Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொய்யர்களான சிறிலங்கா அமைச்சர்கள்
#1
[b]<span style='font-size:25pt;line-height:100%'>ஜெனிவா பேச்சுக்களுக்கான நாட்களை மாற்ற அரசு தயார் கருணா குழு தொடர்பான வீடியோ பதிவின் உண்மைத் தன்மை குறித்து சந்தேகம் உள்ளது. அமைச்சர் ரம்புக்வெல்ல</span>


சரியான காரணங்கள் இருப்பின் ஜெனிவா பேச்சுக்களுக்கான நாட்களை மாற்றிக்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது என அமைச்சர் கெஹலிய ரம்புக் வெல்ல தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு முன்னரைப் போல் இராணுவ உலங்குவானூர்தி ஏன் தற்போது வழங்கப்படவில்லை என்று விளக்கம் அளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.

இதுகுறித்து கொழும்பு ஊடகவியலாளர்களிடம் அமைச்சர் மேலும் கூறியதாவது:

கிழக்கில் இருந்து கிளிநொச்சிக்கு விடுதலைப்புலிப் போராளிகளை அழைத்து வர பொதுப்பயண உலங்குவானூர்தியை ஒழுங்கு செய்வது தொடர்பாக தெரிவித்துள்ளோம். 32 போராளிகள் பயணிப்பதற்கான வகையில் அது போதுமானது அல்ல என விடுதலைப்புலிகள் கூறியுள்ளனர். ஒவ்வொரு குழுக்குழுவாக விடுதலைப்புலிகள் பயணம் மேற்கொள்ளலாம் என்றும் அதற்கான பாதுகாப்புகளை செய்வோம் என்றும் நோர்வே குழுவிடம் தெரிவித்துள்ளோம். மேலும் சில விடயங்களையும் கண்காணிப்புக் குழுத்தலைவரிடம் தெரிவித்துள்ளோம். கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சில முடிவுகள் தவறானது என்று அரசாங்கம் கருதுகிறது. முன்øனய செயற்பாடுகளில் எது சரி? எது தவறு? என்று சொல்ல முடியாது.

நாங்கள் புதிய அணுகுமுறையைக் யைக்கடைப்பிடிக்கிறோம். அதனடிப்படையிலேயே பொதுமக்கள் பயணிக்கும் ஹெலியை ஏற்பாடு செய்ய முன்வந்துள்ளோம்.

சரியான காரணங்கள் இருப்பின் ஜெனிவாப் பேச்சுக்களுக்கான நாட்களை மாற்றிக்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது.

அவுஸ்திரேலிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கருணா குழு தொடர்பான வீடியோ பதிவின் உண்மைத் தன்மை குறித்து சந்தேகம் உள்ளது. அது உண்மையிலேயே அரச கட்டுப்பாட்டுப் பகுதிதான் என்பது அதில் தெளிவுபடுத்தப்படவில்லை.

எங்காவது ஓரிடத்தில் படமெடுத்துவிட்டு அரச கட்டுப்பாட்டுப் பகுதி என்று கூட கூறலாம். உறுதியான ஆதாரங்கள் அதில் இல்லை.



இணைப்பு : newstamilnet.com
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)