2 weeks 1 day ago
இங்கு எந்த எந்தக் குறூப் யாரை கொலை செய்தது என்பதற்கோ ஏன் கொலை செய்தார்கள் என்பதற்கோ எவராலும் விடை காண முடியாது. ஆனால் எனது கேள்வி என்ன வென்றால் ஒரு குடும்பத்தில் நடந்த கொடூரக் கொலையை எமது மக்களில் பெரும்பாலோனோர் கொண்டாடும் , ஆதரவாகக் கருத்திடும் மனநிலையை எங்கிருந்து பெற்றார்கள் என்பதை தான். இது நடந்தது ஏதோ நீண்ட காலத்துக்கு முன்பு அல்ல. சமீபத்தில் தான் என்பதால் தான் இந்தக் கேள்வி எழுந்தது.
2 weeks 1 day ago
தரமான கேள்வி. பிடிக்காத பெண்டாட்டி, கால் பட்டா குத்தம். கை பட்டா குத்தம். 😉
2 weeks 1 day ago
😄😄😄😄.............
2 weeks 1 day ago
ரபாடாவின் பந்து வீச்சு முன்பு போல் இல்லை அவரின் பந்துக்கு எப்பவும் இந்திய மைதானங்களில் அடி தான்................
2 weeks 1 day ago
பிரதி முதமைச்சர் ...முதலமைச்சராக வர என்னுடைய முற்கூட்டிய வாழ்த்துக்கள்
2 weeks 1 day ago
ஒரு முடிவோடதான் இருக்கிறியள்🤣, இன்றைய போட்டியில் தென்னாபிரிக்க அணியில் ரபாடா விளையாடுகிறாரா?
2 weeks 1 day ago
சாரே சிலறறை இல்லை ...கடையால் வந்து போட்டுக்கிறேன்....
2 weeks 1 day ago
உக்ரேனுக்கு எரிவலு உதவியை செய்ய ஒத்து கொண்ட சீனா! உக்ரேன், சீனா வெளிநாட்டமைச்சர்கள் முனிச் மாநாட்டில் பேச்சுவார்த்தை. # நீ கொஞ்சம் அங்க பாரு கண்ணா # கோமாளி #ராஜதந்திரி
2 weeks 1 day ago
https://x.com/visegrad24/status/2022311893281440038?s=46
2 weeks 1 day ago
வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : உருகி உருகி போனதடி என் உள்ளம் யான் நீயே குறுகி குறுகி போனதடி என் எண்ணம் யான் நீயே ஆண் : நீ இன்றி மூடுமே என் வானம் நீதானே காதலே என்னாளும் ஆண் : யாழோ மூரலோ தேனோ பேசும் நேரமோ பாலோ… பாதமோ… ஆடை காலின் நிகலோ ஆண் : கரைகளில் கரையும் வெண்ணுறை கடைத்திடும் மொழிகளா விழிகளின் வளையல் வானவில் நிறங்களே காதலே ஆண் : நீ இன்றி மூடுமே என் வானம் நீதானே காதலே என்னாளும் .........! --- உருகி உருகி போனதடி ---
2 weeks 1 day ago
வெற்றி பெற்ற மாமனுக்கு .......... சரோஜாதேவி & T. K ராமச்சந்திரன் .......! 😍
2 weeks 1 day ago
சொன்னமாரி செய்திட்டியல் என்ன? நாளைக்கு சவுத் ஆபிரிக்கா உங்களை பதிய விட்டு கிளப்பும் எண்டு ஜக்கம்மா சொல்றா😂
2 weeks 1 day ago
87-90 இல் பின்னாளில் கருணா பிரிவின் போது நடந்ததை போல பல சம்பவங்கள் யாழில் அரங்கேறின. மாற்று இயக்க, புலி உறுப்பினர்கள் ஆளை ஆள் சுட்டதை விட, தத்தம் ஆதரவாளர்களை போட்டு தள்ளினர். ஒருநாள் புலி ஆதரவாளர் ஒருவரை ஈபி கொலை செய்தால், ஒரு கிழமைக்குள் புலிகள் ஒரு ஈபி ஆதரவாளரை கொலை செய்தார்கள். இது மறுவளமாகவும் நடந்தது. என்ன கருமம் செய்தேனோ தெரியாது - அப்போ எனக்கு பதின்ம வயது கூட இல்லை, இப்படி 3 கொலைகளை என் கண்ணால் கண்டேன். நாலாவதாக ஒருவரை (புலி ஆதரவாளர்) தேடி வந்த சமயம் அவர் வீட்டில் இல்லை, அவரின் மனைவி என்னை அனுப்பி அவர் நிண்ட வீட்டில் இருந்து அப்படியே கொழும்புக்கு படி தகவல் அனுப்பினார். இதை எல்லாம் இப்போ சொன்னால் எனக்கு PTSD எண்டு சொல்லி போடுவாங்கள். 83 க்கு பின் ஊரில் வளர்ந்த பலருக்கு PTSD இருக்கு - நாம் அதை காட்டி கொள்வதில்லை என்பது என் கருத்து.
2 weeks 1 day ago
முதலமைச்சர் அல்வாயனுக்கு வாழ்த்துக்கள். பின்வாங்கு கோஸ்டியோடு சேர வேண்டாமென @வீரப் பையன்26 க்கு சொல்ல சொல்ல கேட்காமல் சேர்ந்த பலனை நாளை அனுபவிப்பார். @ரசோதரன் கெட்டிக்காரன் மெதுவா விலகிவிட்டார்.
2 weeks 1 day ago
2 weeks 1 day ago
இதில் குறிப்பிட்டுள்ள விடயம், உங்களூர் சமாச்சாரம்.. அப்படி போட்டி போட்டு கொன்றவர்கள் என்பது மாற்று இயக்க போராளிகளுடன் நடந்த சம்பவங்களா ? இல்லை பொதுமக்கள் சார்ந்த சம்பவங்களா? எங்கள் ஊரில் (நாவற்குழி) + கைத்தடி + தச்சன்தோப்பு + பகுதியில் புலிகளால் நடந்தது ஒரே ஒரு சம்பவம் அதுவே நான் சொன்ன என்னுடைய தோழி குறித்தது. நாவற்குழியில் மட்டும் 9 + கொலைகள் நான் இருந்த காலத்தில் (1984 - 1990) ஒரே வீட்டில் வசித்த மருத்துவர் குடும்பம் கணவன் மனைவி இன்னும் இருவர் என பேர் கொல்லப்பட்டார்கள் அவர்களுக்கு 2 குழந்தைகள் இருந்தார்கள் (அவர்களை பற்றி இன்றுவரையும் எதையும் அறிய முடியவில்லை - இதை செய்தது தனியே இந்திய ராணுவமா இல்லை அவர்களோடு சேர்ந்து இயங்கிய ஒட்டுண்ணிகளா தெரியவில்லை)
2 weeks 1 day ago
நாளை சனி 14 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 22) முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான் IRE எதிர் OMA அனைவரும் அயர்லாந்து அணி வெல்வதாகக் கணித்துள்ளனர்! இப்போட்டியில் போட்டியில் எல்லோருக்கும் முட்டைகள் பரிமாறப்படுமா? 23) முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இங்கிலாந்து SCOT எதிர் ENG ஒரே ஒருவர் மாத்திரம் ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனவும் மற்றைய 22 பேர் இங்கிலாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ஸ்கொட்லாந்து சுவி இப்போட்டியில் @suvy ஐயாவுக்கு புள்ளிகள் கிடைக்க குருபார்வை உள்ளதா? 24) முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா NZ எதிர் SA 07 பேர் நியூஸிலாந்து அணி வெல்வதாகவும் 16 பேர் தென்னாபிரிக்கா அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். நியூஸிலாந்து வசீ புலவர் வீரப் பையன்26 கிருபன் கோஷான் சே நியாயம் நந்தன் தென்னாபிரிக்கா செம்பாட்டான் ஏராளன் சுவைப்பிரியன் அல்வாயன் ஈழப்பிரியன் நியூ பலன்ஸ் வாத்தியார் கறுப்பி வாதவூரான் சுவி அஹஸ்தியன் கந்தப்பு எப்போதும் தமிழன் ரசோதரன் பிரபா நிலாமதி இப்போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
2 weeks 1 day ago
சரி.. சரி.. சில்லறையை உண்டியலில் போட்டுவிட்டுப் போங்கோ 😂
2 weeks 1 day ago
உங்கடையாக்களல்லே அப்படித்தான் கதைப்பியள் பிரியன்சார் ...நாம ஜெயிச்சிட்டோம்...கனவிலைகூட கடவுள்வந்து சொல்லவில்லை..
2 weeks 1 day ago
இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஸிம்பாப்வே அணி, பிரயன் பென்னிட்டின் ஆட்டமிழக்காத 64 (56 பந்துகள்) ஓட்டங்களுடனும், தடிவனஷே மருமனியின் 35 (21 பந்துகள்) ஓட்டங்களுடனும், றயான் பேர்ளின் 35 (30 பந்துகள்) ஓட்டங்களுடனும் 2 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு 170 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்ததால் நிலைகுலைந்தனர். மற் றென்ஷோ 65 (44 பந்துகள்) ஓட்டங்களுடனும், கிளென் மக்ஸ்வெல் 31 (32 பந்துகள்) ஓட்டங்களுடனும் நிலைகொள்ள முயன்றும் விக்கெட்டுகள் சரிந்ததால் 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து அதிர்ச்சியான தோல்வியைத் தழுவியது. பிளெஸிங்க் முஸர்பனி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். முடிவு: ஸிம்பாப்வே அணி 23 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ஸிம்பாப்வே அணி வெல்லும் எனக் கணித்த @நிலாமதி அக்காவுக்கு மாத்திரம் இரு புள்ளிகள் கிடைக்கும். மற்றைய 22 பேருக்கும் புள்ளிகள் கிடையாது! இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி, ஹர்ஷ் தாக்கரின் 50 (41 பந்துகள்) ஓட்டங்களுடனும், நவ்னீட் தலிவாலின் 34 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், 7 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் ஜுனைட் சித்திக் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமீரகம் அணி, அர்யன்ஷ் ஷர்மாவின் ஆட்டமிழக்காத அதிரடியான 74 (53 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷொஹைப் கானின் புயல்வேக 51 (29 பந்துகள்) ஓட்டங்களோடும், 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்று வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: ஐக்கிய அமீரகம் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது ஐக்கிய அமீரகம் அணி வெல்லும் எனக் கணித்த 14 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். கனடா அணி வெல்லும் எனக் கணித்த 09 பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்கா அணி, சைடெஜா முக்கமல்லாவின் அதிரடியான 79 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷுபம் ரஞ்சனேயின் ஆட்டமிழக்காமல் மின்னல்வேகத்தில் எடுத்த 48 (24 பந்துகள்) ஓட்டங்களுடனும் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பாடிய துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணியின் வீரர்கள் நிலைத்து ஆடமுடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 15.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது. ஹர்மீட் சிங் 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். முடிவு: ஐக்கிய அமெரிக்கா அணி 93 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ஐக்கிய அமெரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். நெதர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: இன்று முதல்வர் நாற்காலியை @alvayan அலங்கரிக்கின்றார் 😆
Checked
Sun, 03/01/2026 - 11:11
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed