ஊர்ப்புதினம்

பூந்தோட்டம் - பெரியார்குளம் வீதி புனரமைக்கும் பணி ஆரம்பம்

2 months 3 weeks ago

21 JUN, 2025 | 04:10 PM

image

வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இருந்து பெரியார்குளம் முருகன் ஆலயம் வரையான 1200 மீற்றர் நீளம் கொண்ட வீதி புனரமைக்கும்  பணிகள் சனிக்கிழமை (21) ஆரம்பிக்கப்பட்டது.

கிராமப்புற வீதிகள் புனரமைக்கும் திட்டத்தின் கீழ் இந்த பணிக்காக அண்ணளவாக 11 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநகரசபையின் வட்டார உறுப்பினர் சி.கிருஸ்ணதாசின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனின் ஒழுங்குபடுத்தலில் இந்த வீதி புனரமைக்கப்படுகின்றது.

நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர், வீதி அமைக்கும் பணியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். 

நிகழ்வில் மாநகரசபை உறுப்பினர் சி.கிருஸ்ணதாஸ் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் சிரேஸ்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர் பிரமேரஞ்சன், கிராமத்தின் பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

IMG_4775.jpeg

IMG_4745__1_.jpeg

https://www.virakesari.lk/article/218075

யாழில் நடைபெற்ற பதினோராவது சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்வு!

2 months 3 weeks ago

New-Project-4-2.jpg?resize=600%2C300&ssl

யாழில் நடைபெற்ற பதினோராவது சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்வு!

பதினோராவது சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்வு இன்றையதினம் (21) ஆயிரத்திற்கு மேற்பட்டோரின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் காலை 7:30 முதல் 8:30 மணி வரை யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் இந்திய துணைத் தூதர் சாய் முரளி, வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ் மாநகர சபை ஆணையாளர் எஸ்.கிருஷ்ணேந்திரன், இந்திய தூதரக உயர் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

IMG_3778-scaled.jpeg?resize=600%2C400&ss

New-Project-3-3.jpg?w=600&ssl=1

New-Project-5-2.jpg?w=600&ssl=1

https://athavannews.com/2025/1436530

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

2 months 3 weeks ago

1744974542-gff.jpeg?resize=600%2C375&ssl

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இஸ்ரேலின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் இருந்து எகிப்து வழியாக இலங்கைக்கு பயணிக்க விரும்பும் இலங்கையர்கள் செல்லுபடியாகும் இஸ்ரேலிய விசாவை வைத்திருப்பது கட்டாயமாகும் என்று இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

டெல் அவிவ் விமான நிலையம் மூடப்பட்டதால் இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இலங்கையர்கள் தூதரகத்திலிருந்து தொடர்புடைய ஆவணங்களைப் பெற்ற பிறகு எகிப்திய எல்லை வழியாக வௌியேறலாம் என்று இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் முன்னர் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இருப்பினும், நேற்று எகிப்திய எல்லையைக் கடந்து கெய்ரோ விமான நிலையத்திலிருந்து இலங்கைக்குப் புறப்பட்ட நான்கு இலங்கையர்களில் ஒருவருக்கு இஸ்ரேலிய விசா இல்லாத காரணத்தினால், எகிப்திய அதிகாரிகளால் நீண்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பின்னர், இது தொடர்பில் எகிப்துக்கான இலங்கைத் தூதுவருக்குத் தகவல் தெரிவித்த பிறகு, எகிப்திய எல்லை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொள்ள முடிந்ததாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரா தெரிவித்தார்.

அவசரநிலையில் கூட, செல்லுபடியாகும் இஸ்ரேலிய விசா இல்லாத அல்லது காலாவதியான விசா ஊடாக வெளிநாட்டினர் எகிப்துக்குள் நுழைய முடியாது என்றும், இவ்வாறு பயணிக்க முயற்சிப்பது நீண்ட விசாரணைகளுக்கும், கைதுக்கும் கூட வழிவகுக்கும் என்றும் இஸ்ரேலிய தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, இஸ்ரேலிய விசாக்கள் இல்லாத அல்லது விசாக்கள் காலாவதியான இலங்கையர்கள் எகிப்து வழியாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட மாட்டார்கள், மேலும் செல்லுபடியாகும் இஸ்ரேலிய விசாக்கள் இல்லாதவர்கள் இலங்கைக்கு புறப்பட டெல் அவிவ் சர்வதேச விமான நிலையம் திறக்கும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்றும் தூதுவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இலங்கை திரும்புவதற்காக மேலும் இரு இலங்கையர்கள் நேற்று (20) ஆவணங்களைப் பெறுவதற்காக தூதரகத்திற்கு வந்ததாக தூதுவர் தெரிவித்தார்.

இஸ்ரேலின் பல முக்கிய நகரங்களை குறிவைத்து ஈரான் நேற்று இரவும் இன்று அதிகாலையும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்த சூழ்நிலையில் இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அந்த நாட்டு அரசாங்கம் வழங்கும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1436518

யாழ். பல்கலையில் போதைப் பாவனை இல்லை; போதை ஒழிப்பு RTI இல் வெளிவந்த உண்மை

2 months 3 weeks ago

21 JUN, 2025 | 09:57 AM

image

“யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் போதைப் பொருள் பாவனையோடு தொடர்புபட்ட முறைப்பாடுகள் எவையும் கடந்த ஓராண்டு காலமாக கிடைக்கப் பெறவில்லை” என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் “போதைப் பொருட் பாவனை” தொடர்பில் கோரப்பட்ட விடயங்களிற்கு பதிலளிக்கும் போதே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் பின்வருமாறு தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்க் கோரப்பட்ட பின்வரும் விடயங்களிற்கு பதிலளிக்கும் போதே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் போதைப் பொருள் பாவனையோ அதுசார்ந்த முறைப்பாடுகளோ கிடைக்கப் பெறவில்லை என்று பதிலளித்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தினுள் போதைப் பொருள் பாவனையோடு தொடர்புபட்டதாக முறைப்பாடுகள் எவையேனும் பல்கலைக்கழக மாணவர்கள், கலைப்பீட மாணவர்களிற்கு எதிராக கடந்த ஆறு மாத காலப் பகுதிக்குள் பதிவாகியுள்ளதா?

அவ்வாறு பதிவாகியிருப்பின் பதிவாகிய சம்பவங்கள் எத்தனை?

பதிவாகிய சம்பவங்களுடன் தொடர்புடைய மாணவர்களின் எண்ணிக்கை எத்தனை?

பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளிற்கு தற்போது வரையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? 

போதைப் பொருட்கள் எவையேனும் கைப்பற்றப்பட்டிருப்பின், கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் தற்போது யாருடைய பாதுகாப்பில் ஃ கையிருப்பில் உள்ளன?

போதைப் பொருள் பாவனையோடு தொடர்புடைய மாணவர்கள் மீள கற்றல் நடவடிக்கைளிற்கு திரும்புவதற்கு ஏதேனும் ஆற்றுப்படுத்தல் அல்லது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் போதைப் பொருள் பாவனை உள்ளதென்று பல்கலைக்கழக மாணவர்களின் மீது பாராதூரமான குற்றச்சாட்டினை முன்வைத்து கலைப்பீடப் பீடாதிபதி சி.ரகுராம் கடந்த 25, சனவரி 2025 அன்று பதவி விலகி, ஒரு வாரகாலத்தினுள் மீள பொறுப்பேற்றிருந்தார். 

மாணவர்களிற்கு எதிராக தான் மேற்கொண்ட நிர்வாக முறைகேடுகளை மூடிமறைப்பதற்காகவே அவர் ஒட்டுமொத்த பல்கலைக்கழக மாணவர்களிற்கும் எதிராக இவ்வாறான பொய்யானதொரு அவதூறினை பரப்பியிருந்தார் என்பது தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களின் ஊடாக உறுதி செய்யப்பட்டது. 

குறிப்பாக 25, சனவரி அன்று நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் அவரது முறைகேடுகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அவரது நிர்வாக முறைகேடுகள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளராக பணியாற்றிய சட்டத்துறை மாணவனினால் சவாலிற்கு உட்டபடுத்தப்பட்டது. 

பேராசிரியர் ரகுராமின் வலியுறுத்தலின் பேரில் அவதூறு பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டு குறித்த மாணவனுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டது. 

எனினும் குறித்த வகுப்புத்தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினையடுத்து மாணவனிடம் சரணடைந்த பல்கலைக்கழக நிர்வாகம், 26.03.2025 அன்று எவ்வித நிபந்தனைகளுமின்றி வகுப்புத்தடை, விசாரணைச் செயன்முறைகள் யாவும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து நீக்கப்படுவதாக துணைவேந்தர் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எனினும் தற்போது பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கீழ் அளித்துள்ள பதிலின் அடிப்படையில் அவரது குற்றச்சாட்டு பொய்யானதொன்று என்பது நிரூபிக்கப்பட்டள்ளது.

மேலும் போதைப் பொருளை ஒழிக்க வேண்டும் என்று கோரிய பேராசிரியர் ரகுராமினால் கூட எவ்வித முறைப்பாடுகளும் முன்வைக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/218041

எந்தவித ஆவணங்களும் இன்றி சிறைகளில் இருந்து 30 கைதிகள் விடுவிப்பு!

2 months 3 weeks ago

Presidential-pardon-for-197-prisoners-on

எந்தவித ஆவணங்களும் இன்றி சிறைகளில் இருந்து 30 கைதிகள் விடுவிப்பு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்திய விசாரணைகளில் எந்தவித ஆவணங்களும் இன்றி 30 கைதிகள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி சிறைக் கைதிகளை விடுவிப்பது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்தது.

இந்நிலையில், சிறைச்சாலைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட சிறைக்கைதிகள் குழு பல்வேறு பிரிவுகளின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் எந்த அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர் என்பதையும் விசாரனை செய்து வருவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், பொது மன்னிப்பு வழங்கப்பட்ட 37 பேர் விடுவிக்கப்படவில்லை என்ற தகவல்கள் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சிறைச்சாலைத் திணைக்களத்தின் விரிவான மறுசீரமைப்பு குறித்து நீதி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதுடன் அனைத்து சிறைச்சாலை கண்காணிப்பாளர்களும் எதிர்வரும் 23ஆம் திகதி கொழும்புக்கு வரவழைக்கப்பட்டு, விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் தலைமையில் கலந்துரையாடல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதே நாளில் பிற்பகல் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தலைமையில் மற்றொரு கலந்துரையாடலும் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1436484

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு”போராட்டம்!

2 months 3 weeks ago

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு”போராட்டம்!

adminJune 21, 2025

0-1-3.jpg?fit=1170%2C1170&ssl=1

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு”போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தியும் மக்கள் செயல் என்கிற தன்னார்வ இளையோர் அமைப்பினால் எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 25ஆம் திகதி வரையில் செம்மணி வளைவுப் பகுதியில் வெகுசனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

அணையா விளக்குப் போராட்டம் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தின்போது தமிழர்களது பண்பாட்டில் நம்பிக்கை சார்ந்த மரபாக இருக்கின்ற அணையா விளக்கினை முன்னிலைப்படுத்தியே இந்தப் போராட்டம் ஏற்பாட்டாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

1995ஆம் ஆண்டிலிருந்து 2025ஆம் ஆண்டு வரையில் செம்மணி பகுதியில் பல்வேறு இடங்களிலும் மனிதப் புதைகுழிகள் அகழப்பட்டுள்ள போதிலும், அது குறித்த மர்மம் இருள் சூழ்ந்ததாகவே காணப்படுகிறது.

இனவழிப்பிற்கு ஆதாரமான இந்தக் குற்றச்செயல்களுக்கான காரணமோ, இதற்கு அதிகாரம் வழங்கிய தரப்புக்கள் யார் என்பதோ, மீளவும் இதுபோன்ற மனிப் புதைகுழிகள் உருவாக்கப்படாது என்பதற்கான பொறுப்புக்கூறலோ வெளிப்படுத்தப்படவில்லை.

எனவே இருள் சூழ்ந்திருக்கும் செம்மணி மனிதப் புதைகுழி விடயத்திற்கு ஒளி பாய்ச்சப்படல் வேண்டும் என்கிற குறியீட்டு அர்த்தத்திலேயே இந்தப் போராட்டம் தொடர்ச்சியாக மூன்று தினங்கள் எரியக்கூடிய அணையா விளக்கு ஏற்றப்படுகின்றது.

போராட்டம் இடம்பெறும் மூன்று தினங்களில், முதல் இரண்டு நாட்களிலும் சுழற்சி் முறையிலான அடையாள உண்ணாவிரதமும், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான செய்திப் பட கண்காட்சியும், மக்கள் கையெழுத்து திரட்டலும், செம்மணி மனிதப் புதைகுழியோடு தொடர்புபட்ட கதை, கவிதை படிப்பும், நாடக அளிக்கையும் இடம்பெறும்.

25ஆம் திகதியாகிய மூன்றாம் நாள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறும். போராட்டத்தின் இறுதி நாளன்று ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செம்மணி மாத்திரமல்லாது வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மனிதப் புதைகுழிகள் தொடர்பிலும் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முகமாக இடம்பெறும் இந்தப் போராட்டத்தில் அதிகளவில் பொதுமக்களை இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

0-2-3.jpg?resize=800%2C800&ssl=10-3-2.jpg?resize=640%2C800&ssl=1

https://globaltamilnews.net/2025/217105/

மயிலத்தமடு மேச்சல் நிலப் பிரச்சினை ஆர்ப்பாட்டம்: 30 பேர் விடுதலை

2 months 3 weeks ago

மயிலத்தமடு மேச்சல் நிலப் பிரச்சினை ஆர்ப்பாட்டம்: 30 பேர் விடுதலை

MediaFile-9-3-780x470.jpeg

மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவனை மேச்சல் நிலப் பிரச்சினைக்கு தீர்வு கோரி 2023 ஒக்டோபர் 8 அன்று கொம்மாதுறை பகுதியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேருக்கு எதிராக ஏறாவூர் பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்கு, ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்தது. நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன், குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

கடந்த 2023 ஒக்டோபர் 8 அன்று, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மட்டக்களப்பு – செங்கலடி வருகையின்போது, மயிலத்தமடு மேச்சல் நிலப் பிரச்சினைக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 30 பேருக்கு எதிராக, வீதிப் போக்குவரத்துக்கு இடையூறு செய்தல், முறைகேடாக ஆட்களைத் தடுத்து வைத்தல் மற்றும் தேசிய வீதிச் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் ஏறாவூர் பொலிஸாரால் வழக்குத் தொடரப்பட்டது.

இவ்வழக்கு விசாரணை, ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில் நேற்று (20) நடைபெற்றது.

விசாரணையின்போது, வழக்கைத் தொடர்ந்து நடத்துவதற்கு மேலதிக ஆதாரங்கள் இல்லாததால், இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் 186ஆவது பிரிவின் கீழ் நீதிபதிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, வழக்கை முடிவுக்கு கொண்டுவந்து, குற்றஞ்சாட்டப்பட்ட 30 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

https://akkinikkunchu.com/?p=329597

வடக்கில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது! - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

2 months 3 weeks ago

வடக்கில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது!

adminJune 20, 2025

43-1-1.jpg?fit=800%2C533&ssl=1

வடக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கமநல புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபத்தில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் ரோஹன ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக விவசாயம், கால்நடை, நீர்பாசனம் மற்றும் காணி அமைச்சர் கே.டி.லால்காந்த, சிறப்பு அதிதியாக கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், விசேட அதிதியாக வட மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உள்ளிட்ட ஆசிரியர்கள், அதிபர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

43-4-2.jpg?resize=800%2C533&ssl=1

இலங்கையில் வாழ முடியாது என்ற மனோ நிலை எமது இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனால் கல்வி மற்றும் வேலைகளுக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்ற நிலையில் உள்ளனர்.

மறுபுறத்தில் பிறப்புவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.1981 காலப்பகுதியில் 8 இலட்சத்துக்கு மேல் இருந்த யாழ்.மாவட்ட சனத்தொகை தற்போது 6 இலட்சம் வரைதான் உள்ளது.

முன்னர் 11 எம்.பிக்கள் இருந்தனர். இன்று யாழ்.மாவட்டத்தில் ஆறு எம்.பிக்களே தெரிவாகின்றனர். அடுத்த தேர்தலின்போது இது மேலும் குறைவடையக்கூடும். ஏனெனில் புலம்பெயர்வு அதிகரித்துள்ளது.

வடக்கை முன்னேற்றுவது பற்றி, விவசாயம் உள்ளிட்ட தொழில்துறைகளை மேம்படுத்துவது பற்றி கடந்த காலங்களில் கவனம் செலுத்தப்படாமையும் இளைஞர்கள் மத்தியில் அதிருப்தி உருவாக காரணமாக அமைந்தது.

இந்நிலைமையை மாற்றியமைக்கவே நாம் வந்துள்ளோம். வடக்கு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விவசாயத்தை  மேம்படுத்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. வடக்கு   மக்கள பற்றி சிந்திக்கக்கூடிய தலைவர் நாட்டின் ஜனாதிபதியாக உள்ளார்.  அதனால்தான் பாதீட்டில்கூட கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தைக் கட்டியெழுப்பும்போது யாழில் கம்பீரத்தை எடுத்துக்காட்டும் வகையில் நிர்மாணங்கள் இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

எனவே, தமிழ் மக்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம்;. மக்கள் கைவிட்டால்கூட,  மக்களுக்காக செய்ய வேண்டிய திட்டங்களை நிச்சயம் நாம் செய்வோம் என தெரிவித்தார்.

https://globaltamilnews.net/2025/217092/

“யானைகளும் மனிதர்களும் அருகருகே வாழும் தீவு” ஆவணப்படம்

2 months 3 weeks ago

Published By: DIGITAL DESK 3

20 JUN, 2025 | 03:31 PM

image

சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தினால் அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க, 2013 ஆம் ஆண்டு தி ரோயல் பவுண்டேஷனுடன் இணைந்து பிரித்தானிய இளவரசர் வில்லியம் “வனவிலங்குகளுக்காக ஒன்றுபடுவோம்” (United for Wildlife) என்ற அமைப்பை உருவாக்கினார்.

இந்த அமைப்புடன் இணைந்து இளவரசர் வில்லியம் நடத்தும் Guardians Of The Wild நிகழ்ச்சியில் இலங்கை வனவிலங்கு தொடர்பான ஆவணத் தொடர் வெளியிட்டப்பட்டுள்ளது.

“யானைகளும் மனிதர்களும் அருகருகே வாழும் தீவு” என்ற ஆவணப்படம் பிபிசி எர்த் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Gt3jzKoX0AEyn4_.jpg

வனப்பகுதி, தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்களில் பாதுகாப்பில் ஈடுபடும் குழுவைச் சேர்ந்த சிந்தக பத்திரணவை பிரித்தானிய துணை உயர்ஸ்தானிகர் லிசா வான்ஸ்டால் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரி குழு வரவேற்றது.

இதன்போது வனவிலங்கு சுகாதார மற்றும் வனவிலங்கு பாதுகாப்புது்துறையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ரஞ்சித் மாரசிங்க மற்றும் பணிப்பாளர் நாயகம் டாக்டர் தாரக்க பிரசாத் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

Gt3jzLUW8AAYJXp.jpg

இலங்கையின் காட்டு பகுதிகளில் யானைகள் தங்களைச் சுற்றியுள்ள உலகம் விரைவாக மாறுவதால், அவை புதிய சவால்களை எதிர்கொள்கின்றன, அவை மனிதர்களுடன் மேலும் நெருக்கமான தொடர்பு எல்லைக்குள் வருகின்றன.

Gt3jzKxWQAAvr8-.jpg

இருப்பினும், சிந்தக தலைமையில் அர்ப்பணிப்புடன் வனப்பகுதி, தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்களில் பாதுகாப்பில் ஈடுபடும் குழு, இந்த மென்மையான இராட்சத உயிரினத்தை பாதுகாக்க போராடி வருகின்றது. மேலும் மக்களும் யானைகளும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை அவர்கள் திட்டமிடுகின்றார்கள். 

510341018_1138294205002393_1712425770343

510271839_1138294195002394_6551030851486

510913108_1138294185002395_5806423614571

509375962_1138294191669061_7948117819326

https://www.virakesari.lk/article/217999

யாழ். மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் நியமனம்

2 months 3 weeks ago

Published By: DIGITAL DESK 3

20 JUN, 2025 | 04:20 PM

image

யாழ்ப்பாண மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதம் இன்றைய தினம் (20.06.2025) அமைச்சரவை செயலாளர் W. M. D. J. பெர்னாண்டோ அவர்களினால் அமைச்சரவை அலுவலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.

மருதலிங்கம் பிரதீபன்  2024 மார்ச் 09 ம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/218011

நல்லூரில் திண்மக் கழிவுகளை தரம் பிரிக்கும் புதிய நிலையம் விரைவில் அமைக்கப்படும்; தவிசாளர் மயூரன் அறிவிப்பு

2 months 3 weeks ago

20 JUN, 2025 | 09:57 AM

image

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் நிலவிவரும் திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக விரைவில் பிறிதொரு இடத்தில் திண்மக் கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையம் அமைக்கப்படும் என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் தெரிவித்தார்.

நல்லூர் பிரதேச சபை அலுவலகத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மிக நீண்ட காலமாக செய்யப்பட்டுவந்த திண்மக் கழிவகற்றல் பொறிமுறைக்கு பொருத்தமான இடம் இல்லாத காரணத்தால் தற்போது சிக்கலான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது.

தற்சமயம் அதற்கான தீர்வாக மாற்றிடமொன்றுக்கு சுற்றுச்சூழல் அதிகார சபையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளர் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளரின் முயற்சியால் இதற்கான அனுமதி தற்போது கிடைக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதும் அதற்கான அமைவிடத்தில் தற்போது வேலைகள் உள்ளதன் காரணமாக அது இன்னும் முடிவடையவில்லை.

திண்மக்கழிவகற்றல் தரம் பிரிக்கும் பகுதி தற்சமயம் இல்லாத காரணத்தால் மிகப்பெரிய சிரமத்துக்குள்ளாகியுள்ளோம்.

இந்த விடயத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தேவை. திண்மக் கழிவுகளை தரம் பிரித்து தரும் பட்சத்தில் அதனை அகற்றுவதற்கான வசதிகள் இலகுவாக இருக்கும்.

உங்கள் ஒவ்வொருவரின் கையிலுமே எமது பிரதேசத்தின் தூய்மையும் இருக்கிறது. பிரதேச சபைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

ஒரிரு வாரங்களாக பெரிய சவாலை எதிர்நோக்கியுள்ளோம். சில வாரங்களில் முழுமையான வினைத்திறனாக திண்மக் கழிவகற்றலை கொண்டு செல்வோம் என்பதை உறுதியுடன் கூறுகிறோம்.

காரைக்கால் பகுதி தற்போது திண்மக் கழிவகற்றலை தரம் பிரிக்கும் வேலையை செய்ய முடியாத பிரதேசமாக மாறியுள்ளது. அப்பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றபடியால் தொடர்ச்சியாக அதனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கான மாற்றிடமாக நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட காரைமுனங்கு இந்து மயானத்துக்கு அருகில் திண்மக் கழிவகற்றல் இடமொன்றை அமைத்து எங்களுக்கு வர வேண்டிய நிதிப் பங்களிப்புடன் முழுமையான வேலை திட்டங்கள் நடக்கிறது. அந்த இடத்தில் அதனை திறம்பட செய்வோம் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/217964

வாகன இறக்குமதி மூலம் ரூ.165 பில்லியன் வருவாய்!

2 months 3 weeks ago

New-Project-283.jpg?resize=750%2C375&ssl

வாகன இறக்குமதி மூலம் ரூ.165 பில்லியன் வருவாய்!

அரசாங்கம் வாகன இறக்குமதி மீதான தடையை நீக்கியதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு இதுவரை வாகன இறக்குமதிகள் மூலம் மாத்திரம் சுமார் ரூ.165 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேநேரம், 2025 ஆம் ஆண்டிற்கான வருவாய் இலக்கை திணைக்களம் தாண்டிச் செல்லும் பாதையில் இருப்பதாகக் சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் ஜெனரல் சீவலி அருகோட கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

2025 ஆம் ஆண்டிற்கான இலங்கை சுங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட வருவாய் இலக்கு ரூ. 2,115 பில்லியன் ஆகும்.

2024 ஆம் ஆண்டில், எங்கள் இலக்கு ரூ. 1,533 பில்லியனாக இருந்தது.

அதை நாங்கள் ரூ. 1,535 பில்லியனை ஈட்டுவதன் மூலம் தாண்டிவிட்டோம்.

இந்த ஆண்டு ஜூன் மாத நடுப்பகுதியில், நாங்கள் ஏற்கனவே ரூ. 900 பில்லியனை வருவாய் ஈட்டியுள்ளோம் என்றும் அவர் கூறினார்.

2025 பெப்ரவரி 1 முதல் வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி அளித்தது.

அதன் பின்னர், சுமார் 14,000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இது சுங்க வருவாயில் சுமார் ரூ. 165 பில்லியனை பங்களிக்கிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் வாகன இறக்குமதியிலிருந்து ரூ. 450 பில்லியனை வருவாய் ஈட்டும் என்று திணைக்களம் எதிர்பார்க்கிறது என்றும் அவர் கூறினார்.

ஈரான்-இஸ்ரேல் மோதலின் தாக்கம் இலங்கைக்குள் பொருட்களை இறக்குமதி செய்வதில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இதுவரை கப்பல் போக்குவரத்து தாமதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறினார்.

https://athavannews.com/2025/1436397

வாகன விபத்துகளால் 2,000 பேர் உயிரிழப்பு!

2 months 3 weeks ago

accident-3.jpg?resize=750%2C375&ssl=1

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வாகன விபத்துகளால் 2,000 பேர் உயிரிழப்பு!

2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் வாகன விபத்துகளால் சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்   கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது ” நாட்டில் இடம்பெறும் பெரும்பாலான  வீதி விபத்துகள்,  தகுதியற்ற வாகனங்கள் மற்றும் ஒழுங்கற்ற சாரதிகளினாலேயே  ஏற்படுவதாகத் தெரிவித்த அவர் ” 2025 ஜனவரி 1 முதல் ஜூன் 15 வரையான 6 மாதங்களில், உயிரிழப்புகளை ஏற்படுத்திய 1,133 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன எனவும், இதில் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், இது மிகவும் பேரழிவு தரும் சூழ்நிலையாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ” எதிர்வரும் ஜூலை மாதம்  1 ஆம் திகதி  முதல் வாகனங்களில் பொருத்தப்பட்ட தேவையற்ற உதிரி பாகங்கள் கட்டாயமாக அகற்றப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

https://athavannews.com/2025/1436370

85 சீனப் பிரஜைகள் நாடு கடத்தல்!

2 months 3 weeks ago

New-Project-282.jpg?resize=750%2C375&ssl

85 சீனப் பிரஜைகள் நாடு கடத்தல்!

சைபர் குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட மொத்தம் 85 சீனப் பிரஜைகள் இன்று (ஜூன் 20) காலை இலங்கையிலிருந்து சிறப்பு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இந்த விடயத்தை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த நபர்கள் நாட்டில் வசிக்கும் போது உள்ளூர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பின்னர் காவலில் வைக்கப்பட்டனர்.

உள்ளூர் நீதிமன்றங்களால் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர், அவர்கள் வெலிசரவில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டதுடன், நாடு கடத்தலுக்காகவும் காத்திருந்தனர்.

இந்த நிலையில், ஐந்து பேருந்துகளில் கடும் பாதுகாப்பின் கீழ் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட குழுவினர் இன்று காலை நாடு கடத்தப்பட்டனர்.

https://athavannews.com/2025/1436394

கிளிநொச்சி நகரினை அபிவிருத்தி செய்வதற்கு இராணுவத்தினரிடம் உள்ள காணிகளை, கட்டடங்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்; கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வடக்கு ஆளுநரிடம் கோரிக்கை

2 months 3 weeks ago

கிளிநொச்சி நகரினை அபிவிருத்தி செய்வதற்கு இராணுவத்தினரிடம் உள்ள காணிகளை, கட்டடங்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்; கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வடக்கு ஆளுநரிடம் கோரிக்கை

20 JUN, 2025 | 09:56 AM

image

(எம்.நியூட்டன்)

கிளிநொச்சி நகரினை அபிவிருத்தி செய்வதற்கு இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ள  காணிகள் கட்டடங்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் என   வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேளமாலிகிதன் கோரிக்கை விடுத்துள்ளார். 

கரைச்சி பிரதேச சபையின் தவிசாளராக பதயை பொறுபேற்றுக்கொண்ட தவிசாளர் வேளமாலிகிதன் தலைமையிலான  உப தவிசாளர் உறுப்பினர்கள் வியாழக்கிழமை (19) வடக்குமாகாண ஆளுநரை  யாழ்ப்பாண அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு தொடர்பில் தவிசாளர் தெரிவிக்கையில்,   கரைச்சி பிரதேச சபையானது கிளிநொச்சி நகரத்தை கொண்ட பிரதேசமாக இருப்பதால் அதனை உள்ளடக்கிய வகையில் பல்வேறு அபிவிருத்திகளை பூர்த்தி செய்ய  வேண்டியுள்ளது. 

குறிப்பாக கிளிநெச்சி சுற்றுவட்ட பாதை புனரமைக்கப்படவேண்டும். குறித்த காணி பகுதி இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ளது இதனை விடுவித்து  பாடசாலை  மாணவர்களுக்கான பாதையை சீர்செய்ய வேண்டும்.

கிளிநொச்சி பொது நூலக கட்டுமானங்கள் முடிவுறுத்தப்படவேண்டும். இதற்கான மேலதிக நிதி தேடல் மற்றுப் இராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள கட்டடங்களை விடுவித்தல்  தொடர்பிலும்   ஆளுநருடன் கலந்துரையாடியதுடன் எமது பிரதேச சபையில் ஆளனிகள் நிரப்பப்பட வேண்டியுள்ளது. 

அனுமதிக்கப்பட்ட ஆளனிக்கு குறைவானவர்களே கடமையில் உள்ளார்கள் குறிப்பாக 138 பேர் அனுமதிக்கப்பட்ட ஆளனியாக இருந்தும் தற்போது 78 பேரே கடமையில் இருக்கின்றார்கள்.    

இவை  தொடர்பிலும் மேலும் கடந்த காலத்தில் 15 வீதிகள் அமைப்பதற்கு அனுமதி கிடைத்து வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு கிறவல்கள் போட்டு நிறைவுசெய்த நிலையில் அவை முழுமைப்படுத்தபடாத நிலையில் அவை நிறுத்தப்பட்டுள்ளது.    தற்போது  வீதி புனரமைப்பிற்கேன புதிதாக  15 வீதிகளுக்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.  இவை தொடர்பில் ஏற்கனவே செப்பனிடப்பட்ட வேலைகளை செய்து முடிப்பதற்கான அனுமதி மற்றும் அதன் சாதக பாதக நிலமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம்.   

இதனை விரிவாக கேட்டறிந்த வடக்கு மாகாண ஆளுநர் உரிய திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு சாதகமான விடயங்களை விரைவுபடுத்துவோம் என்றார். 

https://www.virakesari.lk/article/217961

உகந்தையில் இருந்து கதிர்காம பாதயாத்திரை: காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

2 months 3 weeks ago

உகந்தையில் இருந்து கதிர்காம பாதயாத்திரை: காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

Published By: DIGITAL DESK 2

20 JUN, 2025 | 10:33 AM

image

ஜூலை 26ஆம் திகதி நடைபெறவுள்ள கதிர்காம முருகன் ஆலயத்தின் கொடியேற்ற விழாவை முன்னிட்டு, பக்தர்கள் இன்று வெள்ளிக்கிழமை (20) காலை காட்டுப்பாதை வழியாக பாதயாத்திரை மேற்கொண்டு பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

பக்தர்களுக்காக அமைந்துள்ள லகுகலை – உகந்தை வன பாதையின் கதவு, இன்றையதினம்  காலை 6.00 மணியளவில் உகந்தை முருகன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டிற்குப் பிறகு திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்திக்க அபேவிக்ரம உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

“ஆரோஹரா” கோஷங்களுடன் பக்தர்கள் தங்களது காட்டுப்பாதை பயணத்தை இன்று தொடங்கினர். கதிர்காம திருவிழா ஜூலை 26 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, ஜூலை 11ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.

இதேவேளை, இன்று திறக்கப்பட்ட கதிர்காமம் காட்டுப்பாதை எதிர்வரும் 2025 ஜூலை 4ஆம் திகதி முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

WhatsApp_Image_2025-06-20_at_06.39.55__1WhatsApp_Image_2025-06-20_at_06.39.55__2WhatsApp_Image_2025-06-20_at_06.39.54.jpWhatsApp_Image_2025-06-20_at_09.09.25.jp

https://www.virakesari.lk/article/217969

தமிழ் அரசியல்வாதிகள் உட்பட 28 பேர் மீது சொத்துக்கள் தொடர்பில் விசாரணை

2 months 3 weeks ago

தமிழ் அரசியல்வாதிகள் உட்பட 28 பேர் மீது விசாரணை

General20 June 2025

தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கடந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் உட்பட 28 அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதில் முக்கிய இரண்டு தமிழ் அரசியல்வாதிகளும் உள்ளடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

காவல்துறையின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால், இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக சம்பாதித்ததாக நம்பப்படும் பணத்தைப் பயன்படுத்தி பல அரசியல்வாதிகள் சொத்துக்களை வாங்கியுள்ளனர் என்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இதற்கிடையில், பாதுகாப்புத்துறையின் முன்னாள் தலைமையதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வாவின் சொத்துக்கள் தொடர்பாகவும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

https://hirunews.lk/tm/407729/investigation-against-28-people-including-tamil-politicians

2029 ஆம் ஆண்டில் புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றமா?

2 months 3 weeks ago

2029 ஆம் ஆண்டில் புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றமா?

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒரேயடியாக நிறுத்தப்படாது என்று கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2029 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையை மாற்றாமல் நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று அவர் கூறினார். 

2029 ஆம் ஆண்டுக்குப் பிறகு புலமைப்பரிசில் நடத்துவது குறித்து 2028 ஆம் ஆண்டில் பரிசீலிக்க ஒரு குழு நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார். 

இன்றைய (20) பாராளுமன்ற அமர்வில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

பரீட்சை அழுத்தத்தைக் குறைப்பதற்கான திட்டத்தை பரீட்சை திணைக்களம் தற்போது தயாரித்து வருகிறது. 

பாடசாலைகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை படிப்படியாக நீக்கவும், புலமைப்பரிசில் காரணமாக மாணவர்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன குறிப்பிட்டார்.

https://adaderanatamil.lk/news/cmc4cepxm004sqp4kze43qw61

முல்லைத்தீவில் திடீரென வெட்டப்பட்ட வீதி; அவதியுறும் விவசாயிகள்; அதிகாரிகளின் அசமந்தப் போக்கு

2 months 3 weeks ago

19 JUN, 2025 | 09:36 PM

image

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப் பற்று பிரதேச சபைக்கு சொந்தமான பூதன்வயலில் இருந்து மதவளசிங்கன் குளம் செல்லும் வீதியில் பிரதான பாலம் ஒன்று மிக நீண்ட காலமாக சீர் செய்யப்பட வேண்டிய தேவையில் காணப்பட்டுள்ளது.

குறித்த பாலத்தினை அமைத்து தருமாறு மக்கள் தொடர்ச்சியாக விடுத்த கோரிக்கைக்கு அமைவாக தற்போது குறித்த பாலம் அமைக்கும் பணியானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது

குறித்த பகுதி அமைப்பினருடன் கலந்துரையாடாமல் திடீரென பால வேலைக்காக பாதையை முற்றுமுழுதாக வெட்டி பாலம் அமைக்கின்ற பணிகள் செய்யப்பட்டு இருக்கின்ற நிலையில் அருகிலே மாற்றுப் பாதை ஒன்றை அமைக்காமல் மக்களுடைய போக்குவரத்து முற்றாக தடைப்படக்கூடிய வகையில் மோட்டார் சைக்கிள் மட்டும் செல்லக்கூடிய ஒரு சிறிய பாதையை மட்டும் போட்டுவிட்டு குறித்த பாலம் அமைக்கும் பணி இடம்பெறுகின்றது.

download__4_.jpg

இந்நிலையில் குறித்த பகுதியூடாக விவசாய நடவடிக்கைகளுக்கு சென்ற மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் குறிப்பாக கச்சான் காணிகளுக்கு செல்கின்ற மக்கள் வயல் நிலங்களுக்கு செல்கின்ற மக்கள் தங்களுடைய வயல் நிலங்கள் மற்றும் கச்சான் காணிகளுக்கான மூலப் பொருட்கள் அல்லது முடிவு பொருட்களை கொண்டு செல்ல அல்லது கொண்டுவர முடியாத இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்

குறிப்பாக சிறுபோக அறுவடை ஆரம்பித்து இருக்கின்ற நிலைமையில் நேற்று முதல் அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும் குறித்த அறுவடை நெல்லினை வீடுகளுக்கு கொண்டுவர முடியாத இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்

அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு கேட்ட போது அதற்குரிய மாற்றுப் பாதை அமைத்து தர முடியாது என தெரிவித்திருக்கிறதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர் எனவே தமக்கு உடனடியாக அந்த பாலம் அமைக்கின்ற இடத்திலே அதற்கு அருகாக மாற்றுப்பாதை ஒன்றை அமைத்து தங்களுடைய நெல்லுகளை வீடுகளுக்கு கொண்டு செல்வதற்கும் தங்களுடைய காணிகளுக்கு செல்வதற்கும் ஏற்ற வகையில் உளவு இயந்திரம் செல்லக்கூடிய வகையில் பாதை ஒன்றை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

download__3_.jpg

மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்களுடைய விவசாய உள்ளீடுகளை உரிய வகையிலே தனது வீடுகளுக்கு கொண்டுவர முடியாமல் அந்தரிப்பதாகவும் எனவே இதற்குரிய அதிகாரிகள் உடனடியாக இதற்குரிய பாதையை அமைத்து தருமாறும் தங்களுக்கு அந்த இடத்தில் பாலம் அமைக்கப்பட வேண்டியது மிக முக்கியமானது எனவும் ஆனால் அந்த பாலம் அமைக்கின்ற பணியினால் தங்களுடைய விவசாய உற்பத்திகள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் பாலத்தை அமைக்குமாறும் ஆனால் அதற்கு அருகிலே மக்கள் சென்றுவரக்கூடிய பாதையை அமைத்து தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

குறிப்பாக பாதைகளில் கட்டுமான பணிகள் செய்கின்ற போது அதற்கு மாற்று பாதையை ஏற்பாடு செய்ய வேண்டியது அந்த பாதை கட்டுமானம் செய்கின்றவர்களுடைய பொறுப்பாக காணப்படுகின்ற நிலைமையில் அவ்வாறு செய்யப்படாமல் இந்த வேலை ஏன் செய்யப்படுகிறது என்பது தொடர்பில் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

download__2_.jpg

download__5_.jpg

https://www.virakesari.lk/article/217950

கெஹெலியவின் மேலும் இரண்டு மகள்கள், மருமகன் கைது

2 months 3 weeks ago

Editorial   / 2025 ஜூன் 19 , பி.ப. 02:58 - 0     - 35

facebook sharing buttonimage_e6c8a686db.jpg

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மேலும் இரண்டு மகள்களான சமித்ரி ஜெயனிகா ரம்புக்வெல்ல மற்றும் அமலி நயனிகா ரம்புக்வெல்ல ஆகியோரும் அமலியின் கணவரும் பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

வின் கூற்றுப்படி, ரூ. 134 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள அறிவிக்கப்படாத சொத்துக்கள் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது.இதில் ரூ. 40 மில்லியன் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், ரூ. 20.5 மில்லியன் மதிப்புள்ள பென்ஸ் கார் மற்றும் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கிட்டத்தட்ட 40 நிலையான வைப்பு கணக்குகள் மற்றும் ஆயுள் காப்பீட்டு முதலீட்டுத் திட்டங்கள் ஆகியவை அடங்கும்.

மூன்று சந்தேக நபர்களும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு முன்னாள் அமைச்சர் ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மற்றொரு மகளையும் செவ்வாய்க்கிழமை (17) கைது செய்தது. அவர்கள் புதன்கிழமை (18) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறியதால், விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். 

Tamilmirror Online || கெஹெலியவின் மேலும் இரண்டு மகள்கள், மருமகன் கைது

Checked
Tue, 09/16/2025 - 01:39
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr