புதிய பதிவுகள்2

திசை ஒன்பது - எனது வாசிப்பு - பா. ரவீந்திரன்

2 weeks 1 day ago
திசை ஒன்பது - எனது வாசிப்பு பா. ரவீந்திரன் சயந்தனின் “திசை ஒன்பது” நாவல் கவனத்தை சிதறவிடாதபடி வாசித்துத் தீர்க்க வேண்டியிருந்த நாவலாக எனக்கு இருந்தது. ஒரு செறிவான ‘நேர்கோட்டின்மை’ (non-linear) கதைசொல்லல்தான் அதற்குக் காரணம். வாசிப்பை குழப்பத்தில் நிறுத்தி, வாசகர் புத்தகத்தை மூடிவைத்துவிடாதபடி, அந்தக் கதைசொல்லல் முறையை கட்டியமைப்பதில் எழுத்தாளர் அதிக சிரத்தை எடுத்திருப்பதாகத் தோன்றுகிறது. அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். அதனாலோ என்னவோ நூலின் ஆரம்ப அத்தியாயங்களில் எழுத்தாளரது எழுத்துக்குள் எள்ளல்கள் கிண்டல்கள் காணாமல் போய், பின்னர் அவை அவருக்கேயுரிய இயல்பான நடையாக வெளிப்படத் தொடங்கியிருப்பதாக எனது வாசிப்பில் தோன்றியது. அது அப்படியில்லை என இன்னொரு வாசகருக்குத் தோன்றலாம் என்பதையும் ஏற்றுக்கொண்டே எனது இந்த அவதானிப்பைச் சொல்கிறேன். எழுத்தாளனில்லாத ஓர் எழுத்தாளனாக கதையின் நாயகன் இளங்கோ வருகிறான். சிறுவயதில் அவன் எழுதிய கதை முயற்சிகள் கற்பனையோடு சேர்ந்து வளர்ச்சியடைந்து, இந்த நாவலுக்குள் ஒரு கிளைக் கதையாக அல்லது குறுநாவலாக இமையாவின் கதையை எழுதுவதில் ஊற்றெடுக்கிறது. இமையாவை சுவிசிலுள்ள சித்திரம் என்பவர் திருமணம் முடிக்க அழைத்துவிட்டு காத்திருப்பவர். அவளை எல்லைகள் தடுத்து நிறுத்துகின்றன. அலைக்கழிக்கின்றன. அச்சமூட்டுகின்றன. இமையாவை இளங்கோ உக்ரைனில் சந்திக்கிறான். இமையாவின் கதையைத் தொடங்குகிறான். இளங்கோவின் காதலி அமுதி யாழ்ப்பாணத்தில் அவனுக்காகக் காத்திருக்கிறாள். காதலன் சுவிசிலிருந்து தன்னைக் கூப்பிடுவான் என்ற கனவு அவளுக்கு. அவனையும் எல்லைகள் தொடர்ந்து ஏமாற்றுகின்றன. எல்லை கடத்தல்காரனாக தேவாரம் இருக்கிறார். இளங்கோவுக்கும் உக்ரைன்காரி ஹன்னாவுக்கும் இடையில் என்ன உறவு இருக்கிறது, அது எதுவாக மலர்ந்தது, இளங்கோ எங்கு போய்ச் சேர்ந்தான் என்பதெல்லாம் நாவலை வாசித்து அறியவேண்டியவை. மேற்குலகுப் புகலிட இலக்கியத்தில் எழுதப்பட்ட பல நாவல்களும் கவிதைகளும் கதைகளும் ஆரம்பகாலங்களில் மண்ணின் மீதான வாழ்வின் நினைவுகளையும் ஏக்கங்களையும் கொண்டிருந்ததற்கு ஒரு நியாயம் உண்டு. ஆனால் முப்பது நாற்பது வருடங்களாக தமது இளமைக் காலத்தையே புகலிடத்தில் ஒப்புக்கொடுத்து வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் அந்த வாழ்க்கையை எழுதியது குறைவானது என்றே சொல்ல முடியும். அதற்கான காரணங்கள் விரிவான கட்டுரை ஆக்கத்துக்கு உரியன. “திசை ஒன்பது” இந்த புகலிட வாழ்வை எல்லை கடத்தலிலிருந்து தொடங்கி, அந்தந்த நாடுகளில் எதிர்கொண்டவைகளையும், அலைக்கழிப்புகளையும், மனவுளைச்சல்களையும், அச் சூழல்களோடான தற்காலிகத் தகவமைதல்களையும் முன்வைக்கிறது. அகதிகள் எதிர்கொண்ட உண்மைகளை விட்டுவிலகி ஓடாத புனைவுகளால் எழுதிச் செல்கிறது. ஆப்கானிஸ்தான், எரித்திரியா, குர்திஸ்தான், ‘பலுசிஸ்தான்’, சிரியா என வேறு நாட்டு அகதிகளையும் அந்த வாழ்வு குறுக்கிட்டு கடக்க வைக்கிறது. “ஆக்கிரமிக்கப்பட்ட எல்லா நிலங்களுக்கும் ஒரு மொழிதானே” என்ற கதைசொல்லியின் கூற்றுக்கான ஊற்று இங்கிருந்துதான் பிறக்கிறது. சிரிய அகதி கூறியதுபோல “ அறிவுதான் வெளிச்சம். அந்த வெளிச்சத்துக்குப் பயந்தவர்கள் அவரை (தந்தையை) கொன்றனர்” என்பதையும் மேற்சொன்னதுடன் பொருத்திப் பார்க்க முடியும். அத்தோடு, இலங்கையிலிருந்து துரத்திய போரும் இந்த மற்ற நாட்டு அகதிகளைத் துரத்திய போர்களும், இளங்கோவை திரும்பவும் துரத்திய உக்ரைன் போரும் ஒரே மொழியைத்தான் பேசுகின்றன. மனித விழுமியங்களின் தளத்தில் இந்த எடுத்துரைப்புகள் இலக்கிய அழகியலாக இந் நாவலில் வந்தமர்கின்றன. எல்லை கடத்தல் என்பது ஒப்பீட்டு ரீதியில் எண்பதுகளைப் போல் தொண்ணூறுகளில் சுலபமாக இருக்கவில்லை. தொண்ணூறுகளைப் போல் மிலேனியத்துக்குப் பிறகான காலங்களில் சுலபமாக இருக்கவில்லை. இதுவும் உலக அகதிகளுக்கு பொதுவான ஒன்றுதான். நாடே அகதிகளாக பெருக்கெடுத்ததுபோல் சிரிய அகதிகள் கிரேக்கம், துருக்கி என எல்லைகளை தாண்டப் புறப்பட்டு மாதக் கணக்கில் நடந்த கொடுந் துயரமெல்லாம் ஐரோப்பிய தொலைக்காட்சிகளை நிரப்பி பெருக்கெடுத்த செய்திகள். ஆபிரிக்க அகதிகள் பாலைவனப் பயணத்தில் மட்டுமல்ல, இத்தாலியை நோக்கி காலாவதியான படகுகளிலும் கப்பல்களிலும் கடல்தாண்டப் பறப்பட்டு, கவிழ்ந்து கொட்டுண்டு நூற்றுக் கணக்கில் ஒரே நேரத்தில் செத்துமடிந்த துயரங்கள் சொல்லி மாளாதவை. இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தளவில் குளிர் தின்று ஆறுகளில் பலியானோர், எல்லை தாண்ட அவர்களைக் கடத்திவந்த பவுசர்களுக்குள் அதன் மூடி மூடுண்டு மூச்சுத் திணறிப் பலியானோர், கைதாகி திருப்பி அனுப்பப்பட்டோர், கைதாகி சிறைசென்றோர், இடைத்தங்கல் நாடுகளில் நிரந்தரமாக தங்கவேண்டி வந்தோர், மாதக் கணக்காக, வருடக் கணக்காக என காலங்களைத் தின்று தீர்த்த இடைத்தங்கல்கள் என எல்லை கடப்பில் பல வாழ்க்கைச் சிதைப்புகள் நடந்திருக்கின்றன. இதில் சிலவற்றையாவது சொல்ல எத்தனித்திருக்கும் “திசை ஒன்பது” முக்கியமான நாவல்தான். சூழல்தான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்பதன் ஒரு சாட்சியாக “திசை ஒன்பது” நாவலின் பாத்திரங்கள் இருக்கின்றன. அதை ஆசிரியர் காலமும் தூரமும் தீர்மானிக்கின்றன என இன்னொரு பரிணாமத்தில் சொல்கிறார். இளங்கோவினூடாக ஆசிரியர் பேசும் கொசுறுத் தத்துவத்தைவிட, அவர் உருவாக்கியிருக்கும் பாத்திரக் கட்டமைப்புகள் ஒரு சமூகவியல் மற்றும் உளவியல் தளங்களில் நன்றாகவே பேசியிருக்கின்றன. எல்லை கடத்தும் வேலையில் பழம் தின்று கொட்டை போடத் தொடங்கிய தமிழர்களின் ஏமாற்று மொழிகளும் குழைவும் பசப்புகளும் தேவாரத்தினூடாக வெளிப்படுகிறது. இந்தக் கதைசொல்லலுக்குள் சமூக ஊடகங்களின் தாக்கமும் இருக்கிறது. அது தீண்டாமைக்கு உரியதல்ல. மாறாக அது நவீன வாழ்வோடு பிணைந்தது. உலகத்தை நொடிகளில் வைத்து, இற்றைப்படுத்துகிற தகவல்களையும் அறிவு உருவாக்கத்தையும் செழுமைப்படுத்தலையும், அதேநேரம் அதை பகுத்துணர வேண்டிய சவாலையும் மூளைக்கு எடுத்துச் செல்லும் நிகழ்த்துதலை அவை செய்கின்றன. அது நம்மை, நமது வாழ்வை பின்தொடர்கிறது. உக்ரைன் போர் இளங்கோவை நிலக்கீழ் பாதுகாப்பு அறைக்குள் துரத்திவிடுகிறபோது, ஒரு மூடுண்ட உலகம் உருவாகிறது. அந்த உலகத்தை துளைபோட்டு வருகின்றன தமிழ்யூரியூப் செய்திகள். கிசே துரையின் விண்ணாணச் செய்திகள் மூன்று நாளில் உக்ரைன் ரசியாவிடம் வீழ்ந்துவிடும் என அரசியல் ஆடையை அவிழ்த்துப் போட்டுவிட்டு உள்ளே வருகிறபோதும், அது சில தகவல்களையாவது அந்த குகைக்குள் வெளிச்சமாகத் தரவே செய்கிறது. அதை ஆசிரியர் எள்ளலாகச் சொல்லியிருப்பது இந்த முரண்களில் நன்றாக பொருந்திப் போகிறது. அதேபோல் இன்னொரு இடத்தில் “பன்றிக் குட்டிகள் போல் ஒவ்வொரு தை மாதமும் நாவல் எழுத முடியாது” என்ற எள்ளலும் இலக்கியத் தளத்தில் வைத்து ஒரு செய்தியை சொல்லவே செய்கிறது. “சுவிஸ் அண்ணை கட்டிய பதினாறு கோடி மாளிகை” என்பதும் பவுசின் மீதான எள்ளலாக இருக்கிறபோதும்கூட, ஒரு மாயைநிலை வாழ்வின் மீதான செய்தியை ஒவ்வாமையை சொல்லவே செய்கிறது. சயந்தனின் எள்ளலுடன் கூடிய மொழியாளுகையை குறிப்பிடாமல் செல்ல முடியாது. ஒரு ‘நேர்கோட்டின்மைக்’ கதையை செறிவாக பாத்திரங்களினூடாகக் கட்டமைப்பதில் கொண்டிருந்த அவதானத்தையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது. புகலிட இலக்கியத்தின் பேசப்பட வேண்டிய இன்னொரு களத்துள் (அதாவது எல்லை கடப்பதின் துயரக் களத்துள்) இந்தக் கதைசொல்லலை தேர்வுசெய்தது குறித்து குறிப்பிடாமல் இருக்க முடியாது. அதேநேரம் சில கொசுறு அரசியல் கருத்துகளும், வாழ்க்கைத் தத்தவங்களும், தலைவரின் மரணம் பற்றிய வலிந்த கதையாடலும், “வேசைப் பொம்பிளை” என்ற ஆணாதிக்கச் சொல்லாடலும் எனது வாசிப்பில் இடறவே செய்தன. அதேபோல் அத்தியாயங்களுக்கான (ஆங்கில எழுத்து) தலைப்புகள் இன்னும் எனது அறிதல் எல்லைக்குள் பிடிபடாதவையாக இப்போதும் இருக்கின்றன. அந்த புரியாமையானது அவற்றை கவனிக்காமல் கடக்கும் மனநிலையோடு வாசிப்பை நிகழ்த்தவே செய்தன என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். இந்த நாவலின் எந்தப் பாத்திரத்தோடும் ஒன்றித்துச் செல்லும் மனநிலையோ அனுபவமோ எனக்கு வாய்க்கவில்லை. (மற்றவர்களுக்கும் அப்படி இருக்கும் என்பதல்ல அதன் அர்த்தம்). அதனால் எனது வாசிப்பு “தூரப்படுத்தல்” என்ற கலைக் கோட்பாட்டு நிலையில் நின்றே நிகழ்ந்தது. அதாவது மூன்றாவது மனிதனாக வெளியில் நின்று அவதானிப்பது, புரிந்துகொள்வது என்பது பொருளாகும். ஒரு கருத்து நிலைக்குள் அல்லது உணர்ச்சிசார் நிலைக்குள் அல்லது அமைப்புசார் நிலைக்குள் வைத்து அகநிலையாக புரிந்துகொள்ள முயற்சிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், “தூரப்படுத்தல்” என்ற புறநிலையிலும் நின்று அவதானிக்கிறபோது, பல பரிமாணங்கள் உருவாகும். நியாயப்படுத்தல் அல்லது சார்புநிலை தகரும். கட்டுடைப்பு நிகழும். புதிய வெளிச்சங்களை அறிவு தரிசிக்கும். இந்த நாவல் வாசிப்பு என்னளவில் இவ்வாறே நிகழ்ந்தது. “திசை ஒன்பது” புகலிட இலக்கியத்தில் ஒரு முக்கியமான நாவல்தான் என்பதை சொல்ல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. https://sudumanal.com/2026/02/13/திசை-ஒன்பது/

தமிழரசுத் தீர்மானங்களை விமர்சித்தால் நடவடிக்கை; கட்சி உறுப்பினர்களுக்கு செயலாளர் அறிவுறுத்தல்!

2 weeks 1 day ago
தமிழரசுத் தீர்மானங்களை விமர்சித்தால் நடவடிக்கை; கட்சி உறுப்பினர்களுக்கு செயலாளர் அறிவுறுத்தல்! “இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முடிவுகள், தீர்மானங்களைப் பகிரங்க வெளியில் விமர்சிக்கின்ற கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதை கட்சி உறுப்பினர்களும் பிரமுகர்களும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தி இருக்கின்றார். கட்சியின் தீர்மானங்களை விமர்சிப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் கட்சி உறுப்பினர்களுக்குத் தமிழரசுக் கட்சியின் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் தெரியப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், அனைத்து முறைப்பாடுகள் சம்பந்தமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாய தேவை இருப்பதினால், மேலும் எவரையும் சங்கடத்திற்கு உட்படுத்தாமல் நடந்து கொள்ளுமாறு கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்று தவிசாளர்களைக் கேட்டிருக்கின்றார். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு இது பற்றிய தகவல்களை அவர் வழங்கியிருக்கின்றார் எனத் தெரிகின்றது. கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் ஆலோசையின் அடிப்படையில் இந்த அறிவுறுத்தலை அவர் தெரியப்படுத்தி இருக்கின்றார் என அறியவந்தது. https://akkinikkunchu.com/359979/

புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!

2 weeks 1 day ago
அது புலிகாசும் இல்லை புளொட் காசும் இல்லை அடித்தது அப்பாவி தமிழர்கள் காசு ஆனால் அதை இலங்கை அரசு அனுபவிக்க இல்லை தானே சில தமிழர்கள் அதை அனுபவித்து மில்லியனர்களாக இருக்கட்டுமே என்ற ஆபத்தான போக்கும் நிலவுகின்றது.

ஆணுறைகள் தீர்ந்ததால் குளிர்கால ஒலிம்பிக் வீரர்கள் நெருக்கடியில்

2 weeks 1 day ago
ஒலிம்பிக் விளையாடப் போற ஆட்கள்... கட்டில் விளையாட்டிலும் ஈடுபடுகிறார்களோ... ஹ்ம்ம்..... நடக்கட்டும்.

பங்களாதேஷ் பிரதமராக தாரிக் ரஹ்மான் ! – அமெரிக்கா, இந்தியா வாழ்த்து

2 weeks 1 day ago
பங்களாதேஷ் பிரதமராக தாரிக் ரஹ்மான் ! – அமெரிக்கா, இந்தியா வாழ்த்து 14 Feb, 2026 | 12:20 PM பங்களாதேஷில் நடைபெற்ற 13 ஆவது பொதுத்தேர்தலில், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் கட்சித் தலைவர் தாரிக் ரஹ்மான் நாட்டின் அடுத்த பிரதமராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பின்னணி கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் மாணவர் போராட்டங்களின் காரணமாக அந்நாட்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. அதன் பின்னர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அதன்பின் சுமார் 18 மாதங்கள் கழித்து புதிய அரசை தேர்ந்தெடுக்க பொதுத்தேர்தல் நடைபெற்றது. இது பங்களாதேஷின் 13வது பொதுத்தேர்தலாகும். 300 இடங்களில் 200-க்கும் மேற்பட்ட இடங்கள் கைப்பற்றல் 300 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில், பி.என்.பி கூட்டணிக்கும் அதன் முன்னாள் கூட்டுக் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. 17 ஆண்டுகளாக வெளிநாட்டில் வசித்துவந்த தாரிக் ரஹ்மான் அண்மையில் பங்களாஷே் திரும்பியிருந்தார். அவர் முன்னாள் பிரதமர் கலீதா ஷியாவின் மகனாவார். அமெரிக்கா வாழ்த்து பங்களாதேஷில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலில் வெற்றி பெற்ற பி.என்.பி கட்சிக்கும் அதன் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில், “பங்களாதேஷ் நாடாளுமன்றத் தேர்தலில் பி.என்.பி கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற தாரிக் ரஹ்மானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்த வெற்றி உங்கள் தலைமையின் மீது பங்களாதேஷ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. ஜனநாயக ரீதியான மற்றும் முற்போக்கான பங்களாதேஷிற்கு இந்தியாவின் ஆதரவு என்றும் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகளை வலுப்படுத்த புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிராந்திய அரசியல் மாற்றங்களுக்கு முக்கிய தேர்தல் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததையடுத்து நடைபெற்ற இந்தத் தேர்தல், பங்களாதேஷின் அரசியல் எதிர்காலத்தையும் பிராந்திய அரசியல் சமநிலையையும் தீர்மானிக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பி.என்.பி கூட்டணியின் வெற்றி, அந்நாட்டின் அரசியல் நிலைப்பாட்டில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/238636

தலங்கம -அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு!

2 weeks 1 day ago
தலங்கம -அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு! தலங்கம -அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், கார் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளனர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குறித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1464739 #################### ############################ அக்குரேகொட கொலை: 10 பொலிஸ் குழுக்கள் விசாரணைக்கு. அக்குரேகொடவில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகள் உள்ளடங்களாக 10 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தலங்கம, அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முன்னால் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் நேற்று பிற்பகல் சுட்டுக்கொல்லப்பட்டனர். குறித்த சட்டத்தரணி ‘கரன்தெனிய சுத்த’ என்ற குற்றவாளியின் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையானவர் என பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், தனது கட்சிக்காரரின் தகவல்களை ‘லொகு பெட்டி’ என்ற குற்றவாளி தலைமையிலான குழுவிற்கு வழங்கிய காரணத்தினால், கரன்தெனிய சுத்தவினால் இந்தத் துப்பாக்கிச் சூடு வழிநடத்தப்பட்டிருக்கலாம் என பாதுகாப்புப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர். அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டியில் இருந்த தம்பதியினரை இலக்கு வைத்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கார் ஒன்றில் வந்த குழுவினர் ரி-56 ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி சுமார் 10 தடவைகள் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் கூறினர். இதில் வாகனத்தில் இருந்த தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் பிடிகல பகுதியைச் சேர்ந்த மல்வாரச்சி எனும் சட்டத்தரணியும் அவரது மனைவியும் ஆவர். https://athavannews.com/2026/1464783

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 1 day ago
ஒரு வர்ணணையாளருக்குரிய ஆழத்துடன், மிக நேர்த்தியான அலசல். 1996 வட்மோர் இலங்கை அணியில் ஏற்படுத்திய மாற்றம் போல இது இருக்கிறது. ஆனால் ஒரு போட்டியை வைத்து சொல்ல முடியாது. Consistency இருக்குமா ? இது கடவுளுக்கே நடந்த பிறகுதான் தெரியுமாம்😂 நல்ல விடயம்தான் அண்ணை. வழமையாக எங்காத்துகாரரும் கோர்ட்டுக்கு போறார் என போட்டிக்கு வரும் சிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் போன்ற full members உம் இந்த முறை உத்வேகமாக விளையாடுகிறார்கள். 20 இல் கடைசி 12 நாடுகள் தமக்குள் அடிக்கடி விளையாட வேண்டும்.

“ஈரானில் அதிகார மாற்றம் ஒரு நல்ல விடயமாக இருக்கலாம்” : மேலும் ஒரு போர்க்கப்பலை அனுப்ப டிரம்ப் உத்தரவு

2 weeks 1 day ago
“ஈரானில் அதிகார மாற்றம் ஒரு நல்ல விடயமாக இருக்கலாம்” : மேலும் ஒரு போர்க்கப்பலை அனுப்ப டிரம்ப் உத்தரவு 14 Feb, 2026 | 01:04 PM அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது. அணுசக்தி தொடர்பான ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், அந்நாட்டுக்கு அருகே அமெரிக்காவின் சக்திவாய்ந்த கடற்படை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் அப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அணுசக்தி தொடர்பான விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும், இதுவரை எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஒரு போர்க்கப்பல் பதற்ற நிலை அதிகரித்துள்ள சூழலில், அமெரிக்கா மேலும் ஒரு முன்னணி போர்க்கப்பலான யு.எஸ்.எஸ் ஜெரால்ட் ஆர். போர்ட் கப்பலை ஈரானை நோக்கி அனுப்ப ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் ராணுவ முன்னிலையை அதிகரிக்கும் வகையில் பார்க்கப்படுகிறது. டிரம்பின் எச்சரிக்கை இதுகுறித்து ஊடகவியலாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனியின் ஆட்சியை மாற்றும் முயற்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டுமா வேண்டாமா என்பதை தீர்மானிக்கும் சூழலில், அந்நாட்டில் ஆட்சி, அதிகார மாற்றம் ஒரு நல்ல விடயமாக இருக்கலாம்” எனக் குறிப்பிட்டார். “அவர்கள் 47 ஆண்டுகளாக பேசி கொண்டே இருக்கிறார்கள். எங்களுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டவில்லை என்றால், அமெரிக்காவுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மிக விரைவில் அமெரிக்காவின் இரண்டாவது போர்க்கப்பலும் ஈரானை நோக்கி புறப்படும்,” எனவும் அவர் தெரிவித்தார். சர்வதேச கவலை இந்த முன்னேற்றங்கள், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்கக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளன. அமெரிக்கா–ஈரான் உறவில் ஏற்பட்டுள்ள இந்த புதிய திருப்பம், உலக அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது https://www.virakesari.lk/article/238640

புடினுடனான தொடர்பை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் ஐரோப்பிய தலைவர்களை ஈடுபடுத்துவதாக மக்ரோன் கூறுகிறார். Olha Kovalchuk, Anastasia Protz - 10 பிப்ரவரி, 15:00

2 weeks 1 day ago
ஆயுத மயமாக்கல் ஜேர்மனி விரும்பாத ஆனால் அதன் மீது திணிக்கப்படும் ஒன்று. நீங்கள் விரும்பியது போலவே அமெரிக்கா ஐரோப்பாவை விட்டு விலகி விட்டது. ஆனாலும் ஐரோப்பா-ரஸ்யா முரண் தீரவில்லை. காரணம் - இந்த முரணின் அடிப்படை நான் முன்பே சொன்னது போல் அமெரிக்கா அல்ல,மாறாக ரஸ்யாவின் நில-வெறி. நேற்று மேர்ஸ் சொன்னதை கேட்டிருப்பீர்கள், 1991 இன் பின்னான ஒற்றை தலைமை நிலையும், 2ம் உலக யுத்ததின் பின்னான உலக ஒழுங்கும் இப்போ இல்லை. இந்த நிலையில் வளமிகு நாடான ஜேர்மனி ஆயுத படைகள் இல்லாமல் இருந்தால் சூறையாடப்படும். AfD யின் எழுச்சியும் ஜேர்மனியின் ஆயுத மயமாக்கலும் ஒரு சேர நிகழ்வது ஆபத்தானது என்பதில் எனக்கும் வேறு கருத்தில்லை. நான் “புட்டினும் புதுமாத்தளனும்” எழுதிய போது இப்படி ஒரு நிலை வராது எள்ளி நகையாடியவர்களை இப்போ யதார்த்தம் முகத்தில் அறைக்கிறது என நினைக்கிறேன். அமெரிக்கா தலைமையிலான ஒற்றை உலக ஒழுங்கு உடைந்தால் அதன் பலாபலன்களில் ஒன்று ஆயுத மயப்பட்ட ஜேர்மனி AfD கைக்கு போவதாக இருக்கலாம் என நான் பலதடவை எச்சரித்தேன். ஆனால் என்னை அமெரிக்காவின் அடிவருடி என முத்திரை குத்துவதிலேயே பலரின் கவனம் இருந்தது. “Be careful what you wish for, you just might get it". நீங்கள் வேண்டுவது எது என்பதில் மிக கவனமாக இருங்கள், வேண்டுதல்கள் பலித்து விடக்கூடும்.

ஜே.வி.பி - இந்தியா நெருக்கம்: மாகாணசபைத் தேர்தல் குறித்து ஜெய்சங்கருடன் ஆலோசனை

2 weeks 1 day ago
ஜே.வி.பி - இந்தியா நெருக்கம்: மாகாணசபைத் தேர்தல் குறித்து ஜெய்சங்கருடன் ஆலோசனை 14 February 2026 ஜே.வி.பி. தலைவர்களின் இந்தியப் பயணம், இலங்கையின் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இந்தியா கொண்டுள்ள நெருக்கமான உறவை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா இந்தியாவுக்கு தமது முதலாவது அதிகாரப்பூர்வப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தார். இந்திய கலாசார உறவுகளுக்கான நிலையத்தின் அழைப்பின் பேரில் கடந்த 05ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை அவரின் இந்த இந்திய விஜயம் அமைந்திருந்தது. இதன்போது, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பவன் கபூர் ஆகியோரை டில்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின் போது, 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் மற்றும் அதன் அடிப்படையில் இலங்கையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக அரசியல் தரப்புகள் தெரிவிக்கின்றன. இது இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலில் மிக முக்கியமான நகர்வாகும் என குறிப்பிடப்படுகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நலத்திட்டங்கள் குறித்து இதன்போது ஆலோசிக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அயலவருக்கு முதலிடம்' மற்றும் 'மஹாசாகர்' தொலைநோக்குப் பார்வையின் கீழ் இலங்கைக்கான இந்தியாவின் ஆதரவு இங்கு உறுதிப்படுத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது. https://hirunews.lk/tm/446337/jvp-india-rapprochement-consultations-with-jaishankar-on-provincial-council-elections

ஆணுறைகள் தீர்ந்ததால் குளிர்கால ஒலிம்பிக் வீரர்கள் நெருக்கடியில்

2 weeks 1 day ago
ஆணுறைகள் தீர்ந்ததால் குளிர்கால ஒலிம்பிக் வீரர்கள் நெருக்கடியில் 14 February 2026 இத்தாலியில் நடைபெற்று வரும் 2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி சில நாட்களிலேயே, வீரர்களின் குடியிருப்பில் வழங்கப்பட்ட இலவச ஆணுறைகள் தீர்ந்துப்போனதால் எதிர்பாராத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. போட்டிகள் ஆரம்பமான மூன்று நாட்களிலேயே ஏற்பாட்டாளர்களால் வழங்கப்பட்ட 10,000 பொதிகள் முழுமையாகத் தீர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் தமக்குத் தேவையான விநியோகம் இல்லை என வீரர்கள் முறைப்பாடு அளிக்கத் தொடங்கியுள்ளனர். "மூன்றே நாட்களில் இருப்பு முடிந்துவிட்டது. மேலதிக கையிருப்புகள் வரும் என உறுதியளித்துள்ளனர், ஆனால் அது எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது" என பெயர் குறிப்பிட விரும்பாத வீரர் ஒருவர் இத்தாலிய ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். கடந்த பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் போது ஒரு வீரருக்கு ஒரு நாளைக்கு இரண்டு வீதம் மொத்தம் 300,000 ஆணுறைகள் வழங்கப்பட்டன. ஆனால், இந்த குளிர்கால ஒலிம்பிக்கில் 10,000 க்கும் குறைவான எண்ணிக்கையே ஒதுக்கப்பட்டிருந்தது. இவ்வளவு அதிகப்படியான தேவை ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணிக்கத் தவறிய ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு, தற்போது மேலதிக விநியோகத்தைப் பெற்றுக்கொடுக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. https://hirunews.lk/tm/446352/players-in-crisis-as-condoms-run-out

அதிசயக்குதிரை

2 weeks 1 day ago
pootedsrnSum5lctli873fhm1i2729aagt u7ac2i5l7g4190cci97ua02l6 · தமிழக அரசு - நடிகை வைஜெயந்தி மாலாவுக்கு ரூ.1,000-மும், மதுரை சோமுவுக்கு ரூ.1,000-மும் மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, நேர்மையின் சிகரமாகவே வாழ்ந்து, வறுமையில் வாடிக்கொண்டிருந்த கக்கன் அவர்களுக்கு மாதம் ரூ.500 மட்டுமே நிதி உதவி வழங்கியது. சிவாஜி கணேசன் தன் கழுத்தில் இருந்த 10 பவுன் தங்கச் சங்கிலியை கக்கனுக்கு அளித்ததுடன், சேலம் நேரு கலையரங்கில் ‘தங்கப்பதக்கம்’ நாடகம் நடித்து கிடைத்த தொகை முழுவதையும் கக்கனுக்கு நிதியாக வழங்கினார். அந்த அரிய புகைப்படம் இதுதான். முகநூல் பதிவு -பிரசாந்த் ......!

புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!

2 weeks 1 day ago
புலிக்காசை கொள்ளை அடித்தீர்கள் என உங்களை நான் ஒரு போதும் நேரடியக சொன்னதில்லை. சில சமயம் நான் சொன்னதை பிழையாக விளங்கி தொப்பியை எடுத்து போட்டு கொண்டீர்களோ தெரியாது. காசை அடிப்பது சுலபம் அல்ல. அதற்கு கள்ளனாக மட்டும் அல்ல… கெட்டிகாரனாகவும் இருக்க வேண்டும்.

கல்வி பயிலும் மொழி பாகுபாடு : ஆங்கில மீடியம் vs தமிழ் மீடியம்

2 weeks 1 day ago
யாழ்ப்பாணத்தில, கல்வி முறையில ஒரு விசித்திரமான மனப்பாங்கு வேரூன்றி பெருமரமாக வளர்ந்து வாறதை நான் அவதானிக்கிறன். என்னை போல நீங்களும் அவதானிச்சிருக்கலாம். அது என்னெண்டா, ஆங்கில ஊடகத்தில படிக்கிறது மேதாவிலாசத்தின்ர அடையாளம் எண்டும் தாய்மொழியில படிக்கிறது ஒருவித பின்தங்கிய நிலை என்றும் ஒரு மாயையான நினைப்பு. இந்த நினைப்பு மாணவர்கள் மத்தியில மட்டுமில்லாமல், சமூகத்தின்ர வழிகாட்டிகளாக இருக்கிற ஆசிரியர்கள் மத்தியிலும் ஆழ ஊடுருவியிருப்பது கவலையாக இருக்கு. சிந்திக்கிற மொழியில படிக்கிறது தான் அறிவை வினைத்திறனோட உள்வாங்க உதவும் எண்டதால என்ர இரண்டு பிள்ளைகளையும் தாய்மொழி மூலமாக தான் கல்வி கற்க தெரிவு செய்தன். பிள்ளைகளும் அதை விரும்பி ஏற்றுக் கொண்டார்கள். மொழிமூலத் தெரிவு எண்டது எங்கட தனிப்பட்ட விருப்பே தவிர அது பிறப்புடன் வந்த அறிவு வெளிப்பாடு இல்லை. அது மாணவர்களை மேல் கீழ் இடங்களில் வைப்பதற்கான அனுமதிச் சீட்டும் இல்லை. ஆசிரியர்களின் இந்த பாகுபாடான அணுகுமுறையால, பாவம் ஆங்கிலமொழி மூலமாக கல்வி கற்கும் மாணவர்களும் தங்களுக்கு பின்னால ஒரு கண்ணுக்குத் தெரியாத ஒளிவட்டம் இருக்குதெண்டு நம்பினம். அந்த நம்பிக்கையை தங்கட நடத்தையிலும் காட்டினம். தமிழ் மீடிய மாணவர்களோடு ஒட்டி உறவாடும் தன்மையை வலிந்து நிறுத்துகின்றார்கள் ( விதிவிலக்கான பிள்ளைகளும் இருக்கினம்) இது ஒருவிதமான சாதீய மனநிலையை பள்ளிக்கூடங்களில, ரியூசனுகளில உருவாக்குது. "நீங்கள் எவடம்?" எண்ட கேள்விக்கும் "நீங்கள் எந்த மீடியம்?" எண்டிற கேள்விக்கும் பின்னால இருக்கிற மனநிலை ஒண்டு தான். மகள் தன்ர பத்தாம் வகுப்பில ஆங்கில இலக்கியத்தை ஒரு விருப்புக்குரிய தொகுதிப்பாடமாக தெரிவு செய்தாள். அதற்கான தனியார் வகுப்புக்கு ஆசிரியை ஒருவரிடம் அனுமதி எடுக்க செல்லும் போது, அவர் நடத்திய "நேர்முகத்தேர்வில்" என்னிடம் கேட்ட கேள்வி "இவ எந்த மீடியம்?". தமிழ் எண்டதும், ஆசிரியையின் முகம் மாறி, "தமிழ்மீடிய பிள்ளைகள் இந்த பாடத்துக்கு கஷ்டப்படுவினம்" எண்டு ஒரே போடாக போட்டார். "இல்லை... இவ A எடுப்பா " எண்டு சிரித்தபடியே தான் சொன்னேன். அதை விட இன்னொரு படி மேல போய் ஒரு ஆசிரியப்பெருந்தகை சொல்லி இருக்கிறார், "இது சரியான கஷ்டமான பேப்பர் தான். இங்கிலீஷ் மீடிய பிள்ளைகளே இந்த கேள்விக்கு சரியா ஆன்ஸர் எழுதேல்ல" இதில பகிடி என்னெண்டா அவர் சொன்னது வரலாற்று சோதினை பேப்பரை. அவரும் படிப்பிக்கிறது வரலாறு தான். பாவம் வரலாறு அவருக்கு வழிகாட்டேல்ல 😜 இந்த மாயையான மனநிலை எங்க வரை கொண்டு வந்து விடுகின்றது என்றால், கற்பித்தலுக்கான ஆசிரிய வளங்களை வகுப்புகளிடையே பிரித்தளிக்கும் போது, ஆங்கில மொழிமூலமான வகுப்புகளுக்கு திறன் கூடிய ஆசிரியர்கள் வழங்கப்படுவது வரை. இரண்டாம் தர பிரஜைகளாக தமிழ் மொழிமூலமான வகுப்புகளும் பிள்ளைகளும் அணுகப்படுகின்றமை அனேகமான பாடசாலைகளில் தூலமாக அவதானிக்க முடிகின்றதை பலர் கூற கேட்டிருக்கிறேன். இதுக்கு என்ன வழி என்று கல்விசார் உளவியலாளர்கள் ஒரு ஆய்வை நடத்தி அதற்கான பரிந்துரையை மிக நிச்சயமாக கொடுக்க வேண்டும். அவை ஆய்வு செய்ய முதல், A/L க்கு வந்து பௌதீகவியலுக்கு ரியூசனுக்கு போகும் போது குமரன் சேர் செய்தது தான் thug life. 😜 "நீ இங்கிலீஷ் மீடியமோ தமிழ் மீடியமோ என்னவாவெண்டாலும் இரு. இப்ப தலையங்கம் போடு, திருகாணி நுண்மானியில் பூச்சியவழு" சமரசம் உலாவும் இடம் இப்ப அவற்ர ரியூசன் தான் 😜 https://www.facebook.com/share/18K5RsDhag/?mibextid=wwXIfr

புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!

2 weeks 1 day ago
மேலதிக தகவலுக்கு நன்றி. புலிக்காசை கொள்ளை அடித்தவர்கள் யார் என்பதை அவர்களே வாயை கொடுத்து வெளிகொண்டு வந்துள்ளார்கள்😂.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 1 day ago
இம்முறை பிள்ளைப்பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைத்து விட்டது ........அவை சிங்கம் , புலி , கரடி என்று ஒன்றையும் விடாமல் கடித்துக் குதறுகின்றன . ........!

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

2 weeks 1 day ago
இங்கே அனுரவை யாரும் நீதிபதி வேலை செய்ய சொல்லவில்லை. மாறாக பொலிஸ் ஒரு அரச அமைப்பு. அரசாங்கத்தின் தலைவர் என்ற வகையில் பொலிஸ் நடவைக்கையை விசாரிக்க அனுரவுக்கு முடியும். ஏனைய கொலைகளுக்கும், பொலிஸ் செய்யும் கொலைகளுக்கும் வித்தியாசம் உண்டு. என்ன உண்மை வெளி வந்தது? நீங்கள் மேலே பத்தி பத்தியாக, அதாம் இதாம் என்று அனுரவுக்கு கவர் எடுத்ததை தவிர இங்கே எந்த உண்மையும் வெளிவரவில்லை. தனது இருப்பை தக்க வைக்க, பொலிஸ் அராஜகத்தை நம்பி இருக்கும் இன்னொரு அரசியல்வாதிதான் அனுர.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 1 day ago
ஒருத்தரும் அதிகூடிய ஓட்டங்கள் எடுக்கும் அணி அயர்லாந்து எனத் தெரிவு செய்யவில்லை. இந்தியா நமீபியாவுடன் கிடைத்த சந்தர்ப்பத்தை வீணடித்துவிட்டதால் பலருக்கு புள்ளிகள் கிடைக்க வாய்ப்பில்லை!
Checked
Sun, 03/01/2026 - 11:11
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed