புதிய பதிவுகள்2

யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் - பிரதேச சபை அறிவிப்பு!

2 weeks 6 days ago
கருத்தடை பண்ணிய நாயை இலகுவில் கண்டு பிடிக்க, காதில் ஓட்டை போடுகிறார்கள் என்பதால்... ஒரு முறை கருத்தடை பண்ணிய நாயை மீண்டும் கொண்டு போக முடியாது. சுவியர்... மேலே நான் பகிடிக்கு எழுதினேன். சீரியசாக எடுக்காதீர்கள். 😂

இஸ்ரேல் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளது

2 weeks 6 days ago
இந்த வருடம் மே மாதத்தில் டிரம்பிற்கு 1.2 டிரில்லியன் டாலர்களை அள்ளி வழங்கியது கத்தார். அதுமட்டுமா 400 மில்லியன் டாலர் பெருமதியான அதி சொகுசு போயிங் 747-8 விமானத்தை அந்த பைத்தியத்திற்கு பரிசாக வழங்கியது. அதற்கு பரிசாக இன்று, தோஹா மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் ட்ரம்பின் அனுமதியோடு அவனது மேற்பாரவையில் சிறப்பாக இடம் பெற்றது. உண்மை உரைகல்

யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் - பிரதேச சபை அறிவிப்பு!

2 weeks 6 days ago
அடுத்த முறை கொலிடேக்கு, ஊருக்கு வரும் போது... முதல் வேலையாக உங்கள் வீட்டு பெட்டை நாயை பிடித்து, கருத்தடை ஆபரேஷன் பண்ணி விட்டுத்தான் அடுத்த அலுவல் பார்க்கிறது. இப்ப சந்தோசமா ஏராளன். 😂

யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் - பிரதேச சபை அறிவிப்பு!

2 weeks 6 days ago
நாயை.... கடிக்காமல் பிடிக்க, ஒரு ரெக்னிக் இருக்குது. 😂 அந்த ரெக்னிக்கை பாவித்து பிடித்தால்... வாலை ஆட்டிக் கொண்டு சாதுவாக நிற்கும். 🤣

யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.

2 weeks 6 days ago
ஸ்க்றீன் ஷொட் எடுத்து வைக்கப் போகிறோம் என்பதை @தனிக்காட்டு ராஜா கேள்விப்பட்டால் அடுத்த ஆறு மாதத்துக்கு இந்தப் பக்கம் எட்டியும் பார்க்க மாட்டார். 😂

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - 2025

2 weeks 6 days ago
ஆசிய கிண்ண கிரிக்கெட்: ஹொங்கொங்கிற்கு எதிரான போட்டியில் ஆப்கான் அபார வெற்றி Published By: Digital Desk 3 10 Sep, 2025 | 04:49 PM ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி அபுதாபியில் செவ்வாய்க்கிழமை (9) இரவு ஆரம்பமாகியது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, ஹொங்கொங்கை சந்தித்தது. இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. ஆப்கானிஸ்தான் சார்பில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ரமனுல்லா குர்பாஸ் 8 ஓட்டங்களுடனும் இப்ராகிம் ஜட்ரன் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து முகமது நபி 33 ஓட்டங்களுடனும் குல்படின் நைப் 5 ஓட்டங்களுடனும் ஆடுகளத்தைவிட்டு வெளியேறினர். 13 ஓவர்களில் 95 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடிக்குள்ளான ஆப்கானிஸ்தானை செடிகுல்லா அடலும், அஸ்மத்துல்லா ஒமர்ஜாயும் தூக்கி நிறுத்தினர். குறிப்பாக இறுதிக் கட்டத்தில் அதிரடி காட்டிய ஒமர்ஜாய், வேகப்பந்து வீச்சாளர் ஆயுஷ் சுக்லாவின் ஓவரில் ‘ஹெட்ரிக்’ சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்து தனது முதலாவது அரைசதத்தை 20 பந்துகளில் எட்டினார். இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைச்சதம் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சிறப்பையும் பெற்றார். இதற்கு முன்பு முகமது நபி, குல்படின் நைப் தலா 21 பந்துகளில் அரைச்சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. ஒமர்ஜாய் 53 ஓட்டங்களின் (21 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இந்நிலையில், 20 ஓவர்கள் நிறைவில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 188 ஓட்டங்களை குவித்தது. 3 முறை ஆட்டமிழப்பிலிருந்து தப்பிய செடிகுல்லா அடல் 73 ஓட்டங்களுடன் (52 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார். பின்னர் 189 ஓட்டங்களை இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஹொங்கொங் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 94 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாபர் ஹயாத் (39 ஓட்டங்கள்), அணித் தலைவர் யாசிம் முர்தசா (18 ஓட்டங்கள்) ஏனையவர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் பரூக்கி, குல்படின் நைப் ஆகியுார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். https://www.virakesari.lk/article/224749

ஐ.நாவின் தொழில்நுட்ப உதவியுடன் பொறுப்புக்கூறலைத் தொடர இலங்கை உறுதி

2 weeks 6 days ago
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தொழில்நுட்ப உதவியுடன், உள்நாட்டு பொறிமுறை மூலம் மனித உரிமைகள் மீறல்களுக்கு பொறுப்புக்கூறலைத் தொடர இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹெரத், ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிற்குத் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் தற்போது கலந்து கொண்ட அமைச்சர் விஜித ஹெரத், இன்று (10) உயர் ஸ்தானிகர் டர்க்கை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் கூட்டத் தொடரில் சமர்ப்பித்த அறிக்கை குறித்து ஆழமான விவாதம் நடத்தப்பட்டதாக வௌிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இலங்கையின் நிலைப்பாடு குறித்து அமைச்சர், இதன்போது விரிவான விளக்கத்தை வழங்கியுள்ளார். இலங்கையில் புதிய அரசாங்கம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும், கடந்த கால மனித உரிமை மீறல்களைக் கையாள ஒரு முறையான சுயாதீன விசாரணை மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையை நிறுவுவதற்கான வாய்ப்பை இலங்கை இழக்காது என்றும் உயர் ஸ்தானிகர் நம்பிக்கை வௌியிட்டதாக வௌிவிவகார அமைச்சு கூறியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmfe4i17p00cqo29nbn82qvb5

மன்னார் வைத்தியசாலைக்கு புதிய விபத்து, அவசர சிகிச்சை பிரிவு இந்திய அரசாங்கத்துடன் ஒப்பந்தம்

2 weeks 6 days ago
10 Sep, 2025 | 04:31 PM மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு க்கு புதிய விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் ஒன்றையும் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களையும் வழங்குவதற்கு இந்திய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்காகவும் இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (09) சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் நடைபெற்றது. அதற்கமைய சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரின் தலைமையில் இவ் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு சந்தர்ப்பம் என சுகாதார அமைச்சர் இதன்போது தெரிவித்திருந்தார். குறித்த ஒப்பந்தத்தில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் கைச்சாத்திட்டனர். ஒப்பந்தத்தின்படி, இந்திய அரசாங்கத்தால் இந்த திட்டத்திற்காக 600 மில்லியன் ரூபா செலவாகும் எனவும் அனைத்துப் பணிகளும் 3 ஆண்டுகளுக்குள் நிறைவு செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கும் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, இந்த திட்டத்திற்கு பங்களிக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் பிரதி பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல்) வைத்தியர் எஸ். ஸ்ரீதரன், மேலதிக செயலாளர் (மேம்பாடு) சுனில் கலகம, பணிப்பாளர் (திட்டமிடல்) நிபுணர் வைத்தியர் ஜானகி விதானபத்திரன மற்றும் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகள் உள்ளிட்ட பல பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/224743

ஆஸ்திரேலியாவில் 'அரை முழம் மல்லிகைப் பூவுக்கு 1980 டாலர்'; அபராதம்

2 weeks 6 days ago
விமானத்திலேயே பூச்சூடியபடி தான் பயணித்திருக்கிறார் போல! புறப்பட்ட இடத்தில் கூட விமான நிறுவன ஊழியர்கள் இது பற்றி எச்சரித்திருக்கலாம்.

தினமும் சிரமமின்றி மலம் கழிக்க நிபுணர் சொல்லும் 4 எளிய பரிந்துரை

2 weeks 6 days ago
தினமும் சிரமமின்றி மலம் கழிக்க நிபுணர் சொல்லும் 4 எளிய பரிந்துரை Getty Images கட்டுரை தகவல் ரஃபேல் அபுச்சைபே பிபிசி நியூஸ் முண்டோ 13 நிமிடங்களுக்கு முன்னர் இரைப்பை குடல் மருத்துவர் ஜூலியானா சுவாரெஸ் சமூக ஊடகங்களில் பதிவிட ஆரம்பித்ததைத் தொடர்ந்து, ஓர் முக்கியமான பிரச்னையை கவனித்தார். அது, மக்கள் தங்களின் செரிமான அமைப்பின் செயல்பாடு குறித்து பேசுவதை அசௌகரியமாக உணர்கின்றனர். "அதை அவமானமாக நினைக்கின்றனர்; தங்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் குறித்து பேச தயங்குகின்றனர்," என அவர் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார். "இரைப்பை அழற்சி (gastritis), ஹெபடைடிஸ், கணைய அழற்சி (pancreatitis), ரிஃப்ளக்ஸ் (reflux) என பல பிரச்னைகள் குறித்தும் நான் பேசத் தொடங்கினேன். கேஸ்ட்ரோயென்ட்ராலஜிஸ்ட் (gastroenterologist) என்பதைக் கூட பலரால் சரியாக உச்சரிக்க முடியவில்லை." "அப்போதுதான் நான் மலம் குறித்து பேச ஆரம்பித்தேன். மக்கள் அதுகுறித்து எளிதாக பிணைத்துக் கொள்ளும் விதமான தரவுகளை வழங்கினேன். மக்கள் என்னை 'டாக்டர் பூப்' (Dr. Poop) என அழைத்தனர்," என கொலம்பியாவை சேர்ந்த அந்த நிபுணர் விவரித்தார். Dr. Juliana Suárez தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் செரிமான அமைப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் மருத்துவர் சுவாரெஸ் அப்போதிலிருந்து, ஜூலியானா சுவாரெஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை (@ladoctorapopo) செரிமான அமைப்பு எப்படி செயல்படுகிறது என்பது குறித்தும் மலம் தொடர்பான முக்கியமான உரையாடல்களை நிகழ்த்தவும் பயன்படுத்திவருகிறார். "தி ஆர்ட் ஆஃப் பூப்பிங்: ஹெல்த்தி டைஜெஷன், எ ஹப்பி லைஃப்" ("The Art of Pooping: Healthy Digestion, a Happy Life) எனும் மின்னணு புத்தகத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். "நாம் குழந்தைகளாக இருந்தபோது மலம் குறித்த ஒவ்வாமை நமக்கு ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், இப்பொது வயதுவந்தவர்களாக நாம் அதுகுறித்து இயல்பாக பேசுவதற்கான வெளி இருக்கிறது." தங்களின் செரிமான ஆரோக்கியம் தொடர்பாக மக்கள் செய்யும் முக்கிய தவறுகள் குறித்தும், எளிதாக மலம் கழிப்பதற்கான சில டிப்ஸ்கள் குறித்தும் அவர் பிபிசி முண்டோவிடம் பேசினார். 1. அதிக உணவுகளை சேருங்கள் Dr. Juliana Suárez மருத்துவர் ஜூலியானா சுவாரெஸின் புத்தகம் தொலைக்காட்சி, இதழ்கள், சமூக ஊடகங்கள் என பலவற்றிலும் பல "அதிசய டயட்கள்" குறித்து குறிப்பிடப்படுவதை நாம் கடந்துவருகிறோம். அவை, சில உணவுகளை நம் உணவுமுறையிலிருந்து நீக்குவதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும் என உறுதி கூறுகின்றன. ஆனால், ஜூலியானா சுவாரெஸ் இதற்கு எதிரான அறிவுரையை வழங்குகிறார்: "உணவு மட்டுமே பிரச்னை அல்ல, ஆனால் ஒவ்வொருவரின் உடலில் உள்ள நுண்ணுயிர்களும் முக்கியம் என நான் மக்களிடம் கூறுகிறேன்." நமது செரிமான அமைப்பில் பல பாக்டீரியாக்கள் நிறைந்திருக்கும் சூழல்தான் நுண்ணுயிர்களாகும், அவை நாம் உண்ணும் உணவை உடைக்க உதவுகின்றன. பலவித சூழலில் தான் நுண்ணுயிர்கள் செழித்து வாழும். சமூக ஊடகங்களில் "நேர்த்தியான உணவுமுறையை" கண்டறிவதில் பலருக்கும் தற்போது இருக்கும் பெரு விருப்பம், பலரையும் பலவித உணவுகளை தங்கள் உணவுமுறையிலிருந்து நீக்க வழிவகுக்கிறது என விளக்கும் அவர், இதனால் நுண்ணுயிர்கள் பலவீனமடைவதாக கூறுகிறார். "பருப்பு அல்லது க்ளூட்டன் (கோதுமை, சோளம் போன்ற உணவுகளில் உள்ள ஒட்டும் தன்மையுள்ள பொருள்) ஆகியவை இதற்கு காரணமல்ல. அவை தீயவை என்ற எண்ணம் உருவாகியுள்ளது. பூண்டும் காரணமல்ல, ஆனால் உணவுமுறையில் போதுமான நார்ச்சத்து உணவுகள் இல்லாதது, மன அழுத்தம், போதியளவு உடற்பயிற்சி செய்யாதது போன்றவற்றால் இந்த குடல் நுண்ணுயிர்கள் பாதிக்கப்படுகின்றன…" Getty Images இயற்கையான உணவுகளை சேர்த்துக்கொள்ளும்போது செரிமான அமைப்பு சிறப்பாக செயல்படும் என, மருத்துவர் சுவாரெஸ் கூறுகிறார் "நீங்கள் மறுபடியும் தேவையானவற்றை உண்ண ஆரம்பிக்க வேண்டும் என்றே நான் அந்த புத்தகத்தில் கூறியுள்ளேன். ஆனால், உங்கள் நுண்ணுயிரிகளை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சரிசெய்ய முடியும்." அனைத்து விதமான உணவுகளையும் உணவுமுறையில் சேர்ப்பதற்கு முன்பாக, சிறிது சிறிதாக இயற்கை உணவுகளை சேர்த்து பரிசோதிக்க வேண்டும் என அவர் பரிந்துரைக்கிறார்: "பால் சம்பந்தப்பட்ட உணவுகள், அதிக பழங்கள், காய்கறிகள், பீன்ஸ், பருப்பு வகைகள், கொண்டைக்கடலை, நட்ஸ், விதைகள் உள்ளிட்டவற்றை சேர்க்க வேண்டும்." 2. ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள், நேர்த்தியான உணவுமுறை மீது அதீத கவனம் வேண்டாம் Getty Images நல்ல தூக்கமும் செரிமானத்துக்கு உதவும் என்கிறார் மருத்துவர் சுவாரெஸ் உண்ணும் உணவை உடைப்பதுடன் இந்த நுண்ணுயிர்கள், நம் உடலில் நடக்கும் பலவித செயல்முறைகளை கட்டுப்படுத்துவதாக கூறுகிறார் ஜூலியானா சுவாரெஸ். அதாவது நம் மனநிலை முதல் நோயெதிர்ப்பு அமைப்பு வரை அவை கட்டுப்படுத்துகின்றன. எனவே, இந்த நுண்ணுயிர்கள் நம் நலனுக்கு அடிப்படையான அம்சமாக திகழ்வதாக அவர் தெரிவிக்கிறார். "வளர்சிதை மாற்ற ஆரோக்கியம், இதய நலன், ஹார்மோன் நலன், தோல் ஆரோக்கியம் ஆகியவற்றை இவை கட்டுப்படுத்துகின்றன. நுண்ணுயிர்கள் செழித்திருக்க நார்ச்சத்து உணவுகளை பிரதானமாக உண்ண வேண்டும், அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அல்ல," எனக் கூறுகிறார் அவர். மேலும், நுண்ணுயிர்கள் வாழும் சூழல், நம் வாழ்வின் பல காரணிகளுக்கு உணர்திறன் மிக்கவையாக உள்ளன. அதாவது மன அழுத்தம், நீண்ட காலமாக ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்துவது மற்றும் உடலுழைப்பு இல்லாத வாழ்வியல் முறை போன்றவை அவற்றை பாதிக்கின்றன. "பலவித நுண்ணுயிர்களை கொண்டவர்கள்தான் வலுவான செரிமான அமைப்பை கொண்டிருக்கின்றனர், அவர்கள் பலவிதமான உணவுகளை உண்கின்றனர், நல்ல தூக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்." எதை உண்ண வேண்டும், எதை உண்ண வேண்டாம் என்பதில் அதிகமாக கவனம் செலுத்துவது, அதுதொடர்பான பதற்றத்தை ஏற்படுத்தி, உணவை ரசித்து உண்ண முடியாதபடி செய்துவிடும் என ஜூலியானா சுவாரெஸ் நம்புகிறார். "இது நேர்த்தியான உணவுமுறையை பற்றியது அல்ல, சிறப்பானவற்றை தேர்ந்தெடுப்பதை பற்றியது, மேலும், எப்போதும் விதிவிலக்குகளுக்கு இடமிருக்க வேண்டும்." தன்னிடம் வரும் நோயாளிகள் பலருக்கும் அவர்களின் குடல் நுண்ணுயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் எனக்கூறும் அவர், "அவர்கள் கேரட்டுடன் கோழி இறைச்சியை சாப்பிடுவார்கள், ஏனெனில் மற்றவையெல்லாம் ஆபத்தானவை என நினைப்பார்கள்." என்கிறார். "உணவின் காரணமாக அறிகுறிகள் ஏற்படும்போது, செரிமானம் கடினமாகிறது, அப்போதுதான் மக்கள் சமூக வலைதளங்கள், ஊடகங்களை நாடுகின்றனர், உணவை குறைகூறுகின்றனர். அது பதற்றத்தை ஏற்படுத்தி, அதிக உணவுகளை தங்கள் உணவுமுறையிலிருந்து நீக்குவதற்கு வழிவகுக்கிறது." அதை அவர்கள் உணரும்போது, ஆரோக்கியமான நுண்ணுயிர்களுக்கு தேவையான பல உணவுகளை ஏற்கெனவே உணவுமுறையிலிருந்து நீக்கியிருப்பார்கள். 3. உடனடியாக தொடங்குகள், எப்போதும் நிறுத்தாதீர்கள் Getty Images பொம்மை வடிவில் குழந்தைகளுக்கு காய்கறிகளை பழக்க வேண்டும் என, மருத்துவர் சுவாரெஸ் அறிவுறுத்துகிறார் "இந்த பிரச்னைகளுள் பல குழந்தை பருவத்திலிருந்தே தொடங்குகின்றன," என மருத்துவர் சுவாரெஸ் கூறுகிறார். "குழந்தைகளின் வளர்ச்சியில் சில குறிப்பிட்ட தருணங்கள் உள்ளன, அதாவது மலம் கழிக்க பயிற்றுவிப்பது, இது கடும் அதிர்ச்சியை குழந்தைகளிடத்தில் ஏற்படுத்துபவையாக இருக்கும். அல்லது, குழந்தைகளின் உணவில் பழங்கள், காய்கறிகளை சேர்ப்பது, இதுவும் மிகவும் எளிதானது அல்ல." மருத்துவர் சுவாரெஸ் கூற்றுப்படி, குழந்தை பருவத்திலிருந்தே அவர்களுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதற்கு பழக்க பெற்றோர்கள் பெரும்பாலும் தவறிவிடுகின்றனர். அவற்றை பொம்மை வடிவில் வழங்குவதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும். "உதாரணமாக, அவகடோவை வைத்து பொம்மைக்கு மாஸ்க் செய்ய வேண்டும், அதை குழந்தைகள் உண்ணப் போவதில்லை, ஆனால் அதன்மூலம் குழந்தைக்கு அவகடோ குறித்து தெரியப்படுத்தி, விளையாடுவதன் மூலம், வளர்ந்தபிறகு தன்னுடைய உணவில் எளிதாக சேர்த்துக்கொள்ளலாம்." புதிய வாசனை, சுவை, பலவித தன்மை (texture) கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்வது மிகுந்த பலனளிக்கும்: வாழ்க்கையின் எந்த கட்டத்திலும் இதை செய்யலாம் எனக்கூறும் சுவாரெஸ், இது தனக்கே நிகழ்ந்திருப்பதாக கூறுகிறார். "எனக்கு கத்தரிக்காய் (eggplant) பிடிக்காது, ஆனால் இரு ஆண்டுகளுக்கு முன்புதான் அதனை சாப்பிட கற்றுக்கொண்டேன். எனக்கு அவகடோ எப்போதுமே பிடிக்காது. ஆனால், அதன் சுவைக்கு நீங்கள் பழகாவிட்டால், அது உங்கள் உணவிலிருந்து வெளியேறிவிடும்." அவரின் கூற்றுப்படி, இத்தகைய புதிய உணவுகள் மூலம் குடல் நுண்ணுயிர்களை பழக்குவதன் வாயிலாக நம்முடைய சுவையையும் நாம் பயிற்றுவிக்கிறோம். "சுவை என்பது நுண்ணுயிர்களை பொறுத்து பெரிதும் கட்டுப்படுத்தப்படுவதால், அதற்கேற்ப மாறுபடுகிறது." 4. உங்கள் உடல் சொல்வதை கேளுங்கள் Getty Images ஏராளமான தகவல்களை நம் விரல் நுணியில் வைத்திருந்தாலும், மக்கள் தங்களின் உடல்கள் குறித்து எவ்வளவு குறைவாக அறிந்துவைத்துள்ளனர் என்பதையும் பல விஷயங்களை கேட்பது குறித்து சங்கடமாக உணருவதையும் குறித்து தான் ஆச்சர்யப்படுவதாக மருத்துவர் சுவாரெஸ் கூறுகிறார். "சரியாக மலம் கழிக்காதவர்கள் தான் உடலை சுத்திகரிப்பது (cleanse) குறித்து கேட்கின்றனர். மனிதர்களாக நம் உடலில் பலவித வேலைகளை செய்யும் உறுப்புகள் உள்ளன; சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல் உள்ளன, மேலும் கழிவுகளை கையாளும் பெருங்குடல் உள்ளது." "அதுகுறித்து நாம் தெரிந்துவைத்திருந்தால், உடலை சுத்திகரிக்க வேண்டும் என நினைக்க மாட்டோம், மாறாக நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள், பழங்கள், காய்கறிகளை அதிகமாக உட்கொள்வோம், உடற்பயிற்சி செய்வோம், நன்றாக உறங்குவோம், சரியான வழியில் மலம் கழிப்போம்." உங்கள் உடல் சொல்வதை கேளுங்கள், தனக்கு என்ன தேவை என்று உங்கள் உடல் தான் முதலில் சொல்லும். "ஜிம் அல்லது வேலைக்கு செல்வதற்காக காலையில் சீக்கிரமாக எழும் பலர் காலை உணவை தவிர்ப்பதை பார்க்கிறோம், அதனால், காலையில் மலம் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலும் பணியிடங்களில் தான் தோன்றும். ஆனால், "யாராவது முகம் சுளிப்பார்கள்" என நினைத்து அதனை அடக்கிவைப்பார்கள்." "செரிமான அமைப்பு என்பது வாய் மற்றும் ஆசனவாயை இணைக்கும் மிக பிரத்யேகமான குழாய் என்பதை நாம் அறிந்துகொள்ளவில்லை. அதன் வழியாகத்தான் சத்துக்கள் உறிஞ்சப்படுகின்றன, கழிவுகள் உற்பத்தியாகின்றன. தினந்தோறும் கழிவுகளை வெளியேற்றாவிட்டால், மலம் கழிக்க போதிய நேரம் ஒதுக்கவில்லை என்றால், நீங்கள் பிரச்னைகளை சந்திக்க வேண்டிவரும்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c147nnmnxxpo

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு.

2 weeks 6 days ago
மூவாயிரம் யூரோ செலவாகும் மருந்தை "சும்மா கொடுப்பதை" சொல்கிறீர்களா? ஒரு தடவை யோசித்துப் பாருங்கள்: உலகத்தில் ஏதாவது மருந்து இலவசமாக யாருக்காவது கிடைக்கிறதா? பெற்றுக் கொள்பவர் விலையைக் கொடுக்கா விட்டால் அது சும்மா வருகிறது என்று அர்த்தமல்ல. எங்கோ இருந்து வேறொருவர் விலையைக் கொடுத்திருக்கிறார் , பெறுனர் பயன் பெற்றிருக்கிறார் என்று தான் அர்த்தம். சில வளர்ந்த நாடுகளில் இது பெறுனரே வேறு வழிகளில் செலுத்தும் வரியாக இருக்கும், இலங்கை போன்ற நாடுகளாக இருந்தால், செல்வந்த நாடுகள் கொடுத்த நன்கொடையாக இருக்கும். ஒரு முதலைப் போட்டு, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்து ஒரு பொருளை உருவாக்கி, அதை சும்மா கொடுத்தால், இந்தப் பொருளை தொடர்ந்து எப்படி உற்பத்தி செய்வது? இதைச் செய்யும் மாயாஜாலம் எதுவும் முதலாளித்துவத்திலோ, சோசலிச, கம்யூனிச அமைப்பிலோ கண்டு பிடிக்கப் படவில்லை. எனவே, வேலை செய்யும் மருந்துகள் விலைக்குத் தான் கிடைக்கும் (வேலை செய்யா போலி மருந்துகள் சும்மா கிடைக்கலாம், அது வேறு கதை😎). ஆனால், பெறுனருக்கு பொருளாதார வசதியில்லா விட்டால், அரசு தலையிட்டு மருந்தைப் பெற்றுக் கொடுக்கும் படி செய்யலாம். அமெரிக்காவிலேயே இந்த மாதிரியான நிவாரணங்கள் இருக்கின்றன.

யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் - பிரதேச சபை அறிவிப்பு!

2 weeks 6 days ago
ஒரு ஐந்து பெட்டை நாயை வைத்துக் கொண்டு ஒவ்வொரு முகாமாக மாறி மாறி ஐம்பது தரம் கொண்டு போனால் 30000 கிடைக்கலாம் ...... பிடிபட்டால் கம்பெனி பொறுப்பல்ல ......! 😃

முல்லைத்தீவில் வெளிச்சவீடு அமைக்குமாறு ரவிகரன் எம்.பி கோரிக்கை

2 weeks 6 days ago
10 Sep, 2025 | 12:03 PM முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளிச்சவீடு இன்மையால் மீனவர்கள் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், எனவே முல்லைத்தீவில் வெளிச்சவீடொன்று அமைக்கப்படவேண்டுமென கடற்றொழில் அமைச்சிடம் கோரிக்கைவிடுத்துள்ளார். இந்நிலையில் வெளிச்சவீடு அமைப்பது தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவில் தீர்மானமொன்றை நிறைவேற்றி அனுப்புமாறும், தம்மால் வெளிச்சவீடு அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோரால் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற கடற்றொழில் அமைச்சின் ஆலோசனைக்குழுக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மணற்குடியிருப்பு கடற்கரைப்பகுதியில் கடந்த 1950ஆம் ஆண்டு காலப்பகுதியில் கட்டப்பட்ட வெளிச்சவீடொன்று காணப்பட்டது. இந்த வெளிச்சவீட்டினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் 74 கிலோமீற்றர் தூரமான கரையோரத்தில் கொக்கிளாய் தொடக்கம் பேப்பாரப்பிட்டிவரையிலுள்ள மீனவர்கள் பயனடைந்தவந்தனர். குறித்த வெளிச்சவீட்டின் உதவியுடனேயே மீனவர்கள் தொழிலுக்குச் சென்று தமது மீன்பிடித் துறைகளுக்கு கரைதிருப்பிவந்தனர். இவ்வாறாக மீனவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாகவிருந்த இந்த வெளிச்சவீடு கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்துடன் முற்றாக அழிவடைந்துள்ளது. எனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது மீனவர்கள் வெளிச்சவீடின்றி பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். எனவே மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினையைக் கருத்தில்கொண்டு கடற்றொழில் அமைச்சு முல்லைத்தீவில் வெளிச்சவீடொன்றை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென கோரிக்கைவிடுத்தார். இந்நிலையில் வெளிச்சவீடு அமைப்பதுதொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றி அனுப்புமாறும், குறித்த வெளிச்ச வீடு அமைப்பது தொடர்பில் தம்மால் நடவடிக்கை எடுக்கப்படுமென கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோரால் தெரிவிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/224710#google_vignette

தக்காளியின் கலப்பு இனப்பெருக்கத்தில் உருளைக்கிழங்கு உருவானது எப்படி? சுவாரஸ்யமான அறிவியல் கதை

2 weeks 6 days ago
Getty Images ஒருவகை காட்டு தக்காளியில் இருந்து பரிணாம வளர்ச்சியடைந்தது உருளைக் கிழங்கு என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கட்டுரை தகவல் டலியா வென்சுரா பிபிசி முண்டோ 10 செப்டெம்பர் 2025, 04:52 GMT புதுப்பிக்கப்பட்டது 10 செப்டெம்பர் 2025, 06:02 GMT சுமார் 90 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, பின்னாளில் தென் அமெரிக்கா என்று அழைக்கப்படும் பகுதியில், ஆண்டிஸ் மலைத்தொடர் இன்னமும் உருவாகிக்கொண்டிருந்தபோது, தாவரங்கள் இயற்கையாக வளர்ந்திருந்தன. அப்போது மனிதர்கள் இருந்திருக்கவில்லை. அப்போது இரண்டு தாவரங்கள் "உண்மையில், இரண்டு தாவர இனங்கள்" அருகருகே வாழ்ந்து வந்தன "அவை இன்று நாம் காணும் தக்காளிகளின் (சோலனம் லைகோபெர்சிகம்- Solanum lycopersicum) முன்னோடிகள் மற்றும் சோலனம் எட்யூபெரோசம்(Solanum etuberosum) எனப்படும் ஒரு தாவர வகையின் முன்னோடிகள். இதன் தற்போதைய மூன்று இனங்கள் சிலி மற்றும் ஜுவான் ஃபெர்னாண்டஸ் தீவுகளில் காணப்படுகின்றன," என்று லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் தாவரவியல் நிபுணர் சாண்ட்ரா நாப் கூறினார். அவற்றின் பெயர்களில் இருந்து அவை தொடர்புடையவை என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம், அவை ஒன்றோடொன்று கலந்து இனப்பெருக்கம் அடைந்தன. "இவ்வாறு உருவாகியது புதிய தாவரம் ஒன்றை உருவாக்கிய மரபணுக்களின் மறுசீரமைப்பு," என்றும் இது "அந்த தாவரத்தை குளிர் மற்றும் வறண்ட ஆண்டிஸ் மலைப்பகுதிகளில் செழித்து வளர அனுமதித்தது" என்றும் நாப் கூறுகிறார், நிபுணர்கள் இதை இனங்களுக்கு இடையிலான கலப்பு இனப்பெருக்கம்( இன்டர்ஸ்பெசிஃபிக் ஹைப்ரிடைசேஷன் - interspecific hybridisation) என்று அழைக்கிறார்கள், இவ்வகை இனப்பெருக்கம் அடிக்கடி நிகழ்கிறது, சில சமயங்களில் இதன் விளைவுகள் துரதிர்ஷ்டவசமாக இருந்தன. உதாரணமாக, பெண் குதிரைக்கும் ஆண் கழுதைக்கும் இடையிலான இனச்சேர்க்கை காரணமாக கோவேறு கழுதை பிறக்கிறது. இது வெற்றிகரமான கலப்பினமாக இருந்தாலும், பழங்காலம் முதல் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அதற்கே தம்மை இனப்பெருக்கம் செய்யும் திறன் இல்லை. தாவர உலகில், இனங்களுக்கிடையேயான கலவைகள் அடிக்கடி நிகழ்கின்றன என்று நாப் கூறுகிறார் - இப்படித்தான் நாம் தோட்டத் தாவரங்களைப் பெரும்பாலும் பெற்றுள்ளோம். இந்த கலப்பு இயற்கையாகவோ அல்லது மனிதர்களின் தலையீட்டாலோ நடக்கலாம், இரண்டு வகை பெற்றோரின் கலவையான தாவரங்களை உருவாக்குகிறது. "சில சமயங்களில் அவை மலட்டுத்தன்மை கொண்டவையாக இருக்கும், எனவே அவை ஒரு புதிய இனமாக உருவாகாது," என்று அவர் கூறுகிறார். ஆனால் சூழ்நிலைகளின் சேர்க்கைக்கு பொருத்தமாக இருக்கும்போது, அந்த கலவையின் விளைவு எதிர்பார்ப்புகளை விஞ்சுவதாக அமையும். அப்படித்தான் அன்று நடந்தது. லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சோலானேசியே (Solanaceae) குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு இனங்களுக்கு இடையிலான தற்செயலான கலப்பில் இருந்து உருளைக்கிழங்கு பிறந்தது. LOC/Biodiversity Heritage Library சோலனம் லைகோபெர்சிகம்(இடது) மற்றும் சோலனம் எட்யூபெரோசம் (வலது), இவை உருளைக்கிழங்கை உருவாக்கின. "நம் அன்றாட வாழ்வில் மிகவும் முக்கியமாக உள்ள உருளைக்கிழங்குக்கு இப்படி ஒரு பழமையான, அசாதாரணமான துவக்கம் இருப்பது மிகவும் சுவாரஸ்யமானது," என்று நாப் கூறுகிறார். "தக்காளி அதன் தாய், எடூபரோசம் தந்தை" என்று சீன வேளாண் அறிவியல் அகாடமியின் பேராசிரியர் சான்வென் ஹுவாங் அறிவித்தார், அவர் ஜூலை மாதம் செல் (Cell) இதழில் வெளியிடப்பட்ட சர்வதேச ஆய்வுக்கு தலைமை தாங்கினார். நீண்டகால மர்மம் எப்படி அகன்றது? சந்தையில் பார்க்கும்போது, கடினமான, மாவுத்தன்மை கொண்டதாக அமைந்த உருளைக்கிழங்கு, சிவப்பான, சாறுள்ள தக்காளியைப் போன்று தெரியவில்லை என்றாலும், "அவை மிகவும், மிகவும் ஒத்தவை," என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த நாப் கூறுகிறார். அந்த விஞ்ஞானியின் கூற்றுப்படி, இரண்டு தாவரங்களின் இலைகளும் பூக்களும் மிகவும் ஒத்தவை, மேலும் உருளைக்கிழங்கு தாவரத்தின் பழம் கூட ஒரு சிறிய பச்சை தக்காளி போலத் தெரிகிறது. எனவே, இந்த ஆராய்ச்சியின் தொடக்கத்திலேயே இது எதிர்பார்க்கப்பட்டதுதான். "நாம் பார்ப்பதைத் தாண்டி, உருளைக்கிழங்குகள், தக்காளிகள் மற்றும் எடூபரோசம் ஆகியவை நெருங்கிய தொடர்புடையவை என்று நமக்கு நீண்ட காலமாகத் தெரியும்," என்று அவர் கூறுகிறார். "ஆனால் உருளைக்கிழங்குக்கு எது மிக நெருக்கமானது என்பது நமக்குத் தெரியாது, ஏனென்றால் வெவ்வேறு மரபணுக்கள் நமக்கு வெவ்வேறு தகவல்களைக் கூறின." Thompson & Morgan உருளைக்கிழங்குகளும் தக்காளிகளும் மிகவும் ஒத்தவை, அவற்றை ஒட்டுவதால், இந்த டாம்டேடோ (TomTato) என்று அழைக்கப்படும் தாவரம் போன்ற இரண்டையும் உருவாக்கும் ஒரு தாவரம் பிறக்கிறது. இதை தாம்சன் & மோர்கன் என்ற தோட்டக்கலை நிறுவனம் உருவாக்கியது. பிரபலமான உருளைக் கிழங்கின் தோற்றம் குறித்த புதிரை அவிழ்க்க விஞ்ஞானிகள் பல தசாப்தங்களாக முயற்சித்துள்ளனர், ஆனால் அவர்கள் ஒரு சிக்கலை எதிர்கொண்டனர். உருளைக்கிழங்கின் மரபியல் அசாதாரணமானது. மனிதர்கள் உட்பட பெரும்பாலான உயிரினங்களுக்கு ஒவ்வொரு செல்லிலும் இரண்டு குரோமோசோம்களின் நகல்கள் இருக்கும் நிலையில், உருளைக்கிழங்குக்கு நான்கு உள்ளன. எனவே, இந்த முரண்பாட்டைத் தீர்க்க, ஆராய்ச்சியாளர்கள் குழு, உருளைக்கிழங்கு, தக்காளி மற்றும் எடூபரோசம் உட்பட டஜன் கணக்கான இனங்களிலிருந்து 120க்கும் மேற்பட்ட மரபணுக்களை (ஒரு செல்லில் உள்ள மரபணுக்களின் முழுமையான தொகுப்பு) பகுப்பாய்வு செய்தனர். அவர்கள் வரிசைப்படுத்திய உருளைக்கிழங்கு மரபணுக்கள் கிட்டத்தட்ட அதே தக்காளி-எடூபரோசம் பிளவைக் காட்டின. உருளைக் கிழங்கின் முன்னோடி "இதுவும் இல்லை, அதுவும் இல்லை: அது இரண்டும்," என்று நாப் வலியுறுத்துகிறார். அப்படியாகத்தான், தென் அமெரிக்க மலைகளின் அடிவாரத்தில் லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த காதல் உறவை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். "இது ஒரு வெற்றிகரமான கலவையாகும், ஏனென்றால் இது ஆண்டிஸ் மலைத்தொடரின் புதிதாக உருவாக்கப்பட்ட உயரமான வாழ்விடங்களில் இந்த புதிய இனம் செழிக்க அனுமதித்த மரபணு சேர்க்கைகளை உருவாக்கியது" என்று நாப் விளக்குகிறார். உருளைக்கிழங்கு தாவரத்தின் தரைக்கு மேல் இருக்கும் பகுதி அதன் பெற்றோரை ஒத்திருந்தாலும், அதில் ஒரு அம்சம் மறைந்திருந்தது, அது வேறு எந்த தாவரத்திற்கும் இல்லை: அதுதான் கிழங்குகள். கிழங்குகள் இருப்பது என்பது எப்போதும் கைவசமாக ஒரு உணவுக் கூடை வைத்திருப்பது போன்றது: அவை ஆற்றலைச் சேமித்து, குளிர்காலம், வறட்சி அல்லது வேறு எந்தச் சாதகமற்ற சூழ்நிலைகளிலும் உயிர்வாழ உதவுகிறது. Getty Images வரைகலையில் உள்ள "c" எழுத்து, சிறிய தக்காளிகள் போன்ற உருளைக்கிழங்கின் பழங்களைக் காட்டுகிறது. நடந்திருக்கும் மரபணு குலுக்கல் விஞ்ஞானிகள் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தையும் கண்டுபிடித்தனர்: கிழங்குகளை உருவாக்கிய தாவரம், ஒரு மரபணு குலுக்களில் வென்றதன் மூலம் அவ்வாறு செய்தது. அவற்றின் முன்னோடிகளில் ஒவ்வொன்றும் கிழங்குகள் உருவாக முக்கியமான ஒரு மரபணுவைக் கொண்டிருந்தன. ஆனால் அவற்றில் எதுவுமே தனியாகப் போதுமானதாக இல்லை, எனவே அவை இணைந்தபோது, அவை நிலத்தடி தண்டுகளை சுவையான உருளைக்கிழங்குகளாக மாற்றுகிற செயல்முறையைத் தூண்டின. நாப் உடன் பணிபுரிந்த சீனக் குழுவால் இதை நிரூபிக்கவும் முடிந்தது. "அவர்கள் தங்கள் கருதுகோளை உறுதிப்படுத்த இந்த மரபணுக்களை நீக்கி, பல நேர்த்தியான பரிசோதனைகளைச் செய்தனர்," என்று அவர் கூறுகிறார், "அவை இல்லாமல், கிழங்குகள் உருவாகவில்லை." உருளைக்கிழங்கை உருவாக்கிய இனக்கலப்பு ஒரு மகிழ்ச்சியான விபத்தை விடவும் கூடுதலானதாகும். அது ஒரு புதிய உறுப்பையே உருவாக்கியது. உருளைக்கிழங்கு என்ற இந்த உறுப்பு ஒரு பரிணாம சாதனையாகக் கருதப்படுகிறது. அந்த கிழங்கின் இருப்பு காரணமாக விதை அல்லது மகரந்தச் சேர்க்கைகளின் தேவை இல்லாமல் தாவரம் இனப்பெருக்கம் செய்துகொள்ள அனுமதித்தது. பல்வேறு உயரங்களுக்கும், சூழ்நிலைகளுக்குத் தகவமைத்துக் கொள்ள முடிந்தது, இது பன்முகத்தன்மையில் ஒரு அதிரடிக்கு வழிவகுத்தது. இன்றும், "அமெரிக்காவில் மட்டுமே தென்மேற்கு ஐக்கிய மாகாணங்கள் முதல் சிலி மற்றும் பிரேசில் வரை 100க்கும் மேற்பட்ட காட்டு இனங்கள் காணப்படுகின்றன" என்று நாப் கூறுகிறார். Shenzhen Institute of Agricultural Genomics, Chinese Academy of Agricultural Sciences மேலோட்டமாகப் பார்த்தால், எடூபரோசம் (இடது) மற்றும் டியூபரோசம் (வலது) ஆகியவை ஒத்ததாகத் தோன்றலாம், ஆனால் பிந்தையதின் மாவுத்தன்மை கொண்ட கிழங்குகள்தான் உருளைக்கிழங்கை மிகவும் பிரபலமான பயிராக மாற்றுகின்றன. மரபணுவால் ஏற்படும் பலவீனங்கள் இருப்பினும், பாலின தொடர்பு இல்லாமல் இனப்பெருக்கம் செய்யும் இந்த திறன் உருளைக்கிழங்கிற்கு தீங்கையும் விளைவித்துள்ளது. "அவற்றை வளர்க்க, நீங்கள் ஒரு உருளைக்கிழங்கின் சிறிய துண்டுகளை நடவு செய்கிறீர்கள், அதாவது நீங்கள் ஒரே வகையை கொண்ட ஒரு வயலை வைத்திருந்தால், அவை அடிப்படையில் பிரதிகள்," என்று டாக்டர் நாப் விளக்குகிறார். மரபணு ரீதியாக ஒரே மாதிரியாக இருப்பதால், உருளைக்கிழங்கு தாவரங்களில் புதிய நோய்க்கு எதிராக எந்தத் தடுப்பு சக்தியும் இருக்காது. இது விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியை நடத்தியதற்கான காரணத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. நாப்பின் கூற்றுப்படி, சீனக் குழு, விதைகளிலிருந்து இனப்பெருக்கம் செய்யக்கூடிய மற்றும் மரபணு ரீதியாக மாற்றியமைக்கப்படக்கூடிய உருளைக்கிழங்குகளை உருவாக்க விரும்புகிறது. காட்டு இனங்களிலிருந்து மரபணுக்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், சுற்றுச்சூழல் சவால்களை சிறப்பாகத் தாங்கக்கூடிய வகைகளை உருவாக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். "இந்த ஆய்வில் ஈடுபட்ட மற்ற பரிணாம உயிரியலாளர்களும் நானும், உருளைக்கிழங்குகளின் மிக நெருங்கிய உறவு எது என்பதையும், அவை ஏன் இவ்வளவு பன்முகத்தன்மை கொண்டவை என்பதையும் கண்டறிய விரும்பினோம்," என்று அவர் கூறுகிறார். "எனவே, நாங்கள் மிகவும் மாறுபட்ட கண்ணோட்டங்களில் இருந்து ஆராய்ச்சியை அணுகினோம், மேலும் எங்கள் ஒவ்வொரு கண்ணோட்டத்திலிருந்தும் கேள்விகளைக் கேட்க முடிந்தது, இது ஆய்வில் பங்கேற்கவும் பணியாற்றவும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1dq30qlzreo

இலங்கை முன்னேற்றம் அடைந்துள்ளது - உலக வங்கி

2 weeks 6 days ago
நெருக்கடிக்குப் பின்னர் பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை பொது நிதி மதிப்பாய்வானது சமச்சீர் நிதி சரிசெய்தலை நோக்கி நிலைப்படுத்தல் முயற்சிகளை இலங்கை முன்னெடுத்துள்ளது. முதன்மை இருப்பானது 2021 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 7.9 சதவீதத்தால் குறைந்த நிலையில் தற்போது அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. கடந்த கால கொள்கை தவறுகளை மாற்றியமைத்தல் மற்றும் அடிமட்டத்தில் இருந்து வரிகளை அதிகரித்தல் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க வருவாய் அதிகரிப்பு நடவடிக்கைகளால் இது உந்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 9.6 சதவீத மொத்த பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னர் 2024 ஆம் ஆண்டில் சுமார் 5 சதவீதம் பொருளாதாரம் மீண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2024 வரை பொருட்களின் விலைகள் அதிகமாக இருந்தபோதிலும், பணவீக்கத்தைச் சமாளிப்பதற்கான நிதி மற்றும் பணவியல் முயற்சிகள் குடும்பங்களுக்கு, குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளுக்கு பயனளித்துள்ளதாகவும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. கடன் மறுசீரமைப்பு நிறைவடைந்தவுடன் கடன் நிலைத்தன்மை மீட்டெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது இது நிதிச் சந்தைகளுக்கான அணுகலை மீண்டும் பெறுவதற்கான ஒரு அத்தியாவசிய படியாகும். வளர்ச்சி அல்லது சமத்துவத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தாமல் 2029 ஆம் ஆண்டுக்குள் இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம் வரை வருவாயை அதிகரிக்க முடியும் என்பதை இந்த மதிப்பாய்வு எடுத்துக்காட்டுகிறது. பொது செலவினங்களை சிறப்பாக இலக்கு வைப்பதும் நிர்வகிப்பதும் தற்போதைய வரவு செலவு திட்ட வரம்புகளுக்குள் மேம்பட்ட விளைவுகளை வழங்க முடியும் என்பதையும் உலக வங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmfdz9ky600bcqplp45ysbrdu

Tamil Genocide Illustrations

2 weeks 6 days ago
AI was used to create these illustrations, which offer a glimpse of the Mullivaikkal massacre and the Eelam Tamil Genocide. I, Nanni Chozhan, used a variety of AI picture production technologies to create all of the images on this page. However, I make them available under free copyrights, so anyone can use them for educational purposes. Only those who are 18 years of age or older are advised to view these photographs.

இஸ்ரேல் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளது

2 weeks 6 days ago
கத்தாரில் இஸ்ரேல் தாக்குதல் பற்றி அரபு ஊடகங்கள் கூறுவது என்ன? Reuters 10 செப்டெம்பர் 2025, 10:05 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் செப்டம்பர் 9 அன்று கத்தாரின் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், அமெரிக்காவின் பங்கு இருந்ததாக அரபு மற்றும் பிராந்திய ஊடகங்கள் கூறுகின்றன. இந்த தாக்குதல், உயர்நிலை ஹமாஸ் பேச்சுவார்த்தை குழுவை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. செளதி அல் அரேபியா டிவியின் செய்தித் தொகுப்பில், இஸ்ரேல் ஊடகங்களில் வந்த செய்தியை மேற்கோள் காட்டி, தாக்குதல் குறித்து அமெரிக்காவுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதாகவும், அதிபர் டிரம்ப் அதற்கு "பச்சைக்கொடி காட்டினார்" என்றும் ஒரு அதிகாரி கூறியதைத் தெரிவித்தது. மேலும், பெயர் வெளியிட விரும்பாத ஹமாஸ் தலைவர் ஒருவரின் கூற்றைச் சுட்டிக்காட்டிய அந்த தொலைக்காட்சி, தாக்குதல் தோல்வியடைந்தது, பேச்சுவார்த்தை குழுவினர் உயிர் பிழைத்தனர் என்றும் தெரிவித்தது. "தோல்வியடைந்த தாக்குதல்" என்று அல் அரேபியா சேனல் விவரித்ததைப் பற்றி விவாதிக்க பாதுகாப்பு ஆய்வாளர் ரியாட் கஹ்வாஜியை அழைத்தது. இந்த தாக்குதல் இஸ்ரேலின் தவறான மதிப்பீடு மற்றும் உளவுத்துறை தோல்வியைக் காட்டுகிறது அல்லது பேச்சுவார்த்தை குழுவினருக்கு உளவியல் அழுத்தம் கொடுத்து பயத்தை ஏற்படுத்தி, அவர்களை சமரசம் செய்யத் தள்ளும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது என கஹ்வாஜி கூறினார். அல் அரேபியா, தொடர்ச்சியாக வெளியிட்ட முக்கிய செய்திகளில், இந்த தாக்குதல் குறித்து செளதி அரேபியா தெரிவித்த கண்டனத்தையும் பதிவு செய்தது "கத்தார் எத்தகைய நடவடிக்கை எடுத்தாலும் அதனை ஆதரிக்க எங்களின் திறன் அனைத்தையும் வழங்குவோம். இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு கடுமையான விளைவுகள் ஏற்படும் என செளதி அரசு எச்சரித்ததாகவும் அந்த தொலைக்காட்சி கூறியது. AL ARABIYA TV கத்தாரின் தலைநகர் தோஹா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், அமெரிக்காவின் பங்கு இருந்ததாக அரபு மற்றும் பிராந்திய ஊடகங்கள் கூறுகின்றன 'அமெரிக்காவை நம்ப வேண்டாம்' இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி இயக்கத்தின் அல்-மசிரா டிவி சேனல் தனது இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில், ஆரம்பத் தகவல்களின்படி இந்தத் தாக்குதல் அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டதாக கூறியது. இதற்கிடையில், அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஒரு நிபுணர், அரபு நாடுகளின் பங்கைப் பற்றி பேசினார். "ஜூன் மாதத்தில் அமெரிக்காவின் அல்-உதீத் ராணுவத் தளத்தை குறிவைத்த இரானிய ராக்கெட்டுகளைத் தடுத்த அரபு பாதுகாப்பு அமைப்புகள் இப்போது எங்கே?" என்று கேள்வி எழுப்பினார் அவர் மேலும், அரபு நாடுகள் வெளியிடும் அறிக்கைகளைச் சுட்டிக்காட்டி, "'நாங்கள் கண்டிக்கிறோம். நாங்கள் கோருகிறோம்' போன்ற வார்த்தைகளே அதிகம் உள்ளது" என்றார் அவர். ஹூத்தி உச்ச அரசியல் கவுன்சில் (SPC) தலைவர் மஹ்தி அல்-மஷாத், "குற்றவாளி டிரம்பின் அனுமதி இல்லாமல் இந்தத் தாக்குதல்கள் நடந்திருக்காது" என்று கூறி, அமெரிக்கா உடந்தையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். ஹூத்தி கட்டுப்பாட்டில் உள்ள சபா செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "சியோனிச எதிரி (இஸ்ரேல்) இருக்கும் வரை பிராந்தியத்தில் அமைதியோ, நிலைத்தன்மையோ இருக்க முடியாது என்பதை இந்தச் சம்பவம் எந்த சந்தேகமும் இல்லாமல் நிரூபித்துள்ளது" என்றும் அவர் தெரிவித்தார். Reuters மேலும், இது அனைத்து அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது என்றும், "தாமதமாகிவிடும் முன் எச்சரிக்கையாக இருங்கள். சியோனிச அச்சுறுத்தலை எதிர்கொள்ள நாம் ஒன்றுபடாவிட்டால், தோஹாவில் நடந்தது மற்ற நாடுகளிலும் மீண்டும் மீண்டும் நடக்கும்" என்றும் மஷாத் எச்சரித்தார். தொடர்ந்து பேசிய அவர், "இஸ்லாமியர்களே, அமெரிக்காவை நம்பாதீர்கள். அது சியோனிசத்தின் ஆதரவாளரும், பணியாளரும் ஆகும்'' என்றார். லெபனானின் ஹெஸ்பொலா இயக்கத்தின் அல்-மனார் டிவி, லெபனான் அதிபர் ஜோசப் அவுன் உட்பட பல பிராந்திய தலைவர்களின் கண்டன அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டது. அந்த சேனல், கத்தாரின் மத்தியஸ்தர் பங்கு குறித்து ஒரு நிபுணருடன் விவாதித்தது. "அரபு நாடுகளின் பங்கு சரியான பாதைக்கு திரும்ப வேண்டும். எங்களுக்கு இப்போது உண்மையான, தீவிரமான பங்கு தேவை. பாதிக்கப்பட்டவருக்கும் தண்டனை வழங்குபவருக்கும் இடையில் நீங்கள் மத்தியஸ்தராக இருக்க முடியாது" என்றார் அந்த நிபுணர். லெபனான் அரசு செய்தி நிறுவனமான என்என்ஏ (NNA), அதிபர் அவுனின் அறிக்கையை மேற்கோள் காட்டியது. கத்தார், அதன் தலைமை மற்றும் மக்களுடன் தனது நாட்டின் ஒற்றுமையை அதில் வலியுறுத்தினார் அதிபர் அவுன். மேலும், ''இந்தத் தாக்குதல், இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களின் ஒரு பகுதியாகும். இது, பிராந்திய நாடுகளில் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் தகர்க்கும் நடவடிக்கை" என்று கூறியிருந்தார். ஹெஸ்போலா சார்பு கொண்ட அல்-அக்பர் பத்திரிகையும், இந்த தாக்குதலுக்கு எதிராக வெளியான பரவலான சர்வதேச மற்றும் அரபு கண்டனங்களை முன்னிலைப்படுத்தியது. இது, "பிராந்தியத்தின் பாதுகாப்பை அச்சுறுத்தும் விரிவாக்கமாக கருதப்படுகிறது" என்று அது குறிப்பிட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd72dxe9d2eo
Checked
Wed, 10/01/2025 - 10:00
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed