Yarl Forum
இரத்தத்தில் குளிக்கும் மண் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: இரத்தத்தில் குளிக்கும் மண் (/showthread.php?tid=107)



இரத்தத்தில் குளிக்கும் மண் - Subiththiran - 04-22-2006

<span style='color:red'><b>இரத்தத்தில் குளிக்கும் மண்</b>


இலங்கை மண் இன்னொரு தடவை இரத்தத்தில் குளித்தாக வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகின்றது. தாயகத்தின் முக்கியமான அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறியதைப் போல இந்தத் தசாப்தத்தில் இலங்கைத் தீவு இந்து சமுத்திரத்தில் ஒரு இரத்தக் குழம்பாக மிதந்தாக வேண்டுமா என்பது தெரியவில்லை. என்றாலும் இரத்தம் சிந்தும் போர் ஒன்று நிகழ்ந்து தான் ஆக வேண்டியுள்ளது.

இந்தக் கொடுமையான போர் தமிழ் மக்களால் விரும்பப்படாத ஒன்று என்ற போதிலும் அதுதான் தென்னிலங்கையின் ஆளும் வர்க்கம் விரும்பி ஏற்கின்ற ஒன்றாக இருக்கின்றது என்பது உண்மையாகும். சமாதானத்துக்கான காலம் என்பது இப்போது இல்லை. ஒப்புக்கு அப்படி ஒரு காலம் இருப்பதாக சர்வதேசமும் வசதிக்காக சிறிலங்காவும் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

தமிழர் தரப்பை பொறுத்தவரை அப்படி ஒன்றுக்கான அடிப்படைகள் யாவும் எப்போதோ தகர்க்கப்பட்டுவிட்டன. சுட்டிப்பாக ரணிலின் அரசுடன் பேசிய ஆறு சுற்றுக்களில் எதுவும் நடைமுறைக்கு கொண்டு வரப்படாமல் கிடப்பில் போடப்பட்டதுடன் அது காலாவதியாகிவிட்டது.

அதன் பின்னர் காட்டப்பட்ட போலியான சமாதானத்துக்கான சமிக்ஞைகள் யாவற்றையும் தாம் போர் விரும்பிகள் அல்ல என்பதை வெளிக் காட்டுவதற்காகவும், சிறிலங்காவின் உண்மை முகக்தை உலகறியச் செய்வதற்குமாக புலிகள் ஏற்று எதிர்கொண்டனர்.

தென்னிலங்கையை பொறுத்தவரை யுத்தமும் இல்லாத சமாதானமும் இல்லாத இரண்டுக்கும் இடையேயான ஒரு சூனியம் போதுமானது. ஏற்கனவே இருக்கும் நாட்டின் கட்டமைப்பை கொண்டு நடத்தவும் அதற்கான பொருளாதார அடிப்படைகளைப் பெற்றுக் கொள்ளவும் முதலீடுகளைக் கொண்டு வரவும் அது உதவும்.

இந்த வகையான நலன்கள் எவையுமே தமிழருக்கு இல்லை என்பதுடன் சமாதானத்தின் பெயரால் உருவாகக் கூடிய இயல்பு நிலையும் கூட கானல் நீராகவே போயிருக்கின்றது. ஏற்றுக் கொள்வதற்கு கடினமான, தமிழரின் பலத்தை சீர்குலைக்கின்ற நகர்வுகளை சிறிலங்காவும் அந்நிய புலனாய்வு அமைப்புக்களும் இந்தக் காலத்தில் செய்தன செய்கின்றன.

ஆனால், இதனை தொடர்ந்தும் அனுமதிக்க விடுதலைப்புலிகள் தயாராக இல்லை. புலிகளைப் பலவீனப்படுத்தும் முயற்சி தோல்வி அடைவதை, ஸ்தம்பிதம் அடைவதை அரசும் ஜீரணித்துக் கொள்ள ஆயத்தமாக இல்லை.

கட்டம் கட்டமாக வடக்கிலும் கிழக்கிலும் நடந்தேறிவரும் நிழல் யுத்தங்கள் இதன் எதிர்விளைவுகள் தான் என்பதை திடமாக சொல்லலாம்.

புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு வெளியே - அதன் மீறல்கள் என்று நிரூபிக்க இயலாதவாறு நடந்து வரும் இந்த நிழல் யுத்தத்தில் களநிலைமை சிறிலங்காவுக்கு எதிரானதாக பாதகமானதாக மாறத் தொடங்கிவிட்டது. இதன் எதிரொலி அது நிழல் யுத்தம் புரிவதுடன், ஒரு இனப்படுகொலையையும் நிகழ்த்துவதற்கு தலைப்பட்டிருக்கின்றது.

புரிந்துணர்வு உடன்படிக்கை காலத்தில் நடக்கும் ஒரு இனப்படுகொலை விடுதலைப்புலிகளுக்கு எதிரான அபிப்பிராயத்தை உருவாக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டது. திருகோணமலைச் சம்பவத்தை சிறிலங்கா அரச தரப்பும் அதன் ஊடகங்களும் சர்வதேச ரீதியாக இயங்கும் சில தமிழ் ஊடகங்களும் அறிக்கையிட்ட விதம் அப்படித்தான் இருந்தது.

கடந்த ஜெனீவா பேச்சுக்களில் சிறிலங்கா அரசு நடைமுறைப்படுத்திக் காட்டுவதாக கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததன் பிரதிபலனாக அமைந்த இந்த இனப்படுகொலை, அடுத்த கட்ட பேச்சுக்களை இல்லை என்றாக்கிவிடும் யதார்த்தமாகி இருக்கின்றது.

திருகோணலையில் மாமனிதர் விக்கினேஸ்வரனின் படுகொலையுடன் தொடங்கிய அரச புலனாய்வு அமைப்பின் - அதனோடு இயங்கும் ஒட்டுப்படைகளின் தமிழின அழிப்பு இன்று வரை நாளாந்தம் நடக்கின்றது. ஒரு நிழல் யுத்தத்தின் பலிகளாக இப்போது நடக்கும் கொலைகளை கணிப்பிட இயலாது.

மக்கள் படையின் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்படுகின்றனர் என்பது சரிதான். ஆனால், அரச படைகளால் படையினரைக் கொல்பவர்களை இனங்காண இயலவில்லை. மாறாக வெகுசனங்களின் மீது தமது பழியைத் தீர்த்து வடிகால்தேடிக் கொள்கின்றனர். இந்தநிலையில் இது நிழல் யுத்தத்தில் இருந்து மாறுபட்டு தமிழின அழிப்பாக அரசால் மாற்றப்பட்டிருக்கின்றது.

இதுதான் அடுத்தசுற்று ஜெனீவாப் பேச்சுக்களுக்கு முட்டுக் கட்டையாப் போகின்ற இன்னொரு அம்சமாகும். வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தின் களநிலவரங்களை ஆராய்ந்து முடிவெடுக்க மத்திய குழு கூடுவதற்கு சிறிலங்கா அரசு இப்போது செய்யும் இடைய+று நீக்கப்படலாம் போல் தெரிகின்றது. இதன்மூலம் பேச்சுக்களுக்கு வழிவகுத்துவிட்டதாக அது பரப்புரை செய்யலாம்.

ஆனால், ஒருவழியை திறந்துவிட்டு மறுபுறத்தில் தமிழ் மக்களை படுகொலை செய்துகொண்டிருப்பது ஜெனீவாவுக்கு செல்வதற்கான பாதையை திறப்பதற்கான சாவியாக இருக்கமுடியாது.

கடந்த ஜெனீவா பேச்சுக்களின் போது ஒட்டுப்படைகள் ஆயுதங்களுடன் இருப்பதாக ஒப்புக்கொண்ட அரசு பின்னர் அப்படி ஒன்று இல்லை என்றது. இப்போது அரச தரப்பு அமைச்சர்கள் ஒட்டுக்குழுக்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றின் ஆயுதங்களை களையும் வல்லமை அரசிடம் இல்லை என்கின்றனர்.

இதனை தம்மை கீழிறக்கிக் கொள்ளும் ஒரு இராஜதந்திரமாக பயன்படுத்துகின்றார்கள். அடுத்த சுற்றுபேச்சுக்கள் இடம்பெறுமாக இருந்தால் அதில் பேசப்படும் விடயங்களையும் நடைமுறைப்படுத்தாமல் நழுவுவதற்கான உத்தியாக இதனை கையாளும்.

<b>ஆனால், இப்போது வடக்கில் நடக்கும் அதிகமான கொலைகளுக்கு ஒட்டுப்படைகளுக்கு அப்பால் சிறிலங்கா இராணுவமும் அதன் புலனாய்வு அமைப்புமே காரணமாக இருக்கின்றன. இந்த மாபெரும் புரிந்துணர்வு உடன்படிக்கை மீறல்கள் சர்வதேசத்தின் கண்டனத்துக்கு உட்படவில்லை.

[size=18][b]ஒட்டுப்படைகளால் அமைதி முயற்சிகளுக்கு ஆபத்து என்று எச்சரித்த நாடுகள் எல்லாம், அரச படைகளின் கொலைகளினால் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் பற்றி இன்னும் பேசவில்லை. அதனை அவை பேசத் தொடங்குவதற்குள் தமிழ் மக்கள் இன்னும் பலநூறு பேர் கொன்றொழிக்கப்பட்டுவிடுவர். </b></span>

[b]அப்படி ஒரு கட்டம் வரும் வரைக்கும் ஈழப்போர் தொடங்காமல் இருக்கும் என்று அதீத பொறுமையுடன் நம்பிக்கொண்டிருக்க இயலாது என்பது தான் யதார்த்தம்.

-ஞாபகன்-

நன்றி - மட்டு ஈழநாதம்.

pathivu.com