புதிய பதிவுகள்2

ஈழத்தமிழர் மீது நடத்தப்படும் போதைப்பொருள் யுத்தம்

1 day 13 hours ago
ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் வகைத்தொகை இன்றி தமிழர்களை இனப்படுகொலை செய்து முடக்கிவிட்டது. அவ்வாறு முடக்கியதன் மூலம் இனப்படுகொலை என்ற எதிரியையும் அது சம்பாதித்து விட்டது. அதனை எவ்வாறு தமிழர் தரப்பு தமக்கு நலன் பெயர்க்கக்கூடிய வகையில் அறுவடை செய்வது என்பது தமிழ் மக்களின் வல்லமை சார்ந்தும், தகவமை சார்ந்தும் நிர்ணயம் பெறும். இது இவ்வாறு இருக்கையில் ஈழத்தமிழர் மீது சிங்கள அரசு நடாத்தும் போதைப்பொருள் யுத்தம் பற்றி ஆய்வது அவசியமானது. தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை முடக்கியதனூடாக கட்டமைக்கப்பட்ட தமிழின படுகொலைக்கான கதவுகள் அகல திறக்கப்பட்டு விட்டது. ஆயுதமுனையில் இனப்படுகொலை அரசு என்பது பல முகங்களைக் கொண்ட அதிகார நிறுவனம். இந்த நிறுவனம் சட்டம் நீதி நிர்வாகம் ஆயுதப்படை என்ற கட்டமைப்புகள் மாத்திரமன்றி ஊடகங்கள், வங்கிகள், திணைக்களங்கள் என பல்வகை நிறுவனங்களை கொண்டு இயங்கும் ஒரு செயலாற்றல் மிக்க தாய் நிறுவனம். அந்தத் தாய் நிறுவனம் தனது கிளை நிறுவனங்களை தன்னுடைய விருப்புக்கு ஏற்றவாறு வளைத்தும், நிமித்தியும் தமிழினப் படுகொலையை வெற்றிகரமாகச் செய்வதற்கான அனைத்து வழிவகைகளையும் செய்யும். தற்போது சிங்கள பௌத்த அரசு என்கின்ற செயல் பூர்வமான அந்த நிறுவனம் ஆயுதமுனையில் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலையும் விட ஆயுதமற்று திட்டமிட்ட ரீதியில் தமிழினத்தின் பண்பாட்டையும், அதன் பண்பாட்டு விழுமியங்களையும், உள்ளார்ந்த சமூகத் திறனுக்கு மூளை சாலைகளையும், செயல் திறன்மிக்க அவ்வினத்தின் முன்னுதாரணமான முற்போக்கு சிந்தனை மூளையை அரித்து அழிப்பதுதான் தமிழினத்தை இல்லாத ஒழிப்பதற்கான இறுதிக்கட்ட மூலோபாயமாக கொண்டுள்ளது. அமையும் அத்தகைய மூலபாயத்தைதான் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் இலங்கை பௌத்த சிங்கள பேரினவாத அரசு கையாள்கிறது. ஊழல் ஒழிப்பு என ஆரம்பித்து இப்போது போதைப்பொருள் ஒழிப்பு என அனுர அரசாங்கம் தனது பாதையை திருப்பி உள்ளது. அதே நேரத்தில் தம்மை இடதுசாரிகள் எனக் கூறிக்கொண்டு வலதுசாரிகளாக செயல்படுகிறது மட்டுமல்ல பௌத்த மகா சங்கத்திடமும் சரணடைந்துள்ளது. சாமானிய தமிழ் மகன் ஏளனம் செய்து இலங்கையில் இனவாதம் வேண்டாம், இனி ஒருபோதும் இன வாரத்துக்கு இடமில்லை என்றெல்லாம் இதே ஜேவிபினர் முழக்க முட்டனர். இப்போது தமிழர் தாயகத்தில் புத்தர் சிலைகளை நிர்மாணிப்பதில் முழு வேகத்துடன் செயல்படுகிறது. முக்கிய அமைச்சர்கள் இது பௌத்த நாடு இது புத்தரின் பூமி என்கிறார்கள். இந்தியாவில் பிறந்த புத்தருக்கு இலங்கை தீவு எப்படி கிடைத்திருக்கும்? என சாமானிய தமிழ் மகன் ஏளனம் செய்து கேள்வி கேட்கும் நிலை அநுர அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஊழல் ஒழிப்பு என ஆரம்பித்து பெருமெடுப்பிலாக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்கள் "எண்ணெச் செலவுதான் பிள்ளை வளர்ச்சி இல்லை" என்ற தமிழ் பழமொழியைத்தான் நினைவூட்டுகிறது. ஊழல் ஒழிப்பு என கிளம்பி அது தடம் புரண்ட நிலையில் இப்போது "போதைவஸ்து ஒழிப்பு என புறப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய இவர்களின் செயல் நடவடிக்கை மாற்றத்திற்கான காரணங்கள் என்ன என்பதை பற்றி ஆராய்வது அவசியமானது. முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது தமிழ் மக்களுடைய ஆயுத போராட்டத்தின் ஆயுத பலத்தை மாத்திரமே முடிவுக்கு கொண்டு வந்தது. ஆயினும் ஆயுதப் போராட்டம் தந்த வலிகளில் இருந்து எழுந்து பலமான ஒரு ஜனநாயக முறைமை தழுவிய அரசியல் போராட்டத்தை தமிழ் மக்கள் நடத்தக்கூடாது என்பதற்காகவே தமிழர் தாயகத்தில் போதைப்பொருள் பாவனை அரசினுடைய அனுசரணையுடன் முப்படைகளும் தமது முகவர்கள் மூலம் ஊக்கிவித்தனர். அவ்வாறு போதைப்பொருள் பாவனை வட - கிழக்கில் அதிகரித்து ஈழத் தமிழர்களின் அடுத்த தலைமுறையினர் குறிப்பாக பாடசாலை மட்டத்திலான இளம் தலைமுறையினது மூளைகளை அழிக்கவும், அவர்களை முடக்கவும், அடிமையாக்குவதற்காகவே போதைவஸ்து விநியோகம் அரச ஆதரவுடன் செயல்படுத்தப்பட்டது. போதைப்பொருள் பாவனை ஊக்குவிப்பு “எதிரிக்கு மூட்டியது தீ எதிரியை சுடுவதிலும் விட உன்னையே அதிகம் சூடும்“ என்ற சீன பழமொழிக்கு இணங்க சிங்கள அரசால் தமிழர் தாயகத்தில் விஸ்தரிக்கப்பட்ட போதைவஸ்து விநியோகம் ஒரு கூட்டு விளைவை ஏற்படுத்தியது. அது வட-கிழக்கை தாண்டி தென்னிலங்கை நோக்கி மிக வேகமாக பரவத் தொடங்கியது. அரச முகவர்களால் உருவாக்கப்பட்ட போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை, கடத்தல் என்பன சிங்கள தேசத்தில் மிக வேகமாக அதிகரித்து சிங்கள தேசத்தின் இளைய தலைமுறையை சீரழிக்க தொடங்கியது. இந்தப் பின்னணியில் சிங்கள தேசத்தை பாதுகாப்பதற்கு அதற்கு வழங்கலாக இருக்கக்கூடிய வடக்கின் போதைப்பொருள் கடத்தல் மற்றும் இத்தனை விற்பனையாளர்களை கட்டுப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதன் நிமித்தமே வட பகுதியில் போதைப் பொருள் விற்பனையாளர்களும், கடத்தல் காரர்களும் கைது செய்ய வேண்டிய இக்கட்டான நிலைக்கு இலங்கை அரசை தள்ளியுள்ளது. யுத்தம் முடிந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த 16 ஆண்டுகளும் வடபகுதியில் இளைஞர்களை போதைப்பொருளுக்கு அடிமையாகவும், சமூக சீர்கேடுகளின் மூலகர்த்தாக்களாவும் மாற்றுவதன் மூலம் தமிழ் மக்களின் சுயநிர்ணயத்திற்கான விடுதலைப் போராட்டத்தை இளைஞர்கள் நினைத்தும் பார்க்கக்கூடாது. இதற்காக அவர்களால் உருவாக்கப்பட்ட போதைப்பொருள் பாவனை ஊக்குவிப்பு தென் இலங்கையை தாக்குகின்ற போது அதனை தடுக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த அடிப்படையில்தான் கஞ்சா ஒழிப்பு என்ற பெயரில் வடகிழக்கில் பலர் கைது செய்யப்படுகிறார்கள். இவ்வாறு கைது செய்யப்படுவது என்பது தென்னிலங்கை நோக்கிய கஞ்சா வியாபாரிகள் மாத்திரமே கைது செய்யப்படுகிறார்கள். ஆனால் தமிழர் தாயகத்தின் கஞ்சா வியாபாரிகள் யாரும் இங்கே முடக்கப்படவுமில்லை கைது செய்யப்படவுமில்லை என்பதிலிருந்து இலங்கை அரசனுடைய போதைப்பொருள் ஊக்குவிப்பை உணர முடியும். Tamilwinஈழத்தமிழர் மீது நடத்தப்படும் போதைப்பொருள் யுத்தம் - தமிழ்...ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் வகைத்தொகை இன்றி தமிழர்களை இனப்படுகொலை செய்து மு...

புட்டு கேட்ட கணவனை போட்டு தள்ளிய மனைவி கத்தியுடன் சரண்

1 day 13 hours ago
புட்டைக் கைவிடுவதும் உடலின் ஒரு பாகத்தை இழப்பதும் சமம் எனக்கு. 365 நாளும் புட்டு சாப்பிட ஆசைப்படும் ஜென்மம் நான். எல்லாம் சிவபெருமானால் வந்தது. அந்தாள் புட்டுக்கு மண் சுமந்ததால் வந்த வினை இது ஐரோப்பியர்களும் புட்டினும் (புட்டும்) ஒன்றுதான்.

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

1 day 13 hours ago
மலையக மக்கள் என்ற (வரலாற்று) சமூக அடையாளம் - சஞ்சிக்கூலிகளாக (indentured labour) இந்தியாவில் பிரித்தானியரால் கொண்டுவரப்பட்டவர்களின் சந்ததிக்கு மட்டுமே. அடிமை தனத்தை (தொழிலை சட்ட அடிப்படையில் தடைசெய்த பொது, இந்த சஞ்சிக்கூலி எனும் (அடிமைத்தனம் பாற்ப்பட்ட) தொழிலார் அமைப்பே, (அடிமை தொழிலுக்கு) மாற்றீடாக உருவாக்கப்பட்டது. எனவே மலையக மக்கள் எனும் அடையாளம் என்று (சுமந்திரன்) சொல்வது அவர்களை குறித்து மட்டுமே, சரியானது. மற்றவர்களுக்கு, இந்த வரலாறு இல்லை.

தற்கொடைப்படையான கரும்புலிகள் இன் படிமங்கள் | LTTE's self-sacrifice force' Black Tigers images

1 day 13 hours ago
மாத்தறை மாவட்டத்தின் அகுரேச என்னுமிடத்தில் சோனகர்கள் நடாத்திய பேரணியில் வைத்து சிறிலங்கா அமைச்சர்கள் ஏறத்தாழ 9 பேர் மீது ஒரே நேரத்தில் நடாத்தப்பட்ட கரும்புலித் தாக்குதல் 10 / மார்ச்/ 2008 "நேற்றுவரை இங்கு பூத்திருந்தீர் - பெரும் நெருப்பென போகவா காத்திருந்தீர்" தீப்பிழம்பாய் தெரியும் மறைமுக கரும்புலியின் பெயர் 'தியாகசீலம்' செந்தமிழ் என்று அவரின் காதலி அடையாளம் காட்டியதாக பின்னாளில் செய்திகள் வெளியாகின. அது தான் மெய்யான பெயரா என்பது தெரியவில்லை. குறித்த இடத்திற்கு சில மீட்டர்கள் தள்ளி சார்ஜர் இயக்கப்பட்டதால் வெடி சரியாக பிடிபடவில்லை என்றும் அதனால் முக்கிய இலக்குகள் தப்பின என்றும் அக்காலத்தில் பேசப்பட்டது.

குவேனியின் சாபம் இலங்கை ஆட்சியாளர்களைத் துரத்துகிறதா?

1 day 14 hours ago
உங்களுக்கு நீங்கள் எழுதிய கருத்துக்களே மறு நிமிடம் காற்றில் மறைந்து மறந்து விடும், இந்த நிலையில் எந்தத் திரியில் எதை யார் எழுதினார்கள் என்று நினைவில் வைத்திருப்பீர்களா என்ன😂? அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் தனிமைப் படுத்தலை அமல் செய்யாமல் மக்களைச் சாக விட்ட நேரத்தில், சீன தடுப்பூசி கிடைக்கும் வரையில் தனிமைப் படுத்தலைக் கடுமையாகக் கடைப் பிடித்தமைக்காகத் தான் கோத்தா அரசைப் பாராட்டினார்கள். அந்த திரிகளில் "இலங்கை இறந்தவர்களின் எண்ணிக்கையை மறைப்பதாக" போலிச் செய்திகளைப் பரப்பி நீங்கள் "விஞ்ஞான மணி" போல வலம் வந்தது நினைவிருக்கிறது பெருமாள்!

வீதி நிலைவரங்களை அறிவிக்க புதிய பொதுத் தளம் - போக்குவரத்து அமைச்சு

1 day 15 hours ago
15 Dec, 2025 | 02:45 PM (எம்.மனோசித்ரா) போக்குவரத்து அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் அமைச்சின் டிஜிட்டல் பணிக்குழுவுடன் இணைந்து, இலங்கையிலுள்ள வீதிகள் தொடர்பான பிரச்சினைகளை மக்கள் அறிவிப்பதற்காக ஒரு புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வீதி மூடல்கள், சேதங்கள், விபத்துகள் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் போன்ற வீதி நிலைவரங்கள் குறித்த நிகழ்நேரத் தகவல்கள் இல்லாததை நிவர்த்தி செய்வதற்காகவே இந்தத் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இந்தத் தளத்தை https://road-lk.org என்ற இணைய முகவரியில் அணுகலாம். இலங்கையில் தற்போது பயன்படுத்தப்படும் வழிசெலுத்தல் (Navigation) செயலிகள் இவ்வாறான பிரச்சினைகள் குறித்து முறையான புதுப்பிப்புகளை வழங்குவதில்லை என்றும், பல நாடுகளில் இந்தக் குறைபாடு நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார். அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட பரவலான வீதி சேதங்கள் மற்றும் மூடல்களுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த முயற்சி உருவாக்கப்பட்டது என்றும், சாதாரண நிலைமைகளிலும் இது தொடர்ந்து பயனுள்ளதாக இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார். இந்த அமைப்பு பொதுமக்களின் பங்கேற்பை அடிப்படையாகக் கொண்டது. சேதமடைந்த வீதிகள், மூடல்கள் அல்லது விபத்துகளைக் காணும் வீதிப் பயனர்கள் https://road-lk.org/report என்ற இணையதளம் மூலம் புகார்களைச் சமர்ப்பிக்கலாம். புகார்களை சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பதிவு செய்யலாம். மேலும் முடிந்தால் புகைப்படங்களைப் பதிவேற்றுமாறு பயனர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். புகார் சமர்ப்பிக்கப்பட்டவுடன், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் தகவல்களைச் சரிபார்த்து, அதன் பின்னரே பாதிக்கப்பட்ட இடத்தைத் தேசிய வீதி வரைபடத்தில் குறிப்பார்கள். இந்த அமைப்பை இற்றைப்படுத்தும் அதிகாரம் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபைகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் வீதிப் பிரச்சினைகளை நேரடியாகக் குறிக்க அனுமதி வழங்கப்படலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். தேசிய மற்றும் மாகாண வீதி வலையமைப்பிற்காக இந்த அமைப்பு முழுமையாக நிறுவப்பட்ட பின்னர், கிராமப்புற வீதிகளையும் இதில் இணைப்பதற்கான திட்டங்கள் உள்ளன. இந்தத் தளம் தற்போது ஒரு முன்னோடித் திட்டமாக (Pilot Project) பல வாரங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது, அதன் பின்னர் இது நிரந்தரமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய மற்றும் மாகாண வீதிகளில் உள்ள பிரச்சினைகளை இந்த முயற்சிக்கு ஆதரவளிக்க மக்கள் சுறுசுறுப்பாக அறிவிக்குமாறு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/233405

போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு, 'அப்பகுதியைத் தவிர்க்க' பொதுமக்களை நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை வலியுறுத்துகிறது.

1 day 15 hours ago
சிட்னி: துப்பாக்கியால் சுட்டவர் மீது பாய்ந்து மடக்கிய 'ஹீரோ' - உடலில் 2 குண்டுகள் பாய்ந்த அவர் என்ன ஆனார்? படக்குறிப்பு,அகமது அல் அகமது தாக்குதல் நடத்திய நபரிடம் இருந்து துப்பாக்கியைப் பறிக்கிறார். கட்டுரை தகவல் எமிலி அட்கின்சன் 15 டிசம்பர் 2025, 06:41 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்த "ஹீரோ" கேமராவில் சிக்கியுள்ளார். அந்த நபர் 43 வயதான அகமது அல் அகமது என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். பிபிசி உறுதிப்படுத்திய வீடியோவில், துப்பாக்கியால் சுடும் நபரை நோக்கி ஓடிய அகமது, அவரது ஆயுதத்தைப் பறித்து, பின்னர் அதை அவர் பக்கம் திருப்பி, தாக்குதல் நடத்தியவரை பின்வாங்கச் செய்வது போன்ற காட்சி உள்ளது. இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான அகமது, ஒரு பழக் கடை நடத்தி வருகிறார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அகமதுவின் கையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் 7நியூஸ் ஆஸ்திரேலியாவிடம் தெரிவித்தனர். போண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். ஹானக்கா பண்டிகையைக் கொண்டாட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடியிருந்த நிகழ்வின் போது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. காவல்துறையினர் இதை யூத சமூகத்தை இலக்காகக் கொண்ட 'பயங்கரவாத தாக்குதல்' என்று அறிவித்துள்ளனர். ஹானக்கா என்பது யூதர்கள் ஆண்டுதோறும் கொண்டாடும் பண்டிகை என்பது குறிப்பிடத்தக்கது. "அவர் ஒரு ஹீரோ, அவர் இரண்டு முறை சுடப்பட்டார்" படக்குறிப்பு,ஒரு காரின் பின்னால் ஒளிந்து கொண்டிருந்த அகமது, தாக்குதல் நடத்திய நபரைப் பிடித்தார். அகமதுவின் உறவினர் முஸ்தபா, ஞாயிற்றுக்கிழமை இரவு 7நியூஸ் ஆஸ்திரேலியாவிடம் பேசிய போது, "அவர் ஒரு ஹீரோ, 100 சதவிகிதம் அவர் ஒரு ஹீரோ. அவர் இரண்டு முறை சுடப்பட்டுள்ளார். ஒன்று கையில், மற்றொன்று முழங்கையில்"என்று கூறினார். திங்கட்கிழமை அதிகாலை வெளியான புதிய தகவலில், "அவர் குணமடைவார் என்று நம்புகிறேன். நான் அவரை நேற்றிரவு பார்த்தேன். அவர் நலமாக இருந்தார். ஆனால் நாங்கள் மருத்துவர் வழங்கும் தகவலுக்காகக் காத்திருக்கிறோம்"என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தச் சம்பவத்தில் தாக்குதல் நடத்தியது இரண்டு பேர் என்றும், அவர்கள் தந்தை - மகன் என்றும் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். தாக்குதல் நடத்திய 50 வயது நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும், 24 வயதுடைய மற்றொரு நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஷார்ட் வீடியோ காணொளிக் குறிப்பு,ஆஸ்திரேலியா: துப்பாக்கிச் சூடு நடத்தியவரை துணிச்சலாக எதிர்கொண்ட நபர் வைரலான காணொளியில் என்ன காணப்பட்டது? தாக்குதல் நடத்தியவரிடம் இருந்து அகமது துப்பாக்கியைப் பறிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. ஒரு சிறிய நடைமேம்பாலத்துக்கு அருகில் ஒரு மரத்தின் பின்னால் நின்றுகொண்டு ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்துவதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. அவர் குறிவைக்கும் இடம் கேமராவின் சட்டகத்திற்குள் வரவில்லை. அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காருக்குப் பின்னால் மறைந்திருந்த அகமது, தாக்குதல் நடத்தியவரை நோக்கிப் பாய்ந்து அவரை மடக்கிப் பிடிப்பதை அந்த வீடியோவில் காண முடிகிறது. தாக்குதல் நடத்தியவரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்து, அவரைக் கீழே தள்ளி பின்னர் அவரை நோக்கி அகமது துப்பாக்கியை நீட்டுகிறார். அதன்பின், அந்தத் தாக்குதல் நடத்திய நபர் பாலத்தை நோக்கிப் பின்வாங்கத் தொடங்குகிறார். அதன்பிறகு, அகமது தனது ஆயுதத்தைக் கீழே இறக்கிவிட்டு, தான் தாக்குதல் நடத்திய நபர்களில் ஒருவர் அல்ல என்று காவல்துறைக்கு காட்டுவதற்காக ஒரு கையை மேலே உயர்த்துகிறார். இந்த நேரத்தில், தாக்குதல் நடத்திய நபர் இன்னொரு ஆயுதத்தை எடுத்து மீண்டும் சுடுவதைக் காண முடிகிறது . துப்பாக்கி ஏந்திய இரண்டாவது நபரும் பாலத்தில் இருந்து தொடர்ந்து சுடுகிறார். தாக்குதல் நடத்திய அவர்கள், யாரை அல்லது எதை நோக்கிச் சுடுகிறார்கள் என்பதை வீடியோ தெளிவாகக் காட்டவில்லை. படக்குறிப்பு,அகமது துப்பாக்கியைப் பிடுங்கி, பின்னர் அதைத் தாக்கியவரை நோக்கி திருப்பினார். அகமதுவுக்கு தலைவர்கள் பாராட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய நியூ சவுத் வேல்ஸ் மாகாண பிரீமியரான கிறிஸ் மின்ஸ், அகமதுவின் துணிச்சலைப் பாராட்டினார். அப்போது அவரது பெயர் வெளிப்படுத்தப்படவில்லை. "அவர் ஒரு உண்மையான ஹீரோ, அவருடைய துணிச்சலால், இன்று இரவு பலர் உயிரோடு இருக்கிறார்கள் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை," என்று கிறிஸ் மின்ஸ் கூறினார். ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இதுகுறித்துப் பேசுகையில், "இன்று, மற்றவர்களுக்கு உதவ தங்கள் உயிரைப் பணயம் வைத்த ஆஸ்திரேலியர்களை நாங்கள் கண்டோம். இந்த ஆஸ்திரேலியர்கள் ஹீரோக்கள். அவர்களின் வீரம் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளது," என்றார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அகமது மீது தனக்கு "பெரிய மரியாதை" இருப்பதாகக் கூறினார். மேலும் "அவர் உண்மையிலேயே மிகவும் துணிச்சலான மனிதர். அவர் முன்னால் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியவரைத் தாக்கி பல உயிர்களைக் காப்பாற்றினார்," என்று டிரம்ப் தெரிவித்தார். சிட்னி கடற்கரை தாக்குதல் - என்ன நடந்தது ? 10 வயது சிறுமி உட்பட 15 பேர் உயிரிழந்ததையும், தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் உயிரிழந்ததையும் நியூ சவுத் வேல்ஸ் மாகாண பிரீமியர் கிறிஸ் மின்ஸ் உறுதிப்படுத்தினார். 50 வயது தந்தை மற்றும் அவரது 24 வயது மகன் ஆகிய இருவர் தான் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் என்று காவல்துறை ஆணையர் மெயில் லேன்யன் தெரிவித்தார். தாக்குதல் நடத்திய 50 வயது நபர், காவல்துறையால் சுடப்பட்டதில் உயிரிழந்தார். 24 வயதான அவரது மகனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சம்பவ இடத்தில் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 42 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய 50 வயது நபர் துப்பாக்கி உரிமம் வைத்திருந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். அவரது பெயரில் ஆறு ஆயுதங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. போண்டி கடற்கரையில் ஆறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. சம்பவ இடத்தில் 'இரண்டு வெடிகுண்டுகள்' காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன. மேற்கு சிட்னியில் உள்ள கெம்ப்ஸி மற்றும் போன்னிரிக் பகுதிகளில் உள்ள இரண்டு இடங்களில் காவல்துறையினர் இரவு முழுவதும் சோதனை மேற்கொண்டனர். சிட்னியில் யூத சமூகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குவதற்காக 328 காவல்துறை அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். ஆஸ்திரேலிய சமூகத்தில் இருந்து யூத-விரோதப் போக்கினை "வேரறுக்க" அந்நாட்டு பிரதமர் உறுதியளித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd9zgdzplw2o

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

1 day 15 hours ago
வவுனியாவிற்கு 1970ம் ஆண்டுகளில் குடிபெயர்ந்து காட்டு பகுதியை வளப்படுத்தி வயல், தோட்டம் செய்தார்கள் மலையகத்து மக்கள் பகுதியினர். இப்போது மூன்றாம் தலைமுறையும் வந்துவிட்டது.

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

1 day 15 hours ago
முதலில் நடக்கக் கூடிய விஷயங்களை பற்றிப் பேசுவோம் வடக்கிலேயே காணிகள் அற்ற..... வீடுகள் அற்ற..... பல குடும்பங்கள் வீடமைப்புத் திட்டங்கள் மூலம் அதனப் பெற்று வாழும் இடங்களை பாருங்கள். மழைக்காலம் வெளியே செல்ல முடியாத அளவில் வெள்ளம் .....சரியான வீதிகள் இல்லை..... மின்சாரம் இல்லை...... போக்குவரத்து சுத்தமாக இல்லை இப்படியான நிலையில் இருக்கும் போது----- இன்னும் குடியேற்றம் வீடமைப்பு என்று வாய்ச சவடால் விடுவது சுமோவிற்கும் மனோவிற்கும் புதிதல்ல ஏற்கனவே முஸ்லீம்கள் ஓட்டுமடத்தில் வாழும் நிலையைப் பாருங்கள் முதலில் அவர்களுக்கு ஒரு சுகாதாரமான வாழ்க்கை வாழ ஆவன செய்ய வக்கில்லாத சுமோ........ மலையகத்தில் இருந்து மக்களை வரச் சொல்வது எப்படியான ஒரு கயமைத் தனமானது என்று எல்லோருக்கும் விளங்கும் 😂

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

1 day 16 hours ago
நாற்பது, ஐம்பதுகளின் இலங்கையின் இருந்த பிரதேச பாகுபாடுகள் மலையகத் தமிழர்களின் வாழ்க்கையை ஆழமாக பாதித்திருந்தது. குறிப்பாக யாழ்ப்பாணப் பகுதியில் சில யாழ்ப்பாணத் தமிழர்கள், தேயிலைத் தோட்டங்களில் இருந்து மலையகத் தமிழர்களை வீட்டு வேலைக்கும், கழிவுகளை அகற்றும் பணிகளுக்கும் அழைத்து வந்து அமர்த்திய நிகழ்வுகள் நிறைய இருக்கின்றன. அப்பொழுதெல்லாம் யாழ்ப்பாணம் வறண்ட பிரதேசம். மலையகம் செழிப்பான பூமி என்று யாரும் பேசவில்லை. தாய் தந்தையை உறவுகளை மலையகத்திலேயே விட்டு விட்டு,சிறுமியையோ, சிறுவனையோ பிரித்து கூட்டிக் கொண்டு வந்து வேலை செய்ய விட்டு தன் பிள்ளைகளை படிக்க விட்ட போது யாருமே ‘குய்யோ முறையோ’ என்று கத்தவில்லை. தாயக விடுதலைக்காக கரும்புலியாகப் போனவனை, “இது எங்கள் போராட்டம் நீ வளமும், உன் வாழ்வும் உள்ள உன் மலையகத்துக்குப் போ” என்று சொல்ல பிரபாகரனே சொல்லவில்லை. புலிகள் அறிவித்தவுடன், “ஊரில் உழாத மாடு வன்னியில் எப்படி உழும்” என்று சொன்னவர்கள் வன்னிக்கு இடம் பெயர்ந்து வாழவில்லையா? புகையிலைத் தோட்டம், மிளகாய் தோட்டம் என்று வாழ்ந்தவன் இடம் பெயர்ந்து 10,000 கிலோ மீற்றர்கள் பறந்து வந்து சீமையிலே வாழ முடிந்தது என்றால்,தேயிலைத் தோட்டத்தில் வாழ்ந்தவன் உள்ளூரில் இடம் பெயர்ந்து வாழ முடியாதா? சுமந்திரனை நீங்கள் தூற்றுங்கள். பாரளுமன்றத்தில் யாராவது பிரபாகரனுக்கு பிறந்தநாள் சொன்னால் போற்றுங்கள். அது உங்கள் விருப்பம். சுமந்திரன் சொன்னார் என்பதற்காக நல்லதை எதிர்ப்பது எந்தவகையில் நியாயம்? ஒன்று நிச்சயம் கால் மேல் கால் போட்டு மல்லாக்காகப் படுத்திருந்து வானத்தை நோக்கி துப்பிக் கொண்டிருப்பவர்களால் ஈழத் தமிழர்களுக்கு எந்த பிரயோசனமும் கிடையாது.
Checked
Wed, 12/17/2025 - 01:57
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed