3 months 2 weeks ago
பிரேமதாசாவுக்கு பின் வந்த ஜனாதிபதிகள் எல்லாரும் ஏதோ ஒரு சமயத்தில் 1983 பெரும் பிழை என ஏற்று கொண்டனர். எனவே தொடர்ந்து கறுப்பு ஜூலை என தமிழர் பிச்சைகாரன் புண்ணை நோண்டக்கூடாது. இப்படி செய்வது நஸ்ட ஈடு கிடைக்கும் என அங்கலாய்க்கும் புலம்பெயர் தமிழர் சிலரே. கள்ள கூட்டம் 😂. பிகு சில வார்த்தைகளை மாற்றி போட்டுள்ளேன்.
3 months 2 weeks ago
கக்கீம் மெளனத்தைக் கலைத்து கிடைத்த சந்தர்ப்பத்தில் தொடர்ந்தும் குளிர் காயாமல் தேசியத் தலைவருக்கும் இவருக்கும் இது பற்றி நடந்த கலந்துரையாடலும் தேசியத் தலைவருடன் செய்து கொண்ட ஒப்பந்தம் பற்றியும் வெளிப்படையாக பேச வேண்டும்.
3 months 2 weeks ago
அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் இலவசமாக காணி கொடுக்கும் என்று... எதிர்பார்க்கின்ற முஸ்லீம் கோஷ்டிதான் தொடர்ந்து சவுண்டு கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். உண்மையில் இவர்களுக்கும்... யாழ்ப்பாணத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது என்பதே உண்மை. திருட்டு கூட்டம்.
3 months 2 weeks ago
இன்று நடந்த போட்டியில் வஸ்சின்டன் சுந்தரின் பந்து வீச்சும் அருமை மட்டையடியும் அருமை.................மனதுக்கு பிடிச்ச வீரர் நல்லா விளையாடும் போது அது பெருத்த சந்தோசத்தை தருது மனதுக்கு..............................
3 months 2 weeks ago
பிச்சைக்காரன் புண்ணைப்போல இன்றளவும் இதனைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் மீளவும் அங்கு குடியேறுவதை இன்று தடுப்பது யார்? புலிகளா அல்லது தமிழர்களா? தாம் தமது சொந்த இடங்களில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருக்குமிடத்து அவற்றைக் காட்டி மீளவும் அங்கு வாழ்வதில் உள்ள சிக்கல் என்ன? இதனை யார் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்? பெருமளவு முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்திலும், மன்னாரிலும், வவுனியாவிலும் தற்போது வாழ்ந்து வரும்போது மீதமிருப்போர் மீளவும் தமது பகுதிகளில் வந்து வாழ்வதைத் தடுப்பது யார்? அல்லது புலிகள் மீது ஏதோ ஒரு விடயம் குறித்து விமர்சனம் வைக்கப்பட்டே ஆகவேண்டும் எனும் காரணத்திற்காக இப்பிரச்சினை இன்றுவரை எழுப்பப்பட்டு வருகிறதா? ஆம், புலிகள் வெளியேற்றினார்கள், தவறுதான், இன்று அவர்கள் இல்லை, தாராளமாகவே வந்து வாழலாமே? அதை விடுத்து அதே பல்லவியை ஆளுக்கொருவராக இன்றுவரை ஏன் மீட்டிக்கொண்டிருக்கிறீர்கள்? வாருங்கள், வந்து வாழுங்கள், எவர் உங்களைத் தடுப்பது?
3 months 2 weeks ago
மம்தானி மனைவியின் இஸ்லாம் உடை பற்றி ஆராய இன்னும் ஒருத்தனும் கிளம்பலையா? Ashroff Shihabdeen
3 months 2 weeks ago
2026 டி20 உலக கோப்பைக்கு இந்தியாவில் 5 மைதானங்கள் தேர்வு - இறுதிப்போட்டி எங்கே தெரியுமா? மொத்தமுள்ள 55 ஆட்டங்கள் இந்தியாவில் குறைந்தது 5 நகரங்களிலும், இலங்கையில் இரு இடங்களிலும் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அவ்வகையில் இந்தியாவில் அகமதாபாத், டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய 5 மைதானங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகள் இலங்கையில் உள்ள கொழும்புவில் நடைபெறும் என்றும் ஒரு வேளை பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் பட்சத்தில், இறுதி ஆட்டத்தை கொழும்புக்கு மாற்றவும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புக் கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. https://www.maalaimalar.com/news/sports/cricket/bcci-shortlists-5-cities-for-t20-world-cup-796228
3 months 2 weeks ago
அண்ணை, உண்டு கழித்த கோப்பிப்பழ விதையை சுத்தமாக்கி தான் பொடியாக்குவார்கள்! {யாழில ஒரு பெரும்புள்ளியை கண்டுபிடித்தாச்சி! ஒரு கப் கோப்பிக்கு 8000ரூபா(இந்திய) செலவளித்தால் பெரும்புள்ளி தானே?!}
3 months 2 weeks ago
இப்போது எப்படி இருக்கிறது காஸா? - போரின் பேரழிவை நேரில் கண்ட பிபிசி கட்டுரை தகவல் லூசி வில்லியம்சன் மத்திய கிழக்கு செய்தியாளர், காஸா 3 மணி நேரங்களுக்கு முன்னர் காஸா நகரை நோக்கி இருக்கும் கரையிலிருந்து காணுகையில் போரின் விளைவுகளை மறைக்க முடியாது. வரைபடங்கள் மற்றும் நினைவுகளிலிருந்து காஸா நகரம் அழிந்துவிட்டது. ஒருபுறம் பெயிட் ஹனூன் முதல் மறுபுறம் காஸா சிட்டி வரை தரை மட்டமாக ஒரே நிறத்தில் காட்சியளிக்கும் இடிபாடுகளே நினைவில் உள்ளன. இன்னும் தொலைதூரத்தில் நின்றுகொண்டிருக்கும் கட்டடங்களை தவிர, காஸா நகரில் நீங்கள் பயணிப்பதற்கோ அல்லது பல பத்தாயிர மக்களின் இருப்பிடங்கள் அமைந்திருந்ததற்கான அடையாளங்களை காண்பதற்கோ உங்களுக்கு எதுவும் இல்லை. போரின் ஆரம்ப வாரங்களில் இஸ்ரேலிய தரைப்படையினர் நுழைந்த பகுதிகளில் இதுவும் ஒன்று. இதையடுத்து, தங்களின் வலுவான பகுதிகளில் ஹமாஸ் மீண்டும் இணைந்ததால், இஸ்ரேலிய படையினர் பலமுறை திரும்பி வந்துள்ளனர். காஸாவிலிருந்து செய்தி நிறுவனங்கள் சுயாதீனமாக செய்தி சேகரிக்க இஸ்ரேல் அனுமதிப்பதில்லை. புதன்கிழமையன்று, பிபிசியை சேர்ந்த பத்திரிகையாளர்கள் உட்பட சிலரை காஸா முனையில் இஸ்ரேலிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்கு அழைத்துச் சென்றது. குறுகிய நேரம் நீடித்த இந்த பயணம் தீவிரமாக கட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது, இதில் பாலத்தீனர்களையோ அல்லது காஸாவின் மற்ற பகுதிகளையோ அணுக முடியவில்லை. செய்திகள் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே அவை ராணுவ அதிகாரிகளால் பார்க்கும் வகையில் இஸ்ரேலின் ராணுவ தணிக்கை சட்டங்கள் உள்ளன. எனினும் இந்த செய்தியாக்கம் மீதான தனது கட்டுப்பாட்டை பிபிசி உறுதி செய்தது. படக்குறிப்பு, காஸா நகரத்தின் கிழக்குப்பகுதியில் உள்ள ஷெஜையாவில் காணப்பட்ட இடிபாடுகள் நாங்கள் சென்றுவந்த பகுதியில் அழிவு எந்தளவுக்கு உள்ளது என இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் நாடவ் ஷோஷானியிடம் கேட்டபோது, "எங்கள் இலக்கு அதுவல்ல" என பதிலளித்தார். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது திருமணத்திற்காக எடுக்கப்பட்ட ஐயப்பன் கோவில் தங்கம் - சபரிமலை மோசடி புகாரின் முழு பின்னணி நியூயார்க் மேயராக இந்திய வம்சாவளி நபர் தேர்வு: டிரம்ப் எதிர்ப்பை மீறி வென்றவருக்கு காத்திருக்கும் சவால்கள் ஒரு கப் காபி விலை ரூ.8,000: 'புனுகுப்பூனை' காபியில் அப்படி என்ன இருக்கிறது? ஜவ்வாது மலையில் தங்க புதையல் - கட்டுமானத்திற்காக தோண்டிய போது கிடைத்தது End of அதிகம் படிக்கப்பட்டது "பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடுவதுதான் எங்களின் இலக்கு. கிட்டத்தட்ட அனைவரின் வீட்டிலும் பதுங்குக்குழி அல்லது கண்ணி பொறி அல்லது ராக்கெட் மூலம் செலுத்தப்படும் எறி குண்டு அல்லது குறிபார்த்து துப்பாக்கி சுடும் அமைப்பு உள்ளது," என அவர் தெரிவித்தார். "இங்கிருந்து நீங்கள் வேகமாக வாகனத்தை இயக்கினால், ஒரு நிமிடத்திற்குள் இஸ்ரேலிய மூதாட்டி அல்லது குழந்தையின் வீட்டின் அறைக்குள் இருப்பீர்கள். அதுதான் அக்டோபர் 7 அன்று நடந்தது." 2023ம் ஆண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல்களில் 1,100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 251 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். அப்போதிலிருந்து, காஸாவை சேர்ந்த 68,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக, ஹமாஸ் நடத்தும் சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சாம்பல் நிற இடிபாடுகள் இந்த பகுதியில் பணயக்கைதிகள் சிலரின் உடல்கள் கண்டறியப்பட்டதாக கூறும் லெப்டினன்ட் கர்னல் ஷோஷானி, அதில் இந்த வாரம் ஹமாஸால் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட இடாய் சென்னின் உடலும் அடங்கும் என்றார். மற்ற ஏழு பணயக்கைதிகளின் உடல்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நாங்கள் சென்ற இஸ்ரேலிய ராணுவ தளமானது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அமைதி திட்டத்தின் படி அமைக்கப்பட்ட தற்காலிக எல்லையான மஞ்சள் கோட்டிலிருந்து சில நூறு மீட்டர்களில் அமைந்திருந்தது, இந்த பகுதி காஸாவில் ஹமாஸ் கட்டுப்படுத்தும் பகுதிகளில் இருந்து இன்னும் இஸ்ரேலிய படைகளால் கட்டுப்படுத்தப்படும் பகுதிகளை பிரிக்கிறது. ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மற்றும் பொதுமக்களை எச்சரிக்கும் விதமாக, அந்த மஞ்சள் கோட்டு பகுதியில் படிப்படியாக தடுப்புகளை அமைத்து இஸ்ரேலிய ராணுவம் குறியிட்டு வருகிறது. கோட்டின் இந்த பகுதியில் எந்த எல்லைகளும் இன்னும் வரையறுக்கப்படவில்லை எனக்கூறிய இஸ்ரேலிய படையை சேர்ந்த ஒருவர், கட்டடங்களின் சாம்பல் நிற இடிபாடுகளுக்கு இடையில் ஒரு சிறிய மணல் பகுதியை வழிகாட்டியாகப் பயன்படுத்தி சுட்டிக்காட்டினார். பட மூலாதாரம், EPA படக்குறிப்பு, காஸா நகரத்தில் புதன்கிழமை காணப்பட்ட ஹமாஸ் ஆயுதக்குழுவினர் போர் நிறுத்தம் ஏற்பட்டு ஒரு மாதமாகிவிட்டது, ஆனால் மஞ்சள் கோட்டு பகுதியில் ஹமாஸ் துப்பாக்கிதாரிகளுடன் "கிட்டத்தட்ட தினமும்" தாங்கள் சண்டையிடுவதாக இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ளனர். காஸா நகரத்தை நோக்கியிருக்கும் கரைகளில் உள்ள துப்பாக்கிச் சூடு நிலைகள் வெண்கல நிற தோட்டா உறைகளின் குவியல்களால் குறிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் "நூற்றுக்கணக்கான முறை" போர் நிறுத்த விதிகளை மீறியதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது, மேலும் அதன் விளைவாக 240க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவால் வழிநடத்தப்பட்ட அமைதி திட்டத்துக்கு இஸ்ரேலிய படைகள் உறுதி பூண்டுள்ளதாக கர்னல் ஷோஷானி கூறுகிறார், ஆனால் இஸ்ரேலிய குடிமக்களுக்கு ஹமாஸ் இனியும் ஓர் அச்சுறுத்தலாக இருக்காது என்பதை தாங்கள் உறுதி செய்வோம் என்றும், தேவையானவரை தாங்கள் இருப்போம் என்றும் கூறினார். "ஹமாஸ் ஆயுதங்களை வைத்துள்ளது மற்றும் காஸாவை கட்டுப்படுத்த முயற்சிக்கிறது என்பது எல்லோருக்கும் மிக தெளிவாக தெரியும்," என்கிறார் அவர். "இதற்கு தீர்வு காணத்தான் நாம் முயற்சிக்கிறோம், ஆனால் அது வெகு தொலைவில் உள்ளது" என ஷோஷானி தெரிவித்தார். பட மூலாதாரம், Moose Campbell/ BBC படக்குறிப்பு, காஸா நகரின் கட்டடங்கள் சாம்பல் நிற இடிபாடுகளாக உள்ள காட்சி அடுத்த கட்டம் என்ன? அமெரிக்காவின் அமைதித் திட்டத்தின் அடுத்த கட்டத்தின்படி, ஹமாஸ் ஆயுதங்களை கைவிட்டு, அதிபர் டிரம்ப் உட்பட சர்வதேச தலைவர்கள் உள்ள பாலத்தீன குழுவிடம் அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும். ஆனால், அதிகாரம் மற்றும் ஆயுதங்களை கைவிடுவதற்கு பதிலாக, ஹமாஸ் அதற்கு எதிரானதை செய்துவருவதாக கர்னல் ஷோஷானி கூறுகிறார். "காஸா மீதான கட்டுப்பாடு மற்றும் ஆதிக்கத்தை நிறுவுவதற்காக, ஹமாஸ் தன்னை ஆயுதமயப்படுத்தி கொள்ள முயற்சிப்பதாக," அவர் என்னிடம் கூறினார். "பொதுமக்களை பயமுறுத்துவதற்காகவும் காஸாவில் யார் தலைமை வகிக்கிறார் என்பதை மக்கள் புரிந்துகொள்வதற்காகவும் ஹமாஸ் மக்களை பட்டப்பகலில் கொலை செய்கிறது. ஹமாஸ் தங்கள் ஆயுதங்களை கைவிடுவதை உறுதி செய்ய இந்த ஒப்பந்தம் போதுமான அழுத்தத்தை ஏற்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம்." இஸ்ரேலியப் படையினர், இடிபாடுகளுக்கு அடியில் கண்டுபிடித்ததாகக் கூறும் சுரங்கப்பாதைகளின் வரைபடத்தை எங்களுக்குக் காட்டினர். "சிலந்தி வலை போன்ற பெரியளவிலான சுரங்கப்பாதைகளை" தாங்கள் கண்டதாக அவர்கள் தெரிவித்தனர், அதில் பல ஏற்கெனவே அழிந்துவிட்டன, சில அப்படியே உள்ளன, இன்னும் சில சுரங்கப்பாதைகளை படையினர் தேடிவருகின்றனர். இந்த அமைதி ஒப்பந்தத்தின் அடுத்த கட்டத்தில் என்ன நடக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை. இந்த ஒப்பந்தம் காஸாவை பதற்றமான சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது. சூழல் எந்தளவுக்கு நிலையற்றதாக உள்ளது என்பதை அமெரிக்கா அறிந்துள்ளது, மேலும் போர் நிறுத்தம் ஏற்கெனவே இருமுறை தோல்வியடைந்துள்ளது. இந்த நிலையற்ற மோதலில் இருந்து நீடித்த அமைதியை நோக்கி முன்னேற அமெரிக்கா கடுமையாக முயற்சித்து வருகிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுக்கு அமெரிக்கா அனுப்பிய வரைவு தீர்மானம் பிபிசியால் பார்க்கப்பட்டது, அதில் காஸாவின் பாதுகாப்பைக் கட்டுப்படுத்தவும் ஹமாஸ் ஆயுதங்களை கைவிடவும் ஒரு சர்வதேச ஸ்திரப்படுத்தும் படைக்கு (International Stabilisation Force - ISF) இரண்டு ஆண்டு கால அதிகாரத்தை வழங்குகிறது. ஆனால் இந்த ஒப்பந்தத்தின் அடுத்த கட்டம் குறித்து அதிக தகவல்கள் தெரியவில்லை: ஹமாஸ் ஆயுதக் குறைப்புக்கு முன்னதாக காஸாவைப் பாதுகாக்க எந்த நாடுகள் படைகளை அனுப்பும், இஸ்ரேலிய படைகள் எப்போது திரும்பப் பெறப்படும் அல்லது காஸாவின் புதிய தொழில்நுட்ப நிர்வாகத்தின் உறுப்பினர்கள் எவ்வாறு நியமிக்கப்படுவார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. எதிர்காலத்தில் வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்து காஸாவை மத்திய கிழக்கு மையமாக கட்டமைக்கும் ஒரு தொலைநோக்குப் பார்வையை அதிபர் டிரம்ப் கோடிட்டுக் காட்டியுள்ளார். காஸா இன்று இருக்கும் சூழலில் அந்த நோக்கம் வெகு தொலைவில் உள்ளது. சண்டையை யார் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்பது மட்டுமல்லாமல், காஸா இஸ்ரேலால் பெரும்பாலும் அழிக்கப்பட்டு டிரம்பால் முதலீடாகக் கருதப்படும் நிலையில், காஸா மக்கள் தங்கள் நகரங்கள் மற்றும் நிலங்களின் மீது எதிர்காலத்தில் எவ்வளவு செல்வாக்கு செலுத்துவார்கள் என்பதும் கேள்வியாக உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62e0z9166do
3 months 2 weeks ago
“நீயே எம் வேர்,” மக்கள் ஒன்றாய் முழங்கினர்! யாழ் நூலகம் அரசகாவலர்களால் எரிந்தது புத்தர் பெருமானும் சேர்ந்து எரிந்தார்! நூலகத்தின் முன்றலில் அவரின் சாம்பல் தொண்ணூறாயிரம் நூல்களின் சாம்பலுடன் கலந்து! அறிவார்ந்த அற்புதங்கள் உறைந்த இடம் ஆயிரமாயிரம் நூல்கள் வாழ்ந்த இடம்! இதயமற்ற அரசு நடத்திய கொடூரத்தில் ஈரமிழந்து வெம்மையில் வாடி வதங்கியது! அந்த நொடியில் நூலகத்தின் சுவர்கள் சாம்பலின் நினைவைக் கூறின! சாம்பலின் நடுவே விதை முளைத்தது தமிழர்களின் உள்ளத்தில் மீண்டும் மலர்ந்தாள்! மூடிய புத்தகங்கள் பிரார்த்தனையாய் திறந்தன மறைந்த எழுத்துக்கள் ஆசீர்வாதமாக மாறின! நூலகத்தின் அமைதி தெய்வீகத் தாலாட்டானது “நீயே எம் வேர்,” மக்கள் ஒன்றாய் முழங்கினர்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] “நீயே எம் வேர்,” மக்கள் ஒன்றாய் முழங்கினர்! https://www.facebook.com/groups/978753388866632/posts/32226482883666941/?
Checked
Thu, 02/26/2026 - 10:49
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed