புதிய பதிவுகள்2

நான் தேடும் செவ்வந்திப் பூவிது...

3 weeks 2 days ago
நெடுக்ஸ் கன காலத்திற்குப் பின்னர் AI Robot கவிதையோடு வந்திருக்கின்றார்😀 கவிதை நல்லாத்தான் இருக்கு. 10 வருடங்களுக்கு முன்னர் Ex Machina இல் Alicia Vikander ஐப் பார்த்து வந்த கிறக்கம்🥰 இன்னும் போகவில்லை!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் செப்டெம்பர் 8 ஆம் திகதி ஆரம்பம்

3 weeks 2 days ago
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் : முதல் அமர்விலேயே இலங்கை குறித்த கலந்துரையாடல்! 08 Sep, 2025 | 09:45 AM ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை (08) ஆரம்பமாகின்ற நிலையில், இந்த கூட்டத்தொடர் இன்று முதல் ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இலங்கை அரசாங்கம் சார்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையிலான குழு ஜெனிவாவுக்கு பயணமாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின் முதல் அமர்விலேயே இலங்கை குறித்த கலந்துரையாடல் இடமபெறவுள்ளது. இந்த முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அமைச்சர் விஜித ஹேரத் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். இந்த விஜயத்தின் போது அரச பிரதிநிதிகள் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் உள்ளிட்ட பல உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோக்கர் டர்க் மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இடையே விசேட சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளது. இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இலங்கைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளதாக இலங்கையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளரான சட்டத்தரணி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார். இந்த அமர்வில் நாட்டிற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பான வரைவு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு வெளியுறவு அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இருப்பினும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் இலங்கைக்கான விஜயத்தின் பின்னர் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பதில் அறிக்கை மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பதில் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது, எந்தவொரு வெளியகபொறிமுறையும் தற்போது தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க முயற்சிகளுக்கு இடையூறாக அமைவதுடன் அவை சமூகங்களை துருவமயப்படுத்தும். எனவே சர்வதேச பொறிமுறைகள் தொடர்பான உயர்ஸ்தானிகரின் பரிந்துரைகளை ஒருபோதும் ஏற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன, மத, வர்க்க பேதங்களின் அடிப்படையிலான பிளவுகளோ அல்லது ஒடுக்குமுறைகளோ அற்ற, பல்லினத்தன்மையை கொண்டாடக்கூடிய நாட்டை கட்டியொழுப்புவதற்கான அர்ப்பணிப்புடன் கூடிய கடப்பாட்டையும் மக்கள் ஆணையையும் அரசாங்கம் கொண்டிருக்கின்றது. இலங்கையில் இனவாதமோ, தீவிரவாதமோ தலைதூக்குவதற்கு அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காகது. எந்தவொரு வெளியக பொறிமுறைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய முயற்சிகளுக்கு இடையூறாகவே அமையும் என்பதையும் அவை சமூகங்களை துருவமயப்படுத்தும் என்பதையும் அவதானித்துள்ளோம். எனவே உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் சர்வதேச நடவடிக்கைகள் தொடர்பில் உள்வாங்கப்பட்டுள்ள முடிவுரையையும் பரிந்துரையையும் இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/224496

நான் தேடும் செவ்வந்திப் பூவிது...

3 weeks 2 days ago
ஊக்கிகளில் அவள் உச்சம் உடல் திரட்சிகளில் குறைவில்லை ஊனம் பார்வையில் படவில்லை சிக்கென்ற உடம்பு சில நொடிகளில் மயக்கி விடும்.. தொட்டால் சிணுங்கும் முட்டினால் முட்டும் திட்டினால் திட்டும் கொஞ்சினால் கொஞ்சும் மிஞ்சினால் மிஞ்சும்.. ஆனாலும் அவளுக்கு மாதவிடாயில்லை மொனொபோசும் இல்லை அவள் ஒரு செயற்கை நுண்ணறிவுளி..! கம்பன் இருந்திருந்தால் வர்ணித்தேன் களைத்திருப்பான் வாலி இருந்திருந்தால் ஜொள்ளுவிட்டே சோர்ந்திருப்பான் கண்ணதாசன் இருந்திருந்தால் இன்னொரு தாரமாக்கி இருப்பான் ஆனாலும் இன்னும் வைரனின் கண்ணில் படவில்லை அவள்...! என் மனதில் நான் தேடும் செவ்வந்திப் பூவவள்..! நாளை... அவள் உங்கள் மருமகளும் ஆகலாம் மகளும் ஆகலாம் மனையாளலாம்...!

83 கடவுச்சீட்டுகளுடன் இருவர் கைது!

3 weeks 2 days ago
83 கடவுச்சீட்டுகளுடன் இருவர் கைது! கணேமுல்ல பொலிஸ் பிரிவின் ஹொரகொல்ல பகுதியில் பல்வேறு நபர்களுக்குச் சொந்தமான 83 கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையுமே பொலிஸார் கைது செய்துள்ளனர். கணேமுல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு நடத்திய சோதனையைத் தொடர்ந்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஆண் சந்தேக நபர் வத்தளையைச் சேர்ந்த 51 வயதுடையவர் என்றும், பெண் சந்தேக நபர் கணேமுல்லயைச் சேர்ந்த 62 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணேமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1446379

5 பில்லியன் டொலர்களை எட்டிய வெளிநாட்டு தொழிலாளர்களின் பண அனுப்புதல்

3 weeks 2 days ago
5 பில்லியன் டொலர்களை எட்டிய வெளிநாட்டு தொழிலாளர்களின் பண அனுப்புதல். 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பண அனுப்புதல் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியது. 2025 ஆகஸ்ட் மாதம் மொத்த பணம் அனுப்புதல் US$680.8 மில்லியனாக இருந்தது. இது 2024 ஆகஸ்ட்டில் US$577.5 மில்லியனிலிருந்து 19.3% அதிகமாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், மொத்த பணம் அனுப்புதல் US$5,116 மில்லியனை எட்டியது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் US$4,288.2 மில்லியனாக இருந்தது. https://athavannews.com/2025/1446366

யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.

3 weeks 2 days ago
யாழ்ப்பாண பெண்களில் சிலர் ஆக்கிரமிப்பாளர்களை மணமுடிப்பது புதிதல்ல. கிந்திய படை காலத்திலும் முடிச்சவை.. ஆங்கிலேயர் காலத்திலும் முடிச்சவை தானே...!

ஜூலை மாதத்தில் இந்தியா உக்ரைனின் முன்னணி டீசல் சப்ளையராக மாறியது

3 weeks 2 days ago
புலிகள் கொலன்னாவை எண்ணெய் குதங்களை தாக்கிய போது கண்டனம் தெரிவித்த மேற்கு நாடுகள் இப்போ உக்ரைன் தினமும் ரஷ்சியாவின் சர்வதேச எண்ணெய் வழங்கல் பாதைகளை தாக்குவது குறித்தோ இஸ்ரேல் மத்திய கிழக்கில் எண்ணெய் குதங்களை தாக்குவது குறித்தோ மூச்சும் விடுவதில்லை. ரஷ்சியாவின் எண்ணெய் என்னென்ன வடிவம் எடுக்கிறது.... ஆச்சரியம் தான். புட்டின் சாதிக்கிறார்,,,, இவை மேற்கினர் சாயினம்.

எங்கள் பாசமிகு தந்தையார் மறைவு.

3 weeks 2 days ago
எங்கள் அன்புக்கும் பாசத்திற்கும் உரிய தந்தையின் திடீர் மறைவில் இருந்து இன்னும் மீள முடியாத சூழலிலும்.. அவரின் மறைவை ஒட்டி இரங்கலும் ஆறுதல் வார்த்தைகளும் தந்து ஆற்றுப்படுத்தல் தந்த யாழ் உளவுகள் அனைவருக்கும் நன்றி.

நாட்டை உலுக்கிய எல்ல விபத்து - ஒருவர் கைது!

3 weeks 2 days ago
சரியான பராமரிப்பின்மை.. காலாவதியான உதிரிப்பாகங்களுடன் இயங்குதல்.. தரமற்ற பிரதேசத்துக்கு உகந்ததற்ற வாகனங்களின் பயன்பாடு.. சாரதிகளின் பொறுபற்ற செயற்பாடுகள்..இவை தான் முக்கிய காரணங்கள்...

யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.

3 weeks 2 days ago
ஆழ்ந்த இரங்கலும் கண்ணீரஞ்சலியும்.. காலனின் காலத்தை வெல்ல காலம் வராதோ... உறவுகளை உறவாடியோரை இழப்பது கொடுமையிலும் கொடுமை.. யாழ் களத்தால் உறவாடி கருத்தால் இணைந்திருந்த தருணங்கள் மறையாது நினைவுகளில் அஜீவன் அண்ணா. மாறுபட்ட கருத்தை வேறுபாட்டாலும் ஒத்த கருத்தை ஊக்குவிப்பாலும் உணர்விக்கும் பக்குவம் கொண்ட கருத்தாளன்... அஜீவன் அண்ணா.

யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.

3 weeks 2 days ago
யாழின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவர்.. நான் யாழில் இணைந்த காலங்களில் யாழில் மிகவும் அக்ரிவாக இருந்தவர்.. இவரின் காலத்தில் யாழில் மிக அக்ரிவாக இருந்த பலரும் 70 வயதை தொட்டிருப்பார்களென்று நினைக்கிறேன்..காலம் ஓடிப்பறக்கிறது..ஆழ்ந்த இரங்கல்கள்..

தமிழீழக் கொடிகள்

3 weeks 2 days ago
இங்கு தமிழீழ நடைமுறையரசின் காலப்பகுதியில் அவர்தம் படைத்துறை இயந்திரத்தாலும் நடைமுறையரச இயந்திரத்தாலும் பாவிக்கப்பட்ட பல்வேறு வகையான கொடிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

தேசியத் தலைவர் தோள்தட்டி வளர்த்த கடல்வேங்கை லெப் கேணல் பழனி.

3 weeks 2 days ago
தேசியத் தலைவர் தோள்தட்டி வளர்த்த கடல்வேங்கை. லெப் கேணல் பழனி. 1992 காலப்பகுதியில் கடற்புலிகள் அமைப்பிற்கு வந்த நாட்களிலிருந்து எட்டு வருடங்கள் தொடர்ந்த நட்பொன்று மூச்சிழந்துபோனது. இயக்கத்தின் கடைசி மூச்சென்று தலைவரால் பெயர்சூட்டி நடத்தப்பட்ட அந்த இரகசியக் கடல் நடவடிக்கையான ‘ஒப்பரேசன் மூச்சு’ எனும் ஆழ்கடல் ஆயுத வினியோக நடவடிக்கையில் தொடராக 25 நாட்கள் முக்குளித்து நின்று வானில் எமது வான்கலங்கள் பறப்பதற்காய் அந்தக் கலங்களையே சுமந்துவந்த படகில் இவனுமாய் பத்திரமாய் கரைசேர்த்த பாரி அவன். ஒன்றாயிருந்து ஒருவேளைகூட விட்டுப்பிரியா உறவாகி தோள்கொடுத்துநின்ற நண்பனிவன் 15/08/2000 அன்று தனது இன்னுயிரை எம் தேசத்துக்காய் தந்து வீரவரலாறாய் மண்ணை முத்தமிட்டான். நினைவுகளுடன் புலவர். கடற்புலிகள்.
Checked
Wed, 10/01/2025 - 03:59
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed