புதிய பதிவுகள்2

போதைப்பொருள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிப்பு பொய்யான தகவல்களை பகிரவேண்டாம் - பொலிஸார்

3 weeks ago
9 Sep, 2025 | 05:25 PM ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருள் அடங்கிய இரு கொள்கலன்கள் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டமைக்கு மேல் மாகாண வடக்கு குற்றபிரிவு பணிப்பாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ரொஹான் ஒலுகலவே காரணம் என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ள இவ்விடயம் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை (08) பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டிருந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களும் பாதாள உலக குழுவை சேர்ந்த மனுதின பத்மசிரி பெரேரா என்னும் கேல்பத்தர பத்மே மற்றும் கமென்டோ சலிந்த உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்கள் இந்தோனேசிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு கடந்த ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி நாடிற்கு அழைத்துவரப்பட்டனர். இந்நிலையில் குறித்த நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து, நாட்டினுள் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புக்கு அவசியமான மூலப்பொருளான ஒருவகை இரசாயனம் அடங்கிய இரு கொள்கலன்கள் கொண்டுவரப்பட்டமை மற்றும் மித்தெனிய பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டமை உள்ளிட்ட தகவல்கள் தெரியவந்தது. அதற்கமைய மித்தெனிய பகுதியிலிருந்து போதைப்பொருள் தயாரிப்புக்கான இரசாயனமும் மீட்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சர்வதேச புலனாய்வு பிரிவு ஏற்கனவே தகவல் அளித்திருந்த போதும், சிவப்பு அடையாளமிடப்பட்ட இரசாயனம் அடங்கிய இரு கொள்கலன்களை மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு பணிப்பாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ரொஹான் ஒலுகலவே விடுவித்ததாக சமூக வலத்தளங்களில் உண்மைக்குப்புறம்பான கருத்துகள் பகிரப்பட்டுள்ளன. இதுபோன்ற தேவையற்ற வதந்திகளால் விசாரணை அதிகாரிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதுடன் விசாரணைகளுக்கும் இடையூறு ஏற்படுகின்றது. ஆகையால் விசாரணைகள் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்ப முயலும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். போதைப்பொருள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிப்பு பொய்யான தகவல்களை பகிரவேண்டாம் - பொலிஸார் | Virakesari.lk

இஸ்ரேல் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளது

3 weeks ago
இஸ்ரேல் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது. மேலும்..... Israel carries out strike on senior Hamas leaders in Qatari capital Israel has carried out a strike on senior Hamas leaders in Qatar's capital Doha A Hamas official says its negotiating team was targeted during a meeting Explosions are heard and smoke is rising above Doha Israel carries out strike on senior Hamas leaders in Qatari capital - BBC News

சமூகவலைத்தள முடக்கத்துக்கு எதிராக நேபாளத்தில் வெடித்த 'Gen Z' இளைஞர்கள் போராட்டம்

3 weeks ago
🔴 கொழுத்தி எரிக்கப்பட்டது நேபாள பாராளுமன்றம்! சமூக ஊடக தடையை கண்டித்து ஆரம்பிக்கப்பட்ட இளைஞர் போராட்டமானது வன்முறையாக வெடித்து தொடர்வதுடன், பிரதமர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளதுடன் பாராளுமன்றமும் போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Vaanam.lk

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு.

3 weeks ago
சிலருக்கு... புட்டின் என்ன செய்தாலும் பிழை கண்டு பிடிப்பதே முழு நேரத் தொழில். அவர்கள்... கீறல் விழுந்த ரெக்கோர்ட் மாதிரி சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்வதில் ஒரு அற்ப திருப்தி. அதுக்கு ஜால்ரா போட பின்னாலை இரண்டு பேர் திரியும் போது.. அவர்களுக்கும் குசி வந்து பினாத்திக் கொண்டு இருப்பது வாடிக்கை. இதுகளை எல்லாம் கணக்கில் எடுக்காமல், கடந்து போவதே புத்திசாலித்தனம்.

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்

3 weeks ago
மேலே நீங்கள் காண்பித்த பதிலெழுதும் பெட்டியே உங்களுக்கு காண்பிக்கவில்லை என்று ஒரு குழப்பம் இருந்தது. உங்களுக்கு களத்தில் கருத்துக்களுக்கு பதில் எழுதும் போது காண்பிப்பது போன்று தமிழில் எழுதுவதற்கு உரிய பகுதி காண்பிக்குவில்லை என்று விளங்குகின்றேன். முன்னைய பதிப்பில் அவ்வாறான ஒரு தெரிவு இருந்திருக்கலாம் என நினைக்கின்றேன். புதிய பதிப்பிற்கு மாறிய பின்னர் அந்த பகுதி தனிமடல் பகுதியில் இல்லை. மாற்று வழி ஏதாவது உள்ளதா எனப் பார்க்கின்றேன்.

நேபாளத்தில் அரசு கவிழ்ந்தது: இளைஞர் போராட்டத்தால் பிரதமர் கே.பி.ஒலி ராஜினாமா

3 weeks ago
பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் கெல்லி என்ஜி பிபிசி நியூஸ் 9 செப்டெம்பர் 2025, 05:32 GMT புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர் நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகியுள்ளார். அவர் ராஜினாமா செய்திருப்பதை அவரது செயலகம் அறிக்கை வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது. தற்போதைய நெருக்கடிக்கு அரசியலமைப்பு ரீதியாக தீர்வு காண வழி வகுக்கும் வகையில் ராஜினாமா செய்ததாக பிரதமர் ஒலி கையெழுத்திட்ட அந்த அறிக்கை கூறுகிறது. தலைநகர் காத்மாண்டுவிலும், நேபாளம் முழுவதும் அதிகாலை முதல் போராட்டங்கள் நடந்தன. ஒலி மற்றும் முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் தியூபாவின் வீடுகள் உட்பட பல மூத்த அரசியல்வாதிகளின் வீடுகள் தாக்கப்பட்டன. நேபாளத்தில் என்ன நடக்கிறது? முன்னதாக உள்நாட்டு சட்டங்களுக்கு கட்டுப்படவில்லை என 26 சமூக ஊடக தளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்திருந்தது. இந்த தடையை நீக்கவும் ஊழலைக் கட்டுப்படுத்தவும் வலியுறுத்தி நேபாள தலைநகர் காத்மண்டுவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். திங்கள் இரவு நடைபெற்ற அவசர அமைச்சரவை கூட்டத்தில் தடையை நீக்க முடிவு எடுக்கப்பட்டது. "ஜென் Z இளைஞர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக" இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் தொடர்பு அமைச்சர் பிரித்வி சுப்பா குருங் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரண்டு அமைச்சர்கள் தற்போது வரை ராஜினாமா செய்துள்ளனர். தலைநகருக்கு வெளியே நடைபெற்ற போராட்டங்களிலும் ஏற்பட்ட மோதல்களில் 100-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். பட மூலாதாரம், Getty Images நேபாளத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களை லட்சக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். பொழுதுபோக்கு, செய்தி மற்றும் வணிகத்திற்காக சமூக ஊடகங்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் போலிச் செய்தி, வெறுப்புப் பேச்சு மற்றும் இணைய மோசடிகளை எதிர்கொள்வதற்காக அவற்றை தடை செய்யும் முடிவு எடுக்கப்பட்டது என நேபாள அரசு நியாயப்படுத்தியது. திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், இது அரசின் சர்வாதிகார அணுகுமுறை எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். பலரும் ஊழலை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி வந்தனர். சில போராட்டக்காரர்கள் தற்போது ராஜினாமா செய்துள்ள நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலியின் சொந்த ஊரான டமாகில் உள்ள அவரின் வீட்டின் மீது கற்களை வீசினர். முன்னதாக சபானா புடாதோகி என்கிற போராட்டக்காரர் பிபிசியிடம் பேசியபோது, சமூக ஊடகத் தடை தான் அவர்கள் ஒன்று கூடியதற்கு காரணம் என்றார். "சமூக ஊடகத் தடையை விட அனைவரின் கவனமும் ஊழலின் மீது தான் உள்ளது. எங்களுக்கு எங்களின் நாடு திரும்பவும் வேண்டும். ஊழலை தடுத்து நிறுத்த வேண்டும்." என அவர் தெரிவித்தார். நேபாளத்தில் சமீபத்தில் "நெபோ கிட்" என்கிற பிரசாரம் சமூக ஊடகங்களில் வைரலானது. அரசியல்வாதிகளின் வாரிசுகள் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதை சுட்டிக்காட்டியும் அது ஊழலால் தான் எனக் குற்றம்சாட்டியும் இந்தப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, போராட்டங்களில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். திங்கட்கிழமை, காவல்துறை தண்ணீரை பீச்சியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களைக் கலைக்க முயன்றது. இதன் தொடர்ச்சியாக, ரப்பர் குண்டுகளைக் கொண்டு துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. வன்முறைக்கும் உயிரிழப்புக்கும் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ள கேபி சர்மா ஒலி, அசம்பாவிதங்களுக்கு சுய நலன் சார்ந்த குழுக்கள் ஊடுருவியதே காரணம் எனத் தெரிவித்துள்ளார். போராட்டத்தை விசாரிக்க அரசு குழு அமைக்கும் என்றும் தெரிவித்த ஒலி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சையும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் காவல்துறையைப் பயன்படுத்தியதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் உள்துறை அமைச்சர் ரமேஷ் லெகாக் ராஜினாமா செய்துள்ளார். கடந்த வாரம் சமூக ஊடகங்களுக்குத் தடை விதித்த நேபாள அரசு அவற்றை முழுமையாக தடை செய்யவில்லையென்றும் நேபாளம் சட்டத்தின் கீழ் அவற்றை கொண்டு வர மட்டுமே முயற்சிப்பதாகவும் தெரிவித்திருந்தது. பட மூலாதாரம், Getty Images மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா நேபாளத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களில் வன்முறையால் உயிரிழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் வேளாண் துறை அமைச்சரும் நேபாள காங்கிரஸ் தலைவருமான ராம்நாத் அதிகாரி போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த காவல்துறை பயன்படுத்தப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்து பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமாவை பேஸ்புக் மூலமாக அறிவித்துள்ளார். பிரதமரைச் சந்திக்க முடியாததால் தனது ராஜினாமா சமூக ஊடகம் மூலம் அறிவித்ததாக பிபிசி நியூஸ் நேபாளி சேவையிடம் அவர் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பதிவில் நேபாளம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்வதாகக் கூறியுள்ளார் ராம்நாத், "கேள்வி கேட்பதும் அமைதியான முறையில் போராடுவதும் குடிமக்களின் அடிப்படை உரிமை, ஒரு ஜனநாயகத்தில் அதனை அங்கீகரிக்காமல் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒடுக்குவது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. பரவலான அடக்குமுறை, கொலைகள் மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் நாம் ஜனநாயகத்திலிருந்து சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறோம்." என்றுள்ளார் மேலும் அவர் தனது பதிவில், "இந்த நாட்டை கட்டமைக்க உதவியிருக்க வேண்டிய ஒரு தலைமுறையை போரைப் போல எப்படி அணுக முடியும்? இந்த கேள்விகளுக்கு பதில் காணாமல் அதிகாரத்தில் இருப்பது எனக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. எனது மனசாட்சி என்னை எச்சரிக்கிறது. இளம் குழந்தைகள் ஒடுக்கப்பட்டு கொல்லப்பட்ட பிறகு தேசமே கவலையில் ஆழ்ந்துள்ளபோது அரசாங்கத்தில் தொடர்வது நான் என் கட்சியில் பெற்றுள்ள தார்மீக உணர்வு மற்றும் கல்விக்கு எதிரானது. எனது அதிகாரப்பூர்வ கடமைகளில் தொடர்வது எனக்கு குற்றவுணர்ச்சியைத் தருகிறது" என்றார். மறுபுறம் நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் தூபாவின் சொந்த மாவட்டத்திலும் போராட்டங்கள் தொடங்கியுள்ளன. அவரின் வீட்டை சூரையாடிய போராடிய போராட்டக்காரர்கள் அவரின் வீட்டை தீக்கிரையாக்கினர். படக்குறிப்பு, போராட்டக்காரர்கள் முன்னாள் பிரதமரின் வீட்டிற்கு தீ வைத்தனர். நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டம் எதிரொலியாக, கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அமைச்சரவையின் பல அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவிகளை ராஜினாமா செய்யத் தொடங்கியுள்ளனர். இதுவரை மூன்று மூத்த அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். சிறிது நேரத்திற்கு முன்பு, குடிநீர் அமைச்சர் பிரதீப் யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்தார். "அன்புள்ள இளம் சகோதர சகோதரிகளே, நீங்கள்தான் எனது முதல் கூட்டாளிகள் மற்றும் எனது ஆற்றல் மற்றும் உற்சாகத்தின் ஆதாரம். நேற்று தொடங்கிய போராட்டத்திற்கு ஆதரவாகவும், அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகவும், நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்." என்று அவர் கூறியுள்ளார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce84n39w7wwo

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - 2025

3 weeks ago
ஆசியக் கிண்ணம் 2025 : போட்டி நடுவர்கள் குறித்த அட்டவணை அறிவிப்பு! Published By: Digital Desk 1 09 Sep, 2025 | 09:36 AM ஆசியக் கிண்ணம் 2025 போட்டிக்கான நடுவர்கள் தொடர்பான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணப்போட்டி, செவ்வாய்க்கிழமை ( செப்டெம்பர் 9) ஆரம்பமாகவுள்ள நிலையில், குறித்த போட்டியின் நடுவர்களாக ரிச்சி ரிச்சர்ட்சன் மற்றும் ஆண்டி பைக்ராஃப்ட் நியமிக்கப்பட்டுள்ளனர். அபுதாபியில் உள்ள சயீத் கிரிக்கெட் மைதானத்தில் குறித்த போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. குழு டீ உள்ளடங்கியுள்ள ஆப்கானிஸ்தான், ஹொங்கொங் மற்றும் சீனா ஆகிய அணிகளுக்கிடையேயான போட்டியுடன் குறித்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. இன்று (செப்டம்பர் 9 ) முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை குறித்த போட்டிகள் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது. 12 போட்டிகள் கொண்ட குழு நிலைக்கான போட்டி நடுவர்களின் நியமனங்களை ஆசிய கிரிக்கெட் பேரவை உறுதிப்படுத்தியுள்ளது. போட்டி நடுவர்களின் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நடுவர்களாக * அஹ்மத் பக்டீன் (ஆப்கானிஸ்தான்) * ஆசிப் யாகூப் (பாகிஸ்தான்) * ஃபைசல் அப்ரிடி (பாகிஸ்தான்) * காஸி சோஹெல் (பங்களாதேஷ்) * இஜாத்துல்லா சஃபி (ஆப்கானிஸ்தான்) * மசுதூர் ரஹ்மான் (பங்களாதேஷ்) * ரவீந்திர விமலசிரி (இலங்கை) * ரோஹன் பண்டிட் (இந்தியா) * ருசிரா பல்லியகுருகே (இலங்கை) * வீரேந்தர் ஷர்மா (இந்தியா) ஆசிய கிண்ணம் 2025 - குழு நிலைக்கான போட்டி அதிகாரிகளின் நியமனங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, செவ்வாய், 2025 செப்டம்பர் 9 ஆம் திகதி - ஆப்கானிஸ்தான் எதிர் ஹொங்கொங் சீனா ஆகிய அணிகள் மோதுகின்ற போட்டி, அபுதாபியில் மாலை 6:30 மணி இடம்பெவுள்ளது. கள நடுவர்கள்: ஆசிப் யாகூப் மற்றும் வீரேந்திர சர்மா. தொலைக்காட்சி நடுவர்: பைசல் அப்ரிடி நான்காவது நடுவர்: ரவீந்திர விமலசிறி போட்டி நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன் புதன், 2025 செப்டம்பர் 10ஆம் திகதி - இந்தியா எதிர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்ற போட்டி, துபாயயில் மாலை 6:30 மணி இடம்பெவுள்ளது. கள நடுவர்கள்: காசி சோஹெல் மற்றும் இசதுல்லா சஃபி தொலைக்காட்சி நடுவர் : ருச்சிர பல்லியகுருகே நான்காவது நடுவர் : மசுதூர் ரஹ்மான் போட்டி நடுவர் : ஆண்டி பைக்ராஃப்ட் வியாழக்கிழமை, 2025 செப்டம்பர் 11 ஆம் திகதி - பங்களாதேஷ் எதிர் ஹொங்காங் சீனா மோதுகின்ற போட்டி, அபுதாபியில் மாலை 6:30 மணி இடம்பெறவுள்ளது. கள நடுவர்கள்: ரவீந்திர விமலசிரி மற்றும் ரோஹன் பண்டிட் தொலைக்காட்சி நடுவர்: ஆசிப் யாகூப் நான்காவது நடுவர்: பைசல் அஃப்ரிடி போட்டி நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன் வெள்ளிக்கிழமை, 2025 செப்டம்பர் 12ஆம் திகதி - பாகிஸ்தான் எதிர் ஓமான் ஆகிய அணிகள் மோதும் போட்டி, துபாயில் மாலை 6:30 மணிக்கு இடம்பெறவுள்ளது. கள நடுவர்கள்: மசுதூர் ரஹ்மான் மற்றும் அஹ்மத் பக்தீன் தொலைக்காட்சி நடுவர்: காசி சோஹெல், நான்காவது நடுவர்: ருசிர பள்ளியகுருகே போட்டி நடுவர்: ஆண்டி பைகிராஃப்ட் சனிக்கிழமை, 2025 செப்டம்பர் 13ஆம் திகதி - பங்களாதேஷ் எதிர் இலங்கை ஆகிய அணிகள் மோதும் போட்டி, அபுதாபியில் மாலை 6:30 மணிக்கு இடம்பெறவுள்ளது. கள நடுவர்கள்: ரோஹன் பண்டிட் மற்றும் பைசல் அப்ரிடி தொலைக்காட்சி நடுவர்: வீரேந்திர சர்மா நான்காவது நடுவர்: ஆசிப் யாகூப் போட்டி நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன் ஞாயிறு, 2025 செப்டம்பர் 14ஆம் திகதி - இந்தியா எதிர் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதும் போட்டி, துபாயில் மாலை 6:30 மணிக்கு இடம்பெறவுள்ளது. கள நடுவர்கள்: ருச்சிர பள்ளியகுருகே மற்றும் மசுதுர் ரஹ்மான் தொலைக்காட்சி நடுவர்: அஹ்மத் பக்தீன் நான்காவது நடுவர்: இசதுல்லா சஃபி போட்டி நடுவர்: ஆண்டி பைகிராஃப்ட் திங்கள், 2025 செப்டம்பர் 15 ஆம் திகதி - ஐக்கிய அரபு இராச்சியம் எதிர் ஓமான் ஆகிய அணிகள் மோதும் போட்டி, அபுதாபியில் மாலை 4:00 மணிக்கு இடம்பெறவுள்ளது. கள நடுவர்கள்: வீரேந்திர சர்மா மற்றும் ஆசிப் யாகூப் தொலைக்காட்சி நடுவர்: ரவீந்திரன் விமலசிறி நான்காவது நடுவர்: ரோஹன் பண்டிட் போட்டி நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன் திங்கள், 2025 செப்டம்பர் 15ஆம் திகதி - இலங்கை எதிர் ஹொங்காங் சீனா ஆகிய அணிகள் மோதும் போட்டி, துபாயில் மாலை 6:30 மணிக்கு இடம்பெறவுள்ளது. கள நடுவர்கள்: காசி சோஹெல் மற்றும் இசதுல்லா சஃபி தொலைக்காட்சி நடுவர்: மசுதூர் ரஹ்மான் நான்காவது நடுவர்: அஹ்மத் பக்தீன் போட்டி நடுவர்: ஆண்டி பைக்ராஃப்ட் செவ்வாய், 2025 செப்டம்பர் 16ஆம் திகதி - பங்களாதேஷ் எதிர் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதும் போட்டி, அபுதாபியில் மாலை 6:30 மணிக்கு இடம்பெறவுள்ளது. கள நடுவர்கள்: பைசல் அப்ரிடி மற்றும் ரவீந்திர விமலசிறி தொலைக்காட்சி நடுவர்: ரோஹன் பண்டிட் நான்காவது நடுவர்: வீரேந்தர் சர்மா போட்டி நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன் புதன், 2025 செப்டம்பர் 17 ஆம் திகதி - பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் மோதும் போட்டி, துபாயில் மாலை 6:30 மணிக்கு இடம்பெறவுள்ளது. கள நடுவர்கள்: அஹ்மத் பக்தீன் மற்றும் ருச்சிர பல்லியகுருகே தொலைக்காட்சி நடுவர்: இசதுல்லா சஃபி நான்காவது நடுவர்: காசி சோஹல் போட்டி நடுவர்: ஆண்டி பைகிராஃப்ட் வியாழன், 2025 செப்டம்பர் 18 ஆம் திகதி - இலங்கை எதிர் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதும் போட்டி, அபுதாபியில் மாலை 6:30 மணிக்கு இடம்பெறவுள்ளது. கள நடுவர்கள்: ஆசிப் யாகூப் மற்றும் வீரேந்திர சர்மா தொலைக்காட்சி நடுவர்: பைசல் அப்ரிடி நான்காவது நடுவர்: ரோஹன் பண்டிட் போட்டி நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன் வெள்ளிக்கிழமை, 2025 செப்டம்பர் 19ஆம் திகதி - இந்தியா எதிர் ஓமன் ஆகிய அணிகள் மோதும் போட்டி, அபுதாபியில் மாலை 6:30 மணிக்கு இடம்பெறவுள்ளது. கள நடுவர்கள்: ரவீந்திர விமலசிரி மற்றும் பைசல் அப்ரிடி தொலைக்காட்சி நடுவர்: ஆசிப் யாகூப் நான்காவது நடுவர்: வீரேந்திர சர்மா போட்டி நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன் https://www.virakesari.lk/article/224544

சமூகவலைத்தள முடக்கத்துக்கு எதிராக நேபாளத்தில் வெடித்த 'Gen Z' இளைஞர்கள் போராட்டம்

3 weeks ago
நேபாளத்தில் சமூக ஊடகத் தடை நீக்கம் Published By: Digital Desk 1 09 Sep, 2025 | 09:27 AM நேபாளத்தில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களால், சுமார் 19 பேர் கொல்லப்பட்டதையடுத்து, சமூக ஊடகத் தடை நீக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பாராளுமன்றக் கட்டிடத்திற்குள் நேற்றையதினம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நுழைந்து, பேஸ்புக் மற்றும் யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடகத் தளங்கள் மீதான தடையை நீக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதேவேளை, அங்கு இடம்பெறும் ஊழலை எதிர்த்துப் போராடவும் அழைப்பு விடுத்துள்ளனர். ஜெனரல் இசட்டின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்காக நேற்று இரவு அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் தடையை நீக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அந்த நாட்டு தகவல் தொடர்பு மற்றும் தகவல் அமைச்சர் பிருத்வி சுப்பா குருங் கருத்து வெளியிட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நேபாளத்தின் தலைநகரிலும், தலைநகருக்கு வெளியிலுள்ள நகரங்களிலும் இடம்பெற்ற போராட்டங்களில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். https://www.virakesari.lk/article/224590

யாழில் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் செயன்முறையின் கிழ் குளங்கள் தூர்வார நடவடிக்கை

3 weeks ago
Published By: Digital Desk 1 09 Sep, 2025 | 12:32 PM யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் செயன்முறையின் ஒரு பகுதியாக குளங்கள் தூர்வாரப்படவேண்டும் : அதற்கான பொறிமுறை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது. யாழ். மாவட்டத்திலுள்ள குளங்களை தொடர்ச்சியாக தூர்வாருவது தொடர்பான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பிலும், பரீட்சார்த்தமாக தூர்வாருதலை உடனடியாக நடைமுறைப்படுத்தவது தொடர்பாகவும் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் திங்கட்கிழமை(நேற்று) நடைபெற்றது. யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் செயன்முறையின் ஒரு பகுதியாக குளங்கள் தூர்வாரப்படவேண்டும் என்றும் அதற்கான பொறிமுறை தொடர்பில் ஆராய்வதே கலந்துரையாடலின் நோக்கம் என குறிப்பிட்ட ஆளுநர் அது தொடர்பில் துறைசார் அதிகாரிகளிடமிருந்து ஆலோசனைகளை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார் . குளத்தை தூர்வாருதல் தொடர்பான பொறிமுறை நீண்ட காலத்தைக் கொண்டதாகக் காணப்படுவதாகவும், இதனால் தன்னார்வலர்கள் இந்த முயற்சியில் பங்கெடுக்க வந்தாலும் அவர்களும் சலிப்படைவதாகவும், கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன் அரசாங்க நிதியில்லாமல் இதைச் செயற்படுத்துவதற்கு பல்வேறு நிதி வழங்கும் தரப்புக்கள் தயாராக இருந்தாலும் அனுமதிக்கான பொறிமுறை சிக்கலுக்குரியதாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், இன்னும் சில வாரங்களில் மழை காலம் ஆரம்பித்தால் இந்தப் பணிகளை தொடர முடியாது என்றும், ஏற்கனவே அனுமதி கோரப்பட்ட கந்தரோடை குளத்தையாவது தூர்வாருவதற்கான அனுமதிகள் உடனே வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. கந்தரோடை குளத்தை தூர்வாருவதற்கான அனுமதி வடக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களத்தால் உடனடியாக வழங்கப்படும் என்றும், அகழப்படும் மண்ணை கொண்டு செல்வதற்கான அனுமதி பிரதேச செயலாளரால் வழங்கப்படும் எனவும் இந்தப் பணியை விரைவாக ஆரம்பித்து குளங்கள் தூர்வாருதல் தொடர்பில் தன்னார்வலர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது. யாழ். மாவட்டத்தில் கமநல சேவைகள் திணைக்களத்தின் கீழேயே அதிகளவு குளங்கள் உள்ள நிலையில் அவற்றின் கீழ் தூர்வாருவதற்கு உடனடியாக அனுமதிகள் வழங்கக் கூடியவற்றுக்கு அனுமதி வழங்குமாறும் ஏனையவற்றை தூர்வாருவதற்கான முன்னுரிமைப் பட்டியலை தயாரித்து உரிய நியாயப்படுத்தலுடன் தலைமையகத்துக்கு அனுப்புமாறும் கலந்துரையாடலின் போது ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளரின் கீழ், குளங்களை தூர்வாருதலுடன் தொடர்புடைய சகல திணைக்களங்களையும் ஒருங்கிணைத்து கலந்துரையாடலை நடத்தி இதற்கான நிரந்தரப் பொறிமுறையை உருவாக்குமாறும் ஆளுநர் பணிப்புரை விடுத்தார். இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர், வடக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களப் பணிப்பாளர், கமநலசேவைகள் உதவி ஆணையாளர், பிரதி விவசாயப் பணிப்பாளர், நீர்பாசனப் பொறியியலாளர்கள், குளங்களைத் தூர்வாரும் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/224612

சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதால் மனமுடைந்து உயிரை மாய்த்த நபர் : விசாரணையில் குற்றமற்றவரென வெளியான தகவல் !

3 weeks ago
Published By: Digital Desk 3 09 Sep, 2025 | 12:46 PM கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கி பஸ்ஸில் பயணித்த ரமச்சந்திரன் புவனேஸ்வரன் என்ற முரளி (34), நித்திரையால் தான் செல்ல வேண்டிய இடத்தைத் தாண்டி, ரம்பொட பகுதியில் அதிகாலை 2 மணியளவில் இறங்கியுள்ளார். உறவினர் ஒருவரைத் தேடிச் சென்றபோது, தவறுதலாக ஒரு வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். இதைக் கண்ட வீட்டின் உரிமையாளர்கள், குறித்த நபரை திருடன் என நினைத்து சத்தம் போட்டுள்ளனர். சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள், அவரை கடுமையாகத் தாக்கி, மரத்தில் கட்டிவைத்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர். பின்னர், கிராம மக்களால் கொத்மலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட முரளியிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன. விசாரணையில் அவர் குற்றமற்றவர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர், முரளி பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். ஆனால், கிராம மக்கள் அவரைத் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் மனமுடைந்த முரளி, தவறான முடிவெடுத்து தனது உரை மாய்த்துள்ளார். முரளி, புசல்லாவை ரோத்ஸ்சைல்ட் தோட்டத்தில் வசித்துவந்தவர். அவரது பெற்றோர் ஏற்கனவே உயிரிழந்துவிட்ட நிலையில், அவரது ஒரே சகோதரி வேறு ஒரு பகுதியில் வசித்து வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து கொத்மலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வஜிரா ரத்நாயக்க தலைமையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. https://www.virakesari.lk/article/224617

புதையல் தோண்டுதல்; கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

3 weeks ago
09 Sep, 2025 | 10:54 AM கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உட்பட 9 பேரை செப்டெம்பர் 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை (08) உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் மனைவி உட்பட 8 பேர் இணைந்து அநுராதபுரம், சிராவஸ்திபுர, திம்பிரிகடவல பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து புதையல் தோண்டிய சம்பவத்துக்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் மனைவி உட்பட 8 பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் ஆகஸ்ட் 25 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 பேரும் நேற்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224607

இன்று முதல் கடுமையாகும் போக்குவரத்து சட்டம்

3 weeks ago
நுவரெலியாவில் தேர் போன்று அலங்கரித்து வரும் பஸ்களால் ஆபத்து Published By: Digital Desk 3 09 Sep, 2025 | 10:57 AM நுவரெலியாவில் அதிகரிக்கும் போக்குவரத்து விதிமீறல்கள் ஒலி, ஒளி தீவிர பாதிப்பை உண்டாக்குகிறது. சுற்றுலா நிமிர்த்தம் நுவரெலியா வரும் பஸ்கள் போக்குவரத்து விதிமீறல்களால் ஏற்படும் அதிக ஒலி, ஒளி காரணமாக ஏற்படும் பாதிப்புகளைக் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் நுவரெலியா கிரகரி வாவிக் கரையோரம் உள்ளிட்ட சில சுற்றுலா பிரசித்திப்பெற்ற இடங்களில் சுற்றுலா பயணிகள் வருகைத்தரும் பஸ்கள் தற்கால சூழ்நிலைக்கேற்ப நவீன வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டு விபத்துகள் ஏற்படக்கூடிய வகையில் பொருத்தப்பட்டுள்ள அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களைக் கொண்டு பலநிறங்களில் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு வருகிறது. அத்துடன் அதிரும் அதிகச் சத்தமான பாடல்களை ஒலிபரப்பபட்டு தங்களுடைய பொழுதுகளை கழிக்கின்றனர். இதில் அதிக ஓசையை எழுப்பக்கூடிய ஒலி எழுப்பிகளை ( ஹோர்ன்கள் Horn) பயன்படுத்தி வருகின்றனர். இது குறித்து பொலிஸாரோ அல்லது போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்கும் அதிகாரிகளோ கண்டுகொள்வதில்லை என பொது மக்கள் குற்றம் சுமத்தப்படுகிறது. இது குறித்து பொது மக்கள் கூறுகையில், நுவரெலியாவிற்கு வரும் பஸ்களில் அதிக வெளிச்சத்தை உமிழும் திறன் வாய்ந்த பரவலாக ஒளி பரப்பும் நவீன (எல்.இ.டி) மின்குமிழ்கள் பொருத்தப்பட்டுள்ளன. நுவரெலியா நகரின் மையப் பகுதிகளிலும் அதிக எண்ணிக்கையிலான விளக்குகளுடன் ஒளியை பரப்பிச் செல்லும் இவ்வாறான பஸ்களால் எதிரே வரும் வாகன சாரதிகளின் கண்களுக்கு கூச்சத்தை ஏற்படுத்துகின்றன. இதேபோல் பயன்படுத்தப்படும் அதிக ஓசையை எழுப்பக்கூடிய ஒலி எழுப்பிகள் ( ஹோர்ன்கள் Horn) மிருகங்களைப் போல் ஒலி எழுப்புவதாகவும் இருக்கின்றன. பிரதான வீதிகளில் திடீரென ஒலிக்கப்படும் இந்த வகை ஒலி எழுப்பிகள் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இவ்வாறான செயற்பாடு காரணமாக ஏனைய வாகன சாரதிகள் மட்டுமின்றி, பாதசாரிகளுக்கும் உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்துகிறது . முதலில் அதிக ஒலி எழுப்பும் ஹோர்ன்களை பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறு குறித்து பஸ் சாரதிகளுக்கும் நடத்துனர்களுக்கும் அறிவுறுத்த நடவடிக்கை வேண்டும். மேலும் நுவரெலியாவிற்கு வருகைத்தரும் பஸ்களால் அதிக ஒலியானது நம்மை அறியாமலே நம் அரோக்கியத்தை பாதிக்கிறது. அதேபோல் மற்றைய உயிரினங்களுக்கும் தீவிர பாதிப்பை உண்டாக்குகிறது. மேலும் இவ்வாறான அதிக ஒலி செவிகளில் துன்புறுத்தக் கூடிய இரைச்சலாக மாறுகிறது. இது காதுகளில் ஏற்படும் நோய்களுக்கு அதிக வலியை உண்டாக்கும் அனுபவத்தை அதிகரிக்கிறது. தற்போது திரையரங்குகளை விஞ்சும் வகையில் நவீன சவுண்ட் சிஸ்டம், ஊபர் ஸ்பீக்கர்கள் மூலம் பாடல்கள் ஒலிபரப்பபட்டு தங்களுடைய பொழுதுகளை கழிக்கின்றனர். இதில் இவர்கள் நள்ளிரவு வரை ஒரே இடத்தில் பஸ்களை நிறுத்தி தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்கின்றன ,. இதனால் நாங்கள் நகர மத்தியில் வாழ்வதற்கு ஏற்றதாக இல்லை. வீடுகளில் இரவில் கண்ணயர முயற்சிப்பவர்கள் திடீரென அதிரும் சத்தத்தால் அதிர்ச்சியடைகின்றனர். பெரியவர்களின் நிலை இப்படி என்றால் குழந்தைகளின் நிலையை விவரிக்க முடியாததாக உள்ளது. பஸ்ஸில் எழும் அதிக சத்தத்தால் வீறிட்டு அழும் கைக் குழந்தைகளைச் சமாதானப்படுத்த முடியாமல் பெற்றோர் தவிக்கும் நிலை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக ஒருவர் கேட்கும் சத்தம் எப்போது அவர்களின் செவிகளில் துன்புறுத்தக் கூடிய இரைச்சலாக மாறுகிறதோ அப்போது அதை ஒலி மாசு என்று வைத்தியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றன. இதனையே நாங்கள் தினமும் அனுபவித்து வருகிறோம். இவ்வாறு அதிக சத்தங்களை கேட்கும்போது முதலில் எங்களுக்கு செவி பாதிப்பு பிரச்சினைகளை சந்திக்கின்றோம். மேலும், ஒலி மாசினால் உயர் இரத்த அழுத்தம், தலைவலி, உளவியல் பிரச்சனைகளான மன அழுத்தம், கவலை, தூக்கமின்மை, நினைவாற்றல் குறைதல் போன்ற பாதிப்புகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது . இதிலும் கடந்த காலங்களில் பாட்டுகள் மட்டும் ஒலிக்க விடப்பட்ட நிலையிலிருந்து, அடுத்த வளர்ச்சியாக அதிக தொழில்நுட்பத்தினைக்கொண்ட புதிய Smart தொலைக்காட்சிகள் மூலம் திரைப்படங்கள் மற்றும் வீடியோ பாடல்கள் ஒளிபரப்ப தொடங்கியதும் பொது மக்களின் சோதனை பல மடங்காக மாறியுள்ளது. இதில் ஆபாசக் காட்சிகள் மிகுந்த ஒளிபரப்பப்படும்போது, படங்கள் ,பாடல்களை அருகில் வசிக்கும் குடும்பதினர் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். நுவரெலியாவிற்கு வருகை தரும் விசித்திரமான பஸ்களால் ஏற்படும் ஒலி மாசினால் மனிதர்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அது ஒட்டுமொத்த இயற்கை சூழலையும் பாதிக்கிறது. இங்குதான் நாம் இதன் தீவிரத்தை உணர வேண்டும். ஒலி மாசு மனிதர்களைவிட அதிகளவில் பறவைகள், உயிரினங்கள், விலங்குகளுக்குதான் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் பஸ்களில் சந்திக்கும் இந்தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைப்பது யார் எனத் தெரியாமல் நாள்தோறும் வேதனையைச் சந்திக்கும் பொது மக்களுக்கு நல்வழி ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களின் பாரிய எதிர்பார்ப்பாக உள்ளது எனத் தெரிவிக்கின்றனர். எனவே பஸ்களில் விபத்துகள் ஏற்படக்கூடிய வகையில் பொருத்தப்பட்டுள்ள அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களை அகற்றி முன் மற்றும் பின் பக்கங்களில் பொருத்தக்கூடிய சமிஞ்சை மின்விளக்குகளுக்கு மேலதிகமாக பொருத்தப்பட்டுள்ள மின்குமிழ்களை அகற்றவும் அதிகம் சத்தம் கூடிய ஒலி அமைப்புக்களை குறைத்துக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நுவரெலியாவிற்கு புதிதாக வருகின்ற பஸ்களால் அவதியுறும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும். https://www.virakesari.lk/article/224605

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து பிரித்தானியா  அறிக்கை வெளியிட்டது!

3 weeks ago
அதுதானே, எங்கடை சிங்களப்படைகள் செய்ததெல்லாம் தெரிந்துகொண்டு வெளிநாட்டுப்பொறிமுறையை ஏற்று இனவழிப்பு நடைபெற்றுள்ளது என்பதை உறுதிப்படுத்த அனுமதிக்க முடியாதென்பதை எப்படித் தந்திரமாகப் 16ஆண்டுகளாக ஏமாற்றி வருகிறார்கள். இவர்களும்(மேற்கும், மேற்கின் நிறுவனங்களும்) அறிக்கைவிட்டுத் தமிழினத்துக்கு ஏதோ செய்வதுபோல் காட்டுகிறார்கள். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

இந்த ஆண்டு வீதி விபத்துக்களினால் 1,870 பேர் உயிரிழப்பு!

3 weeks ago
இதுவரையான காலப்பகுதியில் வீதி விபத்துகளில் 1,800க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! Published By: Digital Desk 1 09 Sep, 2025 | 09:19 AM இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வீதி விபத்துக்களில் 1,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டம்பர் 4 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நடந்த ஆயிரத்து 757 வீதி விபத்துகளில் ஆயிரத்து 870 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. இந்த புள்ளிவிவரத்தை போக்குவரத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் தலைவர் இந்திக்க ஹபுகொட வெளியிட்டுள்ளார். வீதி விபத்துகளால் நாளாந்தம் சுமார் ஏழு முதல் எட்டு பேர் வரை உயிரிழப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். எனவே, சாரதிகள், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், பாதசாரிகள் மற்றும் பயணிகள் உள்ளிட்ட அனைத்து வீதி பயனர்களும் போக்குவரத்துச் சட்டங்களை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என பிரதி பொலிஸ் தலைவர் இந்திக்க ஹபுகொட தெரிவித்துள்ளார. அதேநேரம், வீதி நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும், மேலும் விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்க சுய ஒழுக்கத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/224588

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து பிரித்தானியா  அறிக்கை வெளியிட்டது!

3 weeks ago
மனித புதைகுழி விவகாரம் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப இடம்பெற வேண்டும் - பிரித்தானியா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து பிரித்தானியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உயர் ஸ்தானிகரின் அண்மைய இலங்கை விஜயம் மற்றும் அறிக்கைக்கு பிரித்தானியா தமது நன்றியை தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த அரசாங்கத்தின் உறுதிப்பாடுகளை வரவேற்கும் அதேவேளை உறுதியான மற்றும் நிலையான முன்னேற்றத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாரிய புதைகுழிகளை தோண்டி எடுத்து விசாரணை செய்வதற்கான இலங்கை அதிகாரிகளின் நடவடிக்கை மிக முக்கியமானதோடு, அதனை சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. தன்னிச்சையான தடுப்புக்காவல், காவலில் வைக்கப்பட்ட மரணங்கள், மனித உரிமை பாதுகாவலர்களை அச்சுறுத்துதல் மற்றும் சிறுபான்மை சமூகங்களை குறிவைத்தல் ஆகியவை குறித்த உயர் ஸ்தானிகரின் தொடர்ச்சியான கவலைகளை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போன்ற சட்டங்களை ஒழிக்க பொதுமக்களுக்கு உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அடிப்படை சுதந்திரங்களை கட்டுப்படுத்த தொடர்ந்து அந்த சட்டத்தை பயன்படுத்துவது குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். இழப்பீடுகள் மற்றும் காணாமல் போனவர்களை மையமாகக் கொண்ட உள்நாட்டு நிறுவனங்களின் பணிகளை மீண்டும் ஊக்குவிக்கவும் நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். எந்தவொரு நல்லிணக்கமும் பொறுப்புக்கூறல் செயல்முறையும் உள்ளடக்கியதாகவும் விரிவானதாகவும் இருப்பது, பாதிக்கப்பட்ட சமூகங்களின் ஆதரவைக் கொண்டிருப்பது, கடந்தகால பரிந்துரைகளை உருவாக்குவது மற்றும் சர்வதேச தரங்களை பூர்த்தி செய்வது மிகவும் முக்கியமாகும். அதேநேரம் மோதல் தொடர்பான பாலியல் வன்முறை குறித்த உங்கள் அலுவலகத்தின் முக்கியமான பணியை முன்னெடுத்துச் செல்லவும் ஐ.நா மனித உரிமைப் பேரவையின் உயர் ஸ்தானிகரிடம் பிரித்தானியா கோரியுள்ளது. மேலும் இந்தப் பிரச்சினை இலங்கையில் முன்னுரிமைப் பிரச்சினையாகக் கவனிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைகளில் அரசாங்கத்துடன் ஆக்கப்பூர்வமாகப் பணியாற்ற விருப்பம் கொண்டுள்ளதாகவும் பிரித்தானியா வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmfbyzwt100bao29no6nzf3ao

யாழில் வாள்வெட்டு தாக்குதலில் இளைஞன் படுகாயம்!

3 weeks ago
09 Sep, 2025 | 01:03 PM யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலட்டிச் சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை (08) காலை இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், ஹையேஸ் ரக வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று, மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் ஒருவனை மோதி விழுத்திவிட்டு அந்த இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதலை நடாத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்நிலையில் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/224620

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது!

3 weeks ago
கெஹல்பத்ர குழுவை இந்தோனேசியாவில் கைது செய்த அதிகாரிகள்! வெளியாகிய முழுமையான காணொளி இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக குழு தலைவர், கெஹல்பத்ர குழு தொடர்பிலான மற்றுமொரு காணொளி வெளியாகியுள்ளது. இந்தோனேசிய பாதுகாப்பு தரப்புகள், இன்டர்போல் உள்ளிட்ட குழு எவ்வாறு அவர்களை கைது செய்தனர் என்பதை குறித்த காணொளி ஜாக்லின்_சாப்பர்ஸ் என்ற எக்ஸ் தள பதிவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சொகுசு விடுதியொன்றில் தங்கியிருந்த குழுவை பாதுகாப்பு குழு கைது செய்தமை இதன்மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. https://tamilwin.com/article/full-video-the-arrest-of-the-kehalbhadra-indonesia-1757401423#google_vignette

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு.

3 weeks ago
ரஷ்யா புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டறிந்துவிட்டதா? Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை புற்றுநோய்க்கான தடுப்பூசி குறித்துக் காணும் முன் புற்று நோய் குறித்து இந்தப் பதிவிற்கு சம்பந்தமான ஒரு சிறிய பார்வை புற்று நோய் என்பது குறிப்பிட்ட இடத்தில் செல்கள் சொல்பேச்சுக் கேட்க மறுத்து அதிகமான எண்ணிக்கையில் பெருகுதல் அதிகமான அளவு வளர்ச்சி அடைதல் தனக்கான காலம் முடிந்தால் மரணிக்க மறுத்தல் உடலின் எதிர்ப்பு சக்தியையும் மீறி சாகாவரம் பெற்று தொடர்ந்து கட்டுப்பாடற்று வளருதல் தனக்குத் தேவையான ரத்த ஓட்டத்தை அதிகரித்து உடலில் உள்ள சத்துக்களை சுயநலத்துடன் உறிஞ்சிக்கொள்ளுதல் குறிப்பிட்ட இடத்தில் இருப்பை நிலைநாட்டியவுடன் அருகில் இருக்கும் இடங்களை ஆக்கிரமித்தல் பிறகு ரத்தத்தில் கலந்து தூர உறுப்புகளுக்கும் பரவுதல் என புற்று நோய் என்பது சராசரி செல்களின் தன்மையில் இருந்து மாறுபட்டு நமது செல்களே நமக்கு வில்லனாக மாறுவதாகும். அதுவரை நன்றாக சொல்பேச்சுக் கேட்டு செயல்பட்டு வந்த நமது செல்கள் எப்படி இவ்வாறு மாறுகின்றன? அதற்கு அந்த செல்களில் உள்ள மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக அமைகின்றன. பொதுவாக செல்களில் புற்றுத் தன்மையை கட்டுப்படுத்தும் மரபணுக்கள் இயற்கையாகவே உண்டு. கூடவே ஒரு செல்லுடைய சுவர் மற்றொரு செல்லுடைய வெளிப்புற சுவரை மீறி வளர்தலைத் தடுப்பதற்கு, தனக்கான முதிர்ச்சி வயது வந்தால் தானாக தன்னை மாய்த்துக் கொள்வதற்கு , தேவையற்ற எண்ணிக்கை பெருக்கத்தை தடுப்பதற்கு என பல மரபணுக்கள் செல்களுக்குள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவை தான் நமக்கு புற்று நோய் ஏற்படாமல் தடுக்கின்றன. எனினும் ஓரிடத்தில் தொடர்ந்து நிகழும் காயங்கள் - உதாரணம் சிகரெட் புகையால் நுரையீரலில் நிகழும் காயம், புகையிலையால் வாயில் நிகழும் காயம் அல்லது குறிப்பிட்ட வைரஸ்களால் ஏற்படும் காயங்கள் - கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இவற்றால் இந்த புற்றுநோயில் இருந்து காக்கும் மரபணுக்களில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே புற்று நோய் உண்டாகிறது. இப்போது புற்று நோய் செல்களில் மாற்றப்பட்ட வேறுபட்ட மரபணுக்கள் வேலை செய்கின்றன. இவை அடுத்தடுத்து பல்கிப் பெருகும் அனைத்து புற்று செல்களிலும் சிட்டி 2.0 போல உள்ளிருந்து கொண்டு அவற்றை இயக்குகின்றன. இவ்வாறு தான் இயங்குவதற்கு ஏற்றவாறு புற்று நோய் செல் புரதங்களை உருவாக்கிக் கொள்கின்றன. நிற்க... இங்கிருந்து தான் நமது கட்டுரை தொடங்குகிறது. புற்று நோய் செல்கள் வளம்பெற்று வளருவதற்கு முக்கியமானவை புற்று நோய் மரபணுக்கள் அடுத்து புற்று செல்களை கட்டமைக்கத் தேவையான புற்று செல்களில் உள்ள புரதம்... நமது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த மரபணுக்களை அதன் பணியை செய்யாமல் தடுத்து விட்டாலோ அல்லது புற்று செல்கள் உருவாக்கும் பிரத்யேக புரதங்களை அழித்துவிட்டாலோ புற்றுக்கட்டிகளையும் சேர்த்து அழிக்கலாம் தானே? அந்தத் தொழில்நுட்பம் தான் "எம் ஆர்என்ஏ" என்று அழைக்கப்படும் மெசஞ்சர் ஆர் என் ஏ( m RNA அல்லது MESSENGER RNA) தொழில்நுட்பமாகும். இந்த மெசஞ்சர் ஆர் என் ஏ என்றால் யாவை? ஒவ்வொரு செல்லுக்குள்ளும் நியூக்லியஸ் பகுதியில் டிஎன்ஏ இருக்கிறது. டிஎன்ஏ கூறும் செய்திகளை தன்னகத்தே பெற்றுக் கொண்டு ரிபோசோம்களுக்கு அதை எடுத்துக் கொண்டு சென்று புரதங்களை உற்பத்தி செய்யத் தூண்டுவது மெசஞ்சர் ஆர்.என்.ஏவின் ( தூது செல்லும் மரபணுப் பொருள்) பணியாகும். அறிவியலாளர்கள் கடந்த முப்பது வருடங்களாக ஆராய்ச்சி செய்து மெசஞ்சர் ஆர்என்ஏவை செயற்கையாக உருவாக்கும் தொழில்நுட்பத்தை அறிந்து விட்டனர். மெசஞ்சர் ஆர் என் ஏ தொழில்நுட்பத்தை வைத்து புற்று நோய்க்கான சிகிச்சை அளிக்கும் மருந்துகளைக் கண்டறியும் ஆராய்ச்சிகள் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகின்றன. அந்த ஆராய்ச்சிகளின் மூலம் கிடைத்த அறிவைத் தான் அறிவியலாளர்கள் கோவிட் பெருந்தொற்றின் போது தடுப்பூசி உருவாக்கத்தில் மெசஞ்சர் ஆர் என் ஏ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுக் காண்பித்தனர். உண்மையில் கோவிட் பெருந்தொற்று வந்து ஃபைசர், மாடர்னா உள்ளிட்ட மெசஞ்சர் ஆர் என் ஏ தொழில்நுட்ப தடுப்பூசிகள் வெற்றி பெறும்வரை மருத்துவ அறிவியல் உலகம் இந்த தொழில்நுட்பம் குறித்து பெரிதும் முக்கியத்துவம் தராமல் இருந்தது. எனினும் தற்போது கடுமையான விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றியாக "மெசஞ்சர் ஆர் என் ஏ தொழில்நுட்பத்தை கண்டறிந்து கூறிய" கடாலின் கரிக்கோவுக்கும் ட்ரியூ வெய்ஸ்மேனுக்கும் 2023 க்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர்களின் கண்டுபிடிப்பால் பல லட்சம் உயிர்கள் கோவிட் பெருந்தொற்றின் போது காக்கப்பட்டதே அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டதற்கான முக்கிய காரணம். சரி இந்த தொழில்நுட்பத்தை எவ்வாறு புற்று நோய் மற்றும் வைரஸ் தொற்று தடுத்தலில் உபயோகிக்க முடியும்? பெருந்தொற்றை உருவாக்கிய கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதம் / அல்லது புற்று நோய் செல்கள் உண்டாக்கும் புரதங்கள் இவற்றை மெசஞ்சர் ஆர் என் ஏவுக்கு வைத்து பேக் செய்து அதை சுற்றி நானோ தொழில்நுட்பம் மூலம் கொழுப்புத் திவலைகளைப் பூசி உடலுக்குள் செலுத்தும் போது, இந்த வைரஸின் புரதம் / புற்று செல்களின் புரதம் கொண்ட மெசஞ்சர் ஆர் என் ஏக்கள் உடலின் செல்களினால் உட்கொள்ளப்படும். செல்களுக்கு உள்ளே சென்ற எம் ஆர் என் ஏ - அந்த செல்களை தன்னகத்தே கொண்டு வந்ததைப் போலவே புரதங்களை உருவாக்கக் கூறும். இவ்வாறு உருவான புரதங்களை நமது உடல் "ஆண்ட்டிஜென்களாக" பாவிக்கும் இந்த ஆண்ட்டிஜென்களை நமது எதிர்ப்பு சக்தி மண்டலத்தில் உள்ள டெண்ட்ரிடிக் செல்கள் நன்குணர்ந்து அவற்றை எதிர்க்கும் திறனை அறிந்து கொண்டு அதை டி செல்களுக்கு கற்பிக்கும். டி- செல்கள் இந்த புரதங்கள் அனைத்தையும் தேடித் தேடி அழித்தொழித்து விடும். கூடவே இனி வருங்காலத்தில் இதே போன்ற புரதங்கள் நம் உடலில் எங்கேனும் வருமாயின் அவற்றையும் தேடிக் கொள்ளும். இவ்வாறு மெசஞ்சர் ஆர் என் ஏ தொழில்நுட்பத்தை வைத்து மாடர்னா நிறுவனம் நடத்திய ஆய்வில் தலை மற்றும் கழுத்துப் பகுதி புற்று நோய் இருந்த பத்து பேரில் இருவருக்கு முழுமையாக குணமானது ஐந்து பேருக்கு புற்றுக் கட்டியின் அளவு சுருங்கியது. இந்த தொழில்நுட்பம் மூலம் ஒரு புற்று நோய் கட்டியின் சிறு நுண் துண்டை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி அது உருவாக்கியுள்ள உள்ள புரதங்களை பிரித்தெடுத்து அவற்றை மெசஞ்சர் ஆர் என் ஏவில் பேக் செய்து உடலுக்குள் செலுத்தினால் அந்த குறிப்பிட்ட புரதத்திற்கு எதிராக சிறப்பான எதிர்ப்பு சக்தி உருவாக்கப்பட்டு அந்த புரதத்தைக் கொண்ட புற்று செல்களும் அழிக்கப்படும். இத்தகைய மெசஞ்சர் ஆர் என் ஏ தடுப்பூசிகளில் 34 புற்றுசெல் உருவாக்கும் புரதங்களை பேக் செய்து வழங்கும் அளவு தொழில்நுட்பம் முன்னேறியுள்ளது. ஆம்.. உதாரணத்திற்கு ரஷ்யாவில் அதிகமாகக் கண்டறியப்படும் சில புற்று நோய்கள் உதாரணமாக நுரையீரல் புற்று புராஸ்டேட் புற்று மார்பகப்புற்று ரத்தப் புற்று போன்ற புற்று செல்கள் உருவாக்கும் பொதுவான புரதங்களை ஆராய்ந்து அவற்றை மெசஞ்சர் ஆர் என் ஏ தடுப்பூசியில் பேக் செய்து பொதுமக்களுக்கு வழங்கும் போது எதிர்காலத்தில் இந்த புற்று நோய்கள் ஏற்பட்டால் ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பு சக்தி அந்த செல்களை கொன்று விடும். இதுவே இந்தத் தொழில்நுட்பமாகும். இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரஷ்யா உருவாக்கியுள்ள தடுப்பூசியை விலங்குகளுக்கு ( PRE CLINICAL STUDIES) வழங்கி புற்று நோய் கட்டிகளையும் மெட்டாஸ்டாசிஸ் எனும் தூர பரவல்களையும் முழுவதுமாக குணப்படுத்தியதை 2024 ஆம் ஆண்டின் இறுதியில் கண்டறிந்தனர். தற்போது இந்த தொழில்நுட்பத்தை மனிதர்களிடம் முதல் நிலை பரிசோதனை 48 குடல் புற்று நோய் கண்டவர்களிடம் செலுத்தி சோதித்தத்தில் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளதை பதிவு செய்துள்ளது. குடல் சார்ந்த புற்று நோய்களுக்கு வழங்குவதால் எண்டரோமிக்ஸ் ( ENTERO - குடல் ) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தத் தடுப்பூசியை வைத்து இரண்டாம் கட்ட , மூன்றாம் கட்ட சோதனை பரிசோதனைகளை இன்னும் பல ஆயிரம் பேருக்கு செய்த பிறகே அதை மக்களுக்குச் சந்தைப் படுத்துவது சரியான அணுகுமுறையாக இருக்கும். அதற்கு இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். எனினும் மருத்துவ நவீன கண்டுபிடிப்புகளில் நிலவி வரும் வல்லரசுகளுக்கு இடையிலான போட்டியில் பனிப்போர் மற்றும் வர்த்தக/ பொருளாதாரப் போரின் நீட்சியாக இத்தகைய அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. கொரோனா பெருந்தொற்று பரவிக் கொண்டிருந்த காலத்தில் அவசர நிலை இருந்தது. அப்போதும் கூட முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை சுருக்கி விரைவுபடுத்தி முடிவுகளை வெளியிட்ட பின்னரே தடுப்பூசிகள் சந்தைக்கு வந்தன என்பதையும் பதிவு செய்கிறேன் ரஷ்யாவைப் பொருத்தவரை இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை (PHASE II & PHASE III ) செய்த பிறகு முழு ஆராய்ச்சியையும் சக அறிவியலாளர்களால் ஆய்வுக்குட்படுத்தப்படும் மருத்துவ இதழ்களில் வெளியிட்டு பிறகு மக்களுக்கு வழங்குவது நல்லது. இதே தொழில்நுட்பத்தில் மெலனோமா எனும் தோல் புற்றுநோய்க்கு எதிராக 2021 ஆம் ஆண்டு BNT111 எனும் தடுப்பூசிக்கு அமெரிக்க எஃப்டிஏ அவசர கால முன் அனுமதி வழங்கியது மே 2024இல் எப்ஸ்டின் பார் வைரஸ் மூலம் உருவாகும் புற்று நோய்க்கு எதிரான எம் ஆர் என் ஏ தடுப்பூசிக்கும் எஃப்டிஏ அனுமதி வழங்கியுள்ளது. இந்த வகை தடுப்பூசிகளை மிக எளிமையாகவும் விரைவாகவும் உருவாக்க முடியும் என்பதால் புற்று நோய் கண்டறியப்பட்ட சில வாரங்களுக்குள் நோயருக்கு ஏற்ற பிரத்யேக தடுப்பூசியை (PRECISION MEDICINE) தயாரிக்க முடியும். மெசஞ்சர் ஆர் என் ஏ எனும் தொழில்நுட்பம் புற்று நோய் மற்றும் தொற்று நோய் தடுப்பில் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் ஆதிக்கம் செலுத்தப்போவது கண்கூடு. எனினும் மருத்துவ ரீதியாக செய்ய வேண்டிய ஆய்வுகளை சரியான நேரம் ஒதுக்கிக் செய்த பின் ஆய்வுகளை வெளியிட்டு பிறகு சாதக பாதக அம்சங்களை சீர்தூக்கி பார்க்குமாறு இந்த கண்டுபிடிப்பை சந்தைப் படுத்துவது சிறந்ததாக இருக்கும். நன்றி Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை
Checked
Wed, 10/01/2025 - 06:59
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed