புதிய பதிவுகள்2

குட்டிக் கதைகள்.

1 hour 6 minutes ago
Paranji Sankar · ஒரு குட்டிப் பையன் ஒரு நாள் அப்பாவோடு தோட்டத்தை சுற்றிப் பார்க்கக் கிளம்பினான். சிறிது நேர விளையாட்டுக்குப் பின்தான் அவன் ஒரு விஷயத்தை கவனித்தான். அங்கிருந்த மாடுகள் கவணையில் , ஒரு நீளமில்லாத கயிற்றைக் கொண்டு கட்டப் பட்டிருந்தன . அவை உள்ளே கொட்டப்பட்டிருந்த புற்களை சிரமப்பட்டு உண்ணுவதாய் அவனுக்குத் தோன்றியது . ” ஏன் , இந்த மாதிரி நெருக்கமா மாட்டைக் கட்டி வச்சிருக்கீங்களே , அதுங்க பாவம் இல்லையா ? உங்க தோட்டத்துலதான் இவ்வளோ புல் இருக்குதே . இங்கேயே ஒரு பெரிய கயிறா எடுத்து ஒரு மரத்துல கட்டி வைக்கக் கூடாதா ? அதுங்க கொஞ்சம் Freeயா சாப்பிடுமே ” என்றான். அவர் சிரித்தபடி ,” தம்பிக்காக ஒரு மாட்டை அப்படியே கட்டி வைக்கிறேன் . கொஞ்ச நேரம் என்னாகுதுன்னு தான் பாப்பமே ” என்று சொல்லியபடி ஒரு மாட்டை மட்டும் அவிழ்த்துக் கொல்லையில் இருந்த மரத்தில் , ஒரு நீளமான கயிற்றில் கட்டி வைத்தார் . வந்தவுடனேயே சிறுவன் கொல்லைக்குத்தான் ஓடினான். அங்கே மாடு இருந்த கோலம் அவனை அதிர வைத்து விட்டது. மாடு புல்மேயும் சுவாரஸ்யத்தில் கயிற்றுடன் மரத்தையே சுற்றிச்சுற்றி வந்து கயிறு முழுவதும் மரத்தில் சுற்றிக் கொண்டுவிட்டது . இப்போது அடுத்த அடி கூட எடுத்து வைக்க முடியாமல் , மூச்சுத்திணறியபடி தவித்துக் கொண்டிருந்தது. தோட்டக்காரர் சொன்னார் , ” கயிறு ரொம்ப நீளமா இருந்தா இதுங்க இப்படித்தான் கண்ணு பண்ணும் . சில நேரத்துல உயிருக்கே கூட ஆபத்தாயிடும் ” சொல்லிக் கொண்டே மாட்டை அவிழ்த்துக் கொட்டிலில் கட்டினார். சின்னக் கயிற்றில் கட்டப்பட்டு இருப்பது சிறையல்ல , பாதுகாப்பு என்பது தாம்ஸனுக்குப் புரிந்தது . சில நேரங்களில் அதிகபட்சமான சுதந்திரம் ஆபத்தில் முடிவதுண்டு. சில நியதிகளும் , கட்டுப்பாடுகளும் நம்மைக் காத்துக் கொள்ளவே ஏற்படுத்தப் பட்டவை . Voir la traduction

அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்

1 hour 6 minutes ago
😂 வாலி சார் நீங்க அடிவாங்கணுண்னு முடிவெடுப்பது உங்கள் சுதந்திரம் வாலி சார் 😂 சரியான முன்னோக்கிய பார்வை.

யாழ்.பல்கலை நூலகத்தில் இருந்து மகசீன்கள் மீட்பு ; சோதனை நடவடிக்கைக்கு பொலிஸ் முஸ்தீபு

1 hour 12 minutes ago
2005 பேப்பரில் சுற்றி உள்ளது எண்டால் - இது அந்தகாலத்தில் பதுக்கி வைத்ததாய் இருக்கும்.

நமீபியாவில், பாலைவனச் சிங்கங்கள் கடற்கரையில் காத்திருப்பது ஏன்?

2 hours 2 minutes ago
இந்தச் சிங்கங்கள் கடற்கரையில் காத்திருப்பது ஏன்? பட மூலாதாரம், Griet Van Malderen கட்டுரை தகவல் இசபெல் கெர்ரெட்சன் 5 மணி நேரங்களுக்கு முன்னர் நமீபியாவில், ஒரு பாலைவனச் சிங்கக் குழு தங்கள் பாரம்பரிய வேட்டையாடும் இடங்களை விட்டு வெளியேறி, அட்லாண்டிக் கடற்கரைக்குச் சென்று, உலகின் ஒரே 'கடல்சார் சிங்கங்களாக' மாறியுள்ளன. இந்த வியத்தகு நடத்தையை ஒரு புகைப்படக் கலைஞர் படம் பிடித்துள்ளார். அது உண்மையிலேயே பிரமிக்க வைக்கும் புகைப்படம்: நமீபியாவின் கூழாங்கற்கள் நிறைந்த கடற்கரையில் ஒரு பெண் சிங்கம் தூரத்தில் பார்வை பதிந்திருக்க, பின்னணியில் சீற்றமான அலைகள் கரையில் வந்து மோதிச் சிதறுகின்றன. நமீபியாவின் ஸ்கெலிட்டன் கடற்கரையின் கடினமான சூழலில் உயிர்வாழ கடல்நாய்களை வேட்டையாடக் கற்றுக் கொண்ட பாலைவனச் சிங்கங்களில் காமாவும் ஒன்று. அந்த சிங்கத்தைப் பெல்ஜிய புகைப்படக் கலைஞர் கிரீட் வான் மால்டரென் வியத்தகு முறையில் படம் பிடித்துள்ளார். லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தால் நடத்தப்படும் மதிப்புமிக்க 'ஆண்டின் சிறந்த வன உயிர் புகைப்படக் கலைஞர்' போட்டியில் அவரது புகைப்படம் மிகவும் பாராட்டப்பட்டது. "அது நாள் முழுவதும் அந்த கடல்நாயைக் கவனித்துக் கொண்டிருந்தது," என்று வான் மால்டரென் கூறுகிறார். அவர் காரில் இருந்தபடியே காமாவைப் பார்த்துக் கொண்டே, அந்தப் படத்தைப் பிடிக்க பல நாட்கள் காத்திருந்தார். மொத்தம் 80 சிங்கங்களைக் கொண்ட நமீபியாவில், ஸ்கெலிட்டன் கடற்கரையில் 12 பாலைவனச் சிங்கங்கள் மட்டுமே வாழ்கின்றன. அவை வறண்ட நமீபிய பாலைவனத்திலிருந்து அட்லாண்டிக் பெருங்கடலுக்கு உணவைத் தேடி இடம்பெயர்ந்து, இந்த புதிய வாழ்விடத்திற்கு ஏற்ப 2017-ஆம் ஆண்டில் தங்கள் உணவு மற்றும் நடத்தையை கடுமையாக மாற்றிக் கொண்டன. மேலும், இந்த மாற்றத்தால் அவை செழித்து வளர்வதாகவும் தெரிகிறது. 'எல்லாமே ஒரு போராட்டம்தான்' "இந்த விலங்குகள் எவ்வளவு மீள்தன்மை கொண்டவை என்பதைப் புகைப்படம் காட்டுகிறது... அவை உயிர்வாழத் தங்கள் வாழ்விடத்தை மாற்றிக் கொள்கின்றன," என்கிறார் வான் மால்டரென். "இந்தச் சிங்கங்கள் கடினமானவை. வாழ்க்கை என்பது உயிர்வாழ்வதைப் பற்றியது, இங்கு எல்லாமே ஒரு போராட்டம்தான்." காமாவுக்கு மூன்று மாத வயதானதிலிருந்தே அதை வான் மால்டரென் கவனித்து வருகிறார். அதற்கு இப்போது மூன்றரை வயது. "கிட்டத்தட்ட அது வயது வந்த சிங்கமாகிவிட்டது," என்று அவர் கூறுகிறார். மேலும், அந்தப் பெண் சிங்கம் ஒரே இரவில் 40 கடல்நாய்களைக் கொல்லக்கூடிய அச்சமூட்டும் வேட்டைக்காரியாக மாறிவிட்டதாகவும் அவர் கூறினார். நமீபியாவின் பாலைவனச் சிங்கங்களை 1980 முதல் கண்காணித்து வரும் வனவிலங்கு பாதுகாப்பு நிபுணர் பிலிப் ஸ்டாண்டர், ''காமா, ஸ்கெலிட்டன் கடற்கரையில் வளர்ந்த முதல் தலைமுறை சிங்கங்களில் ஒன்று. வான் மால்டரெனின் புகைப்படம் உண்மையிலேயே முக்கியமானது. ஏனெனில் அது காமா, கடற்கரையில் தனியாக இருந்த முதல் நாளைக் காட்டுகிறது" என்று கூறுகிறார். நமீபியாவின் பாலைவனச் சிங்கங்கள் 1980களில் ஸ்கெலிட்டன் கடற்கரையில் வாழ்ந்தன, ஆனால் ஒரு வறட்சி மற்றும் விவசாயிகளுடனான மோதல் காரணமாகப் பெரும்பாலான சிங்கங்கள் அழிந்த பிறகு அவை பாலைவனத்திற்குத் திரும்பின என்று ஸ்டாண்டர் கூறுகிறார். 30 ஆண்டுகளுக்கு பிறகு, அந்த விலங்குகள் "மீண்டும் கடற்கரைக்குத் திரும்பும் வழியைக் கண்டுபிடித்துள்ளன," என்று அவர் கூறுகிறார். 'நம்பமுடியாத அளவிற்குத் தனித்துவமானவை' இந்த விலங்குகள் "மிகவும் வாழத் தகுதியற்ற நிலப்பரப்பில், தாவரங்கள் இல்லாத பெரிய மணல் குன்றுகளின் பரப்பில்" வாழப் பழகியுள்ளன என்று 1997 இல் 'பாலைவனச் சிங்கப் பாதுகாப்பு அறக்கட்டளையை' (Desert Lion Conservation Trust) நிறுவிய ஸ்டாண்டர் கூறுகிறார். "பாலைவனச் சிங்கங்கள் நம்பமுடியாத அளவிற்குத் தனித்துவமானவை," என்கிறார் ஸ்டாண்டர். அவை எந்தச் சிங்கத்தை விடவும் மிகப்பெரிய வாழ்விடத்தைக் கொண்டுள்ளன என்று அவர் கூறுகிறார். மேலும் "அவை மிகவும் ஆரோக்கியமான, சிறந்த விளையாட்டு வீரர்கள். ஒரு பாலைவனச் சிங்கத்தின் சராசரி வாழ்விட எல்லை சுமார் 12,000 சதுர கிமீ (4,600 சதுர மைல்கள்)'' என்று அவர் கூறுகிறார். அதேசமயம் செரெங்கேட்டியில் உள்ள ஒரு சிங்கத்தின் வாழ்விட எல்லை பொதுவாக சுமார் 100 சதுர கிமீ (39 சதுர மைல்கள்) இருக்கும் என்று அவர் மேலும் கூறினார். அவை தண்ணீர் இல்லாமலும் உயிர்வாழப் பழகிவிட்டன. "அவை உண்ணும் இறைச்சியிலிருந்து நீர் தேவையின் பெரும்பகுதியை பூர்த்தி செய்கின்றன," என்று ஸ்டாண்டர் கூறுகிறார். லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் உயிர் அறிவியல் துறையில் ஒரு மூத்த ஆராய்ச்சியாளரான நடாஷா கூப்பர் கூறுகையில், "சவன்னா வனப்பகுதியில் அல்லது 'லயன் கிங்' படத்தில் வருவது போல ஒரு பெரிய பாறையின் மீது சிங்கங்களைப் பார்த்து நாம் பழகிவிட்டோம், எனவே கடற்கரையில் ஒன்றைப் பார்ப்பது உண்மையிலேயே வித்தியாசமாக இருக்கிறது. இது மிகவும் விந்தையாகவும் அசாதாரணமானதாகவும் உணர்கிறோம்." பாலைவனச் சிங்கங்கள் சவன்னா சிங்கங்களை விடச் சிறிய குழுக்களாகப் பயணிக்கின்றன என்று கூப்பர் கூறுகிறார். "பொதுவாக, அதிக இரைகள் இருக்கும் பகுதிகளில், குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் சிங்கங்கள் வசிக்கின்றன," என்று அவர் கூறுகிறார். "இந்த பகுதியில், போதுமான உணவைப் பெறுவதற்காகச் சிறிய குழுக்களாக அதிக தொலைவுக்குச் சுற்றித் திரிகின்றன." இது சிங்கங்களைப் படம் பிடிக்கும் பணியை இன்னும் சவாலானதாக ஆக்குகிறது. "ஒரு புகைப்படக் கலைஞராக இது அருமையாக உள்ளது, ஏனெனில் இந்தச் சிங்கங்கள் எப்போதும் நகர்ந்து கொண்டே இருக்கின்றன," என்று வான் மால்டரென் கூறுகிறார். "அவை சும்மா படுத்துத் தூங்காமல், உயிர்வாழ எப்போதும் வேட்டையாடுகின்றன." பட மூலாதாரம், Griet Van Malderen படக்குறிப்பு, நமீபியாவின் பாலைவனச் சிங்கங்கள் மட்டுமே கடல்வாழ் இரைகளை வேட்டையாடத் தெரிந்த சிங்கங்களாக உள்ளன மீண்டும் கடற்கரைக்கு பயணம் 2015 இல், வறட்சி காரணமாகச் சாதாரணமாக அவை வேட்டையாடும் தீக்கோழிகள், ஓரிக்ஸ் மற்றும் ஸ்ப்ரிங்பாக் போன்ற உள்நாட்டு இரைகள் குறைந்த பிறகு, சிங்கங்கள் மீண்டும் கடலைக் கண்டறிந்து கடற்கரையில் கடலோர இரைகளை வேட்டையாடத் தொடங்கின. "கடல்நாய்கள் ஒரு வரப்பிரசாதமாக இருந்தன," என்று வான் மால்டரென் கூறுகிறார். "காலநிலை மாற்றம் இந்த பாலைவனச் சிங்கங்களை விளிம்பிற்குத் தள்ளியுள்ளது. இது, அட்லாண்டிக் கடற்கரையில் உயிர்வாழ அசாதாரண வழிகளில் அவற்றைப் பழக்கப்படுத்தியுள்ளது." பல தலைமுறைகளாகச் சிங்கங்களின் நடத்தை மாறுவதைப் பார்ப்பது "ஆச்சரியமாக இருக்கிறது," என்று அவர் கூறுகிறார். 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வு செய்யப்பட்ட முதல் பாலைவன பெண் சிங்கம் "ஒட்டகச் சிவிங்கிகளை வேட்டையாடுவதில் சிறப்புப் பெற்றிருந்தது," என்று அவர் கூறுகிறார். "இப்போது இந்த கடல்நாய் சிங்கங்களுக்கு ஒரு சிறிய ஓய்வு இடைவெளியைக் கொடுக்கிறது." 2025 மார்ச்சில் கடற்கரையில் இரண்டு குட்டிகள் பிறந்தன என்று வான் மால்டரென் மேலும் கூறுகிறார். "இந்த பரிணாம வளர்ச்சியைக் கண்காணிப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்." நமீபியாவின் பாலைவனச் சிங்கங்கள் மட்டுமே கடல்வாழ் இரைகளை வேட்டையாடத் தெரிந்த சிங்கங்களாக இருக்கின்றன. "நாங்கள் அவற்றை கடல்சார் சிங்கங்கள் என்று குறிப்பிடுகிறோம், ஏனெனில் அவை கடல் சுற்றுச்சூழலைப் புரிந்துகொள்ளவும் கடலில் இருந்து உணவை உட்கொள்ளவும் கற்றுக் கொண்டுள்ளன," என்று ஸ்டாண்டர் கூறுகிறார். ஸ்டாண்டர் நடத்திய ஒரு ஆய்வில், மூன்று இளம் பெண் சிங்கங்கள் 18 மாத காலப்பகுதியில் உட்கொண்ட உயிரிப்பொருட்களில் (biomass) 86% நீர்க்காகங்கள் (cormorants), ஃபிளமிங்கோக்கள் மற்றும் கடல்நாய்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது என்று கண்டறியப்பட்டது. "இது ஒரு சிறிய சிங்கங்களின் எண்ணிக்கையாக இருந்தாலும், கடலைப் பற்றிய அறிவை பயன்படுத்தி அவை இப்போது மீண்டு வரும் என்று நம்புகிறோம். ஆனால் நாம் அவற்றைப் பாதுகாக்க வேண்டும்," என்கிறார் ஸ்டாண்டர். இதற்கு ஸ்கெலிட்டன் கடற்கரையில் வசிக்கும் மனிதர்களுடனான மோதலைக் குறைக்க வேண்டும். சிங்கங்கள் மனிதக் குடியிருப்புகளுக்கு மிக அருகில் வரும்போது அவற்றைப் பயமுறுத்தச் சிங்கங்களை பாதுகாக்கும் காவலர்கள் பட்டாசுகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று ஸ்டாண்டர் கூறுகிறார். மேலும், அப்பகுதியில் வசிக்கும் மக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் பாதுகாக்க, சிங்கங்கள் கடக்கும்போது ஒரு எச்சரிக்கையை அனுப்பும் மெய்நிகர் வேலி அமைப்பையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர் என்று அவர் கூறுகிறார். சிங்கங்களைப் பாதுகாப்பதைப் பொறுத்தவரைப் புகைப்படக் கலையும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. தான் புகைப்படம் எடுக்கும் உயிரினங்களைப் பாதுகாப்பதை ஊக்குவிப்பதே தனது வேலையின் முக்கிய நோக்கம் என்று வான் மால்டரென் கூறுகிறார். "[எனது புகைப்படங்கள்] இந்த விலங்குகளின் அழகையும் அவற்றின் பலவீன நிலையையும் எடுத்துக்காட்டுகின்றன. அவற்றின் மீள்தன்மை நமக்கெல்லாம் ஒரு பாடம். மாற்றத்தை எதிர்கொள்ள, தகவமைத்துக் கொள்ள மற்றும் காலம் கடப்பதற்கு முன் செயல்பட வேண்டும்," என்று அவர் கூறுகிறார். "விலங்குகள் மீண்டு வரும், அவை, அவற்றின் அறியப்பட்ட அழகு மற்றும் வலிமையைப் மீண்டும் பெறும் திறன் கொண்டவை. நாம் அவற்றிற்கு ஒரு வாய்ப்பு மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற அழகான பாடத்தை அந்தப் புகைப்படம் நமக்குக் கடத்துகிறது" என்று ஸ்டாண்டர் ஒப்புக்கொள்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9v1dkp7793o

தெற்காசிய தடகள செம்பியன்ஷிப் - இலங்கைக்கு இரண்டாம் இடம்

2 hours 22 minutes ago
தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப்பில் ஜொலித்த இலங்கை இராணுவ வீர வீராங்கனைகளுக்கு இராணுவத் தளபதி பாராட்டு 31 Oct, 2025 | 11:38 AM இந்தியா ராஞ்சியில் ஒக்டோபர் 24 திகதி முதல் மூன்று நாட்கள் நடைபெற்ற 4வது தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கள் திறமையை வெளிப்படுத்திய இலங்கை இராணுவ வீர, வீராங்கனைகள் வியாழக்கிழமை (30) இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவை சந்தித்தனர். இந்த போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மொத்தம் 59 வீர, வீராங்கனைகள் பங்கேற்றனர், அதில் 30 பேர் இலங்கை இராணுவ உறுப்பினர்கள் என்பது சிறப்பு அம்சமாகும். அந்த இராணுவ வீர வீராங்கனைகள் 12 தங்கம், 8 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 27 பதக்கங்களை இலங்கைக்கு வென்றுத்தந்துள்ளனர். இந்த சிறப்பான விளையாட்டு வெற்றிக்காக பங்களிப்பு வழங்கிய அனைத்து வீர, வீராங்கனைகளுக்கும் இராணுவத் தளபதி தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், அவர்களின் எதிர்கால விளையாட்டு முன்னேற்றத்திற்காக ரூ. 6 மில்லியனுக்கு மேற்பட்ட சிறப்பு நிதியுதவியும் வழங்கினார். இதன்போது பதக்கம் வென்ற 18 வீர, வீராங்கனைகளுக்கு அவர்களின் அடுத்த நிலைக்கான நிலை உயர்வும் இராணுவத் தளபதியினால் வழங்கப்பட்டது. https://www.virakesari.lk/article/229117

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025

2 hours 28 minutes ago
நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா, புதிய அணி உலக சம்பியனாவதை உறுதிசெய்தது 30 Oct, 2025 | 11:30 PM (நெவில் அன்தனி) நவி மும்பை டி வை பட்டில் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (30) நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பான இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவை 5 விக்கெட்களால் வெற்றிகொண்ட இந்தியா மூன்றாவது தடவையாக ஐசிசி மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. ஜெமிமா ரொட்றிகஸ் குவித்த ஆட்டம் இழக்காத அபார சதமும் அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர் பெற்ற அரைச் சதமும் இந்தியாவை வெற்றிபெறச் செய்தன. இந்தப் போட்டி முடிவை அடுத்து ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் வராற்றில் புதிய அணி ஒன்று சம்பியனாகப் போவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தை புதன்கிழமை வீழ்த்தி முதல் தடவையாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்ற தென் ஆபிரிக்கா, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இந்தியாவை சந்திக்கவுள்ளது. அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 339 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 48.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 341 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது. இந்தியாவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. உபாதைக்குள்ளான ப்ரத்திக்கா ராவலுக்குப் பதிலாக அணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஷபால் வர்மா 10 ஓட்டங்களுடனும் நட்சத்திர துடுப்பாட்ட வீராங்கனை ஸ்ம்ரித்தி மந்தனா 24 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (59 - 2 விக்.) ஆனால், சிரேஷ்ட வீராங்கனைகளான ஜெமிமா ரொட்றிகஸ், ஹாமன்ப்ரீத் கோர் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 167 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவை சிறப்பான நிலையில் இட்டனர். அஹாமன்ப்ரீத் கோர் தசை இழுப்புக்குள்ளான சொற்ப நேரத்தில் அநாவசியமாக பந்தை விசுக்கி அடிக்க விளைந்து ஆட்டம் இழந்தார். அவர் 10 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 89 ஓட்டங்களைப் பெற்றார். மொத்த எண்ணிக்கை 264 ஓட்டங்களாக இருந்தபோது தீப்தி ஷர்மா அவசரமாக ஓட்டம் ஒன்றை எடுக்க முயற்சித்து அநாவசியமாக விக்கெட்டை தாரைவார்த்தார். அவர் 24 ஓட்டங்களைப் பெற்றார். அடுத்து களம் புகுந்த ரிச்சா கோஷ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 16 பந்துகளில் 26 ஓட்டங்களைப் பெற்று கவனக்குறைவான அடி தெரிவால் ஆட்டம் இழந்தார். அவர் 4ஆவது விக்கெட்டில் ரொட்றிகஸுடன் 46 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறுபக்கத்தில் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடிய ஜெமிமா ரொட்றிகஸ் 134 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்டறிகள் அடங்கலாக 127 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்து இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்தார். ஆமன்ஜோத் கோர் ஆட்டம் இழக்காமல் 15 ஓட்டங்களைப் பெற்றார். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீரமானித்த அவுஸ்திரேலியா 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 338 ஓட்டங்களைக் குவித்தது. ஃபோப் லிச்ஃபீல்ட் குவித்த அபார சதம், எலிஸ் பெரி, ஏஷ்லி கார்ட்னர் ஆகியோர் பெற்ற அரைச் சதங்கள் ஆகியன அவுஸ்திரேலியாவுக்கு கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற உதவின. அவர்களின் முயற்சிகள் ஜெமிமா ரொட்றிகஸின் அபார சதத்தினால் வீணடிக்கப்பட்டுவிட்டது. உபாதையிலிருந்து மீண்டு அணிக்கு திரும்பிய அணித் தலைவி அலிசா ஹீலி வெறும் 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ஆனால், ஃபோப் லிச்ஃபீல்ட், எலிஸ் பெரி ஆகிய ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 155 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர். ஃபோப் லிச்ஃபீல்ட் 93 பந்துகளை எதிர்கொண்டு 17 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 119 ஓட்டங்களைக் குவித்தார். பெத் மூனி 24 ஓட்டங்களுடனும் அனாபெல் சதர்லண்ட் 3 ஓட்டங்களுடனும் எலிஸ் பெரி 77 ஓட்டங்களுடனும் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தார். மத்திய வரிசையில் ஏஷ்லி கார்ட்னர் 44 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 63 ஓட்டங்களைக் பெற்றார். பந்துவீச்சில் ஸ்ரீ சரணி 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தீப்தி ஷர்மா 73 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: ஜெமிமா ரொட்றிகஸ் https://www.virakesari.lk/article/229089

🌿 "Looking back on my birthday" / "பிறந்தநாளில் திரும்பிப் பார்க்கிறேன்" [01 / 11 / 2025]

2 hours 29 minutes ago
🌿 "Looking back on my birthday" / "பிறந்தநாளில் திரும்பிப் பார்க்கிறேன்" [01 / 11 / 2025] பிறந்தநாளில் என்னை திரும்பிப் பார்த்தேன் ஆண்டுகளை அல்ல, அனுபவங்களைக் கண்டேன்! பனைமரக் காடுகளின் மண்ணிலே பிறந்தேன் இன்னும் கடல்கள் என்பெயரை கிசுகிசுக்குது! வேலை முடித்து ஓய்வு எடுக்கிறேன் கடிகாரத்தின் கட்டளை மறந்து போனேன்! ஓய்வூதியம் அல்ல, நினைவுகளே என்செல்வம் அன்பும் இழப்பும் சேர்ந்தது என்ஊதியம்! தந்தையின் குரலும் தாயின் வருடலும் அக்காவின் புன்னகையும் மனதில் தெரியுது! மூன்று சகோதரர்கள் வாழ்வை முடித்தாலும் அவர்களின் நினைவுகள் இதயத்தில் ஒளிருது! காலங்கள் எல்லாம் ஆதரவளித்த மனையாள் காத்திருக்காமல் இடையில் மறைந்தது எனோ! ஒவ்வொரு விடியலிலும் அவள் புன்னகை உண்டு ஒவ்வொரு குழந்தையிலும் அவள் நிழல் உண்டு! குழந்தைகள் என்றும் என் வானமே பேரப்பிள்ளைகள் என்றும் என் விண்மீன்களே! அவர்களின் புன்னகையில் என்வயது மறைகிறது அவர்களின் கண்களில் என்நம்பிக்கை ஒளிர்கிறது! யாழ்ப்பாணமே என் முதல் இதயத்துடிப்பு வேர்கள் ஆழமாக நிலைத்திருக்கும் இடம்! நான் அவளை மீண்டும்மீண்டும் பார்ப்பேன் சிறுவனாக அல்ல வீடுதிரும்பும் யாத்ரீகனாக! அன்பு தூரத்தால் மரணத்தால் அழியாது நம்பிக்கை அதன் சுவர்களையும் தாண்டும்! நேரம் கடுமையானாலும் முடிவில் கருணையாகும் வாழ்க்கை தந்த பாடம் இதுவே! இன்று என் பிறந்த நாளில் வெள்ளை முடிகளல்ல வாழ்த்துக்களை எண்ணுகிறேன்! ஒவ்வொரு இழப்பும் ஞானமாக மாற ஒவ்வொரு துன்பமும் புனிதமான ஆசிரியரே! நான் கண்களை மூடிய போது மரணத்தை அல்ல, தொடர்ச்சியைக் காண்கிறேன்! உண்மையாக நேசிக்கும் இதயம் ஒருபோதும் வயதாகாது, மறையாது, என்றும் நிலையானது! When time turns and looks at me, It sees not the years, but the stories I carry. A homeland of palmyrah dreams, And seas that still whisper my name. I have walked beyond the wages of work, Where clocks no longer command the day. Pensioned not by coins, but by memories, Paid in love, loss, and unspoken prayers. Father’s voice, mother’s touch — both echoes now, My sister’s laughter still lives in the wind. Three brothers gone ahead, leaving behind Chapters I read with trembling hands. My wife — ah, my companion of seasons — She walks no longer by my side, Yet her smile lingers in every sunrise, Her warmth folded in every child’s embrace. Children became my horizon, Grandchildren — my stars in twilight. Their laughter renews what years had taken, Their eyes — windows to all that remains pure. Jaffna — my first heartbeat, Where roots grew deep and memories stay. I cross oceans to see her again, Not as a boy, but as a pilgrim returning home. I’ve learned: Love outlives its name, Faith outgrows its temple, And time, though cruel, becomes kind at the end. Today, on this birthday of silence and reflection, I do not count candles — I count blessings. Each loss became a light, Each sorrow, a teacher of grace. When I close my eyes, I see not death, but continuity. For the heart that truly loves — Never grows old, never says goodbye. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] 🌿 "Looking back on my birthday" / "பிறந்தநாளில் திரும்பிப் பார்க்கிறேன்" [01 / 11 / 2025] https://www.facebook.com/groups/978753388866632/posts/32127544686894095/?

அமெரிக்க அணு ஆயுதங்களை ‘உடனடியாக’ சோதனை செய்ய டிரம்ப் உத்தரவு

2 hours 32 minutes ago
30 ஆண்டுகள் கழித்து அணு ஆயுத சோதனை நடத்தவுள்ள அமெரிக்கா! - ட்ரம்ப் அதிரடி உத்தரவு 31 Oct, 2025 | 12:34 PM அணு ஆயுத சோதனை நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் தற்போது அணு ஆயுத சோதனைகளில் இறங்கியிருக்கும் நிலையில், ட்ரம்ப் அமெரிக்க அணு ஆயுத சோதனையைத் தொடங்குவது குறித்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இறுதியாக 1992ஆம் ஆண்டு அணு ஆயுத சோதனை நடத்திய அமெரிக்கா, 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் இச்சோதனையை ஆரம்பிக்கவுள்ளதாக வெளியான அறிவிப்பு உலக நாடுகளை பதற்றமடையச் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. “ஏனைய நாடுகள் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருவதால் அதற்குச் சமமாக நமது அணு ஆயுதங்களை சோதிக்கத் தொடங்குமாறு இராணுவத்துக்கு அறிவுறுத்தியுள்ளேன். அமெரிக்கா மற்றைய நாடுகளை விட அதிகமான அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளது. அணு ஆயுதங்களைக் கொண்ட நாடுகளில் ரஷ்யா இரண்டாவது இடத்திலும் சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளது. சீனா தொடர் அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு சமமான இடத்தை எட்டிவிடும்” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தென்கொரியாவில் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை ட்ரம்ப் சந்திப்பதற்கு சற்று முன்பு அவர் சமூக ஊடகத்தில் இதனை பதிவிட்டுள்ளார். சோவியத் ரஷ்யா - அமெரிக்கா இடையே 1990இல் பனிப்போர் இடம்பெற்றது. அக்காலகட்டத்தில் இரு நாடுகளும் தொடர்ச்சியாக அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வந்தன. அந்த போரில் சோவியத் ரஷ்யா தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து ரஷ்யா பிரிக்கப்பட்டது. அதன் பின்னர், அமெரிக்கா, ரஷ்யா உட்பட உலக நாடுகள் அனைத்தும் அணு ஆயுத சோதனையை நடத்த ஐ.நா தடை விதித்திருந்தது. இந்நிலையில், ரஷ்யா - உக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையே போர் தொடங்கி நீடித்து வருகிறது. இதற்கு மத்தியில் ரஷ்யா அணுசக்தி சோதனையில் ஈடுபட்டு வருகிறது. “புரெவெஸ்ட்னிக்” (Burevestnik) என்கிற அதிநவீன அணுசக்தி ஏவுகணையை சோதித்ததோடு, நேற்று (30) அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி ட்ரோனை சோதனையிட்டது. ரஷ்யாவின் இத்தகைய அணு ஆயுத சோதனை நடவடிக்கைகளுக்கு ட்ரம்ப் கண்டனம் தெரிவித்து, தனது வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை குறிப்பிட்டார். அதில், ரஷ்யா, சீனா போன்ற பிற நாடுகளுக்கு இணையாக அணு ஆயுத சோதனைகளைத் தொடங்குமாறு அமெரிக்க இராணுவத்துக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். https://www.virakesari.lk/article/229125

கார்த்திகையில் மரநடுகை தேசத்தை மாத்திரமல்ல, தமிழ்த் தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும் - ஐங்கரநேசன்

2 hours 39 minutes ago
31 Oct, 2025 | 06:35 PM வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுதுண்டாலும் இயற்கையைப் போற்றி வழிபடுகின்ற தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப்பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. அதேபோன்று, வருடத்தில் எல்லா நாட்களிலும் மரங்களை நடுகை செய்ய இயலுமெனினும் கார்த்திகை மாத மரநடுகையே தமிழர்களின் தேசிய அடையாளத்துடன் கூடியதாகும். கார்த்திகையில் மரங்களை நடுகைசெய்தல் தேசத்தைக் குளிரச்செய்யும் சூழலியற்செயல் மாத்திரமல்ல; அது தமிழ்த் தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும் ஒரு தேசியச் செயற்பாடும் ஆகும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் தீர்மானத்துக்கு அமைவாக 2014ஆம் ஆண்டு முதல் கார்த்திகை மாதம் வட மாகாண மரநடுகை மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில், பூமி விரைந்து சூடேறி வருவதால் காலநிலையில் படுபாதகமான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. அதிவேகத்துடன் நீண்ட நேரம் நின்று தாக்கும் சூறாவளிகள், காலம் தப்பிக் கொட்டித் தீர்க்கும் அடைமழை, காடுகளில் தீ மூட்டும் கடும் வறட்சி, உயர்ந்து செல்லும் கடல் மட்டம், உயிரினங்களின் பேரழிவு என்று காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நாம் தற்போது அனுபவிக்கத் தொடங்கியுள்ளோம். இதனால், வெப்பநிலை அதிகரிப்புக்குக் காரணமான கரியமிலவாயுவை உறிஞ்சி அகற்றுவதற்கு மரங்களின் நடுகையை ஒரு பேரியக்கமாக முன்னெடுக்கவேண்டிய கட்டாய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். மரநடுகையைப் பெருமளவில் மேற்கொள்வதற்கு கூடுதலான மழைவீழ்ச்சியைப் பெறும் கார்த்திகை மிகப் பொருத்தமான மாதமாகும். ஈழத்தமிழர்களின் வாழ்வியலிலும் கார்த்திகை மாதம் தனித்துவமான இன்னுமொரு சிறப்பினைக் கொண்டுள்ளது. இம்மாதத்திலேயே மண்ணுக்காக மரணித்த மறவர்களைக் கூட்டாக நினைவில் கொள்ளும் நாள் அடங்குகிறது. மரவழிபாட்டைத் தமது ஆதி வழிபாட்டு முறையாகக் கொண்ட தமிழர்கள், இறந்தவர்களின் நினைவாக மரங்களை நடுகைசெய்து, அவற்றை உயிருள்ள நினைவுச்சின்னங்களாகப் போற்றிய பண்பாட்டு மரபைக் கொண்டிருக்கின்றனர். தேசியம் என்பது வெறுமனே தட்டையான ஓர் அரசியல் சொல்லாடல் அல்ல. இது ஓர் இனத்தின் வாழ்புலம், மொழி, வரலாறு, பண்பாடு, மத நம்பிக்கைகள் ஆகிய கூறுகளின் திரட்சியான ஒரு வாழ்க்கை முறையாகும். அந்த வகையில், கார்த்திகை மாத மரநடுகை என்பது தமிழ்த் தேசிய நோக்கிலும் மிகவும் பொருத்தப்பாடான ஒன்றாகும். எனவே தமிழ் மக்கள் கார்த்திகை மரநடுகையை ஒரு சூழல்பேண் நடவடிக்கையாக மாத்திரமல்லாது உணர்வெழுச்சியுடன் கூடிய ஒரு தமிழ்த் தேசியச் செயற்பாடாகவும் கொண்டாட வேண்டியது அவசியமாகும் என்றும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/229190

ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி?

2 hours 45 minutes ago
ஹிஸ்புல்லாவையும் விசாரிக்க வேண்டும்..அத்தோடு 2020 இல் அயோத்தியில் இராமர் கோவில் கட்ட தங்கக் கல் அனுப்பிய முன்னாள் பா.உ சீனித்தம்பி யோகேஸ்வரனையும் விசாரிக்க வேண்டும்??😎

அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்

3 hours 10 minutes ago
இதை நான் வழிமொழிகிறேன். மற்றது புலிகள் அவர்களிடம் கோராமல் விட்டது பெரும் பிழையும் இனத்தை கீழே போட்ட தாராளவாத தன்மையுமாகும். முஸ்லிம்களும் தாமாக முன்வந்து மன்னிப்பு கோராமல் விட்டது அவர்களின் வழமையான நயவஞ்சகத்தை வெளிக்காட்டுகிறது. எனவே இனிவரும் காலத்திலாவது இரு கன்னையும் எதிர்தரப்பு செய்தவன என செய்தவற்றை பட்டியலிட்டு (குறிப்பாக முதல் அட்டூழியமான 1954ம் ஆண்டு நிகழ்ந்த வீரமுனை எரிப்பு கண்டிப்பாக குறிப்பிடப்பட வேண்டும்.) பின்னர் அதன் கீழ் "இதில் குறிப்பிடப்பட்டனவும் இன்னபிறவனவிற்கும் முஸ்லிம்/தமிழ் தரப்பு மன்னிப்பு கோருகிறது" என்று எழுதி அவர்தம் அரசியல்வியாதிகள் கையொப்பமிட்டு மன்னிப்பு கோரினால், அது விடுபட்டுள்ளது, இது விடுபட்டுள்ளது என்று உடன்படிக்கையின் பின்னர் யாரும் குற்றம் சுமத்தேலாது! அப்படி தூக்கிக்கொண்டு வந்தாலும் மேற்குறியினுள்ள வசனத்தை காட்டி உளட்டிவிடலாம். பல்லாண்டு காலமாக நிலைத்து வந்த பகைமை அன்றே அற்றுப் போகும். என்றாலும் பீடித்திருந்த இனவெறி நீங்க சில காலம் பிடிக்கும். எனினும் சிங்களவரிற்கு விலைபோனவர்கள் நிச்சயம் இதனை கிளரிக்கொண்டே இருப்பார்கள். அதனால் சில வேளை இது நீறுபூத்த நெருப்பாக தொடரும். எனவே அப்பேர்பட்டோரிற்கு மேடை தராமலோ இல்லை கட்டுரைகளை தணிக்கை செய்தாலோ இதனை கட்டுப்படுத்தலாம். நினைவுநாட்களின் போது இனவெறி தூண்டாமல் நினைவுகூற வேண்டும். எதிர்கன்னையின் நினைவுநாட்களில் மற்ற கன்னையின் தலைவர்கள் , மதகுருமார் கலந்து சிறப்பிக்க வேண்டும். வலிகளை ஏற்படுத்தும் செயல்களை தவிர்த்து அறவே இல்லாமலாக்க வேண்டும். இதனை செய்யும் போது, தமிழர் தரப்பில், கண்டிப்பாக தென் தமிழீழத்தை சேர்ந்தவர்களும் (பாதிக்கப்பட்டவருக்கே வலி தெரியும்) வரலாறு நன்கு கற்றறிந்தவர்களும் - இந்த முஸ்லிம் அட்டூழியங்கள் தொடர்பில் - ஈடுபடுத்தப்பட வேண்டும். வந்தவன் போனவன் எல்லாம் இதில் மிண்டக்கூடாது. தான் புலி, அதனால் செய்கிறேன் என்று இறங்க கூடாது. இது இரு தரப்பின் எதிர்காலம். அதனால் பேராசை பீடித்த எமது இழிஞர்கள் எவரும் இதில் கைவைக்க கூடாது. இதை எனது அனுபவத்தால் வலியுறுத்துகிறேன். இவற்றிற்கெல்லாம் முன்னர் முஸ்லிம்களால் செய்யப்பட்ட அட்டூழியங்களை நூலாக்க வேண்டும். அது எமது இனத்தின் கற்றலுக்கும் எதிர்காலத்தில் எந்தவொரு நாசங்களும் ஏற்படாமல் இருக்க எச்சரிக்கை மணியாகவும் அமையும். இது எனது பரிந்துரையாகும், இரு தரப்பின் நலமான எதிர்காலத்திற்கு.

பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!

3 hours 41 minutes ago
கிளிநொச்சி சமுர்த்தி உத்தியோகத்தர் பெலாரஸ் எல்லையில் சடலமாக மீட்ப்பு.! கிளிநொச்சி - உருத்திரபுரத்தைச் சேர்ந்த, சமுர்த்தி உத்தியோகத்தர் ஆட்கடத்தல் காரர்கள் மூலம் சட்ட விரோதமாக வெளிநாடு சென்ற நிலையில், பெலாரஸ் எல்லையில் அந்நாட்டு இராணுவத்தினரால் சு*டப்பட்டு உயிரிழந்துள்ளார். குறித்த உத்தியோகத்தருடன் மற்றுமொரு இலங்கையரும் இருந்ததாக அந் நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன. குறித்த இருவரும் பெலாரஸ் நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள அடர் காட்டுப் பகுதியில் விலங்குகள் நுழையும் பகுதிக்குள்ளால் மற்றை நாட்டுக்குள் நுழைய முற்பட்ட போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. உயிரிழந்த இளைஞனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். நம்ம யாழ்ப்பாணம்

அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்

3 hours 53 minutes ago
எங்களோடை சரிக்குச் சமன் இவங்களாலை நிக்கமுடியுமே! அதுவும் சுத்த வடமராட்சி ஆக்களோட!🤓
Checked
Fri, 10/31/2025 - 17:25
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed