2 weeks 1 day ago
உதாரண வழக்குகள் எல்லாம் சிங்களவர் மீது பொலிஸ் சுட்ட நிகழ்வுகள். தமிழர் என்பதால் ஏதாவது நாயை சுட்ட வழக்கு இருந்தால் - அதுதான் செல்லுபடியாகும்😂. நான் அறிய காட்டி கொடுத்தோர், அரசியல் எதிரிகள்தான் இப்படி கொலை செய்யப்பட்டனர். கோழி, நகை கள்ளர் இப்படி சுட்டு கொல்லப்பட்ட சம்பவங்கள் ஏதேனும் ஆவணப்படுத்த பட்டுள்ளதா? உண்மை. சாவில் கூட அரசியல் பார்த்துத்தான் இந்த உலகம் நிலை எடுக்கும்.
2 weeks 1 day ago
அந்த வீட்டை விடமுடியாது
2 weeks 1 day ago
2 weeks 1 day ago
தெற்கில் ஜேவிபி ஆட்சிக்கு வந்த பின் போதை பொருள் மாபியா என பலரை போட்டு தள்ளிய போது, களை எடுப்பு என்று ஆதரித்தோர்…இது அனைவருக்கும் நடக்க அதிக காலம் செல்லாது என நான் எச்சரித்ததை கண்டு கொள்ளவே இல்லை. இனி மாடு பிடிக்கிறான், கண்டு பிடிக்கிறான் என கண்ட மேனிக்கு சுடுவார்கள் போல் உள்ளது. இந்த கொலைக்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஏன் ஜனாதிபதியால் ஒரு நேரடி விசாரணைக்கு உத்தரவிட முடியவில்லை? இப்போது புரிகிறதா ஏன் அத்தனை அடியையும் வாங்கி கொண்டு யாழ்களத்தில் ஜஸ்டின் அண்ணா போன்றோர் fact checking செய்கிறார்கள் என்பது. தமது அரசியல் எதிரிகள் என்பதால் யாழில் மீண்டும், மீண்டும் சுமந்திரன், கருணாநிதி மீது பொய் தகவலைகளை (உண்மையான தகவல்களை சொல்ல இல்லை) தெரிந்து கொண்டே பரப்புவதும் இந்த வகையே. மொத்தத்தில் ஒட்டு மொத்தன் இனத்தையும் பொய்யை நம்பும் மூடர் கூட்டம் ஆக்கி விடுவோம்.
2 weeks 1 day ago
Jino Sivaji ·seropnodtShh16i 132mf866cf6,1mgiiuéftrr0h:e9v2ih3h1fc4 g7410 · பைசாவின் சாய்ந்த கோபுரம் ஏன் சாய்ந்துள்ளது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? கி.பி 1173 இல் 3 மீட்டர் ஆழத்திலிருந்து கட்டுமானம் தொடங்கியது, அதன் மேல், அவர்கள் சுவர்களைக் கட்டத் தொடங்கினர். கட்டிடம் மூன்றாவது தளத்தை அடைந்தபோது, அது சாய்ந்து கொண்டிருந்தது. மணல் மற்றும் வண்டல் மண்ணில் 3 மீட்டர் ஆழமான அடித்தளத்தில் கட்டப்பட்ட 14,500 டன் கோபுரத்தைப் பற்றி நாங்கள் பேசுகிறோம். அந்த நேரத்தில் கட்டுமானத்திற்கு முன் ஜியோடெக்னிக்கல் ஆய்வுகளை கற்பனை செய்து பாருங்கள் . சரிவைக் கண்டறிந்த பிறகு, அக்கால பொறியாளர்கள் மீதமுள்ள தளங்களின் சுவர்களைக் கட்டினார்கள், இதனால் மூழ்கும் பக்கத்தில் தரையின் உயரம் மறுபக்கத்தின் உயரத்தை விட அதிகமாக இருந்தது, இதனால் சாய்வின் கோணத்திற்கு ஈடுசெய்யப்பட்டது. உண்மையில் கூடுதல் எடையின் காரணமாக மற்ற பக்கத்துடன் ஒப்பிடும்போது ஏற்கனவே மூழ்கும் பக்கத்தில் உள்ள அடித்தளங்களின் அதிக வீழ்ச்சியின் காரணமாக கோபுரம் இன்னும் சாய்ந்தது. கோபுரம் இடிந்து விழாமல் இருப்பதற்கும், நான்கு முறை நிலநடுக்கங்களைத் தாங்குவதற்கும் அமுக்கப்பட்ட களிமண் மண்ணே காரணம். இருப்பினும், இந்த வகை நிலத்தில் அது அப்படியே இருந்தால், இந்த ரத்தினம் இறுதியில் சரிந்துவிடும். எனவே நவீன பொறியியலில் "விளையாட" நேரம் வந்தது. நவீன பொறியாளர்கள் கோபுரத்தின் ஈர்ப்பு மையத்தை கணக்கிட்டனர், மேலும் கோபுரம் 5.44 டிகிரிக்கு மேல் சாய்ந்தால் இடிந்து விழும் என்று கணக்கீடுகள் முடிவு செய்தன. 1990ல் பழுதுபார்ப்பதற்காக கோபுரம் மூடப்பட்டது. அவர்கள் 40 மீட்டர் ஆழத்தில் 361 குழிகளை தோண்டி, 90 டன் கான்கிரீட்டை இந்த துளைகள் மூலம் மண்ணில் செலுத்தினர். அடித்தளத்தின் அடிப்படையில், ஸ்லாப்பின் கீழ் பைலிங்ஸ் செய்யப்பட்டன. இது நிலையற்ற மண் அடுக்கு வழியாக ஊடுருவி நெடுவரிசைகளை வைப்பது போன்றது மற்றும் ஸ்லாப்பை சமமாக நிலையானதாக வைத்திருக்க மண்ணின் ஆழமான அடுக்கில் "நங்கூரம்" வைப்பது போன்றது. அடுத்து, கோபுரத்தின் குறைந்த மூழ்கிய பக்கத்திலிருந்து மண் அகற்றப்பட்டது, இதனால் அது அந்தப் பக்கத்தில் மூழ்கி அதன் சாய்வை அசல் நான்கு டிகிரிக்கு குறைக்கும். அவர்கள் கோபுரத்தை செங்குத்தாக செய்திருக்கலாம், ஆனால் அதன் சாய்வு காரணமாக அதன் புகழ் மற்றும் சுற்றுலா மதிப்பை இழக்க அவர்கள் விரும்பவில்லை. மேலும் சாய்ந்துவிடாமல் 300 ஆண்டுகள் தாங்கும் என்று உறுதி செய்த பிறகு, கோபுரம் பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டது......!
2 weeks 1 day ago
RS Vijayakumar ·edrospntSorm91i9719 8370i5,0me8ulm4lr6cf11f003:h14m780v é536 · இணையத்தில் பார்த்த புகைப்படம்... இந்தப் புகைப்படத்தில் இருக்கும் குழந்தைக்கு மிகவும் உடல்நலக்குறைவாக இருந்ததால் CT ஸ்கேன் அவசியமாக இருந்தது. ஆனால் அந்தப் பெரிய இயந்திரம் இருக்கும் அறைக்குள் தனியாகச் செல்ல அவன் தயங்கியிருக்கிறான். 2–3 மணி நேரமாக பெற்றோர், மருத்துவர்கள்—எல்லோரும் முயன்றும் அவனை சமாதானப்படுத்த முடியவில்லை. அப்போது அவனுக்கு மிகவும் நெருக்கமான நண்பன் அழைக்கப்பட்டான். நண்பன் வந்தவுடனே மாயம் செய்தது போல அவனின் பயம் பாதியாக குறைந்தது. இருவரும் சேர்ந்து CT ஸ்கேன் போக வேண்டும் என்று முடிவு செய்து இருவரும் கண்களை மூடி படுத்துக்கொண்ட புகைப்படம் தான் நாம் பார்ப்பது. இருவருமே சிறுவர்கள் தான்.. இருவருக்குமே பயம் தான் ஆனாலும் அசாத்தியம் சாத்தியமானது... இயந்திரப் பயத்தை எதிர்கொள்ள ஒருவருக்கொருவர் தைரியமாக மாறியவர்கள் தான் இந்த நண்பர்கள்.. இந்தக் காட்சி நமக்கு ஒன்றை மட்டும் நினைவூட்டுகிறது — வெளிச்சத்தில் சேர்ந்து ஓடுவதற்கு மட்டுமல்ல இருளான நேரங்களில் ஒருவருக்கொருவர் விளக்காக இருப்பதே உண்மையான நட்பு. உலகில் உள்ள அனைத்து நட்புகளும் இவ்வளவு தூய்மையானதும் உடைக்க முடியாததுமானவையாக இருக்கட்டும்....!
2 weeks 1 day ago
யாராவது சிறுவர்களுக்கு கிரிகெட் பழக்கிறீர்கள் எனில் கனேடியன் பேட்ஸ்மென் தாடிவால் ஓடியதை போல் ஓடாமல் இருக்க சொல்லி பழக்கவும். ரிஸ்க் அதிகமான ஓட்டத்தை அவர் அழைத்தார்… மிக மெதுவாக ஓட ஆடம்பித்தார்… நேராக ஓடாமல் ஒரு கோணத்தில் ஓடினார்… Crease பண்ணும் போது பேட்டை slide in பண்ணாமல் குத்தினார், அது கிரீஸ் கோட்டில் மாட்டி கொண்டது. இதில் ஒன்றஒயாவது சரியாக செய்திருப்பின் அவுட் ஆகாமல் தப்பி இருக்கலாம். முன்பு இதை அம்பயர் அவுட் கொடுத்திருக்க மாட்டார், ஆனால் இப்போதைய கமேரா சூழ் கிரிகெட்டில்…. ஓட வேண்டும், ஒழிய முடியாது😂
2 weeks 1 day ago
சென்ற வருடம் மனைவி மீது சந்தேகப்பட்டு அவரின் தலையை வெட்டிய வரை வீரத்தமிழன் என்று தமிழ் முக நூல்களில் பலர் எழுதினார்கள். செய்தி பின்னோட்டத்தில் பெரும்பாலானோர் அந்த கொலை செய்த கொலைகாரனுக்கு வக்காலத்து வாங்கினார்கள். சிலர் ஒரு படி மேலே போய் தலைவன் வழி வந்த வீரத்தமிழன் இப்படித்தான் தண்டனை கொடுக்க வேண்டும் என்று போற்றிப் புகழ்ந்தாரகள். இப்போது அதே நபர்களின் முகநூல்கள் அப்படியே பிளேட்டை மாற்றி அந்த 17 வயது சிறுவன் தப்புசெய்தாலும் இப்படி தண்டனை கொடுக்க கூடாது, நாட்டில் சட்டம் எதுக்கு இருக்கு, நீதி மன்றம் எதுக்கு இருக்கு இதென்ன காட்டுமிராண்டித்தனம் என்றெல்லாம் கெம்புகிறார்கள். கண்மூடித்தனமான ஒருதலைப்படச கொலைகளுக்கு அன்றும் இன்றும் வக்காலத்து வாங்கியவர்கள் வாங்குபவர்கள் எல்லாம் துப்பாக்கி பாவிப்பதற்கு உலகில் உள்ள புரொட்டகோல் பற்றி எல்லாம் வகுப்பு எடுக்கிறார்கள்.
2 weeks 1 day ago
oroensptSd7170gamt7i3hi790ti1726f 3fa139lt09lg0l77h9i997uf6u · ராவணனை அழித்த பிறகு., போா்க்களத்தில் ராமபிரான் ஓய்வாக தரையை நோக்கியபடி அமர்ந்திருந்தாா்..!! அப்போது ஒரு பெண்ணின் நிழல் தொிந்தது..!! அந்த நிழலுக்குச் சொந்தக்காரியான பெண்., அவரது திருப்பாதங்களைத் தொட முயற்சிப்பதை., ராமபிரான்.... நிழலின் அசைவின் மூலம் புாிந்து கொண்டார்..!! உடனே தனது காலை உள்ளிழுத்துக் கொண்டார்..!! “நீ யாரம்மா?” என்றாா்....!! “நான் ராவணனின் மனைவி மண்டோதாி..!! என் கணவரை யாராலும் வெல்ல முடியாது என இருமாந்திருந்தேன்....!! ஆனால்., அவரையே ஒருவா் கொன்று விட்டார் என்றால்., அவாிடம் ஏதோ உயா்ந்த குணம் இருக்க வேண்டும் என நினைத்தேன்..!! மேலும்.. க்ஷத்திரிய குல தா்மப்படி., கணவனை வென்ற/இழந்த பெண்ணை வெற்றி பெற்றவன்., என்ன வேண்டுமானாலும் செய்யலாம்..!! ஆனால் நீ என்னிடம் வரவில்லை..!! ஆச்சாியப்பட்டேன்..!! இங்கே நீ., என் நிழல் உன் மீது படுவதைக் கூட விரும்பவில்லை என்னும் போது., உன் சிறந்த குணத்தை என்னவென்பேன்..! என் கணவாிடம் கூட., “ரகு குலத்தில் உதித்த ராமன்., மனிதன் அல்ல..!! உலகைக் காக்கும் பரம்பொருள்..!! விஸ்வரூபன்..!! அவனது திருநாமம் எல்லாப் பாவங்களையும் நொடிப் பொழுதில் போக்கவல்லது..!! அவன் வேதத்தின் சாரம்..!! ராமன் சாட்சாத் தெய்வ வடிவம்..!! அவனிடம் பகையை ஒழித்து சீதையை விட்டுவிடுங்கள்’ என்று மன்றாடினேன்..!!” “அவா் கேட்கவில்லை..!!” “உன் வெற்றிக்கு காரணம்., என் கணவாிடம் இல்லாத ஒரு நற்குணம் உங்களிடத்தில் இருந்தது தான்..!!” “அதுதான் தங்களின் ஏகபத்தினி விரதத்தன்மை..!!” “அதனால் தான் நீ வென்றாய்.,” என்றாள்.....!! அனைத்தும் கேட்ட ராம பிரான் சிறு புன்னகை புாிந்தாா்.....!! தன் சுயவடிவான “நாராயணனாக” அவளுக்கு “விஸ்வரூப தாிசனம்” கொடுத்தாா்.....!! ராமாயணத்தில் பாக்கியவதியாகத் திகழ்ந்தவள் மண்டோதாி.....!! அனுமன் இலங்கை சென்று ராவணனின் அந்தப்புரம் சென்ற போது., மண்டோதாி ஒழுக்கமான உடை அலங்காரத்தை கண்டு., ‘இவள் சீதையாக இருப்பாளோ’ என்று சந்தேகம் கொண்டான் அனுமன்..!! அந்தளவுக்கு ஒழுக்கமுள்ளவளாக விளங்கியதால் தான்., கெட்டவனுக்கு வாழ்க்கைப்பட்டும் மண்டோதரிக்கு ‘நாராயணின் விஸ்வரூப தரிசனம்’ பெற்றாள்..!! உயா்ந்த ஜாதியில் பிறந்தவன்., வசதியில் உயா்ந்தவன்., அரச பதவியில் இருப்பவன்., என இறைவன் பாா்ப்பதில்லை..!! நம்முடைய பயபக்தி., அன்பு., ஒழுக்கம்., இறைச்சேவை., அப்பழுக்கற்ற தூய உள்ளம் என இவையே இறைவனின் அருள் தாிசனம் பெறும் வழிமுறையாகும்..!! ஆகவே தான் அசுரகுலத்தில் பிறந்தாலும்., தன் ஒழுக்க குணத்தால்., ‘இராவணனின் மனைவி’ மண்டோதாிக்கு ஸ்ரீராமபிரானின் விஸ்வரூபம் காணும் பாக்கியம் கிடைத்தது...!!! ஸ்ரீ ராம ஜெயம்..!! ஸ்ரீ ராம ஜெயம்..!!! ஸ்ரீ ராம ஜெயம்..!!!! ஜெய் ஸ்ரீ ராம் 🙏🏽"
2 weeks 1 day ago
இண்டைக்கு கனடாவும், அமெரிக்காவும் தோத்தால் நான் எனது வீட்டை மீட்டு விடுவேன்😂
2 weeks 1 day ago
பார் சிறிக்கு துணை தூதரை மட்டும்தான் சந்திக்க முடியும் போல😂. கூட ஒரு எம்பியிம் போகவில்லை.
2 weeks 1 day ago
அவுஸ்ரேலியாவின் தோல்வி இலங்கை வீரர்களுக்கு சிறு நெருக்கடி...............இலங்கை சூப்பர்8க்கு போவில் சிம்பாவேய வெல்லனும்...............அவுஸ்ரேலியாவிடமும் தோத்து சிம்பாவியிடமும் இலங்கை தோத்தால் அவுஸ்ரேயா மற்றும் சிம்பாவே சூப்பர் 8க்கு போவினம்..................பாப்போம் போட்டி முடிவில்...................
2 weeks 2 days ago
சிம்பாவே அணிக்கு வாழ்த்துக்கள் பாக்கிஸ்தானில் படு தோல்வி அடைஞ்ச்சும் அவுஸ்ரேலியா வீரர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்த வில்லை உலக கோப்பையிலும்............................
2 weeks 2 days ago
அவுசுக்கு சிம்பாவே வாழ்க்கையில் மறக்க முடியாத பயத்தைக் காட்டி ஹவுசுக்கு அனுப்பியிருக்கு . ......! அருமையான பீல்டிங் ........! முன்கூட்டியே கணித்த சகோதரிக்கு பாராட்டுக்கள் . ......!
2 weeks 2 days ago
2 weeks 2 days ago
2 weeks 2 days ago
reotdpnSos9087 :amcctut21ir3u5ggf9uhff1ti aff12,1rv5iémhe6t7 · #ஊசி கீழே விழும் சத்தம் கேட்குமா கேட்க்காதா...? 1) #ஃபீல்ட்_மார்ஷல் மானக் ஷா ஒரு முறை அகமதாபாத்தில் ஆங்கிலத்தில் பேச துவங்கினார். "குஜராத்தியில் பேசுங்கள்.. நீங்கள் குஜராத்தியில் பேசினால் தான் கேட்போம்..." என்று கூச்சலிட்டனர் மக்கள். பேச்சை நிறுத்தி விட்டு தீர்க்கமாக மக்களைச் சுற்றிப் பார்த்தவாறே பதிலளித்தார் ஷா: "நண்பர்களே, என் நீண்ட பணிக்காலத்தில், பல போர்கள் புரிந்திருக்கிறேன். ராணுவத்தில் உள்ள ஸீக் ரெஜிமெண்ட் வீரர்களிடம் இருந்து பஞ்சாபி மொழியை கற்றிருக்கிறேன், மராத்தி மொழியை மராத்தா ரெஜிமெண்ட்டிடம், மெட்ராஸ் ஸாப்பர்களிடம் தமிழ், பெங்காலி ஸாப்பர்களிடம் பெங்காலி மொழி, ஏன்... கூர்க்கா ரெஜிமேன்ட்டிடம் இருந்து நேப்பாளி மொழியைக் கூட கற்றிருக்கிறேன். துரதிஷ்டவசமாக குஜராத்தில் இருந்து ஒரு வீரர் கூட இல்லை... எனக்கு குஜராத்தி மொழி கற்றுத்தர..." -- (தொடர்ந்த நிசப்தத்தில் ஊசி விழும் சப்தத்தை கேட்டிருக்க முடியும்.) 2) ஃபிரான்ஸ் நாட்டுக்கு விமானம் மூலம் வந்திறங்கிய 83 வயது அமெரிக்கர் ராபர்ட் வொய்ட்டிங், கஸ்டம்ஸ் அதிகாரியிடம் தன் பாஸ்போர்ட்டை துழாவி எடுத்துக்காட்ட சற்று நேரம் எடுத்துக்கொண்டார். "இப்போது தான் ஃபிரான்ஸ் நாட்டுக்கு முதல் முறையாக வருகிறீர்களா.." என்று நக்கலாக கேட்டார் அதிகாரி. "இல்லை முன்பு வந்திருக்கிறேன்..." "அப்படியானால், உங்கள் பாஸ்போர்ட்டை தயாராக எடுத்துவைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும், உங்களுக்கு..." "நான் கடைசியாக வந்த பொழுது, எனக்கு பாஸ்போர்ட் காட்டவேண்டிய அவசியம் ஏற்படவில்லை..." "சான்ஸே இல்லை.... அமெரிக்கர்கள் இங்கு வந்திறங்கும் பொழுது தங்கள் பாஸ்போர்ட்டுகளை காட்டவேண்டும் என்பது எப்பொழுதுமே உள்ள விதி..." உறுமினார் அதிகாரி. சில வினாடிகள் தீர்க்கமாய் அந்த அதிகாரியை பார்த்தவாறே, அமெரிக்கர் சொன்னார்: "இரண்டாம் உலகப் போரின் போது, உங்கள் நாட்டை விடுவிக்க 1944ஆம் ஆண்டு, ஜூன் 6ம் தேதி, அதிகாலை 04:40 மணிக்கு ஒமஹா கடற்கரையில் நான் வந்திறங்கிய பொழுது, என் பாஸ்போர்ட்டை காண்பிக்க, ஒரு ஃப்ரெஞ்சுக்காரர் கூட அங்கில்லை..." -- (தொடர்ந்த நிசப்தத்தில் ஊசி விழும் சப்தத்தை கேட்டிருக்க முடியும்.) 3) இந்திய விடுதலைக்குப் பிறகு பிரதமராய் தீர்மானிக்கப்பட்டிருந்த நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவத் தளபதியைத் தேர்ந்தெடுக்க, ராணுவ உயரதிகாரிகளைக் கூட்டிப் பேசினார்.: "நமக்கு ராணுவத்தை நிர்வகித்து அனுபவம் இல்லாததால், ஒரு ஆங்கிலேய ராணுவ வீரரையே நம் படைத் தளபதியாக நியமிக்கலாம் என்று நினைக்கிறேன்..." பிரிட்டிஷாரிடம் சேவகம் செய்தே பழக்கப்பட்டிருந்த கூடியிருந்தோர் அனைவரும் ஒத்துக்கொண்டு தலையசைத்தனர். ஆனால், நாத்து சிங் ரதோர் எனும் ஒரு ராணுவ உயரதிகாரி தனக்கு பேச சந்தர்ப்பம் கேட்டார். சுயமாய் சிந்திக்கும் இந்தப் போக்கைக் கண்டு துணுக்குற்றாலும், நேரு பேச அனுமதி அளித்தார். "சார்.... நமக்கு நாட்டை ஆளவும்கூட அனுபவம் கிடையாது. நாம் ஏன் ஒரு பிரிட்டிஷ்காரரை, இந்தியப் பிரதம மந்திரியாக நியமிக்கக் கூடாது...?" -- (தொடர்ந்த நிசப்தத்தில் ஊசி விழும் சப்தத்தை கேட்டிருக்க முடியும்.) அரூபமான இத்தாக்குதலில் இருந்து சற்று நேரத்தில் சுதாரித்துக் கொண்டு நேரு கேட்டார்: "முதல் ராணுவத் தளபதியாக நீ, ஆகிறாயா?" "இல்லை சார். நம்மிடம் மிகுந்த திறமை வாய்ந்த லெஃப்டினெண்ட் ஜெனரல் கரியப்பா இருக்கிறார்... அவர் இப்பதவிக்கு மிகவும் தகுதியானவர்..." இப்படித்தான் கரியப்பா அவர்கள் நம் முதல் ராணுவத் தளபதியானது வரலாறு.. ஊசிவிழும் சப்தமும் சில நேரம் கேட்கும்......!
2 weeks 2 days ago
RESULT ZIM 169/2 AUS (19.3/20 ov, T:170) 146/10 Zimbabwe won by 23 runs
2 weeks 2 days ago
ஏனைய யாழ்கள கிரிகெட் ஜாம்பவான்கள்: முடிச்சு விட்டீங்க போங்க 😂
2 weeks 2 days ago
Chandra Krishnan poedrstonS8363hmtfi8auc01h8c1cf1lm641hal 053u26081t700l6l3ig · தமிழ் எழுத்து சீர்திருத்தம் அரசு அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டது 1978ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு மூலம் அப்போது முதல்வர் MGR இந்த மாற்றங்கள் முதலில் முன்வைத்தவர்: பெரியார் தமிழ் எழுத்து எளிமைப்படுத்த வேண்டும் என்று பல வருடங்களுக்கு முன்பே வலியுறுத்தினார். #பெரியார் #வரலாறு #தமிழ் #அரசியல்
Checked
Sun, 03/01/2026 - 08:11
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed