புதிய பதிவுகள்2

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

1 day 5 hours ago
மருதங்கேணியாரே, ரஷ்ய அதிபர் புட்டினுக்கு எல்லாம் ஏலவே தெரியும் என்கின்றீர்கள்.............. கொஞ்சம் கீழே வந்தால் சின்னப் புள்ளைக்கும் தெரியும் என்கின்றீர்கள்................ அப்படி என்ன தான் இவர்களுக்கு தெரியுது என்று எங்களுக்குத் தான் மூன்று வருடங்களாகத் தெரியவில்லை................🤣. கிரீமியா எல்லாம் எப்பவோ முடிந்த கதை............ இப்ப டான்பாஸ்............... ரஷ்ய பாஸ் நாங்கள் சொல்லியா கேட்கப் போகின்றார்.............. கெடு குடி சொற் கேளாது............ எப்படி இருந்த ரஷ்யா இப்படி ஆயிட்டுதே என்று போய்க் கொண்டிருக்க வேண்டியது தான்.................

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

1 day 5 hours ago
விசுகர் பழைய தலைமுறைதான் அப்படி இனம் காண்கின்றது. வவுனியாவில் நல்ல வசதியாக உள்ள 50 வயசு தாண்டியவர்கள் வாழும் பகுதியை வைத்து ஆட்களை முத்திரை குத்துவார்கள். தொழில் நிமித்தம் வன்னியில் பணியாற்றிய (அரசு உத்தியோகத்தர்) யாழ்ப்பாணத்தாரும் ஆட்களை வாழும் பகுதிகளின் அடிப்படையில் இனம் காண்பார்கள். ஆனால், அடிப்படையில் வவுனியா மாவட்டத்தை (வன்னி) பொறுத்தவரை பெரும்பாலானோர் குடியேறியவர்களே. இங்கு போர்ச்சூழலுடன் வன்னிக்கு சென்று நிரந்தரவதிவிடமாக்கியோர் பலர். 1970 வந்து குடியேறிய மலையகத்து மக்களின் ஒரு பகுதியை பார்த்தால் அவர்களின் நாலாம் தலைமுறை பாடசாலைக்கு செல்கின்றது. இரண்டாம், மூன்றாம் தலைமுறை யாழ்ப்பாணம் தொடக்கம் மட்டக்களப்பு வரை திருமணம் செய்துள்ளது. மூன்றாம் தலைமுறையிடம் தமது அடி மலையகம் எனும் இனங்காணல் இல்லை. பலர் மலையக பக்கம் சென்றதே இல்லை. சிறப்பாக வாழ்கின்றார்களா என்று பார்த்தால் அப்படி கூறுவதற்கு இல்லை என்றாலும் பொதுவாக வன்னியில் வாழும் சாதாரண மக்களின் வாழ்க்கைத்தரம் இவர்களுக்கு உள்ளது. சிலர் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலைக்கும் சென்றுள்ளார்கள். இந்த வரலாறு - டொட் எல்லாம் எங்கள் காலத்துடன் மருகிவிடும்.

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

1 day 5 hours ago
தலை முழுவதும் வெற்றுப் பெருமிதத்தை நிரப்பிக் கொண்டு வாழும் ஒரு மனப்பிறழ்வே இது, வில்லவன்.............. தலைவர் இவை எல்லாவற்றையும் தகர்த்து எறிவார் என்று தான் இருந்தோம். அவர்களுக்கு இருந்த இமாலயப் பணிகளை முடித்துக் கொண்டு பின்னர் இதைப் பார்ப்போம் என்று இருந்திருப்பார் போல.................. இனி ஒவ்வொரு தலைமுறையும் இந்த விடயத்தில் சில அடிகளாவது முன்னோக்கி போனார்கள் என்றால் கூட பரவாயில்லை........................

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

1 day 5 hours ago
சிங்கள குடிநேற்றமும் பிடிக்காது , தமிழ் குடியேற்றமும் பிடிக்காது. தமிழ் தேசியர்கள் உலகில் ஒரு வினோதமான பிறவிகள் தான்.

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

1 day 6 hours ago
அதாவது ஏழைகள் எங்கும் எப்போதும் உங்கள் கருத்தின்படி குடியேறிகளாக வாழ முடியும் ஆனால் அவர்களிடமிருந்து உறிஞ்சப்பட்ட ரத்தத்திற்கான விலை கிடைக்காது அல்லது கிடைக்கவும் தேவையில்லை அவர்களுக்கு அவர்களின் நிலத்திலேயே பாதுகாப்பான வீடு கிடைக்கக் கூடாது அதற்குப் பதிலாக இன்னொரு இடத்தில் அவர்களை மீண்டும் ஒருமுறை,,,,,,, இன்னும் ஒரு 200 ஆண்டுகளுக்கு அகதிகளாக குடியமர்த்தி விட்டால் உங்களின் தலைவருக்கு தகுந்த சன்மானம் கிடைக்கும் 😇

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

1 day 6 hours ago
கூட்டமைப்பு தனிநாடு தான் தமிழர்களுக்கு வேண்டும் என்ற போது அது அமெரிக்க ஏகாதிபத்திய மேற்கத்தியம் சொல்லி தான் இப்படி கேட்கின்றார்கள் என்றவர்கள் ரஷ்ய தமிழ் இரசிகர்கள்

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

1 day 6 hours ago
இது விடயத்தில் எனக்கும் சிலபல அனுபவங்கள் உண்டு ரசோதரன் அண்ணை. எமது பகுதி மக்களுடைய புறக்கணிப்பை ஒரு விதமான மனப் பிறழ்வாகவே பார்க்க முடிகிறது ஆழ்மனத்தில் புரையோடியுள்ள இவ்வாறான கருதுகோள்களிலிருந்து அவர்கள் வெளிப்படுவதற்கு சில தலைமுறைகளோ இல்லை தன்னலத்திலிருந்து வெளிப்பட்டு வாழ்க்கையை நோக்கக்கூடிய மன முதிர்ச்சியோ தேவை. எவ்வளவோ படித்தும் அனுபவமிக்கவர்களாகவும் உள்ளோருமே தம் மனம் எனும் வட்டம் சிறு கிணற்றளவேயாய்ச் சமைத்துக் கொண்டு அதனுள்ளே தாவும் தவளைகளாய் வாழ்தல் யாழ்ப்பாணத்தில் மிக அதிகம்.

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

1 day 6 hours ago
சிங்கள இன மக்களுடன் சேர்ந்து வாழ முடியாது என்று ஆயுத ரீதியாகப் போராடிய தமிழ் மக்கள் வாழும் ஒரு நிலப்பகுதியில் ....... எங்களுக்கு எங்கள் உரிமை வேண்டும்... எங்களை இந்த நாட்டின் மக்களாக ஏற்றுக்கொள்ளுங்கள். எங்கள் நிலத்தில் எங்கள் சந்ததியினருக்கு கல்வி உரிமையைக் கொடுங்கள்.... நாங்கள் காடு அழித்து கடும் துயர் மத்தியிலும் நாட்டிற்காக எங்கள் வியர்வையைச் சிந்தி உருவாக்கிய இந்த நிலத்தில் எங்களுக்கும் பங்கு வேண்டும் .... என்று அகிம்சை வழியில் போராடும் மக்களை எப்படி அழைத்துச் சென்று வாழ வைக்க முடியும்? சரி அப்படி ஒரு நிலை வந்தால் 200 ஆண்டுகள் உழைப்பினாலும் கடும் துயரங்களின் மத்தியிலும் உருவாக்கப்பட்ட அந்த நில புலன்களின் நன்மைகளை யார் அனுபவிக்கப் போகின்றார்கள்? (இதுக்கை வேறை மலையகம் சிங்களரின் தாயகமாம்)

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

1 day 6 hours ago
செலன்ஸ்கி இப்பொழுதுதான் தான் விட்ட அடிப்படைத் தவறை உணர்ந்துள்ளார்.மேற்கு நாடுகள் தங்கள் தளங்களை அமைப்பதற்கும் உக்கிரைனின் வளங்களைக் கொள்ளையடிப்பதற்கும் காட்டியே ஆசையே உக்ரைனை நேட்டோவில் இணைத்துக் கொள்வது என்பது. தனது கோடிக்குள் நேட்டோவை ரஸ்யா அனுமதித்தால் அது ரஸயாவின் அழிவுக்கு வழிவகுக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அந்த நோக்கத்தை ரஸ்யா எந்த விலை கொடுத்தும் நிறைவேற்றும். ஆகவே 3 வருட கால உசுப்பேத்தல் போரினால் நேட்டோ நாடுகளின் ஆயுதங்களைப்பரிட்சித்துப் பார்க்கும் களமாக உக்ரைன் போர் அமைந்திருக்கிறது. இனி நேட்டோவில் இணையும் நோக்கத்தை உக்கரைன் கைவிட்டால் ஆப்கானிஸ்தானை திடீரென்று கைவிட்டதைப்போல உக்ரைனையும் கைவிட்டு விடுவார்கள்.தேவையில்லாமல் அடுத்தவன் பேச்சைக் கேட்டு பக்கத்து வீட்டுக்காரனைப்பகைக்கப் போய் இனி உக்ரைனுக்கு அவல நிலைதான் ரஸ்யா உக்ரைனை ஒரு பரமஎதிரியாக பார்க்கும்.

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

1 day 6 hours ago
எவ்வளவுதான் தான் கல்வி அறிவு இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் பட்டறிவு தான் கை கொடுக்கும்....😅 என்ற வசனம் சுமந்திரனின் கருத்திற்குப் பொருத்தமானது என்பதற்கான சில ஆதாரமான விஷயங்களை சொன்னால்...... இவர் கீழே மேலே நடுவிலே என்று ஆர்ப்பரிக்கின்றார்😂

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

1 day 6 hours ago
சுமந்திரனை நம்பி யாரும் இந்த அழைப்பினைக் கருத்தில் எடுக்க வேண்டாம் என்பதே எமது கருத்து. அரசியலில் மட்டும் தான் இதனால் அவருக்கு ஆதாயம் என்று பலரும் நினைக்கலாம். ஆத்மீகம் என்றும் ஒன்று உள்ளதே அதுவும் இப்போது ஆதாயம் தேடும் மார்க்கமாக மாறிவிட்டதே

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

1 day 6 hours ago
மக்கள் கூட்டத்துக்கு ஈழ நிலத்தின் பூர்வீக மைந்தர்கள் என்ன செய்யலாம்; இவர்களது வஞ்சிக்கப்பட்ட வாழ்க்கையை எப்படி அனுகலாம்? சொந்த அனுபவத்தில் கதவை தட்டி செய்யப்படும் எந்த உதவியிலும் உடன்பாடில்லை. அவை ஒன்றில் சுயநலத்திற்காக இருக்கும் அல்லது துஸ்பிரயோகம் செய்யப்படும்.

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

1 day 6 hours ago
வில்லவன், மலையக தமிழ் மக்களின் நன்மைக்கும், பாதுகாப்பிற்கும், எதிர்காலத்துக்குமாக, மலையக மக்களின் சுயவிருப்புடன் அவர்கள் வடக்கு கிழக்கில் குடியேற்றப்பட்டு, கௌரவத்துடன் நடத்தப்படுவார்கள் என்றால், அதைவிட நல்லதொரு விடயம் இருக்கமுடியாது. ஆனால் எனக்கு எம் மக்கள் மீது நம்பிக்கை இல்லை. எம் மக்களின் சில பிடிவாதங்கள், கண்ணுக்குத் தெரியாத அமைப்புகள் என்பன மனிதர்களை அவர்களின் பிறப்புகளினால் வரும் அடையாளங்களை வைத்து வகைப்படுத்துகின்றன. ஒரு மனிதன் ஒடுக்கப்படுகின்றான் என்பது கண்ணீரை வரவழைக்கின்றது. மார்த்தாண்டம் என்னும் ஊர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா என்று தெரியாது. கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ளது. உலகிலேயே மிகவும் கறுப்பு என்றால் மார்த்தாண்டக் கறுப்பு என்று சொல்வார்கள். அங்கிருந்து ஒரு பையன் இங்கு வேலை செய்ய வந்தான். டாடா கன்சல்டிங். மிகப் பெரிய விசயம். அந்தச் சமூகத்திலிருந்து அப்படி ஒரு பையன் இங்கு வருவது நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று. அதுவும் டாடா கன்சல்டிங் போன்ற நிறுவனங்களில் இருந்து வருவது. ஆனாலும் அவனை இங்கிருந்த தமிழ்நாட்டவர்கள் முற்றாகவே, வெளிப்படையாகவே ஒதுக்கினார்கள். வேலையில் என்னை மீறி அந்தப் பையனை அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இது தமிழ்நாட்டு மக்கள், ஆனால் நாங்கள் வேறு என்று நாங்கள் நினைக்கக்கூடும். இந்த விடயத்தில் யாழ்ப்பாண மக்களும் இவ்வாறானவர்களே. இது தான் என்னுடைய பயம். என்னுடைய வேறு பல சொந்த அனுபவங்களும் உள்ளன. சிலவற்றை நான் எழுதினாலும், அப்படி நடந்திருக்கும் என்று பலர் நம்பப் போவதில்லை. ஆனாலும் இந்த விடயம் அடங்கிய பின், கதைகளாக எழுதுவதாக உள்ளேன். இவ்வகையான சமூக புறக்கணிப்புகள் இருக்காது என்றால், அந்த மக்கள் இந்தக் குடியேற்றத்தை விரும்புகின்றார்கள் என்றால், இதை வரவேற்கும் முதல் ஆட்களில் ஒருவனாக, உங்களைப் போலவே நானும் இருப்பேன். இது நான் இங்கு இணைந்தவுடன் எழுதிய ஆக்கங்களில் ஒன்று. சொந்த அனுபவமே.

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

1 day 7 hours ago
புங்குடுதீவில் எத்தனை சதவீதம் புங்குடுதீவு மண்ணை பூர்வீகமாகக் கொண்டோர் வாழ்கின்றனர் என்று உங்களுக்கு தெரியுமா?? வெளிநாடுகளில் வெளிஊர்களில் அதிலும் வன்னி நிலப்பரப்பில் எத்தனை கிராமங்கள் புங்குடுதீவு தீவுமக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் என்பது தெரியுமா? அது ஏன் என்றாவது உங்களுக்கு புரியுமா?? மலையக மக்களை குடியேற்ற கரம்பனில் வீடுகள் சும்மா கிடக்கிறது என்பவரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும். ???

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

1 day 7 hours ago
தவறான புரிதல் தவறான புரிதல் தம்பி நம் சுயநலத்திற்காக அவர்களை அழைக்கிறோமே தவிர...? அதற்காக மட்டுமே அவ்வுதாரணம்.

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

1 day 7 hours ago
இல்லை ஐக்கிய அமெரிக்க நாட்டில் இருந்து அரிப்பு, சிலாவத்துறை, முந்தல் போன்ற பதங்கள் பாவிக்கப்பட்டதால், பாவிப்பவரின் முன்னைய யோக்கியதை என்ன எனபதை நினைவூட்டினேன். அதை மறுக்க திராணி இல்லைதானே? அதன் கீழ் தலைப்பை ஒட்டி கருத்தும் எழுதியுள்ளேன். வாசிப்பு மங்குகிறதோ?

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

1 day 7 hours ago
@ரசோதரன் அண்ணை நீங்கள் குறிப்பிட்டுள்ள படி அவர்களுக்கான தீர்வு அவர்களுடைய நிலையான (sustainable) பொருளாதார முன்னேற்றத்துடன் கூடிய கெளரவமான சமூகப் பங்காளிகளாக வாழக்கூடிய தீர்வாக இருக்க வேண்டும். இதையே இயற்கைப் பேரிடர்களின் தாக்கம் குறைவாகவும் மற்றும் வாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கக்கூடியதாகவும் வடக்கில் அவர்களைக் குடியிருத்த முடியும் என்றால் அது ஆங்கிலேயர் அவர்களைக் குடியிருத்தியது போல் அல்ல என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். ஆங்கிலேயர் செய்தது தமது பலனுக்காக, ஆனால் இது அவர்களுடைய நன்மைக்காகவும் பாதுகாப்பான எதிர்காலத்துக்காகவும். எடுத்ததெற்கெல்லாம் வெள்ளைக்காரன் நிறவெறி பிடித்தவன் என்று கூப்பாடு போடும் தமிழர்கள் தமது முதுகையும் கண்ணாடி கொண்டு பார்த்துக் கொஞ்சம் ஆதிக்க மனப்பான்மையிலிருந்து வெளிவர வேண்டும்.

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

1 day 7 hours ago
பேசுறவனுக்கும் தெரியும் என்ன பேசுகிறோம் என்று கேட்பவனுக்கும் தெரியும் என்ன கிடக்கிறோம் என்று. அது புட்டினுக்கு மட்டும் தெரியாமல் இருக்கும் என்பதுதான் தற்போதைய உலக அரசியலை நகைப்புக்கிடமாக்கி உள்ளது. எதோ ஒன்றை எழுதி ஒரு 4-5 மாதம் சும்மா இருந்தார்கள் என்றால் தலைவர் ட்ரம்மிற்கு உக்ரைப்போரை நிறுத்திய செம்மல் என்று படடம் கிடைத்துவிடும் அதை தொடர்ந்து அந்த நோபல் பரிசையும் கொடுத்தால் ஐரோப்பியாவிற்கு வரி விலக்கும் வந்துவிடும். இவர்க்ளின் எந்த ஆடடத்திற்கும் கிரிமியாவை ரசியா ஒருபோதும் விட்டுக்கொடுக்க போவதில்லை. க்ரீமியாவை வைத்திருந்தாலே கடலை ரஸ்யா பூரண கண்காணிப்பில் வைத்திருக்கும் அதை ரஸ்யா விட்டுக்கொடுக்க போவதில்லை என்பது இவர்களுக்கும் தெரியும். ஆனால் இவர்கள் இலக்கு க்ரீமியாவை தட்டி பறிப்பதுதான் அங்குதான் முக்கிய பேச்சுக்கள் தொடங்கும். இப்போதே இவர்களின் இராணுவ முழு பலமும் அங்குதான் இருக்கிறது அது சின்ன பிள்ளைக்கே தெரியும் அதை வைத்து இனி ரஸ்யாவிற்கு பூச்சாண்டி காட்டிட முடியாது. இந்த இடைவெளியில் நாம் வெனிசுவேலாவை களவாடலாம். ஐக்கிய ராச்சியத்தில் இவ்வளவு கருத்து பஞ்சமா? தலைப்பு : நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

1 day 7 hours ago
பிந்தி வந்த செய்திகள் அதிபர் ட்ரம்ப் 'பிளாட்டினம் பாதுகாப்பு உத்தரவாதம்' ஒன்றை உக்ரேனுக்கு வழங்கவுள்ளார் என்று சொல்கின்றன. இந்த திட்டத்தை அவர் அமெரிக்க காங்கிரஸின் முன் கொண்டு செல்லப் போகின்றார் என்றும் செய்தியில் இருக்கின்றது. ஆனால் இந்த உடன்படிக்கை முழுவதையும் ரஷ்ய அதிபர் புடின் முற்றாக நிராகரிக்கப் போகின்றார். அவர் எந்த உடன்படிக்கையையுமே நிராகரிப்பார், ஆனால் இது என்ன உடன்படிக்கை............ ரஷ்ய அதிபரைப் பார்த்தால் அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும், உக்ரேனுக்கும் ஒரு கோமாளியாகத் தெரிகின்றாரா...................... மூன்று வருட சண்டைக்கு பலனாக ஒரு கொஞ்சமாவது ரஷ்யாவுக்கு விட்டுக் கொடுக்க வேண்டாமா.................
Checked
Wed, 12/17/2025 - 01:57
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed