிக்க வேண்டாம் என்று கெஞ்சினர்.
சாமி கும்பிட்ட போது
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் உள்ளது மலைமேல் ஸ்ரீசெல்வகாளியம்மன் கோவில். இது கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது.
இந்தக் கோவிலில் 300 க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி கும்பிட்ட போது அதை இடிப்பதற்கு அதிகாரிகள் புல்டோசர் இயந்திரங்களுடன் வந்தனர். இதைப் பார்த்த பக்தர்கள் கோவிலை இடிக்க வேண்டாம் என்று அதிகாரிகளிடம் கெஞ்சிக் கேட்டனர். இதற்கு அதிகாரிகள் சம்மதிக்கவில்லை.
இடித்துத் தள்ளினர்
போலீஸ் பாதுகாப்புடன் கோவிலை இடித்துத் தள்ளினர். இதைப் பார்த்து பக்தர்கள் கதறி அழுதனர்.
இதுபற்றி கோவில் நிர்வாகக் குழுவின் துணைத் தலைவர் சுப்பிரமணியன் ராக்கப்பன் போலீசில் புகார் கொடுத்தார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
நாங்கள் கோவிலில் சாமி கும்பிட்ட போது, அதை இடிப்பதற்கு அதிகாரிகள் வந்து விட்டனர். இதனால் நாங்கள் பிரார்த்தனையை பாதியிலேயே கைவிட வேண்டியதாகி விட்டது. அதிகாரிகள் கோவிலை இடித்துத் தள்ளி விட்டனர்.
இவ்வாறு அந்தப் புகாரில் சுப்பிரமணியன் ராக்கப்பன் கூறி இருந்தார்.
வணிக வளாகம்
இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசாங்க நிலத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோவில் கட்டப்பட்டது. இங்கு பக்தர்கள் 100 ஆண்டுகளாக பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
இந்தக் கோவிலை இடித்து விட்டு இதில் மிகப் பெரிய வணிக வளாக கட்டிடத்தை கட்டுவதற்கு நகரசபை அலுவலகம் திட்டமிட்டு உள்ளது. இதற்காக கோவிலை இடிக்கப் போவதாக நகரசபை கவுன்சிலருக்கு நகரசபை கடிதம் எழுதியது. அதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்தார். அதைப் பொருட்படுத்தாமல் கோவில் இடிக்கப்பட்டது.
ஏற்கனவே 2 முÛ
2001-ம் ஆண்டும் 2004-ம் ஆண்டும் கோவிலை இடிக்க நகரசபை முயற்சி செய்தது. அரசியல் தலைவர்கள் தலையிட்டு அதைத் தடுத்தனர். இப்போது இடித்துத் தள்ளி விட்டனர்.
இவ்வாறு ராக்கப்பன் கூறினார்.
நன்றி
தினத்தந்தி
|
|
|
|