ஊர்ப்புதினம்

நாடு முழுவதும் பெண்களின் தோலைப் பளபளக்க வைக்கும் ஆபத்தான கிரீம்கள் விற்பனை

2 months 3 weeks ago
நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்ட கிரீமால் ஏற்பட்டுள்ள ஆபத்து

புறக்கோட்டையில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற புற்றுநோயை உண்டாக்கும் கிரீம்கள் அடங்கிய அழகுசாதனப் பொருட்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் நான்கு முக்கிய மையங்களை சோதனையிட்டுள்ளன.

பாணந்துறை வலனா ஊழல் எதிர்ப்பு செயலணியால் நேற்று இவ்வாறு சோதனையிடப்பட்டுள்ளது.

ஒரு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான கிரீம்களுடன் நான்கு வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிரீம் வகைகள் 

பெண்களின் தோலைப் பளபளக்க வைப்பதாகக் கூறி புற்றுநோய்க் காரணிகள் அடங்கிய கிரீம்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்ட கிரீமால் ஏற்பட்டுள்ள ஆபத்து | Face Cream For Women In Sri Lanka

இவ்வாறு விற்பனை செய்யப்படும் கிரீம் வகைகள் தரமற்றவை எனவும், இறக்குமதி செய்வதற்கு தேவையான அனுமதிகளை கூட பெறவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

அழகு சாதனப் பொருட்கள்

இந்தச் சோதனையின் மூலம் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் தடைசெய்யப்பட்ட கிரீம்கள் உள்ளிட்ட அழகு சாதனப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்ட கிரீமால் ஏற்பட்டுள்ள ஆபத்து | Face Cream For Women In Sri Lanka

எவ்வாறாயினும், இந்த நான்கு வர்த்தகர்களும் நீண்டகாலமாக பாரியளவிலான இந்த கிரீம்களை இறக்குமதி செய்து நாடு முழுவதும் விநியோகித்து வருவதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

https://tamilwin.com/article/face-cream-for-women-in-sri-lanka-1708570773

கடும் வெப்பம்; வைத்திய நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

2 months 3 weeks ago

Published By: DIGITAL DESK 3    21 FEB, 2024 | 05:17 PM

image

நாட்டில் நிலவும் வெப்பமான வானிலையின் காரணமாக சூரிய ஒளியில் அதிகமாக இருப்பதை தவிர்க்குமாறும், அடிக்கடி  நீராகாரங்களை எடுத்து கொள்ளுமாறும் வைத்திய நிபுணர்கள் மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறித்து சிரேஷ்ட வைத்திய ஆலோசகர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவித்துள்ளதாவது, 

செயற்கை குளிர்பானங்களை பருகுவதை தவிர்த்து, நீர், இளநீர் போன்ற இயற்கை குளிர்பானங்களை பருகுவதன் மூலம் உடலில் நீர்வற்றிப் போகாமல் பாதுகாக்கலாம்.

அதிகம் வெப்பத்தினால் சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்கள் உடலில் நீர்வற்றும் அபாயத்தில் உள்ளனர்.

எனவே, இவர்கள் அதிக வெப்பம் உள்ள நேரங்களில் முடிந்த வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் மற்றும் உடலில் நீர்வற்றிப் போகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.  ஆகையால் 2.5 லீற்றர் தண்ணீரை பருக வேண்டும்.

இதேவேளை, பாடசாலை சிறுவர்கள் அனாவசியமாக வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். 

அத்தோடு, சிறுவர்கள் வீட்டிற்குள்  அல்லது நிழலில் விளையாட இடமளிக்க வேண்டும். சிறிய பிள்ளைகள் வெளியில் செல்லும்போது பாதுகாப்பிற்காக தொப்பிகளை அணிய ஊக்குவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/176948

'இந்தியாவின் ஒரு பகுதி இலங்கை' - இரு நாடுகளும் நெருங்கி வருவது பற்றி அமைச்சர் என்ன பேசினார்?

2 months 3 weeks ago
இந்தியா - இலங்கை உறவு

பட மூலாதாரம்,FB/HARINI FERNANDO

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண்பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 27 நிமிடங்களுக்கு முன்னர்

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, இந்தியாவில் அண்மையில் தெரிவித்த கருத்து தற்போது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றம், செய்தியாளர் சந்திப்புகள், அரசியல் மேடைகள் என பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு, போராட்டங்களும் நடாத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தன்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார்.

இந்தியாவின் ஹரின் என்ன சொன்னார்?

''இலங்கையிலுள்ள விமான நிலையங்களை இந்திய நிறுவனங்கள் பொறுப்பேற்கவுள்ளன. மூன்று விமான நிலையங்களை முகாமைத்துவம் செய்யவுள்ளன. உண்மையில் எமக்கு உதவியாக இருக்கின்றது. எமது எரிபொருள் நிரப்பு தாங்கிகளை இந்திய நிறுவனம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. சூரிய சக்தியிலான மின்சாரத்தை இந்திய நிறுவனம் வழங்குகின்றது.

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என்பதற்காகவே, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், இந்திய சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு செல்லுமாறு கோரியுள்ளார்." என இந்தியாவின் மும்பை நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ கூறியிருந்தார்.

அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவின் இந்த கருத்தானது, பாரதூரமான கருத்து என தெரிவித்து இலங்கையில் எதிர்ப்புகள் எழுந்தன.

இந்தியா - இலங்கை உறவு

பட மூலாதாரம்,FB/UDAYA PRABHATH GAMMANPILA

ஹரினின் கருத்து குறித்து வெளியான எதிர்ப்புகள்

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்த கருத்தானது, பாரதூரமான கருத்து என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் ஒருவர் இவ்வாறான கருத்துகளை வெளியிடுவதன் ஊடாக, இலங்கையின் அரசியல் சாசனம் மீறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சரின் இந்த கருத்தானது, நாட்டின் இறையாண்மைக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறையாண்மை கொண்ட நாடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இலங்கை, இந்தியாவின் ஒரு பகுதி என கூறிய கருத்தை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவின் கருத்துக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

அமைச்சரின் இந்த கருத்தானது, இலங்கையின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை மீறும் செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அமைச்சராக நியமிக்கப்படும் போது, அரசியலமைப்பின் பிரகாரம் எடுக்கப்பட்ட சத்திய பிரமாணத்தை மீறும் செயல் இதுவென கூறிய அவர், அமைச்சர் பதவியை வகிப்பதற்கு தகுதியற்றவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை வேறொரு நாட்டுடன் இணைப்பது தேசத்துரோகம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எழுந்த எதிர்ப்பு

அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ வெளியிட்ட கருத்து தொடர்பில் நாடாளுமன்றத்திலும் கருத்துகள் வெளியிடப்பட்டன.

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தனது எதிர்ப்பை வெளியிட்டார்.

''விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் இந்தியாவிற்கு சென்று கருத்தொன்றை முன்வைத்திருந்தார். இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என கூறியிருந்தார். அது அமைச்சரவையின் கருத்தா? அரசாங்கத்தின் கருத்தா? அல்லது அவரது தனிப்பட்ட கருத்தா?. அவ்வாறு தனிப்பட்ட கருத்து என்றால், தான் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடு குறித்து இவ்வாறான கருத்தை வெளியிட அமைச்சர் ஒருவருக்கு உள்ள அதிகாரம் என்ன?" என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கேள்வி எழுப்பினார்.

இதற்கு அளும் கட்சி சார்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பதிலளித்தார்.

''இது அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்ட விடயம் அல்ல." என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பதிலளித்தார்.

அத்துடன், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் இது குறித்து பதிலளித்தார்.

''இலங்கைக்கு சுற்றுலா வருமாறு அழைப்பு விடுத்த சந்தர்ப்பத்தில், வசனங்களை இணைத்து, குறைத்து சமூக ஊடகங்களினால் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. முழுமையான கருத்தை கேட்டால், இந்த விடயத்தை சரி செய்துக்கொள்ள முடியும்" என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிக்கின்றார்.

இந்தியா - இலங்கை உறவு
கொழும்பில் பாரிய போராட்டம்

அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொழும்பிலுள்ள சுற்றுலாத்துறை அமைச்சுக்கு முன்பாக போராட்டத்திற்கான பிரஜைகள் அமைப்பு இந்த போராட்டத்தை நடாத்தியிருந்தது.

ஹரின் பெர்ணான்டோவை அமைச்சர் பதவியிலிருந்து விரட்டியடிப்போம் - இந்தியாவின் நாடு விற்பனை செய்யப்படுவதை நிறுத்துவோம்" என்ற தொனிப்பொருளில் இந்த போராட்டம் நடாத்தப்பட்டது.

''இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இந்தியாவின் கருத்துகளை முன்வைக்கின்றார். ஐ.ஓ.சி இலங்கையில் இருக்கின்றது. அதானி இலங்கையில் இருக்கின்றார். அதனால், இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என உணர்கின்றேன் என்ற வகையில் அவர் கூறுகின்றார்.

அவர் வீதியில் செல்லும் சாதாரண பொதுமகன் கிடையாது. ஹரின் பெர்ணான்டோ உடனடியாக அமைச்சு பொறுப்பிலிருந்து விலக வேண்டும். அதற்கான சிவப்பு எச்சரிக்கையையே இன்று நாம் வெளிப்படுத்த இந்த இடத்திற்கு வந்தோம்." என இலஞ்ச, ஊழல், வீண்விரயத்திற்கு எதிரான பிரஜைகள் அமைப்பின் தலைவர் ஜாமுனி கமந்த துஷார தெரிவிக்கின்றார்.

''அமைச்சரவையில் இருப்பதற்கு ஹரின் பெர்ணான்டோவிற்கு உரிமை கிடையாது. சட்டரீதியிலும் அவருக்கு அதிகாரம் கிடையாது. அமைச்சரவையிலிருந்து உடனடியாக அவரை பதவி விலக்க ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்." என போராட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.

ஹரின் பெர்ணான்டோவின் பதில்

இலங்கை கஷ்டத்தில் இருந்த போது இந்தியா உதவி செய்ததைக் குறிப்பிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, இலங்கை இந்தியாவின் பகுதி என கூறியதை கீழ்தரமாக எடுத்துக் கொண்டவர்கள் குறித்து தான் வெட்கமடைவதாக தெரிவிக்கின்றார்.

நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

''இந்தியாவின் நான் தெரிவித்த கருத்து நேற்று மற்றும் நேற்று முன்தினங்களில் பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. ஏன் இணையத்தள சட்டமூலம் அவசியம் என்ற கேள்வியை பலரும் எழுப்புகின்றனர். அது கவலையளிக்கின்றது.

15 நிமிட உரையாடலொன்றை நடாத்திய போது, ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஒரு நிமிடம், இரண்டு நிமிடம், மூன்று நிமிடம் மாத்திரமே ஒளிபரப்பு செய்வார்கள். தமது அரசியல் நோக்கத்திற்காக அந்த கருத்துக்களை திரிவுப்படுத்தும் வகையில் தயாரிக்க முடியும். அதுவே இணையத்தளத்திலுள்ள பாரிய அச்சுறுத்தல் என்பதை நாம் முன்பிருந்தே கூறிவருகின்றோம்.

இந்தியாவிலிருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகின்ற இந்த தருணத்தில், வரலாற்றில் தொடர்புகள் குறித்து பார்க்கும் போது, இலங்கை இந்தியாவின் பகுதி என்பது அரசியலமைப்பு ரீதியில் தவறானது என்ற விதத்தில் அர்த்தத்தை ஏற்படுத்தும் விதத்தில் கருத்து வெளியிட்ட ஒருவர் இந்த நாடாளுமன்றத்தில் இருந்தார். அது குறித்து கவலையடைகின்றேன்.

இந்தியா - இலங்கை உறவு

பட மூலாதாரம்,FB/HARINI FERNANDO

அதற்கான காரணம், கடந்த 13 முதல் 14 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் இலங்கையை இந்தியா பாதுகாத்தமைக்கான நன்றி கூறியிருந்தேன். இரண்டு நாடுகளும் பல விதமான ஒற்றுமையை கொண்டுள்ளமையினால், இலங்கை இந்தியாவின் பகுதி என கூறினேன். நான் இலங்கையை இந்தியாவிற்கு விற்பனை செய்யவில்லை. கஷ்டத்தில் இருந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் இந்தியா எமக்கு உதவியுள்ளது.

இந்தியா கடனுதவியை வழங்கும் போது இந்தியா சிறந்தது. இந்தியா எமக்கு மருந்து வகைகளை கொடுக்கும் போது இந்தியா சிறந்தது. வேறு எந்தவொரு நாட்டு கிரிக்கெட் அணியும் இலங்கைக்கு வருகைத் தராத போது, இந்தியா வந்தது சிறந்தது. இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்த போது இந்தியா சிறந்தது.

இந்திய முதலீட்டாளர்களை அழைக்கும் போது மாத்திரம் இந்தியா மோசமானது. முதலீடுகள் இல்லாமல் எவ்வாறு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது?. சீனாவிற்கும் மேலே சென்ற நாடாக இந்தியா காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில், இந்தியாவுடனான தொடர்புகளை கூறி பேசியதை கீழ்த்தரமான முறையில் எடுத்துக்கொண்டமை குறித்து வெட்கப்படுகின்றேன்."என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/articles/ce944vxew5po

பௌத்த பிக்குகள் பாராளுமன்றத்துக்கு வர கூடாது, விகாரைகளில் இருக்க வேண்டும் - இராஜாங்க அமைச்சர் டயனா கமகே

2 months 3 weeks ago

Published By: VISHNU   21 FEB, 2024 | 05:55 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பௌத்த பிக்குகள் பாராளுமன்றத்துக்கு வர கூடாது. விகாரைகளில் இருந்து அறத்தை போதிக்க வேண்டும். காவியுடை அணிந்து வருபவர்களுக்கு மக்கள் இனிமேல் வாக்களிக்க கூடாது, விகாரையிலேயே இருக்க சொல்லுங்கள். பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர், நாலக கொடஹேவா ஆகியோரின் ஆலோசனைகளினால் தான் கோட்டபய ராஜபக்ஷ பாரிய நெருக்கடிக்கு உள்ளானார் என சுற்றுலாத்துறை அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

எனது வீட்டுக்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மாத்திரமல்ல, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் வருகை தந்துள்ளார்கள். ஆகவே கீழ்த்தரமான கருத்துக்களை குறிப்பிடுவதை எஸ்.எம்.மரிக்கார் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

வெளிநாட்டு முதலீடுகளுடனான அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபடுவது தற்போதைய கலாச்சாரமாக காணப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் அதிவேக நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது  அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் நடு வீதியில் படுத்து எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் அவர்கள் தான் இன்று அதிகளவில் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

அனைத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடும் 'காலத்தை வீணடிப்பவர்களை' வைத்துக் கொண்டு நாடு என்ற ரீதியில் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது. ஆகவே தேவையற்ற எதிர்ப்பு போராட்டங்களுக்கு இடமளிக்கக் கூடாது, பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில் இவ்வாறான காலத்தை வீணடிக்கும் செயற்பாடுகள் ஏதும் கிடையாது.

பௌத்த பிக்குகள் பாராளுமன்றத்துக்கு வருகை தர கூடாது, அவர்கள் விகாரைகளில் இருந்து தர்மத்தைப் போதிக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர் அனைத்து அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறார். அன்று ஆளும் தரப்பிலிருந்தார். இன்று எதிரணியில் இருக்கிறார். நாளை எங்கிருப்பார் என்று தெரியவில்லை. சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் போல் கட்சி தாவுவதை பிரதான அறமாக கொண்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர் கசினோ நிலையங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது, ஆனால் ஒரு சிலரிடம் சென்று 'வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாத்திரமா கசினோ அனுமதி வழங்கப்படும், உள்நாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி இல்லையா ?'  என்று கேட்டுத் திரிகிறார். ஆகவே இனிவரும் காலங்களில்' காவி உடை அணிந்து வருபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது. விகாரையில் இருந்து தர்மத்தை போதியுங்கள்' என்று குறிப்பிட வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பொருளாதார ரீதியில் எடுத்த தவறான தீர்மானங்களால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். சேதன பசளை தொடர்பான தவறான ஆலோசனையைப் பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரரே, அப்போதைய ஜனாதிபதி  கோட்டபய ராஜபக்ஷவுக்கு வழங்கினார்.

அதேபோல் பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவாவும் கோட்டபய ராஜபக்ஷவுக்கு தவறான ஆலோசனைகளை வழங்கி அவரை வீட்டுக்கு அனுப்பினார். தற்போது எதிர்க்கட்சி பக்கம் சென்றுள்ளார். நாலக கொடஹேவாவின் ஆலோசனைகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டால் அவருக்கும் கோட்டபய ராஜபக்ஷவின் நிலையே ஏற்படும்.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் சிங்கள வாக்குகளில் பாராளுமன்றத்துக்கு வருகை தந்து விட்டு சிங்கள தலைவரை தாக்குகிறார். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா  எனது வீட்டுக்கு இரவில் வருகை தந்ததாக குறிப்பிட்டுள்ளார். எனது வீட்டுக்கு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸநாயக்க ஆகியோர் வருகை தந்துள்ளார்கள். எனது வீடு ஒன்றும் தடை செய்யப்பட்ட பகுதியல்ல. அரசியலில் எனக்கு யாரும் எதிரிகளல்ல, ஆகவே கீழ்த்தரமான கருத்துக்களை குறிப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/176991

2025 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய பல்கலைக்கான புலமைப்பரிசில்!

2 months 3 weeks ago
21 FEB, 2024 | 07:39 PM
image
 

2025 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கவுள்ள அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்களுக்கான புலமைப்பரிசில் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதியுடன் முடிவடையும்.

இந்த புலமைப்பரிசில் விருதுகள் ஆண்டுதோறும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் சுமார் 150 நாடுகள் உள்ளிட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு புலமைப்பரிசில் விருதுகளை வழங்குகிறது.

இந்த புலமைப்பரிசில் விருதுகள் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அவுஸ்திரேலியாவின் உயர் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கும் உலக தரம் வாய்த கல்வி சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்கும் வாய்ப்புகள் கிடைக்கின்றன.

மேலும் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களின் கல்விசார்ந்த செலவுகள் , விமான பயண செலவுகள் மற்றும் அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் காலம்வரை உள்ள வாழ்வாதார செலவுகள் ஆகியன வெளிநாட்டு மாணவர் உடல்நலம் காப்புறுதி (OSHC) உத்தரவாதமளிக்கிறது.

இந்த புலமைப்பரிசில் விருதுகளுக்கான விண்ணப்பங்களுக்கு தகுதியுடையவர்களை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் திறந்த மற்றும் அனைவருக்கும் சமனிலையானதாக காணப்படும்.

இந்த புலமைப்பரிசில் விருதுகள் தொடர்பில் விண்ணப்பதாரர்களுக்கு மத்தியில் ஏற்படும் கேள்விகளை அவுஸ்திரேலியா விருதுகள் வழங்கும் குழுவிடம் முன்வைக்க முடியும்.

விண்ணப்பதாரர்கள் தங்களது தகவல்களை அவுஸ்திரேலியா புலமைப்பரிசில் விருதுகள் அலுவலகங்களில் அல்லது www.australiaawardssrilanka.org  என்ற இணையத்தளம் மூலம் பதிவு செய்ய முடியும்.

https://www.virakesari.lk/article/176984

சில உணவு பொருட்களின் விசேட பண்ட வரி அதிகரிப்புக்கான புதிய வர்த்தமானி

2 months 3 weeks ago
7-5.jpg

உளுந்து, பாசிப்பயறு, கௌபி, சோளம், குரக்கன் மற்றும் தினை ஆகியவற்றின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் விசேட பண்ட வரியை உயர்த்தி புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானியின்படி, உளுந்து (மற்றவை) இதுவரை ஒரு கிலோ கிராமிற்கு 200 ரூபாவாக காணப்பட்ட விசேட பண்ட வரி 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கௌபி (மற்றவை), விதை குரக்கன், விதைகள் – (தினை) உள்ளிற்றவைக்கான இறக்குமதி விசேட பண்ட வரி ஒரு கிலோ கிராமிற்கு 70 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இது தவிர சோளத்துக்கும் 25 ரூபாய் விசேட பண்ட வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, சோளம், உளுந்து, பச்சைப்பயறு, கௌபி மற்றும் குரக்கன் ஆகியவற்றின் இறக்குமதியை விவசாய அமைச்சின் பரிந்துரையின் பேரில் மேற்கொள்ள வேண்டுமென வர்த்தமானி அறிவித்தலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/292707

மன்னாரில் புதிய காற்றாலை திட்டத்தை அமைக்க திட்டம்

2 months 3 weeks ago

மன்னாரில் புதிய காற்றாலை திட்டத்தை அமைப்பதற்கான ஒப்பந்தங்களை கோரவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

அதே பகுதியில் 100 மெகாவாட் காற்றாலை திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டதை அடுத்து மேற்படி ஒப்பந்தம் கோரப்படவுள்ளது.

புதிய காற்றாலை 50 மெகாவாட் திறனை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

download-5.jpg

காற்றாலை தவிர, மொத்தம் 165 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் நிலையங்களை அமைப்பதற்கான டெண்டர்களையும் அமைச்சு கோரியுள்ளது. நாட்டின் எரிசக்தி ஆதாரங்களை பன்முகப்படுத்தவும், புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கொள்வனவு செய்யவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. டெண்டர்களைப் பாதுகாக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் அல்லது தனிநபர்களால் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும்.

https://thinakkural.lk/article/292678

இலங்கை- இந்திய கடல் போக்குவரத்தை ஊக்குவிக்க விசேட நடவடிக்கை

2 months 3 weeks ago
srilanka.jpg இலங்கை- இந்திய கடல் போக்குவரத்தை ஊக்குவிக்க விசேட நடவடிக்கை.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடல்வழிப் பயணிகள் போக்குவரத்தை ஊக்குவிப்பதன் மூலம் இருநாடுகளுக்கிடையில் சுற்றுலாப் பயணிகளுக்கு அணுகக்கூடிய இயலுமையை அதிகமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல், மேம்படுத்தப்பட்ட தொடர்புகள் மூலம் கலாச்சார பரிமாற்றங்கள், கல்வி, சமய, கலாச்சார செயற்பாடுகள், கலை, விளையாட்டு போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்களை ஊக்குவிப்பதற்கும் இதன் ஊடாக இயலுமை உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்காக குறைந்த செலவிலான சுற்றுலா மற்றும் போக்குவரத்துக் கட்டண முறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. அதற்கமைய பயணிகள் போக்குவரத்துப் படகுகள் மற்றும் கப்பல்கள் மூலம் இலங்கையிலிருந்து வெளியேறிச் செல்லும் பயணிகளிடமிருந்து தற்போது அறிவிடப்படும் வெளிச்செல்லல் வரி முறையே 5 அமெரிக்க டொலர்கள் மற்றும் 20 அமெரிக்க டொலர்களாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், படகுப் பயணி ஒருவருக்கு 60 கிலோகிராம் வரையான பயணப் பொதிக் கட்டணத்தை இலவசமாக வழங்குவதற்கும் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://athavannews.com/2024/1370628

இரணைமடு குளத்தையும் வயல் நிலங்களையும் சட்டவிரோத மணல் அகழ்வோரிடமிருந்து காப்பாற்றுங்கள் - பிரதேச மக்கள் அவசர கோரிக்கை

2 months 3 weeks ago
21 FEB, 2024 | 12:45 PM
image

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் பகுதியில்   மிக மோசமாக அதிகரித்துள்ள சட்டவிரோத  மணல் அகழ்வினால் இரணைமடு குளத்திற்கும் அதனை சூழவுள்ள வயல் நிலங்களுக்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் இந்த நிலைமை தொடர்ந்தால் நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்களை இழக்க நேரிடுவதோடு, இரணைமடு குளத்திற்கும் பெரும் பாதிப்பு  ஏற்படும் என்றும் எனவே குளத்தையும் வயலையும் காப்பாற்ற விரைந்து நடவடிக்கை எடுங்கள் என உரிய தரப்பினர்களிடம் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரணைமடு குளத்திற்கு கீழ் கோரமோட்டை ஆற்றுப்பகுதியிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் சமீப காலமாக சட்டவிரோத மணல் அகழ்வு கட்டுக்கடங்காது மிக மோசமாக அதிகரித்துள்ளது.

இது தொடர்பில்  உரிய தரப்பினர்களுக்கு தகவல் வழங்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதோடு, அவர்களின் வீடுகளுக்குள் பட்டாசுகளை கொளுத்தி எறிந்து எச்சரிக்கை விடும் செயற்பாடுகளும் இடம்பெற்றுவருகிறது.

இதனால் கண் முன்னே இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் பலர் மௌனமாக கடந்து சென்று விடுகின்றனர் எனத் தெரிவித்துள்ள பிரதேசவாசி ஒருவர்

இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றவர்களுக்கு பொலிஸ், பாதுகாப்புத் தரப்பினர்கள், அரசில்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் செல்வாக்கு இருப்பதாகவும் இதனால் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் எவரும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் குறிப்பிடுகின்றனர்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் அவர்களால் கூட்டத்தில் கலந்துரையாடப்படுவதோடு நடவடிக்கை நின்றுவிடுகிறது.

மாவட்ட எம்பியிடம் முறையிட்டால் அவரும் திரும்பி பார்ப்பதாக இல்லை, பொலீஸ் உட்பட பாதுகாப்பு தரப்பினர்களிடம் முறையிட்டால் அவர்கள் மணல் அகழ்வோரிடம் எங்களை காட்டிக்கொடுக்கின்றனர். இந்த நிலையில் எங்களால் என்ன செய்வது என்றே தெரியவில்லை எனவும் கவலை தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/176945

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்திற்கு மல்வத்து, அஸ்கிரிய பீட மகா சங்கத்தினர் வரவேற்பு

2 months 3 weeks ago

Published By: DIGITAL DESK 3    21 FEB, 2024 | 12:26 PM

image

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்திற்கு மல்வத்து, அஸ்கிரிய பீட மகா சங்கத்தினர் வரவேற்றுள்ளனர்.

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசங்க குணவன்ச உள்ளிட்ட அதிகாரிகள், உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தின் பிரதியொன்றை திங்கட்கிழமை (19)  மல்வத்து அஸ்கிரி மகா மகாநாயக்க தேரர்களிடம் கையளித்தனர்.

இச்சட்டமூலத்திற்குப் பாராட்டு தெரிவித்த மல்வத்து பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல  தேரர் மற்றும் அஸ்கிரியத் தரப்புப் மகாநாயக்கர்  வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் ஆகியோர் இதனை மேலும் பரிசீலனை செய்து பொது நிலைப்பாட்டை அறிவிக்கவும் இணக்கம் தெரிவித்தனர்.

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகச் செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகள் மேலும் மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளித்தனர்.

கலாநிதி மகவெல ரதனபால தேரர்,  கலாநிதி முருத்தெனியே தர்மரதன தேரர் மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை இடைக்கால செயலகத்தின் பிரிவு  தலைவர் (கொள்கை) கலாநிதி சி. வை. தங்கராஜா, மக்கள் தொடர்பு நிறைவேற்று அதிகாரி தனுஷி டி சில்வா, சிரேஷ்ட சட்ட நிறைவேற்று அதிகாரிகளான யஸ்மதா லொகுனாரங்கொட, துலான் தசநாயக்க, இணைப்பாளர் எஸ். டி. கொத்தலாவல ஆகியோரும் இந்த நிகழ்வில்  கலந்துகொண்டனர்.

hl-39009514400.jpg

https://www.virakesari.lk/article/176938

தொழுநோயை கட்டுப்படுத்த இலங்கைக்கு வருகை தரவுள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் வைத்திய குழு

2 months 3 weeks ago

Published By: DIGITAL DESK 3    21 FEB, 2024 | 11:24 AM

image

தொழுநோயை முற்றாக கட்டுப்படுத்தும் நோக்கில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் விசேட வைத்திய குழுவொன்று எதிர்வரும் மார்ச் மாதம் நாட்டிற்கு வருகை தரவுள்ளது.

நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் தொழுநோயை முற்றாக  கட்டுப்படுத்துவதற்கான  வரைப்படத்தை உருவாக்க  இந்த குழு சுகாதார அதிகாரிகளுக்கு உதவும் என  தொழுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் தொழுநோயாளிகளின்  அதிகரித்துள்ளதாக தொழுநோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசான் ரணவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து தொழுநோயை முற்றாக கட்டுப்படுத்தற்கான விரிவான வேலைத்திட்டத்தை நாங்கள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம். இந்த முயற்சிக்கு உதவுவதற்காக விசேட வைத்திய குழுவை மார்ச் மாதம் இங்கு அனுப்புவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எங்களுக்குத் அறிவித்துள்ளது. அவர்கள் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் தொழுநோயை முற்றாக தடுக்க ஒரு வரைபடத்தை உருவாக்குவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/176934

முன்மாதிரி கிராமமாக நயினாதீவை மாற்ற வேண்டும் - வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்

2 months 3 weeks ago
21 FEB, 2024 | 01:13 PM
image

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக ஆராயும் நோக்கில் மற்றுமொரு சிநேகபூர்வ கலந்துரையாடல் உள்ளூராட்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் நயினாதீவு அமுதசுரபி மண்டபத்தில் நேற்று (20) இடம்பெற்றது. 

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையிலான இக்கலந்துரையாடலில் உள்ளூராட்சி திணைக்கள ஆணையாளர் எஸ்.பிரணவநாதன், திணைக்கள அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். 

IMG-20240220-WA0132.jpg

யாழ். குடாநாட்டில் காணப்படும் தீவுகளில் ஒன்றான நயினாதீவில் சுமார் ஆயிரம் குடும்பங்கள், ஐயாயிரம் பேர் வசிக்கின்றனர். 

மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய நயினாதீவு மக்களின் பிரதான ஜீவனோபாயமாக கடற்தொழில் காணப்படுகிறது. 

இக்கலந்துரையாடலின்போது, நயினாதீவில் உள்ள பாடசாலைகளின் குறைபாடுகள் மற்றும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து  கிராம மக்களால் எடுத்துரைக்கப்பட்டது. 

IMG-20240220-WA0133.jpg

அதைத் தொடர்ந்து, பாடசாலைகளுக்கான தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்யுமாறு வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

இதேவேளை போக்குவரத்து, குடிநீர் வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கும் தீர்வு காண்பதற்கான திட்ட வரைபை சமர்ப்பிக்குமாறும், நயினாதீவை பிளாஸ்ரிக் அற்ற முன்மாதிரி கிராமமாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் பணித்தார்.

தீவக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், புலம்பெயர் அமைப்புகளும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக ஆளுநர் மேலும் கூறுகையில், இயற்கை வளங்களை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்படுகிறது. இன, மத பேதமின்றி நயினாதீவு மக்கள் இந்த கலந்துரையாடலில் பங்கெடுத்தமையானது இந்த கிராமத்தை சிறந்த முன்மாதிரியாக மாற்றுவதற்கான சிறந்த ஆரம்பம் என்றார். 

மக்களுடனான கலந்துரையாடலின் பின்னர், நயினாதீவு அமுதசுரபி அன்னதான மண்டப நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மதிய உணவிலும் ஆளுநர் உள்ளிட்ட குழுவினர்  கலத்துகொண்டனர். 

இதேவேளை தீவிலுள்ள மத வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று மதத் தலைவர்களுடனும் ஆளுநர் கலந்துரையாடினார். 

இச்சந்திப்பின்போது ஆளுநரின் பணிப்புரைக்கமைய, ‍வேலைத்திட்டங்களை உடனடியாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், நயினாதீவை முன்மாதிரி தீவாக மாற்றுவதற்கான வேலைகளை உடனடியாக ஆரம்பித்து, அதற்குரிய திட்ட வரைபை விரைவில் ஆளுநரிடம் சமர்ப்பிப்பதாகவும் வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.பிரணவநாதன் நயினாதீவு மக்களுக்கு உறுதிபட தெரிவித்தார். 

IMG-20240220-WA0136.jpg

IMG-20240220-WA0131.jpg

IMG-20240220-WA0137.jpg

IMG-20240220-WA0138.jpg

IMG-20240220-WA0139.jpg

IMG-20240220-WA0141.jpg

https://www.virakesari.lk/article/176944

யாழில் விபத்து; பல்கலை மாணவன் சாவு!

2 months 3 weeks ago

 

2036117528.jpg

யாழில் விபத்து; பல்கலை மாணவன் சாவு!
 

இனியபாரதி.

யாழ்ப்பாணம் - நீா்வேலியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் யாழ்.பல்கலைகழக 1ஆம் வருட கலைப்பிாிவு மாணவன் உயிாிழந்துள்ளாா்.

விபத்தில் மானிப்பாய் - வேம்படியைச் சோ்ந்த ரமேஷ் சகீந்தன் (வயது 22) என்ற மாணவனே உயிாிழந்துள்ளாா். இன்று அதிகாலை தனது வீட்டிலிருந்து நீா்வேலி நோக்கி மோட்டாா் சைக்கிளில் பயணித்தபோது வீதியின் குறுக்கே பாய்ந்த நாயுடன் மோட்டாா் சைக்கிள் மோதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் காயமடைந்த மாணவன் யாழ்.போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளாா். சம்பவம் தொடா்பான  மேலதிக விசாரணைகளை கோப்பாய் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ச) 

https://newuthayan.com/article/யாழ்_விபத்தில்_பல்கலை_மாணவன்_சாவு!

 

எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இந்தியர்கள் இலங்கையின் நிரந்தர குடியேற்றவாசிகளாவர் - விமல் வீரவன்ச சாடல்

2 months 3 weeks ago

Published By: DIGITAL DESK 3  21 FEB, 2024 | 09:28 AM

image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

200 ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலுக்காக அழைத்து வரப்பட்டவர்கள் இலங்கையில் நிரந்தரமாக குடி கொண்டதை போன்று எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இந்தியர்கள் இலங்கையில் நிரந்தரமாக குடி கொள்வார்கள். ஜனாதிபதியின் தேசியத்துக்கு எதிரான செயற்பாடுகளை பார்த்துக் கொண்டு பொதுஜன பெரமுனவினர் வெட்கமில்லாமல் இருக்கிறார்கள். பிரதமர் தினேஷ் குணவர்தன பூனை போல் செயற்படுகிறார். அமைச்சரவை உறுப்பினர்கள் முட்டாள்களை போல் உள்ளார்கள் என   தேசிய சுதந்திர முன்னணியின்   தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல்   வீரவன்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற அமர்வில்  பிணைப் பொறுப்பாக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் சட்டமூலம், நம்பிக்கைப் பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள் (திருத்தச் ) சட்டமூலம் உள்ளிட்ட ஏழு சட்டமூலங்கள் இரண்டாம் வாசிப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.இவ்விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து  மீள்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஆளும் தரப்பினர் குறிப்பிடுவது உண்மையல்ல,நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பதிலாக நெருக்கடிகளை தீவிரப்படுத்தி என்றும் விடுப்படாத  நடவடிக்கைகள் மாத்திரமே தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தேசிய நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். ஆகவே மறுசீரமைப்பு  தீர்மானங்களை மீள்பரிசீலனை செய்யுமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்கள்.

அமைச்சர் ஹரின் பிரனாந்து  அண்மையில் இந்தியாவுக்கு சென்று 'இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி ' என்று குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் ஹரின் பிரனாந்து  இந்தியாவில் ஆற்றிய உரையை  ஊடகங்கள்திரிபுப்படுத்தியுள்ளதாகவும்,செம்மைப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிடுகிறார்.அமைச்சர் ஹரின் பிரனாந்து குறிப்பிட்ட கருத்தை எவரும் திரிபுப்படுத்தவில்லை.

தேசியத்துக்கு எதிரான நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுக்கின்ற போது ராஜபக்ஷர்கள் தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.பொரலுகொட சிங்கம் என்று குறிப்பிடப்படும் பிரதமர் தினேஷ் குணவர்தன தற்போது பூனை போல் அமைதியாக உள்ளார்.

டெலிகொம் நிறுவனம்,மின்சார சபை மன்னாரில் உள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளன.இதுவா பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகள். இலங்கையில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள் என்பனவற்றை இந்தியாவுக்கு வழங்குவதாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிடுகிறார்.அவ்வாறாயின் இந்த நாட்டின் என்ன மிகுதியாகும்.பாராளுமன்றத்தையும் இந்தியாவுக்கு வழங்கலாமே?

இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தை எதிர்வரும் மார்ச்  மாதம் கைச்சாத்திட அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இலங்கையின் சகல தொழிற்றுறைகளிலும் ஈடுப்பட இந்தியர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.எட்கா ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை ஆளும் தரப்பின் எத்தனை உறுப்பினர்கள் அறிவார்கள்.வழங்குதை சாப்பிட்டு விட்டு இருப்பதை மாத்திரமே பிரதான செயற்பாடாக கொண்டுள்ளார்கள்.

200 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய தமிழர்களை வெள்ளையர்கள் இலங்கையில் தங்க வைப்பதற்காக  மலையக பகுதிகளுக்கு அழைத்து வரவில்லை.தொழிலுக்காகவே அழைத்து வரப்பட்டார்கள்.  பிற்பட்ட காலத்தில் சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தத்தின் ஊடாக மலையக தமிழர்கள் பலர் நாடு கடத்தப்பட்டார்கள்.சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் சரியானது என்று குறிப்பிடும் தரப்பினர்கள் இன்று எட்கா ஒப்பந்தத்துக்கு சார்பாக செயற்படுகிறார்கள்.

எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் 200 ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலுக்காக அழைத்து வரப்பட்டவர்கள் இலங்கையில் நிரந்தரமாக தங்கியதை போன்று இந்தியர்களும் இலங்கையில் நிரந்தரமாக குடி கொள்வார்கள்.இந்தியர்கள் வெற்றிலை கடை கூட இலங்கையில் வைப்பார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாட்டை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நன்கு அறிவார். அதனால் தான் எதிர்காலத்தில் நடக்க போவதை முன்கூட்டியதாகவே அவர் 'இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி ' என்று குறிப்பிட்டுள்ளார். வழங்குவதை சாப்பிட்டு விட்டு,அமைதியாக இருக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியின் செயற்பாட்டை அறிய மாட்டார்கள்.பாராளுமன்றத்தில் கையுயர்த்துவதற்காகவே  பொதுஜன பெரமுனவை ஜனாதிபதி பயன்படுத்திக் கொள்கிறார்.

அண்மையில் தாய்லாந்து நாட்டுடன் சுதந்திர ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்தவில்லை.முட்டாள்தனமான அமைச்சரவை உறுப்பினர்கள்  ஒப்பந்தத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ளார்கள். எட்கா ஒப்பந்தத்துக்கும் இவர்கள் ஆதரவு  வழங்குவார்கள்.

நாட்டின் இறையாண்மையை பிற நாட்டில் காட்டிக் கொடுத்துள்ள அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிராக பேசுவதற்கும், அவரை அமைச்சரவையில் இருந்து வெளியேற்றுவதற்கும் எவருக்கும் தற்றுணிவு கிடையாது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினருக்கு வெட்கம் என்பதொன்று கிடையாது. 69 இலட்ச மக்களாணைக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ராஜபக்ஷர்கள் ஒத்துழைப்பு வழங்குகிறார்கள்.

எட்கா ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் ஒரு அரச அதிகாரி ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சிவில் தரப்பினர் இந்த ஒப்பந்தம் குறித்து  ஜனாதிபதி அலுவலகத்துக்கு சென்று அவரிடம் கேள்வி கேட்ட போது 'எதனையும் குறிப்பிட முடியாது' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எட்கா ஒப்பந்தத்தில் இந்தியா சார்பில் ஒரு அணி செயல்படுகிறது ஆனால் இலங்கை சார்பில் ஒரு நபர் மாத்திரமே செயற்படுகிறார். ஆகவே எட்கா ஒப்பந்தத்துக்கு ஆதரவு வழங்கும் தரப்பினர்  தேச துரோகிகளாக கருதப்படுவார்கள் என்றார்.

https://www.virakesari.lk/article/176922

மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பளத்தை இலட்சக்கணக்கில் அதிகரிப்பதில் எந்தளவுக்கு நியாயம் - விமல் வீரவன்ச

2 months 3 weeks ago
20 FEB, 2024 | 05:18 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

பொருளாதார பாதிப்புக்கு  மத்தியில் மூன்று வேளை உணவை கூட பெற்றுக் கொள்வதில் பெரும்பாலான மக்கள் போராடுகின்ற சூழ்நிலையில் மத்திய வங்கியின் உயர்மட்ட அதிகாரிகளின் சம்பளத்தை பல இலட்சக்கணக்கில் அதிகரித்துள்ளமை  எந்தளவுக்கு நியாயமானது.

சுயாதீனம் என்றுக் குறிப்பிட்டுக் கொண்டு மத்திய வங்கி தன்னிச்சையான முறையில் செயற்படும் சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற அமர்வில் பிணைப் பொறுப்பாக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் சட்டமூலம், நம்பிக்கைப் பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள் (திருத்தச் ) சட்டமூலம் உள்ளிட்ட ஏழு சட்டமூலங்கள் இரண்டாம் வாசிப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. இவ்விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

மத்திய வங்கியின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு  சம்பளம் அதிகரிக்கப்பட்டதை தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது 'மத்திய வங்கியின் புதிய சட்டத்துக்கு அமைய சம்பளம் அதிகரிக்கப்பட்டதாகவும், அது மத்திய வங்கியின் சுயாதீனம்' என்றும்  அமைச்சர் பதிலளித்துள்ளார்.

மத்திய வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு விரும்பிய வகையில் தீர்மானம் எடுக்க இடமளிக்க கூடாது என்பதற்காகவே 'புதிய மத்திய வங்கி சட்டத்துக்கு நாங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தோம்.

நாட்டு மக்களில் பெரும்பாலானோர் மூன்று வேளை உணவை உட்கொள்வதில் போராடுகிறார்கள். வாழ்க்கை செலவுகள் அதிகரிப்பால் திண்டாடுகிறார்கள்.

இவ்வாறான பின்னணியில் மத்திய வங்கியின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு பல இலட்ச கணக்கில் சம்பளத்தை அதிகரிப்பது எந்தளவுக்கு நியாயமானது.

கரண்டி தம் கையில் இருப்பதால் மத்திய வங்கி எண்ணம் போல் உணவை பரிமாறிக் கொள்கிறது. ஜனாதிபதியின் பொருளாதார மீட்சி எந்தளவுக்கு முன்னேற்றமடைந்துள்ளது என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

சுயாதீனம் என்று குறிப்பிட்டுக் கொண்டு தன்னிச்சையாக செயற்படும் சூழலே மத்திய வங்கிக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/176889

இலங்கை அமெரிக்காவின் பிராந்தியமல்ல - அமெரிக்க தூதுவரின் கருத்துக்கு அரசாங்கம் பதில்

2 months 3 weeks ago

Published By: DIGITAL DESK 3   20 FEB, 2024 | 05:07 PM

image

(எம்.மனோசித்ரா)

இலங்கை அமெரிக்காவின் பிராந்தியமல்ல, இறையாண்மையுடைய சுயாதீனமான எமது நாட்டின் பாராளுமன்றத்துக்கு மாத்திரமே, சட்ட திட்டங்கள் தொடர்பான உரிமையும் காணப்படுகிறது என அரசாங்கம் அமெரிக்க தூதுவருக்கு அரசாங்கம் பதிலளித்துள்ளது.

நிகழ்நிலை காப்பு சட்ட மூலம் தொடர்பில் கவலை வெளியிடுவதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஊடகப் பிரதானிகள், ஊடகவியலாளர் மற்றும் சிவில் சமூக அமைப்பினருடனான சந்திப்பில் தெரிவித்திருந்தார். 

இது தொடர்பில் செவ்வாய்கிழமை (20) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை என்பது அமெரிக்காவின் பிராந்தியமல்ல. எமது நாடு இறையாண்மையுடைய சுயாதீன நாடாகும். எனவே எமது நாட்டுக்குள் அரசியலமைப்பு சபையில் நிறைவேற்றப்படும் சட்ட திட்டங்கள் தொடர்பான உரிமை சட்டத்தை தயாரிக்கும் நிறுவனமான பாராளுமன்றத்துக்கே உரியது.

அதற்கமைய இது தொடர்பான திருத்தங்கள் கடந்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது. அவை பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பில் 14 நாட்களுக்குள் நீதிமன்றத்தை நாட முடியும். நீதிமன்றம் அவை தொடர்பில் பரிசீலனை செய்து, திருத்தங்களை பரிந்துரைக்கும்.

சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கான எந்தவொரு தேவையும் அரசாங்கத்துக்கு கிடையாது. எவ்வாறிருப்பினும் இனங்களுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் ஏற்படும் முரண்பாடுகளை தீர்ப்பதற்கான தேவை அரசாங்கத்துக்கு காணப்படுகிறது. தனிநபர் பாதிப்பு உள்ளிட்டவற்றை தவிர்ப்பதே இந்த சட்ட மூலத்தின் நோக்கமாகும்.

எனவே எந்தவொரு பிரஜைக்கும் சமூக வலைத்தளத்தின் ஊடாக தத்தமது தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு எவ்வித தடையும் இல்லை என்றார்.

https://www.virakesari.lk/article/176891

புதுக்குடியிருப்பில் இரண்டு முதியோர் பகல் பராமரிப்பு இல்லங்கள் திறந்து வைப்பு

2 months 3 weeks ago
புதுக்குடியிருப்பில் இரண்டு முதியோர் இல்லங்கள் திறந்தவைப்பு

Courtesy: Rukshy

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இரண்டு முதியோர் இல்லங்கள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த முதியோர் இல்லம் நூற்றுக்கு மேற்பட்ட முதியவர்கள் வாழ்ந்து வரும் புதுக்குடியிருப்பு மேற்கு கிராமத்தின் முதியவர்களின் தேவைக்காக முதியோர்களுக்கான தேசிய செயலகத்தினால் 3.5 மில்லியன் ஒதுக்கப்பட்டு புதுக்குடியிருப்பு பிரதேச சமூகசேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டு நேற்று (19.02.2024) முதியோர் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. .

நிதி ஒதுக்கீடு

இந்த முதியோர் இல்லங்கள் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் முதலாவது முதியோர் இல்லம் கடந்த மாதம் உடையார் கட்டு வடக்கு கிராமத்திலும், இரண்டாவது முதியோர் இல்லமாக புதுக்குடியிருப்பு மேற்கு கிராமத்திலும் தலா 3.5 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பில் இரண்டு முதியோர் இல்லங்கள் திறந்தவைப்பு | Opening Of Two Old Age Homes In Pudukudiyiruppu

புதுக்குடியிருப்பு மேற்கு முதியோர் சங்க தலைவர் வெ.கணேஷ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி.ஜெயக்காந்த், உதவி பிரதேச செயலாளர் செல்வி.ம.சர்மிலி, பிரதேச செயலக கணக்காளர் கடம்பசோதி மற்றும் சமுக சேவை உத்தியோகத்தர் கிராம அலுவலர்கள் ஆகியோரின் முன்னிலையில் பிரதேச செயலாளரால் திறந்து வைக்கப்பட்டு முதியோர் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

GalleryGalleryGalleryGalleryGallery

https://tamilwin.com/article/opening-of-two-old-age-homes-in-pudukudiyiruppu-1708418018?itm_source=parsely-api

குச்சவெளி பிரதேசத்தின் 4 விகாரைகள் இலங்கையின் அதி முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த இடங்களாக பிரகடனம்

2 months 3 weeks ago
தமிழ் மக்கள் செறிந்துவாழும் குச்சவெளி பிரதேசத்தின் 4 விகாரைகள் இலங்கையின் அதி முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த இடங்களாக பிரகடனம்
20 FEB, 2024 | 08:36 PM
image
 

தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் பௌத்தமயமாக்கலுக்குள்ளாகி வரும் நான்கு இடங்கள் இலங்கையில் தேசிய புனித இடங்களாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளன. 

இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்ட அந்தப் பகுதிகளை புனித பூமியாக பெயரிடுவதற்கான பத்திரங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் கடந்த (15) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கல் செயற்பாடுகள் மூலம் தமிழ் பேசும் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து விகாரைகளை அமைத்துவரும் புல்மோட்டை அரிசி மலை பௌத்த பிக்குவான பனாமுரே திலகவன்ஸ  என்ற பௌத்த பிக்குவிடம் இந்த இடங்களுக்கான பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி குச்சவெளி பிரதேச செயலகத்தின் புல்மோட்டை பகுதியில் உள்ள  சாந்தி விகாரை, யான் ஓயா விகாரை, புடைவைக்கட்டு சாகர புர சுமுதுகிரி வன ஆசிரமம், புல்மோட்டை  ஸ்ரீ சத்தர்ம யுக்திக ஆசிரமம் ஆகிய நான்கு பௌத்த இடங்களும்  இவற்றோடு அம்பாறை பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முஹுது மகா விகாரை, ஆகிய விகாரைகள் கிழக்கு மாகாணத்தில் இலங்கையில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பௌத்த புனித இடங்களாக பிரகடனம் செய்யப்பட்டு பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

____-____-___________-________-05.jpg

____-____-___________-________-16.jpg

356150676_597412085839461_55620939937248

419648174_122147706434032426_57939502342

https://www.virakesari.lk/article/176901

யாழில் தயாரிக்கப்பட்ட கப்பல் வெள்ளோட்டம்!

2 months 3 weeks ago
200 பேர் பயணிக்கும் வகையில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட கப்பல் வெள்ளோட்டம்!
20 FEB, 2024 | 07:55 PM
image

இலங்கையின் தொழிநுட்ப, தொழில்முனைவோரின் ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில், மஹாசென் மரைன் தனது சமீபத்திய தயாரிப்பான Eco80 பாரிய பயணிகள் படகினை காரைநகர் படகு முற்றத்தில் இருந்து யாழ்ப்பாணம் கடற்பரப்பு களப்பில் செலுத்தி அறிமுகப்படுத்தியது.

80 அடி நீளமும், 30 அடி அகலமும், சுமார் 40 தொன் எடையும் கொண்ட இந்தக் கப்பல், ஒரே நேரத்தில் 200 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடியதாகவும், முழுமையாக குளிரூட்டப்பட்ட, சுகாதார வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. 

adadeqqer.gif

வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப உணவகம் அல்லது சொகுசு வசதிகளுடன் அமைக்கப்படக் கூடியதாகவுள்ளது. 

அனைத்து மின்சாரத் தேவைகளையும் 48 சோலர் பனல் மூலமாக பூர்த்தி செய்யக்கூடியதாக அமைந்துள்ளது. 

தெற்காசியாவில் வேகமான பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட பங்களாதேஷின் சுற்றுலாத் துறை தொடர்பான நிறுவனம் ஒன்றிற்காக மகாசென் மரைன் இந்த கப்பலை 06 மாத குறுகிய காலத்திற்குள் வடிவமைத்து தயாரித்துள்ளது.

sfte.gif

உள்ளூர் பொருளாதார நெருக்கடிக்கு சிறந்த தீர்வாக இந்த உற்பத்தித் திட்டத்தைத் தொடர்வது மிகவும் முக்கியமானதாக இருக்கும். 

நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வரும் சுற்றுலாத் துறையின் பன்முகத்தன்மை மற்றும் நவீனமயமாக்கலுக்கு இந்த அறிமுகம் மிகவும் முக்கியமானது என மஹாசென் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி அவந்த அதபத்து தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/176908

படகா? கப்பலா?!

இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்து வேலைவாய்ப்புகள் இல்லாது சிரமப்படும் மாணவர்களுடன் கிழக்கு ஆளுநர் கலந்துரையாடல்!

2 months 3 weeks ago

இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்து நாடு திரும்பி வேலைவாய்ப்புகள் இல்லாது சிரமப்படும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்துள்ள இந்த மாணவர்கள் அரசாங்க வேலை கிடைப்பதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவர்களது ஆவணங்களை Offer அமைப்பின் உதவியுடன் ஒழுங்குபடுத்த ஆலோசனைகளை ஆளுநர் வழங்கியுள்ளதுடன், திருப்பி அனுப்பப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் தலா 50000ரூபா ஒதுக்கீடும் செய்யவும் ஏற்பாடு செய்துள்ளார்.
 
1708412676526.jpg
 
1708412676562.jpg
 
1708412676589-2.jpg
 
1708412676516.jpg
Checked
Sun, 05/19/2024 - 00:35
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr