புதிய பதிவுகள்2

காசாவில் குடிநீர் விநியோகம் இடம்பெறும் பகுதியில் காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்-சிறுவர்கள் உட்பட பலர் பலி

3 months 2 weeks ago
13 JUL, 2025 | 06:36 PM மத்திய காசாவில் நீர் விநியோகம் இடம்பெறும் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட வான் தாக்குதலில் ஆறு சிறுவர்கள் உட்பட பத்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுடைய உடல்களை நுசெரெய்த் அல் அவ்தா மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ள அவசரசேவை பிரிவினர் ஏழு சிறுவர்கள்; உட்பட 16 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். நுசெய்ரெத் அகதிமுகாமில் தண்ணீர்விநியோகத்தில் ஈடுபட்டிருந்த வாகனத்திற்கு அருகில் வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது ஆளில்லா விமான தாக்குதல் இடம்பெற்றது என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை தொழில்நுட்ப கோளாறினால் பொதுமக்கள் தவறுதலாக தாக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள இஸ்ரேல் இஸ்லாமிய ஜிகாத் பயங்கரவாதி இலக்குவைக்கபட்டார் ஆனால் இலக்கு தவறியது என தெரிவித்துள்ளது. இரத்தக்காயங்களுடன் சிறுவர்கள் காணப்படும் படங்களும் உயிரிழந்த நிலையில் சிறுவர்கள் காணப்படுவதை காண்பிக்கும் படங்களும் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/219906

முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!

3 months 2 weeks ago
யாரிடம் கூலிவாங்கிக் கொண்டு மாரடிக்கிறார்? ஆதாரம் கொடுக்க முடியுமா?சீமானை மட்டம் தட்ட வேண்டும் என்ற காழ்ப்புணர்சியின் காரணமாக ஊகத்தின் அடிப்படையிலோ அல்லது 200 ரூபா உபிக்களின் வாந்திகளையோ இங்கே கொண்டு வநது கொட்டக் கூடாது.ஓ தளத்தில் அரசியல் செய்பவர்களை விமர்சிக்காதவர்கள் எல்லாம் களத்தில் நின்றுபத்திரிகையாளர்களின் எந்தக் கேள்களுக்கும் முகம் கொடுக்கும் சீமானை விமர்சிக்கிறார்கள். சீமான் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்தால் யாரும் விமர்சிக்க மாட்டார்கள்வெற்றியோ தோல்வியோ சீமான் 2026 தேர்தலைதனித்தே எதிர்கொள்ள வேண்டும்.இந்தத் தேர்தலை சீமான் தாக்குப் பிடித்தால் அதன் பிறகு சீமான்தான் கிங்மேக்கர்.

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

3 months 2 weeks ago
செம்மணி மனித புதைகுழி; கார்பன் பரிசோதனைகள் தொடர்பில் நீதிமன்றமே தீர்மானிக்கவேண்டும்; தமிழரசுகட்சியின் வேண்டுகோள்கள் பயனுள்ளவை - காணாமல்போனோர் அலுவலக அதிகாரி கருத்து Published By: RAJEEBAN 13 JUL, 2025 | 02:26 PM செம்மணி மனித புதைகுழி அகழ்வும் நடவடிக்கைகள் 21ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை தொடர்பில் கார்பன் பரிசோதனையை முன்னெடுப்பதா இல்லையா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கவேண்டும் என காணாமல்போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது. காணாமல்போனவர்கள் அலுவலகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜே.தற்பரன் இதனை தெரிவித்துள்ளார். உடல்கள் எப்போது புதைக்கப்பட்டன என்பதை தீர்மானிப்பதற்கான ஒரு முறையாக கார்பன் பரிசோதனையை பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இது பயன்படுத்தப்படும் ஒரு முறை குறிப்பாக வேறு பொருட்கள் ஆதாரங்கள் இல்லாதபோது இந்த முறையை பயன்படுத்துவது வழமை என தெரிவித்துள்ள அவர் எனினும் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் கார்பன் பரிசோதனையை பயன்படுத்த வேண்டுமா என்பதை நீதிமன்றங்களே தீர்மானிக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். எனினும் இலங்கையிடம் இதற்கான தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால் மாதிரிகளை அமெரிக்கா அல்லது அவுஸ்திரேலியாவிற்கே அனுப்பவேண்டும். செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுகள் ஜூன் இறுதி வாரத்தில் ஆரம்பித்து 15 நாட்கள் இடம்பெற்றன. இந்த 15 நாட்களில் 65 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. செம்மணி மனித புதைகுழியை அகழும் பணிகளிற்கு தலைமை தாங்கும் பேராசிரியர் ராஜ்சோமதேவ எதிர்வரும் 15ம் திகதிக்குள் முதல் 15 நாட்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார். செம்மணி மனித புதைகுழி குறித்து கரிசனைஎழுப்பியுள்ள இலங்கை தமிழரசுக்கட்சி ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. செம்மணி மனித புதைகுழி தொடர்பில் சில நடவடிக்கைகளை கோரியுள்ள இலங்கை தமிழரசுக்கட்சி இலங்கையின் தார்மீக மற்றும் சட்ட கடமைகளை நிறைவேற்றுவதற்கும் உண்மை மற்றும் நீதியை நோக்கிய நம்பமான பாதையை உருவாக்குவதற்கும் இது அவசியம் என தெரிவித்துள்ளது. இந்த கடிதம் குறித்து பதிலளித்துள்ள காணாமல்போனோர் அலுவலக அதிகாரி தற்பரன் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை தமிழரசு கட்சியின் கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள விடயங்கள் பயனுள்ளவையாக அர்த்தபூர்வமானவையாக அமையும் என தெரிவித்துள்ளார். சுயாதீன மற்றும் சர்வதேச நிபுணர்களின் ஈடுபாடு குறித்து கருத்து தெரிவித்த அவர் இதுபோன்ற கூட்டுப் பணிகள் அதிக ஈடுபாட்டிற்கான வளங்களை வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் எவ்வாறு தலையிட முடியும் என்பதற்கான கூடுதல் சூழமைவை தமிழரசுக்கட்சியின் வேண்டுகோள்கள் நமக்கு வழங்குவதால் நாங்கள் நிச்சயமாக அதில் கவனம் செலுத்துவோம். மற்ற தரப்பினரிடமிருந்து தொழில்நுட்ப ஆதரவை நாங்கள் பெற வேண்டும்" .என அவர் தெரிவித்துள்ளார். காணாமல்போனவர்களின் அலுவலகம் இன் பணியைத் தொடர நாட்டில் அனுபவம் வாய்ந்த நபர்களின் பற்றாக்குறை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் கோரப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் காணாமல்போனவர்களின் அலுவலகத்தின் எதிர்கால நடவடிக்கை குறித்து தலைவர் மற்றும் மற்றும் அரசாங்கமே கூட்டாக முடிவு வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/219871

இனப்படுகொலை, போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்விதநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; எஸ். சிறிதரன் தெரிவிப்பு

3 months 2 weeks ago
13 JUL, 2025 | 02:41 PM இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக தமிழர் தரப்பை குற்றவாளியாக காண்பிக்கும் முயற்சி இடம்பெறுகின்றது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் எஸ். சிறிதரன் தெரிவித்தார். கொட்டகலையில் சனிக்கிழமை (13) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் உட்பட சில விடயங்களை தமிழ் தரப்புகள்தான் செய்தன என்பதுபோல் வெளியில் ஒரு மாயை காட்டப்படுகின்றது. இதற்கு பின்னால் இருந்து ஆட்சி அமைத்த கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த குடும்பம் மீது இதுவரையில் எந்த பாய்ச்சல்களையும் இந்த அரசாங்கம் செய்யவில்லை. இன அழிப்பு மற்றும் போர்க்குற்றங்களை செய்த இராணுவத் தளபதிகள் மீதோ அல்லது அதனை மேற்கொண்ட அரசுகள் மீதோ எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் தமிழ் தரப்பை குற்றவாளியாக காண்பிக்கும் முயற்சி இடம்பெறுகின்றது. இது தொடர்பில் நாம் கூடுதல் அவதானத்துடன் இருக்க வேண்டும். மேலும் தெரிவிக்கையில், 10 பரம்பரையாக இந்நாட்டுக்கு அழைத்தும் ஒரு துண்டு காணிகூட மலையக மக்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. மலையக மக்கள் 200 வருடங்களுக்கு மேலாக இம்மண்ணில் வாழ்கின்றனர். நபரொருவர், பிரிட்டனுக்கோ அல்லது கனடாவுக்கோ சென்றால் அங்கு 3 அல்லது ஐந்து வருடங்களில் குடியுரிமை கிடைக்கின்றது. வீடு வழங்கப்படுகின்றது. உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கின்றது. ஆனால் இந்நாட்டுக்காக 10 பரம்பரையாக உழைத்த மக்களுக்கு ஒரு துண்டு காணி கூட இன்னும் வழங்கப்படவில்லை. தொடர்ந்தும் காணி உரிமை அற்றவர்களாகவே வைக்கப்பட்டுவருகின்றனர். மாறி மாறி ஆட்சிக்குவரும் அரசுகள் அவர்களுக்கு காணி உரிமையை வழங்கவில்லை. ஒரு கொட்டகையை அமைப்பதாக இருந்தால்கூட நிர்வாகத்திடம் அனுமதி பெறவேண்டிய நிலைமை காணப்படுகின்றது. அவர்கள் அனுமதி வழங்காத நிலையும் நீடிக்கின்றது. வடக்கு, கிழக்கைவிடவும் மலையகத்திலேயே காணியில்லாப் பிரச்சினை, வாழ்வியல் பிரச்சினை, எதிர்காலம் பற்றிய நம்பிக்கையின்மை உள்ளிட்டவை அதிகளவு காணப்படுகின்றது. மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற நாளாந்த சம்பளம் போதுமானது அல்ல. தற்போதைய சூழ்நிலையில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் ரூபாகூட போதாது. நியாயமான மற்றும் நிரந்தர சம்பளம் வழங்கப்பட வேண்டும். அதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றார். https://www.virakesari.lk/article/219869

நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார் - தமிழ், தெலுங்கு திரையுலகில் சாதித்தது என்ன?

3 months 2 weeks ago
பகிடி தலைவர் கவுண்டமணியின் தெலுங்கு பதிப்பு - நான் புடிச்ச மாப்பிள்ளை தாலாட்டு கேட்குதம்மா பொறந்த வீடா புகுந்த வீடா ....... இன்னும் பல.. கண்ணீர் அஞ்சலிகள்..

குஜராத்: பாலம் திடீரென இடிந்ததால் ஆற்றுக்குள் விழுந்த வாகனங்கள் - என்ன நடக்கிறது?

3 months 2 weeks ago
நிபுணர்களின் கூற்றுப்படி, பல்வேறு கட்டுமான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான கான்கிரீட்டுகளுக்கும் பாதுகாப்பான சிமென்ட் கலவை விகிதம் 4:2:1 ஆகும். அதாவது, நான்கு பங்கு நொறுக்கப்பட்ட கற்களை இரண்டு பங்கு மணலுடன் ஒரு பங்கு சிமெண்டுடன் கலந்து, அனைத்து நோக்கங்களுக்காகவும் கான்கிரீட் தயாரிக்க சிறந்த சிமென்ட் கலவையை உருவாக்கும்.

“சீமான் பச்சோந்தி.. உதயநிதி எல்லாம் ஆளே இல்லை” களத்தில் ஒன் இந்தியாவுக்கு பேட்டியளித்த தவெகவினர்

3 months 2 weeks ago
“சீமான் பச்சோந்தி.. உதயநிதி எல்லாம் ஆளே இல்லை” களத்தில் ஒன் இந்தியாவுக்கு பேட்டியளித்த தவெகவினர் Halley KarthikPublished: Sunday, July 13, 2025, 19:33 [IST] சென்னை: காவல் நிலைய மரணங்களுக்கு நீதி கேட்டு, சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. களத்தில் ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டியளித்த தவெகவினர், சீமானையும், உதயநிதி ஸ்டாலினையும் சரமாரியாக விமர்சித்துள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பரவலான போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்த பிரச்சனை தொர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சென்னையில் போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோராப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறை அனுமதியை மறுத்திருந்தது. இதனையடுத்து நீதிமன்றத்தை நாடி தவெக அனுமதி பெற்றிருந்தது. இந்நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தவெகவினர் பங்கேற்றிருந்தனர். அவர்களிடம் களத்தில் ஒன் இந்தியா தமிழ் பேட்டி எடுத்திருந்தது. அதில், தவெகவினர் சீமான் மற்றும் உதயநிதியை சரமாரியாக விமர்சித்திருந்தனர். தவெக பெண் தொண்டர் பேசியதாவது, "சீமான் சரியான பச்சோந்தி. முதலில் விஜய்யை தம்பி, தம்பி என்று அழைத்திருந்தார். ஆனால் விஜய் தனது அரசியலை கையில் எடுத்த பிறகு, தப்பியாது, இதுவாவது என்று சொல்லியிருந்தார். சீமான் ஒரு பச்சோந்தி. அவருக்கு கீழே விஜய்யா? எங்கள் தளபதியின் கால் தூசிக்கு யாரும் வரமாட்டார்கள்" என்று கூறியிருந்தார். இதனையடுத்து உதயநிதி குறித்து பேசிய அவர், "உதயநிதியெல்லம் ஒரு ஆளே கிடையாது. அவருடைய அப்பா மு.க.ஸ்டாலினும் ஆளே கிடையாது. அவங்கெல்லாம் எங்களுக்கு மேட்டரே கிடையாது. என்னுடைய முதல் ஓட்டு உனக்குதான் தலைவா. என்னைக்கும் நாங்கள் உங்களுக்கு சப்போர்ட்டாக இருப்போம்" என்று கூறியுள்ளார். மற்ற தொண்டர்கள் பேசுகையில், தவெக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்குவது தொடங்கி, ஆர்ப்பாட்டத்திற்கு வருபவர்களை அலைகலைப்பது வரை காவல்துறையினர் மோசமாக நடந்தக்கொண்டிருக்கிறார்கள் என்று விமர்சித்திருக்கின்றனர். சில தொண்டர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து வந்திருப்பதாகவும், ஆனால் காவல்துறையினர்கள் தங்கள் சந்தேகத்திற்குரிய நபர்களை போல பாவிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். தவெகவினரான நாங்கள் என்ன பாகிஸ்தானிலிருந்தா வந்திருக்கிறோம்? எதற்காக எங்களை இப்படி இழுத்தடிக்கிறீர்கள் என்று சரமாரியாக கேள்வியை எழுப்பியுள்ளனர். எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில், தவெக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் என்றும், மீண்டும் யாரும் ஆட்சியமைக்க முடியாத வகையில் வலுவாக ஆட்சியை நடத்தும் என்றும் கூறியுள்ளனர். https://tamil.oneindia.com/news/chennai/tvk-members-slam-seeman-and-udhayanidhi-stalin-during-protest-720179.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

3 months 2 weeks ago
ம்ம்ம்… கேள்விக்கு பதில் இல்லை … அருண், வருண் என்ந் திசை திருப்ப மட்டுமே முடிகிறது. கேள்வி மீண்டும் ஒரு தரம்

இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த ஐநா அறிக்கையாளருக்கு எதிராக தடைகள் - அமெரிக்கா அறிவிப்பு

3 months 2 weeks ago
குரலற்றவர்களிற்காக குரல்கொடுப்பவர்களை வலிமைமிக்கவர்கள் தண்டிப்பது வலிமையின் அடையாளம் அல்ல குற்ற உணர்வின் அடையாளம் - அமெரிக்காவின் தடை குறித்து ஐநா அறிக்கையாளர் Published By: RAJEEBAN 11 JUL, 2025 | 12:35 PM குரலற்றவர்களிற்காக குரல்கொடுப்பவர்களை வலிமைமிக்கவர்கள் தண்டிப்பது வலிமையின் அடையாளம் அல்ல குற்ற உணர்வின் அடையாளம் என இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டித்தமைக்காக அமெரிக்காவின் தடையை எதிர்நோக்கியுள்ள ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் தெரிவித்துள்ளார். சமூக ஊடகபதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாங்கள் ஒன்றாக நிமிர்ந்துநிற்போம் என தெரிவித்துள்ள அவர் காசா எதிர்கொண்டுள்ள நெருக்கடி குறித்து கவனம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைவரினது கண்களும் தொடர்ந்தும் பிள்ளைகள் பட்டினி காரணமாக தாய்மாரின் கரங்களில் உயிரிழக்கும் - உணவு தேடும் போது அவர்களின் தந்தைமாரும் சகோதரர்களும் குண்டுவீச்சில் துண்டுதுண்டாக்கப்படும் காசா மீது இருக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள பிரான்செஸ்கா மிடில் ஈஸ்ட் ஐயின் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கையில் நான் யாரையோ பதற்றமடையச்செய்திருக்கின்றேன் போல தோன்றுகின்றது, நான் இங்கு பேசிக்கொண்டிருக்கும் போது காசாவில் மக்கள் மரணித்துக்கொண்டிருக்கின்றார்கள். ஐக்கிய நாடுகளால் அதனை நிறுத்த முடியாமல் உள்ளது என்பதே எனது கரிசனை என குறிப்பிட்டுள்ளார். காசாமீதான இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்த ஐக்கியநாடுகள் அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிசிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. அமெரிக்கர்கள் இஸ்ரேலியர்களிற்கு எதிராக ஐசிசி முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளிற்கு ஆதரவளிக்கும் விதத்தில் செயற்பட்டமைக்காக பிரான்செஸ்காவிற்கு எதிராக தடைகளை விதிப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். ஐநா அறிக்கையாளராக செயற்படுவதற்கு பிரான்செஸ்கா பொருத்தமற்றவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் தேடப்படும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தங்களது வான்பரப்பினை பயன்படுத்துவதற்கு அனுமதித்தது ஏன்? என இத்தாலி, கிரேக்கம், பிரான்ஸ் ஆகிய நாடுகள் தெளிவுபடுத்தவேண்டும் என ஐநாவின் பாலஸ்தீனத்திற்கான விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார். ஐசிசி தேடும் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு தங்கள் வான்பரப்பை பயன்படுத்துவதற்கும் பாதுகாப்பாக பயணிப்பதற்கும் இத்தாலி பிரான்ஸ் கிரேக்கம் ஆகிய நாடுகள் அனுமளியளித்தது ஏன் என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ள அவர் நெட்டன்யாகுவை கைதுசெய்யவேண்டிய கடப்பாட்டை இந்த நாடுகள் கொண்டுள்ளன என தெரிவித்திருந்தார். சர்வதேச சட்ட ஒழுங்கை மீறும் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையும் அதனை பலவீனப்படுத்தும் அவர்களுக்கும் அனைவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை பிரான்ஸ், கிரேக்க, இத்தாலி மக்கள் அறிந்திருக்கவேண்டும் என அவர் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/219717

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

3 months 2 weeks ago
யாழ். நெடுந்தீவில் தமிழக மீனவர்கள் கைது 13 JUL, 2025 | 02:24 PM இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 07 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் கடலில் மேற்கொண்ட சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது, நெடுந்தீவை அண்டிய கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்களை கைது செய்தனர். அதன்போது அவர்களின் படகினையும் கடற்படையினர் கைப்பற்றினர். கைதான மீனவர்களையும், படகினையும் மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு சென்ற கடற்படையினர், மீனவர்களை மேலதிக ச‌‌ட்ட நடவடிக்கைக்காக கடற்தொழிலில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர். https://www.virakesari.lk/article/219867

இறுதி யுத்தத்தில் மீறப்பட்ட மனிதாபிமானச் சட்டம் - நீதிமன்றத்தை நாடவுள்ள சிங்கள சட்டத்தரணி!

3 months 2 weeks ago
சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே யும் காணாமல் ஆக்கப்படுவாரா அல்லது உண்மையை தென்னிலங்கைக்கு தெளிவு படுத்துவாரா?

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மெக்ஸிக்கோவிற்கு 30 % வரி! ட்ரம்ப்பின் புதிய அறிவிப்பு!

3 months 2 weeks ago
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மெக்ஸிக்கோவிற்கு 30 % வரி! ட்ரம்ப்பின் புதிய அறிவிப்பு! மெக்ஸிக்கோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 30 % வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றது முதல் பரஸ்பர வரிவிதிப்பு என்ற பெயரில் பல்வேறு நாடுகளுக்கு வரி விதித்து வருகிறார். இந்த நிலையில் எதிர்வரும் ஒகஸ்ட் 1ம் திகதி முதல் மெக்ஸிக்கோ, மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 30 % வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் நேற்று (12) அறிவித்துள்ளார். மேலும், ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுக்கு(Ursula von der Leyen) எழுதிய கடிதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான தொடர்ச்சியான வர்த்தக பற்றாக்குறைகள் விரக்தியை ஏற்படுத்துகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1438958
Checked
Fri, 10/31/2025 - 23:27
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed