புதிய பதிவுகள்2

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

2 weeks 2 days ago
யாழ். அல்லைப்பிட்டியில் சிறுவன் படுகொ*லை - மர்ம முடிச்சுகள் அவிழுமா? காணொளி: 👉 https://www.facebook.com/reel/2224159248112226 👈

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

2 weeks 2 days ago
நிற்காமல் போனால் ஆளுக்கு சுடலாம்தானே? - என வாதிடுவோர் கவனத்துக்கு.. இலங்கையில் பொலிஸ் கட்டளையை மீறிச் சென்ற வாகனங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சட்ட ரீதியான நீதி கிடைத்த அல்லது அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட சில முக்கிய உதாரணங்களை முதலில் குறிப்பிடுகிறேன். 1. நாரம்மல துப்பாக்கிச் சூடு (2024) நாரம்மல பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்றதாகக் கூறப்பட்ட லொறி மீது சிவில் உடையில் இருந்த பொலிஸ் அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தச்சர் ஒருவர் (K.A. Roshantha Kumarasiri) உயிரிழந்தார். January 18, 2024 ⚖️ நீதிமன்ற நடவடிக்கை: இச்சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் (SI) மற்றும் பொலிஸ் கொஸ்தாபல் ஆகியோர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டனர். ⚖️ உடனடி நஷ்டஈடு: சம்பவத்தைத் தொடர்ந்து, அப்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் உயிரிழந்தவரின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று முதற்கட்டமாக 1 மில்லியன் ரூபா (10 இலட்சம்) நஷ்டஈட்டுச் காசோலையை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார். ⚖️ உயர் நீதிமன்றத்தில் வழக்கு: உயிரிழந்தவரின் மனைவி காமனி ரூபிகா பிரியங்கனி, தனது கணவரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் (FR) மனுவைத் தாக்கல் செய்தார். இதில் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரசினால் 200 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. ⚖️ வழக்கின் தற்போதைய நிலை: இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இது தொடர்பில் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் விடுத்திருந்தது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்காக முன்னிலையாகப் போவதில்லை எனச் சட்டமா அதிபர் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அடுத்த வழக்குத்தவணை April 4, 2026. --------------------------------------------------- 2. ரம்புக்கனை சம்பவம் (2022): எரிபொருள் வரிசையில் ஏற்பட்ட போராட்டத்தின் போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் (Chaminda Lakshan) கொல்லப்பட்டார். இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணையில், பொலிஸார் தேவையற்ற மற்றும் அதிகப்படியான பலத்தைப் பயன்படுத்தியதாகக் கண்டறியப்பட்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டது. ⚖️ துப்பாக்கிச் சூட்டில் இறந்த 41 வயதுடைய சமிந்த லக்ஷனின் மனைவி மற்றும் சம்பவத்தில் காயமடைந்த பலரால் தாக்கல் செய்யப்பட்ட ஏழு அடிப்படை உரிமை மனுக்களை தொடர உச்ச நீதிமன்றம் (SC) 28-07-2025 அனுமதி அளித்தது. அடுத்த வழக்குத்தவணை February 27, 2026. ⚖️ கேகாலை நீதிவான் நீதிமன்றில் இவ்வழக்கு குற்றவியல் வழக்காகவும் விசாரிக்கப்படுகிறது. சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து போலீசார்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு. பொலிஸ் அதிகாரிகள் சார்பில் ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வழக்கு விசாரணைகள் தொடர்கின்றன. --------------------------------------------------------------- இராணுவத்துடன் சம்பந்தப்பட்ட இத்தகைய வழக்கு 1. ரதுபஸ்வல துப்பாக்கிச் சூடு (Rathupaswala Shooting) 2013 ஆம் ஆண்டு சுத்தமான குடிநீர் கோரிப் போராடிய மக்கள் மீது இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டனர். பல வருட போராட்டத்திற்குப் பிறகு, 2024 ஆம் ஆண்டு மே மாதம், இதற்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி ஒருவருக்கும் மற்றுமொரு சிப்பாய்க்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இது இராணுவத்தினர் சிவில் கடமைகளின் போது அத்துமீறினால் தண்டிக்கப்படுவார்கள் என்பதை உறுதிப்படுத்தியது. --------------------------------------------------------------- நீதிமன்றம் தனது தீர்ப்புகளில் மேற்கோள் காட்டும் சட்டப்பிரிவுகள்: ⚖️ இலங்கையின் 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் (Code of Criminal Procedure Act) பிரிவு 23: Arrest how made. கைது செய்யப்படுவதை ஒருவர் பலமாக எதிர்க்கும் போது மட்டுமே பலத்தைப் பயன்படுத்தலாம். ஆனால், மரண தண்டனைக்குரிய குற்றத்திற்காக குற்றம் சாட்டப்படாத ஒரு நபரின் மரணத்தை ஏற்படுத்தும் உரிமையை இந்தப் பிரிவில் உள்ள எதுவும் வழங்காது. ⚖️ Constitution CHAPTER III, FUNDAMENTAL RIGHTS Article 11: எவரும் சித்திரவதைக்கு அல்லது மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படக் கூடாது. Article 13 (1) : சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின்படி தவிர வேறு எந்த நபரையும் கைது செய்யக்கூடாது. Article 13 (4) சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின்படி, தகுதிவாய்ந்த நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தவிர, எந்தவொரு நபருக்கும் மரண தண்டனை அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடாது. ------------------------------------------------------------------- ⚖️ சர்வதேச மனித உரிமைத் தரநிலைகள்: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வழிகாட்டல்களின்படி, உயிர்ச்சேதம் விளைவிக்காத வகையில் எச்சரிக்கை விடுத்து, பிற வழிகள் இல்லாத பட்சத்தில் மட்டுமே துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட வேண்டும். நிராயுதபாணியான ஒருவரைச் சுடுவது சட்டப்படி குற்றமாகும். சுருக்கமாகக் கூறினால், மார்ச் 28, 2010 தேதியிட்ட IGP சுற்றறிக்கை 843 இன் படி, காவல்துறை அதிகாரிகளுக்கு துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் அது தடைசெய்யப்படவில்லை, நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க தேவைப்பட்டால் துப்பாக்கிகளைப் பயன்படுத்த ஒரு காவல்துறை அதிகாரிக்கு அதிகாரம் உண்டு. என்றபோதிலும்... சாதாரண சூழ்நிலையில் கட்டளையை மீறி ஓடும் ஒருவரைக் கொல்லும் அதிகாரம் இராணுவத்திற்கும் இல்லை.. பொலிசாருக்கும் இல்லை. அவ்வாறு செய்வது கொலைக்கு சமமான குற்றமாகக் கருதப்படவே வாய்ப்புள்ளது. இவை அனைத்தும், பொலிஸார் வாகனத்தின் டயர்களை நோக்கிச் சுடுவதன் மூலம் வாகனத்தை நிறுத்த முயற்சிக்கலாமே தவிர, ஓட்டுநரை அல்லது பயணிகளைக் குறிவைத்துச் சுடுவது சட்டவிரோதமானது என்பதை வலியுறுத்துகின்றன. ஆகவே, நிற்காமல் போனால் ஆளுக்கு சுடலாம்தானே? - என வாதம் செய்வதானது ஒரு சட்டமீறல் செயலை தடுக்க மற்றுமொரு சட்டமீறல் செயலை தெரிவு செய்வதையே ஊக்குவிக்கும். எடுத்தும் சுடவும்- நெற்றிப் பொட்டில் சுட வேண்டும் என்றெல்லாம் விருப்பம் கொள்வதற்கு நீங்களொன்றும் ஆயுதப்புரட்சி நாட்டில் வாழவில்லை. சட்ட உருவாக்கத்துக்கான தேர்தல்களில் வாக்களித்து சட்ட ஆட்சி நாட்டில் வாழ்கிறீர்கள் என்பதால் சட்ட மீறல்கள் குறித்து பேசுவதே சரியானது. நம்ம யாழ்ப்பாணம்

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

2 weeks 2 days ago
எண்பது வீதமான எம்மவர்களும், ஊடகம் நடத்துபவர்களும்.... நேரில் பார்த்த மாதிரி... போதை வஸ்து கடத்துபவன். வாள் வெட்டுக்காரன், மாட்டு கள்ளன் என்றெல்லாம் எழுதி பொலிஸ்காரனுக்கு வக்காலத்து வாங்குவதைப் பார்க்க... அனுரா கட்சியின் அனுதாபிகள் போல் தெரிகின்றது. ஸ்ரீலங்கா பொலிஸ், இராணுவம் சொல்வதை வேத வாக்காக எடுத்துக் கொண்டு.. கொல்லப் பட்ட அந்தச் சிறுவன் மீது அபாண்டமாக பழி சுமத்திக் கொண்டிருப்பதை பார்க்க... தமிழர் மத்தியில் உண்மையான செய்திகளை எதிர்பார்ப்பது கடினம் போலுள்ளது.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 2 days ago
அப்ப‌டித் தான் நானும் நினைத்தேன் க‌ந்த‌ப்பு அண்ணா😄😁 ஆனால் விளையாட்டில் ந‌ல்ல‌ மாஜிக் ந‌ட‌ந்து விட்ட‌து இன்று யாரும் எதிர் பார்த்து இருக்க‌ மாட்டின‌ம் நேபால் இப்ப‌டி ப‌டு தோல்வி அடையும் என்று....................................... நேபால் என‌க்கு முத‌ல் முட்டைய‌ த‌ந்து விட்ட‌து இன்றையான் ப‌ரிட்சை தோல்வி ஹா ஹா......................................

பாகிஸ்தானை கழிவறை பேப்பர் போல தூக்கி எறிந்துவிட்டது அமெரிக்கா - பாக். அமைச்சர் கவாஜா ஆசிப்

2 weeks 2 days ago
பாகிஸ்தானை கழிவறை பேப்பர் போல தூக்கி எறிந்துவிட்டது அமெரிக்கா - பாக். அமைச்சர் கவாஜா ஆசிப் 11 Feb, 2026 | 03:23 PM அமெரிக்கா தனது மூலோபாயத் தேவைகளுக்காக பாகிஸ்தானை பயன்படுத்திக்கொண்டு, பின்னர், கழிவறை டிஷ்யூ பேப்பர் போல தூக்கி எறிந்துவிட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் கடந்த கால பயங்கரவாதத்தை தாக்குதலைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னதாக ஆப்கானிஸ்தானில் நடந்த போர்களில் பாகிஸ்தான் பங்கேற்றது தவறு. அது மதக் கடமையால் தூண்டப்பட்டது அல்ல, மாறாக அப்போதைய இராணுவ ஆட்சியாளர்களான ஜியா-உல்-ஹக், முஷாரப் அமெரிக்காவின் ஆதரவைப் பெறச் செய்த தந்திரம் என்றும் அவர் கூறினார். இன்று பாகிஸ்தான் சந்தித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்கள் கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளின் எதிரொலி என மேலும் அவர் தெரிவித்தார். கடந்த 6ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் தொழுகையின்போது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்ற நிலையில், தாக்குதலுக்கு காரணமான தற்கொலைக்குண்டுதாரி என அடையாளம் காணப்பட்ட யாசிர் என்பவர் குறித்த தாக்குதலுக்கு முன்னதாக ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்றவர் என கூறப்பட்டது. அதனையடுத்து, பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பயங்கரவாதத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன்போது மேற்கண்டவாறு பேசிய அமைச்சர் ஆசிப், பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து பாகுபாடின்றி செயற்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/238392

'தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது' - ஆட்சியில் பங்கு குறித்த ஸ்டாலின் கருத்துக்கு காங்கிரஸ் எதிர்வினை என்ன?

2 weeks 2 days ago
'தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது' - ஆட்சியில் பங்கு குறித்த ஸ்டாலின் கருத்துக்கு காங்கிரஸ் எதிர்வினை என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 11 பிப்ரவரி 2026 வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் 'ஆட்சியில் பங்கு' என காங்கிரஸ் கட்சியில் ஒரு சிலர் தொடர்ந்து கோரிவரும் நிலையில் கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் எனக் கூறி அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். காங்கிரஸ் கட்சியின் ஒரு பகுதியினர் 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு' என தொடர்ந்து கோரிவரும் நிலையில், சென்னையில் ஊடகம் ஒன்று நடத்திய மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 'கூட்டணி ஆட்சி கிடையாது' என்பதை திட்டவட்டமாகத் தெரிவிக்கும் வகையில் கருத்தைத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் தாமதமாகி வருவதில் காங்கிரஸ் அதிருப்தி அடைந்திருக்கும் நிலையில், முதலமைச்சரின் இந்தக் கருத்து வந்து சேர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தி.மு.க. கூட்டணி அப்படியே தொடரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்போதுவரை கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் துவங்கப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டில் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகளை நடத்த தமிழக காங்கிரஸ் கட்சிக்கான பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. ஆனாலும் அதற்குப் பிறகும் கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் ஏதும் துவங்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. இந்நிலையில், கடந்த டிசம்பர் 22ஆம் தேதியன்று ஊடகம் ஒன்றிடம் பேசிய கிரிஷ் சோடங்கர், "எங்கள் கட்சியின் சார்பில் வாக்குறுதிகளை கட்சியின் தலைவர்கள் வழங்குவார்கள். இதனை நிறைவேற்றுவதற்கு ஆட்சியில் பங்கு பெறுவது அவசியம்" என்று குறிப்பிட்டார். அவரது இந்தப் பேச்சே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஆட்சியிலும் பங்கு தரவேண்டும் என்ற கோரிக்கையை அக்கட்சியின் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பியான மாணிக்கம் தாகூர், புரொஃபஷனல் காங்கிரசைச் சேர்ந்த பிரவீண் சக்கரவர்த்தி ஆகியோரும் வலியுறுத்த ஆரம்பித்தனர். பட மூலாதாரம்,@mkstalin/X டெல்லியில் கூட்டம் இதற்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகம் ஏற்கனவே 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு' எனக் கூறிவந்ததால், அக்கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கலாமோ என்ற யூகங்கள் எழுந்தன. இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பிய கட்சியின் மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகை, அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், "தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை, அகில இந்திய காங்கிரஸ் தலைமையோடு கலந்து பேசி முடிவெடுக்க வேண்டிய நிலையில், இதுகுறித்து பொதுவெளியில் காங்கிரஸ் கட்சியினர் எவரும் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும்" என்று குறிப்பிட்டார். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது ஜனநாயகன் படம் வெளியாக எவ்வளவு நாட்கள் ஆகலாம்? தயாரிப்பு நிறுவனம் முன்னுள்ள ஒரே வாய்ப்பு 500 வீரர்களுடன் அக்பரின் பெரும் படையை எதிர்க்கத் துணிந்தெழுந்த ராணி துர்காவதி 'வங்கதேசத்தவர்' என்ற புகாரில் கைதாகும் தொழிலாளர்கள்: கோவை, திருப்பூர் ஜவுளி தொழில்களில் என்ன நடக்கிறது? ரூ.100 கோதுமை திருடியதாக 45 ஆண்டுக்கு முந்தைய வழக்கில் ஒருவர் கைது - என்ன நடந்தது? End of அதிகம் படிக்கப்பட்டது இதெல்லாம் நடந்து பல நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும், தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான பேச்சு வார்த்தைகள் துவங்கவேயில்லை. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ப. சிதம்பரம், மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கு.செல்வப்பெருந்தகை கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் துவங்காதது தொடர்பாக காங்கிரசின் வருத்தத்தை வெளிப்படையாகவே பகிர்ந்துகொண்டார். "தொகுதி பங்கீடு குறித்து பேச முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனடியாகக் குழுவை அமைக்க வேண்டும். விரைவில் தேர்தல் உடன்பாட்டை எட்ட வேண்டும். பேச்சுவார்த்தை நடத்தவும் வேட்பாளர் தேர்வுகளைச் செய்யவும் எங்களுக்கு கால அவகாசம் தேவைப்படும். கடைசி நேரத்தில் அறிவித்தால் குழப்பம்தான் வரும். தி.மு.க பேச்சு வார்த்தையைத் தாமதப்படுத்துவதால் தொண்டர்கள் மத்தியில் வருத்தம் உள்ளது" என்று அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,K.Selvaperunthagai/FB படக்குறிப்பு,செல்வப்பெருந்தகை (கோப்புப் படம்) கு. செல்வப்பெருந்தகையின் இந்தப் பேச்சுக்கு விளைவு இருந்தது. செவ்வாய்க்கிழமையன்று இரவில், கூட்டணிப் பேச்சு வார்த்தை தொடர்பாக அறிக்கை ஒன்றை தி.மு.க. வெளியிட்டது. "வரும் 17ஆம் தேதி தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. தொடர்ந்து அதன் மீதான விவாதம் நடைபெற இருக்கிறது. கழகத் தலைவர் அவர்களால் விரைவில் அமைக்கப்படவுள்ள தி.மு.க-வின் தொகுதிப் பங்கீட்டுக் குழு, சட்டப்பேரவை அலுவல்கள் நிறைவடைந்தவுடன் பிப்ரவரி 22ஆம் தேதி முதல் தோழமைக் கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சு வார்த்தையில் ஈடுபடும்" என்று அந்த அறிக்கை கூறியது. இதற்கு அடுத்த நாள் சென்னையில் ஊடகம் ஒன்று நடத்திய மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூட்டணி ஆட்சி கிடையாது என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்தார். காங்கிரசுடனான கூட்டணி குறித்த கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த முதலமைச்சர், ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது எனத் தெரிவித்திருக்கிறார். "(காங்கிரசுடன்) கூட்டணி நிச்சயமாக நன்றாக இருக்கும். மற்றவர்கள் நினைப்பதைப் போல இல்லை. ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என்பது எங்களுக்கும் தெரியும். அவர்களுக்கும் (காங்கிரசுக்கும்) தெரியும். இடையில் ஏதாவது பிரச்னை ஏற்படுத்தலாம் என நினைப்பவர்கள் திட்டமிட்டு சதி செய்கிறார்கள். நாங்களும் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவர்களும் கவலைப்படவில்லை." என்று தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே, தி.மு.க-வின் சில அமைச்சர்கள் கூட்டணி ஆட்சி தி.மு.கவுக்கு ஏற்புடையதல்ல எனக் கூறிவிட்ட நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் அந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் எதிர்வினை பட மூலாதாரம்,Manickam Tagore / Facebook படக்குறிப்பு,மாணிக்கம் தாகூர் அடுத்தது கூட்டணி ஆட்சிதான் என காங்கிரஸ் கட்சிக்குள் தொடர்ந்து குரல் எழுப்பிவந்த காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், உடனடியாக இதற்கு எதிர்வினையாற்றினார்கள். விருதுநகர் தொகுதியின் நாடாளுமன்றத் தொகுதியின் காங்கிரஸ் எம்.பியான மாணிக்கம் தாகூர், "மக்கள் முடிவு செய்வார்கள் கூட்டணி ஆட்சியா அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை. 2006இல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தவறு" என்று தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சியின் பிரவீண் சக்கரவர்த்தியும் எதிர்வினையாற்றினார். "மற்ற மாநிலங்கள் அனைத்தும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கும்போது, தமிழ்நாட்டின் 'தனித்தன்மை' என்ற காரணத்தைக் கூறி அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள மறுப்பது ஏன்? மற்ற இந்தியர்களைப் போலவே, தமிழ்நாட்டு மக்களுக்கும் கூட்டணி ஆட்சியில் எந்தப் பிரச்னையும் இல்லை" என்று குறிப்பிட்டார். கூட்டணி ஆட்சி என்பதை முதல்வர் மறுத்துவிட்ட நிலையில் இனி காங்கிரஸ் இதனைத் தொடர்ந்து வலியுறுத்துமா? "அதனை இப்போது வெளியில் சொல்ல முடியாது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பவர்கள் அந்தத் தருணத்தில் தங்கள் கோரிக்கைகளை முன்வைப்பார்கள்" என பெயர் சொல்ல விரும்பாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான கு. செல்வப்பெருந்தகை மிகக் கவனமாகவே இந்தக் கேள்விக்குப் பதிலளித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எங்கள் தலைமையும் தமிழ்நாட்டுத் தலைமையும் சேர்ந்து பேசி இதற்கு ஒரு தீர்வைக் காண்பார்கள். எல்லோரும் அவரவர் கருத்தைச் சொல்வார்கள். முடிவு செய்ய வேண்டியது, தேசியத் தலைமையும் தமிழ்நாட்டுத் தலைமையும்தான். ஊடகங்களில் யூகங்களை உருவாக்காதீர்கள்" என்று கூறி இந்த விவகாரத்திற்கு இப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். பட மூலாதாரம்,Praveen Chakravarty/Facebook படக்குறிப்பு,பிரவீண் சக்கரவர்த்தி ஆனால், காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை இது குறித்து பேசாதபோது மாநில அளவில் சிலர் சொல்லும் கருத்துகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள். "2006ல் தவறு செய்துவிட்டோம் என மாணிக்கம் தாகூர் நினைத்தால், அவர் அதனை காங்கிரஸ் கட்சித் தலைமையிடம் கேட்டிருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சிக்குள் இரண்டு, மூன்று பேர்தான் இதுபோல பேசிக்கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, கூடுதல் இடங்களைக் கேட்பது நியாயமானதுதான். தேர்தல் முடிவுகள் வரும்போது எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், அப்போதுகூட ஆட்சியில் பங்கு கேட்கலாம். ஆனால், தேர்தலுக்கு முன்பே இப்படிக் கேட்பது சரியல்ல. தி.மு.க. தனிப் பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை எப்படி ஏற்பார்கள்?" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். தி.மு.கவைப் பொறுத்தவரை 22ஆம் தேதிதான் பேச்சுவார்த்தைகளைத் துவங்கவிருக்கிறார்கள். இந்த நிலையில், முதல்வரின் பேச்சு ஆழம் பார்ப்பதற்காக சொல்லப்பட்ட கருத்து என்று கருதுவதாகச் சொல்கிறார் ப்ரியன். "காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை யாரும் எதையும் சொல்ல முடியும். கேரளாவில் காங்கிரஸின் கொள்கைக்கே மாறுபட்ட கருத்தையெல்லாம் சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் கூட்டணியைப் பற்றி ஆளாளுக்கு ஒவ்வொன்றைச் சொல்கிறார்கள். காங்கிரசின் பக்கம் இருந்து பார்க்கும்போது இதுபோன்ற அழுத்தம் நல்லதுதான். கூடுதல் இடங்களைப் பெற உதவலாம். ஆனால், முதல்வர் இது குறித்து தெளிவுபடுத்திய பிறகும் இதைச் சொல்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியமளிக்கிறது" என்கிறார் ஆர்.கே. ராதாகிருஷ்ணன். தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் ராகுல் காந்தியும் சந்தித்தபோது அதிகாரப் பகிர்வு குறித்து பேசப்பட்டதாகத் தெரியவில்லை என்கிறார் அவர். திமுக கூறுவது என்ன? ஆனால், தனித்து ஆட்சி என்பதில் தி.மு.க. உறுதியாக இருக்கிறது. "கூட்டணி ஆட்சி வேண்டுமென்றால் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் என எல்லாக் கட்சிகளும் தனியாக நிற்க வேண்டும். மக்கள் யாருக்கு எவ்வளவு இடங்களை அளிக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். எந்தக் கட்சிக்கும் தனியாக பெரும்பான்மை கிடைக்கவில்லையென்றால், மற்ற கட்சிகளோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கலாம். ஆனால், நாம் ஒரே கூட்டணியாக இணைந்து நின்று, அந்த கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சியை ஆட்சியில் அமர்த்த வாக்குக் கேட்கிறோம். அம்மாதிரி சூழலில், கூட்டணி ஆட்சி என்று கேட்டால் எப்படி?" என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான ரவீந்திரன் கான்ஸ்டைன்டீன். 2006ஆம் ஆண்டில் காங்கிரஸ் தவறுசெய்துவிட்டதாக மாணிக்கம் தாகூர் சொல்வது குறித்துக் கேட்டபோது, அந்தக் கருத்து சரியானதல்ல என்கிறார் அவர். "2006ஆம் ஆண்டில் தி.மு.க 128 இடங்களில் போட்டியிட்டது. மற்ற இடங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. அந்தத் தருணத்திலேயே தனித்துப் பெரும்பான்மை பெறுவது கடினம் என்பது தி.மு.க-வுக்குத் தெரியும். இருந்தபோதும் தி.மு.க. ஆட்சியமைக்க வாக்களியுங்கள் என்றுதான் பிரச்சாரம் நடந்தது. அந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு 163 இடங்கள் கிடைத்தன. ஆகவே அது தி.மு.க. ஆட்சியமைப்பதற்காகக் கொடுக்கப்பட்ட இடங்கள்தான். கூட்டணி ஆட்சி அமையட்டும் என்று கொடுத்தது அல்ல. அப்போது காங்கிரஸ் ஆதரவு அளிக்காவிட்டாலும் இடதுசாரிகள், பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவுடன் அந்த ஆட்சி நீடித்திருக்கும்" என்று அவர் கூறுகிறார். "தற்போதைய காலகட்டத்தில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எந்த அலையும் இல்லாவிட்டால் ஒரே ஒரு கட்சி மட்டும் தனித்துப் போட்டியிட்டு தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பது கடினம்" என்று கூறும் ரவீந்திரன் கான்ஸ்டைன்டீன், தமிழ்நாட்டில் எப்போதுமே மக்கள் ஒரே கட்சியின் ஆட்சிக்காகத்தான் வாக்களிக்கிறார்கள்" என்கிறார். எடப்பாடி பழனிசாமி கூறியது என்ன? பட மூலாதாரம்,X/Edappadi K Palaniswami படக்குறிப்பு,கோப்புப் படம் இந்நிலையில், 'கூட்டணி ஆட்சி' குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "அதிமுக- என்டிஏ கூட்டணியில் இந்தப் பிரச்னை இல்லையென்றும்", "அதிமுக தான் ஆட்சியமைக்கும்" என்றும் கூறினார். இன்று (பிப்ரவரி 11) தனியார் ஊடகம் நடத்திய நிகழ்ச்சியில் பேசிய அவர் "இது திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையில் உள்ள கூட்டணி பிரச்னை. இதில் தலையிட எங்களுக்கு உரிமை இல்லை. ஆனால், முதலமைச்சர் பேசியதற்கு உடனடியாக ஒரு காங்கிரஸ் தலைவரிடமிருந்து எதிர்வினை வருகிறது. இது அங்கு ஒரு குழப்பமான சூழல் நிலவுவதைப் பார்க்க முடிகிறது" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "எங்கள் கூட்டணியில் இந்தக் குழப்பம் இல்லை, அதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தெளிவுபடுத்திவிட்டார். அதிமுக- தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டுவிட்டது. இந்தக் கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும், அதிமுக ஆட்சியமைக்கும், நான்தான் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர், இதெல்லாம் முன்பே தெரிவிக்கப்பட்டதுதான்" என்று கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp9mz528zxgo

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

2 weeks 2 days ago
பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி சிறுவனின் சடலத்துடன் போராடிய உறவுகள்! Published By: Digital Desk 3 12 Feb, 2026 | 02:16 PM யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்துறை பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்று வியாழக்கிழமை (12) வட்டுக்கோட்டை - சித்தங்கேணியில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. அதன்பின்னர் பதாகைகளை தாங்கியவாறு சடலத்துடன் வந்த உறவுகள் வீதியில் இருந்து "பொலிஸாரை கைது செய், எமது பிள்ளைக்கு நீதி வேண்டும், பொலிஸாரின் அராஜகம் தொடர்கிறது" என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது உடலம் நவாலி இந்து மயானத்தில் புதைப்பதற்காக கொண்டு செல்லப்படுகிறது. https://www.virakesari.lk/article/238471
Checked
Sun, 03/01/2026 - 08:11
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed