3 months 3 weeks ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 43 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 43 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'தேவி அரண்மனையில் வசிக்கத் தகுதியற்றவள் என்றால், அவளுடைய குழந்தைகள் அங்கே தங்குவதற்கு எப்படித் தகுதியானவர்கள்?' உச்சைன் (உஜ்ஜைன் / Ujjain) மத்திய இந்தியாவின் மால்வாப் பகுதியில் அமைந்துள்ள பழைய நகரமாகும். இதனை உஞ்சேனை என்று திருநாவுக்கரசர் தேவாரத்திலும் உஞ்சை எனத் தமிழ்ப்படுத்திப் பெருங்கதை என்னும் நூல் வழங்குகிறது. 'உஞ்சேனை மாகாளம், ஊறல், ஓத்தூர், உருத்திரகோடி, மறைக்காட்டுள்ளும், மஞ்சு ஆர் பொதியில் மலை, தஞ்சை, வழுவூர்-வீரட்டம், மாதானம், கேதாரத்தும்,' [திருநாவுக்கரசர் தேவாரம்] இன்றைய மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இது சிப்ரா ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. உஜ்ஜையினி என்னும் பெயரில் இந்நகரம் பற்றிய குறிப்பு புத்தர் காலத்திலிருந்தே கிடைக்கிறது. அக்காலத்தில் இது அவந்தி நாட்டின் தலைநகரமாக இருந்தது. பிற்காலத்தில் மௌரியப் பேரரசனான அசோகர் மௌரியப் பேரரசின் மேற்கு மாகாண இராஜப்பிரதிநிதியாக [viceroy] இருந்தபோது உஜ்ஜயினியிலேயே வாழ்ந்தான். அப்பொழுது உஜ்ஜேனியில் வசூல் செய்யும் பொறுப்பு இளவரசர் அசோகரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் அங்கு, தேவி என்ற ஒரு சேத்தி [Setthi [wealthy merchant] / பண்டைய படிநிலை இயல்பு கொண்ட நான்கு சமூகப் பிரிவுகளுள் ஒன்றான, வைசியர் பிரிவில் வணிக சமூகத்தை சேர்ந்தவள் இவள்] பெண்ணைச் சந்தித்தார். அவர்கள் ஒன்றாக அங்கு வாழ்ந்தனர். இவர்களுக்கு மகிந்த என்ற மகனும், சங்கமித்தா என்ற மகளும் பிறந்தனர். மகிந்தவும் சங்கமித்தாவும் தங்கள் தந்தையுடன் பாடலிபுத்திரத்தில் உள்ள அரண்மனைக்கு சென்றனர், என்றாலும் தாய் தேவி அங்கு போக முடியவில்லை. தேவி வணிக சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், எனவே, அரண்மனையில் வசிக்கத் தகுதி அற்றவர் என்றும் கருதப் பட்டது என்று கூறப்படுகிறது. அது ஒரு சரியான காரணம் என்றால், கட்டாயம் மகிந்தவும் சங்கமித்தாவும் கூட அரண்மனையில் இருக்க தகுதியற்றவர்கள் ஆகும். மகிந்தவின் பிறந்த ஆண்டு புத்தர் இறந்து இருநூற்று நான்கு ஆண்டுகள் எனவும், [6-20. Two hundred years and four years more had elapsed: just at that time Mahinda, the son of Asoka, was born.] மற்றும் சங்கமித்தா இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு என்றும் கூறப்படுகிறது. சில மூலங்களின்படி சங்கமித்தை மற்றும் மகிந்த, இரட்டைப் பிள்ளைகள் ஆவார்கள். சுமார் இரண்டாயிரத்து இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழந்தை பிறந்த ஆண்டை துல்லியமாக சுட்டிக்காட்டுவது கட்டாயம் சாத்தியமில்லை. சங்கமித்தா விடயத்திலும் அப்படித்தான். அறிஞர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் மகிந்தவையும் சங்கமித்தாவையும் கற்பனையான நபர்களாகக் கருதுகின்றனர். மகிந்த மற்றும் சங்கமித்தா, அசோக மன்னனின் மகன் மற்றும் மகள் என்று எந்த இந்திய ஆதாரங்களிலும் குறிப்புகள் இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. புத்தர் இறந்து இருநூற்று பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அசோகரின் முடிசூட்டு விழா நடந்தது என்ற கூற்று இலங்கை வரலாற்றில் மட்டும் காணப்படுகிறது. இதை பொதுவாக நீண்ட பாரம்பரியம் அல்லது தெற்கு பாரம்பரியம் [Long Tradition or Southern Tradition] என்று அழைக்கப்படுகிறது. என்றாலும் புத்தர் இறந்து நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இது நடந்ததாக, புத்தர் பிறந்து, வளர்ந்து இறந்த இந்தியாவின் ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. இது வடக்கு பாரம்பரியம் அல்லது குறுகிய பாரம்பரியம் [Northern Tradition or Short Tradition] என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலேய அரசு ஊழியர் ஜோர்ஜ் டேனர் அல்லது ஜோர்ஜ் டர்னர் [George Turnour] கி பி 1837 இல் மகாவம்சத்தை மொழிபெயர்த்தார். மேலும் அவரது செல்வாக்கு, அன்று இலங்கையின் இருநூற்று பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னுரிமை அளித்து, நூறு ஆண்டுகள் என்ற இந்தியர்களின் வரலாற்றுக் குறிப்பை பின் தள்ளியது. புத்தரின் மரணம் ஜோர்ஜ் டர்னரால் முதலில் கிமு 543 என்று ஊகிக்கப்பட்டது. என்றாலும் இந்திய பாரம்பரியத்தைப் பின்பற்றினால், புத்தரின் மரணம் கிமு 369 இல் நிகழ்ந்திருக்க வேண்டும். மேலும் இந்த அத்தியாயமும் இலங்கையில் நடந்த எந்த மனித வரலாற்று நிகழ்வுகளையும் பற்றியது அல்ல. Part: 43 / Appendix – Dipavamsa / 'If Devi ls unfit to reside in the palace, How her children fit to stay there?' Prince Asoka was entrusted with the collection of revenue in Ujjeni. He met a Setthi (Vaisya- trading community) lady named Devi, and, they cohabited. A son, Mahinda, and a daughter, sanghamitta, were born to them. Mahinda and sanghamitta moved with their father to the palace in Pataliputra, but not the mother, Devi. It is cited that Devi belonged to trading community and, therefore, not considered fit to reside in the palace. If that is a sound reason then Mahinda and sanghamitta too unfit to be in the palace. Mahinda’s year of birth is given as two hundred and four years after the death of the Buddha, 6-20, and sanghamitta two years later. This exact pinpointing of the year of birth of a child about two thousand two hundred and fifty years ago is not possible. Same is the case with sanghamitta. Some members of the scholarly community consider Mahinda and sanghamitta as fictitious persons. There are no references to Mahinda and sanghamitta as the son and the daughter of the King Asoka in any Indian sources. The statement that Asoka’s coronation took place two hundred and eighteen years after the Buddha’s death is from the Ceylonese chronicles only. This is the Long Tradition or Southern Tradition. The Indian sources indicate that it took place one hundred years after the Buddha’s death. This is the Northern Tradition or Short Tradition. The English civil servant George Turnour translated the Mahavamsa in 1837 A. D. and his influence overshadowed the Indian one hundred years in preference to the Ceylonese two hundred and eighteen years. The Buddha attained Nirvana in 543 B. C. based on this Ceylonese tradition. As per Indian tradition, the Buddha’s death would have occurred about 369 B. C. See the Appendix-Mahaparinirvana of the Buddha for more information. This chapter 6 is also not about any human historical events that took place in Lanka. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 44 A தொடரும் / Will follow துளி/DROP: 1897 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 43 https://www.facebook.com/groups/978753388866632/posts/32313646158283946/?
3 months 3 weeks ago
ஆழ்ந்த இரங்கல்கள் ........!
3 months 3 weeks ago
இங்கே மன்னிப்பு கேட்கவில்லை வலி தீரவில்லை காலில் விழவில்லை என்று..,..... தமிழர்கள் மீதும் தலைமை மீதும் சேறு பூசிக் கொண்டே இருப்பவர்கள் நிச்சயமாக வாசிக்க வேண்டிய கட்டுரை. நன்றி.
3 months 3 weeks ago
3 months 3 weeks ago
21ஆம் திகதி பேரணியில் என்னால் கலந்து கொள்ள முடியாது – மஹிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கத்துக்கு எதிராக 21 ஆம் திகதி எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி பங்கேற்காததற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாகக் கூறியுள்ளார். தங்காலையில் தினமும் தன்னைப் பார்க்க வரும் மக்களைத் தவறவிட முடியாது என்பதாலும், தங்காலையில் இருந்து நுகேகொடை வரை பயணம் செய்வதில் கூடுதல் நேரத்தைச் செலவிட வேண்டியிருப்பதாலும் நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். இருப்பினும், அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த போராட்டப் பேரணியில் தனக்கு எந்த வெறுப்பும் இல்லை என்றும், அதில் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறினார். இந்த நிகழ்வில் தான் பங்கேற்காதது சிலரால் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம் என்று மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளார். இருப்பினும், 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறும் கூட்டத்திற்கு மக்களைத் திரட்டும் நோக்கில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ நேற்று (10) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் ஒரு கலந்துரையாடலை நடத்தினார். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய நாமல் ராஜபக்ஷ, எதிர்க் கட்சிகளால் நுகேகொடையில் நடைபெறும் கூட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார். வரவிருக்கும் கூட்டத்தை வெற்றிகரமாக்கவும், கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைக்க தேவையான வேலைத்திட்டம் குறித்து விவாதிக்கவும் தான் வந்ததாக அவர் கூறினார். https://athavannews.com/2025/1452470
3 months 3 weeks ago
யாழில் உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி நீண்டகால சமூகப் பிரச்சினைகள் மற்றும் சவால்களின் பின்னர் மீள்நிலைக்குத் திரும்பி வருகின்ற வட மாகாணத்தில் விளையாட்டுக்களை ஊக்குவிப்பதற்காகவும், விளையாட்டுக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் மிகவும் முக்கியமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்காக, பாடசாலைகளிலும் விளையாட்டுக் கழகங்களிலும் மேசைப் பந்து, டென்னிஸ், பூப்பந்து, வலைப்பந்து மற்றும் சதுரங்கம் போன்ற உள்ளக விளையாட்டுக்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, 170 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டுச் செலவில் குறித்த வசதிகளுடன் கூடிய யாழ்ப்பாண உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmhuagsup01irqplpva6b2mje
3 months 3 weeks ago
நியாயமான மக்களின் தேவைகளை புரிந்து செயல்படுதல் நல்ல நிர்வாகத்துக்கு அழகு . ........! 👍
3 months 3 weeks ago
அம்பாறை மேல் நீதிமன்றத்தில் 06 பேருக்கு எதிராக மரண தண்டனை! அம்பாறை மேல் நீதிமன்றம் இன்று (10) 6 பேருக்கு எதிராக மரண தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள 6 குற்றவாளிகளுக்கு எதிராக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த 6 பேரும் கெஹலஉல்ல பகுதியில் லொறி ஒன்றில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பிரதேச மக்கள் இருவரைத் தாக்கி, பின்னர் அவர்கள் மீது லொறியை ஏற்றிக் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்தும் இடம்பெற்று வந்த நிலையில் அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து குறித்த 6 பேருக்கும் அம்பாறை மேல் நீதிமன்றம் மரண தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது. Athavan Newsஅம்பாறை மேல் நீதிமன்றத்தில் 06 பேருக்கு எதிராக மரண தண்டனை!அம்பாறை மேல் நீதிமன்றம் இன்று (10) 6 பேருக்கு எதிராக மரண தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பி
3 months 3 weeks ago
உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பம்! இம்முறை உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகப் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர (க.பொ.த) உயர்தரப் பரீட்சை இன்று (10) ஆரம்பமான நிலையில், டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் இன்று வெற்றிகரமாக ஆரம்பமான நிலையில், இது தொடர்பாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே இதனை தெரிவித்துள்ளார். இன்று குறித்த நேரத்தில் பரீட்சை ஆரம்பமானதுடன் நாட்டிலுள்ள அனைத்துப் பரீட்சை நிலையங்களிலும் எவ்விதத் தடங்கலும் இன்றிப் பரீட்சை வழமைபோல நடைபெற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பரீட்சை முடிவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்க தற்போது நாங்கள் திட்டங்களைத் தயாரித்துள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1452437
3 months 3 weeks ago
மன்னிப்புக் கோரல் எல்லோருக்கும் பொதுவானதுதானா? லக்ஸ்மன் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகள் தங்களை அறிவித்திருந்த காலத்திலேயே அவர்கள் தாங்கள் செய்த தவறுகளுக்கா மன்னிப்புக்கள் கோரியிருந்தனர். அவற்றுக்கான காரணங்களையும் கூறியிருந்தனர். அதை அடையாளம் காண்பதில் தவறுகள் நிகழ்ந்தனவா? அதே நேரத்தில், பிராயச் சித்தங்களையும் செய்திருந்தனர் என்றே கொள்ள வேண்டும். ஆனால், அரசாங்கமோ, ஏனைய தரப்புகளோ தங்களால் கவனமாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தவறுகளுக்காக கூட இதுவரை மன்னிப்புக் கோரவில்லை. அதற்குப் பதிலாக நியாயப்படுத்தல்களை செய்து வருகின்றனர். அத்துடன், மூடி மறைக்க முயல்கின்றனர். மௌனமாக இருந்திருக்கின்றனர். இந்த நேரத்தில் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கு தமிழர்களின் மன்னிப்புக் கோரல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமராக இருந்த காலத்தில் அவருக்கும் இலங்கையின் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தினால் அமைதிப்படையாக நாட்டுக்குள் வந்த இந்திய இராணுவம் வடக்கு - கிழக்கில் மேற்கொண்ட அட்டூழியங்கள் கணக்கிலடங்காதவை. அவை தொடர்பில் இந்திய அரசாங்கம் மன்னிப்பு கோருவதை விடுத்து மீண்டும் வடக்கு கிழக்குக்கு இராணுவத்தை அனுப்பி இலங்கை அரசாங்கத்திற்கு உதவி செய்யவே ராஜீவ் காந்தி திட்டமிட்டிருந்தார். அதனால் அவர் தமிழ்நாட்டின் சிறிபெரும்புத்தூரில் தேர்தல் பிரசாரத்தில் இருந்தபோது, விபரீதம் நிகழ்ந்தது.நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் சமாதான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்திய ஊடகவியலாளர் ஒருவர் ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பாக கேட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரபாகரன் அது ஒரு துன்பியல் சம்பவம் எனக் கூறியிருந்தார். இந்தப் பதிலை அதற்கான மன்னிப்புக் கோரலாகவே அவர் வெளிப்படுத்தியிருந்தார் எனலாம்.விடுதலைப் புலிகள் சகோதர இயக்கங்கள் மீதான விரோத, எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்த காலங்களில் சகோதரப் படுகொலைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தன. இதனால் பல கொடுமைகளும் நிகழ்ந்தன. ஆனால், 2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கொள்கையுடன் இருந்த சகோதர இயக்கங்கள், அமைப்புகளை இணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியிருந்தனர். அந்தக் கூட்டமைப்பினை தமிழ் மக்களின் அரசியல் தரப்பாகவும் வெளிப்படுத்தியிருந்தனர். அந்தக் கூட்டமைப்பை இலங்கைத் தமிழரசுக் கட்சி கவனமாகத் திட்டமிட்டுக் குலைத்து விட்டிருப்பது வேறு கதை. அதன் பின்னர் முஸ்லிம் மக்கள் தொடர்பான விடயத்தில், வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை குறித்து. இருந்த பிரச்சினைகள், குழப்பங்கள், தவறுகளுக்காகச் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் பேச்சுக்களை நடத்தி உடன்பாடுகளை ஏற்படுத்தி அதற்கான பரிகார நடவடிக்கைகள் எடுத்திருந்தார். இப்போது வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தை தூக்கிப்பிடித்து பெரிதாக்கி நாட்டில் இருக்கின்ற தமிழ் - முஸ்லிம் மக்களின் உறவு நிலையினைக் குழப்பி நல்லிணக்கத்திற்குப் பங்கத்தினை ஏற்படுத்த முனையும் சிலர் தேவையானவற்றை விடுத்து வேறு விடயங்களைத் தூக்கிப்பிடித்து பிழைகளை மூடி மறைக்க முனைவதாக சொல்லாம். இலங்கை அரசாங்கங்களைப் பொறுத்தவரையில் இதுவரை ஆட்சியில் இருந்த எந்த அரசாங்கமும் தங்களது பிழைகள் குறித்து எந்த இடத்திலும் மன்னிப்புக் கோரவில்லை. அதே நேரத்தில், அதற்கான நியப்படுத்தல்களையும் மூடி மறைத்தல்களையுமே மேற்கொண்டு வந்திருக்கிறது. இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் தங்களுக்கான சுயநிர்ணய உரிமைக்காக அறம், அகிம்சை, ஆயுதம், இராஜதந்திர ரீதியாக போராடி வருகின்ற இனத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்ற தோரணையில் அரசாங்கம் நடந்து வருகிறது. இது உண்மையில் பாரபட்சமே. உலகின் அனைத்து நாடுகளும் பாராமுகமாகவும், அறியாத விடயம் போலவும் இருப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் பிரதிபலிப்புகளும் வெளிப்படுத்தல்கள் மட்டும் காரணமல்ல. அவர்கள் தங்களது நாட்டுக்கான இராஜதந்திர செயற்படுத்தலைச் சிறப்பாக மேற்கொள்கின்றனர் என்பதே முக்கியமாகக் கவனிக்க வேண்டியதாகும். ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடர்கள் நடைபெறுவதும், மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் நடப்பதும். மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கைகளை வெளியிடுவதும் ஏதோ கண் துடைப்புகள் போலவே இருந்து வருகின்றன. இறுதியில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் அவற்றினால் எதுவும் நிகழ்வதில்லை என்றே கொள்ள முடிகிறது. கால இழுத்தடிப்பு மாத்திரமே நடைபெற்று வருகிறது.யுத்தம் முடிவுக்கு வந்து 16 வருடங்கள் கடந்த பின்னரும் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படும் என்ற காட்சிப்படுத்தல்கள் மட்டுமே வெளிப்படுத்தப்படுகின்றன. இருந்தாலும் அதற்கான பெறுபேறுகளைக் காணவில்லை. இதற்கிடையில் சர்வதேச நிறுவனங்கள் நாட்டுக்குள் வேறு குழப்பங்களையும் ஏற்படுத்துவதற்கான வேலைகளைச் செய்து வருகின்றன. அதே நேரத்தில், நாட்டிற்குள் நிலை பேறான அபிவிருத்தி, சமூக நல்லிணக்கம், சமாதானத்தை மேம்படுத்தல், சமூகங்களை வலுப்படுத்தல், நிலை பேறான மீள்குடியேற்றம் போன்ற பல செயற்திட்டங்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இன்னமும் அவை நிறைவுக்கு வராதவைகளாகவே இருக்கின்றன. நல்லிணக்கம், இனங்களுக்கு இடையிலான நல்லுறவு, மத ரீதியான முரண்பாடுகள் பற்றிய எண்ணக்கருக்கள் போன்றே சமாதானம் மற்றும் மோதல் தீர்வு பற்றிய தலைப்புகள் என்பன அரச சார்பற்ற நிறுவனங்கள் மட்டத்தில் உள்ள ஜனரஞ்சகமான பிரகடனங்கள் மற்றும் செயற்றிட்டங்களாக அமைகின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் அதிகாரத்துக்கு வரும் அரசுகள் மூலம் இவ்வாறான விடயங்கள் முன்னிலைக்கு எடுத்து விடப்படுகின்றன. இருந்தாலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் தாமதங்களே ஏற்படுகின்றன. அதற்குத் தொடர்ச்சியற்ற தன்மையும், இடையீடுகளுடனான சிக்கல்களும் காரணமாகும். இந்த நிலையில்தான், வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் 35ஆம் ஆண்டு நினைவாக, தமிழ்மு ஸ்லிம் நல்லிணக்கம் மற்றும் இணைந்த வாழ்வை வலியுறுத்தும் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்துக்கான நிகழ்வுகள் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடத்தப்பட்டிருக்கின்றன. நல்லிணக்கத்தை மீளக் கட்டியெழுப்பும் வரலாற்றுப் பொறுப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த வகையான நிகழ்வுகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்திருக்கின்றனர். யூத அமைப்பொன்றிடமிருந்தும் நிதியைப் பெற்று வரும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவானது அவ் அமைப்பின் அறிவுறுத்தலின் அடிப்படையில், இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருப்பதாகவே அறியமுடிகிறது. இந் நிகழ்வுகள் வடக்கில் மன்னிப்புக் கோரலாகவும் கிழக்கில் நீதிக்கும் மனித உரிமைக்கான குரலை இணைக்கும் வகையில் கலந்துரையாடலாகவும் நடத்தப்பட்டிருக்கின்றன. இவ்வாறான செயற்பாடுகளை ஏன் இந்த வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு இந்த வேளையில் மேற்கொள்ள வேண்டும் என்ற கேள்வி இந்த இடத்தில் உருவாகிறது. இதற்கு நிதி வழங்கும் நிறுவனத்தின் அறிவுறுத்தலே காரணமாகும். இலங்கையின் கிழக்கின் அம்பாறை மாவட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம்கள் எதிர்ப்பு நிலைப்பாட்டுடன் இருந்து வருகின்றனர். இந்தச் சிக்கலைத் தனித்து வேறு ஒரு திசையில் அவர்களைத் திருப்பி விடுவதற்காகத் தமிழர்கள் பக்கமாகத் திசை திருப்பிவிடுவது முதல் காரணமாக இருக்கலாம். அத்துடன், மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் மனித உரிமைகள் பேரவை தீர்மானத்திற்கு மாற்றான சர்வதேச தலையீடற்ற செயற்பாட்டை ஊக்குவிப்பதற்கான உதவி முயற்சியாகவும் இருக்கலாம். சிலவேளைகளில் அரசாங்கத்தை இஸ்ரேலியர்களின் செயற்பாடுகளுக்கு உதவக்கூடியதாக மாற்றுவதற்காக இருக்கலாம் என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. உண்மையில் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் இந்த வெளியேற்றத்தில் உள்ள நல்லவை, கெட்டவை என ஆரம்பத்திலிருந்து ஆராய்ந்து பார்த்தே அதற்கான முடிவுக்கு வந்தாக வேண்டும். வெறுமனே எழுந்தமானமாக நிகழ்ச்சித்திட்டங்கள் தேவை, நிதிகள் தேவை என்பதற்காக அரச சார்பற்ற அமைப்புகள் இவ்வாறான விடயங்களை கையிலெடுப்பது தவறாகும். இலங்கையில் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட தமிழர்களும், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும், அவர்களின் அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும், சிவில் செயற்பாட்டாளர்களும் எதிர்பார்க்கின்ற தீர்வானது நல்லிணக்கமாகவும் நீதியாகவும் அமைய வேண்டும். இல்லாது போனால், இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக வெளிப்படுத்திவருகின்ற உள்ளகப் பொறிமுறை ஏற்பாட்டை அனைவரும் ஏற்க வேண்டிய நிலையே அனைவருக்கும் ஏற்படும். அதனைத் தவிர ஒன்றுமில்லை. இவ்வாறிருக்கையில் தான் மன்னிப்புக் கோரல் எல்லோருக்கும் பொதுவானதா அல்லது பாதிக்கப்பட்ட, அடக்கப்பட்ட தரப்புக்கானதா? என்ற கேள்வி தோன்றும். அது மன்னிப்பு கோர வேண்டியவர்கள் அதற்குத் தயாரா? இல்லையானால் இந்தக் கேள்விக்கான பதிலை யாரிடமிருந்து எதிர்பார்ப்பது என்பதாக தமிழர்கள் பக்கம்தான் மாறி நிற்கும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மன்னிப்புக்-கோரல்-எல்லோருக்கும்-பொதுவானதுதானா/91-367720
3 months 3 weeks ago
ஈழப்பிரியன், போலி வங்கி ஒன்றையே நடத்தி இருக்கின்றார்கள். 😂
3 months 3 weeks ago
சத்தீஸ்கரில் எஸ்.பி.ஐ. பெயரில் போலி வங்கிக் கிளை நடத்திய கும்பல் - உண்மை வெளிப்பட்டது எப்படி? சத்தீஸ்கரில் உள்ள பன்பராஸ் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி யாதவ் கடந்த வாரம் வரை 'ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா - சப்போரா கிளை' என்றழைக்கப்பட்ட ஒரு வங்கிக் கிளையில் பணியாற்றி வந்தார். ஆனால், அது உண்மையில் வங்கியே இல்லை என்பதை அவரால் இன்னும் நம்ப முடியவில்லை. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் அதிகாரிகள் சிலர் போலீஸாருடன் அந்த வங்கிக் கிளைக்கு வந்தபோதுதான், ஜோதிக்கு அந்த வங்கியின் நிர்வாகக் குழுவில் இருந்து, வங்கி ஊழியர்கள், தனது பணி நியமனக் கடிதம் என அனைத்தும் போலி என்பது தெரிய வந்தது. சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 200கி.மீ. தொலைவில் உள்ள சக்தி மாவட்டத்தில் உள்ள சப்போரா கிராமத்தினர் இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த வழக்கில் அனில் பாஸ்கர் என்ற நபரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். அவரது கூட்டாளிகள் 8 பேரைத் தேடி வருகின்றனர். ‘எஸ்.பி.ஐ கிளையை’ பார்த்து மகிழ்ந்த மக்கள். சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு சப்போரா கிராமத்தில், 'ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா' பெயரில் புதிய கிளை திறக்கப்பட்டதும், அக்கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இனி வங்கிப் பணிகளுக்கு வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை என அவர்கள் நினைத்தனர். ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. கடந்த வாரம், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அதிகாரிகளும், போலீசாரும் இணைந்து அந்த வங்கியில் சோதனை நடத்திய போது, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பெயரில் திறக்கப்பட்ட இந்த வங்கி முற்றிலும் போலியானது என்ற விஷயம் தெரிய வந்தது. சப்போரா கிராமத்தைச் சேர்ந்த அஜய் அகர்வால், தங்கள் கிராமத்துக்கு பாரத ஸ்டேட் வங்கியின் ‘கியோஸ்க்’ வேண்டும் என விண்ணப்பித்திருந்ததாகக் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cgj4wg1nzy5o
3 months 3 weeks ago
டெல்லி குண்டு வெடிப்பில் 13 பேர் பலி – கார் உரிமையாளர் கைது! புதுடெல்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலையில் சாலையில் சென்ற கார் பலத்த சப்தத்துடன் வெடித்து சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர். வெடிவிபத்து ஏற்பட்ட “ஹுண்டாய் ஐ-20′ காரின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இது பயங்கரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். அவர்களின் புலனாய்வுக்கு தேசிய பாதுகாப்புப்படையினரும் தேசிய புலனாய்வு அதிகாரிகளும் உதவி வருகின்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்திய தலைநகர் டில்லி உள்பட நாடு முழுவதும் உச்சபட்ச பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டில்லியில் நெரிசல் மிக்க செங்கோட்டைப் பகுதியிலிருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் உள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே திங்கள்கிழமை இரவு 7 மணி அளவில் மெதுவாக சென்ற கார் பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. அந்தக் காரில் பயணிகள் இருந்ததாகவும், கார் வெடித்ததில் அருகில் இருந்த வாகனங்களும் கடும் சேதமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் இடத்துக்கு 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று இரவு 7.29 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், ஆறு கார்கள், இரண்டு ரிக்ஷாக்கள், ஒரு ஆட்டோவும் தீயில் எரிந்து நாசமாகியதாகவும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். வெடிப்பு நடந்த இடத்தில் உடல் பாகங்கள் சிதறிக் கிடப்பதை கண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். விசாரணை: சம்பவ பகுதியில் தேசிய புலனாய்வு முகமையின் (என்.ஐ.ஏ) குழுவினர் விசாரணை நடத்தினர். தேசிய பாதுகாப்புப் படையினரும் சம்பவ பகுதியில் இருந்து மாதிரிகளை சேகரித்துச் சென்றனர். தடயவியல் நிபுணர்கள் தனியாக சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். காவல் துறையின் சிறப்புப்பிரிவினர் இறந்தவர்களை அடையாளம் காணும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். காவல் ஆணையர் ஆய்வு: இந்நிலையில், டில்லி காவல்துறை ஆணையர் சதீஷ் கோல்ச்சா சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சருடன் உடனுக்குடன் தகவல் பகிர்ந்து வருகிறோம். கார் வெடிக்கும் முன்பாக சிக்னலில் மெதுவாக அது நகர்ந்து கொண்டிருந்தபோது வெடித்ததாக தெரிய வந்துள்ளது. இது கார் வெடிகுண்டு தாக்குதலா என இப்போதைய சூழலில் தெரிவிக்க இயலாது’ என்றார். இந்தச் சம்பவத்தில் நெற்றிப்பகுதியில் காயமடைந்த ஒருவர் கூறுகையில், “எனது ஆட்டோவின் முன் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. அது திடீரென வெடித்தது’ என்றார். பலத்த பாதுகாப்பு: இந்தச் சம்பவத்தை தொடர்ந்து டெல்லியில் விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லியை அடுத்த ஹரியாணாவின் ஃபரீதாபாதில் காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவரின் வீட்டில் சுமார் 360 கிலோ அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் மற்றும் ஆயுதங்கள் திங்கள்கிழமை காலையில் கண்டுபிடிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு தில்லி செங்கோட்டை அருகே இந்த கார் வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. ஆனால், இரண்டு சம்பவங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளனவா? என்பதை கூற முடியாது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். பிரதமர் இரங்கல் அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சர் உத்தரவு: டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, கார் வெடிப்பு சம்பவ நிலவரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசினார். இதையடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் அமித் ஷா வெளியிட்டுள்ள காணொளியில் சம்பவம் குறித்து விரிவாக விளக்கினார். சம்பவ பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் புலனாய்வைத் தீவிரப்படுத்தவும் அனைத்து கோணங்களில் விசாரணை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார். சம்பவ இடத்தில் அமித் ஷா ஆய்வு: கார் வெடிவிபத்து நிகழ்ந்த செங்கோட்டை பகுதியில் ஆய்வு செய்த மத்திய அமைச்சர் அமித் ஷா, எல்.என்.ஜேபி மருத்துவமனைக்கு சென்று சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் மருத்துவர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பயங்கரவாதத் தாக்குதலா? இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்களின் உடலில் பெல்லட் என்ற சிறிய குண்டுகள் அல்லது சக்தி வாய்ந்த குண்டு வெடிப்புக்கான பாதிப்புகள் இல்லாததாலும், சம்பவ இடத்தில் குண்டு வெடிப்புக்கான வயர்கள் தற்போது வரை கிடைக்காததாலும் இது குண்டுவெடிப்பு சம்பவமாக உடனடியாக உறுதி செய்யப்படவில்லை என்று டில்லி காவல் துறை மூத்த அதிகாரி தெரிவித்தார். இந்தச் சம்பவத்துக்கு எந்தவித பயங்கரவாத அமைப்பும் இதுவரையில் பொறுப்பேற்கவில்லை. எனினும், அனைத்து கோணங்களிலும் மத்திய புலனாய்வு அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கார் உரிமையாளர் கைது வெடிவிபத்து ஏற்பட்ட “ஹுண்டாய் ஐ-20′ காரின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர் முன்னதாக, சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், “வெடிப்பு நிகழ்ந்த கார் ஹரியாணா மாநிலத்தின் பதிவெண் கொண்டிருந்தது. காரின் உள்ளே மூன்று பயணிகள் இருந்தனர்’ என்று தெரிவித்தார். இதையொட்டி, சல்மான் என்ற நபரின் பெயரில் கார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1452454
Checked
Tue, 03/03/2026 - 08:21
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed