3 weeks 1 day ago
ஹ... ஹா... ஹா.... ராஜபக்ச கோஷ்டியின் சிவப்பு சால்வைகள் கழட்டப் பட்டு, சிறைச்சாலை சீருடை (Uniform) வழங்கப் பட இருக்கின்றது.
3 weeks 1 day ago
3 weeks 1 day ago
3 weeks 1 day ago
ஹ... ஹா... ஹா.... ராஜபக்ச கோஷ்டியின் சிவப்பு சால்வைகள் கழட்டப் பட்டு, சிறைச்சாலை சீருடை (Uniform) வழங்கப் பட இருக்கின்றது.
3 weeks 1 day ago
பாதாள உலக குழுவுடன் தொடர்பு- வெளியாகவுள்ள முன்னாள் அமைச்சர்களின் பெயர்கள்! ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலக குற்றக் கும்பல்களுடன் தொடர்புகளை வைத்திருந்த முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற உயர் மட்ட நபர்களின் பட்டியலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவும் விரைவில் அவையில் அறிக்கையொன்றை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1446497
3 weeks 1 day ago
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் (ரத்து) தொடர்பில் உயர் நீதிமன்றின் தீர்மானம்! முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிகளுக்கும் முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. இன்றைய சபை அமர்வின் ஆரம்பத்தில் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன உயர் நீதிமன்றத்தின் விளக்கத்தை அறிவித்தார். இதன்படி குறித்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் இன்று அறிவித்தார். https://athavannews.com/2025/1446489
3 weeks 1 day ago
இந்த ஆண்டு வீதி விபத்துக்களினால் 1,870 பேர் உயிரிழப்பு! இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் செப்டம்பர் 4 வரை நடந்த 1,757 வீதி விபத்துகளில் நாடு முழுவதும் மொத்தம் 1,870 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்திக ஹபுகொட இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார். வீதி விபத்துகளால் தினமும் சுமார் ஏழு முதல் எட்டு பேர் உயிரிழப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, வாகன சாரதிகள், பாதசாரிகள் மற்றும் பயணிகள் உட்பட அனைத்து வீதிப் பயனர்களும் போக்குவரத்து சட்டங்களை அவசியம் பின்பற்ற வேண்டும். விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்க சுய ஒழுக்கத்துடன், அவதானத்துடனும் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். https://athavannews.com/2025/1446451
3 weeks 1 day ago
சந்தேகத்திற்கிடமான இரசாயனங்கள் குறித்த அறிக்கை இரண்டு நாட்களுக்குள்! நாட்டின் பல பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரசாயனங்கள் குறித்த சோதனை அறிக்கை அடுத்த இரண்டு நாட்களுக்குள் வழங்கப்படும் என்று தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை (NDDCB) தெரிவித்துள்ளது. தொடர்புடைய பொருட்களின் மாதிரிகளை சோதிக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் இந்திக வன்னிநாயக்க தெரிவித்தார். இந்தோனேசியாவில் அண்மையில் கைது செய்யப்பட்ட ஒரு குற்றக் கும்பலின் உறுப்பினர்களால் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மீத்தெனிய பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் தங்காலை பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் இதேபோன்ற பொருட்கள் தொகை கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் நேற்று (08) கந்தானை பகுதியிலும் இதேபோன்ற பொருட்கள் தொகை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பொருட்களின் மாதிரிகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாகவும், சோதனை விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் NDDCB தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1446460
3 weeks 1 day ago
போர் முடிந்து 20 வருடமாகி விட்டது. இந்தியா போன்ற செம்மறி நாடுகளால்... விடுதலைப் போராட்டத்தை நசுக்கி, பாதிக்கப் பட்ட அந்தத் தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வை கொடுக்க முன்வராத கையாலாகாத "பொன்னை" நாடுகள் எல்லாம் இன்னும் ஸ்ரீலங்காவுக்கு உதவி செய்து கொண்டு உலக மேடைகளில் பொய் வேசம் போட்டுக் கொண்டு பிதற்ரித் திரிவது பைத்தியக்காரத்தனமாக உள்ளது.
3 weeks 1 day ago
கே.பி. யை... கைது செய்தவுடன், இலங்கை அரசு தாங்கள் கைது செய்த மாதிரி... மாதக்கணக்கில் பத்திரிகைளில் பீலா விட்டுக் கொண்டு திரிந்தவர்கள். அதை... நம்பின சிங்கள சனமும்... மகிந்தவையும் , கோத்தாவையும்... பாராக்கிரமபாகு மாதிரி தூக்கி கொண்டாடி அடுத்தடுத்து வந்த தேர்தலிகளில் வெல்ல வைக்க அவங்கள் கே.பி.யிடம் இருந்த தமிழ் மக்களின் சொத்துக்களையும் வறுகி எடுத்து... நாட்டை கொள்ளையடித்து விட்டுப் போய் விட்டார்கள். பொய் உடனே பலன் கொடுத்தாலும்... உண்மை ஒரு நாளும் உறங்காது என்பதற்கு மேலே உள்ள சம்பவம் நல்ல உதாரணம். திருட்டு கூட்டங்கள்.
3 weeks 1 day ago
தாய்லாந்தின் முன்னாள் பிரதமருக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனை! தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரவுக்கு (Thaksin Shinawatra) அந்நாட்டு உயர் நீதிமன்றம் ஒரு வருடம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இது செல்வாக்கு மிக்க அரசியல் வம்சத்திற்கு மற்றொரு அடியாகும். அவர் முன்பு ஒரு மருத்துவமனையில் சிறைத்தண்டனை அனுபவித்ததால், அதன் ஒரு பகுதியை அவர் சிறையில் கழிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த உயர்மட்ட வழக்கு, முந்தைய ஊழல் தண்டனையுடன் தொடர்புடையது. 2001 ஆம் ஆண்டு முதன்முதலில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து தாக்சினும் அவரது குடும்பத்தினரும் தாய்லாந்து அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவரது மகள் பேடோங்டார்ன் முன்பு பிரதமராகப் பணியாற்றினார். ஆனால் கம்போடியாவின் ஹுன் சென்னுடனான கசிந்த தொலைபேசி அழைப்புடன் தொடர்புடைய வழக்கில், அரசியலமைப்பு நீதிமன்றம் நெறிமுறைத் தரங்களை மீறியதாகத் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து கடந்த மாதம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், 76 வயதான தாக்சினின் அண்மைய வழக்கு அவரது பிரதமர் பதவியுடன் தொடர்புடைய முந்தைய தண்டனையிலிருந்து உருவாகிறது. முன்னாள் பிரதமர் 2006 இல் ஒரு இராணுவ சதியில் பதவி நீக்கம் செய்யப்பட்டு, பல ஆண்டுகள் சுயமாக நாடுகடத்தப்பட்டார். 2023 ஆம் ஆண்டு அவர் தாய்லாந்துக்குத் திரும்பியபோது, அவர் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பதவியில் இருந்த காலத்தில் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்காக குற்றவாளி எனக் கண்டறியப்பட்டார். அவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தாக்சின் அரச மன்னிப்பு கோரியதைத் தொடர்ந்து, தாய் மன்னர் அவரது தண்டனையை ஒரு வருடமாக குறைத்தார். ஆனால் இதய பிரச்சினைகள் குறித்து முறைப்பாடு அளித்த பின்னர் அவர் விரைவாக பொலிஸ் பொது மருத்துவமனையின் சொகுசுப் பிரிவுக்கு மாற்றப்பட்டதால், அவர் ஒரு நாளுக்கும் குறைவான நேரத்தை மட்டுமே சிறைச்சாலையில் கழித்தார். அவர் ஆறு மாதங்கள் அங்கேயே இருந்தார், பின்னர் பிணை பெற்று போங்கொக்கில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றார். https://athavannews.com/2025/1446479
3 weeks 1 day ago
19 பேர் உயிரிழப்பு; சமூக ஊடகத் தடையை நீக்கிய நேபாளம்! 19 பேர் உயிரிழந்த போராட்டங்களைத் தொடர்ந்து, சமூக ஊடகத் தடையை நேபாளம் நீக்கியுள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வலுக்கட்டாயமாக நுழைந்து, பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்கள் மீதான தடையை நீக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர். ஊழலை எதிர்த்துப் போராடவும் அவர்கள் அழைப்பு விடுத்தனர். நிலைமையைக் கருத்திற் கொண்டு திங்கள்கிழமை (08) இரவு நடைபெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர், சமூக ஊடகத் தடையை நீக்குவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந் நாட்டு தகவல் தொடர்பு மற்றும் தகவல் அமைச்சர் பிருத்வி சுப்பா குருங் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், தலைநகருக்கு வெளியே உள்ள நகரங்களிலும் நடந்த போராட்டங்களில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நேபாளத்தில் மில்லியன் கணக்கான பயனர்கள் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களை நம்பியுள்ளனர். அவர்கள் பொழுதுபோக்கு, செய்திகள் மற்றும் வணிகத்திற்காக அவற்றை அணுகுகின்றனர். ஆனால், அரசாங்கம் கடந்த வாரம், போலி செய்திகள், வெறுப்புப் பேச்சு மற்றும் ஆன்லைன் மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற போர்வையில் சமூக ஊடகங்கள் தொடர்பான தடையை அமுல்படுத்தியது. இதற்கு எதிராக திங்களன்று வீதிகளில் இறங்கிய இளைஞர்கள், அரசாங்கத்தின் சர்வாதிகார அணுகுமுறையை எதிர்த்துப் போராடுவதாகக் கூறினர். சில போராட்டக்காரர்கள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் சொந்த ஊரான டமாக்கில் உள்ள அவரது வீட்டின் மீதும் கற்களை வீசினர். காத்மாண்டுவில் பொலிஸார் போராட்டக்காரர்களை கலைக்க தண்ணீர் பீரங்கி தடியடி பயன்படுத்தியதுடன் இறப்பர் தோட்டாக்களால் சுட்டனர். பிரதமர் கே.பி. சர்மா ஒலி, வன்முறை மற்றும் உயிரிழப்புகளால் “மிகவும் வருத்தமடைந்தேன்” என்று கூறினார். அத்துடன், போராட்டங்களை விசாரிக்க அரசாங்கம் ஒரு குழுவை அமைக்கும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நிதி நிவாரணம் வழங்கும் என்றும் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் என்றும் அவர் உறுதிபடுத்தினார். இதனிடையே, போராட்டங்களின் போது தனது நிர்வாகம் பலத்தைப் பயன்படுத்தியது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தமையினால், உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் மாலையில் தனது இராஜினாமாவை வழங்கினார். கடந்த வாரம், நேபாளத்தின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சில் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை மீறுவதற்காக 26 சமூக ஊடக தளங்களைத் தடை செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர். சமூக ஊடகங்களைத் தடை செய்யவில்லை, ஆனால் அவற்றை நேபாள சட்டத்தின்படி கொண்டு வர முயற்சிப்பதாக நேபாள அரசாங்கம் வாதிட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1446466
3 weeks 1 day ago
இது திராவிடநெறியா? தமிழ்நெறியா?இதிலிருந்தே திராவிடக் கட்டுரையாளரின் உருட்டுக்கள் தெரிய வருகிறது.
3 weeks 1 day ago
உலக அரங்கில் பெரியார்; ஆக்ஸ்ஃபோர்டு கருத்தரங்கமும், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த பெரியாரின் திருவுருவப் படமும் 8 Sep 2025, 7:12 AM ராஜன் குறை தொன்மையான தமிழ் பண்பாடு உலக சிந்தனைக்கு அளித்த எத்தனையோ கொடைகளில் இரண்டினை முதன்மைப்படுத்திச் சொல்ல வேண்டும் என்றால் அது ஐயன் திருவள்ளுவரின் திருக்குறளும், பெரியாரின் சிந்தனைகளும் எனலாம். திருவள்ளுவர் தொடர்ந்து மொழியாக்கம் செய்யப்பட்டு வந்திருக்கிறார். லண்டனில் முதல்வர் ஸ்டாலின், திருக்குறளை 1886-ஆம் ஆண்டே மொழியாக்கம் செய்த ஜி.யு.போப் அவர்களின் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளார். அதனால் திருக்குறள் உலகில் பரவலாக அறியப்பட்டது. பெரியாரைப் பொறுத்தவரை அவர் தன் சிந்தனைகளைத் தொகுத்து நூலாக எழுதவில்லை. ஒரு சில பிரசுரங்கள் அவர் பெயரில் வந்துள்ளனவே தவிர, ஒரு விரிவான அரசியல் தத்துவ நூலாகவோ, சித்தாந்த நூலாகவோ எழுதவில்லை. மாறாக அவர் தொடர்ந்து மக்களிடையே பிரசாரம் செய்து பெரும் சிந்தனைப் புரட்சியை பொதுமன்றத்தில் உருவாக்கியவர். செயல்முறை தத்துவம் (philosophical praxis) என்பதை மேற்கொண்டவர். கற்றோருக்கான நூல்களை எழுதுவதைவிட, அனைத்து மக்களையும் சிந்திக்க வைத்து சுயமரியாதையை சுடர் விடச் செய்வதையே அவர் முக்கியப் பணியாகக் கருதினார். அவர் வாழ்நாளிலேயே அவர் உரைகளின் எழுத்து வடிவங்களும், எழுத்துக்களும் தொகுக்கப்பட்டு வெளிவந்தாலும் அவை மொழியாக்கம் செய்யக் கடினமானவை என்பதால் பெருமளவு அவ்விதம் நடந்து வெளியுலகில் பரவவில்லை. மேலும் கல்விப்புலத்தில் நிறைந்திருந்த பார்ப்பனர்களுக்கும், பிற மேல் தட்டினருக்கும் அவரைக் குறித்த சரியான புரிதல் இல்லை. இட து சாரி சிந்தனையாளர்கள் பலருக்கும் கூட அவரைக் குறித்த சரியான புரிதல் இருக்கவில்லை. அதனால் அவருடைய அளப்பரிய அரும்பணி, மானுடவரலாற்றில் அவர் உருவாக்கிய தனித்துவமிக்க சிந்தனைப் புரட்சியின் சிறப்பம்சங்கள் உலக அரங்கில் விவாதிக்கப்பட கணிசமான காலதாமதம் ஆகியுள்ளதைப் புரிந்துகொள்ள முடியும். அப்படி அறியப்படவேண்டிய சிறப்பம்சங்கள் என்ன என்பதையும் சுருக்கமாக க் கூறிவிடுவோம். பெரும்பாலான உலகத் தலைவர்கள் மக்களை திரட்டி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவார்கள் அல்லது தேசிய விடுதலையை சாதித்து புதிய அரசுருவாக்கத்திற்கு வகை செய்வார்கள். இதற்கு மாறாக பெரியார் மக்களின் சிந்தனையிலே புரட்சிகர மாற்றத்தை உருவாக்கி, புதிய விழுமியங்களின் அடிப்படையிலே குடியரசை உருவாக்க முயற்சித்தார். இதனை சமூக சீர்திருத்தம் என்று சொல்லிவிட முடியாது. புதிய குடியரசின் அடித்தளத்தை உருவாக்குதல். இன்னும் தெளிவாகச் சொன்னால் இந்திய சமூகத்தில் பரவலாக வேரூன்றிய வர்ண தர்ம சிந்தனையை, பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வு கற்பிக்கும், பிறப்பையே தண்டனையாக்கும் வர்ண தர்ம சமூக ஒழுங்கை முற்றிலும் அகற்றி, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவர் வாக்கிற்கு ஏற்ப சமத்துவ விழுமியத்தை நிலைநிறுத்துவதே அவர் மேற்கொண்ட சிந்தனைப் புரட்சியின் அடிப்படை. அவருடைய பணியின் விளைவாக “திராவிட-தமிழர்” என்ற ஒரு மக்கள் தொகுதி தன்னுணர்வு பெற்று பிராமணீய கருத்தியல் மேலாதிக்கத்தினை (Brahmin Hegemony) மறுதலிக்கும் ஆற்றலுடன் செயல்படுவது சாத்தியமானது. இருப்பினும் இந்திய ஒன்றிய அரசிடம் குவிந்துள்ள அதிகாரங்கள் உருவாக்கும் தளைகளை மீறி இந்த மக்கள் தொகுதி தொடர்ந்து தன் இலட்சியத்தை அடைய போராடி வருகிறது. இந்த உண்மை, பெரியார் மக்களின் சிந்தனைப் புரட்சியை நாடியவர், தேசிய அரசை உருவாக்க முனையாமல், குடியரசு விழுமியங்களை நிறுவ முயன்றவர், அதன் மூலம் மக்களின் மன ங்களிலே சுயமரியாதைக் கனலை உருவாக்கியவர் என்ற உண்மை இன்னம் முழுமையாக உள்வாங்கப்படவில்லை. தேசிய அரசை உருவாக்குபவர்களே வரலாற்றில் கவனம் பெறுவார்கள் என்பதால் பெரியாரின் சிந்தனைப் புரட்சி போதிய கவனம் பெறவில்லை என்றும் கூறலாம். ஆனாலும் ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்பது போல பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் பேரொளி எல்லை கடந்தும் வீசத் துவங்கியுள்ளதை வியப்பதற்கில்லை. இந்த கருத்தரங்கத்தை ஒருங்கமைத்த அமைப்பு எது, பங்கேற்ற அறிஞர்கள் யார், யார் என்பதை நாம் சுருக்கமாக அறிய வேண்டும். இரு நாள் கருத்தரங்கம் ஆயிரம் ஆண்டுகள் பழமையான, உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் பல்வேறு துறைகளும், 36 கல்லூரிகளும் அடங்கியுள்ளன. அவற்றில் ஒரு கல்லூரிதான் செயிண்ட் ஆண்டனி கல்லூரி. அதில் உள்ள ஆசிய ஆய்வு மையம் “சுயமரியாதை இயக்கமும், அதன் தாக்கங்களும்” (Self Respect Movement and its Legacies) என்ற தலைப்பில் ஒருங்கமைத்த கருத்தரங்கம் செப்டம்பர் 4,5 தேதிகளில் நடந்தேறியது. அந்த கல்லூரியின் பேராசிரியர்கள் ஜிம் மாலின்சனும், ஃபைசல் தேவ்ஜியும் இந்த கருத்தரங்கின் அமைப்பாளர்கள் ஆவார்கள். இந்த கருத்தரங்கம் குறித்த செய்திகள் பல்வேறு நாளேடுகளிலும் இடம்பெற்றுள்ளன. உலகின் பல்வேறு முன்னணி கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆய்வாளர்கள் பலர் இதில் பங்கேற்று கட்டுரைகள் வாசித்துள்ளனர். அபிமன்யு ஆர்ணி, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகம்; கணேஷ்வர், ஹைதராபாத் பல்கலைகழகம்; சுந்தர் சருக்காய், பேர்ஃபுட் பிலாசஃபர்; எஸ்.ஆனந்தி, எம்.ஐ.டி.எஸ்; கிருபா முனுசாமி, மிடில்சக்ஸ் பல்கலைகழகம்; விக்னேஷ் ராஜாமணி, கிங்க்ஸ் காலேஜ், லண்டன்; கார்த்திக் ராம் மனோஹர், நேஷனல் லா ஸ்கூல்; ஜெ.ஜெயரஞ்சன், தமிழ்நாடு மாநில திட்டக்குழு; ஆ.இரா.வெங்கடாசலபதி, எம்.ஐ.டி.எஸ்; கிறிஸ்டொஃபே ஜெஃபர்லோ, சையின்ஸ் போ, பாரிஸ்; சூரஜ் யாங்டே, ஹார்வார்டு பல்கலைகழகம்; பிரான்சிஸ் கோடி, டொராண்டோ பல்கலைகழகம்; மார்த்தா ஆன் செல்பி, ஹார்வார்டு பல்கலைகழம்; சாரா ஹோட்ஜஸ், கிங்க்ஸ் காலேஜ், லண்டன்; சுமதி ராமசாமி, டியூக் பல்கலைகழகம்; தாரிணி அழகர்சாமி, சிங்கப்பூர் தேசிய பல்கலைகழகம்; கமலா விஸ்வேஸ்வரன், ரைஸ் பல்கலைகழகம்; சரோஜ் கிரி, டெல்லி பல்கலைகழகம் என முன்னணி ஆய்வாளர்கள் பங்கேற்று பங்களித்துள்ளனர். இந்த சிறப்புமிக்க கருத்தரங்கின் பகுதியாகத்தான் செப்டம்பர் 4 ஆம் தேதி மாலை முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை ஆற்றியுள்ளார். பகுத்தறிவுப் பகலவன் பெரியார் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்துள்ளார். செப்டம்பர் 5-ஆம் தேதி மாலை இறுதிச் சிறப்புரையை புகழ்பெற்ற மூத்த மானுடவியல் ஆய்வாளர், தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட அர்ஜுன் அப்பாதுரை அவர்கள் நிகழ்த்தியுள்ளார். இந்த நிகழ்வுகளின் பகுதியாக கார்த்திக் ராம் மனோஹரனும், ஆ.இரா.வெங்கடாசலபதியும் தொகுத்துள்ள கேம்பிரிட்ஜ் கம்பேனியன் டு பெரியார் என்ற ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூல் வெளியிடப்பட்டுள்ளது. பெரியார் குறித்த ஆய்வுப்புலத்திற்கு முக்கிய பங்களிப்பாக அமையக்கூடிய நூல் இது எனலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த நிகழ்வில் முதல்வர் பங்கேற்றது, பெரியார் பட த்தை திறந்துவைத்ததும் திராவிட மாடல் அரசின் சித்தாந்த வேர்களை எடுத்துரைக்கும் சிறப்பு வாயந்தது. சுயமரியாதை என்ற சொல்லின் சிறப்பினை முதல்வர் எடுத்துரைத்து உரை நிகழ்த்தியுள்ளதை காணொலிகளில் காண முடிகிறது. திராவிடவிய அரசியலின் வரலாற்றுத் தொடர்ச்சியில் மற்றொமொரு மைல்கல்லாக இந்த நிகழ்வு அமைகிறது என்றால் மிகையாகாது. முதல்வருடன் மனுராஜ் சண்முகசுந்தரம் உள்ளிட்ட திராவிட இயக்க ஆர்வலர்களும் பங்கேற்றுள்ளனர். பாஜக ஏன் பெரியாரை எதிர்க்கிறது? இந்த நிகழ்ச்சி தரும் எழுச்சியை சகிக்க முடியாமல் பாஜக தலைவர் தமிழிசை பேசியுள்ள ஒரு காணொலி ஒன்று இணையத்தில் பரவலாகக் கிடைக்கிறது. அவர் இந்த நிகழ்ச்சியை ஆக்ஸ்போர்டு பல்கலைகழகமே நடத்தவில்லை, அந்த வளாகத்தில் ஒரு அரங்கத்தை வாடகைக்கு எடுத்து தி.மு.க நட த்தியுள்ளது என்றெல்லாம் பேசியுள்ளார். இதே போன்ற தகவலை தினமலர் நாளேடும் காணொலியாக வெளியிடப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. அதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்விற்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று வலியுறுத்திச் சொல்கிறார்கள். கல்யாண மண்டபத்தில் ஒரு அரங்கத்தை வாடகைக்கு எடுப்பதுபோல தி.மு.க-வினர் வாடகைக்கு எடுத்து அதனை ஆக்ஸ்போர்டு பல்கலைகழக நிகழ்ச்சி என்று பொய் பிரசாரம் செய்வதாகக் கூறுகிறார்கள். முதலில் சுயமரியாதை உள்ள தமிழர்களாக நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பெரியாரைக் குறித்து கருத்தரங்கம் நடத்துவதால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்குத்தான் பெருமையே தவிர, அதனால் பெரியாருக்கோ, தி.மு.க-விற்கோ தனியான பெருமை எதுவும் சேரப்போவதில்லை. திராவிட இயக்கத்தின் பெருமையெல்லாம் தமிழ் சமூகத்தை வர்ண தர்மத்தின் பிடியிலிருந்து விடுவித்து மானமுள்ள, சுயமரியாதையுள்ள தன்னுணர்வு பெற்ற சமூகமாக மாற்றி வருவதுதான். உலக வரலாற்றை படிப்பதற்குத்தான் பல்கலைகழகமே தவிர, பல்கலைகழகத்திற்காக வரலாறு நிகழ்வதில்லை. அடுதத்ததாக நாம் மேலே சொன்னபடி கருத்தரங்க நிகழ்வுகளை தெளிவாக நாளேடுகளில் வாசித்து அறியலாம். நாம் சொன்ன பேராசிரியர்கள் மேடையில் முதல்வருடன் அமர்ந்திருக்கும் படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். அரங்கத்தை வாடகைக்கு எடுத்ததுபோல பேராசிரியர்களாக யாரேனும் நடிக்கிறார்கள் என்றும்கூட சொல்வார்கள். அந்த பேராசிரியர்கள் நாம் நன்கு அறிந்தவர்கள்தான். அவர்கள் பெயர்களை கூகுள் செய்து அவர்கள் புகைப்படங்களைப் பார்த்துத் தெளியலாம். இவ்வளவு மலினமான பொய் பிரசாரத்தை ஏன் அவர்கள் வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் கேள்வி. இந்தக் காழ்ப்பிற்கு விடை தேடுவது கடினமல்ல. அதையும் இந்த கட்டுரையின் துவக்கத்தில் பார்த்தோம். வர்ண தர்மத்தை இந்தியக் குடியரசு முற்றாக நிராகரிக்க வேண்டும் என்றவர் பெரியார். அதனையே குடியரசின் அடிப்படையாக க் கொள்ள வேண்டும் என்றவர் ஆர்.எஸ்.எஸ் சிந்தாந்தவாதி கோல்வால்கர். பொதுவாகவே இந்திய தேசியவாதிகள், சிந்தனையாளர்கள் பலரும் உறுதிபட மனு ஸ்மிருதி முன்வைக்கும் வர்ண தர்மத்தை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று கூறியதில்லை. அவ்விதம் கூறுவது அந்த தர்மத்தை சமஸ்கிருதத்தில் எழுதி, இன்று வரை தங்களை அதன்படி உயர் பிறப்பாளர்களாக க் கருதிக்கொள்ளும் பிராமணர்களை வருந்தச் செய்யும் என்பதால் சற்றே நீக்கு போக்காகத்தான் அதைப்பற்றிப் பேசுவார்கள். அதனை முற்று முழுதாக எதிர்த்து பேசியவர்கள் பூலே, பெரியார், அம்பேத்கர் ஆகிய பேராளுமைகள்தான். பெரியார் அதனை பெரியதொரு மக்கள் இயக்கமாக மாற்றி. திராவிடர் கழகம் என்றும், திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக விட்டுச் சென்றுள்ளார்.அது இன்றுவரை வர்ண தர்ம மீட்பு வாத த்துடன் போராடுகிறது. அதுதான் அவர்களுக்கு இந்த காழ்ப்பு. இந்த மையப் பிரச்சினையை மறைத்து கடவுள் நம்பிக்கை, இந்து மதம் என்று ஏதேதோ பேசுவார்கள். ஆனால் திராவிட-தமிழ் மக்கள் ஏமாறுவதில்லை. அவர்கள் விரும்பும் தெய்வங்களை வழிபடுவார்கள்; பெரியாரின் சுயமரியாதை தத்துவத்தையும் புரிந்துகொள்வார்கள். பிரச்சினை மனிதர்களுக்குள் பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வு கூடாது என்பதுதானே தவிர கடவுளை வணங்குவது இல்லை. கடவுள் பெயரால் பார்ப்பனர்கள் ஏற்றத்தாழ்வை உருவாக்குவதால்தான் பெரியார் கடவுளின் இருப்பையும் கேள்விக்கு உள்ளாக்கினார். அவர் அதையே தெளிவாக விளக்கவும் செய்தார். அவர் வாழ்ந்த காலத்தில் அனைத்து சமூகத்தையும் சார்ந்த முற்போக்கு சிந்தனையாளர்கள் அவரைக் கொண்டாடவே செய்தனர். புகழ்பெற்ற எழுத்தாளர் பார்ப்பன வகுப்பைச் சார்ந்த வ.ராமசாமி, 1944-ஆம் ஆண்டு வெளியான தமிழ் பெரியோர்கள் என்ற நூலில் பெரியாரையே முதலில் சிறப்பித்து, கொண்டாடி எழுதியுள்ளார். பாரதீய ஜனதா கட்சியும் வர்ண தர்ம பித்தை அகற்றிவிட்டு, திராவிட நெறியான பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை மனப்பூர்வமாக ஏற்க வேண்டும். அதுவே உண்மையான தேச நலனாக இருக்கும். அப்போது பெரியாரும் தேசியத் தலைவராகத் தெரிவார். கட்டுரையாளர் குறிப்பு: ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி https://minnambalam.com/periyar-portrait-at-oxford-university/
3 weeks 1 day ago
மட்டுநகரில் வெள்ளைக்கொடிகள்..!சத்துருக்கொண்டான் இனப்படுகொலை 35ஆவது ஆண்டு நினைவு! Vhg செப்டம்பர் 09, 2025 மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலை 35, ம் ஆண்டு நினைவு இன்று(09/09/2025)ஆம் திகதி இந்த தமிழினப்படுகொலையை நினைவு கூர்ந்து மட்டக்களப்பு மாநகரபகுதி எங்கும் வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டு உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட சத்துருக்கொண்டான் படுகொலை 09(/09/1990)ல் இடம்பெற்றது. Y இலங்கை இராணுவமும், முஷ்லிம் ஊர்காவல் படையினரும் இணைந்து மேற்கொண்ட கூட்டுப்படுகொலைகளில் இதுவும் ஒன்றாகும். https://www.battinatham.com/2025/09/35.html
3 weeks 1 day ago
காசாவுக்கு கிரேட்டா துன்பெர்க் சென்ற கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் 09 Sep, 2025 | 09:57 AM காசாவிற்கு உதவிப் பொருட்களை அனுப்பும் குளோபல் சுமுத் புளோட்டிலா என்ற கப்பல், துனிசியா கடற்கரையில் செவ்வாய்க்கிழமை (09) ட்ரோன் மூலம் தாக்கப்பட்டுள்ளது. காசா பகுதியில் இஸ்ரேலிய முற்றுகையை முறியடிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, காலநிலை தொடர்பான சமூக செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் உட்பட 44 நாடுகளைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களை இந்த கப்பல் ஏற்றிச் சென்றுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசங்களுக்கான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் அவர்களும் இந்த கப்பலில் சென்றுள்ளார். “குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களை ஏற்றிச் சென்ற “குடும்ப கப்பல்” என அழைக்கப்படும் முக்கிய கப்பல்களில் ஒன்று ட்ரோன் மூலம் தாக்கப்பட்டதை குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா (GSF) உறுதிப்படுத்துகிறது. போர்த்துகீசியக் கொடி ஏந்திய கப்பலில் அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர். தற்போது விசாரணை நடந்து வருகிறது. மேலும் தகவல்கள் கிடைத்தவுடன் அது உடனடியாக வெளியிடப்படும்” என அந்த அமைப்பு வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/224597
3 weeks 1 day ago
பிரான்ஸ் பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி பிரான்ஸ் பிரதமர் பிரான்சுவா பெய்ரூ தமது அரசாங்கத்தின் மீது கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளார். பிரான்சின் தேசிய சட்டமன்றம் 364 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை பதவியில் இருந்து நீக்கி அவரது சிறுபான்மை அரசாங்கத்தை வீழ்த்த வாக்களித்தது. மேலும் 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை. இதேவேளை எதிர்வரும் நாட்களில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் ஒரு புதிய பிரதமரை நியமிப்பார் என்று எலிசே அரண்மனை தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ள நாளைய தினம் பிரதமர் பிரான்சுவா பேய்ரூவை அந்த நாட்டு ஜனாதிபதி மெக்ரோன் சந்திப்பார் என்பதை அந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது. எவ்வாறாயினும் பிரான்ஸ் ஜனாதிபதியும் உண்மையை புரிந்து கொண்டு பதவி விலக வேண்டும் என நம்பிக்கை வாக்கெடுப்பை தோல்வியடைய செய்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. https://adaderanatamil.lk/news/cmfbfuptp00b7o29nlq605s94
3 weeks 1 day ago
கைது செய்யப்பட்ட கே.பி.யுடன் தனித்து உரையாடிய கோத்தா! பொன்சேகா வெளியிடும் தகவல்கள் மலேசியாப் பொலிஸாரே கே.பி.யைக் கைது செய்தனர். இலங்கைக்கு கொண்டுவரப்படும் வரை அவர் கே.பி என்பது எமக்குத் தெரியாது என்று முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். கோத்தாபய ராஜபக்ச கே.பி.யை வீட்டுக்கு வரவழைத்தே உரையாடினார். அவர் வசம் இருந்த புலிகளின் பணம், கப்பல்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு ராஜபக்சக்களும் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் பொன்சேகா தெரிவித்துள்ளார். அவர்மேலும் தெரிவிக்கையில், கே.பி.யை மலேசியப் பொலிஸாரே கைது செய்தனர். அது பற்றி நாம் அறிந்திருக்கவில்லை. இலங்கையால் தேடப்படும் நபரொருவர் எம்மிடம் உள்ளார். குழுவொன்றை அனுப்பினால் ஒப்படைக்கலாம் என மலேசியாவில் இருந்து எமக்குத் தெரியப்படுத்தப்பட்டது. இதற்கமைய நால்வரடங்கிய சி.ஐ.டி குழு அங்கு சென்றது. அந்தக் குழுவுடன் மலேசியா வில்இருந்தும் குழுவொன்றும் வந்தது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னரே, கைதுசெய்யப்பட்ட வர் கே.பி என்ற தகவலை அவர்கள் வெளியிட்டனர். கோத்தாபய ராஜபக்ச என்ன செய்தார்? 24 மணி நேரத்துக்குள் கே.பி.யை வீட்டுக்கு அழைத்தார். தனியாகப் பேச்சு நடத்தினார். அப்போது கே.பி. வசம்தான் புலிகளின் நிதி, கப்பல்கள் இருந்தன. ஒரு மாதத்துக்குப் பின்னர் கேபி விடுவிக்கப்பட் டார். அப்போது நான் இராணு வத்தில் இருக்கவில்லை. கே.பி வசம் இருந்த பணத்துக்கு என்ன நடந்தது? அவை அரசுடமையாக்கப்படவில்லை. கேபியுடன் இவர்கள் தான் (ராஜபக்சக்கள்) கலந்துரையாடினார்கள். என்ன நடந்தது என்பது அவர்களுக்குதான் தெரியும். எனவே, இதற்கு பொறுப்புக்கூறவேண்டும் என்றார். https://newuthayan.com/article/கைது_செய்யப்பட்ட_கே.பி.யுடன்_தனித்து_உரையாடிய_கோத்தா!
3 weeks 1 day ago
இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து பிரித்தானியா அறிக்கை வெளியிட்டது! adminSeptember 9, 2025 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து ஐக்கிய இராச்சியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை மனித உரிமைகளுக்கான பிரித்தானிய உயர் ஆணையர் எலினோர் சாண்டர்ஸ் முன்வைத்துள்ளார். இலங்கைக்கு ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் பயணம் செய்தமைக்கும், ஆணையர் வெளியிட்ட அறிக்கைக்கும் எலினோர் சாண்டர்ஸ் தனது அறிக்கையின் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகள் குறித்த விசாரணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், சர்வதேச தரத்தின்படி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பிரித்தானியா வலியுறுத்துகிறது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யத் தவறுவதன் மூலம் அடிப்படை சுதந்திரங்களை கட்டுப்படுத்த சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது குறித்தும் இந்த அறிக்கையில் கவலை வெளியிடப்பட்டுள்ளது. மோதல் தொடர்பான பாலியல் வன்முறையில் இனப் பாகுபாடு ஒழிப்புக்கான ஐ.நா அலுவலகத்தின் (ORAC) பணியை பிரித்தானியா ஊக்குவிப்பதுடன், இந்தப் பிரச்சினையை முன்னுரிமையாகக் கையாள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. இந்தப் பிரச்சினைகளில் இலங்கை அரசாங்கத்துடன் திறம்பட ஈடுபடுவதற்கான தனது விருப்பத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாக பிரித்தானியா தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில், கனடா, மலாவி, மொண்டெனேகுரோ, வடக்கு மாசிடோனியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் முக்கிய குழுவும் நேற்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. ஐ.நா.வுக்கான பிரித்தானியாவின் நிரந்தர பிரதிநிதி குமார் அய்யர் தொடர்புடைய அறிக்கையை வெளியிட்டார், மேலும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹெரத்தின் வருகைக்கும் நன்றி தெரிவித்தார். மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், நல்லாட்சி மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம் ஆகியவற்றிற்கான அதன் உறுதிப்பாட்டை அர்த்தமுள்ள நடவடிக்கையாக மாற்ற இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க விரும்புவதாகவும் அவர் கூறினார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வு நேற்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் தொடங்கியது. அமர்வில் பேசிய வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், நாட்டில் மனித உரிமை மீறல்களை விசாரிக்க முன்மொழியப்பட்ட எந்தவொரு வெளிப்புற தலையீடு அல்லது பொறிமுறையையும் இலங்கை நிராகரிப்பதாகக் கூறினார்.https://globaltamilnews.net/2025/220202/
3 weeks 1 day ago
அப்படி எல்லாம் இல்லை, நான் வேலை செய்யும் நிறுவனம் இதே தொழில்நுட்பத்தில் ( செயற்கை நுண்ணறிவு) புற்றுநோயிற்கான மருந்து தயாரிப்பில் உள்ள ஒரு முண்ணனி நிறுவனம் என கூறினால் அதனை பார்ப்பவர்கள் ஏதோ எனக்கு அந்த நிறுவனத்தில் வேலை செய்வதால் அது பற்றிய துறைசார் அறிவு இருக்கும் என சிந்திக்க்க தலைப்படுவர், ஆனால் உண்மையில் எனக்கு எதுவுமே தெரியாது, அப்படி சிந்திக்க்க கூடாது என்பதற்காகவே அந்த விடயத்தினை இந்த சம்பாசணையில் கொண்டுவரவில்லை. யார் கூறும் கூற்றையும் ஆராய்ந்து அறிவதுதான் சிறப்பு, கற்கால மனிதன் இயற்கை பாதுகாப்பு பொறிமுறைக்காக வேகமாக சிந்திக்கும் முறைமையுடன் கூட்ட மனப்பான்மையினையும் கொண்டிருந்தான் அது இப்போதும் தொடர்கிறது. இது ஒரு நல்ல விவாத திரியாக போகும் என எதிர்பார்த்தேன், ஆனால் ஒரு விதண்டாவாத திரியாக போவதால் இத்துடன் எனது சம்பாசணையினை நிறுத்துகிறேன்.
Checked
Wed, 10/01/2025 - 06:59
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed