புதிய பதிவுகள்2

“இலங்கை வேடுவர்களுக்கு 5 இந்திய பழக்குடியினருடன் நெருங்கிய மரபணு தொடர்பு – ஆய்வில் தகவல்”

1 day 16 hours ago
எனக்கும் இதே கொள்கை தான், மற்றும் சொந்த இடம் சாவகச்சேரி தான் என்பதால் நீங்கள் சொல்லும் தகவல் உண்மை என இத்தால் அறிவிக்கப்படுகின்றது 🥹

தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு

1 day 18 hours ago
இந்தியா மட்டுமா காரணம் ? சீனா, பாகிஸ்தான் , ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் காரணமில்லையா? செப்டம்பர் 11 தாக்குதல் , நீண்டகால சமாதான பேச்சுவார்த்தை, கருணா பிரிவு, தொழில்நுட்ப வளர்ச்சி , குடும்பத்தில் இருந்து ஒருவர் கட்டாயமாக சேர்தல் ( இதில் பல எதிரானவர்களும் இயக்கத்தில் ஊடுருவினார்கள்), காட்டி கொடுப்பு …… 2004 - 2009 காங்கிரஸ் கூட்டணியில் 16 தொகுதியில் திமுக வென்றிருந்தது. அந்த 16 பேரும் ஆதரவை விழக்கியிருந்தால் காங்கிரஸ் ஆட்சி கவிழுமா? பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக வென்ற 6 பெறும் , தமிழகத்தில் இரு கம்னியூஸ்ட் காட்சிகளிலும் இருந்து வென்ற 4 பேரும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தார்கள். திமுக , காங்கிரஸ் ஆதரவை விலக்கினால் பாட்டாளி கட்சியும் ஆதரவை நீக்குமா? இதே கூட்டணியில் இருந்த மதிமுக (4 வேட்பாளர்கள்) 2006 இல் ஆதரவை விலக்கியிருந்தது. அப்படி திமுக, காங்கிரசுக்கு ஆதரவை 2009 ஆரம்பத்தில்விலக்கபூபோவதாக சொன்னால் ( வன்னியை மெல்ல மெல்லமாக சிங்களப்படைகள் 2009 சனவரியில் இருந்து கைப்பற்றியது) , 3 மாதத்தில் தேர்தல் வருகுதுதானே என்பதினால் காங்கிரஸ் தனது இலங்கைக்கு எதிராக செயல்பட்டிருக்குமா?

யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி

1 day 18 hours ago
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை) முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்? 1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 3ம் இடம் 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 4ம் இடம் 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 3ம் இடம் 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் 1ம் இடம் 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 3ம் இடம் 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 1ம் இடம் 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 3ம் இடம் 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 1ம் இடம் 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 1ம் இடம் 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 1ம் இடம் 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 1ம் இடம் 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 3ம் இடம் 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 1ம் இடம் 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 3ம் இடம் 15) தயாநிதிமாறன்(திமுக) 1ம் இடம் 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 1ம் இடம் 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 2ம் இடம் 18)ரி ஆர் பாலு ( திமுக) 1ம் இடம் 19)எல் முருகன் (பிஜேபி) 3ம் இடம் 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 1ம் இடம் 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்) 1ம் இடம் 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 1ம் இடம் 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 2ம் இடம் 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெறும்? 1) 5% க்கு குறைய 2) 5% - 6% 3) 6% - 7% 4) 7% - 8% 5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? கூட 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 28)இந்திய கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 1 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 3 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 1 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 15 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 1 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 3 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 1 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 35 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 19 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 2 41) 9 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 9 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 1 43) 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 0 போட்டி விதிகள் hh 1)june 3 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள் 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்

தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு

1 day 20 hours ago
இதுதான் நடந்தது, விரும்பியல்ல. மிகத்தவறான முடிவு. கட்டாயம் செய்யப்படவேண்டிய ஒரு விடயம். ஆனால், மீட்பன் இல்லாத மந்தைகள் போல இருக்கின்றது இன்றைய தமிழினத்தின் நிலைமை.

பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்

1 day 20 hours ago
திம்புப் பேச்சுக்களுக்கு முன்னோடியாக, போராளித் தலைவர்களை தில்லிக்கு அழைத்து அழுத்தம் கொடுத்த இந்தியா 1985 ஆம் ஆண்டு ஆடி 3 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களான பிரபாகரன், சிறீ சபாரட்ணம், பத்மநாபா மற்றும் பாலக்குமார் ஆகியோரும் அவர்களின் உதவியாளர்களும் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்றில் தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஐந்து நட்சத்திர விடுதியான அஷோக் ஹொட்டேலில் தங்கவைக்கப்பட்டனர். அஷோக் நட்சத்திர விடுதி, தில்லி போராளிகளின் தலைவர்களுட‌ன், ரோ அதிகாரிகளும் அதேவிடத்தில் தங்கியிருந்ததுடன், அவர்களின் நடமாட்டங்களையும் நெருக்கமாக அவதானித்து வரத்தொடங்கினர். ரோ அதிகாரிகள், பாதுகாப்புத்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளியுறவுத்துறையைச் சேர்ந்தவர்கள் என்று பலர் போராளிகளின் தலைவர்களுடன் நீண்ட பேச்சுக்களை நடத்தி வந்தனர். அவர்கள் அனைவரினதும் நோக்கமாக இருந்தது ஒன்றுதான். அதாவது பேச்சுவார்த்தைகளுக்கான நிபந்தனைகளாக அவர்கள் முன்வைத்திருக்கும் அனைத்தையும் மீளப்பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான் அது. நிபந்தனைகளை முன்வைப்பதன் மூலம் ஜெயவர்த்தன இலகுவாக பேச்சுக்களில் இருந்து வெளிநடப்புச் செய்வதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதாகிவிடும் என்பதே அவர்களின் பேச்சாக இருந்தது. இந்திய அதிகாரிகளின் அழுத்தத்திற்குப் பதிலளித்த போராளிகள், ஜெயார் யுத்தநிறுத்தத்திலும், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதே தனது இராணுவத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதற்காக‌த்தான் என்று கூறினார்கள். மேலும், நாங்கள் நிபந்தனைகளை முன்வைத்தாலென்ன இல்லாதுபோனால் என்ன, அவர் எப்படியாவது பேச்சுவார்த்தைகளை முறித்துக்கொண்டு தனக்கேற்ற‌ தருணத்தில் வெளியேறுவார், தனது இராணுவ பலத்தினால் தமிழ் மக்களின் ஆயுதப் பலத்தினை முற்றாக நசுக்கிவிடமுடியும் என்கிற நிலை வரும்போது அவர் இதனைச் செய்வார் என்றும் கூறினார்கள். மேலும், லலித் அதுலத் முதலி, சிங்களவர்களை இராணுவமயப்படுத்துவதில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் என்றும், இராணுவத்தினருக்கான ஆட்களைச் சேர்ப்பது, உப இராணுவப் பிரிவான ஊர்காவற்படையினை உருவாக்குவது, சிங்களக் குடியேற்றவாசிகளை ஆயுதமயப்படுத்துவது, இராணுவத்திற்கான ஆயுதங்களை வாங்கிக் குவிப்பது போன்ற நடவடிக்கைகளில் அவர் தற்போது ஈடுபட்டிருக்கிறார் என்றும் இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் கூறினர். போராளிகளின் தலைவர்களின் கருத்துக்களைச் செவிமடுத்த இந்திய அதிகாரிகள், இலங்கை அரசின் இராணுவ முயற்சிகள் குறித்து தாமும் அறிந்துவைத்திருப்பதாகக் கூறினர். "எமக்கென்றும் ஒரு திட்டம் இருக்கிறது, அவர் பேச்சுக்களில் இருந்து விலகிச் செல்லட்டும் பார்க்கலாம்" என்றும் அவர்கள் கூறினர். தொடர்ந்து பேசிய இந்திய அதிகாரிகள், இலங்கைத் தமிழர்களின் நலன்களைக் காத்துக்கொள்ள இந்தியா பின்னிற்கும் எனும் உத்தரவாதத்தையும் அவர்கள் வழங்கினர். "திம்புவிற்குப் போங்கள், நாங்கள் உங்களைப் பார்த்துக்கொள்கிறோம்" என்பதே அவர்களின் அழுத்தமாக இருந்தது. போராளிகளின் தலைவர்களுடன் பேசிய இந்திய அதிகாரிகள் இன்னொரு விடயத்தையும் அழுத்தமாகக் கூறினார்கள். திம்புப் பேச்சுக்களில் பங்கேற்பதன் மூலம் அவர்களுக்கு விடுதலைப் போராளிகள் எனும் அந்தஸ்த்தினை இந்தியாவும், இலங்கையும் கொடுக்கும் என்றும், ஆகவே அச்சந்தர்ப்பம் நழுவிச் செல்வதனை அனுமதிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர். மேலும், ஜெயாரைப் பேச்சுவார்த்தைக்குப் பணியவைப்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரொமேஷ் பண்டாரி அதிக நேரத்தையும், சக்தியையும் செலவழித்திருப்பதாகவும் கூறினர். பயங்கரவாதிகளுடன் ஒருபோதும் பேசுவதில்லை எனும் நிலைப்பாட்டில் தனது அரசாங்கம் இருப்பதாக ஜெயவர்த்தன தொடர்ச்சியாகக் கூறிவந்தபோதிலும், பண்டாரி அவருடன் சளைக்காது பேசி பணியவைத்திருப்பதாக அவர்கள் கூறினர். ஹர்ச்சண்ட் சிங் லொங்கொவால் ஜெயவர்த்தனவுடன் பேச்சுவார்த்தைக்கான அழைப்புக்களில் ஈடுபட்டிருந்த பண்டாரி, சீக்கியப் பிரிவினைவாத போராளித் தலைவரான ஹர்ச்சண்ட் சிங் லொங்கொவாலுடன் ரஜீவ் காந்தி பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருப்பதைச் சுட்டிக் காட்டி, ஜெயாரும் போராளிகளுடன் பேசவேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வந்தார். இதற்கு மேலதிகமாக தனது உதவி வெளியுறவுச் செயலரான குர்ஷீட் அலாம் கானை ஜெயாரிடம் அனுப்பிய ரஜீவ், தான் லொங்கொவாலுடன், பேச்சுவார்த்தைகள் ஊடாக பிணக்கினைத் தீர்ப்பதுபோல, தமிழ்ப் போராளிகளுடன் ஜெயவர்த்தனவும் பிரச்சினைக்கான தீர்விற்காகப் பேச்சுக்களில் ஈடுபட வேண்டும் என்றும் கோரியிருந்தார். சீக்கியர்களின் பிணக்கினைத் தீர்த்துவைத்தவர் (குறிப்பு :சீக்கியர்களின் பிரச்சினைகள் இதுவரை தீர்த்துவைக்கப்படவில்லை என்பது வேறு விடயம்) என்று சர்வதேசத்திலிருந்து பலத்த பாராட்டுக்களை அந்நாட்களில் பெற்றிருந்த ரஜீவ், தனது பெருமைகளுக்கு வலுச்சேர்க்க ஜெயவர்த்தனவையும் தமிழ்ப் போராளிகளையும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவர முயன்றுகொண்டிருந்தார். சீக்கிய பிரிவினைவாதப் போராளிகளின் பிரச்சினையைத் தீர்த்துவைத்தவர் என்கிற பெருமை உள்நாட்டில் ரஜீவிற்குக் கிடைத்திருந்தது. ஆகவே, இலங்கையில் தமிழருக்கான பிரச்சினையினைத் தீர்த்துவைத்தால் இப்பிராந்தியத்தில் சமாதான நடவடிக்கைகளை முன்னெடுத்தவர் என்கிற பெருமையும் அவரை வந்துசேரும் என்கிற எதிர்பார்ப்பு அவரிடத்தில் இருந்தது. 1985 ஆம் ஆண்டு ஆவணி 1 ஆம் திகதி லங்கா கார்டியன் பத்திரிக்கையில் எழுதிய மேர்வின் சில்வா, "தனது முதலாவது பிராந்திய பிணக்கினைக் களையும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த ரஜீவ், அதனை எப்பாடுபட்டாவது வெற்றியடைய வைப்பதில் அதீத பிரயத்தனம் காட்டியிருந்தார்" என்று எழுதுகிறார். போராளிகளுடன் பேசிய இந்திய ரோ அதிகாரிகள், பேச்சுவார்த்தைக்களுக்கான நிபந்தனைகளைப் போராளிகள் முவைத்துக்கொண்டிருப்பது இந்தியாவிற்கு அவமானத்தை ஏற்படுத்திவருவதாகத் தெரிவித்தனர். ஜெயவர்த்தனவுடனான பேச்சுக்களில் போராளிகளை எப்படியாவது பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவருவேன் என்று ரொமேஷ் பண்டாரி உறுதியளித்திருந்தார். ஆகவே, அவ்வாறு அவர்களை அழைத்துவரமுடியாத பட்சத்தில், பிராந்திய வல்லரசான இந்தியாவிற்கு அது பெருத்த அவமானமாக மறிவிடும் என்று அவர்கள் கூறினார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை, போராளிகளை நிபந்தனைகளின்றி பேச்சுவார்த்தைக்கு அழைத்துவருவதென்பது கெளரவப் பிரச்சினையாக மாறியிருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். "ஆகவே, நீங்கள் கட்டாயம் திம்புவிற்குச் சென்றே ஆகவேண்டும்" என்று விடாப்பிடியாக அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர். ஒருபடி மேலே சென்ற சந்திரசேகரன், "நீங்கள் புரியும் விடுதலைப் போராட்டத்தைக் கைவிட்டு விடும்படி நாங்கள் கோரவில்லை. ஆனால், நீங்கள் கட்டாயம் திம்புப் பேச்சுக்களுக்குச் சென்றே ஆகவேண்டும்" என்று போராளிகளைக் கேட்டுக்கொண்டார். தில்லியில் அமைந்திருக்கும் ரோ வின் தலைமைக் காரியாலயத்தில், அதன் அன்றைய தலைவர் சக்சேனாவிற்கும் போராளிகளின் தலைவர்களுக்குமிடையே உச்சச் சந்திப்பொன்று இடம்பெற்றது. கராரான தொனியில், மிகுந்த அதிகாரத்துடன் பேசிய சக்சேனா, "நீங்கள் இந்தியாவுடன் ஒத்துப்போவதைத் தவிர‌ வேறு வழியில்லை என்று கூறினார். இந்திரா காந்தியின் காலத்தில் நாங்கள் உங்களைப் பார்த்துக்கொண்டோம், உங்களுக்கான முகாம்களையும், மறைவிடங்களையும் அமைக்க எமது நாட்டைத் தந்திருந்தோம், ஆனால் எமது புதிய அரசாங்கமோ தென்னாசியப் பிராந்தியத்தை சமாதானப் பூங்காவாக மாற்ற விரும்புகிறது. அதன் அடிப்படையிலேயே இலங்கையுடனான உங்களின் பேச்சுக்களும் ஒழுங்குசெய்யப்பட்டிருக்கின்றன" என்று அவர் கூறினார். "உங்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு இலங்கையரசாங்கத்தைப் பணியவைப்பதில் மிகக்கடுமையான முயற்சிகளில் பண்டாரி இறங்கியிருக்கிறார். அதனை நீங்கள் ஒரு பெருவெற்றியாகவே பார்க்க வேண்டும். நீங்கள் முன்வைக்கும் நிபந்தனைகளால் திம்புப் பேச்சுவார்த்தைகளுக்கு தனது அணியைனை அனுப்பிவைப்பதிலிருந்து ஜெயார் நழுவிக்கொள்ள சந்தர்ப்பம் ஒன்றினை நீங்கள் வழங்கப் போகிறீர்கள். ஆகவே, இந்தியாவின் முயற்சிகளுக்கு நீங்கள் கட்டாயம் ஒத்துழைப்புத் தந்தே ஆகவேண்டும்" என்று அவர்களைப் பார்த்து சக்சேனா கூறினார்.

வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….

1 day 20 hours ago
ஆனால் ஒரு சம்பவம் நடந்தது. நானும் என் நண்பர் குழாமும் மாத்தறையில் ஒரு கடலோர ரிசார்ட்டில் போய் அமர எத்தனித்த போது - மன்னிக்க வேண்டும், இங்கே கிச்சனில் பழுது, உணவுகள் இல்லை, இன்னும் ஏதோ நொண்டி சாட்டுகள் கூறி மிக தன்மையாக எம்மை வேறு இடம் பார்க்க சொல்லி கேட்டுக்கொண்டார்கள். கேட்டு கொண்டவர்கள் உள்ளூர்வாசிகள். என் குழுவில் மூவினத்தவரும் இருந்தோம். அந்த இடம் முழுவதும் வெள்ளையர்களாகவே இருந்தது. மருத்துக்கும் ஒரு சுதேசியையும் காணவில்லை. என்ன நடக்கிறது என்பது விளங்கினாலும், பிரச்சனை வேண்டாம், மிகவும் தன்மையாக கேட்கிறார்கள் வெளியேறுவோம் என்பதே எம் குழுவில் அநேகரின் எண்ணமாக இருந்தது. இங்கிலாந்தில் இதுவே எமக்கு நடந்தால் “சேறாடி” இருப்போம் என நாம் சிலர் சொன்னபோது, உள்ளூர்வாசிகள் நடந்து கொள்ளும் முறை, வாடிக்கையாளருக்கு அசெளகரியங்களை தருவதால் - வியாபார நிறுவனமாக அவர்களில் தாம் அதிகம் பிழை காணவில்லை என்றனர் - இலங்கை வாசிகள். கடல்கரை வழியாக நடந்து வந்து அடுத்ததாக இருந்த இன்னொரு இடத்தில் கேட்ட போது மிக வரவேற்புடன் எம்மை உள்ளே எடுத்தார்கள். தென்னிலங்கை கடற்கரை நகர்களில் சில இடங்களில் இப்படியான ஒரு அறிவிக்கபடாத அப்பாதயிட் நடை முறை இருப்பதாகவே தெரிகிறது. இதே போல் வெள்ளையருக்கு மட்டும் என ஒரு பார்ட்டி ஏற்பாடாகி, சர்ச்சை ஆகி நிறுத்தப்பட்டது. செய்தி இணைப்பு கீழே. https://www.bbc.co.uk/news/world-asia-68421131.amp

வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய விவகாரம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி

1 day 20 hours ago
பிரித்தானிய நாடாளுமன்றில் மட்டுமல்ல உலகில் தமிழர் வாழும் எல்லா நாடாளுமன்றிலும் கேள்வி எழுப்பச்செய்ய வேண்டும்.

வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….

1 day 20 hours ago
கொசுறு @தமிழ் சிறி இன்னொரு திரியில் ரஸ்யர்கள் இலங்கையில் வியாபாரம் செய்வது பற்றி சிலாகித்து இருந்தார். அதை பற்றி இந்த திரியில் முன்னரும் எழுதி இருந்தேன். இப்படியான இடங்களுக்கு நான் போகவில்லை, ஆனால் தென்னிலங்கையில் கீழே படத்தில் இருப்பது போலான அறிவிப்புகளை கன இடங்களில் கண்டேன். மும்மொழி கொள்கையை ஒருவழியாக அமல்படுத்திய கண்கொள்ளா காட்சி🤣👇.

“இலங்கை வேடுவர்களுக்கு 5 இந்திய பழக்குடியினருடன் நெருங்கிய மரபணு தொடர்பு – ஆய்வில் தகவல்”

1 day 20 hours ago
நானும் அறிந்ததில்லை. ஆனால் சமணத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்துவிட்ட படியால் - இருந்து சுவடழிந்து போயிருக்கலாம். ஊகம்தான்.

“இலங்கை வேடுவர்களுக்கு 5 இந்திய பழக்குடியினருடன் நெருங்கிய மரபணு தொடர்பு – ஆய்வில் தகவல்”

1 day 20 hours ago
ஐய்னே, இது புதிய தகவல். மிக்க நன்றி ஆனால், அங்கே சமணம் இருந்தது தொடர்பாக நானறிந்ததில்லை. நீங்கள்? அவர்கள் அங்கிருந்திருந்தால் இதுவும் நீங்கள் கூறியது போன்று ஒரு பொருளாக இருக்கலாம்.

“இலங்கை வேடுவர்களுக்கு 5 இந்திய பழக்குடியினருடன் நெருங்கிய மரபணு தொடர்பு – ஆய்வில் தகவல்”

1 day 20 hours ago
@நன்னிச் சோழன் @kandiah Thillaivinayagalingam வேறு ஒரு விடயத்தை பற்றி தேடும் போது இந்த சாவகர் என்பதற்கு இன்னொரு அர்த்தம் கிடைத்தது. பண்டைய தமிழ் நம்பிக்கைகளில் ஒன்றான சமணத்தின் உட்பிரிவுகளில் ஒன்றுக்கு பெயர் சாவகம்/உலகாயதம். இதன்வழி ஒழுகியோரும் சாவகர் என அழைக்கப்பட்டுள்ளனராம். இது இறை நம்பிக்கை மறுப்பு, ஆசார மறுப்பு, பகுத்தறிவுவாதம் என கிட்டதட்ட இன்றைய பகுத்தறிவு/சுயமரியாதை/பெரியார் கொள்கைகளை சிலதை ஒத்து இருந்துள்ளது போல் தெரிகிறது. சிலசமயம் இவர்கள் கூடி வாழ்ந்த இடமே சாவகர்-சேரி ஆமியும் இருக்கலாம். https://ta.m.wikipedia.org/wiki/உலகாயதம் இந்த இணைப்பு - சாவக நம்பிக்கையின் சாரம் என கீழ் கண்டவாறு உள்ளது. வானுலகு, மோட்சம், நரகம், மறு உலகில் உயிர், வினைக் கோட்பாடு என்பன ஒன்றும் இல்லை. நால்வகை வருணப்பாகுபாடு, அவர்களுக்குரிய தொழில்கள், நியதிகள் என்பன ஒருவித உண்மை விளைவினையும் பயனையும் உண்டாக்கா. ஆண்மைத்திறமும் அறிவாற்றலும் இல்லாதவர்களின் பிழைப்பின்பொருட்டுத்தான் வேதங்கள், வேள்விகள், முத்தீ வளர்த்தல் உடம்பில் நீறுபூசுதல் என்பன உண்டாகி உள்ளன....உயிர் உள்ளவரைக்கும் மனிதன் மகிழ்ச்சியாக வாழட்டும். கடன்பட்டாவது நெய்யுணவு கொள்ளட்டும். ஒருமுறை உடம்பு சாம்பாலான பின்னர், மீண்டும் அது எப்படி எப்பொழுது இங்குத் திரும்பும்? சடங்குகள் எல்லாம் பிராமணர்களின் பிழைப்புக்காக உண்டாக்கப்பட்டவை. @கிருபன் @பாலபத்ர ஓணாண்டி உங்கள் பார்வைக்கும்.

புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?

1 day 21 hours ago
ஹி ஹி.... விலை படிந்து விட்டதா? அண்மையில் நான் அறிந்த செய்தி; வெளிநாட்டில் வசிப்பவர் ஒருவர் தன் காணியை தாயகத்தில் இருக்கும் ஒருவரிடம் நம்பிக்கையின்பேரில் அதிகாரப்பத்திரம் (power of attorney) கொடுத்திருந்தார், சில காலத்தின்பின் அந்த நபிக்கைக்குரியவர், அந்தக்காணியை மூன்றாக பிரித்து ஒன்றை விற்றுவிட்டார், அடுத்ததை உறவினருக்கு நன்கொடையாக கொடுத்தாராம், மற்றயதை வங்கியில் காட்டி பணம் பெற்றிருக்கிறாராம், இதற்கும் ஒரு துணிவு வேண்டும்! இப்போ காணியின் சொந்தக்காரர் வழக்கு போட்டுள்ளாராம். இது தேவையா? அதிகாரம் கொடுப்பதைவிட, பராமரிப்புக்கு கொடுத்து வருடாவருடம் சென்று கண்காணிப்பது, அப்போதைய சட்டப்பிரகாரம் மாற்றங்களை செய்யலாம். ஆனா காணியில் பொது அதிகாரம் கொடுப்பது, வினையை விலைக்கு வாங்குவது போலாகும். இன்றைய உலகில் நம்பிக்கைக்குரியவர் என்று யாருமில்லை. சொந்தச் சகோதரங்களையே நம்ப முடியவில்லை, மற்றவரை ஏவி காரியம் சாதிக்கிறார்கள். "உயிரோடு போகாத நட்பு, சில பொருளோடு உறவாட கெடும்." என்பார்கள்.

தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா? 

1 day 21 hours ago
இதைக்கூறுவதற்கு தமிழரசுக் கட்சி மீதான மிகுந்த வக்கிரமும், காழ்ப்புணர்ச்சியும் இருக்கும் ஒருவரால்த்தான் முடியும். அல்லாவிட்டால், அக்கட்சியின் அனைத்துச் செயறபாடுகளும் உசுப்பேற்றும், தீண்டிவிடும், உணர்வூட்டிவிடும் வெறும் இனவாத நடவடிக்கைகள் தான் என்று நீங்களும், நீங்கள் மேற்கோள் காட்டும் உங்களது முகாமின் உறுப்பினர்களும் எழுதப்போவதில்லை. அப்படிக் கூறிவிட்டு, உங்களின் முகம் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியவுடன் இப்படி எழுதுகிறீர்கள். உண்மையைக் கூறி எழுதுங்கள். ஏன் இவ்வளவு சிரமம்? நான் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவன். இலங்கையின் ஒற்றையாட்சியை நேசிப்பவன். சிங்கள இடதுசாரிகள் எனும் போர்வையில் உலாவரும் பேரினவாதிகளை ஆதரிப்பவன். அதற்காக தமிழ்த் தேசியத்தை ஆதரித்தவர்களை, தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுத்தவர்களை, தமிழரின் பிரதேச நலன்கள் குறித்து செயற்படுபவர்களை என்னால் முடிந்தவரையில் விமர்சித்துச் சிறுமைப்படுத்துவேன் என்று வெளிப்படையாகவே கூறுங்கள். உங்களைப்போல இன்னுமொருவர் முன்னர் இங்கு உலாவந்தார். துல்பேன் எனும் பெயரில் விமர்சனம் எழுதிய அவரும் உங்களின் கருத்துக்களையே முன்வைத்து வந்தார். அவரும் உங்களின் முகாமிலிருந்து வருபவராக இருக்கலாம்.

புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?

1 day 21 hours ago
https://www.icta.lk/media/news/land-registry03 Feb 2021 Land registration goes digital 03 Feb 2021 The first phase of digital land registration process has been initiated at the Colombo Land Registry, will be rolled out across 45 land registries island wide by the end of this year. The e-Land Registry software for this purpose was officially launched at the Land Registration Office in Colombo on the 4th. This new software will replace the manual registration procedure for lands and properties. This was initiated under the e-Land Project with the objective of enhancing the Ease of Doing Business in Sri Lanka under the guidance of the Cabinet appointed Property Registration Task Force. This project has been launched with the implementation support of the Information and Communication Technology Agency of Sri Lanka (ICTA). Registrar General's Department was established in 1864 and its primary function was to register public immovable property on a priority basis. Accordingly, legal documents handwritten and certified by notaries are registered at the Land Registries in the country. This new computer process is expected to ensure the efficiency as well as security of the above services. This will also provide many facilities to the public. The shortcomings of the existing system can be minimized and digital documents can be obtained in the future. This minimizes decay and helps to quickly verify the identity as well as prevent it from falling prey to middlemen. It also aims to strengthen the overall economy by raising the Ease of Doing Business Index in Sri Lanka and encouraging domestic and foreign investments. Hon. Chamal Rajapaksa, State Minister of Defense, Home Affairs and Disaster Management, Secretary to the Ministry, Retired Gen. Kamal Gunaratne, Acting Registrar General, KG Dharmathilaka, Chief Executive Officer, Information and Communication Technology Agency, Engineer, Mahinda B. Herath, Director Legal, Jayantha Fernando, Director Programs, Kanchana Thudugala, Program Head, Gavashkar Subramanium and others were present at this occasion. 😁

தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா? 

1 day 21 hours ago
எதிர்காலத்தில் ஜே. ஆரும் அதுலத் முதலியும் நல்லவர்களாக யாழ் களத்தில் இட்டுக்கட்டப்படுவர் என்பதை அண்ணல் ஐலன்ட் அவர்கள் சூசகமாக அறிவிக்கிறார், மா மக்களே!

"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS"

1 day 21 hours ago
காரணம் விளக்கமாகத் தரப்பட்டுள்ளது. [நான் 'திராவிடம்' என்னும் வார்த்தையை இங்கு தமிழ் / தமிழம் என்பதற்கான மாற்றுச்சொல் - தமிழக, ஆந்திர, கருநாடக, கேரளப்பகுதிகளை உள்ளடக்கிய தென்னாடு - போன்ற கருத்துக்களில் மட்டுமே பாவிக்க உள்ளேன் ,அதாவது திராவிடம் என்பது, தமிழக, ஆந்திர, கருநாடக, கேரளப்பகுதிகளை உள்ளடக்கிய தென்னாடும் அம்மக்களின் மொழியும் ஆகும் என்ற ஒரு பொது கருத்தில் மட்டுமே பாவிக்க உள்ளேன் .............. மற்றும் பல விபரம் கொடுக்கப்பட்டுள்ளது] மற்றது தமிழினத்திற்கு மட்டும் திராவிட போர்வை கொடுக்கப்படவில்லை இரண்டாவது பிரான்ஸ்காரன் டென்மார்க்காரன் ஆங்கிலேயன் ரஷ்யாக்காரன் உக்ரேனியன் இவர்களை எல்லாம் ஒன்றாக சேர்த்துக் குறிப்பிடும் பொழுது இந்தோ ஐரோப்பிய மக்கள் (Indo-Europeans) என்றே அழைக்கப்படுகிறது மேலும் ஆதி இந்தோ ஐரோப்பிய மக்கள் (Proto-Indo-Europeans) என்று அழைக்கும் பொழுது அது பனி யுகத்தின் முடிவில் கி மு 4,000இல் அல்லது அதற்கு சிறிது காலத்திற்கு முன்னர் வாழ்ந்த இனக் குழுக்கள் ஆவர். இவர்கள் எழுத்து வடிவம் இல்லாத ஆதி 'ஆதி இந்தோ ஐரோப்பிய மொழிகளை' பேசினர். அதாவது இங்கு ஆரியரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர் மற்றும் படி, தனித்தனி அழைக்கும் பொழுது, நீங்கள் கூறியவாறே அப்படியேதான் இந்த திராவிட சொல்லாடலும் அதாவது தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ... இப்படி ஒன்றாக அழைக்கும் பொழுது மட்டுமே திராவிட குடும்பம் என்று அழைக்கப்படுகின்றனர் மற்றும் படி தனித்தனியவே அகழாய்வு, மொழி ஆய்வு, மரபணு ஆய்வு, வரலாற்று ஆய்வு ஆகியவற்றின் அடிப்படையில் சிந்துச் சமவெளிப் பகுதியில் பேசிய மொழி எந்த மொழியாக இருக்கலாம் என்ற ஆய்வைச் செய்திருக்கிறார் பெங்களூரைச் சேர்ந்த பஹதா அன்சுமாலி முகோபாத்யாய [Bahata Ansumali Mukhopadhyay]. இது தொடர்பாக இவர் எழுதிய Ancestral Dravidian languages in Indus Civilization: ultraconserved Dravidian tooth-word reveals deep linguistic ancestry and supports genetics என்ற ஆய்வுக் கட்டுரை நேச்சர் க்ரூப் ஆய்விதழில் [nature - humanities and social sciences communications] ஆகஸ்ட் 3ஆம் தேதி 2021 [03 August 2021] வெளியாகியுள்ளது. அவரிடம், சிந்து சமவெளியில் பேசிய மொழியை ஏன் தொல் திராவிட மொழி எனக் குறிப்பிட வேண்டும்; திராவிட மொழிகளிலேயே பழைய மொழியான தமிழ் என்று அதனைக் குறிப்பிட முடியாதா என [பஹதாவிடம்] கேட்டபோது, "சிந்துச் சமவெளிப் பகுதியில் பேசியிருக்கக்கூடிய ஒரு மொழியை 'தொல் திராவிட மொழி' என்று குறிப்பிடுகிறோம். தற்போது பேசப்படும் திராவிட மொழிகளில் [தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ... ] உள்ள பல தொன்மையான சொற்கள் அந்த மொழியில் இருக்கும். ஆனால், அந்த மொழி, தற்போது பேசப்படும் எந்த ஒரு மொழியாகவும் இருந்திருக்காது. ஆகவேதான் அதனைத் தொல் திராவிட மொழி என்கிறோம்" என்று விளக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான நிலைகளை விளக்கவும் திராவிடம் என்ற ஒரு போது சொல் பாவனைக்கு வந்ததாகவும் இருக்கலாம் ? நன்றி
Checked
Mon, 04/29/2024 - 19:21
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed