ஊர்ப்புதினம்

இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிவித்தல்!

3 months ago
17 FEB, 2024 | 06:28 PM
image

இலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி மட்டுப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை எதிர்வு கூறியுள்ளது. 

இதனடிப்படையில் அனல் மின் உற்பத்தி 63 சத வீதம் வரை அதிகரிக்கும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார். 

மின்தேவை அதிகரித்துள்ள நிலையில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தை நிர்வகிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

இவ்வாறானதொரு நிலையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://www.virakesari.lk/article/176641

வீதியில் உலரவைக்கப்படும் 'நெல்லை' உணவாக உட்கொண்டால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு; முல்லை பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர்

3 months ago
17 FEB, 2024 | 09:56 AM
image

வீதியில் உலரவிடப்படும் நெல்லுடன் 'கற்மியம்' எனும் மூலகம் ஒன்று கலப்பதாகவும், எனவே அந்த நெல் அரிசியை உணவாக உட்கொள்ளும்போது புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பிருப்பதாகவும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே, பொதுமக்கள் வீதியில் நெல்லை உலரவிடுவதைத் தவிர்க்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம்  வெள்ளிக்கிழமை (16) இடம்பெற்ற நிலையில் அக்கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தற்போது பெரும்போக நெல் அறுவடை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் விவசாயிகள் பிரதான வீதிகளை நெல் உலரவிடும் தளங்களாகப் பயன்படுத்துகின்றனர்.

இதனால் பாரிய அளவில் வீதி விபத்துக்கள் இடம்பெறுகின்றன. பலர் வீதி விபத்துக்களில் சிக்கி பரிதாபமான முறையில் உயிரிழக்கின்றனர்.

இவ்வாறு வீதியில் நெல் உலரவிடுவதனால் வீதி விபத்தையும் தாண்டி பாரிய ஆபத்தொன்று காணப்படுகின்றது.

வாகன டயர்கள் வீதியில் உராய்வதனால் 'கற்ட்மியம்' எனும் மூலகம் வீதியில் படிந்துள்ளது. இந்நிலையில் இவ்வாறான வீதியிலேயே விவசாயிகள் நெல்லினை உலரவைக்கின்றனர்.

இவ்வாறு நெல்லினை உலரவிடும்போது குறித்த 'கற்மியம்' எனும் மூலகம் நெல்லோடு கலந்துவிடுகின்றது.

இவ்வாறு இந்த 'கற்மியம்' எனும் மூலகம் கலந்த நெல் அரிசியை தொடர்ந்து பத்துத் தொடக்கம் பதினைந்து வருடங்கள் உணவாக உட்கொள்ளும்போது புற்றுநோய் ஏற்பட வய்ப்பிருக்கின்றது.

எனவே, வீதியில் நெல் உலரவிடுவதை விவசாயிகள் தவிர்ப்பதே சிறந்தது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

20230318050020_IMG_3246.JPG

https://tamilwin.com/article/indian-ambassador-to-sri-lanka-visited-jaffna-1708079393

யாழ். பலாலி ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை

3 months ago

யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை துறைமுகங்கள் கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விமான நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், யாழ். பலாலி விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ். பலாலி ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை | Flight Service To India From Jaffna Palali Airport

இது தொடர்பில் இண்டிகோ விமான சேவை நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசு ஆரம்பித்துள்ளது.

அத்துடன், மத்தள விமான நிலையம் தொடர்பில் முதலீட்டு விருப்பங்கள் கோரப்பட்டன. அதன்படி, டெண்டர் சபை ஒரு முதலீட்டாளரை தெரிவு செய்துள்ளது.

தனியார் கூட்டுத் திட்டம்

குறித்த முதலீட்டாளருடனான பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. அடுத்த வாரம் உடன்பாடு எட்டப்படலாம்.

யாழ். பலாலி ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை | Flight Service To India From Jaffna Palali Airport

அதன் மூலம் அந்த விமான நிலையத்தையும் இலாபமீட்டும் வகையில் மாற்ற முடியும். 

அத்தோடு, இந்த ஒப்பந்தம் ரஷ்ய மற்றும் இந்திய தனியார் கூட்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

https://tamilwin.com/article/flight-service-to-india-from-jaffna-palali-airport-1708070599

செம்மலை தொடக்கம் கொக்கிளாய் வரை இல்மனைட் அகழ்வதற்கு அனுமதிக்க முடியாது ; சாள்ஸ் எம்.பி கடும் எதிர்ப்பு

3 months ago

Published By: DIGITAL DESK 3   17 FEB, 2024 | 09:53 AM

image

முல்லைத்தீவு மாவட்டத்தில் செம்மலை தொடக்கம், கொக்கிளாய் வரையான கடற்கரையோரத்தில் இல்மனைட் அழகழ்வதற்கு முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதி கோரப்பட்ட நிலையில், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கடுமையான எதிர்ப்பையடுத்து குறித்த அனுமதியை அபிவிருத்திக்குழு நிராகரிப்பதாகத் தீர்மானித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் வெள்ளிக்கிழமை (16)இடம்பெற்றபோதே குறித்த இல்மனைட் அகழ்விற்கான அனுமதி கோரப்பட்டது. இந்நிலையிலேயே குறித்த அனுமதி இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு செம்மலை தொடக்கம் கொக்கிளாய் வரையில் இல்மனைட் அகழ்ந்தால்  அருகே உள்ள வயல் நிலங்களும் பாதிக்கப்படுமெனவும், செம்மலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உவர்நீர்த் தடுப்பணையும் சேதப்படுத்தப்படுமெனவும், பாரிய இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் இதன்போது சாள்ஸ் நிர்மலநாதனால் சுட்டிக்காட்டப்பட்டது.

மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு அனுமதி வழங்காத விடயத்தை, மத்திய அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாதெனவும், செம்மலை தொடக்கம் கொக்கிளாய் வரை இல்மனைட் அகழ்வதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாதெனவும் சாள்ஸ் நிர்மலநாதன் இதன்போது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார்.

இதனையடுத்து முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு இந்த அனுமதிக் கோரிக்கையை நிராகரிப்பதாக முடிவெடுத்ததுடன், இல்மனைட் அகழ்வால் ஏற்படும் பாதிப்பு நிலையைச் சுட்டிக்காட்டி உரியவர்களுக்கு அறிக்கை அனுப்புவதெனவும் முடிவெடுக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/176590

அதிக டெங்கு நோயாளர்கள் உள்ள மாவட்டங்களாக யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தெரிவு

3 months ago

Published By: VISHNU    16 FEB, 2024 | 10:55 PM

image

கண்டி மாவட்டத்தில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் வீதம் தற்போது குறைவடைந்துள்ளதாக கண்டி மாவட்ட தொற்றுநோய் நிபுணர் வைத்தியர்  கிருஷான் மசாராச்சி தெரிவித்துள்ளார்.

நாட்டிலேயே அதிகூடிய டெங்கு நோயாளர்கள் கண்டி தேசிய பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த  வைத்தியர் தற்போது அது 5வது இடத்திற்கு குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கண்டி  மாவட்ட செயலக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (15) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த சில வருடங்களாக டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் வெற்றியடைந்தமையே டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவதற்கு காரணம் என தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள வாராந்த அறிக்கையின்படி, கண்டியிலிருந்து 10 பிரிவுகள் நாட்டின்  அதிக ஆபத்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு தற்போது அந்த எண்ணிக்கை 02 ஆக குறைந்துள்ளது எனவும்  அதன் பிரகாரம் கடந்த வருடம் 20% டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில் தற்போது அது 12% ஆக குறைந்துள்ளது. 

இந்த அறிக்கைகளின்படி நாட்டின் அதிக டெங்கு நோயாளர்கள் உள்ள மாவட்டங்களாக யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன எனவும் கூறினார்.

இதன்போது கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ, மத்திய மாகாண ஆளுநர் லலித் வூ கமகே, மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிங்க, கண்டி  மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/176581

புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா யாழ் விஜயம்

3 months ago

Published By: VISHNU   16 FEB, 2024 | 10:28 PM

image

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.

20240216_170042.jpg

நயினாதீவுக்கு சென்ற உயர்ஸ்தானிகர் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில், நயினாதீவு நாகவிகாரைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டதுடன் இந்திய திட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கலப்பு மின் திட்ட இடங்களையும் பார்வையிட்டு ஆராய்ந்தார்.

20240216_170045.jpg

தொடர்ந்து காங்கேசன் துறை துறைமுகம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்ற உயர்ஸ்தானிகர் அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்தார்.

20240216_170033.jpg

https://www.virakesari.lk/article/176580

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் ஆர்ப்பாட்டம்!

3 months ago

Published By: VISHNU   16 FEB, 2024 | 08:22 PM

image

கிழக்குப் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தால் பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

IMG_20240216_173023.jpg

குறித்த ஆர்ப்பாட்டம் கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக வெள்ளிக்கிழமை (16) பிற்பகல் 5.00 மணியளவில் நடைபெற்றுள்ளது.

IMG_20240216_172612.jpg

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் புதிய விடுதி வளாகத்தை உடனே தாருங்கள்...!, தனித்தனியாக மானியங்கள், ஆய்வகப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வழங்குங்கள், அனைத்து மாணவர்களுக்கும் WI-FI வசதிகளை செய்து கொடுங்கள்...!, தாமதமான மகாபொல மாணவர் உதவித் தவணைகள் உடனே வழங்க ஆவண செய்யுங்கள்...! போன்ற கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் கண்டன பேரணியிலும் ஈடுபட்டிருந்தனர்.

https://www.virakesari.lk/article/176575

யாழில் இனிமேல் நடைபெறும் இசை நிகழ்வுகளுக்கு தமது நெறிப்படுத்தல் இருக்கும் - டக்ளஸ் தேவானந்தா

3 months ago

Published By: VISHNU   16 FEB, 2024 | 06:04 PM

image
 

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இசை நிகழ்வில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு தமது நெறிப்படுத்தல்கள் இல்லாமையும் ஒரு காரணம் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

இசை நிகழ்வில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு எங்களுடைய இளைஞர்களைப் பலரும் குறை கூறுகின்றனர். நிகழ்வில் இளைஞர்கள் சிலர் தாக்குதலுக்கு இலக்காகியதாகவும் அறிந்து கொண்டேன். 

நிகழ்வு தொடர்பில் யாழ்.மாநகர சபை மற்றும் யாழ்ப்பாண பொலிஸார் கூடிய கவனம் செலுத்தி இருக்க வேண்டும். நானும் அதனை பார்த்து இருக்க வேண்டும். நானும் அது தொடர்பில் கரிசனை இல்லாமல் இருந்து விட்டேன். 

இனிவரும் காலங்களில் இப்படியான நிகழ்ச்சிகள் நடைபெறுமாக இருந்தால், மக்கள் பிரச்சனைகள் இன்றி சந்தோசமாக நிகழ்வுகளைக் கண்டு களிக்க கூடியவாறான ஏற்பாடுகளைச் செய்வோம் எனத் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/176569

முல்லைத்தீவு பரந்தன் வீதியில் விபத்து : எருமை மாடுகளுடன் மோதிய பேருந்து

3 months ago

Published By: VISHNU   16 FEB, 2024 | 08:25 PM

image
 

முல்லைத்தீவு - பரந்தன் ஏ -35 வீதியில் இன்று வெள்ளிக்கிழமை (16) காலை இடம் பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

பரந்தன் முல்லைத்தீவு ஏ 35 வீதியின் புளியம்பொக்கணை பகுதியிலிருந்து மிதிவெடி அகற்றும் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று வீதியில் நின்ற எருமை மாடுகளுடன் மோதிய போதே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

இதன்போது 02 எருமை மாடுகளும் உயிரிழந்துள்ள நிலையிலும் இரண்டு மாடுகள் காயமடைந்துள்ளன. 

இதே வேளை எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பேருந்துடன் மோதிய எருமை மாட்டுடன் மோதியதால் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/176574

 

மூடிய அறைக்குள் நடந்தது என்ன? அறிவு மட்டம் தொடர்பாக சுய பரிசோதனை செய்ய வேண்டும் - சாணக்கியன் சீற்றம்

3 months ago
மூடிய அறைக்குள் நடந்தது என்ன? அறிவு மட்டம் தொடர்பாக சுய பரிசோதனை செய்ய வேண்டும் - சாணக்கியன் சீற்றம்

 

11 வழிப்பாட்டுத் தலங்கள் புனித பூமியாக அறிவிப்பு!

3 months ago
news-01-11.jpg

தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அரச வர்த்தமானியின் ஊடாக தொல்லியல் சிறப்புமிக்க 11 வழிப்பாட்டுத் தலங்கள் புனித பூமியாக பெயரிடப்பட்டுள்ளன.

அந்தப் பகுதிகளை புனித பூமியாக பெயரிடுவதற்கான சன்னஸ் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் நேற்று(15) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

அதற்கமைய அனுராதபுரம் ஹொரவ்பொத்தான பிரதேச செயலக பிரிவின் அம்பகஸ்வெவ புராதன விகாரை, புத்தளம் தங்கொட்டுவ பிரதேச செயலக பிரிவின் பொதுவடன புராதன விகாரை, அம்பாறை பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முஹுது மகா விகாரை, கம்பஹா மாவட்டத்தின் தொம்பே பிரதேச செயலகத்திற்குச் சொந்தமான மெத்தேகம விகாரை, ஹம்பாந்தோட்டை உத்தகந்தர விகாரை, திருகோணமலை குச்சவௌி பிரதேச செயலகத்தின் ஸ்ரீ சத்தர்ம யுக்திக ஆசிரமம், குருணாகல் நாரம்மல பிரதேச செயலகத்தின் தம்பதெனிய விஜய சுந்தராராம விகாரை, குச்சவௌி பிரதேச செயலகத்தின் சாந்தி விகாரை, குருணாகல் குளியாபிட்டிய மேற்கு பிரதேச செயலகத்தின் ஸ்ரீ சுதர்மாராம புராதன விகாரை, கம்பஹா சித்த கபலே மல் சூனியம் தேவாலய, குச்சவௌி பிரதேச செயலகத்தின் யான் ஓயா விகாரை, சாகர புர சுமுதுகிரி வன ஆசிரமம் உள்ளிட்ட தலங்களே புனித பூமிகளாக பெயரிடப்பட்டிருக்கின்றன.

அதற்கமைய தற்போது வரையில் நாட்டின் 142 வழிபாட்டுத் தலங்கள் புனித பூமிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

https://thinakkural.lk/article/292099

ஐந்து மாதத்திற்குள் மக்கள் கோரிக்கையை நிறைவேற்றிய செந்தில் தொண்டமான்!

3 months ago
ஐந்து மாதத்திற்குள் மக்கள் கோரிக்கையை நிறைவேற்றிய செந்தில் தொண்டமான்!
kugenFebruary 16, 2024
 

1708065664346.jpg

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு ஐந்து மாதக் காலத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு ,வீடுகள் இன்றி இன்னல்களுக்கு முகம்கொடுத்து வந்த நிலையில், இவ்விடயம் தொடர்பாக அம்பாறை மாவட்ட அரச அதிபர்,திருக்கோயில் பிரதேச செயலாளர், அரச உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொதுமக்களால் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

ஆளுநர் செந்தில் தொண்டமான் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு, மக்களின் குறைகளை கேட்டறிந்து மக்களின் கோரிக்கையை ஏற்று ஐந்து மாதக் காலத்திற்குள் அவர்களுக்கான வீடுகளை நிர்மாணித்து அம்மக்களிடம் கையளித்துள்ளார்.

திருக்கோவில் மக்கள் தங்களது கோரிக்கையை குறுகிய காலத்தில் நிறைவேற்றியமைக்காக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் திருக்கோயில் பிரதேச செயலாளருக்கும் தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

 

https://www.battinews.com/2024/02/blog-post_767.html

தலை மன்னாரில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை

3 months ago

Published By: DIGITAL DESK 3   16 FEB, 2024 | 10:45 AM

image

மன்னார் தலைமன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி ஒருவர் நேற்று வியாழக்கிழமை (15) இரவு பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மன்னார் தலைமன்னார் கிராமம் பகுதியில் தோட்டம் ஒன்றை பராமறிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட நபர் ஒருவராலேயே குறித்த சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த நபர் மற்றும் அவரது மனைவி தலைமன்னார் பகுதியில் வசித்து வந்த நிலையில் கணவன் போதைக்கு அடிமையான நிலையில் மனைவி பிரிந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் அருகில் இருக்கும் வயோதிப பெண் ஒருவர் குறித்த சந்தேக நபருக்கு உணவு வழங்கி வந்த நிலையில் அவர்களுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் சந்தேக நபர் நேற்றைய தினம் மாலை உணவு வழங்கும் வயோதிப பெண்ணின் பேத்தியான குறித்த சிறுமியை கடைக்கு அழைத்து சென்ற நிலையில் சம்பம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்ப்டுகின்றது.

இந்நிலையில் அருகில் இருந்த சிசிரிவி கமராக்களின் உதவியுடனும் ஊர் மக்களின் உதவியுடனும் மேற்கோண்ட தேடுதலின் போது சிறுமியின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை (16) அதிகாலை  மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/176510

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது சரியான விடயம் - நான் ஏற்கனவே அதனை அனுபவித்துவிட்டேன் – மகிந்த

3 months ago

Published By: RAJEEBAN   16 FEB, 2024 | 06:33 AM

image

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது சரியான நடவடிக்கை என தெரிவித்துள்ள முன்னாள்  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் ஏற்கனவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை அனுபவித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசியல் நிலைமை எவ்வாறு உள்ளது என்ற செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு நாட்டின் அரசியல் நிலைசிறப்பானதாக உள்ளது நிறைவேற்று அதிகார முறையை நீக்குவது நல்லது  என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முழுநாடும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுப்பதால் அதனை நீக்கவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை பிற்போட முயல்வது எதிர்கட்சியினருக்கான பொறியாக அமையலாம் எங்களிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறித்து நன்கு தெரியும் என மகிந்தராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எந்த தேர்தல் என்றாலும் எங்கள் வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள் சரியான தருணத்தில் அவர்கள் மேடைக்கு வருவார்கள் அதுவரை பொறுத்திருங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜேவிபி தலைவரின் இந்திய விஜயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச  இந்தியா போன்ற நாடுகளுடன் உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜேவிபி இறுதியாக உணர தலைப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/176500

புலனாய்வு பிரிவிற்கு காணி வழங்குமாறு பரிந்துரை :; வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் எதிர்ப்பு

3 months ago

Published By: VISHNU   16 FEB, 2024 | 06:30 AM

image

வவுனியா பூங்காவீதியில் அமைந்துள்ள காணியில்  தேசிய புலனாய்வு அலுவலகத்திற்கு இடம் வழங்குவதற்கு வடமாகாண ஆளுநர் பரிந்துரைத்துள்ள நிலையில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

வவுனியா மாவட்ட ஒருங்கினைப்பு குழு கூட்டம் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கு.திலீபன்  தலைமையில்  இடம்பெற்றது.   

இதன்போது காணியற்ற அரச திணைக்களங்களான அரச ஒசுசல, புவிச்சரிதவியல் திணைக்களம்,தெங்கு அபிவிருத்திசபை, பனை அபிவிருத்திசபை, சமூக நீர்வழங்கல் திணைக்களம், தேசிய புலனாய்வு அலுவலகம், மற்றும் பொது அமைப்புக்களான முச்சகரவண்டி உரிமையாளர் சங்கம், சிகை அலங்கரிப்பாளர் சங்கம், பேருந்து உரிமையாளர் சங்கம், பாரவூர்திசங்கம், ஓய்வூதியர் சங்கம் ஆகியன தமக்கு நகரப்பகுதியில் காணி ஒதுக்கித்தருமாறு வவுனியாபிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அதற்கமைய குறித்த அமைப்புக்களுக்கு வவுனியா பூங்காவீதியில் அமைந்துள்ள பகுதி மற்றும் திருநாவற்குளம் பாரவூர்தி தரிப்பிடம் ஆகியவற்றை பிரித்து வழங்குவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிடம் இன்று அனுமதி கோரப்பட்டிருந்தது. 

இதன்போது பூங்காவீதியில் அமைந்துள்ள காணி தேசிய புலனாய்வு அலுவலுகத்திற்கு வழங்குவதற்காக ஆளுநரால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து காணியினை அவர்களுக்கு வழங்குவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுதலைவர் தீலிபன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.

புலனாய்வு பிரிவு அனைத்து இடங்களிலும் இயங்கமுடியும், அது ரகசியமாக இருக்கவேண்டிய அமைப்பு. எனவே நகரப்பகுதியில் அதற்கு காணி வழங்குவது பொருத்தமானதாக இருக்காது என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இதன்போது தெரிவித்திருந்தார்.

https://www.virakesari.lk/article/176495

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

3 months ago
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
Oruvan

தமிழரசுக் கட்சியின் யாப்பின் பிரகாரம் பொதுச்சபைக் கூட்டத்தில் 161 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் எத்தனை பேர் கலந்து கொள்ள வேண்டும் என யாப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் திருகோணமலையில் கடந்த மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற பொதுச் சபைக் கூட்டத்தில் 300 இற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

பொதுச் செயலாளருக்கான தேர்தலில் 320 பேர் வாக்களித்திருக்கிறார்கள்.

ஆகவே மேலதிகமாக வாக்களித்த உறுப்பினர்கள் எங்கிருந்து எப்படி வந்தார்கள்.

இந்த உறுப்பினர்களின் அதிகரிப்பு தொடர்பாக யாப்பில் குறிப்பிடப்படாததன் நோக்கம் தொடர்பாக கேள்விகள், சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இதனை அடிப்படையாகக் கொண்டே பொதுச்சபைக் கூட்ட முடிவுகள் யாப்பிற்கு முரணானவை என்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் பொதுச்சபையைக் கூடுவதற்கான விதி முறைகள் தொடர்பாக விபரிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை பரிசீலைனைக்கு உட்படுத்திய நீதிபதி, கட்சியின் தேசிய மாநாட்டிற்கு தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

பொதுச்சபைக் கூட்டத் தீர்மானங்களை மையமாகக் கொண்டே தேசிய மாநாடு நடத்தப்படுவது வழமை.

ஆனால் யாப்பின் பிரகாரம் பொதுச்சபைக்கூட்ட முடிவுகள் யாப்புக்கு முரணாக இருப்பதால், தேசிய மாநாடும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

அதேவேளை யாப்பின் பிரகாரம் சிறிதரன் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் சரியானதா அல்லது முரணானதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

ஏனெனில் குறித்த மனுவில் கட்சி தலைமைப் பதவிக்குப் போட்டியிட்ட எஸ்.சிறிதரன், ஜனாதிபதி சட்டத்தரணி, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் எதிராளியாக காண்பிக்கப்பட்டிருக்கின்றனர்.

அதாவது பொதுச் சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானமும், அதற்கு முன்னதாக இடம்பெற்ற ரகசிய வாக்கெடுப்பும் யாப்பு விதிகளுக்கு முரணானவை என்ற பொருள் விளக்கம் மனுவில் இருப்பதாக திருமலை நீதிமன்ற வட்டாரங்கள் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தன.

தலைவர் பதவிக்கான ரகசிய வாக்கெடுப்பின் பிரகாரம் சிறிதரனுக்கு கிடைத்த மொத்த வாக்குகள் 184, சுமந்திரனுக்கு 137 வாக்குகள்.

ஆகவே இங்கும் வாக்களித்த உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. அதாவது மத்தியகுழு உறுப்பினர்கள் 43 பேரும், மேலதிகமாக 9 பேரும், தொகுதிவாரியாக 280 பேர் உட்பட 332 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிந்தனர்.

ஆனால் 321 பேர் வாக்களித்துள்ளனர்.

இந்தநிலையில் பொதுச் செயலாளர் தெரிவில் பொதுச்சபைக் கூட்ட எண்ணிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரகாரம் சிறிதரனின் தலைமைப்பதவி தெரிவிலும் சட்ட விளக்கங்கள் எழுகின்றன.

ஆகவே நீதிமன்ற விசாரணையில் சிறிதரனின் தலைவர் பதவிக்கான வாக்கெடுப்பும் யாப்பிற்கு முரணானதா அல்லது இல்லையா என்ற வாதங்கள் முன்வைக்கப்படலாம்.

ஆனாலும் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்புத் தொடர்பாகவும் அது தொடர்பான தேர்தல்கள் ஆணைக்குழுவின் விளக்கமுமே இறுதி முடிவாக இருக்கலாம்.

எவ்வாறாயின் இந்த மனு பின்னரான நிகழ்வுகள் ஏனைய அரசியல் கட்சிகளுக்கு படிப்பினையைக் கொடுத்துள்ளன.

அதேவேளை யாப்பின் உப விதிகளின் பிரகாரம் உறுப்பினர்களின் காலத்திற்கு காலம் மாறலாம் எனவும் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

1948 இல் பொதுச் சபை உறுப்பினர் எண்ணிக்கை 160 என்றால் 74 வருடங்களின் பின்னர் அது 350 ஆக உயர்வடை வாய்ப்பு உள்ளது என்ற வாதத்தை எமது செய்திச் சேவைக்கு சுட்டிக்காட்டினார்.
 

https://oruvan.com/sri-lanka/2024/02/15/trinco-court-order-to-iatk

இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்யும் இலங்கையின் முயற்சி தோல்வியடைந்தது

3 months ago

பெரிய வெங்காய ஏற்றுமதி மீதான தடையில் இருந்து இந்தியாவிடமிருந்து விலக்கு பெறுவதற்கான இலங்கையின் முயற்சி பலனளிக்கவில்லை, இதன் விளைவாக இறக்குமதியாளர்கள் அதிக விலையில் வாங்குவதற்கு ஏனைய சந்தைகளை நாடுகிறார்கள்.

வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதால், இலங்கை போன்ற நாடுகளில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. உலகின் மிகப்பெரிய வெங்காய ஏற்றுமதியாளரான இந்தியா, உற்பத்தி வீழ்ச்சியைத் தொடர்ந்து மூன்று மாதங்களில் உள்நாட்டு விலை இருமடங்காக உயர்ந்ததை அடுத்து, டிசம்பர் 8, 2023 அன்று ஏற்றுமதியைத் தடை செய்தது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் கொள்கை முடிவை இந்தியா எடுத்துள்ளது.

எவ்வாறாயினும், தடை செய்யப்பட்ட போதிலும் விசேட ஏற்பாடுகளின் கீழ் இந்தியாவில் இருந்து 100,000 தொன் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு இலங்கை விலக்கு கோரியது.

இந்த முயற்சி பலனளிக்கவில்லை, எனவே உள்ளூர் சந்தையில் விலைகள் அதிகமாகவே காணப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தற்போது ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை .350-375 ரூபாவாக உள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பெரிய வெங்காயம் தற்போது பாகிஸ்தானில் இருந்து ஒரு தொன் 1200 அமெரிக்க டொலர்கள் விலையில் இறக்குமதி செய்யப்படுகிறது. சாதாரண சூழ்நிலையில், இலங்கை ஒரு மாதத்திற்கு சுமார் 20,000 தொன்களை இறக்குமதி செய்கிறது.

“விலை மிக அதிகமாக இருப்பதால், இப்போது 12,000-15,000 தொன்னாகக் குறைந்துள்ளது. பாகிஸ்தான் தங்கள் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை விதித்துள்ளது,” என்றார்.

இதற்கிடையில், இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஒரு ஆதாரம், தடை இன்னும் நீக்கப்படவில்லை, எனவே இந்தியா இலங்கைக்கு ‘பெங்களூர் ரோஸ் ஒனியன்’ எனப்படும் மற்றொரு வகை வெங்காயத்தை வழங்கியுள்ளது.

https://thinakkural.lk/article/291987

அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் முதலாம் கட்டம் திறப்பு!

3 months ago

Published By: DIGITAL DESK 3   15 FEB, 2024 | 02:50 PM

image

அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் முதலாம் கட்டம்  திறந்துவைக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில் ஜெய்கா (JICA) நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்ட அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் முதலாம் கட்டம் ,அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , JICA தலைவர்  டனகா அகிஹிக்கோ ஆகியோரினால் சற்றுமுன்னர் திறந்துவைக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/176443

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கிழக்கு மாகாண ஆளுநரால் சுயத்தொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

3 months ago

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் சமூக சேவைகள் அமைச்சு நடத்திய மாற்றுத்திறனாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சுய தொழில் உபகரணங்களும், பொழுதுபோக்குக்காக அவர்களின் வீடுகளுக்கு LED தொலைக்காட்சிகளும் செந்தில் தொண்டமானால் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் சாதனைகள் நிகழ்த்திய தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

1707968208772-300x200.jpg 1707968208780-300x200.jpg 1707968208789-300x200.jpg 1707968208798-300x200.jpg 1707968208805-300x200.jpg 1707968208814-300x200.jpg 1707968208822-300x200.jpg 1707968208845-300x200.jpg 1707968208859-300x200.jpg 1707968208866-300x200.jpg 1707968208881-300x200.jpg 1707968208898-300x200.jpg 1707968208906-300x200.jpg 1707968208919-300x200.jpg

1707968208929-300x200.jpg 1707968208938-300x200.jpg

https://thinakkural.lk/article/291896

கசிப்பு அருந்திய மாணவன் பாடசாலையில் சுகயீனமுற்றதால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்!

3 months ago

Published By: DIGITAL DESK 3    15 FEB, 2024 | 04:19 PM

image

பசறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கசிப்பு அருந்திய நிலையில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக மாணவன் ஒருவன் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று  (14)  இந்த மாணவனுக்கு  திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி எடுத்தார். இதுகுறித்து ஆசிரியர்கள் அவரிடம் கேட்டபோது, பாடசாலைக்கு அருகே உள்ள பிரதான  வீதியில் வைத்து தான்  கசிப்பு அருந்தியதாக கூறினார்.

இதனையடுத்து அந்த மாணவன் உடனடியாக பசறை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தான்  கசிப்பு அருந்தியதனை குறித்த மாணவன்  வைத்தியசாலையில் கூறியதன் அடிப்படையில் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பசறை ஆதார வைத்தியசாலையில் வட்டாரங்கள் தெரிவித்தன.

https://www.virakesari.lk/article/176459

Checked
Sun, 05/19/2024 - 00:35
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr